மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.8.14

Astrology: quiz.67: உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்!


Astrology: quiz.67:  உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்!

Quiz No.67: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தி ஏழு

18.8.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு ஒரு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.


1. கல்வி நிலை பற்றி அலசி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை? போன்றவற்றை அலசி எழுதுங்கள்!

2. ஜாதகரின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

  1. அன்பர் 10 to 12 ஆம் வகுப்பு வரை
    படித்திருப்பார் !
    திருமணம் நடந்திருக்கும் தாமதமாக !!
    1-10 ஆம் அதிபதி விரையத்தில்.
    2-9 ஆம் அதிபதி விரையத்தில்.
    வாழ்க்கை சுகபடாது....
    குரு லக்னத்தில் இருப்பதால்
    கெட்டாலும் மேன்மக்கள், மேன்மக்களே
    என்ற நிலை!!!
    K.சக்திவேல்

    ReplyDelete
  2. படிப்பு:

    ஆரம்ப திசை சனி திசை,படிப்பில் தடங்கள் வர வாய்ப்பு எனினும்,அவர் UG படித்திருக்க வாய்ப்பு உண்டு.ஏன் எனில் 2 ம் இடம் கல்வி,அங்கு இரு பாவிகள்,கல்வித்தடை,4 ம் அதிபதி குரு 1 ல் ,கேந்திர அதிபதிய தோஷம் எனினும்,சந்திரன் பார்வை.ஆக தோஷம் அடிபட்டு டிகிரி படித்திருக்க வாய்ப்பு உண்டு.....

    திருமணம்:

    25 முதல் 27 க்குள் திருமணம் நடந்திருக்கும்.புதன் திசை குரு புத்தியில்.உபய ராசி லக்னம்,திருமணம் வாழ்க்கை இனிப்பது கடினம்

    ReplyDelete
  3. Respected sir,

    1. He completes Degree education - Engineering or related. Guru is in Lagnam / Chandran in seventh place.

    2. Still He not got marriage, Rahu is in second place family not success.

    Regards
    Rm.srithar

    ReplyDelete
  4. லக்னாதிபதி 12ல், தன் வாழ்க்கை தனக்கு அல்ல.

    பட்ட படிப்பு(குரு சந்திர பார்வை) மற்றும் ஆராய்ச்சி அறிவு உண்டு(செவ்வாய், புதன் சேர்க்கை).

    4,7க்கு உரிய குரு லக்கினத்தில் மேலும் தேய்பிறை சந்திரன் பார்வை, குரு சந்திர யோகம் நிச்சயம் பட்ட படிப்பு படித்தவர். லக்கினத்தில் குரு இருந்தாலே கவலை வேண்டாம்.(வாத்தியாரின் பழைய பாடம்).

    செவ்வாய், புதன் சேர்க்கை எல்லா துறையிலும், குறிப்பாக ஆராய்ச்சி துறையில் வல்லமையை தந்தனர்.


    திருமணம் உண்டு.
    திருமணம் புதன் திசையில், இனிதே நடந்து இல்லற சுகத்தையும் அன்யோன்யதையும் கொடுத்தனர்.

    கன்னி லக்கினதிற்கு யோக காரகனாகிய புதன் 12ல், தனது திசை முடிந்ததும் ஜாதகரை கை விட்டு விட்டான். கேது திசை சுழற்றி அடித்திருக்கும். பிள்ளைகளால் சுகம் இல்லை.



    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி

    ReplyDelete
  5. Dear sir,
    jadhagakarar kanni lagnam.4th and 7th house lord jupiter is placed in 1st house.4th house is for education and 7th house is for marriage.from 1st house jupiter looks at 5th ,7th and 9th house.9th house signifies higher learning.so person should be minimum master degree holder and should have been married as well.
    Regards,
    S.Regunathan

    ReplyDelete
  6. Dear Sir,

    Jadhagakarar kanni lagna karar.4th lord and 7th lord jupiter is positioned in 1st house.Raja Yoga jadhagam.from 1st house jupiter looks at 5th,7th and 9th house.so person should be highly learned minimum master degree holder and should be married also.even though mercury and sukran is in 12th house which is not good,effect of jupiter would nullify that.am i right sir?

    Regards,
    S.Regunathan

    ReplyDelete
  7. Dear Sir,

    The given horoscope, 4th lord and 7th lord both are in lagna, papakarthari yoga. In 2nd and 12th malefic grahas.

    1. He studied only upto school level.(mercury in 12th, 4th lord in papakarthari yoga)

    2. He married due to Jupiter aspects 7th place. But due to maandhi rahu placement in 2nd, he could not continue with the marriage life. May be divorced or lost his wife. Malefic in 12th place. lagna lord in 12th place, so it does not support to native for marriage life.

    Thanking you.

    C.Jeevanantham

    ReplyDelete
  8. DOB-August 14,1957 9.00 AM -Chennai (approxi)
    Jathagar Meena Rasi Kanni laganthil piranthavar. Laganathipathi Budhan 12il ooruku ulaigum jathagar.

    1.Eduction:4th house owner guru in laganam.it his friend's house and looking 5th place. eventhough pudhikaragan budhan in 12th house, (9th house from 4th house good position)
    live started with sani dasa and then budhan (12il amarthavar)dasa,
    Guru in lagana might have allowed jagathakar to get atleast one degree.

    2.Marriage: 7th house owner in lagna and 7il amartha moon looking directly to lagnam. Marriage might have happened lately, at the age of 33 to 35, during Kethu dasa -sun or moon bhudhi when Kochaara guru in his 11th position. alagana manaivi kidaithirukum but aduthu vantha Chevvai or Raghu bhuddhil manmurivu nadaipetruirukkam.

    2il raghu+mandhi, kalthirakaran+bhakkiya isthanathipathi+Kudampathi sukuran in 12th place is worst placement (udan 8th house owner Chevvai). kudumpa valkai nadathavidamatterkkal.
    Note: After Kethu dasa, 12il amartha sukaran dasa. generally 12il amarntha kirakkathin dasa mosamaga irukum.

    Ore Aruthalana vishyam , Guru in Lagnam and looking direcltly to manakaran Moon. Jathagaruku nall mana valimai kuduthirparkkal (ethaiyum thangum ithayaum).

    ReplyDelete
  9. ஜாதகர் உயர் கல்வி வரை படித்தவர். உயர் கல்விக்கான 5ம் அதிபதி சனி மூன்றாம் பார்வையால் 5ல் வைத்துள்ளார். 5ம் வீட்டை குரு பார்க்கிறார். வித்யாதிபதி புதனை பாக்யாதிபதி சுக்கிரன் பார்க்கிறார்

    7ம் வீட்டில் லாபாதிபதி சந்திரன். உடன் குரு பார்வை காரகன் சுக்கிரன் விரையத்தில் உடன் அஸ்டமாதிபதி லக்கினாதிபதி. அஸ்டமாதிபதி செவ்வாய் பார்வை 7ம் வீட்டில்

    குரு பார்வை 7ம் வீட்டில் இருப்பதால் காலம் கடந்து தாய் வழி உறவில் திருமணம் நட்ந்திருக்கும். இரண்டாம் வீட்டில் raagu மாந்தி அதிபதி சுக்கிரன் 12ல் காரகன் குரு 2க்கு 12ல் சுபர் பார்வை இல்லாததால் குடும்பம் இல்லாதிருக்கும். அல்லது பிரிந்திருக்கும்

    ReplyDelete
  10. Dear Guruji,

    1. 7th Lord in Lagna
    2. Gaja kesari yogam and 11th lord in 7th House.
    3. 3 and 8 lord mars aspects 7th place.
    4. Rahu and mandi in 2nd house, bad for family life.
    5. Jupiter in good position and But Venus in 12th house.

    There will be marriage but marred with difficulties. Marriage period Mercury dasa in Guru sub period.

    Education.

    1.Mecury in 12th house.
    2.4th lord in 1st house, good
    position.
    3. Guru aspect in 5th house.

    He is educated but don't have higher education.

    ReplyDelete
  11. 4ம் வீட்டு அதிபதி குரு 11ம் வீட்டு அதிபதி சந்திரனால் பார்க்கப்படுவதால் படிப்பு உண்டு. படிப்புக் கார‌கன் புதன் பாக்கியாதிபதி சுக்ரனுடன் இருப்பதாலும் படிப்பு உண்டு.ஆனால் இவர்களை 6ம் வீட்டு அதிபன் சனி பார்ப்பதாலும், 8ம் வீட்டு அதிபதி செவ்வாயுடன் இணைந்ததாலும், இவர்கள் மூவரும் 12ல் மறைந்ததாலும் தடை தாமதங்களுடனான படிப்பு. 10 வயதுவரை சனிதசா வேறு. உடல் நிலையிலும் சிரமங்கள். எனவே பள்ளிப்படிப்பை தட்டுத்
    தாடுமாறி முடிக்க வாய்ப்பு.5ம் வீட்டுக்கு குருபார்வை இருப்பதால் ஆன்மீகக் கல்வி சுயமாக கற்று குருவாக விளங்க‌ வாய்ப்பு.4,8,12 படிப்பு,
    ஞானத்துக்க்கான இடங்கள். 4ம் அதிபதி கேந்திரம், 8ல் கேது, 12ல் சுக்ரன் புதன் இவர் ஒரு ஆன்மீக குருவாக இருக்க வாய்ப்பு.

    கஜகேசரியோகம் உள்ளது. புததசா, குருபுக்தியில் 27/28 வயதில் ஏற்கனவே தெரிந்த பெண்ணுடன் திருமணம்.

    4,8,12 படிப்பு, ஞானத்துக்க்கான இடங்கள். 4ம் அதிபதி கேந்திரம், 8ல் கேது, 12ல் சுக்ரன் புதன் இவர் ஒரு ஆன்மீக குருவாக இருக்க வாய்ப்பு.

    ReplyDelete
  12. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..புதிர் எண் 67.
    1.கன்னி லக்னம் .லக்னாதிபதி புதன் தன வீட்டிற்கும் ல்க்னதிற்கும் 12ல்////.ரெம்ப சந்தோசம்..///
    2.லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் **ஜாதகத்தை பார்க்கவே வேண்டாம்**
    3.படிப்பு நாலாம் வீட்டுக்காரன் நித்திய ஆயுள் தண்டனை கைதி??? 12ல்:பாப.கர்:---புத்தி காரகன் புதன் 12ல்
    ஆரம்ப கல்வி பெரிய விஷயம் ஆக கல்வி இல்லை..??
    4 . 7மிடம் மீனம் ..7மிடத்து அதிபதி குரு ஜெயிலில் அங்கே சந்திரன்
    இருந்தாலும் திருமண வாழ்க்கை இல்லை.
    5.காரணம் 2.ம் வீட்டில் ராஹுவுடன் மாந்தி .ரெண்டு மிக பெரிய வில்லன்கள் குடும்பவீட்டில் ..குடும்பததை கனவில் கூட நினைக்க முடியாது..
    6.அடுத்து வரக்கூடிய திசைகள் ஏதேனும் நல்லது செய்ய வாய்ப்பு உண்டா..சனி 12.1௦..புதன் 17.[12ம் வீட்டில்] கேது 7..[8ம் வீட்டில்] ..சுக்கிரன் 2௦ க்கு சுக்கிரன் [12.ம் வீடு ]..எதோ வாழ்க்கை ஓடும்.

    அலசல் முடிவு !!!
    ஆரம்ப கல்வி ..மட்டுமே.!!
    திருமணம் இல்லை..
    அலசல் சரிதானா .அய்யா..??

    ReplyDelete
  13. சார் வணக்கம்
    நீண்ட நாளா நான் டெஸ்டுக்குவரவில்லை அஷ்டம சனி அடிச்சி போட்டுவிட்டது.
    1.இவர் உயர் கல்விதான் படிச்சிருப்பார் படிப்புவராது காரணம் 2ல் மாந்தி ராகு
    3ல் சனி அப்புறம் 4ஆம் அதிபதி குரு அது லக்னதிலிருந்தாலும் 4ஆம் வீட்டிற்கு 10லிருந்தாலும் பாப்கத்திரி தோஷத்திலிருக்கிறது எனவே பட்டபடிப்புஇல்லை.மேலும் புதன் திசை வேற நடந்தது இது விரயத்திலிருகிறது.லகனதிபதியே ஆனாலும் இவர் படிப்பை கொடுக்கமாட்டர்

    2.இவருக்கு திருமணமில்லை காரணம் 8ல் கேது 7ல்சந்திரன் கன்னி லக்னதிற்கு சந்திரன் நல்லது செய்யாது மேலும் லக்னதில் குரு இவர் லக்னதிற்கு நல்லது செய்ய மாட்டார் 2ல் ராகு மாந்தி குடும்பம் அமையாது 2ஆம் அதிபதி சுக்கிரன் வேற 12ல் இருகிறார் 8ஆம் அதிபதி 3ஆம் அதிபதி செவ்வாய் 7யை பார்கிறார்
    அப்புறம் 3ஆம் வீட்டையும் பார்கிறார்

    ReplyDelete
  14. Dear Sir,

    Date of birth is Aug 14 1957.
    App time : 10.00 a.m.
    Education
    As the fourth lord is caught in papakarthari yoga (surrounded by malefic MA and RA )
    And also karaka is in 12th house.(ME)
    ME has associated with 8 th lord MA .
    The sixth lord SA also aspects the karaka ME.
    Education is doubtful.
    Marriage
    As moon is in 7th house aspected by JU marriage will be there.
    Marriage will happen during Mercury dasa.
    But as the 2nd house has RA+ Mdi . the marriage will not be happy one.
    They may be separated in Kethu dasha.

    ReplyDelete
  15. ayya vanakkam,
    jathakar palli kalviyil thadai ullathu. sani antha velaiyai sevvane seivaar.

    kejakesari yogathaal thirumanam nadaiperum.(guru-chandiran paarvaiyaal)thirumanam kaalathaamathamaaga nadakum. (sukiran maraivaal). thirumana murivu yerpadum (sani in paarvai + sevaai + sukiran kootu)

    thavaru irupin mannitharulga!

    ReplyDelete
  16. ஐயா,
    கன்னி லக்கினம். லக்னாதிபதி புதன் 12ல். புதனுக்கு வீடு கொடுத்த சூரியன் ஆட்சி.
    4 ஆம் இடத்துக்குரிய குரு 11ல்.குரு உச்சம். செவ்வாயுடன் சேர்க்கை. குரு மங்கள யோகம்.
    ஜாதகர் படித்தவர்.

    ReplyDelete
  17. Quiz : 67 க்கான என்னுடைய அலசல் :

    கன்னி லக்கினம், மீன ராசி ஜாதகர்.
    1. 7ம் வகுப்பு வரை மட்டும் பயின்றவர்.
    2. திருமணம் நடந்திருக்கும். பிரிந்து வாழ்வார்.
    அதற்கான காரணங்கள் :
    கல்வி :
    ஜாதகருக்கு பிறவியில் வறுமை. லக்கினம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது. லக்கினாதிபதியும், கல்விக்காரகனுமான புதன் 12ல் மறைவு. அவருடன் 2ம் அதிபதியும் பாக்கியாதிபதியுமான சுக்கிரன் மற்றும் செவ்வாயின் கூட்டு. இந்தக் கூட்டணியை 3மிடத்திலுள்ள ஜாதக வில்லன் சனி தன் 10ம் தனிப்பார்வையால் பார்க்கிறார். ஆரம்பக்கல்விக்கான 2மிடத்தில் ராகு மற்றும் மாந்தி அமர்ந்துள்ளனர். 2மிடத்திற்கு வேறு சுபரின் பார்வையில்லை. தவிர, ஜாதக்ருக்கு வில்லன் சனியின் தசை 12 வயது வரை இருந்துள்ளது. வறுமையின் கொடுமை காரணாமாக குடும்பத்தை காப்பாற்ற ஜாதகர் ஆரம்பக் கல்வி (அ) 7ம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடர முடியவில்லை.
    திருமணம்:
    களத்திராதிபதி குரு லக்கினத்தில் அமர்ந்தாலும், பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளார். அவரின் பார்வை 7ல் மற்றும் அதில் அமர்ந்துள்ள சந்திரனின் மேல் விழுகிறது. தவிர அஷ்டமாதிபதி செவ்வாயின் பார்வை 7ம் இடத்திலும், 3ம் தனிப்பார்வை 2ம் இடத்திலும் அதில் அமர்ந்துள்ள ராகு+மாந்தி கூட்டணியின் மேலும் விழுகிறது. களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் அமர்ந்து சனியின் பார்வையால் வலுவிழந்துள்ளார். இவை எல்லாம் திருமணத்திற்கு எதிரான அமைப்பை தந்தாலும், ஜாதகருக்கு வலுவான கஜகேசரி யோகம் உள்ளது. அந்தக் காரணத்தால் அவருக்கு 27 வயதில் லக்கினாதிபதி புதன் தசையில், குரு புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.

    ஆனால் 2ல் உள்ள ராகு+மாந்தி கூட்டணியால் ஏதோ ஒரு காரணத்திற்காக‌ மனைவியைப் பிரிந்து வாழ்வார்.

    ReplyDelete
  18. ayya vanakkam,

    jathakar palli kalviyil thadai ullathu. sani antha velaiyai sevvane seivaar.

    thirumanam nadaiperum.(guru-7 am paarvaiyaal kalathira sthanathai paarkiraan)
    thirumanam kaalathaamathamaaga nadakum. (sukiran maraivaal). thirumana murivu yerpadum (sani in paarvai + sevaai + sukiran kootu)

    thavaru irupin mannitharulga!

    ReplyDelete
  19. ayya

    jathagar 10m vaguppu thaandiyiruppathe kadinam. Kaaranam:

    1. Lagnam Pabakarthari yogathil sikkiyulladhu. Matrum Laknathipathy, 12-il 3-8-kuriya sevvayudan koottu.

    2. Matrum 4m athipathy guru, Sevvaai - Raghuvirkku naduvil sikkiyullaar.

    3. 4-m veettirkku endha suba graha paarvaiyum illai. Enave 10-m vaguppu thaandiyirukka vaaippillai. Budhan thisai ivarukku (kalvikku) payanpattirukkaadhu.

    Thirumanam nadanthirukka vaaippillai.
    Kaaranam:
    1. 2-m veettil raaghu matrum maandhiyin aadhikkam. Andha veettu adhipathy, sukkiran laknathirkku 12il.

    2. 7m athipathy, 7-m veettirkku 7-il irundhaalum, Sevvai matrum Raaghuvirkku naduvil sikkiyullaar.

    2. Kalathira Kaaragar matrum Bakyathibathiyana Sukkiran,lagnathirkku 12-il. 6-m Athipathy saniyin 10-m paarvaiyil. Koodave, 8m athipathy sevvayum sukkiranudan.

    3. Adhumattumindri, 7-m adhipathy Guru, Sukkiran matrum lagnathibathikku 1-12 positionil ullaar.

    4. Oruvelai ivarukku, thirumanam nadanthirundhaalum (guru lagnathil irunthu 7-m veettai paarpadhaal) santhoshamaaga irukka vaaippu kuraivu. Kaaranam, 8-m athipathy sevvaiyin paarvayil 7-m veedu. Matrum, Kalathirakkaaragar Sukkiran 7-m veettirkku 6-8 positionil.

    Anbudan,
    Mu.Prakaash.

    ReplyDelete
  20. Ayya,

    Please find my answers:


    1. He must be studied good. Because during his study time, he has undergone Bhudhan Dasa which is lagna for him & Guru is sitting in lagna. one more reason: Bhudhan & Sukran combination gives Nupunathuva Yogam.

    2. He must be married twice. Because first marriage would have got, because of Guru is aspecting 7th house and Chandran is aspecting in lagna. i.e. Gaja Kesari Yogam. But due to following reasons be must be undergone second marriage. a) Sukran is in 12 th house b) second house occupied by Rahu and MAndhi c) 8th house occupied by ketu. There is no good planet is aspecting 2nd and 8th house.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  21. நான் ஜோதிடத்திற்கு மிகவும் புதிது. என்னால் முடிந்த வரை முயற்ச்சித்து இருக்கிறேன்

    1) ஜாதகர் ஒரளவு படித்தவர். காரணஙள்

    (அ) நான் காம் அதிபதி ஒன்றில்
    (ஆ) ஆனால் புத்தி காரகன் புதன் விரயத்தில் அதுவும் அஷ்டமாதிபதியோடு கூட்டணி.
    (இ) புத்தி காரகன் புதன் சந்திர லக்னத்திற்கு ஆறில்


    ஆகையால் மெத்த படித்தவராக இருப்பதற்க்கான வாய்ப்பு குறைச்சல்


    2) ஜாதகர் திருமணம் ஆனவர் ஆனால் தாமதமாக நடந்து இருக்கும்

    (அ) குரு, சுக்கிரன் மற்றும் அஷ்டமாதிபதி செவ்வாயின் பார்வை களத்திர ஸதானத்தில்
    (ஆ) லாபாதிபதி சந்திரன் களத்திரத்தில்
    (இ) இரன்டில் ராகு திருமணத்தை தாமதிக்கும் அமைப்பு

    ReplyDelete
  22. வணக்கம் குரு,

    ஜாதகர் கல்லூரி படிப்பு படித்தவர். காரணம் 4குடைய குரு லக்னத்தில், நிபுணத்துவ யோகம் மற்றும் 4ம் இடத்திற்கு எந்த பாவகிரக சேர்க்கை & பார்வையும் இல்லை. இளமையில் சனி தசை நடந்தாலும் கன்னி லக்னத்திற்கு திரிகோனமாகிய 5மிடதிர்க்கு அதிபதி ஆகவே கெடுபலன் சற்று குறைவாகவே இருந்திருக்கும்.

    இவருக்கு 27வயதில் கண்டிப்பாக திருமணம் நடந்திருக்கும். காரணம் 7குடைய குரு லக்னத்தில் மற்றும் 7ம் இடத்திற்கு எந்த பாவகிரக சேர்க்கை & பார்வையும் இல்லை. இவருக்கு இருதார யோகம் உள்ளது. காரணம் லாபாதிபதி சந்திரன் 7இல். எனவே கண்டிப்பாக ஒரு திருமணமாவது நடந்திருக்கும்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  23. ஜாதகர் படிக்காதவர். வித்யாகாரகன் புதன் 12ல் மறைந்து விட்டார். திருமணம் ஆனவர். லக்கினத்தில் இருக்கும் குரு தன் சொந்த வீடான 7ம் இடத்தைப் பார்க்கிறார். 7ல் சந்திரன் இருப்பதும் நல்ல அமைப்புதான். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து விட்டதால் தாமதத் திருமணம். 30 வயதிற்கு மேல் நடந்திருக்கும்.

    ReplyDelete
  24. இலக்கினத்தில் குரு. 4ம் வீடு மற்றும் 7ம் வீடு அதிபதியும் குருவே. அவர் இலக்கினத்தில் இருப்பது மிகச் சிறந்த அமைப்பு. கல்வி காரகரும் இலக்கினாதிபதியுமான புதன் இலக்கினத்திற்கு 12ல் மறைந்ததால் எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய ஜாதகம். புதனுக்கும் சுக்கிரனுக்கும் சனி பார்வை உண்டு. சனிக்கு செவ்வாயின் பார்வை உண்டு. இது அவ்வளவு சிறந்த அமைப்பாக தெரியவில்லை. ஆனால் குரு இலக்கினத்தில் இருப்பதாலும், குரு சந்திர யோகம் இருப்பதாலும், தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். கல்வி காரகர் புதனும் 4ம் வீட்டிற்கு 9ம் வீடான 12ம் வீட்டில் இருப்பதால், கல்வி கிடைத்திருக்கும். பட்டப் படிப்பு முடித்திருப்பார். முதுநிலை கல்வி கிடைத்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. களத்திரகாரகர் சுக்கிரன் 7ம் வீட்டிற்கு 6ல். ஆனால் 7ம் வீட்டு அதிபதி குரு இலக்கினத்தில். இந்த காரணத்தால் ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். ஆனால் தாமதமாக நடந்திருக்கும். சுக்கிர தசை தொடங்கியவுடன், அதாவது 36 வயதிற்கு மேல் திருமணம் உண்டு. குரு பலம் இந்த ஜாதகருக்கு கை கொடுக்கும்.

    ReplyDelete
  25. மதிப்பிற்குரிய ஐயா !!!

    புதிர் எண் : 67 இற்கான பதில் !!!

    கொடுக்கப்பட்ட அன்பர் கன்னி லக்கினம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி புதன் விரயத்தில் உள்ளார். சுக்கரன் மற்றும் புதன் கிரக யுத்தத்தில் உள்ளனர். ஆரம்ப கல்வியிலேயே தடைபட்டு போகும். அதிகபட்சமாக பத்தாம் வகுப்பு வரை பயின்றிருப்பார். லக்கினாதிபதி புதன் 12 இல், கிரக யுத்தத்தில், இரண்டில் மாந்தி. மற்றும் ராகு. இவர்கள் இருவரும் ஜாதகரின் ஆரம்ப கால பலிப்படிப்பை கெடுத்திருப்பார்கள். மேலும் குரு லக்கினத்தில் அமர்ந்தாலும் அவர் கேந்திராதிபதிய தோஷத்தில் உள்ளார்.

    களத்திரகாரகன் சுக்கரன் புதனுடன் கிரகயுத்ததில், 12 இல் மறைவு. மேலும் 3 மற்றும் 8 ஆம் அதிபதி செவ்வாயின் பிடியில். மேலும் 11ஆம் அதிபதி சந்திரன் 7லில. 7 ஆம் அதிபதி குரு 7 பரல்களுடன், லக்கினத்தில். ஜாதகருக்கு குடும்பஸ்தானதிபதி சுக்கரன் 12 இல் மறைவு + கிரகயுத்தம். இரண்டில் மாந்தி + ராகு. இதன் காரணமாக திருமணம் இல்லமால் சன்யாசியாக வாழ ஒரு வாய்ப்பு உண்டு !!!


    சிவச்சந்திரன்

    ReplyDelete
  26. 1. 4 ம் அதிபதி'குரு' 4 க்கு 10 - ல் பாபகர்த்தாரியில் உள்ளார். வித்யாகாரகனும் ,லக்னாதிபதியுமான புதன் ,லக்னத்திற்கு 12 ல் உள்ளார்.உடன் 8 ம் அதிபதி செவ்வாய் சேர்க்கை ,6 ம் அதிபதி 'சனியின் பார்வை உள்ளது. 2 ல் ராகு . எனவே ஆரம்ப கல்வியோடு படிப்பை நிறுத்தியிருப்பார்.

    2. 7 ம் அதிபதி 'குரு' 7 ம் இடத்துக்கு 7 ல் ' பாபகர்த்தாரியில் உள்ளார். களத்திரகாரகன் 'சுக்கிரன்' 12 ல் மறைவு. உடன் லக்னாதிபதி 'புதனும் மறைவு. உடன் 8 ம் அதிபதி செவ்வாய் சேர்க்கை ,6 ம் அதிபதி 'சனியின் பார்வை .. லக்னாதிபதியும்,7 ம் அதிபன் குருவும் 1/12 நிலையில் உள்ளனர். 7 ம் இடத்திற்கு செவ்வாயின் பார்வை. ஆயினும் 7ம் இடத்திற்கு 'குரு'வின் பார்வை ,மற்றும் 7 மிட சந்திரன் , குரு சந்திர யோகம் ஆகியவையால் அதீத தாமதத்துடன் 40 வயதிற்கு மேல் சந்திர தசையில் திருமணம் நடந்திருக்கும். இது காதல் அல்லது கலப்பு திருமணமாய் இருந்திருக்கும்.

    sivarajan
    (pondicherry)

    ReplyDelete
  27. QUIZ NO. 67 வணக்கம்
    14/08/1957 ஆம் ஆண்டு காலை 10.00 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கன்னி ராசியில் ஜாதகர் பிறந்தார்.

    லக்கினம் (5 பரல்) கன்னி ராசி யோககாரன் சுக்கிரன்,

    லக்கினாதிபதி புதன் 12ம் வீட்டில் செவ்வாயுடன் கூட்டு. மேலும் யோககாரன் சுக்கிரனுடனும் கூட்டு.

    கல்வி:
    4ம் வீடு தனுசு ராசி, 27 ப‌ரல்கள், 4ம் வீட்டு அதிபதி குரு (7 பரல்) லக்கினத்தில், மீனத்திலிருக்கும் சந்திரனின் 7ம் பார்வை லக்கினதில் இருக்கும் குருவின் மீது பார்ப்பதால் பாபகர்த்தாரி தோஷத்தினால் பாதிப்பு எற்படாது. கஜகேசரி யோகமும் உள்ளது.

    5ம் வீடு நுண்ணறிவு, 5ம் விட்டு அதிபதி சனி 3ல் அமர்ந்து 3ம் பார்வையால் 5ம் வீட்டை பார்க்கிறார். குருவின் 5ம் பார்வையால் அந்த தோஷதையும் நிவர்த்தி செய்து விடுகிறார்.

    பிரச்சனைக்குரியவன் கல்விகார‌கன் புதன். 12ல் தீய கிரகத்துடன் செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து, சனியின் 10ம் பார்வை அவர் மேல் விழுவதாலும், 4ம் வீட்டு அதிபதி குருவும், காரகன் புதனும் 2/12 என்னும் பாதக நிலமையில் உள்ளனர்.கல்விக்கு கஷ்ட்டத்தை உண்டாக்கினார். அடுத்து வந்த புத தசையில் குரு புக்தியிலிருந்து.அதாவது 25 வயதிலிருந்து கல்விக்கு தட‌ங்கள்.

    ஜாதகர் இலக்கியத்தில் பட்ட படிப்பு வரை படித்து இருப்பார்.

    திருமணம்;
    7ம் வீட்டு அதிபதி குரு லக்கினதில் (7 பரல்)
    7ம் வீட்டில் சந்திரன் (4 ப‌ரல்) இருப்பதால் அழகான மனைவி அமைவார்.
    குருவும், சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் 7ம் பார்வையில் உள்ளனர். கஜகேசரி யோகத்தினால் பலம் பொருந்தியுள்ளது. 25 வயதில் குரு புக்தியில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.

    2ம் வீட்டு அதிபதி களத்திரகாரகன் சுக்கிரன் 12ம் வீட்டில் செவ்வாயுடன் கூட்டு.
    2ம் வீட்டில் மாந்தி இருப்ப‌தால் குடும்பம் பிரிவு எற்பட வாய்ப்புள்ளது.
    2ம் வீட்டில் 22 பரல்கள்.குடும்ப ஸ்தானம் பல‌வீனமாக‌ உள்ளது.

    குருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தானமான சுக்கிரன் வீட்டில் பார்ப்பதாலும், சில பிரச்சினைகளுக்கு பிறகு குடும்பம் அமைய வாய்ப்புள்ள‌து.

    5ம் வீட்டின் மீது சனியின் 3ம் பார்வை உள்ள‌தால் குழந்தை தாமதமாக பிறக்க வாய்ப்புள்ளது.
    மேலும், சூரியனின் 7ம் பார்வை 5ம் வீட்டின் மீது பார்ப்பதாலும், குருவின் 5ம் பார்வை 5ம் வீட்டின் மீது பார்ப்பதாலும், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

    சந்திர‌சேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com