மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

6.8.14

Astrology: quiz 65: Answer: மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட அதை மண் மீது போட்டுவிட்டேன் வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட!

 

Astrology: quiz 65: Answer மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட அதை மண் மீது போட்டுவிட்டேன் வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட!

புதிர் எண் 65ற்கான விடை

6.8.2014


நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகரின் கல்வி நிலை பற்றிக் கேட்டிருந்தேன். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை
படித்தவர்?படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை?

2. அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது?
திருமணமேஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை?
---------------------------------------------------------
சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகர் 10ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தவர்.
2. ஜாதகருக்கும் அவருடைய 30ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது.


ஜாதகப்படி, அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.


1. ஜாதகர் தனுசு லக்கினக்காரர். செல்வந்தர் வீட்டுப் பிள்ளை.
லக்கினாதிபதி குரு 7ல் அமர்ந்து அதைச் செய்தான். அதுபோல
நல்ல மனைவிகிடைப்பதற்கும் வழி செய்தான்.

2. 9ஆம் வீட்டில் சனி மற்றும் மாந்தி. இருவரும் சேர்ந்து அமைந்த பாக்கியத்தை முழுவதுமாகக் கெடுத்தார்கள். ஜாதகர் சுக ஜீவனமாக
வீட்டில்உட்கார்ந்திருக்க வில்லை. ஒரு தனியார் நிறுவனத்தில்
வேலையில் உள்ளார். கைக்கும் வாய்க்குமான வருமானம்.

3. 21 வயதில் ராகு திசை ஆரம்பம். அது 39 வயது வரை நீடிக்கும்.
10ல் ராகு. படுத்திக் கொண்டிருக்கிறது. அடுத்த குரு திசையில்
அவருடையவாழ்க்கை வளம் பெறும்.

4. கல்வி ஸ்தானமான 4ல் கேது. கேது 4ல் இருந்தாலே
Break in education என்பது விதி. அதுபோல கல்வி தடைப் பட்டது.
10ஆம் வகுப்போடு ஜாதகரின் கல்வி முடிந்து விட்டது. அதிலும்
அவர் பாஸாகவில்லை.

5. சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியோரில் ஒருவரின்
பார்வை கூட கல்வி ஸ்தானத்தின் மேல் விழவில்லை. அதைக்
கவனியுங்கள்.அத்துடன் வித்யாகாரகன் புதனின் பார்வையும் கல்வி ஸ்தானத்தின் மேல் விழவில்லை. ஆகவே ஜாதகர் மேலே
படிக்கவில்லை. படிப்பும் ஏறவில்லை.

6. சூரியனும் சனியும் பரிவர்த்தனை யோகத்தில். ஆனாலும் பரிவர்த்தனையான சூரியனோடு 6ஆம் வீட்டுக்காரன் (வில்லன்)
சுக்கிரனின் சேர்க்கை. சனியுடன் மாந்தியின் சேர்க்கை.

7. ராகுவும், புதனும் 5/9 என்ற நல்ல அமைப்பில். அத்துடன் புதன் 7ஆம் வீட்டுக்காரன். அந்த வீட்டைக் கடக்கும்போது கோள்சாரக் குரு பகவான்
ஜாதகருக்குத் திருமணத்தை நடத்திவைத்து குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தார். ஜாதகருக்கு அவருடைய 30ஆவது வயதில்
ராகு மகாதிசை புதன் புத்தியில் திருமணம் நடைபெற்றது.

8. இது உபரிச் செய்தி: ஜாதகருக்கு 37 வயது நடைபெறுகிறது.
திருமணமாகி 6 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும்
இன்னும் குழந்தைச்செல்வம் இல்லை. 5ஆம் வீட்டுக்காரன்
செவ்வாய் நீசம். அதைக் கவனியுங்கள். இதைக் குறிப்பிட்டு (குழந்தையின்மையைக் குறிப்பிட்டு) நண்பர் சி.ஜீவானந்தம் 
அவர்கள் எழுதியுள்ளார். அவருக்கு நமது விஷேசமான 
பாராட்டுக்கள்!

லக்கினாதிபதி எத்தனை வலுவாக இருந்தாலும், பாக்கியஸ்தானம் கெட்டிருந்தால், ஜாதகருக்கு அவருடைய ஜாதகம் பயன்படாது என்பதற்கு உதாரண ஜாதகம் இது!
-------------------------------------------------------
போட்டியில் மொத்தம் 26 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அவர்களில் 7 பேர்கள் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்.

பாராட்டுப் பெற்றவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
//////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The given horoscope, 4th lord guru in opposition. Also Kethu placement disturbs. 5th lord neecham. Hence he could not study higher education.
    1. He studied only upto school.
    His 2nd lord sani in 9th place with maandhi. sani in place of sun is not comfortable. marriage karaka sukran in 3rd aspected by sani with maandhi. 12th lord is neecham. ayana, sayana, bogam is not granted to this guy.
    2. He married late. Sani aspects sukran.
    But aspects of guru on lagna helps to get married in later stage of life.
    Even though he marry he did not have children.
    C.Jeevanantham
    Tuesday, August 05, 2014 2:29:00 PM//////

-------------------------------------------------
2
//////Blogger venkatesh r said...
    புதிர் எண்: 65க்கான என்னுடைய அலசல்.
    தனுசு லக்னம், விருஷப ராசி அன்பர்.
    1) ஜாதகர் பள்ளி இறுதி வரை மட்டுமே படித்தவர்.
    2) திருமணம் சற்றே தாமதமாக நடந்திருக்கும்.
    அதற்கான காரணங்கள்:
    கல்வி:
    4ல் கேது கல்விக்கு தடை.தவிர கல்விக் காரகன் புதனின் மேல், நீச செவ்வாயின் பார்வை.4ம் அதிபதி குரு 7ல் அமர்ந்துள்ளதால் பத்தாம் வகுப்பு
வரை படித்திருப்பார். அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை.
    திருமணம்:
    களத்திராதிபதி புதன் இரண்டில் அமர்ந்து உள்ளார்.குடும்பாதிபதி சனி 9ல் உள்ளார். 7ல் லக்னாதிபதி குரு வக்கிரம் அடைந்து உள்ளார்.
களத்திரகாரகன் சுக்கிரன் 3ல் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்துவிட்டார்.ஜாதகருக்கு ராகு தசை நடப்பிலுள்ளது. அவருக்கு 28 வயதிற்கு மேல் கோச்சார குரு துலாம் ராசிக்கு வந்த போது திருமணம் நடந்திருக்கும்.
    தங்களின் மேலான அலசலுக்கு காத்திருக்கிறேன்.
    Tuesday, August 05, 2014 2:45:00 PM//////
------------------------------------------------------  
3  
/////Blogger Srinivas said...
    The native is born on 15-Feb-1978 at 2:41 am, considering chennai as birth place.
    Lagnathipathi and 4th house lord Guru is in 7th house and is aspecting 11th house, lagnam and 3rd house (sun and sukran).
    9th house lord Sun (Bhagyathipathi) is in 3rd house with sukran but is aspected by 2nd and 3rd house lord shani and maandhi.
    9th house is in paaba karthari yogam. Sun and Shani are in parivarthanai and Sun is aspecting 9th house.
    Education:
    1. Budhan is in 2nd house and is aspected by 5th and 12th house lord Chevvai.
    Chevvai is in neccham and is in 8th house.
    2. Ketu is in 4th house and Rahu is aspecting the 4th house.
    3. 4th house lord is placed in a kendra - 7th house.
    So the native would have studied but wouldn't have done higher studies.
    Marriage:
    1. Guru is in 7th house and is aspecting the lagnam and sukran.
    2. Sukran is combust as it is around 6 degrees next to Sun.
    3. 7th lord Budhan is in 2nd house is aspected by 5th and 12th house lord Chevvai.
    Chevvai is in neccham and is in 8th house.
    4. 2nd house lord Shani is in 9th house.
    Considering the age and dasas, the marriage would have happened in the Rahu dasa in any of the buthis of
    Guru or Shani or Sun or Sukra or Budhan.

    Tuesday, August 05, 2014 4:29:00 PM/////

-----------------------------------------------
4  
/////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் 65.
    1.தனுசு லக்னம் .லக்னாதிபதி கேந்த்ரததில் 7ல் அது ஒரு ப்ளஸ் .அதுவும் சுபர் பெரிய கிரகம் .
    2.4 மிடம் மீனம் மீனத்தில் கேது ..சுபர் பார்வை ஏதுமில்லை .வித்யாகாரகன் 2 ல்.நீசமான செவ்வாய் 7 ம் பார்வை ..
    ஆகவே கல்வி **பள்ளி படிப்போடு சரி **
    3.7 ம் வீட்டில் குரு 7 ம் வீட்டதிபதி 2 ல்
    3.களச்திரகாரகன் ,சுக்கிரன் சூரியனுடன் மேலும் சனி பார்வையில்.. ஆனால் சனி &சூரியன் பரிவர்த்தனை.
    4.பொதுவாக சூரியன் & சுக்கிரன் சேர்க்கை தாமதமான திருமணம்
    5.ஏழாம் இடத்தில குரு அமர்ந்ததால் லக்னாதிபதி கேந்த்ரம் என்பதாலும் திருமணம் குரு திசை 33 வயதிற்கு மேல் நடை பெற்றிருக்கும்.ஆனாலும்
சிக்கல் நிறைந்து இருக்கும் .
    **ஆகவே திருமணம் உண்டு**s.n.கணபதி ..

    Tuesday, August 05, 2014 4:35:00 PM/////
----------------------------------------------
5  
/////Blogger C.Senthil said...
    அய்யா,
    ஜாதகர் 8-ஆம் வகுப்பு வரை படித்திருப்பார் 13 வயது வரைக்கும் சந்திரன் திசை. செவ்வாய் திசையில் படிப்பு நின்று போயிருக்கும். லக்னதிர்க்கு
8-இல் செவ்வாய், செவ்வாய்-கு 8-இல் புதன்.
    7-இல் குரு ஆகையால் திருமணம் கண்டிப்பாக நடந்திருக்கும்.
    Tuesday, August 05, 2014 5:48:00 PM/////
------------------------------------------------
6  
/////Blogger Thanga raj said...
    Education : - kalvikaaragan budhan (baathagaathibathi) in 11nd place. in fourth place ngaanakaragan kethu. owner in 7th kendhram. - so he should fininsh is schoolings. He will not go/ complete his higher studies. But knowledgeable person.
    Marrigage: Since baathagaathibathi in his second place and lakinaathibathi also in baathagaathi place. His marriage life will not be good. Since suryan and sani is exchanging their houses he seems to be a person from rich family. hence he may got married in his raghu dhasa 's suriyan budhi.
    Tuesday, August 05, 2014 6:12:00 PM/////

-----------------------------------------------
7  
////Blogger Prakash Kumar said...
    lagnathipathi and 4th house owner Guru in Kendra 7 but it is pagai veedu. melum 4il kethu and neecha chevvai in direct look to kalvikaragan puthan.
    4th house owner and kalvikaran in 6/8 amaipu. so 10 or 12 pass that too in diffcultly.
    kindly note. Arambathil nadaipettra dasa 6il maraintha Chandran (8th house owner) and 8th amarntha chevvai (neecham).
    kudupamathipathi and bhakyithipathi paravarthani and laganthipathi guru(9th look) seeing sukuran and bhakiyathipathi, melum, 7il guru amarthanthal nalla manaivi kidaithirukkum. 7kudaiya Bhuthan kudumpatha isthanam 2il amarvu,Raghu dasa guru or bhudhan puthiyil thirumanam nadaipetrru irukalam.   
    Wednesday, August 06, 2014 4:36:00 AM////

============================================================
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

Unknown said...

Thank you for Valuable reply sir.

One doubt,
In this case, we did not even look at his wife jathagam but still we are saying no child.

might be he may get child during Guru Dasa - waiting for your inputs.

Unknown said...

அய்யா, ஐந்தாம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்றாலும் வக்கிரம் பெற்று வர்கோத்மம் ஆகி வலுவாக இருக்கிறார். ஷட்பலமும் வலுவாக உள்ளது !. அப்படி இருக்கும் போது எப்படி ?. மேலும் கேது ஞான காரகர், குரு கல்வி காரகர். இரண்டும் சேர்ந்து வலுப்பெற்ற செவ்வாய்யும் சேர்ந்து நல்ல கல்வியை கொடுத்திருக்க வேண்டுமே ? ராகுவும் புதனும் நல்ல அமைப்பில் என்று கூறியுள்ளீர்கள் ? அப்போது 10-ம் இட அதிபதியும் (புதனும்) அங்கு வீற்று இருக்கும் ராகுவும் நல்ல வேலையை கொடுத்திருக்க வேண்டுமே? அதுவும் அதன் தசையில் பலன் கொடுக்காதா ?. ராகு தசை புதன் புக்தியில் திருமணம் என்று கணிக்க முடிந்தது ! ஆனால் படிப்பு விஷயத்திலும் ஜீவன விஷயத்திலும் அவை கை கொடுக்கவில்லயே ? தெளிவு படுத்தவும் !

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
26 பேர் பங்கெடுத்ததில் 7 பேர் தேர்ச்சி அதில் நானும் ஒருவன் ..மகிழ்ச்சி ..
பாக்கிய ஸ்தானமான 9 மிடம் சனி +மாந்தி கூட்டணி ..9 வீட்டதிபதி சூரியன் 6 ம் வீட்டுகாரனுடன் கூட்டணி மேலும் *பாபகர்த்தாரி யோகத்தில்** மாட்டி கொண்டது அது ஒரு மைனஸ்
வாழ்க்கை எதோ வாய்க்கும் கைக்குமாக ஓடும் .
வாத்தியார் அய்யாவின் பாராட்டுக்கு நன்றி.

Unknown said...

Respected Sir,

sorry for asking the question which is not related this pathivu.

Please answer below queries based on your experience.

1. If a child born on Aavani matham, can we do sirartham/mootai for that baby in that matham (i mean 4th or 5th year and it is for murugranku venduthal)

2. Thanthai vali uravinar yaaravathu iranthal (pangakalikal or grandfather's brother)... few people saying to follw only 16 days and few people saying follow 3 month for going to kuladeivam or going to malai kovil.

what would be your suggestions on both cases.

Subbiah Veerappan said...

////Blogger Prakash Kumar said...
Thank you for Valuable reply sir.
One doubt,
In this case, we did not even look at his wife jathagam but still we are saying no child.
might be he may get child during Guru Dasa - waiting for your inputs./////

தெரிந்த ஜாதகர். இன்றையத் தேதியில் இல்லை. எதிர்காலப் பலனைச் சொல்வதென்றால் மனைவி ஜாதகத்தையும் பார்த்துவிட்டுத்தான் சொல்ல முடியும். மனைவியின் ஜாதகம் இல்லை!

Subbiah Veerappan said...

////Blogger murali krishna g said...
அய்யா, ஐந்தாம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்றாலும் வக்கிரம் பெற்று வர்கோத்மம் ஆகி வலுவாக இருக்கிறார். ஷட்பலமும் வலுவாக உள்ளது !. அப்படி இருக்கும் போது எப்படி ?. மேலும் கேது ஞான காரகர், குரு கல்வி காரகர். இரண்டும் சேர்ந்து வலுப்பெற்ற செவ்வாய்யும் சேர்ந்து நல்ல கல்வியை கொடுத்திருக்க வேண்டுமே ? ராகுவும் புதனும் நல்ல அமைப்பில் என்று கூறியுள்ளீர்கள் ? அப்போது 10-ம் இட அதிபதியும் (புதனும்) அங்கு வீற்று இருக்கும் ராகுவும் நல்ல வேலையை கொடுத்திருக்க வேண்டுமே? அதுவும் அதன் தசையில் பலன் கொடுக்காதா ?. ராகு தசை புதன் புக்தியில் திருமணம் என்று கணிக்க முடிந்தது ! ஆனால் படிப்பு விஷயத்திலும் ஜீவன விஷயத்திலும் அவை கை கொடுக்கவில்லயே ? தெளிவு படுத்தவும் !//////

வண்டி வாகனம் என்று ஜாதகர் செழிப்பாக இல்லையே தவிர. வேலையில் இருக்கிறார். அதுவரை ராகு கை கொடுத்திருக்கிறதே. அதற்காக சந்தோஷப்படுவோம். மற்ற விளக்கங்களுக்கு பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
26 பேர் பங்கெடுத்ததில் 7 பேர் தேர்ச்சி அதில் நானும் ஒருவன் ..மகிழ்ச்சி ..
பாக்கிய ஸ்தானமான 9 மிடம் சனி +மாந்தி கூட்டணி ..9 வீட்டதிபதி சூரியன் 6 ம் வீட்டுகாரனுடன் கூட்டணி மேலும் *பாபகர்த்தாரி யோகத்தில்** மாட்டி கொண்டது அது ஒரு மைனஸ்
வாழ்க்கை எதோ வாய்க்கும் கைக்குமாக ஓடும் .
வாத்தியார் அய்யாவின் பாராட்டுக்கு நன்றி./////

நல்லது. நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

////Blogger Prakash Kumar said...
Respected Sir,
sorry for asking the question which is not related this pathivu.
Please answer below queries based on your experience.
1. If a child born on Aavani matham, can we do sirartham/mootai for that baby in that matham (i mean 4th or 5th year and it is for murugranku venduthal)
2. Thanthai vali uravinar yaaravathu iranthal (pangakalikal or grandfather's brother)... few people saying to follw only 16 days and few people saying follow 3 month for going to kuladeivam or going to malai kovil.
what would be your suggestions on both cases./////

முதலில் குல தெய்வக் கோவிலுக்கு முடி இறக்க வேண்டும். பிறகு மற்ற தெய்வங்களுக்கு! ஆண்டுக் கணக்கை எல்லாம் விட்டுவிடுங்கள். நேரம் கிடைக்கும்போது அதை நிறைவேற்றுங்கள்!