மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

25.8.14

Humour: நகைச்சுவை: காதலிக்கு ஓர் கடிதம்!


Humour: நகைச்சுவை: காதலிக்கு ஓர் கடிதம்!

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பாருங்கள். லாஜிக் பார்க்காதீர்கள்
-------------------------------------------------------------------------------
1
விமான நிலையத்துக்கு பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.
       
"ஸார்...! பாராசூட்டுகளை வாங்கிட்டு போங்க விமானம் திடீரென விபத்தில சிக்கும் போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்....!"

ஓரு பயணி நின்றார்.

"பாராசூட் என்ன விலை?"

"இரண்டாயிரம் ரூபாய் ஸார்."

"சரி ... வாங்கிக்கிறேன்... விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து குதிக்கும் போது அது ஓரு வேளை விரியலைன்னா..?"

"``பணம் வாபஸ் ஸார்"

ஹி ஹி ஹி புத்திசாலி வியாபாரி...
---------------------------------------------------------------
2
கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார், ''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''

வாலி சொன்னார், ''ராமாயணத்திலே,வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்"

அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார், ''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?''

வாலி சிரித்துக் கொண்டே, ''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.
---------------------------------------------------------------
3
இன்டர்வியூக்களை எப்படி சமாளிப்பது?

நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா... நீங்க என்ன பண்ணுவீங்க?

"தெரியாதுன்னு " சொல்வீங்க..! அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம அதை சமாளிக்கறது எப்படின்னு தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..

அது Very Simple..

" If You can't Convince them..Then.. Try to Confuse Them..! "

இப்ப உதாரணத்துக்கு.

Question No.1 :

" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

" அலக்சாண்டர் குதிரை பேரா..?

”அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?! கருப்பா., வால் குட்டையா இருந்ததே அதுவா..?
வெள்ளை கலர்ல மூக்குல மட்டும் கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..? இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

"பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல கண்டுபிடிச்சவர் யாரு..? "

”அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி சொன்னவரு கிரேக்க மேதை "ஆல்பர்டோ பெர்ணாண்டஸ். Unfortunately அவரு பூமி Clock Wise-ல சுத்துதுன்னு சொல்லிட்டாரு..”

??!!?

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "

( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

இப்படிதான் இன்டர்வியூல கேக்கற கேள்விக்கு.. டக் டக்னு பதில் சொல்லணும்.. புரியுதுங்களா.?!
பின்ன.., அவங்க மட்டும் நமக்கு தெரியாத கேள்வியை கேக்கலாம்.. நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத பதிலை சொல்ல கூடாதா..?! —
---------------------------------------------------------------
4
காதலிக்கு ஓர் கடிதம்!

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்றமுடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.

மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்.

வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.

கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல்
இறையருளால் தப்பித்த உன்னுடைய,
முன்னாள் காதலன்
===============================================================
எல்லாம் சொந்த சரக்கல்ல. இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். இந்த 4ல் எது மிகவும் நன்றாக உள்ளது என்பதைச் சொல்லுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29 comments:

Dallas Kannan said...

Respected Sir
Mr. Vali...
this reminds me of one more..
forgot the name of the scholer, He was waling on the bridge where only one person can walk comfortably and some one comes from otherside you have to give way. In the half way he met some one who said I won't give way to fools. Then he said, I will and give way to other guy...

After wtiting this I felt, I can never be a writer (a good one) :)

வேப்பிலை said...

என்னத்த சொல்ல...
எல்லாமே சுவைக்குத் தானே..

kmr.krishnan said...

4th is the best. Thank you Sir.

துரை செல்வராஜூ said...

//அப்ப போன வாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி!?..//

நல்ல வேளை காதலன் தப்பித்தான்!...

Sakthivel K said...

வணக்கம் சார்......
2+4 ம் சூப்பர் சார்.
K.சக்திவேல்

Regunathan Srinivasan said...

i like 'parachute' comedy and kavigar 'valli' comedy.good presence of mind.looking more realistic.

venkatesh r said...

வணக்கம். வெள்ளியன்று பக்தி சுவை, திங்கள் இன்று நகைச்சுவை இரண்டும் நன்று. வாலியின் சமயோசித நகைச்சுவை படித்து ரசித்தேன். இன்று பக்தி சுவைக்கும் சமயோசித நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 107 வது பிறந்த நாள். இணையத்தில் படித்தது.

ஒருமுறை மைசூர் மகாராஜா, “நீங்கள் முருக பக்தியில் அதாரிடி என்று கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?” என்று வாரியாரிடம் கேட்டார். வாரியார், “என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது என்பதை முதலில் சொல்வேன்” என்றார். இப்படிச் சொன்ன உடன், மகாராஜா சிரித்துவிட்டாராம். “முருகனை வணங்கினால் வறுமை வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம் வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க மாட்டா” என்று வாரியார் கூறினார்.

புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இதோ, வாரியார் கூறுகிறார், 'வாயை மூடு!' என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான். 'நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?' என்கிறான் புத்திசாலி. அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்!

வாரியாரைப் பற்றி ஒரு பதிவு வெளியிடுமாறு வாத்தியாரிடம் ஒரு வேண்டுகோள். நன்றி.

nathan said...

பணிவான வணக்கங்கள்...

வாலி-ஜோக்கும்
If you can't convince them try to confuse them. (This line is very useful for VIP's) குதிரை ஜோக்கும் சூப்பர்.

PARITHI MUTHURASAN said...

வாலி......ஜோக் அருமை

sundari said...

அண்ணா வணக்கம்,

எல்லாமே நல்லாயிருக்குது ஆனால் இரை தேடும் குடும்பம் நல்லாயிருகிறது அதுமட்டும் இல்லை இந்தமாதரி பணம் தேடும் குடும்பமும் இருகிறது கல்யாண
இணயதளத்தில் பார்கலாம் இதை படித்தாவது மனகெட்ட மனிதர்கள் திருந்துவர்களா தெரியவில்லை.

hamaragana said...

aஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...
நாலுமே அருமை.. .3 வதும் கடைசியும் அருமையோ அருமை. !!!

Yoga.S. said...

"4".

கவிஞா் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

தேடிப் படைத்தீர் சிரிப்புறும் வெடிகளை!
நாடிச் சுவைக்கின்றேன் நான்!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

Subbiah Veerappan said...

/////Blogger Dallas Kannan said...
Respected Sir
Mr. Vali...
this reminds me of one more..
forgot the name of the scholer, He was waling on the bridge where only one person can walk comfortably and some one comes from otherside you have to give way. In the half way he met some one who said I won't give way to fools. Then he said, I will and give way to other guy...
After wtiting this I felt, I can never be a writer (a good one) :)/////

அப்படி சொன்னவர் அறிஞர் பெர்னாட்சா.
எழுத எழுத எல்லாம். வரும். பயிற்சிதான் மேன்மையாக்கும்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
என்னத்த சொல்ல...
எல்லாமே சுவைக்குத் தானே..///

முருகா!
முருகா!!!

Subbiah Veerappan said...

////Monday, August 25, 2014 7:45:00 AM Delete
Blogger kmr.krishnan said...
4th is the best. Thank you Sir./////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger துரை செல்வராஜூ said...
//அப்ப போன வாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி!?..//
நல்ல வேளை காதலன் தப்பித்தான்!.../////

ஆமாம்! ஆமாம். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

///Blogger Sakthivel K said...
வணக்கம் சார்......
2+4 ம் சூப்பர் சார்.
K.சக்திவேல்////

நல்லது. உங்களுக்குப் பிடித்தவற்றை அறியத்தந்தமைக்கு நன்றி சக்திவேல்!

Subbiah Veerappan said...

/////Blogger Regunathan Srinivasan said...
i like 'parachute' comedy and kavigar 'valli' comedy.good presence of mind.looking more realistic./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger venkatesh r said...
வணக்கம். வெள்ளியன்று பக்தி சுவை, திங்கள் இன்று நகைச்சுவை இரண்டும் நன்று. வாலியின் சமயோசித நகைச்சுவை படித்து ரசித்தேன். இன்று பக்தி சுவைக்கும் சமயோசித நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 107 வது பிறந்த நாள். இணையத்தில் படித்தது.
ஒருமுறை மைசூர் மகாராஜா, “நீங்கள் முருக பக்தியில் அதாரிடி என்று கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?” என்று வாரியாரிடம் கேட்டார். வாரியார், “என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது என்பதை முதலில் சொல்வேன்” என்றார். இப்படிச் சொன்ன உடன், மகாராஜா சிரித்துவிட்டாராம். “முருகனை வணங்கினால் வறுமை வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம் வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க மாட்டா” என்று வாரியார் கூறினார்.
புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இதோ, வாரியார் கூறுகிறார், 'வாயை மூடு!' என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான். 'நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?' என்கிறான் புத்திசாலி. அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்!
வாரியாரைப் பற்றி ஒரு பதிவு வெளியிடுமாறு வாத்தியாரிடம் ஒரு வேண்டுகோள். நன்றி.//////

வாரியார் சுவாமிகளைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பல்சுவைப் பதிவில் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது அதை உங்களுக்கு அறியத் தருகிறேன். நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger nathan said...
பணிவான வணக்கங்கள்...
வாலி-ஜோக்கும்
If you can't convince them try to confuse them. (This line is very useful for VIP's) குதிரை ஜோக்கும் சூப்பர்.

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger PARITHI MUTHURASAN said...
வாலி......ஜோக் அருமை////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger sundari said...
அண்ணா வணக்கம்,
எல்லாமே நல்லாயிருக்குது ஆனால் இரை தேடும் குடும்பம் நல்லாயிருகிறது அதுமட்டும் இல்லை இந்தமாதரி பணம் தேடும் குடும்பமும் இருகிறது கல்யாண இணயதளத்தில் பார்க்கலாம் இதை படித்தாவது மனகெட்ட மனிதர்கள் திருந்துவர்களா தெரியவில்லை.////

உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...
நாலுமே அருமை.. .3 வதும் கடைசியும் அருமையோ அருமை. !!!//////

நல்லது. நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

//////Blogger Yoga.S. said...
"4"./////

நல்லது நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger கவிஞா் கி. பாரதிதாசன் said...
வணக்கம்!
தேடிப் படைத்தீர் சிரிப்புறும் வெடிகளை!
நாடிச் சுவைக்கின்றேன் நான்!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு//////

நாடிப் படித்ததோடு நல்லதொரு பின்னூட்டம்
பாடிப்பதிந்தது கோடிபெறும்! பல்லாண்டு வாழ்க!

thozhar pandian said...

சந்தேகமே இல்லாமல் வாலியை பற்றிய துணுக்குதான் சிறப்பானது. கவிஞரின் ஹாஸ்ய உணர்வுக்கும் presence of mindக்கும் இது ஒரு சான்று. கவிஞர் வாலிக்கு அவரது திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது எனது கருத்து. காலம் போன காலத்தில் அவருக்கு இந்திய அரசாங்கம் 2007ல் அளித்த பத்மஸ்ரீ விருது மிகவும் குறைவு. அவர் எழுதிய எவ்வளவோ பாடல்கள் கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் என்று பலர் எண்ணும் அளவுக்கு இருந்தது அவரது திறமை. என்னை பொறுத்தவரை இருவரின் திறமைக்கும் வேறுபாடு இல்லை. எவ்வளவு தலைமுறைகளுக்கு பாடல் எழுதி உள்ளார் வாலிப கவிஞர். அவர் நம்மோடு இல்லை என்று எண்ணும் போது ஒரு சூனிய உணர்வு ஏற்படுகிறது. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப முடியாது, கண்ணதாசனின் இடத்தைப் போல.

Kirupanandan A said...

"உங்கள் ஜோக் சிரிக்கும் படியாகவும் சிந்திக்கும்படியாகவும் இருந்தது. அதாவது படித்தவுடன் சிரிக்கும் படியாகவும் பிறகு ஏன் சிரித்தோம் என்று சிந்திக்கும் படியாகவும் இருந்தது."

நான் வாத்தியாரைச் சொல்லவில்லை. முன்பு ஒரு முறை படித்ததை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

Prakash Kumar said...

Respected sir
Happy vinayagar chathurthi valthukkal for everyonea