இதுவும் புதிர்தான். பதிலைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!
வழக்கமான ஜோதிடப் புதிர் அல்ல! இது உங்கள் புத்திசாலித்தனத்தைத் தட்டிப் பார்க்கும் புதிர். நன்றாக யோசித்து உங்கள் பதிலை, பின்னூட்டத்தில் (that is through comments box) சொல்லுங்கள். சரியான பதில், உங்கள் பின்னூட்டங்களையும் சேர்த்து நாளை காலை வெளியாகும்.
------------------------------------------------------------------------------
ஜப்பானியக் கப்பல் ஒன்று நடுக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. சரக்குகளை ஏற்றிச் செல்லும் கார்கோ கப்பல் அது.
கப்பலின் கேப்டன் குளிப்பதற்காக் கப்பலில் இருந்த குளியலறைக்குச் சென்றிருந்தார். போனவர் சும்மா போகாமல் தன்னுடைய வைர மோதிரத்தையும், விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் கழற்றி, தன்னுடைய மேஜை மேல் வைத்துவிட்டுச் சென்றிருந்தார்.
குளியல் முடிந்து திரும்பி வந்தவருக்கு அதிர்ச்சி! 15 நிமிடங்களுக்கு முன்பு, தன் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றிருந்த, விலை உயர்ந்த அந்த இரண்டு சாமான்களையும் (பொருட்களையும்) காணவில்லை. அதாவது வைர மோதிரமும், ரோலக்ஸ் கைக்கெடிகாரமும் வைத்த இடத்தில் இல்லை. காணாமல் போயிருந்தது.
கேப்டன் பதற்றம் அடையாமல், கப்பலில் தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களும், தன் அறைக்கு வந்து போகக்கூடியவர்களுமான தன் உதவியாளர்கள் ஐந்து பேர்களை மட்டும் அழைத்துப் பேசலானார்.
அவருக்கு அவர்கள் மீதுதான் சந்தேகம். அவர்களில் ஒருவர்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்றும் நம்பினார். அதை வெளிப்படுத்தாமல் சாந்தமாகப் பேசினார்.
“சென்ற 15 நிமிடங்களில் யார் யார் என்னென்ன வேலை செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார்.
1. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமையற்காரர், “நான் கீழ்த் தளத்தில் உள்ள ஃபிரிட்ஜ்கள் இருக்கும் அறையில் பணி செய்து கொண்டிருந்தேன். சமையலுக்குத் தேவையான ஆட்டுக்கறியை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தேன்.” என்று சொன்னார். அவர் கனமான ஓவர்கோட்டை அணிந்திருந்தார்.
2. அடுத்து வாயைத் திறந்த கப்பலின் பராமரிப்புப் பொறியாளரான இந்தியர் இப்படிச் சொன்னார்: “ஜெனரேட்டர் அறையில் வேலை செய்து கொண்டிருந்தேன்” அவர் கையில் ஒரு டார்ச் லைட் இருந்தது.
3. இலங்கையைச் சேர்ந்த மாலுமி சொன்னார்: “கப்பலின் மேல் தளத்தில், கம்பத்தின் மேல் தலை கீழாகப் பறந்து கொண்டிருந்த கொடியை சரி செய்து, கம்பத்தில் நேராகப் பறக்க விட்டேன். இன்று காலையில் நடந்த தவறைச் சரி செய்தேன்.”
4. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரும், கப்பலின் தகவல் தொடர்பு அதிகாரியுமான மனிதர் (Radio Officer) இவ்வாறு சொன்னார்: “ இன்னும் 72 மணி நேரத்தில் அடுத்த துறைமுகத்தைச் சென்றடைந்துவிடுவோம் என்னும் தகவலை நமது கம்பெனியின் தலைமை அலுவலத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன்.”
5. ஜெர்மனியைச் சேர்ந்த மாலுமி சொன்னார்: “நேற்று இரவு முழுவதும் நான் டூட்டியில் இருந்ததால், எனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன்.”
அந்த ஐவரின் பேச்சையும் கேட்ட கேப்டன், அந்த ஐவரில் யார் பொய் சொல்கிறார் என்பதை உடனே கண்டு பிடித்து விட்டார். அத்துடன் நில்லாமல் பொய் சொன்னவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையையும் விட்டார். அதை எதிர்பார்க்காத அவன் உண்மையை ஒப்புக்கொண்டு, அவர் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் அந்த இரண்டு பொருட்களும் திரும்பி வந்தன!
இப்போது சொல்லுங்கள், அந்த ஐவரில் யார் திருடன்?
கேப்டன் எப்படி அதைக் கண்டு பிடித்தார்?
==================================================================
குறுஞ்செய்தி (SMS) மூலம் எனக்கு வந்த புதிர் இது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================================

தலைகீழாகப் பார்த்தாலும் சூரியன் (உள்ள கொடி) அப்படியேதான் காட்சியளிப்பார்.
ReplyDeleteஇலங்கை மாலுமி தான். ஜப்பானிய கொடி தலைகீழாக பார்த்தாலும் அதே போல் தான் இருக்கும். அதனால் அதை சரி செய்தேன் என்று இலங்கை மாலுமி கூறியது பொய்.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteThe Thief is Srilankan. Japan's flag will look like same even in 180 degrees.
Thank You.
மூன்றாமவரான இலங்கை மாலுமிதான் குற்றவாளி. அவர்கள் இருந்தது ஜப்பானிய கப்பலில். அதில் ஜப்பானிய கொடிதான் பறந்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஜப்பானிய கொடி நேராக இருந்தாலும் தலைக்கீழாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆக அதை சரி செய்துக் கொண்டிருந்ததாக சொன்னது பொய்.
ReplyDeleteஎப்படியெல்லாம் யோசித்து டிசைன் டிசைனாக புதிர்க் கேள்வியை உருவாக்குகிறார்கள் பாருங்கள்.
ReplyDeleteவனக்கம் Sir
ReplyDeleteசந்தேகமே இல்லை
இலங்கையைச் சேர்ந்த மாலுமி
தவறுகு மேல் தவறு செய்து விட்டார்
1. கொடியை கம்பத்தின் மேல் தலை கீழாகப் பறக்க விட்டது
2. திருடியது
நன்றி
Jawahar .P
அய்யா, அது இலங்கை மாலுமியாக தான் இருக்கும் என்பது எனது கணிப்பு !. காப்டென் அறையில் இருந்து தான் கப்பல் மேல் தளம் தெரியும். காலையில் நடந்த தவறை சரி செய்தேன் என்று கூறி இருக்கிறார் !. அதனால் ஏற்கனவே ஒரு தடவை காப்டென் அறைக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது ! சரியா ?
ReplyDeletemy guess the srilangan sailor since, The Rising Sun Flag as used by theJMSDF for naval ensign; White with a red disc slightly to the hoist with 16 rays extending from the disc to the edges of the flag. so, it will be same for both positions.
ReplyDeleteAyya,
ReplyDelete5th person(German guy) is the culprit. Because he was acting as if he was sleeping.
Your Student,
Trichy Ravi
ஜெர்மனியைச் சேர்ந்த மாலுமி
ReplyDeleteஇலங்கையைச் சேர்ந்த மாலுமி - ஜப்பானிய கொடி தலைகீழாகப் பறப்பதற்கு வாய்ப்பில்லை. அது எப்படிப் பார்த்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ReplyDeleteayya,
ReplyDeleteThe criminal is 3rd person.because flag is not in the terrace.
4th Person from England who was communicating to Hq's about the Ships movement. Definitely before addressing to HQ he should have come to the cabin of Captain to discuss about the Ship's Position.
ReplyDeleteKumar
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமையற்காரர் தான் திருடன். அவன் கனமான ஓவர்கோட்டை அணிந்து கொண்டு ஃபிரிட்ஜ்கள் இருக்கும் அறையில் சமையலுக்குத் தேவையான ஆட்டுக்கறியை வெட்டி எடுக்கத் தேவையில்லை. எனவே அவன் தான் திருடன் என்று கேப்டன் கண்டு பிடித்தார்
ReplyDeleteIt is Japanese Cargo Ship that means Japanese Flag is what would have used, whatever you tie the Japanese Flag it look the same so SL is the culprit.
ReplyDeleteஐயா அவர்களுக்கு
ReplyDeleteஇலங்கையை சேர்ந்த மாலுமி தான் திருடர். ஏனேனில் ஜப்பானின் கொடி தலைக்கீழாக பறந்தாலும் தோற்றம் ஓரே மாதிரிதான் இருக்கும். வெள்ளை பின்னனியில் சிகப்பு வட்டம். எனவே இலங்கையை சேர்ந்தவர்தான் இந்த திருட்டை செய்திருப்பவர்.
தனலக்ஷ்மி.
அது.........வந்து...........சொல்லவே நா கூசுகிறது!இருந்தாலும்............இலங்கையர் தான் திருடினார்.
ReplyDeleteஜப்பானியக் கொடி எப்படிப் பறந்தால்,என்ன?
ReplyDeleteஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரும், கப்பலின் தகவல் தொடர்பு அதிகாரியுமான மனிதர் (Radio Officer) இவ்வாறு சொன்னார்:
ReplyDeleteSir,
In Mid of sea, there wont be frequency. So he is the culprit sir.
Dear sir
ReplyDeleteIt is Srilankan
Guru Vankkam,
ReplyDeleteEnglish Man stole that . When there is no power, how can he send the message thru radio?
RAMADU
ஐயா வணக்கம் , புதிர் விடை
ReplyDeleteஇலங்கை சேர்ந்த மாலுமிதான் திருடன்.
காரணம் கேப்டன் கண்டுபிடித்த முறை, ஜப்பானிய தேசிய கொடி மேல் பக்கமும் கீழ்பக்கமும் ஓரே மாதிரிதான் இருக்கும்.
Srilankan. In either way the Japanese Flag will look same - Up or Down!
ReplyDeleteRegards,
KumaraGuru
Dear Sir
ReplyDeleteThe Srilankan sailor is the culprit as the position of Japanese flag does not make any difference even if it is upside down.so he was not doing the job what he described.
Dr.Mohan
இலங்கையைச் சேர்ந்த மாலுமி சொன்னார்: “கப்பலின் மேல் தளத்தில், கம்பத்தின் மேல் தலை கீழாகப் பறந்து கொண்டிருந்த கொடியை சரி செய்து, கம்பத்தில் நேராகப் பறக்க விட்டேன். இன்று காலையில் நடந்த தவறைச் சரி செய்தேன்.”
ReplyDeletesrilanka malumi is the convict.. correction of flag is not his work.
முன்றாவது நபர் இலங்கை மாலுமி.
ReplyDeleteஏன் என்றால் இது ஜப்பானிய கப்பல் அவர்களின் கொடி வட்டம் . அதை எப்படி தவறாக கட்டி இருக்க முடியும். சரி தனே அய்யா
srilankan
ReplyDeleteஇலங்கையைச் சேர்ந்த மாலுமி:
ReplyDeleteஜப்பான் கொடியை தலை கீழ் பறக்க விட முடியாது
இலங்கை மாலுமி என்று நினைக்கிறேன்
ReplyDeleteகாலை வேலையை ஆரம்பித்த இலங்கை மாலுமி, காலையில் நடந்த வேலையை சொன்னானே அன்றி கடைந்த 15 நிமிடத்துக்கு முன் நடந்த வேலையை சொல்லாததால்,
வாட்ச் மற்றும் மோதிரத்தை எடுத்தவன் இலங்கையை மாலுமி என்று முடிவு எடுத்தார் என்று நினைக்கிறேன்.
தவறு எனில் தயவு செய்து மன்னிக்கவும்
இலங்கையைச் சேர்ந்த மாலுமி :) ஜப்பானிய கொடி எப்படி தலைகிழாக பறக்கும் ? , சரியா வாத்தியார் ஐயா ?
ReplyDeleteவருகை பதிவு.
ReplyDeleteit is srilankan...because tbe japan national flag do not have a upside down problem.
ReplyDeleteபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமையற்காரர் கனமான ஓவர்கோட்டை அணிந்திருந்தார்.
ReplyDeleteWhile cutting meat in to pieces, his body has to be free from thick clothes. So he is the Liar.
இலங்கை மாலுமி திருடன். ஜப்பான் நாட்டு கொடி எப்படி பார்த்தாலும் ஒரெ மாதிரியாகதன் இருக்கும்.
ReplyDeleteஇவண்,
தே.மகேந்திரன்,
உலிபுரம்,
சேலம் மாவட்டம்.
Respected Sir,
ReplyDeleteMy answer for our today's quiz:-
Sri lankan seaman is the thief and told lie. Even if we rotate or change the position top to bottom or vice versa, It will be the same.
See the Japanese flag. It is rising sun along with sixteen rays.
http://en.wikipedia.org/wiki/Flag_of_Japan
With kind regards,
Ravichandran M.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமையற்காரர் எப்ரோன் அணியாமல் கனமான ஓவர்கோட்டை அணிந்திருந்தார்.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஇலங்கை மாலுமி தான் குற்றவாளி, அவர் கூறிய காரணம் தவறு ஏனெனில் ஜப்பான் கொடி எப்படி பறந்தாலும் ஒரே மாதிரி தன இருக்கும்.
இப்படிக்கு
கபிலன் கரிகால்வளவன்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கப்பலின் தகவல் தொடர்பு அதிகாரி...காரணம் ஜெனரேட்டர் வேலை செய்ய வில்லை.
ReplyDeleteThe cook is the thief.As The Indian engineer was working in the generator room with a torch he is not the thief.Without power supply the cook could not work in the basement.So he is the lier and thief.
ReplyDeleteசரியான விடை:
ReplyDeleteஇலங்கை மாலுமி தான் குற்றவாளி. ஜப்பானிய கொடி தலைகீழாக பார்த்தாலும் அதே போல் தான் இருக்கும். அதனால் அதை சரி செய்தேன் என்று இலங்கை மாலுமி கூறியது பொய். அதை வைத்துத்தான் கப்பலின் கேப்டன் உண்மைக் குற்றவாளியை ஒரு நொடியில் கண்டு பிடித்தார்.
சரியான விடையை எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
ஆர்வமுடன் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்!
அன்புடன்
வாத்தியார்
ஒரு விதத்தில் இது ஜோதிடம் சம்பத்தப் பட்டதுதான்.
ReplyDeleteஎண்பதுகளில், உறவினர்கள் அனுப்பும் ஜாதகங்களை எடுத்துச் சென்று திருமணப் பொருத்தம் பார்த்துவர அனுபவஸ்தரான ஜோதிடரிடம் கொடுத்து, அவர் தரும் குறிப்புகளுடன் திரும்ப எடுத்து வரும் வழக்கம் வைத்திருந்தேன்(அன்றே அந்த உறவினர்களுக்குத் தபால் மூலமாகவும் அனுப்ப வேண்டும்).
முதிய ஜோதிடர் அதிகாலையில் எழுந்து குளித்த பின்னர் வாசல் பக்கம் வந்து சூரியனைத் தரிசித்த பின்னர்தான் ஜாதகக் கோப்புகளைத் தொடுவார்.
சூரியன்தான் பிரதான கிரகம். அவரைச் சுற்றிதான் மற்ற கிரகங்கள்.
கிரிபாதி மற்றும் ஜப்பானிய மக்கள்தான் சூரியனை அன்றாடம் முதலில் தரிசித்துவிட்டு, அன்புடன் நமக்கெல்லாம் வழியனுப்பி வைப்பார்கள்.
சூரியனை (தோத்திரஞ்செய்து) வணங்கி நமக்கு ஜோதிடம் சொல்லிக் கொடுத்த/கொடுக்கும் அனைத்து ஆசான்களையும் மனதில் நினைத்து ஜோதிடங்கற்றால் விளங்காதது ஒன்றும் இருக்காது. அஞ்ஜானம் அகற்றும் 'ஒளி' என்பதாகவும் ஜோதிடத்திற்குப் பொருளுண்டு. இருளகற்றும் சூரியன் போற்றுதும்!!
/////Blogger Srinivasa Rajulu.M said...
ReplyDeleteஒரு விதத்தில் இது ஜோதிடம் சம்பத்தப் பட்டதுதான்.
எண்பதுகளில், உறவினர்கள் அனுப்பும் ஜாதகங்களை எடுத்துச் சென்று திருமணப் பொருத்தம் பார்த்துவர அனுபவஸ்தரான ஜோதிடரிடம் கொடுத்து, அவர் தரும் குறிப்புகளுடன் திரும்ப எடுத்து வரும் வழக்கம் வைத்திருந்தேன்(அன்றே அந்த உறவினர்களுக்குத் தபால் மூலமாகவும் அனுப்ப வேண்டும்).
முதிய ஜோதிடர் அதிகாலையில் எழுந்து குளித்த பின்னர் வாசல் பக்கம் வந்து சூரியனைத் தரிசித்த பின்னர்தான் ஜாதகக் கோப்புகளைத் தொடுவார்.
சூரியன்தான் பிரதான கிரகம். அவரைச் சுற்றிதான் மற்ற கிரகங்கள்.
கிரிபாதி மற்றும் ஜப்பானிய மக்கள்தான் சூரியனை அன்றாடம் முதலில் தரிசித்துவிட்டு, அன்புடன் நமக்கெல்லாம் வழியனுப்பி வைப்பார்கள்.
சூரியனை (தோத்திரஞ்செய்து) வணங்கி நமக்கு ஜோதிடம் சொல்லிக் கொடுத்த/கொடுக்கும் அனைத்து ஆசான்களையும் மனதில் நினைத்து ஜோதிடங்கற்றால் விளங்காதது ஒன்றும் இருக்காது. அஞ்ஜானம் அகற்றும் 'ஒளி' என்பதாகவும் ஜோதிடத்திற்குப் பொருளுண்டு. இருளகற்றும் சூரியன் போற்றுதும்!!//////
சூரியன்தான் பிரதான கிரகம். சூரியனைத் தினமும், அதிகாலையில், சூரியன் உதிக்கின்ற வேளையில் வணங்கினால், எல்லா நன்மைகளும் உண்டாகும். உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!