மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.8.14

அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கடிதம்!

 

அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கடிதம்!

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய, அருமையான கடிதம்

(இதே கடிதத்தின் தமிழ் வடிவம் கீழே உள்ளது)

A Wise Father's Letter to His Son. English & Tamil versions. Read......Read carefully
A Father's letter to his son - applies to daughters too!!

Following is a letter to his son from a renowned Hong Kong TV broadcaster/Child Psychologist. The words are actually applicable to all of us, young or old, children or parents! This applies to daughters too. All parents can use this in their teachings to their children.
------------------------------------------------------

Dear son,

I am writing this to you because of 3 reasons

1. Life, fortune and mishaps are unpredictable; nobody knows how long he lives. Some words are better said early.

2. I am your father, and if I don't tell you these, no one else will.

3. What is written is my own personal bitter experiences that perhaps could save you a lot of unnecessary heartaches.


Remember the following as you go through life

1. Do not bear grudge towards those who are not good to you. No one has the responsibility of treating you well, except your mother and I. To those who are good to you, you have to treasure it and be thankful, and ALSO you have to be cautious, because, everyone has a motive for every move. When a person is good to you, it does not mean he really likes you. You have to be careful, don't hastily regard him as a real friend.

2. No one is indispensable, nothing in the world that you must possess. Once you understand this idea, it would be easier for you to go through life when people around you don't want you anymore, or when you lose what/who you love most.

3. Life is short. When you waste your life today, tomorrow you would find that life is leaving you. The earlier you treasure your life, the better you enjoy life.

4. Love is but a transient feeling, and this feeling would fade with time and with one's mood. If your so called loved one leaves you, be patient, time will wash away your aches and sadness. Don't over exaggerate the beauty and sweetness of love, and don't over exaggerate the sadness of falling out of love.

5. A lot of successful people did not receive a good education, that does not mean that you can be successful by not studying hard! Whatever knowledge you gain is your weapon in life. One can go from rags to riches, but one has to start from some rags!

6. I do not expect you to financially support me when I am old, neither would I financially support your whole life. My responsibility as a supporter ends when you are grown up. After that, you decide whether you want to travel in a public transport or in your limousine, whether rich or poor.

7. You honor your words, but don't expect others to be so. You can be good to people, but don't expect people to be good to you. If you don't understand this, you would end up with unnecessary troubles.

8. I have bought lotteries for umpteen years, but I never strike any prize. That shows if you want to be rich, you have to work hard! There is no free lunch!

9. No matter how much time I have with you, let's treasure the time we have together. We do not know if we would meet again in our next life.

Love,
Your Dad

=============================================================
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதம் - மகளுக்கும் கூட
இது பொருந்தும்!!
(எனக்கு மின் அஞ்சலில் ஆங்கிலத்தில் வந்த (மேலே கண்ட)
கடிதத்தைத் தமிழுக்கு மொழி மாற்றம் செய்து இங்கு
கொடுத்திருக்கிறேன். அனைவருக்கும் பயன் உள்ளதாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.)

அனுபவ அறிவு வாய்ந்த ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதம்

நம் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான
கடிதம்

இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர் /
 குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.

இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே
நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள்,
முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள்

அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும்
தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக
கற்பிக்கலாம்.
---------------------------------------------------------------
அன்புள்ள மகனுக்கு,

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:

1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய
அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம்
எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில்
உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு
அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை
தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக்
காக்க இயலும். .

கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்: 

1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன்
வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும்
என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும்
பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக
இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம்
போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு.
மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல்
அவசியம். ஏன்  எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும்
ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில்
ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால்,
உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம்
இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ
ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன்
என்று கொள்ளாதே. 

2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த
கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி
மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும்
அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ
நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில்வழி நடத்திச்
செல்ல இயலும். 

3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின்
மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ
 ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய். 

4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும்.
காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த
உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர்
உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு.
காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே. 

5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும்
என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும்.
 ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை
சந்திக்க நேரிடுகிறது. 

6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை
சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே
போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு

நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட
பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான்
முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக. 

7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில்
உழல வேண்டி இருக்கும்.

8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது! 

9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்)

கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம்

அன்புடன்
அப்பா
-----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

  1. உன்மைதான் அய்யா

    ReplyDelete
  2. அருமையான இந்தக் கருத்துக்களை மீண்டும் படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி ஐயா!

    இதே கருத்துக்களை அடியேன் மொழி பெயர்த்ததை வகுப்பறையில் வெளியிட்டு
    எனக்கு சிறப்புச் செய்ததை நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.அந்த மொழி பெயர்ப்பை இந்தச்சுட்டியில் காணலாம்.

    http://classroom2007.blogspot.in/2010/12/blog-post_19.html

    "நான் சொல்லவில்லை என்றால்,யார் சொல்வார்கள்?"

    கட்டுரை வெளியான தேதி 19 12 2010

    ReplyDelete
  3. அழகான,ஆழமான,அன்பான கடிதத்தை நமக்கு/நம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நல் நோக்கோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள்,வாத்தியாரையா!

    ReplyDelete
  4. தலைமுறை இடைவெளியை
    தத்ருபமாக காட்டியது கடிதம்..

    ReplyDelete
  5. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .. இந்த வாசகத்தை கொடுத்த உங்களுக்கு அநேக நன்றி . இதை முதன் முதலாக எழுதிய அந்த மனிதருக்கு வணக்கம் ..இது போன்ற முத்தான அறிவுரைகள் நமது குழைந்தகளுக்கு நமது புராணங்களில் இருந்தாலும் நறுக்கு தெரித்தாற்போல் இருக்கிறது. நன்றி. அய்யா.s.n.கணபதி .

    ReplyDelete
  6. super post....thanks sir for wonderful lesson then posted in ur blog... am new student....

    ReplyDelete
  7. மிகவும் அருமையான கடிதம்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  8. எனது வயதான காலத்தில் உன்னுடைய நிதி உதவியை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. அதே போல காலம் முழுக்க உனக்கு நிதி உதவி அளிக்க என்னால் இயலாது. எனது கடமைகள் நீ வாலிப வயதை அடைந்தவுடன் முடிந்து விடுகிறது. இதையேதான் நான் எனது 13 வயது குழந்தைக்கும் சொல்கிறேன். காலம் முழுவதும் நமது பெற்றோர்கள் நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வரக்கூடாது. ஆனால் அவர்கள் எடுத்து வைக்கும் அடியில் இடறினால், திரும்ப எழுந்து வர ஒரு உதவிக்கரம் நீட்டலாம், அவ்வளவே.

    நல்ல பதிவு அய்யா.

    ReplyDelete
  9. Graet advise to Grown Children
    Thanks Aiyya !
    Ashok

    ReplyDelete
  10. /////Blogger veli said...
    arumaiyana pathivu...nandri/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger Healthcare Raja Nellai said...
    அருமை அய்யா////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ////Blogger Indian said...
    உண்மைதான் அய்யா/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger kmr.krishnan said...
    அருமையான இந்தக் கருத்துக்களை மீண்டும் படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி ஐயா!
    இதே கருத்துக்களை அடியேன் மொழி பெயர்த்ததை வகுப்பறையில் வெளியிட்டு
    எனக்கு சிறப்புச் செய்ததை நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.அந்த மொழி பெயர்ப்பை இந்தச்சுட்டியில் காணலாம்.
    http://classroom2007.blogspot.in/2010/12/blog-post_19.html
    "நான் சொல்லவில்லை என்றால்,யார் சொல்வார்கள்?"
    கட்டுரை வெளியான தேதி 19 12 2010/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!! அந்தப் பதிவு என் நினைவில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். நினைவில் இருந்திருந்தால், அதையும் குறிப்பிட்டிருப்பேன்!

    ReplyDelete
  14. /////Blogger Subramaniam Yogarasa said...
    அழகான,ஆழமான,அன்பான கடிதத்தை நமக்கு/நம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நல் நோக்கோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள்,வாத்தியாரையா!/////

    உங்களின் மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger வேப்பிலை said...
    தலைமுறை இடைவெளியை
    தத்ருபமாக காட்டியது கடிதம்..////

    உங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி வேப்பிலையார்!

    ReplyDelete
  16. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .. இந்த வாசகத்தை கொடுத்த உங்களுக்கு அநேக நன்றி . இதை முதன் முதலாக எழுதிய அந்த மனிதருக்கு வணக்கம் ..இது போன்ற முத்தான அறிவுரைகள் நமது குழைந்தைகளுக்கு நமது புராணங்களில் இருந்தாலும் நறுக்கு தெரித்தாற்போல் இருக்கிறது. நன்றி. அய்யா.s.n.கணபதி ./////

    உங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  17. /////Blogger eswari sekar said...
    vankam sir arumayana pathivu thankyou/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger balaganesan said...
    super post....thanks sir for wonderful lesson then posted in ur blog... am new student..../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே! புது மாணவரா? உங்கள் வருகை நல் வரவாகட்டும். தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  19. ////Blogger சே. குமார் said...
    மிகவும் அருமையான கடிதம்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ////Blogger thozhar pandian said...
    எனது வயதான காலத்தில் உன்னுடைய நிதி உதவியை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. அதே போல காலம் முழுக்க உனக்கு நிதி உதவி அளிக்க என்னால் இயலாது. எனது கடமைகள் நீ வாலிப வயதை அடைந்தவுடன் முடிந்து விடுகிறது. இதையேதான் நான் எனது 13 வயது குழந்தைக்கும் சொல்கிறேன். காலம் முழுவதும் நமது பெற்றோர்கள் நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வரக்கூடாது. ஆனால் அவர்கள் எடுத்து வைக்கும் அடியில் இடறினால், திரும்ப எழுந்து வர ஒரு உதவிக்கரம் நீட்டலாம், அவ்வளவே.
    நல்ல பதிவு அய்யா.////

    உங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி பாண்டியரே!

    ReplyDelete
  21. ////Blogger Arikumar R said...
    Really great...
    Thank you....////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Blogger Ashok said...
    Graet advise to Grown Children
    Thanks Aiyya !
    Ashok////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. Padippatharkkum,sinthippatharkkum,vazhkkaikku yetravaru irunthatu

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com