மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

5.11.13

விலையை கேட்டாலே கண்ணீர் வருது!

 
விலையை கேட்டாலே கண்ணீர் வருது!

எதெதற்குக் கண்ணீர் வரும் என்று எழுதினால் பக்கம் பக்கமாக எழுதலாம். அப்படி எல்லாம் எழுதி உங்களை இம்சிக்க விரும்பவில்லை. ஒரே ஒரு
செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

வெங்காயத்தை நறுக்கும் போது அல்லது வெட்டித் துண்டுகளாக்கும் போதுதான் கண்ணீர் வரும் என்பதில்லை! இப்போது நாளுக்கு நாள் உயர்ந்து
கொண்டேயிருக்கும் அதன் விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது.

ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு நாள் ஒன்றிற்கு அரை கிலோ வெங்காயமாது சமையலுக்குத் தேவை. இன்று வெங்காயம் விலையால் செஞ்சுரி அடித்திருக்கிறது.. ஒரு கிலோ வெங்காயத்தின் வில்லை Rs.100:00

இன்னோவா காரில் போகிறவனுக்கு விலையைப் பற்றிக் கவலையில்லை. இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கின்றவன் என்ன செய்வான்
சொல்லுங்கள்?

பனை ஏறிவிழுந்தவனை கடா ஏறி மிதித்ததாம்’  என்ற கிராமத்துக் கதை ஒன்று உள்ளது. அதாவது பனை மரத்தின் உச்சியில் இருந்து தவறி
விழுந்தவன், ‘அம்மா...சாமி.. அய்யோ ...சாமி’ என்று எழுவதற்குள், அந்தப் பக்கம் தறிகெட்டு ஓடி வந்து கொண்டிருந்த காளை மாடு ஒன்றும் அவனை
மிதித்துவிட்டுச் சென்றதாம். ஒரே நேரத்தில் இரண்டு விபத்துக்கள்.

அதுபோல ஒரே நேரத்தில் இரண்டு அவலங்கள். மழை அதிகரித்துள்ளதால் வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து, வரத்தும் பாதியாகக் குறைந்துள்ள தாம். நியாயமில்லாத மொத்த வியாபாரிகளின் பதுக்கலும் சேர்ந்து விலை உயரக் காரணமாம்.

அரசு என்ன சொல்கிறது?

Onion price rise may be due to hoarding: Centre

பதுக்கி வைத்திருக்கிறவனின் கிடங்குகளில் ரெய்டு நடத்தி, ஆசாமிகளை உள்ளே பிடித்துப் போட வேண்டியதுதானே?

ஆளுங்கட்சிகள் மற்றும் இன்றி எதிர்கட்சிகளும் இது பற்றிக் கவலைப் படாமல் இருக்கின்றன.

அவர்களுக்கு இதையெல்லாம் விட முக்கியப் பிரச்சினைகள் பல உள்ளன!

அடுத்து வரவுள்ள பாராளுமன்றத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது? யாருடன் கூட்டு சேர்வது? அதுதான் முக்கியப் பிரச்சினை.

நீங்களும் நானும் அவதிப்பட்டால் அவர்களுக்கு என்ன கவலை? நாட்டு நலனில் என்ன அக்கறை?

முன்பு ஒருமுறை சூப்பர் ஸ்டார் சொன்னதைப்போல, கடவுள்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்


அடுத்த (அலசல்) புதிர் போட்டி நாளை வெளிவரும். பொறுத்திருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

Ramani S said...

நாமும் அவர்கள் ஓட்டுக் கேட்டு வரும்போது
அவர்களுக்குப் போடாததன் காரணத்தைச்
சொல்லிவிட வேண்டியதுதான்
அனைவரின் மன நிலையையும் அருமையாகப்
பதிவு செய்தது மனம் கவர்ந்தது

வேப்பிலை said...

வெங்காயத்தின் மீது இத்தனை கரிசனமா
அங்ஙனமாயின் எத்தனை உள்ளது

கரிசனமும்
பரிவும் காட்டுவதற்கு..?

முடியாதா வெங்காயம் இல்லாமல் சாப்பிட
மூச்சு முட்ட குடிக்கும் குடி போல

உயர்ந்தவைகள் பல வற்றை நாம்
உபயோகிக்க வில்லையா..? ஏன் இந்த

சோதனை என எப்போதாவது
வேதனை பட்டதுண்டா ?

உரித்த கோழி உருபாய் 160
உயிருடன் கோழி உருபாய் 110

ஆட்டின் விலையோ
அறு நுறுக்கு மேல்

அன்றாடம் பயன் படுத்தும்
அந்த பற்பசை விலை கிலோ ரு.800

தலைவலி பாம் விலையோ
தாங்கமுடியலை கிலோ ரு.3000

பான்பராக் குட்கா விலை சராசரியாக
பாருங்கள் கிலோ ரு.2800 வரை

இத்தனை விலை உயர்ந்த பொருளை
இப்போ உபயோகிக்கும் நமக்கு

வெங்காயம் பயமாவா இருக்கு? உரிச்சு பார்த்தால்
வெங்காயத்தில் மட்டுமல்ல

முட்டைகோஸ், வாழைதண்டு என
முழுசா சொல்லாம் ஒன்னுமில்லேன்னு

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

ஆனால் ஒன்றை மறந்து விடலாகாது 2004 பொதுத்தேர்தலில் என நினைக்கிறேன். இதே வெங்காயம்தான் தேர்தல் முடிவை முடிவு செய்தது.
மீண்டும் அதே பொன்றதொரு சூழ்நிலை.....தேர்தல்முடிவு ...?
வெங்காயம் பங்கு வகிக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.
நன்றி. ல ரகுபதி

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா, காய்கறி விலை ஏறினால் வெங்காயமும்,தக்காளியையும் இருந்தால் போதும் அதை வைத்தே ஏதாவது சமையல் செய்து விடுவோம்,வெங்காயமும், தக்காளியுமே விலை ஏறினால் என்ன செய்வது? வெங்காய விலையை கட்டுப்படுத்த முடியாத‌ அரசாங்கம்,வெங்காயம் உபயோகிக்காமல் சமையல் செய்வது எப்படி என்று சமையல்குறிப்பு சொல்பவர்களுக்கு 1000 பொற்காசுகள் கொடுப்பதாக அறிவிக்கலாம்.

இயற்கை உணவை பூமியில் உற்பத்தி செய்யமுடியாமல் தவிக்கும் நாம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியுமா என்று ஆராய்ச்சி செய்ய 480 கோடி செலவு செய்கிறோம்,அது தவறு என்று சொல்லவில்லை,இன்னும் பூமியில் எத்தனை ஆண்டுகள் மனிதனால் வாழ முடியும்,அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று யாராவது ஆராய்ச்சி செய்கிறார்களா? அந்த வேதனைதான் மிஞ்சுகிறது.

Maaya kanna said...

Yes Sir .

Subbiah Veerappan said...

/////Blogger Ramani S said...
நாமும் அவர்கள் ஓட்டுக் கேட்டு வரும்போது
அவர்களுக்குப் போடாததன் காரணத்தைச்
சொல்லிவிட வேண்டியதுதான்
அனைவரின் மன நிலையையும் அருமையாகப்
பதிவு செய்தது மனம் கவர்ந்தது/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...


Blogger வேப்பிலை said...
வெங்காயத்தின் மீது இத்தனை கரிசனமா
அங்ஙனமாயின் எத்தனை உள்ளது
கரிசனமும்
பரிவும் காட்டுவதற்கு..?
முடியாதா வெங்காயம் இல்லாமல் சாப்பிட
மூச்சு முட்ட குடிக்கும் குடி போல
உயர்ந்தவைகள் பல வற்றை நாம்
உபயோகிக்க வில்லையா..? ஏன் இந்த
சோதனை என எப்போதாவது
வேதனை பட்டதுண்டா ?
உரித்த கோழி உருபாய் 160
உயிருடன் கோழி உருபாய் 110
ஆட்டின் விலையோ
அறு நுறுக்கு மேல்
அன்றாடம் பயன் படுத்தும்
அந்த பற்பசை விலை கிலோ ரு.800
தலைவலி பாம் விலையோ
தாங்கமுடியலை கிலோ ரு.3000
பான்பராக் குட்கா விலை சராசரியாக
பாருங்கள் கிலோ ரு.2800 வரை
இத்தனை விலை உயர்ந்த பொருளை
இப்போ உபயோகிக்கும் நமக்கு
வெங்காயம் பயமாவா இருக்கு? உரிச்சு பார்த்தால்
வெங்காயத்தில் மட்டுமல்ல
முட்டைகோஸ், வாழைதண்டு என
முழுசா சொல்லாம் ஒன்னுமில்லேன்னு/////

உரிச்சுப் பார்த்தா மனித வாழ்க்கையிலேயே ஒன்னுமில்லை.

Subbiah Veerappan said...

////Blogger raghupathi lakshman said...
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
ஆனால் ஒன்றை மறந்து விடலாகாது 2004 பொதுத்தேர்தலில் என நினைக்கிறேன். இதே வெங்காயம்தான் தேர்தல் முடிவை முடிவு செய்தது.
மீண்டும் அதே பொன்றதொரு சூழ்நிலை.....தேர்தல்முடிவு ...?
வெங்காயம் பங்கு வகிக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.
நன்றி. ல ரகுபதி/////

அடுத்த தேர்தல் முடிவில் வெங்காயத்தின் பங்கு நிச்சயம் இருக்கும்!:-)))

Subbiah Veerappan said...

//////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா, காய்கறி விலை ஏறினால் வெங்காயமும்,தக்காளியையும் இருந்தால் போதும் அதை வைத்தே ஏதாவது சமையல் செய்து விடுவோம்,வெங்காயமும், தக்காளியுமே விலை ஏறினால் என்ன செய்வது? வெங்காய விலையை கட்டுப்படுத்த முடியாத‌ அரசாங்கம்,வெங்காயம் உபயோகிக்காமல் சமையல் செய்வது எப்படி என்று சமையல்குறிப்பு சொல்பவர்களுக்கு 1000 பொற்காசுகள் கொடுப்பதாக அறிவிக்கலாம்.
இயற்கை உணவை பூமியில் உற்பத்தி செய்யமுடியாமல் தவிக்கும் நாம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியுமா என்று ஆராய்ச்சி செய்ய 480 கோடி செலவு செய்கிறோம்,அது தவறு என்று சொல்லவில்லை,இன்னும் பூமியில் எத்தனை ஆண்டுகள் மனிதனால் வாழ முடியும்,அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று யாராவது ஆராய்ச்சி செய்கிறார்களா? அந்த வேதனைதான் மிஞ்சுகிறது./////

இதைச் செய்ய முடியாதவர்கள், அவ்வப்போது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அதுபோல் செய்கின்றார்கள்!