மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.11.13

Astrology: Quiz.23. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.23. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தி மூன்று.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் ஒரு அரசியல் தலைவர். அகில இந்தியாவும் அறிந்த மனிதர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

27 comments:

Srinivasa Rajulu.M said...

ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளியில் 10-12-1878 அன்று சுமார் சூர்யோதயத்தின் போது பிறந்து, நாட்டின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைத்த, 'ஆச்சாரியார்' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் அவர்களுடைய ஜாதகம் இது.

Chandrasekaran Suryanarayana said...

வாத்தியாருக்கு வணக்கம்

இந்த ஜாதகத்திற்க்கு உரியவர் திரு.சி. ராஜாஜி (ராஜகோபாலசாரி)
DOB : 10TH DECEMBER 1878
BIRTH TIME: 6.18 AM
MONDAY, TAMILNADU - KRISHNAGIRI (THORAPALLI VILLAGE)
77.78 EAST, 12.5 NORTH
star: Mirugasirusham

Chandrasekharan said...

Respected Sir,

The person name is : Mr.Chakravarti Rajagopalachari.

Born on : 10/Dec/1878.
Place: Thorapalli, British Raj (now India (Courtesy : Wikepedia).

Thank You.

Srinivasa Rajulu.M said...

அமரர் திரு ராஜாஜி பிறந்த அன்றே பிறந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, வெள்ளையனை எதிர்த்துவந்த திரு முஹம்மது அலி ஜௌஹர் துரதிருஷ்டவசமாக இந்திய சுதந்திரத்துக்கு முன்பே அமரராகிவிட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், இந்திய முஸ்லிம் லீக் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

லக்னம் மாறியிருக்கலாம். ஆனாலும், திரு.ராஜாஜியின் ஜாதகத்தில் உள்ளது போலவே, இரண்டு பரிவர்த்தனையான கிரக ஜோடிகள்; உச்சமான சந்திரன்; நவாம்சத்தில் பலமான சுக்கிரன மற்றும் ராகு, கேதுக்கள் எல்லாம் இவருக்கும் உண்டு. ஆர்வத்தினால் இந்தக் குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்.

(நன்றி : http://en.wikipedia.org/wiki/Mohammad_Ali_Jouhar )

Kirupanandan A said...

உயர்திரு ராஜகோபாலச்சாரி @ ராஜாஜி அவர்களின் ஜாதகம். DOB : 10/12/1878. POB : சேலம் TOB : 5.20 am.

நடப்பு தசா புத்தியை வைத்து கண்டு பிடிக்கலாம் என்று எழுதி விட்டு அதைக் கொடுக்கவே இல்லை. Cut and paste செய்து விட்டு அதில் என்ன எழுதியிருக்கிறது என்று கவனிக்கவில்லை போலும்.

JAWAHAR P said...

Sir

C RAJAGOPALACHARI

DOB ; 10.12.1878 06.15 AM

Place : Krishnagiri

P.JAWAHAR

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz no.23:-

Date of birth: 10.12.1878
Time of birth: 06:00 to 7:00am
Place of birth: Thorapalli, Madras

Name of the Native: Shri C. Rajagopalachari (Rajaji) (The conscience of Mahatma Gandhi)

With kind regards,
Ravichandran M.

janani murugesan said...

ஐயா,
இந்த ஜாதகம் தெய்வத்திரு.ராஜாஜி (ராஜகோபாலச்சாரி)அவர்களுடையது.
பிறந்த நாள் : 10 டிசம்பர் 1878
பிறந்த நேரம் : 6 AM (approx) .

murali krishna g said...

அய்யா, இது சக்ரவர்த்தி திரு. ராஜகோபாலசாரியர் அவர்களின் ஜாதகம்.
லக்னத்தில் சூரியன் + சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்து அவருக்கு அரசு பதவிகளை கொடுத்தது. இதில் பத்தாம் இட அதிபதி சூரியன் என்பதும் குறிப்பிடத்தக்கது !.
லக்ன சுக்ரன் அவரை charismatic person ஆக ஆக்கியது.
இரண்டில் புதன் அவருக்கு எழுத்து திறமையும் வாக்கு வன்மையும் கொடுத்தது.
குரு சனி பரிவர்த்தனை .சுக்ரன் செவ்வாய் பரிவர்த்தனை !. குரு சண்டாள யோகம் வேறு !.
ஐந்தில் சனி புத்திரர்களுடன் சில காலம் மனஸ்தாபம் கொடுத்தது !
மாரக ஸ்தான குரு புக்தியில் இறைவன் அடி சேர்ந்தார்.!
இதற்கு மேல் தங்கள் அலசலை எதிர்பார்க்கிறேன் ! நன்றி !

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் - பகுதி 23 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 10.12.1878 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.

C Jeevanantham said...

Dear Sir,

D.O.Birth is December 10th, 1878

Mr. Rajaji, India's freedom fighter and the first Governor General of independent India.

Thanking you sir.

venkat said...

ஐயா வணக்கம் புதிர் 23க்கு விடை
ஜாதகர் - சி.ராஜகோபாலச்சாரி (ராஜாஜி)
இடம் - தொரப்பள்ளி(கிருஷ்ணகிரி மா)
நாள் - 10-12-1878
நேரம் - காலை 5.20

kmr.krishnan said...

இது சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்றும், ராஜாஜி என்றும் அறியப்பட்ட‌
இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனெரல் அவர்களுடைய ஜாதகம்.பிறந்த தேதி 10 டிசம்பர் 1878. நேரம் காலை 5மணி 20 நிமிடம் பிறந்த ஊர்: தொரப்பள்ளி (ஒசூர்)

சேலம் நகரசபைத் தலைவர், ஒருங்கிணைந்த தெற்கு மாநிலங்கள் நான்கிற்கும்
பிரதமர், மத்திய அரசில் உள்துறை அமைச்சர்,மேற்கு வங்காள கவர்னர்,
முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல், மீண்டும் தமிழக முதல்வர்
ஆகிய பதவிகளை வகித்தவர்.

நேருவுக்கு நல்ல நண்பர்/ஆலோசகர்/. ஆனால் சுதந்திர இந்தியாவில் நேரு அரசியலுக்கு/பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிரி.இன்று பேசப்படும் சந்தைப் பொருளாதார‌ம், சுதந்திர வணிகம்,தொழில்துறையில் அர‌சின் குறிக்கீடு குறைத்தல்,சேவைத் தொழில் வளர்ச்சியை விட உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல்,உலக வர்த்தகம் போன்ற‌ பொருளாதாரக் கருத்துக்களை முன் வைத்து அரசியலை முன்னேற்றியவர். மொழி, பிராந்தியம், மதம், ஆகிய உணர்ச்சி அரசியலில் இருந்து, பொருளாதார அடிப்படையில் அரசியலை முன் நகர்த்தியவர்.

தந்தை பெரியாரின் உற்ற தோழர். ஆனால் பெரியாரை 'என் அன்பான எதிரியே'என்று அழைப்பவர்.

மகாத்மா காந்திஜியின் 'மனசாட்சியின் காவலர்'

அவருடைய முக்கியமான சமூகப் பங்களிப்பு மது அரக்கனை ஒழித்தது.
சுமார் 35 ஆண்டுகாலம், (அறிஞர் அண்ணா காலம் வரை) மதுவை தமிழ்
மக்கள் மறந்து இருந்தனர்.

மதுவால் இழந்த அரசு வருமானத்தை ஈடுகட்ட விற்பனை வரியை கொண்டு வந்தார் ராஜாஜி. இன்று அதுதான் முக்கியமான வருமானமாகிவிட்டது. மீண்டும் மதுவாலும் வருமானம் அரசுக்கு. 'அப்பனுக்குச் சாராயம்;
பிள்ளைக்குச் சத்துணவு' என்பது இன்றைய கொள்கை.

மீண்டும் மதுவிலக்கு வேண்டும் என்று பாமக ராமதாஸ் ஐயா, மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் பிரசாரம் செய்து வருவது ராஜாஜியின் ஆத்மாவுக்கு நிச்சயம் சாந்தி அளிக்கும்.

அரிசி ரேஷன் என்ற முறையை அகற்றினார்.அதனால் பதுக்கல்காரர்களுக்குப் பட்டை நாமம் போட்டார்.

இந்துக் கோவில்களில் அனைவரும் வழிபடலாம்;தீண்டத்தகாதோர் ஆலயப்பிரவேசம் செய்யலாம் என்று சட்டம் இயற்றினார்.

நிலத்தை குத்தகை எடுத்தவருக்கு 60 சதமும், நில உரிமையாளருக்கு 40 சதமும் என்று சட்டம் இயற்றினார்.

இந்தி படிக்கச் சொன்னார் சுதந்திரத்திற்கு முன்னர். ஆனால் 1967ல் இந்தித் திணிப்பை எதிர்த்தார்.

1967ல் திராவிட இயக்கங்களுடன் கூட்டணி வைத்து அண்ணா ஆட்சியை ஏற்படுத்தினார். காமராஜரே அத் தேர்தலில் தோற்றார்.

எவ்வள‌வோ பதவிகளை வகித்து இருந்தும் வால்மீகி ராமாயணத்தை சக்கரவர்த்தித் திருமகன் என்றும், மகாபாரதத்தினை வியாசர் விருந்து என்றும் சுருக்கிய வடிவத்தினை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியதையே மனதைக் கவர்ந்த பணி என்று கூறியவர்.

எம் எஸ் பாடிய பிரபல பாடல் 'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா'ராஜாஜி எழுதியதுதான்.

அவர் கொண்டுவந்த தொழிற் கல்வித் திட்டத்திற்கு அரசியல் எதிரிகள் 'குலக் கல்வித் திட்டம்' என்று பெயரிட்டு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தனர். தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து பதவியைத் துறந்தார்.

காந்திஜியிடமே சிலமுறை கருத்து வேறுபாடு கொண்டு காங்கிரசில் இருந்து விலகி இருந்திருக்கிறார்.

காந்திஜியின் நான்காவது மகன் தேவதாஸ்காந்திக்கு ராஜாஜியின் இளைய புதல்வி லக்ஷ்மியை மண்ம் புரிந்துள்ளது. அவர்களுக்குப் பிறந்தவர்கள்தான்
பேராசிரியர் ராமசந்திரகாந்தி, பத்திரிகையாளர் ராஜ்மோகன்காந்தி, முன்னாள் மேற்கு வங்க கவ‌ர்னர் கோபால்தாஸ் காந்தி.

ராஜாஜி துவங்கிய திருச்செங்கோடு காந்தி ஆசிரம ஊழியர் என் த‌கப்பனார்.
அவருடைய முற்றுப் பெறாத டயரிக் குறிப்பு இங்கே காணலாம்.
http://gandhiashramkrishnan.blogspot.in/
ராஜாஜியுடன் போராட்டத்தில் பங்கேற்று என் தகப்பனார் கைது ஆகி சிறை சென்ற அனுபவத்தினை அதில் படிக்கலாம்.

ராஜாஜி பற்றிய என் அனுபவத்தினை வகுப்ப‌றையில் 25 டிசம்பர் 2011 ல்
'ராஜாஜி என்ற மாமனிதர்'என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.அனைவரும் வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
பொறுமையுடன் வாசிச்த்தவர்களுக்கு சகல் செள‌பாக்கியங்களும் கிடைக்க ஆண்டவன் அருள்வான்.நன்றி.

dhana lakshmi said...


Quiz 23

Ans. INDIRAGANDHI

REGARDS
J.DHANALAKSHMI

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

quiz 23 க்குரிய பதில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள்.
10 டிசம்பர் 1878 அன்று பிறந்தவர்.பதிலை சரியா என தெரிந்துகொள்ள
ஆர்வமாய் உள்ளேன் ஐயா.
நன்றி. ல ரகுபதி

Bagavathi S said...

Hi Sir,

Its C. Rajagopalachari. DOB : Dec 10,1878

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,

நீங்கள் கொடுத்துள்ள ஜாதகம் ராஜாஜி அவர்களின் ஜாதகம்.

rm srithar said...

10th December 1878
Rajaji

Susheela kandhaswamy said...

ஐயா,
இந்த ஜாதகம் திரு.ராஜாஜி அவர்களின் ஜாதகம்.
பிறப்பு குறிப்பு 10/12/1878 6 :30 AM

thozhar pandian said...

திரு.இராஜாஜி அவர்கள். திரு. மௌலானா முகமது அலி ஜோஹர் பிறந்ததும் இதே தேதியில்தான். ஆனால் பிறந்த நேரம் தெரியவில்லை.


பௌர்ணமி திதி போல் தெரிகிறது. சந்திரன் உச்சம். இலக்கினத்தில் சூரியன் தலைமை ஏற்கும் தகுதியை தந்தது. இலக்கினாதிபதி செவ்வாய் இலக்கினத்தில் உள்ள சுக்கிரானுடன் பரிவர்த்தனை. குரு சனி பரிவர்த்தனை. ஒரே குறை இலக்கினாதிபதி செவ்வாய் பன்னிரெண்டாம் இடத்தில் மறைந்ததுதான். ஆனால் இவருக்கு அது ஒரு பெரிய குறையாக இல்லை போல் தெரிகிறது.

Dallas Kannan said...

Respected Sir
It is Rajaji.

Subbiah Veerappan said...

////Blogger Kirupanandan A said...
உயர்திரு ராஜகோபாலச்சாரி @ ராஜாஜி அவர்களின் ஜாதகம். DOB : 10/12/1878. POB : சேலம் TOB : 5.20 am.
நடப்பு தசா புத்தியை வைத்து கண்டு பிடிக்கலாம் என்று எழுதி விட்டு அதைக் கொடுக்கவே இல்லை. Cut and paste செய்து விட்டு அதில் என்ன எழுதியிருக்கிறது என்று கவனிக்கவில்லை போலும்./////

அய்யா கிருபானந்தவாரியாரே, கட் அண்ட் பேஸ்ட் எல்லாம் செய்யவில்லை. எக்செல் ஃபார்மாட்டில் நானே தயார் செய்து பதிவிட்டதாகும்.

Subbiah Veerappan said...

நேற்றுப் பதிவில் கொடுத்திருந்தது திருவாளர் ராஜாஜி அவர்களின் ஜாதகம்.

10.12.1878ஆம் ஆண்டு காலை 5:20 மணிக்கு, தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் (அக்கிராமம் முதலில் சேலம் மாவட்டத்தில் இருந்தது. மாவட்டங்களைப் பிரித்ததில், அது இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது.)

பிறப்பின்போது கர்ப்பச்செல் இருப்பு: செவ்வாய் திசையில் 4 வருடம் 8 மாதங்கள் 28 நாட்கள்.

சுமார் 25 பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் வந்த விடைகளையும் சேர்த்துதான் அந்த எண்ணிக்கை. எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம். 1900ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களின் ஜாதகத்தை அடித்துப் பார்ப்பதற்கு சில கணினி மென்பொருட்களில் வசதி இல்லை. ஆகவே பல பேர் முயற்சியைக் கைவிட்டிருப்பார்கள். ஜகந்நாத ஹோரா கை கொடுக்கும், அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சரியான விடையை எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்

C.Senthil said...

Ayya
enathu peyar idampera villai..
My name does not appear.

srikanth said...

I want to get verification code for registration. Please give permission.
my email id srikanthgirija67@gmail.com

Subbiah Veerappan said...

/////Blogger C.Senthil said...
Ayya
enathu peyar idampera villai..
My name does not appear.////

அதற்கு ஏன் வருத்தம்? இதென்ன விருது பெற்றோர் பட்டியலா? டேக் இட் ஈஸி! ப்ளாக்கரின் சொத்தப்பல் காரணமாக இருக்கலாம். நான் வந்திருந்த பின்னூட்டங்களை Dash Boardல் இருந்து பதிவிற்கு அனுப்பி வைத்தேன். அது ஏன் காணாமற் போய்விட்டது என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை!

Subbiah Veerappan said...

/////Blogger srikanth said...
I want to get verification code for registration. Please give permission.
my email id srikanthgirija67@gmail.com////

மின்னஞ்சல் மூலம் எழுதுங்கள். classroom2007@gmail.com என்பது அதற்கான மின்னஞ்சல் முகவரி