மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.12.12

கவிதை நயம்: சுவைக்காக எதைப் பெறக்கூடாது?

கவிதை நயம்: சுவைக்காக எதைப் பெறக்கூடாது?

கவிதை நயம்:

இன்றைய கவிதை நயம் பகுதியை, கவியரச்ர் கண்ணதாசன் எழுதிய 2 கவிதைகள் அலங்கரிக்கின்றன. உணவில் என்ன் சேர்க்க வேண்டும், என்ன சேர்க்ககூடாது என்பதை அவர் வலியுறுத்தி எழுதியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------------------------------------

முட்டைப்பட்  டாணி  முளை
முருங்கைக்  கீரைவெங்  காயம்
தட்டைப் பயிறுகள் மொச்சை
சாகர எறாக்கள் நண்டு
கொட்டை உருளைக் கிழங்கில்
கொடியதோர் வாய்வு காணும்
தொட்டுப்பா ராதே! என்றும்
சுவைக்காக நோய் பெறாதே!

2
முளைக்கீரை, மணத்தக் காளி
முருங்கைக்காய், வெள்ளரிக் காய்,
உளிப்பூண்டோ டகத்திக் கீரை,
உயர்ந்த தக்காளி, கோசு,
கனியோடு நெய், பருப்பு,
கத்தரி, வெண்டை, பீட்ரூட்,
நெளிகின்ற புடலை நெல்லி,
நீள்கொத் தவரங்கா யோடு,

பூசணி, சுரை, பற்ங்கி,
பூக்கோசு, பசலைக் கீரை
பேசவோர் விலையில் லாத
பிஞ்சான பிரண்டை, வேலித்
தூசியில் முளைத்த கொவ்வை,
தொண்டங்காய், குப்பைக் கீரை,
ஊசிபோற் கொத்த மல்லி,
உண்ணுவாய் பொதினா வோடு!

- கவியரசர் கண்ணதாசன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

  1. ஆஹா அருமை
    அப்படியே சுழல விடுகிறோம்

    வழக்கமாக இந்த பாடலினை
    வலமாக...

    என்ன சமையலோ
    எதிர்த்துக் கேட்க யாருமில்லை

    சமைத்துக்காட்டுவோம்..
    இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்து கட்டுவோம்

    கல்யாணி..
    ராகம் போலவே சைவ பிரியாணி
    தங்கை நீயும் கவனமுடன் கலைந்திடு அரிசியை
    கல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி
    கரிகரிசரிகம கரி காய்களும் எங்கே
    கரி வேப்பிலை எங்கே
    மமமமமமமம மஞ்சள் பொடி எங்கே
    மசாலா பொடி எங்கே
    மமமமமமமம மஞ்சள் பொடி இங்கே
    மசாலா பொடி இங்கே
    பபபபபபக பருப்பு இருக்குதா
    இருக்கு
    கனி கனி கனி கனி கனி தனியா இருக்கா
    நிநிநிநி கொஞ்சம் பொறு நீ
    அடுப்பை கொஞ்சம் கவனி
    கொதிக்கும் நீரில் அரிசியை போடு
    வெந்தால் அதை நீ வடித்திடு
    கிடைத்திடும் சாப்பாடு
    சமைத்துக்காட்டுவோம்..

    சாதம் இருக்கு ரெடியா
    ரசம் கொதிக்குது தனியா
    சமையல் ரெடி
    அவியல் ரெடி
    சமையல் ரெடி
    அவியல் ரெடி
    வருவல் ரெடி
    பொறியல் ரெடி
    தகிந்திகத்தோம் தகிந்திகத்தோம்
    முடிஞ்சு போச்சு

    ReplyDelete
  2. Good morning sir. Very useful info. Thanks for sharing.

    ReplyDelete
  3. கவியரசின் கவிதைக்கு நன்றிகள் ஐயா!
    கவிஞர் தொடாதாப் பாகமே இல்லை போலும்
    தொட்டும் விடாத பழக்கமும் இல்லை போலும்
    ஆழப் புகுந்து ஆய்ந்து தோய்ந்து
    தாழப் பணிந்து தகையுடனே
    வாழ வழி கூறியக் கவியவர்!

    சரி வாய்வது வந்தால் அதுவும்
    ஒருக் குழந்தைக்கு வந்தால்
    எப்படி இறக்கும் என்ற கற்பனையை
    கவிஞரின் கவிதை எனக்குத் தந்தது...

    வாய்வது வளம் வந்து
    நோயது கூடினால் பச்சிளம்
    சேயது கதறுமே என்று
    தாயவள் வாயதைக் கட்டியே
    தாய்ப் பாலதை ஊட்டுவாள்!

    வாய்தனைக் கட்டியும் அந்தக்கொடும்
    வாய்வென்னும் நோயதும் வந்துவிட்டால்
    சேயது விம்மி விம்மி அழத்
    தாயவள் தானும் கதறுவாள்!

    வாய்வது களையவே கொடும்
    வலியது போகவே ஒரு
    வைத்தியம் கூறுவோம் அதை
    கைவைத்தியம் என்றே கூறுவோம்

    சீரகம் காய்ச்சிய நீரை
    சிரத்தையோடு தாய் அருந்தலாம்
    சிறிய இஞ்சித்துண்டை நசுக்கியே
    சிறிதளவு நீரிட்டு சாற்றை வடித்தே

    சின்னக் கிண்ணத்தில் இட்டே
    சிறுமுளைப் பாலினது வெப்பம்போல
    சிறிதளவு சூடேற்றி அதிலே
    சிலத் துளித்தேன் கலந்து
    சிலவேளைக் கொடுத்துவர

    வாய்வதும் பறந்து போகும்
    நோயதும் தொலைந்து போகும்
    சேயதும் சிரித்து சிவக்கும்
    தாயவளும் சிலிர்த்து மகிழ்வாள்!

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. எழுத்துப் பிழை

    ''...எப்படி இருக்கும் என்ற கற்பனையை
    கவிஞரின் கவிதை எனக்குத் தந்தது...''

    இப்படி இருந்திருக்கணும்.

    ReplyDelete
  5. இதல்லவோ உணவு. நன்றி சுப்பையா சார்.

    ReplyDelete
  6. அய்யா,

    காலை வணக்கம்

    ReplyDelete
  7. நயமான கவிதைப்பகிர்வுக்கு
    நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  8. கவியரசரின் இந்த பாடலை இன்று தான் பார்கிகிறேன். அருமை.

    ReplyDelete
  9. ஜி ஆலாசியம் அவர்களின் தாய்ப்பாசத்தையும் கை வைத்தியத்தையும் தாங்கி வந்த கவிதை அருமைஅருமை,

    ஆலாசியம் அவர்கள் தொடர்ந்து கவிதைகள் எழுதவேண்டும் என்பது என் வேண்டுகோள்,

    ReplyDelete
  10. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சரபோஜி தன் அரசவையில் ஏராளமான வைத்தியர்களை வைத்திருந்தார். பல நோய்களுக்கு சித்தமருத்துவ வகைகளை அவர்களைக் கொண்டு எழுத வைத்தார். பின்னர் அவற்றை கொட்டையூர் சிவக்கொழுந்து பிள்ளை அவர்கள் தலைமையில் இருந்த புலவர் பெருமக்களிடம் கொடுத்து அவற்றைப் பாடலாக எழுத வைத்தார். அந்தப் பாடல்கள் தொகுக்கப்பட்டு "சரபேந்திரராஜ வைத்திய முறைகள்" எனும் தலைப்பி, இன்னன்ன நோய்களுக்கு இவையிவை மருந்து என்று பல பாகங்களாக அச்சிடப்பட்டு இப்போதும் தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் கிடைக்கிறது. கவியரசரும் அதே வழியைப் பின்பற்றி தன் கவிதைகளில் மருத்துவம் சொல்லியிருக்கிறார். நல்ல படைப்பு.

    ReplyDelete
  11. அருமை ஐயா அருமை......

    ReplyDelete
  12. ////Blogger அய்யர் said...
    ஆஹா அருமை
    அப்படியே சுழல விடுகிறோம்
    வழக்கமாக இந்த பாடலினை
    வலமாக...

    என்ன சமையலோ
    எதிர்த்துக் கேட்க யாருமில்லை
    சமைத்துக்காட்டுவோம்..
    இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்து கட்டுவோம்
    கல்யாணி..
    ராகம் போலவே சைவ பிரியாணி
    தங்கை நீயும் கவனமுடன் கலைந்திடு அரிசியை
    கல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி
    கரிகரிசரிகம கரி காய்களும் எங்கே
    கரி வேப்பிலை எங்கே
    மமமமமமமம மஞ்சள் பொடி எங்கே
    மசாலா பொடி எங்கே
    மமமமமமமம மஞ்சள் பொடி இங்கே
    மசாலா பொடி இங்கே
    பபபபபபக பருப்பு இருக்குதா
    இருக்கு
    கனி கனி கனி கனி கனி தனியா இருக்கா
    நிநிநிநி கொஞ்சம் பொறு நீ
    அடுப்பை கொஞ்சம் கவனி
    கொதிக்கும் நீரில் அரிசியை போடு
    வெந்தால் அதை நீ வடித்திடு
    கிடைத்திடும் சாப்பாடு
    சமைத்துக்காட்டுவோம்..
    சாதம் இருக்கு ரெடியா
    ரசம் கொதிக்குது தனியா
    சமையல் ரெடி
    அவியல் ரெடி
    சமையல் ரெடி
    அவியல் ரெடி
    வருவல் ரெடி
    பொறியல் ரெடி
    தகிந்திகத்தோம் தகிந்திகத்தோம்
    முடிஞ்சு போச்சு/////

    பாட்டைப் போட்டுப் பசியைக் கிளப்பிவிட்டீர்களே சுவாமி!

    ReplyDelete
  13. ////Blogger KJ said...
    Good morning sir. Very useful info. Thanks for sharing.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger ஜி ஆலாசியம் said...
    கவியரசின் கவிதைக்கு நன்றிகள் ஐயா!
    கவிஞர் தொடாதாப் பாகமே இல்லை போலும்
    தொட்டும் விடாத பழக்கமும் இல்லை போலும்
    ஆழப் புகுந்து ஆய்ந்து தோய்ந்து
    தாழப் பணிந்து தகையுடனே
    வாழ வழி கூறியக் கவியவர்!

    சரி வாய்வது வந்தால் அதுவும்
    ஒருக் குழந்தைக்கு வந்தால்
    எப்படி இறக்கும் என்ற கற்பனையை
    கவிஞரின் கவிதை எனக்குத் தந்தது...

    வாய்வது வளம் வந்து
    நோயது கூடினால் பச்சிளம்
    சேயது கதறுமே என்று
    தாயவள் வாயதைக் கட்டியே
    தாய்ப் பாலதை ஊட்டுவாள்!

    வாய்தனைக் கட்டியும் அந்தக்கொடும்
    வாய்வென்னும் நோயதும் வந்துவிட்டால்
    சேயது விம்மி விம்மி அழத்
    தாயவள் தானும் கதறுவாள்!

    வாய்வது களையவே கொடும்
    வலியது போகவே ஒரு
    வைத்தியம் கூறுவோம் அதை
    கைவைத்தியம் என்றே கூறுவோம்

    சீரகம் காய்ச்சிய நீரை
    சிரத்தையோடு தாய் அருந்தலாம்
    சிறிய இஞ்சித்துண்டை நசுக்கியே
    சிறிதளவு நீரிட்டு சாற்றை வடித்தே

    சின்னக் கிண்ணத்தில் இட்டே
    சிறுமுளைப் பாலினது வெப்பம்போல
    சிறிதளவு சூடேற்றி அதிலே
    சிலத் துளித்தேன் கலந்து
    சிலவேளைக் கொடுத்துவர

    வாய்வதும் பறந்து போகும்
    நோயதும் தொலைந்து போகும்
    சேயதும் சிரித்து சிவக்கும்
    தாயவளும் சிலிர்த்து மகிழ்வாள்!

    நன்றிகள் ஐயா!//////

    உங்களின் கவிதை வரிகளுக்கு நன்றி ஆலாசியம்! தொடர்ந்து அசத்துங்கள்!

    ReplyDelete
  15. ///Blogger ஜி ஆலாசியம் said...
    எழுத்துப் பிழை
    ''...எப்படி இருக்கும் என்ற கற்பனையை
    கவிஞரின் கவிதை எனக்குத் தந்தது...''
    இப்படி இருந்திருக்கணும்.////

    அதனால் பிரச்சினை ஒன்றும் இல்லை ஆலாசியம்

    ReplyDelete
  16. ////Blogger வல்லிசிம்ஹன் said...
    இதல்லவோ உணவு. நன்றி சுப்பையா சார்.////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. ////Blogger Lakhsmi Nagaraj said...
    அய்யா,
    காலை வணக்கம்////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  18. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    நயமான கவிதைப்பகிர்வுக்கு
    நன்றிகள் ஐயா../////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. /////Blogger Uma said...
    நல்ல பாடல்!////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////Blogger Ashok said...
    Simply Superb!////

    நல்லது. நன்றி நண்பரே! பாராட்டு கவியரசருக்கு உரியது!

    ReplyDelete
  21. ////Blogger thanusu said...
    கவியரசரின் இந்த பாடலை இன்று தான் பார்கிகிறேன். அருமை./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  22. ////Blogger thanusu said...
    ஜி ஆலாசியம் அவர்களின் தாய்ப்பாசத்தையும் கை வைத்தியத்தையும் தாங்கி வந்த கவிதை அருமைஅருமை,
    ஆலாசியம் அவர்கள் தொடர்ந்து கவிதைகள் எழுதவேண்டும் என்பது என் வேண்டுகோள்,/////

    எழுதுகிறாரே! அவருடைய கவிதைகள் எல்லாம் புத்தக வடிவில் பின்னொரு நாள் வெளியிடுவார். அப்போது அசைபோட்டு மகிழலாம்!

    ReplyDelete
  23. ////Blogger Thanjavooraan said...
    தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சரபோஜி தன் அரசவையில் ஏராளமான வைத்தியர்களை வைத்திருந்தார். பல நோய்களுக்கு சித்தமருத்துவ வகைகளை அவர்களைக் கொண்டு எழுத வைத்தார். பின்னர் அவற்றை கொட்டையூர் சிவக்கொழுந்து பிள்ளை அவர்கள் தலைமையில் இருந்த புலவர் பெருமக்களிடம் கொடுத்து அவற்றைப் பாடலாக எழுத வைத்தார். அந்தப் பாடல்கள் தொகுக்கப்பட்டு "சரபேந்திரராஜ வைத்திய முறைகள்" எனும் தலைப்பி, இன்னன்ன நோய்களுக்கு இவையிவை மருந்து என்று பல பாகங்களாக அச்சிடப்பட்டு இப்போதும் தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் கிடைக்கிறது. கவியரசரும் அதே வழியைப் பின்பற்றி தன் கவிதைகளில் மருத்துவம் சொல்லியிருக்கிறார். நல்ல படைப்பு./////

    உண்மைதான் கோபாலன் சார். இப்போது டெங்கு காய்ச்சலுக்கு, சித்த மருந்தைப் பயன்படுத்தச் சொல்லி அரசே பரிந்து உரைக்கின்றது வேம்பு, மற்றும் பப்பாளி இலைக் கசாயம்தான் அதற்குக் கைகண்ட மருந்தாம்! உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சார்!

    ReplyDelete
  24. /////Blogger raja said...
    அருமை ஐயா அருமை...../////.

    நல்லது. நன்றி நண்பரே! பாராட்டு கவியரசருக்கு உரியது!

    ReplyDelete
  25. ஐயா
    தங்களின் வலைப்பதிவில் கடந்த வாரம் இணைந்தேன்,
    நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com