மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.10.12

Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா?

 
Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா?

தலைப்பில் வாத்தியார் அடிக்கடி டா போட்டு எழுதுகிறாரே ந்ன்று யாரும் நினைக்க வேண்டாம். அது எனக்கு நானே போட்டுக்கொள்வது. அப்போதுதான் ஒரு உற்சாகத்துடன், உங்கள் மொழியில் சொன்னால் ஒரு ‘கிக்’ உடன் எழுத முடிகிறது!

எந்த ஒரு விலை உயர்ந்த சாதனத்தையும் வாங்கும்போது, அதற்கு எத்தனை ஆண்டுகள் உத்திரவாதம் (க்யாரண்டி) இருக்கிறது என்று பார்த்து விட்டுத்தான் வாங்குவோம். அதுதான் வழக்கம். உதாரணத்திற்கு விலை உயர்ந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கினாலோ அல்லது கைப்பிடிக்குள் அடங்கும் ஒரு வீடியோ காமெராவை வாங்கினாலோ அல்லது ஒரு மடிக்கணினியை வாங்கினாலோ, ஒன்று அல்லது இரண்டு ஆண்டு அதற்கு செயல் உத்திரவாதம் இருந்தால்தான் வாங்குவோம்

அனால் எல்லாவற்றையும் விட விலை உயர்ந்த அல்லது விலை மதிப்பிட முடியாத நம் உயிருக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? அல்லது அதை யாரிடம் கேட்டு வாங்குவது?

இரவில் கண் அயரும்போது, காலையில் எழுந்திருப்போம் எனற நம்பிக்கையுடன்தான் படுக்கிறோம். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைக்கூட சிலர் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். அதுவே கடைசி தூக்கமாக இருந்து, காலையில் மனுஷன் எழாமல் போய்விட்டால் என்ன செய்ய முடியும்?

நெடுஞ்சாலையில் பயணிக்கிறவன், செல்லுகின்ற ஊருக்கு இததனை மணி நேரத்தில் போய்ச் சேருவோம் என்று கணக்குப் போட்டுக் கொண்டுதான் வண்டியை எடுக்கின்றான். அவன் நன்றாக வண்டியை ஓட்டினாலும், அந்த வண்டி புதியதுதான், பிரச்சினை எதுவும் செய்யாது என்றாலும், எதிரில் வேகமாக வருகின்ற டிப்பர் லாரிக்காரன் முத்தம் கொடுத்து, அதாவது மோதி, பக்கத்தில் இருக்கும் பள்ளத்திற்குள் அவனையும், அவன் வண்டியையும் தலை குப்புறத் தள்ளிவிட்டுப் போனால் என்ன செய்ய முடியும்? மோதியவன் யார் என்று எழுந்து பார்ப்பதற்கு உயிர் இருக்க வேண்டுமே?

இது போல சொல்லிக் கொண்டே போகலாம். ஆகவே வாழ்க்கை நிச்சயமற்றது!

என்றைக்கு வேண்டுமென்றாலும் ஆயுள்காரகன் சனீஷ்வரன் போர்டிங் பாஸைப் பைக்குள் திணித்து நம்மை மேலே அனுப்பிவைப்பான். சனி அனுப்பி வைக்கும் போது விசா, இமிக்ரேசன், விமான டிக்கெட் என்று எந்தப் புண்ணாக்கும் கிடையாது. ‘செக்யூரிட்டி செக்’ எல்லாம் கிடையாது. எல்லாம் இலவசம். இலவசம் என்றால் நமக்குப் பிடிக்குமே. ஆகவே மகிழ்ச்சியுடன் போய்ச் சேர வேண்டியதுதான்.

    “நான் என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து வைத்திருக்கிறேன். என்னுடைய ஆயுட்காலம் 80 ஆண்டுகள் என்று தலை சிறந்த ஜோதிடர் ஒருவர் சொல்லியிருக்கிறார். எனக்கு இப்போது 40 வயதுதான் ஆகிறது. இன்னும் நாற்பது ஆண்டு காலம் நான் வாழ்வேன்” என்று சொல்லிக்கொண்டிருப்பவன் கூட சொன்னதற்கு அடுத்த நாளே போய்ச் சேரலாம். ஜோதிடர் என்ன கடவுளா? அவர் சொன்னால் அப்படியே நடப்பதற்கு?

ஜோதிடர்கள் பொருத்தம் பார்த்துக் கொடுத்த எத்தனையோ திருமணங்கள் ஊற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆண்டில் தம்பதியர் இருவரும் ஒரு பெண் மகப்பேறு மருத்துவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு மனுச் செய்து விட்டு, அங்கே மன வருத்தத்துடன் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    “என்ன சொல்ல வருகிறீர்கள்? ஜோதிடம் பொய்யா?”

    “ஜோதிடம் பொய்யல்ல! உண்மை.”

அதை முழுதாகக் கற்றுத் தெளிந்தவர்கள்தான் குறைவு.

பல நூற்றாண்டுகளுக்கு, முன் நம் நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த ரிஷிகளால் ஏராளமான ஜோதிட நூல்கள் எழுதப்பெற்றுள்ளன. அவைகள் எல்லாம் வடமொழியில் இருந்தன. அவற்றை எல்லாம் பல புண்ணிய ஆத்மாக்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூல்களாக்கி வைத்துள்ளாகள். அவற்றுள் முக்கியமான சில நூல்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றுள் ஏராளமான பாடங்கள், தகவல்கள், செய்திகள் பத்மநாப சுவாமி கோவில் சுரங்க அறைக்குள் இருக்கும் தங்கத்தைபோல வைரங்களைப் போல கொட்டிக்கிடக்கின்றன.

அவற்றை எல்லாம் முழுமையாகப் படித்து முடித்து மனதில் உள் வாங்கிக் கொள்ள நம் ஆயுள் பத்தாது. உள்வாங்கிக்கொண்ட நம் முன்னோர்கள் எல்லாம், சின்ன வயதிலேயே துவங்கி அவற்றிற்காக, அதைக் கற்றுக்கொள்வதற்க்காகவும் அவற்றை வைத்து நொந்து போன உள்லங்களுக்குப் பலன் சொல்லவும், ஆறுதல் அளிக்கவும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார்கள்.

அப்படி அர்ப்பணிப்பவர்கள் எல்லாம் இப்போது யாரும் இல்லை.

அந்த நூல்களின் பட்டியல். (எல்லாவ்ற்றையும் குறிப்பிடவில்லை. முக்கியமானவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.)

Classical Vedic Texts
1. Brihat Parashara Hora Shastra (the "bible" of Vedic astrology)
   written by Sage Parashara (father of Veda Vyaasa, the compiler of Mahabharata)
2. Phaladeepika (the second most important "bible" in Vedic astrology)
   written by Mantreswara was a 16th-century Hindu astrologer
3. Uttara Kalamrita
   written by Kalidasa
4. Saravali (two volumes)
   written by Kalyana Varma, belonged to the 10th century
5. Bhrigu Sutram and
6. Bhrigu Samhita
   Both written by Maharishi Bhrigu was one of the seven great sages, the Saptarshis, 

   in  ancient India,
6. Brihat Jataka
    written by Varahamihira, an Indian astronomer, mathematician, and astrologer 

    who    lived in Ujjain.He is considered to be one of the nine jewels (Navaratnas) 
    of the court of legendary ruler Vikramaditya (thought to be the Gupta emperor  
    Chandragupta II Vikramaditya) Period 505 - 587 
7. Sri Sarwathachintamani (two volumes)
    written by Acharya Venkatesa in the 13th century.
8. Jataka Parijata (3 Vol)
   written by Acharya Venkatesa in the 13th century.
9. Kalaprakasika
   The standard book on the election (mahoortha) system : with original text in  

    Devanagari   and English translation
    by N.P. Subramania Iyer.

10. குமாரசுவாமீயம்
11. புலிப்பாணி ஜோதிடம்
12. கேரள மணிகண்ட ஜோதிடம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் ஏராளமான புத்தகக் கடைகள் உள்ளன. எல்லாவிதமான ஜோதிட நூல்களும் அங்கே கிடைக்கும். பணத்தைத் தூக்கிப்போட்டு அவைகளை வாங்கிக் கொண்டு வந்து விடலாம்.

வாங்குவாதா முக்கியம்?

படிக்க வேண்டுமே? படிப்பத்ற்கு நேரம் வேண்டுமே? நேரம் இருந்து படித்தாலும் படிப்பது புரிய வேண்டுமே? அதாவது விளங்க வேண்டுமே? விளங்கினாலும் மண்டைக்குள் ஏற வேண்டுமே? ஏறினாலும் நினைவில் அவைகள் தங்க வேண்டுமே?

அதுதான் கஷ்டம்!!!!

பழைய ஜோதிட நூல் ஒன்றில் இருந்து பாடல் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். புரிகிறதா பாருங்கள்:

திதிமன்முன்கோவாய் வேனேரைந்து முபசயமுஞ்
   சென்றது முன்புடனன் றந்தாள் சேயுமணன் றிபுச்சேய்
நவமும்வியமாறேழுநளின நுநீராந்த
   நாட்கிறையுமாம் வேளொன்ன் றந்தணநோய்நடையுன்
தவமுளண்னோய் பொனடைத்தம்பியுங் கட்கணியாய்த்
   தருகேந்த்ரபண பரமுமிதிற்றனையரிவது
மவமுனின் மாலுடனகமுமாறுளணவனு
   மைந்திலதெட்டி துவுமெட்டேழிந்துவுமக்கிறைக்கே!

                 - புத்தகத்தின் பெயர் குமாரசுவாமியம் -  75வது பாடல்
தலைப்பு அட்டவர்க்கப் படல்ம் - ரவி மதி அட்டவர்க்கம்


அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் (நன்றாகக் கவனியுங்கள் இரண்டு கிரகங்கள்) சுய அஷ்டகவர்க்கம் போடுவத்றகான வழி முறையைப் பற்றிய தகவல்கள் எட்டே வரியில் கூறப்பட்டுள்ளன. உங்களுக்குத் தெரிந்த தமிழ்ப் பண்டிதர் அல்லது பேராசியரிடம் கொடுத்து இதற்குப் பொருள் கேளுங்கள். சொன்னார் என்றால் எனக்குத் தகவல் சொல்லுங்கள். அவரைப் பாராட்டி நம் வகுப்பறையில் ஒரு தனிப்பதிவு போட்டு விடுகிறேன்!

இதற்கெல்லாம் இன்றையத் தமிழில், அதாவது நமக்குத் தெரிந்த தமிழில் விளக்கம் சொன்னால்தானே புரியும். சிலர் பொருள் எழுதியுள்ளார்கள். அதெல்லாம் நேரடியான பொருள். நேரான மொழிபெயர்ப்பு. அதனால் இப்போது அவற்றைப் படிப்பவர்கள் சற்று புரிந்து கொள்வார்கள். இன்னும் ஜனரஞ்சகமான தமிழில் அவற்றை எழுதுவதற்கு யாராவது முன் வர வேண்டும்.

எனக்கு அந்தப் பிரச்சினை எல்லாம் ஏற்படவில்லை. நான் படிதததெல்லாம் ஆங்கில நூல்கள். சனியை பாடலின் எதுகை மோனைக்காக நீலவன், முடவன், காரிமைந்தன் என்று எல்லாம் சொல்லாமல் ஒரே ஒரு வார்த்தையைத்தான் அந்த நூல்களில் பயன் படுத்துவார்கள். Saturn அவ்வள்வுதான். அதனால் நான் தப்பித்தேன். ஜோதிடமும் ஒரளவிற்கு எனக்குப் பிடிபட்டது.

ஜோதிடத்தில் கரை கண்டவன் எவனுமில்லை. ஆகவே அடக்கி வாசிக்க வேண்டும். ஜோதிடம் பெரிய கடல். அந்தக் கடலில் நான் எவ்வளவு தூரம் பயணித்திருப்பேன். எத்தனை இடங்களைப் பார்த்திருப்பேன்  என்று எப்படிக் கணக்கிட்டுச் சொல்ல முடியும்? ஆகவேதான் அந்த ஓரளவு.

இப்போது ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் குடும்ப ஜோதிடம் போன்ற நான்கைந்து தமிழ் ஜோதிட நூல்களைப் படித்துவிட்டு ஜோதிடர் வேலையைச் செய்யத் துவங்கி விடுகிறார்கள்.

தசா புத்தியைக் கணித்தும், கோள்சாரத்தை வைத்தும் பலன் சொல்வதும் எளிது. நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத்தான் ஜோதிடத்தில் ஆழந்த ஞானமும் (அறிவும்) அனுபவமும் வேண்டும். எல்லோருக்கும் அது அமையாது!

என்க்கு, வாரத்திற்கு, இரண்டு அல்லது மூன்று மின்னஞ்சல்கள் வரும். “ஐயா, எனக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். தெரிந்ததை வைத்து ஜோதிடர் தொழிலை முழு நேரத்தொழிலாகவோ அல்லது பகுதி நேரத் தொழிலாகவோ நான் செய்யலாமா? எனக்கு அதில் வருமானம் கிடைக்குமா? தயவு செய்து என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்று அதில் கேட்டிருப்பார்கள்

எப்படி இருக்கிறது கதை?

படிப்பது வேறு. படித்ததை வைத்துத் தொழில் செய்வது வேறு!

படிப்பதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். , பெயர்ப் பலகையை வாசலில் மாட்டித் தொழில் செய்வது அப்படியா?

பகவானே, எல்லாம் காலக்கோளாறு என்று நினைத்துக் கொள்வேன்.

எடுத்தவுடன் இயக்குனர் சங்கர்போல வரவேண்டும் என்று முயற்சி செய்தால் எப்படி? சங்கர் துவக்க காலத்தில் எத்தனை பேர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி அனுப்வம் பெற்றார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அதுபோல,  ஜோதிடர் ஒருவரிடம் நான்கு அல்லது ஐந்து ஆண்டு காலம் உதவியாளராக இருந்து பணி செய்திருந்தால் மட்டுமே  ஜோதிட ஞானமும், அனுபவமும் கிடைக்கும்

கற்பதைவிட, அனுபவ அறிவு முக்கியம். நிறைய ஜாதகங்களைப் பார்த்திருக்க வேண்டும். நிறையப் பேர்களிடம் உரையாடியிருக்க வேண்டும். எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. நிறைய உதாரண ஜாதகங்களை சேர்த்து வைத்தி ருக்கிறேன்.என்னை அறியாமலேயே சேர்த்து வைத்திருக்கிறேன். என் எழுத்துக்களுக்கு அவைகள் உதவுகின்றன!

சிலர் சிலருக்குப் பலன் சொல்லும்போது சில சமயம் அது தவறாகப் போய்விடும். அதற்கு ஜோதிடர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேறு ஒரு வலுவான காரணமும் இருக்கும்.

என்ன காரணம் அது?

அடுத்த பதிவில் அதை விவரமாகப் பார்ப்போம்

(தொடரும்)

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. கோள்சாரம் தசாபுக்தி வைத்துச்சொல்வதே 65% பலித்துவிடுகிறது. ஆனால் அது கேள்வியின் தன்மையைப் பொருத்தது.'வேலை போய்விட்டது, மீண்டும் எப்போது வேலை கிடைக்கும்?' என்று 28 வயதுக்காரர் கேட்கும் போது, அதற்கான பதில் பெரும்பாலும் கோள்சாரமே கூறிவிடுகிறது. ஆனால் 45 வயதுப் பெண்மணி 'எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்?' என்று கேட்டால் கோள் சாரம் உதவாது.

    நல்ல பதிவு ஐயா! நன்றி!

    ReplyDelete
  2. நச் சென்ற பதிவு,

    ஏதோ ஒரு புத்தகத்தை படித்து விட்டு வரிக்கு வரி மொழி பெயர்த்து அதாவது ஜாதகத்தோடு ஒப்பிட்டு பலன் சொல்வது அல்ல ஜோதிடம், அதற்கு அனுபவமும், அதற்கு மேலும் தெய்வ அனுகிரகமும் வேண்டும்!!!

    செதாஸ்கோப்பை காதில் மாட்டியவன் எல்லாம் மருத்துவ நிபுணராக முடியாது...
    அவனின் கல்வி அறிவால் ஆரம்பத்தில் ஒரு ''ஜெனரல் பிராக்டிஷாக'' சளி காய்ச்சலுக்கு வேண்டுமானால் மருந்துக் கொடுக்கலாம் தவிர.......
    என்பது போன்ற ஒருத் தெளிவை தர வந்தப் பதிவு...

    பூர்வ புண்ணியத்தைப் பற்றிய சூட்சுமத்தை யாரறிவார்? என்ற கருத்தோடு நாளைத் தொடரும் என்று நினைக்கிறேன்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    நல்ல ஓர் பதிவு,
    நன்றி

    ReplyDelete
  4. பிழைக்க விரும்புபவருக்கு சோதிடத்தில்
    பிடித்தம் இருக்க அவசியமில்லையே

    சாமியாராகட்டுமா..?
    சம்பாத்தியம் வேண்டுமே என்பாரும்உண்டு

    "கடுக்கணை விற்றாவது பிழைக்கமாட்டேனா..?"
    இது வேதம் புதிது படத்தில் ஜனகராஜ் பேசும் வசனம்..

    தொழிலாக சோதிடம் சொல்பவருக்கு நேரம் முக்கியம்..
    அடுத்த ஜாதகத்தை
    அதிக பணம் சம்பாதிக்கலாம்..

    புரோகிதம் செய்பவருக்கும் இக்கட்டத்தில்
    புராதன கொள்கை முக்கியமில்லை

    அய்யா போன்றவர் வகுப்பறையில்
    அறிவு அத்தனையும் பகிர்ந்து கொள்வது

    இறைவன் எங்களுக்கு தந்த பரிசு
    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

    என்றே
    தொடர்கிறோம்.. அன்பினால்
    தொட்டுவிடுவோம் என்ற உறுதியில்

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    கோள்சாரம் தசாபுக்தி வைத்துச்சொல்வதே 65% பலித்துவிடுகிறது. ஆனால் அது கேள்வியின் தன்மையைப் பொருத்தது.'வேலை போய்விட்டது, மீண்டும் எப்போது வேலை கிடைக்கும்?' என்று 28 வயதுக்காரர் கேட்கும் போது, அதற்கான பதில் பெரும்பாலும் கோள்சாரமே கூறிவிடுகிறது. ஆனால் 45 வயதுப் பெண்மணி 'எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்?' என்று கேட்டால் கோள் சாரம் உதவாது.
    நல்ல பதிவு ஐயா! நன்றி!/////

    உண்மைதான். அனுபவம் மிக்க ஜோதிடரிடம்தான் கூட்டம் அலை மோதும். கோச்சார ஜோதிடரிடம் ஒரு தடவை வந்தவன் அடுத்த தடவை வரமாட்டான்.
    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. /////Blogger ஜி ஆலாசியம் said...
    நச் சென்ற பதிவு,
    ஏதோ ஒரு புத்தகத்தை படித்து விட்டு வரிக்கு வரி மொழி பெயர்த்து அதாவது ஜாதகத்தோடு ஒப்பிட்டு பலன் சொல்வது அல்ல ஜோதிடம், அதற்கு அனுபவமும், அதற்கு மேலும் தெய்வ அனுகிரகமும் வேண்டும்!!!
    செதாஸ்கோப்பை காதில் மாட்டியவன் எல்லாம் மருத்துவ நிபுணராக முடியாது...
    அவனின் கல்வி அறிவால் ஆரம்பத்தில் ஒரு ''ஜெனரல் பிராக்டிஷாக'' சளி காய்ச்சலுக்கு வேண்டுமானால் மருந்துக் கொடுக்கலாம் தவிர.......
    என்பது போன்ற ஒருத் தெளிவைத் தர வந்தப் பதிவு...
    பூர்வ புண்ணியத்தைப் பற்றிய சூட்சுமத்தை யாரறிவார்? என்ற கருத்தோடு நாளைத் தொடரும் என்று நினைக்கிறேன்.
    நன்றிகள் ஐயா!/////

    நஞ்சான விஷ்யங்களை ‘நச்’ சென்றுதான் சொல்ல வேண்டும்! உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. /////Blogger eswari sekar said..
    VANAKAM SIR////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ///Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல ஓர் பதிவு,
    நன்றி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger krishnababuvasudevan said...
    Good////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger அய்யர் said...
    பிழைக்க விரும்புபவருக்கு சோதிடத்தில்
    பிடித்தம் இருக்க அவசியமில்லையே
    சாமியாராகட்டுமா..?
    சம்பாத்தியம் வேண்டுமே என்பாரும்உண்டு
    "கடுக்கணை விற்றாவது பிழைக்கமாட்டேனா..?"
    இது வேதம் புதிது படத்தில் ஜனகராஜ் பேசும் வசனம்..
    தொழிலாக சோதிடம் சொல்பவருக்கு நேரம் முக்கியம்..
    அடுத்த ஜாதகத்தை அதிக பணம் சம்பாதிக்கலாம்.
    புரோகிதம் செய்பவருக்கும் இக்கட்டத்தில்
    புராதன கொள்கை முக்கியமில்லை
    அய்யா போன்றவர் வகுப்பறையில்
    அறிவு அத்தனையும் பகிர்ந்து கொள்வது
    இறைவன் எங்களுக்கு தந்த பரிசு
    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
    என்றே
    தொடர்கிறோம்.. அன்பினால்
    தொட்டுவிடுவோம் என்ற உறுதியில்///////

    ஆமாம் எல்லாம் பணம், எதுக்கும் பணம், எங்கே சென்றாலும், எதைச் செய்தாலும் பணம்.
    வாழ்க்கை அப்படியாகிவிட்டது. தர்மம் இன்று ஊறுகாய் போல ஆகிவிட்டது. தொட்டுக்கொள்ள மட்டுமே அது!

    ReplyDelete
  11. ஜோதிடம் பொய்யா?'
    "ஜோதிடம் பொய்யல்ல உண்மை"////

    ஆமாம் ஜோதிடம் உண்மை. ஆனால் சில ஜோதிடர்கள் தான் பொய்யார்கள்.

    நன்கு ஜோதிடம் தெரிந்தவர்கள் யாருக்கும் ஜோதிடம் பார்ப்பதில்லை. கடை வைத்திருக்கும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்க போனால் கோசார பலன் தான் சொல்கிறார்கள், அதிலும் குருவை மையப்படுத்தி "இந்த ஆண்டு முழுக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் அடுத்த குரு பெயர்சி தேதி சொல்லி அதன் பின் நிறையா லாபங்கள் வரும் என்பார்.

    எங்கள் ஊரில் மதிபிற்குரிய "அருனாசல குருக்கள்" 85 வயதைக் கடந்தவர். நான் பெரும் மரியாதை வைத்திருக்கும் மனிதர். குறிப்பிட்ட கால நேரம் தவிர எல்லா நேரத்திலும் பார்க்க மாட்டார்.இவரிடம் தசா புத்தி கணக்குத்தான். வந்தவரை குஷிப்படுத்த நல்லதை மட்டும் சொல்ல மாட்டார். .வரக்கூடிய பிரச்சினைகளையும் நாசூக்காக சொல்வார்.அய்யா சொன்ன புத்தகங்களும் இன்னும் பலப்பல புத்தகங்களும் அவர் வைத்துள்ளார்.

    கம்யுனிஸ்ட் சிவப்பு துண்டு போடுவான்
    ஆனால் சிவப்பு துண்டு போட்டவனெல்லாம் கம்யுனிஸ்ட் அல்ல
    தி.க கருப்பு துண்டு போடுவான்
    ஆனால் கருப்பு துண்டு போட்டவனெல்லம் தி.க அல்ல
    அதைப்போலத்தான்
    ஜோதிடம் சொல்பவரெல்லாம் ஜோதிடர் அல்ல.

    நல்ல பதிவு நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  12. ///இன்று ஊறுகாய் போல ஆகிவிட்டது. தொட்டுக்கொள்ள மட்டுமே அது!..///

    தொட்டுக் கொள்ள சரி..
    சாதத்திற்கா..
    சாராயத்திற்கா..

    முன்னது சாப்பாட்டை முடிக்க
    பின்னது சாப்பிட்டு வாழ்க்கையை முடிக்க



    ReplyDelete
  13. //////Blogger thanusu said...
    ஜோதிடம் பொய்யா?'
    "ஜோதிடம் பொய்யல்ல உண்மை"////
    ஆமாம் ஜோதிடம் உண்மை. ஆனால் சில ஜோதிடர்கள் தான் பொய்யார்கள்.
    நன்கு ஜோதிடம் தெரிந்தவர்கள் யாருக்கும் ஜோதிடம் பார்ப்பதில்லை. கடை வைத்திருக்கும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்க போனால் கோசார பலன் தான் சொல்கிறார்கள், அதிலும் குருவை மையப்படுத்தி "இந்த ஆண்டு முழுக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் அடுத்த குரு பெயர்சி தேதி சொல்லி அதன் பின் நிறையா லாபங்கள் வரும் என்பார்.
    எங்கள் ஊரில் மதிபிற்குரிய "அருனாசல குருக்கள்" 85 வயதைக் கடந்தவர். நான் பெரும் மரியாதை வைத்திருக்கும் மனிதர். குறிப்பிட்ட கால நேரம் தவிர எல்லா நேரத்திலும் பார்க்க மாட்டார்.இவரிடம் தசா புத்தி கணக்குத்தான். வந்தவரை குஷிப்படுத்த நல்லதை மட்டும் சொல்ல மாட்டார். .வரக்கூடிய பிரச்சினைகளையும் நாசூக்காக சொல்வார்.அய்யா சொன்ன புத்தகங்களும் இன்னும் பலப்பல புத்தகங்களும் அவர் வைத்துள்ளார்.
    கம்யுனிஸ்ட் சிவப்பு துண்டு போடுவான்
    ஆனால் சிவப்பு துண்டு போட்டவனெல்லாம் கம்யுனிஸ்ட் அல்ல
    தி.க கருப்பு துண்டு போடுவான்
    ஆனால் கருப்பு துண்டு போட்டவனெல்லம் தி.க அல்ல
    அதைப்போலத்தான்
    ஜோதிடம் சொல்பவரெல்லாம் ஜோதிடர் அல்ல.
    நல்ல பதிவு நன்றிகள் அய்யா./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கும், அனுபவப் பகிர்விற்கும் நன்றி தனுசு!!!

    ReplyDelete
  14. //////Blogger அய்யர் said...
    ///இன்று ஊறுகாய் போல ஆகிவிட்டது. தொட்டுக்கொள்ள மட்டுமே அது!..///
    தொட்டுக் கொள்ள சரி..
    சாதத்திற்கா..
    சாராயத்திற்கா..
    முன்னது சாப்பாட்டை முடிக்க
    பின்னது சாப்பிட்டு வாழ்க்கையை முடிக்க//////

    கலியுகம். நல்லவன் சீக்கிரம் போய் விடுகிறான். தண்ணியடித்துவிட்டு ஆட்டம் போடுகிறவன் எல்லாம் எங்கே போகிறான்? மற்றவர்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டு, ஆட்டை போட்டுச் சேர்க்கும் பணத்தில் செள்கரியமாக அல்லவா இருக்கிறான்!!!!

    ReplyDelete
  15. புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது, கிடைக்கிறது. நானும் பார்த்திருக்கிறேன்.
    நீங்கள் எழுதியது போல் இல்லை. முக்கி, முக்கி புரிந்து கொள்வதுற்குள்
    இன்னமும் 10 வருடங்கள் ஓடி விடும்.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. ஒரே அ(ன்/ம்)புகள், கமெண்ட் எல்லாம் அமித்தா பச்சன், தர்மேந்ரா, அஸ்ரானி இன்றமாதிரி வெந்தவன், வேகாதவன், அரவேக்காடுகளைதாக்குது.

    என்ன மாதிரி அப்பாவி மக்க ஒரு நல்லகாரியம் பன்னலானு ஜாதகத்த தூக்கினா ஒரெ ஒரு நல்ல ஜொசியனும் சிக்கரதில்ல. கலிகாலத்துல விவேக் சொன்னமாதிரி சரியா முடிச்சவிக்கிங்க, மொல்லமாரிங்ககிட்டப்போயே ஏமாருரதா இருக்கு.

    அன்பர் தனுசு குருக்களேட முகவரி தந்தா அங்கேயும் சென்றுபார்களாம்.

    ReplyDelete

  18. //கலியுகம். நல்லவன் சீக்கிரம் போய் விடுகிறான். தண்ணியடித்துவிட்டு ஆட்டம் போடுகிறவன் எல்லாம் எங்கே போகிறான்? மற்றவர்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டு, ஆட்டை போட்டுச் சேர்க்கும் பணத்தில் செள்கரியமாக அல்லவா இருக்கிறான்!!!!//

    உன்மைதான் சார். நாடே ஏமாத்ரவன் பின்னாலத்தான் போகுது, போக வேண்டிருக்குது. எவ்வளவு வந்தாலும் பத்தரதில்ல இவனுங்களுக்கு. பாலாப்போன கிரகங்க இவனுங்கள ஒன்னும் பன்றதில்ல.

    ReplyDelete
  19. //////Blogger SAI SRIDHAR said...
    புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது, கிடைக்கிறது. நானும் பார்த்திருக்கிறேன்.
    நீங்கள் எழுதியது போல் இல்லை. முக்கி, முக்கி புரிந்து கொள்வதுற்குள்
    இன்னமும் 10 வருடங்கள் ஓடி விடும்.///////

    ஆரவமும், முயற்சியும் இருந்தால் 3 ஆண்டுகளுக்குள் நல்ல தேர்ச்சி பெற்று விடலாம். நினைவாற்றல் முக்கியம். ஒரு பக்கம் படிக்கப் படிக்க இன்னொரு பக்கம் மறந்து கொண்டே போகும் நிலை மோசமானது!

    ReplyDelete
  20. ////Blogger zing zang said...
    KMR sir, chanceless comment
    Iyar sir, Ramusirum ippadithaan pesuvara?
    Today comments are seems to blame someone.////

    நீங்களாக எதையாவது நினைத்துக்கொண்டு பின்னூட்டம் இடாதீர்க்ள். யாரும் யாரையும் குற்றம் சொல்லவில்லை!

    ReplyDelete
  21. /////Blogger வித்யாபதி said...
    ஒரே அ(ன்/ம்)புகள், கமெண்ட் எல்லாம் அமித்தா பச்சன், தர்மேந்ரா, அஸ்ரானி இன்றமாதிரி வெந்தவன், வேகாதவன், அரவேக்காடுகளைதாக்குது.
    என்ன மாதிரி அப்பாவி மக்க ஒரு நல்லகாரியம் பன்னலானு ஜாதகத்த தூக்கினா ஒரெ ஒரு நல்ல ஜொசியனும் சிக்கரதில்ல. கலிகாலத்துல விவேக் சொன்னமாதிரி சரியா முடிச்சவிக்கிங்க, மொல்லமாரிங்ககிட்டப்போயே ஏமாருரதா இருக்கு.
    அன்பர் தனுசு குருக்களேட முகவரி தந்தா அங்கேயும் சென்றுபார்களாம்./////

    வாத்தியாரையும் சேர்த்து. வகுப்பறையில் அனைவரும் சமம்
    இங்கே தாக்குதலுக்கும், அடிதடிக்கும் வேலை இல்லை!

    ReplyDelete
  22. Thanks for the today's lesson, waiting for the next lession

    ReplyDelete
  23. வாத்தீ!

    வணக்கம்.

    எமக்கு மட்டும் ஆசை இல்லையா சார்.

    தாயீ !

    தமீழ் மூலம் எலுத வெண்டும் என்ற எண்ணம்.

    GOOGLE seiyum maayajaalam iyaa ?


    ????????????????????????????????

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com