மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.8.14

Short Story: சிறுகதை: சுமை எல்லாம் சுகம்!

 

Short Story: சிறுகதை: சுமை எல்லாம் சுகம்!

அடியேன் எழுதி, சென்ற மாதம், மாத இதழ் ஒன்றில் வெளிவந்து, பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை ஒன்றை, உங்களுக்கு அறியத்தரும் முகமாகப் பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------
சிறுகதை: சுமை எல்லாம் சுகம்!

பயணச் சாமான்களைத்தானே லக்கேஜ் என்போம். ஆனால் ராமநாதன் செட்டியாரின் மகள் நீலா தனக்கு வரன் பார்க்கும்போது, அதை வேறு விதமாகச் சொல்வாள்.

”அவர்கள் வீட்டில் எத்தனை லக்கேஜ் அப்பா?”

அவரும் நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு தன் மகளுக்குப் பதில் சொல்வார்.

“தலையில் தூக்க வேண்டிய லக்கேஜ் இரண்டு. கையில் தூக்க வேண்டிய லக்கேஜ் ஒன்று!”

அதாவது பையனுடன் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தலை லக்கேஜாம். உடன் பிறந்த தங்கை ஒருத்தியும் இருக்கிறாள். அவளுக்கு இன்னும் மணமாகவில்லை. அவள் கை லக்கேஜாம்.

எல்லாம் படித்த படிப்பும், வாங்கும் அதீத சம்பளமும் செய்யும் வேலை.

கோவை அரசினர் பொறியியற் கல்லூரியில் பி.இ. படிப்பையும், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.ஈ படிப்பையும் அடுத்தடுத்து முடித்துவிட்டு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் நல்ல சம்பளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவள் வேலையில் இருக்கிறாள்

அப்பச்சிக்கும் மகளுக்கும் கையில் அதீத பணப்புழக்கம்.

மகளுக்கு மாதம் லட்ச ரூபாய் சம்பளம். அப்பச்சிக்கு வயது 52தான். ஒரு தேசிய வங்கியில் இருந்து விருப்ப ஓய்வில் வந்து விட்டார். கையில் முப்பது லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அத்துடன் ஒரு கணிசமான தொகை பென்சன் என்ற பெயரில் மாதாமாதம் வருகிறது. சென்னை வேளாச்சேரியில் ஒரு சொந்த வீடு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டிருக்கிறார்.

மேலும் அவருக்கு, அவருடைய மாமியார் வீட்டில் இருந்து பழைய சொத்துக்களை, இடங்களை விற்று, ஆண்டுக்கு ஆண்டு லட்சக் கணக்கில் பணமும் வந்து கொண்டிருக்கிறது. பெங்களூர் ஒயிட் ஃபீல்டில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு சொகுசுக் குடியிருப்பை வாங்கி, பெங்களூரிலேயே செட்டிலாகி விட்டார்.

தினமும் இரவு நேரங்களில் வீட்டில் சமையல் கிடையாது. ஏதாவது ஹோட்டல் ஒன்றில் டின்னர். இன்னோவா கார் வைத்திருக்கிறார். அவரே நன்றாகக் கார் ஓட்டுவார். அதனால் எல்லாம் வசதியாக இருந்தது. மகளுக்கும் ஃபோர்டு ஃபீகோ கார் இருந்தது.

இப்போது மும்மரமாகத் தன் மகளுக்குத் தகுந்த வரன் தேடிக்கொண்டிருக்கிறார். வெளிநாட்டு மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம் என்று சொல்லி விடுவார். சென்னையிலும், பெங்களூரிலுமாகச் சேர்த்து சுமார் 500ற்கும் மேற்பட்ட வரன்கள் உள்ளதாம். அவற்றில் ஒன்றைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார். பல சட்ட திட்டங்களுடன் மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருக்கிறார். அதுதான் சிக்கல்.

வரவிருக்கும் மாப்பிள்ளை உயரமானவராகவும், அழகிய தோற்றத்துடனும் இருக்க வேண்டும். அதுதான் முதல் கண்டிஷன். தோஷங்கள் எதுவும் இல்லாமல் சுத்த ஜாதகக்காரராக இருக்க வேண்டும். ஜாதகம் பொருந்தி வரவேண்டும். அதுதான் இரண்டாவது கண்டிஷன். பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பப் பின்னணி உள்ளவராக இருக்க வேண்டும். அதுதான் மூன்றாவது கண்டிஷன். படிப்பில் ஒரு தீவிரக் கண்டிஷன் எதுவும் இல்லை. முதுகலை பட்டப் படிப்பு அல்லது தொழிற்கல்வியில் பட்டம் பெற்றவராக இருந்தால் போதும்.

ஒருமுறை நண்பர் ஒருவர் அவரைக் கண்டித்துச் சொல்லிவிட்டார்.

“இத்தனை கண்டிஷன்களை வைத்துக் கொண்டு நீ வரன் தேடினால் நிச்சயம் கிடைக்காது”

“என்ன சொல்கிறாயப்பா?”

“முதலில் ஜாதகம் பார்ப்பதை நிறுத்து. நம் காலத்தில் ஜாதகம் பார்த்தா திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்?  மனப்பொருத்தம் இருந்தால் போதும். ஜாதகம் பொருந்தினால் பையனைப் பிடிக்காது. பையனைப் பிடித்தால் ஜாதகம் பொருந்தாது. சோதனையாக இருக்கும். ஜாதகம் பார்ப்பதினால் வரப்போகும் கோளாறுகளைத் தடுத்து நிறுத்த முடியுமா? நடக்க இருப்பது நடந்தே தீரும். ஆகவே பழநியாண்டவரை வேண்டிக்கொண்டுவிட்டுத் திருமணத்தை நிச்சயம் செய். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்”

“சரி உனக்குத் தெரிந்த வரன் இருந்தால் சொல்!”

“இரண்டு வரன்கள் இருக்கின்றன. அதைச் சொல்லத்தான் வந்தேன். ஒரு பையன் இருக்கிறான். பெயர் சேதுராமன். கோல்ட் மெடலிஸ்ட். வயது 28. சிவில் இஞ்சினியர். சென்னையில் இருக்கிறான். எல் & டியில் வேலை.”

“பெற்றோர்கள்?”

“தகப்பனார் மட்டும்தான். தாயார் இல்லை. காலமாகிவிட்டார்கள். அவரும் சென்னையில்தான் இருக்கிறார். போரூரில் வீடு. சொந்த வீடு,”

“தகப்பனார் மட்டுமா? அந்த வரன் வேண்டாம்”

“ஏன்? தாயார் இருந்தால்தானே மாமியார் கொடுமை எல்லாம் இருக்கும். தகப்பனார் மட்டும்தானே இருக்கிறார். என்ன பிரச்சினை?”

“மாமியார் என்றால் எத்தனை பொல்லாதவளாக இருந்தாலும் சரி பண்ணி வைத்துக் கொள்ளலாம். பெண்ணிற்குப் பெண் என்று சரியாகிப் போய்விடும். ஆனால் ஒண்டிக்கட்டையாகத் தனித்திருக்கும் அப்பச்சிகளை வைத்துக் கொள்ளமுடியாது. வயதான காலத்தில் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அல்லது படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்வார்கள். என் மகளுக்கு ஒத்து வராது. அவளால் அழக்கொடுக்க முடியாது.”

“உன்னுடையது தவறான கண்ணோட்டம். எத்தனையோ அனுசரணையான தகப்பனார்கள் இருக்கிறார்கள். காலையில் பால் வாங்கி வருவதில் இருந்து, பேரன் பேத்திகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுக் கூட்டிவருவது செய்யக்கூடியவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். நீ கண்ணால் பார்த்ததில்லை. அதனால்தான் வேண்டாம் என்கிறாய்”

“உடல் நலத்தோடு இருக்கும்போது அதையெல்லாம் செய்வார்கள். தள்ளாமை அல்லது இயலாமை வந்து விட்டால் என்ன செய்வது? மகன் அப்பச்சியை விட மாட்டேன் என்பான். என் மகள்பாடு திண்டாட்டமாகப் போய்விடாதா?”

“அதைப் பேசினால் முடியுமா? உனக்கும் எனக்கும் அந்த நிலைமை வராது என்பது என்ன நிச்சயம்? அப்படி வந்தால், வீட்டோடு ஒரு நர்ஸ் அல்லது வேலையாளை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.”

”வீட்டோடு நர்ஸ் வைத்துக்கொண்டால்தான் அது சாத்தியம். கேரளாவில் உள்ள கிறிஸ்துவ மிஸன்களில் இருந்து அது போன்ற நர்ஸ்கள் கிடைப்பார்கள். அதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. அதெல்லாம் ரிஸ்க். வேண்டாம்.”

“சரி இன்னொரு பையன் சென்னையில் இருக்கிறான்.டி.ஸி.எஸ்ஸில் வேலை.”

“சென்னையில் எங்கே?”

“அம்பத்தூரில் வேலை. வீடும் அம்பத்தூரில்தான். பழைய ஓ.டியில் வீடு”

“அப்பச்சி, ஆத்தா?”

“அவர்களும் அவனோடுதான் இருக்கிறார்கள்”

“கூட்டுக் குடும்பமா?”

“என்னப்பனே இப்படிக் கேட்கிறாய்? பையன் தனியாக இருந்தால் பேச்சிலர். அப்பச்சி ஆத்தாவோடு இருந்தால் குடும்பம். அய்யா, அப்பத்தா, சித்தப்பன் போன்றாரும் உடன் இருந்தால்தான் கூட்டுக் குடும்பம். அதை நீ முதலில் தெரிந்துகொள்”

“வேண்டாம். அப்பச்சியாத்தா இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர்கள் தனியாக ஒரு ஊரிலும், பையன் ஒரு ஊரிலும் இருக்க வேண்டும்”

“ஏன்? அதில் என்ன செளகரியம்?”

“என் பெண்ணைச் செல்லமாக வளர்த்துவிட்டேன். அவர்கள் உடன் இருந்தால் தாக்குப் பிடிக்காது. 15 நாட்களுக்குள் சண்டை வந்துவிடும்.அப்புறம் பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன்”

வந்த நண்பர், புன்னகை செய்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.

                                                          * * * * * * * * * * * * * *

நேரம் வந்தால் எல்லாம் கூடிவரும் என்பார்கள். தேடிவரும் என்பார்கள். செட்டிநாட்டுக் கிராமங்களில் உள்ள பெரியவர்கள் அதை இன்னும் அழகாக மனதில் பதியும்படி இப்படிச் சொல்வார்கள்:

“அப்பச்சி, நேரம் வந்தால் அது உன்னை உட்காரவிடாது. எல்லாம் தன்னிச்சையாக நடக்கும். நான் வாரேன் தடுக்குப் போட, எங்காத்தா வாரா பிள்ளை எடுக்க என்று எல்லோரும் வந்து கை கொடுப்பார்கள்”

அது உண்மைதான். ராமநாதன் செட்டியாரின் தேடல் மூன்றே மாதங்களில் முடிவிற்கு வந்தது. அவரும், அவள் மகள் நீலாவும் நினைத்தபடி ஒரு மாப்பிள்ளை அமைந்தார்.

பையன் திரைப்பட நடிகர் ஆர்யாவைப் போல நல்ல எடுப்பான தோற்றத்தில், வாட்ட சாட்டமாக இருந்தான்.  பார்த்த மாத்திரத்திலேயே ராமநாதன் செட்டியாருக்கு அவனைப் பிடித்துவிட்டது. அவர் மகளுக்கும் பிடித்துவிட்டது. பையனுக்கும் பெண்ணைப் பிடித்து விட்டது.

பெங்களூரில் உள்ள ஸ்ரீராஜ ராஜேஷ்வரி கோவில் வளாகத்தில் வைத்துப் பெண்ணைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார், அங்கேயே மற்றதை எல்லாம் பேசி முடித்து, வாளி, பழங்களை மாற்றிக்கொண்டு திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.

அடுத்து வந்த வளர்பிறை முகூர்த்த நாள் ஒன்றில், செட்டிநாட்டில் உள்ள அவருடைய ஊரில் திருமணமும் நடந்து முடிந்தது. மாப்பிள்ளைக்கும் பெங்களூரில்தான் வேலை. மாரத்தஹள்ளியில் தான் அவனுடைய அலுவலகம். ராமநாதன் செட்டியாருக்கு எல்லாமே இணங்கி வந்தது. தங்களுடைய அடுக்குமாடி வளாகத்திலேயே பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் எனத் தனியாக ஒரு குடியிருப்பை விலைக்கு வாங்கிக் கொடுத்து அருகிலேயே குடியமர்த்திவிட்டார்

                                            *************************************

ஜாதகத்தில் 12 கட்டங்கள். அதாவது 12 வீடுகள். லக்கினத்தில் துவங்கி 12ஆம் வீடான விரைய, அயன, சயன, போக ஸ்தானங்களில் முடியும். ஒவ்வொரு வீட்டிற்கும் 3 விதமான முக்கிய வேலைகள். உதாரணத்திற்கு இரண்டாம் வீட்டிற்கு தனம், குடும்பம், வாக்கு என்று 3 வேலைகள் அதுபோல 12 வீட்டிற்கும் கூட்டினால் 36 விதமான வேலைகள். 36 விதமான பாக்கியங்கள்

அதெப்படி 6ஆம் வீடு கடன், நோய், எதிரிகளுக்கான வீடாயிற்றே - அதை எப்படி பாக்கியத்தில் சேர்க்க முடியும் என்கிறீர்களா? அந்த வீடு நன்றாக இருந்தால், நோயும் இருக்காது. கடனும் இருக்காது. எதிர்ப்பும் இருக்காது.ஆகவே அதுவும் பாக்கியத்தில் சேர்ந்ததுதான்.

எல்லோருக்குமே அந்த 36ல் பாதிதான் கிடைக்கும். ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. அதைத்தான் வாங்கி வந்த வரம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். வெல்த் இருந்தால் ஹெல்த் இருக்காது. ஹெல்த் இருந்தால் வெல்த் இருக்காது. அப்படி அமைந்துவிடும்.

ஆடு, மாடு, மான் போன்ற கால் நடைகளுக்குக் கொம்பைக் கொடுத்த இறைவன் குதிரைக்கு கொம்பைக் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.

அதுபோல ராமநாதன் செட்டியார் மகள் நிலாவிற்கு பல வசதிகளைக் கொடுத்த காலதேவன், குழந்தையைக் கொடுக்காமல் விட்டு விட்டான்.

திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும், அவளுக்குக் குழந்தை உண்டாகவில்லை. தம்பதிகளுக்கு எல்லாவிதமான மருத்துவமும் பார்த்தாகி விட்டது.குறையொன்றும் இல்லை, இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவக் குறிப்புகள் கூறின. ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. குழந்தை பிறக்கவில்லை. வீட்டுக்கு வருகிறவர்களின் கேள்விக் கணைகளுக்குப் பதில் சொல்லி மாளவில்லை. நீலா நொருங்கிப் போய்விட்டாள்.

“தோஷமாக இருக்கும். ஹாளஹஸ்திக்குப் போய் வாருங்கள். ராமேஸ்வரத்திற்குப் போய் வாருங்கள். உன்னிகிருஷ்ணன் கோவிலுக்குப் போய் வாருங்கள்” என்று எல்லோரும் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டு காது புளித்துப் போய்விட்டது.

போகாத பரிகாரக் கோயில்கள் இல்லை. செய்யாத செலவுகள் பாக்கியில்லை.

பஞ்சபூத ஸ்தலங்களுக்கு அடுத்தடுத்து சென்று, சம்பதி சமேதராக அங்கே உறைகின்ற சிவனாரையும், உமையவளையும் மனம் உருக வணங்கி விட்டு வந்தால் குறைகள் நீங்கிக் குழந்த பிறக்கும் என்று பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டு, நீலாவும் தன் தந்தையை அழைத்துக்கொண்டு அந்த ஸ்தலங்களுக்குச் சென்றாள்.

திருக்காளஹஸ்தியில் துவங்கி, காஞ்சிபுரம், சிதம்பரம், திருவண்ணாமலை, திருச்சி என்று சென்றவள், கடைசியில் திருச்சியில் இருக்கும் தன் பெரிய அம்மானையும் பார்க்கச் சென்றாள். அங்கே அவளுக்கு ஒரு தீர்வு கிடைத்தது. அதை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது தெய்வ அருள் என்றும் சொல்லலாம்.

திருச்சி தில்லை நகரில் இருக்கும் அவளுடைய பெரிய அம்மான், திருச்சியில் உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் பேராசியராக வேலை பார்த்து விட்டு இப்போது பணி ஓய்வில் இருக்கிறார். ஆன்மீகம் ஜோதிடம் என்று எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தவர்.

நீலாவை அவளுடைய திருமணத்திற்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறார். நீலா சின்ன வயதில் அவளுடைய ஆயா அங்கே இருந்தபோது, அவர் வீட்டில் தங்கி இரண்டு வருடங்கள் ஆரம்பப் பள்ளியில் படித்தவள். அவர் மேல் நீலாவிற்கு அலாதி பிரியம் உண்டு. ஏதோ காலக் கொளாறினால் சென்ற ஐந்து ஆண்டுகளாக அவரைச் சந்திக்காமல் இருந்து விட்டாள்.

“என்னடி ராசாத்தி எப்படி இருக்கிறாய்?” என்று அவர் கேட்டவுடன், நீலா குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கிவிட்டாள். அவளைச் சமாதானப்  படுத்துவது பெரும்பாடாகி விட்டது.

தன்னுடைய பிரச்சினையைச் சொல்லி, ”என்னுடைய ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் மாமா” என்று அவள் கேட்டபோது, அவர் தீர்க்கமாகச் சொன்னார்.

”ஜாதகம் எல்லாம் வேண்டாம் ஆத்தா, உன்னுடைய பிரச்சினை எனக்குத் தெரியும். அத்துடன் நீங்கள் இங்கே வருகிறேன் என்று சொன்னபோதே மீண்டும் ஒரு முறை உன்னுடைய ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம். அது நன்றாக இருக்கிறது. ஐந்தாம் வீட்டின்மேல் காரகன் குருவின் நேரடிப் பார்வை உள்ளது. ஆகவே உனக்குக் குழந்தை உண்டு. ராகு அங்கே இருப்பதால் சில தடைகளும் உண்டு. குலதெய்வங்களை வணங்கினால் அந்தத் தடைகள் நீங்கிவிடும். அதைவிட முக்கியமாக வீட்டுப் பெரியவர்களின் ஆசிகளும் வேண்டும்.”

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் மாமா?”

“என் மாமனாரும், மாமியாரும் எங்கே இருக்கிறார்கள்?”

“ஊரில்தான் இருக்கிறார்கள்”

“அவர்கள் ஏன் உன்னோடு வந்து இருக்கவில்லை. ஒரு முறையாவது அவர்கள் பெங்களூருக்கு வந்து உன் வீட்டில் ஒரு நாளாவது தங்கியிருந் திருக்கிறார்களா?”

“இல்லை!”

“என்ன காரணம்?”

“தவறு என்மேல்தான். அவர்களைச் சுமையாக நினைத்துத் துவக்கத்தில், வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. அதுவே கசப்பாகப் போய், அவர்களும் இதுவரை வரவில்லை”

“அதுதான் இறைவன் புதிதாக உனக்கு வேறு சுமைகளைக் கொடுக்கவில்லை!”

நீலா அதிர்ந்துபோய் விட்டாள்.”என்ன மாமா சொல்கிறீர்கள்?”

“நான் விவரமாகச் சொல்லி உன்னைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. உன் மாமியார் தெய்வபக்தி மிகுந்தவர். அதிர்ந்து பேசாதவர். புண்ணியவதி. அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து உன்னுடன் வைத்துக்கொள். உன் வீட்டில் விளக்கேற்றி அவர்களைப் பிரார்த்தனை செய்யச் சொல். ஒரு வருடத்திற்குள் நீ உண்டாகிறாயா இல்லையா பார்!”

“நான் எல்லாவற்றையும் உணர்ந்து விட்டேன். ஆனால் நான் போய்க் கூப்பிட்டால் அவர்கள் வர வேண்டுமே?”

“காலில் விழுந்து கும்பிடு. எழுந்திரிக்காமல் கும்பிடு. என்னிடம் அழுததைப்போல அவர்களிடமும் உன் மனக்குறைகளைச் சொல்லி அழு. ஒரு பெண்ணின் அழுகைக்கு இன்னொரு பெண் கண்டிப்பாக மசிவாள். செவி சாய்ப்பாள். அது இயற்கை. இறைவனின் படைப்பு. ஆகவே அவர்கள் வருவார்கள். முதலில் அதைச் செய். நம்பிக்கையோடு செய். எல்லாம் சரியாகிவிடும்”

நீலாவிற்கு ஒரு தெளிவு பிறந்தது. அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் முக்கியமில்லை. தன் பெரிய அம்மானின் சொற்படியே எல்லாவற்றையும் செய்தாள். அவளுடைய மாமியாரும், மாமனாரும் அவளுடனே வந்து வசிக்கத் துவங்கினார்கள். அவளுடைய மாமியார் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபடக் கூடியவர்கள. இங்கே வந்த இடத்திலும் அதைச் செய்தார்கள். ஒரு ஆண்டில் அவளுக்குக் குழந்தையும் பிறந்தது.

மனம் ஏற்றுக்கொண்டால், அதாவது மனதிருந்தால் சுமை எல்லாம் சுகம் ஆகும் என்பதை அவள் உணர்ந்தாள். இப்போது அவள் எதையுமே சுமை என்று சொல்வதில்லை. அதுதான் முக்கியம்!            ============================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

  1. வணக்கம் வாத்தியாரே!

    அருமையான, தற்காலத்திற்கு பொருத்தமான சிறுகதை.....

    நன்றி.

    ReplyDelete
  2. வீட்டுக்கடன்கள் இப்போது
    விவரமாக தெரிகிறது

    சுமையா? அல்லது
    சுகமா? என...

    ReplyDelete
  3. நல்லதொரு படிப்பினை ஊட்டும் கதை.

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. Newton 3 rd Law says " every action has reaction". Thermodynamic says" Total Enthalphy is always zero". Silapathigaram says " Oolvinay urthu vanthu ottum".
    What a story sir? it must read for all Daughters and Daughter in Law. Pl continue your good work. Really nethi adi story.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்.

    திருமணச்சடங்கில், "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு பாக்கியங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

    அந்த கால கூட்டு குடும்பத்தில் பெரியவர்களின் ஆசி, அனுசரணை இருந்தது. தவறுகளை சுட்டிக் காட்டி நல்வழி நடத்தியும் வந்தனர். முதியோர் இல்லங்கள் பெருகி வரும் இந்நாளில் இதைப் போன்ற நல்ல கதைகள்தான் வழி நடத்த வேண்டும். நல்ல சிறுகதை ஜாதகக் கட்டங்களுடன் உதாரணப்படுத்தி எழுதி அதைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. எனக்குத் தெரிந்த இடத்தில் மாப்பிள்ளையின் தந்தையார் மட்டும் இருந்தார். நிச்சயம் செய்யும் போது மாப்பிள்ளையின் தந்தை சென்னையில் தனியாக சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார்.பிள்ளை அமெரிக்காவில் இருந்தார். நிச்சயதார்த்தம் வெகு விமர்சையாக நடந்தது.நிச்சயம் முடிந்த மாலை பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொண்டாகள்.திருமணம் முடிந்த பின்னர் தன் தந்தையை தங்களுடன் 'அமெரிக்காவிற்கு அழைத்துச்சென்று அவர் விரும்பும் வரை தங்கச் சொல்ல வேண்டும்' என்று மாப்பிள்ளை கூறினார். மணப்பெண் 'அது முடியாது;நான் உங்களை மணக்க சம்மதிததே மாமியார் இல்லை, மாமனார் சென்னையிலேயே இருப்பார்;அமெரிக்காவில் நாம் இருவரும் தனியாக இருப்போம் என்பதால்தான்' என்றாள். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
    திருமணம் நின்று போனது.

    உங்கள் கதை நல்ல கருத்தைக் கூறியது. ஆனால் இது போய் சேர வேண்டியவர்களுக்கு சேருமா என்பது சதேகமே. நமது வகுப்பறையில் வருவோர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் இல்லையா?

    ReplyDelete
  7. Respected Sir,

    Good One !
    So who does not have children, will get child if they pray the god during bramamugurtham. please let me know timeings of it.

    ReplyDelete
  8. /////Blogger BLAKNAR said...
    வணக்கம் வாத்தியாரே!
    அருமையான, தற்காலத்திற்கு பொருத்தமான சிறுகதை.....
    நன்றி./////

    நல்லது. நன்றி! உங்களின் பெயர் என்ன?
    அதாவது நீங்கள் சகோதரனா? அல்லது சகோதரியா?

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    வீட்டுக்கடன்கள் இப்போது
    விவரமாக தெரிகிறது
    சுமையா? அல்லது
    சுகமா? என.../////

    சுமை எல்லாம் சுகமே! கதையைப் படித்த பின்பு அதில் என்ன சந்தேகம் வேப்பிலையாரே?

    ReplyDelete
  10. /////Blogger துரை செல்வராஜூ said...
    நல்லதொரு படிப்பினை ஊட்டும் கதை.
    வாழ்க நலம்../////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் செல்வராஜ்!!

    ReplyDelete
  11. ////Blogger sundari said...
    Goodafternoon sir,
    Good story sir./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. /////Blogger Karthikraja K said...
    Newton 3 rd Law says " every action has reaction". Thermodynamic says" Total Enthalphy is always zero". Silapathigaram says " Oolvinay urthu vanthu ottum".
    What a story sir? it must read for all Daughters and Daughter in Law. Pl continue your good work. Really nethi adi story.//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger venkatesh r said...
    ஐயா வணக்கம்.
    திருமணச்சடங்கில், "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு பாக்கியங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
    அந்த கால கூட்டு குடும்பத்தில் பெரியவர்களின் ஆசி, அனுசரணை இருந்தது. தவறுகளை சுட்டிக் காட்டி நல்வழி நடத்தியும் வந்தனர். முதியோர் இல்லங்கள் பெருகி வரும் இந்நாளில் இதைப் போன்ற நல்ல கதைகள்தான் வழி நடத்த வேண்டும். நல்ல சிறுகதை ஜாதகக் கட்டங்களுடன் உதாரணப்படுத்தி எழுதி அதைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி./////

    உங்களின் மனம் உவந்த பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    எனக்குத் தெரிந்த இடத்தில் மாப்பிள்ளையின் தந்தையார் மட்டும் இருந்தார். நிச்சயம் செய்யும் போது மாப்பிள்ளையின் தந்தை சென்னையில் தனியாக சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார்.பிள்ளை அமெரிக்காவில் இருந்தார். நிச்சயதார்த்தம் வெகு விமர்சையாக நடந்தது.நிச்சயம் முடிந்த மாலை பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொண்டாகள்.திருமணம் முடிந்த பின்னர் தன் தந்தையை தங்களுடன் 'அமெரிக்காவிற்கு அழைத்துச்சென்று அவர் விரும்பும் வரை தங்கச் சொல்ல வேண்டும்' என்று மாப்பிள்ளை கூறினார். மணப்பெண் 'அது முடியாது;நான் உங்களை மணக்க சம்மதிததே மாமியார் இல்லை, மாமனார் சென்னையிலேயே இருப்பார்;அமெரிக்காவில் நாம் இருவரும் தனியாக இருப்போம் என்பதால்தான்' என்றாள். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
    திருமணம் நின்று போனது.
    உங்கள் கதை நல்ல கருத்தைக் கூறியது. ஆனால் இது போய் சேர வேண்டியவர்களுக்கு சேருமா என்பது சதேகமே. நமது வகுப்பறையில் வருவோர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் இல்லையா?/////

    உண்மைதான். 30 வயதிற்குக் கீழே உள்ளவர்களைப் பல நல்ல விஷயங்கள் சென்றடையாது. காரணம் அவர்களுக்குப் படிக்கும் பழக்கம் இல்லை.
    நான் எழுதும் 2 பத்திரிக்கையின் நிலைமையும் அதுதான். அங்கே வாசகர்கள் அனைவருமே 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. //////Blogger Prakash Kumar said...
    Respected Sir,
    Good One !
    So who does not have children, will get child if they pray the god during bramamugurtham. please let me know timeings of it./////

    பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம்! அதில் பிரார்த்தனை செய்பவர்களுக்கு இறையருள் கிடைக்கும்!
    அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை அது!

    ReplyDelete
  16. வணக்கம் வாத்தியாரே!

    This is BLAKNAR.

    எனது பெயர் பா.லக்ஷ்மி நாராயணன், ஊர்: தூத்துக்குடி
    தொழில்: சுய தொழில் (Billing, Accounts, Payroll, Restaurant சாப்ட்வேர் டிவேலோப்மென்ட்)

    பிறந்த நேரம்: 01/Oct/1983 20:50, Tiruppur

    தந்தை, ஒரு அண்ணன் மற்றும் நான். தாயார் என் 6வயதிலேயே மரணம் எய்தினார்.

    email: blaknar@gmail.com

    அன்புள்ள மாணவன்.

    ReplyDelete
  17. சிறந்த சிறுகதைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  18. good story with good moral for this millineum age

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com