மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.8.14

Astrology: Popcorn Post No.50: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?


Astrology: Popcorn Post No.50: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

பாப்கார்ன் போஸ்ட் எண்: 50

”புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை”

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் அசத்தலாகச் சொல்லிவிட்டுப் போனார். முழுப்பாடலையும், உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். பிறகு படித்துப் பாருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்!

வெற்றி, தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள். எல்லோரும், எல்லா நேரத்திலும் வெற்றி பெறமுடியாது. அதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ஒத்து வரவேண்டும். ஆகவே புத்தியை வெற்றி தோல்விக் கண்ணோட்டத்தில் மறந்துவிட்டுப் பாருங்கள். புத்தி அவசியம். புத்தி இல்லாத மனிதனை யார்தான் விரும்புவார்கள்? அதைச் சொல்லுங்கள்.

ஜாதகத்தில் குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களும் எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமான கிரகமாகும். புதன் தனித்து, அதாவது தீயகிரகங்கள் எதுவுடனும் சேராமல், அல்லது தீயகிரகங்களின் பார்வை பெறாமல் தனித்து இருந்தால் அது சுபக்கிரகமாகும். அத்துடன் அது கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.

புதன், சுக்கிரனுடன் சேர்ந்தால், அது ஜாதகனுக்கு நிபுனத்துவத்தைக் கொடுக்கும். ஜாதகன் ஆக்க வழியில் செயல்பட்டுப் பேரும் புகழும் அடைவான். அதே புதன், சனியுடன் சேர்ந்திருந்தால் ஜாதகனின் புத்தி எதிர்மறையான வேலைகளைச் செய்யும். அந்த மேட்டர்களில் ஜாதகன் கெட்டிக்காரனாக இருப்பான்.

லக்கினம் அல்லது 7ம் வீட்டில் இருக்கும் புதன் ஜாதகனுக்கு நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். ஆழ்ந்து படிப்பதெல்லாம் நினைவில் நிற்கும் சாமிகளா!

சரி நம்ம முனிசாமி, அதாவது நமது முனிவர்கள் புதனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்?

சொல்லுகிறேன் இருமூன்று ஈராறெட்டும்
   சுகமில்லை ஜென்மனுக்கு குய்யரோகம்
சொல்லுகிறேன் செம்பொன்னும் கணைக்கால்துன்பம்
   சுற்றத்தார் மனமுறிவர் அரிட்டஞ்செப்பு
சொல்லுகிறேன் கேந்திரமும் கோணம் நன்று
   சுகமாக வாழ்ந்திருப்பான் காடியுள்ளோன்
சொல்லுகிறேன் சுயகவிதை மாமன்விருத்தி
   சொர்ண நிலமுள்ளவனாம் கூறே!
- புலிப்பாணி

இருமூன்று ஈராறெட்டும் = 6, 12, & 8 ஆம் இடங்கள் சுகமில்லை என்கிறார். Not useful என்கிறார்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை
(புத்தியுள்ள) 

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

(புத்தியுள்ள) 

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

(புத்தியுள்ள) 

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : R சுதர்சனம்
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. Dear Sir,

    I have mercury in 8th house with sun in the raasi of leo.My lagna is makara lagna.I have studied till master degree in engineering in reputed college with govt scholarship by qualifying competitive exams.my jupiter is in 12th house with mandhi.jupiter aspects 4th,6th and 8th house (where mercury is placed).4th house lord mars in 11th house with ketu.i think since jupiter aspects mercury,mercury has made me to study well even though it is placed in 8th house.am i right sir?what's ur opinion sir?8th house bindus also 30 for me.mercury 'suyavargam' also 5.please say ur opinion sir.

    Regards,
    S.Regunathan

    ReplyDelete
  2. வணக்கம் சார்
    சரியா ஜாதகம் அலசதெரியவில்லை இன்னும் புதுசா வகுப்பு ஆரமிச்சா எனக்கு தனியா தெரிவிங்க சார் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியாரே!!!

    அருமையான POPCORN பதிவு.

    தற்காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் நல்ல வருமானம் இருந்தும் திருமணம் முடியாமல், இல்லாமல் அவதி படுகின்றனர்.

    இதற்கு பொதுவான கால புருஷ தத்துவம், அதாவது ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும்(ஒரு கணக்குக்கு சொன்னேன்) பொதுவான பாதிப்பு மக்களிடையே ஏற்படுமா? நம் தாத்தாவின் தாத்தா யாரும் மின்சாரம் உபயோகித்ததில்லை. பேரரசர் அக்பர் விமானத்தில் சென்றதில்லை(தற்காலத்தில் சாமனியனுக்கும் இது கிட்டதட்ட சாத்தியம்).

    இதை பற்றிய ஆய்வு கட்டுரையும், விளக்க பாடமும் எங்களுக்கு வழங்குங்கள்.

    இதன் மூலம் தங்கள் ஜோதிட பாடம் ஒரு விசேஷ கவன ஈர்ப்பை மேலும் பெரும் என என் தாழ்மையான கருத்து.

    வாத்தியார் ஆவண செய்வீர்கள் என எதிர்பார்க்கும்,


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி

    ReplyDelete
  4. என் ஜாதகத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை இருக்கிறது. இருந்தும் என்ன செய்ய. அது 8ம் இடமாகிப் போய் விட்டது.

    ReplyDelete
  5. பச்சை நிற கல்லில்
    பச்சுன்னு புதன்ன காண்பித்தமைக்கு

    நன்றிகள்..
    நலமே பெறுக..

    ReplyDelete
  6. My mercury is in 3 rd house sani is aspecting from lagna also in astavarga 1 bindu .because of sun its gone case ( ashtangam ) and retrograde , I think this is the worst possible way in a particular jathagam .

    ReplyDelete
  7. வணக்கம் குரு

    ஜாதகத்தில் புதனும், சூரியனும் கூடி லக்னம், நான்காமிடம் மற்றும் எட்டமிடங்களில் இருந்தால் அந்த ஜாதகன் புத்திசாலி, நீண்ட ஆயுள் உடையவன், செல்வந்தன் என நீங்கள் ஒரு பதிவில் சொன்னது என் நினைவில் உள்ளது.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  8. Respected Sir,

    Sirantha pathiviu. Oru kelvi.

    Kataka lagnathiruku 7il Sun+Bhudan Bhuadtiya yogam, aanal viraiyathipathi bhudhan +kudampathipathi SUn kuttu athvum 7il. ethai evvaru alasuvathu... samanilai kiramgam SUN vudan Bhduan. ippo avar subara alla bhapiya..?

    ReplyDelete
  9. புதன் கதிருடன் இணைந்து
    புனைந்துள்ளதால்

    இங்கு
    இந்த அய்யர்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com