மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.11.13

யாரென்று தெரிகிறதா?

1
யாரென்று தெரிகிறதா?

கீழே ஒரு புகைப்படத்தைக் கொடுத்துள்ளேன். அதைப் பார்த்து, அதில் உள்ள
பிரபலம் யாரென்று கண்டு பிடிக்க முடிகிறதா - பாருங்கள்.

கண்டுபிடிக்க முடிந்தால் யாரென்பதைச் சொல்லுங்கள்.

சரியான விடை நாளை - புதன் கிழமை அதிகாலையில் வெளியாகும்.

அன்புடன்,
வாத்தியார்
==================================================================
====================================================================
2நேற்றுப் பதிவில் கொடுத்திருந்தது திருவாளர் ராஜாஜி அவர்களின் ஜாதகம்.

10.12.1878ஆம் ஆண்டு காலை 5:20 மணிக்கு, தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் (அக்கிராமம் முதலில் சேலம் மாவட்டத்தில் இருந்தது. மாவட்டங்களைப் பிரித்ததில், அது இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது.)

பிறப்பின்போது கர்ப்பச்செல் இருப்பு: செவ்வாய் திசையில் 4 வருடம் 8 மாதங்கள் 28 நாட்கள்.

சுமார் 25 பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் வந்த விடைகளையும் சேர்த்துதான் அந்த எண்ணிக்கை. எண்ணிக்கை குறைந் ததற்குக் காரணம். 1900ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களின் ஜாதகத்தை அடித்துப் பார்ப்பதற்கு சில கணினி மென்பொருட்களில் வசதி இல்லை. ஆகவே பல பேர் முயற்சியைக் கைவிட்டிருப்பார்கள். ஜகந்நாத ஹோரா 

கை கொடுக்கும், அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சரியான விடையை எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்
=====================================================================================================
அலசல் பாடம்.
--------------------------
இந்திய அரசியலில் ஜொலித்த நட்சத்திரங்களில் ராஜாஜி என்று அழைக்கப்பெற்ற திரு.C.ராஜகோபாலாச்சாரியும் ஒருவர். மிகவும் நேர்மையானவர். கண்டிப்பு மிக்கவர்.ஊழல் இல்லாதவர்.

அடியவன் முன்பு பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த காலத்தில், ராஜாஜி அவர்களின் மூத்தமகன் வழிப்பேரன் (திரு.என்.சுதர்சன்) என்னுடன் பணி புரிந்தார். அப்போது அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். தன் தாத்தா ராஜாஜியைப் பற்றி நிறைய கதைகள் மற்றும் செய்திகளைச் சொல்வார். நானும் ஆர்வமுடன் அவற்றைக் கேட்பேன்.

அந்த அன்பர் படித்து முடித்து வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்த போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரியவரை (ராஜாஜியை) நச்சரித்திருக் கிறார்கள்.    “எங்காவது இவனுக்கு வேலை வாங்கிக் கொடுங்களேன்” என்றிருக்கிறார்கள். பெரியவர் மறுத்துவிட்டார்.

“சிபாரிசுக்கெல்லாம் நான் போகமாட்டேன். அவனையே முயற்சி செய்யச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.

முதலில் மறுத்துக் கூறியவர், பிறகு வீட்டிலுள்ள ஒட்டு மொத்த நபர்களின் வேண்டுகோளைத் தவிர்க்க முடியாமல், பேரனுக்கு ஒரு அறிமுகக்
கடிதத்தைக் கொடுத்து அனுப்பினார். எங்கள் நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குனர், அந்தக் கடித்ததைப் பார்த்துவிட்டு, ராஜாஜியின்
பேரன் என்ற காரணத்திற்காக உடனடியாக வேலையில் அமர்த்திக் கொண்டார்.

ராஜாஜி அவர்கள் ஆங்கில மொழியில் அதீதமாகத் தேர்ச்சி பெற்றவர். அவருடைய மகாபாரதம் நூலைப் படித்தவர்களுக்கு அது நன்கு தெரியும். தன்
பேரனுடைய ஆங்கில அறிவைப் பார்த்துவிட்டு, நிறுவனத்திற்குக் கொடுத்த  தன்னுடைய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு அவர் எழுதியிருந்தார்:

He says that he is graduate. If he is suitable, give him an opportunity to work in your company

எப்படி இருக்கிறது பாருங்கள்? அதுதான் ராஜாஜி!!!
======================================================
சரி கதை போதும். பாடத்தைக் கவனிப்போம் வாருங்கள்

Over to Galaxy2007 Classroom
======================================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================

30 comments:

kmr.krishnan said...

Atal Bihari Vajpayee

சரண் said...

புகைப்படத்தில் இருப்பவர் முன்னாள் பாரதப்பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள்.

பார்வதி இராமச்சந்திரன். said...

வணக்கம் ஐயா!!!. படத்தில் இருப்பவர், முன்னாள் பாரதப் பிரதமர், திரு.அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள்!!!

Srinivasa Rajulu.M said...

இவர் ஒரு பெரிய கவிஞர் என்பது இவருடைய இன்னொரு முகம். கவித்துவம் மிளிர பேசக் கூடியவர். தான் பிரதமராக இருந்தபோது போக்ரானில் அணுகுண்டு சோதனை செய்ய வைத்து, இந்தியாவை ஒரு வல்லரசாகக் காட்டியவர். 1924ஆம் வருடம் கிருஸ்துமஸ் அன்று காலை 5:45 மணி சுமாருக்கு, மத்தியப் பிரதேச மானிலம் குவாலியரில் பிறந்த திரு. அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் ஒரு பிரம்மச்சாரி ஆவார்.

Chandrasekaran Suryanarayana said...

Atal Bihari Vajpayee
Very Rare picture.
Born. 25th December 1925

Kirupanandan A said...

இள வயது அடல் பிஹாரி வாஜ்பாய். மூளையை கசக்கி பார்த்தும் ஒன்றும் தோன்றாததால் கூகுளின் உதவியை நாட வேண்டியதாகி விட்டது. இது அழுகினி ஆட்டம் என்று யாராவது திட்டக் கூடும்.

Kaven said...

முன்னாள் பிரதமர் வாஜ்பாயீ

Megalabala said...

ஐயா, நீங்கள் கொடுத்துள்ள புகைப்படத்திற்குச் சொந்தக்காரர் , படித்தவர், பண்பாளர், பத்திரிக்கையாளர், 10வது பாரதப் பிரதமர் திருவாளர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் ஆவார்.
பிறப்பு விபரம் : 1924 December 25 அன்று குவாலியரில் காலை 5.45க்கு

Kodai said...

Vajpayee avargal

Lakhsmi Nagaraj said...

ஐயா,
காலை வணக்கம்.
புகைப்படத்தில் இருப்பவர்
திரு.அடல் பிகாரி வாஜ்பாய்

Akila Pavanasam said...

Atal Bihari Vajpayee

venkat said...

ஐயா வணக்கம். விடை- முன்னாள் இந்தியா பிரதமர் திரு.A.B.வாஜ்பாய் அவர்களுடைய இளவயது புகைபடம்.

Kalai Rajan said...

அய்யா
திரு, வாஜ்பாய் அவர்கள்

murali krishna g said...

i think it is atal behari vajpayee in his younger days !. looks very smart !.also deserves bharat ratna for the sacfirices made during freedom struggle and his contribution to the nation building during ndA rule!

Kodeeswaran Duraisamy said...

வாஜ்பாய்

Kvp said...

Atal Bihari Vajpayee

C.Senthil said...

அய்யா,
எனது பெயர் நேற்றைய பதிவில் இடம்பெறவில்லை .

My name is not included in yesterday's post.

Chandrasekharan said...

Respected Sir,

The person in the picture is : Mr.ATAL BIHARI VAJPAYEE - In young age.

Thank You.

vanikumaran said...

Sir, I think this is
“Attal Bihari Vajpayee”

ALAGAPPAN R M said...

is it vajpayee

janani murugesan said...

Sir,
The person in the given picture is Mr.Atal Bihari Vajpayee.

RAJKUMAR SAMINATHAN said...

The Person in the First Photo is Mr.Atal Bihari Vajpayee. He is the former Prime Minister fo India. The Only Person who completed as a PM from non-congress Alliance.

வேப்பிலை said...

பள்ளி தலைமை ஆசிரியரின் மகன்
பிராமண குடும்பத்தில் பிறந்தவர்

அப்பாவை போலவே
அருமையாக கவிதை எழுதுபவர்

இவருடைய பேச்சும் எழுத்தும்
இளைஞர்களை கவரும் ..

அடுத்தமாதம் வரும் பிறந்த நாளுக்கு
அவருக்கு இப்போதே வாழ்த்து சொல்வோம்


Selvam Velusamy said...

1. யாரென்று தெரிகிறதா?

பதில்

முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் புகைப்படம்

சே. குமார் said...

ராஜாஜி பற்றி அறியத் தந்தீர்கள்.
வாழ்த்துக்கள் ஐயா,

kmr.krishnan said...

மூதறிஞர் ராஜாஜிக்கு மூன்று புதல்வர்கள்.மூத்தவர் பெயர் கிருஷ்ணசாமி.இரண்டாமவ்ர் ராமசாமி.மூன்றாமவர் நரசிம்மன்.

இதில் மூத்தவர் கிருஷ்ணசாமி பத்திரிகை ஆசிரியராக இருந்தார். மிகச்சிறு வயதிலேயே தந்தையுடன் முர‌ண்பட்டு சற்றே விலகியிருந்தார்.

இரண்டாமவர் ராமசாமி வழக்கறிஞர். நிறைய குழந்தைகளைப் பெற்றுவிட்டு
சிறுவயதிலேயே இறந்துவிட்டார்.விதவை மருமகளும், குழந்தைகளும் ராஜாஜியின் பொறுப்பில் வந்தார்கள்.அவர்களை மூன்றாவது மகன் நரசிம்மனின் பொறுப்பில் விட்டு தனியாக ஒருவீட்டில் இருக்கச் சொல்லி தன்னுடைய ஓய்வூதியத் தொகையை அவர்களுடைய பராமரிப்புக்கு அளித்து வந்தார்.ராஜாஜி தன் விதவையான மூத்த மகள் நாமகிரியுடன் கல்கி கார்டன்,கீழ்பாக்கத்தில் வசித்தார்

மூன்றாமவர் நரசிம்மன் திருமணமே செய்ய்வில்லை.

உங்களுடன் பணி புரிந்த சுதர்சன் பெரும்பாலும் ராமசாமியின் மகனாக இருந்திருக்க வேண்டும். டி வி எஸ் நிறுவனமா?

என்.சுதர்சனா? ஆர்.சுதர்சனா?

நரசிம்மன் ஒருமுறை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.நேரு பிரதமராக இருந்த சமயம்.1967ல் மீண்டும் அவர்களுடைய பிறந்த மண்ணான
ஒசூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நரசிம்மன் போட்டி இட்டார். முன்னாள் தமிழக அமைச்சரும்,சபாநாயகருமான க.ராஜாராம் திமுக வேட்பாளராக நரசிம்மனை எதிர்த்து நின்றார்.அப்போதுராஜாஜி திமுக கூட்டணி.

தன் மகனுக்கு எந்த ஆதரவும் அளிக்காமல்,"அரசியலில் அப்பன் என்றும் மகன் என்றும் கிடையாது" என்று க.ராஜாராமுக்கு ஆதரவாக ஓர் அஞ்சல் அட்டை எழுதிப் போட்டார்.க.ராஜாராம் அத் தேர்தலில் வென்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். நரசிம்மன் தோல்வி அடந்தார்.
அது தான் ராஜாஜி!

Subbiah Veerappan said...

புகைப்படத்தில் இருப்பவர் நம் மதிப்பிற்கு உரிய முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாயி அவர்கள். அதுதான் சரியான விடை.

சரியான விடையை எழுதிய அன்பு உள்ளங்களுக்கு எனது பாராட்டுக்கள்!

இந்தப் படத்தை நமக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தவர், நம் வேப்பிலை சுவாமி. அவருக்கும் நமது நன்றிகள் உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
மூதறிஞர் ராஜாஜிக்கு மூன்று புதல்வர்கள்.மூத்தவர் பெயர் கிருஷ்ணசாமி.இரண்டாமவ்ர் ராமசாமி.மூன்றாமவர் நரசிம்மன்.
இதில் மூத்தவர் கிருஷ்ணசாமி பத்திரிகை ஆசிரியராக இருந்தார். மிகச்சிறு வயதிலேயே தந்தையுடன் முர‌ண்பட்டு சற்றே விலகியிருந்தார்.
இரண்டாமவர் ராமசாமி வழக்கறிஞர். நிறைய குழந்தைகளைப் பெற்றுவிட்டு
சிறுவயதிலேயே இறந்துவிட்டார்.விதவை மருமகளும், குழந்தைகளும் ராஜாஜியின் பொறுப்பில் வந்தார்கள்.அவர்களை மூன்றாவது மகன் நரசிம்மனின் பொறுப்பில் விட்டு தனியாக ஒருவீட்டில் இருக்கச் சொல்லி தன்னுடைய ஓய்வூதியத் தொகையை அவர்களுடைய பராமரிப்புக்கு அளித்து வந்தார்.ராஜாஜி தன் விதவையான மூத்த மகள் நாமகிரியுடன் கல்கி கார்டன்,கீழ்பாக்கத்தில் வசித்தார்
மூன்றாமவர் நரசிம்மன் திருமணமே செய்ய்வில்லை.
உங்களுடன் பணி புரிந்த சுதர்சன் பெரும்பாலும் ராமசாமியின் மகனாக இருந்திருக்க வேண்டும். டி வி எஸ் நிறுவனமா?
என்.சுதர்சனா? ஆர்.சுதர்சனா?
நரசிம்மன் ஒருமுறை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.நேரு பிரதமராக இருந்த சமயம்.1967ல் மீண்டும் அவர்களுடைய பிறந்த மண்ணான ஒசூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நரசிம்மன் போட்டி இட்டார். முன்னாள் தமிழக அமைச்சரும்,சபாநாயகருமான க.ராஜாராம் திமுக வேட்பாளராக நரசிம்மனை எதிர்த்து நின்றார்.அப்போதுராஜாஜி திமுக கூட்டணி.
தன் மகனுக்கு எந்த ஆதரவும் அளிக்காமல்,"அரசியலில் அப்பன் என்றும் மகன் என்றும் கிடையாது" என்று க.ராஜாராமுக்கு ஆதரவாக ஓர் அஞ்சல் அட்டை எழுதிப் போட்டார்.க.ராஜாராம் அத் தேர்தலில் வென்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். நரசிம்மன் தோல்வி அடந்தார்.
அது தான் ராஜாஜி!/////

இருக்கலாம். நண்பரின் பெயர் மட்டும்தான் நினைவில் உள்ளது. T.V.Sundaram Ayyangar & Sons என்னும் டி.வி,.எஸ் குழுனத்தின் தாய் நிறுவனம்தான் அது. தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

தன் தாத்தா ராஜாஜியைப் பற்றி திரு.சுதர்சன் சொன்ன உண்மைக் கதை ஒன்று உள்ளது. நெஞ்சை நெகிழ்த்தும் கதை அது. நேரம் கிடைக்கும்போது, அதை எழுதிப் பதிவிடுகிறேன்

வேப்பிலை said...

///Srinivasa Rajulu.M said...
திரு. அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் ஒரு பிரம்மச்சாரி ஆவார்///

ஆமாம்..
இவர் ஜாதகத்தில் மாந்தி 2ல்...

Rajaram Parthasarathi said...

atal bihari vajpayee