மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.10.12

Astrology - Popcorn Post உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்!


Astrology - Popcorn Post உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்!

Popcorn Post No.28
பாப்கார்ன் பதிவுகள் - எண்.28


தேதி 10.10.2012 புதன் கிழமை
-----------------------------
கிரக உறவுகள்

கிரகங்களில் சில ஒன்றிற்கொன்று நட்பாக இருக்கும். அல்லது பகையாக இருக்கும் அல்லது சமம் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும். அது நன்றாக - அதாவது தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட சொல்லும் அளவிற்கு அவற்றை மனப்பாடம் செய்து வைத்திருப்பது நல்லது. ஜாதகத்தில் பலனை அலசும்போது அது உதவும்!

கிரகங்கள் உச்சம்பெற்று இருக்கும் நிலை உன்னதமானது. ஜாதகத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்

1. சூரியன் மேஷத்தில் உச்சம். அது செவ்வாயின் வீடு. நட்பு வீடு
2. புதன் கன்னியில் உச்சம். அது அவருக்கு சொந்த வீடு.
3. குரு கடகத்தில் உச்சம் அது சந்திரனின் வீடு. நட்பு வீடு
4. சனி துலாமில் உச்சம் அது சுக்கிரனின் வீடு. நட்பு வீடு
---------------------------------------------------
5. சந்திரன் ரிஷபத்தில் உச்சம். ஆனால் அது நட்பு வீடல்ல சம வீடு
6. செவ்வாய் மகரத்தில் உச்சம். அது சனியின் வீடு அது செவ்வாய்க்கு நட்பு வீடல்ல சம வீடு
7. சுக்கிரன் மீனத்தில் உச்சம் அது குருவின் வீடு. சுக்கிரனுக்கு அது நட்பு வீடல்ல சம வீடு
-----------------------------------------------------
8 & 9 ராகுவும், கேதுவும் உச்சம் பெறுவது விருச்சிகத்தில். ஆனால் அது பகை வீடு!
(பகை வீட்டில் எப்படி உச்சம் என்று யாரும் கேட்க வேண்டாம். பதில் சொல்ல அதை வகுத்தவர்கள் இன்று உயிருடன் இல்லை)
-----------------------------------------------------------
உங்கள் வசதிக்காக, கிரகங்கள் ஒன்றிற்கொன்று உள்ள உறவை அட்டவணைப் படுத்திக் கொடுத்துள்ளேன். அதை மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்





அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. காலை வணக்கம் ... உள்ளேன் ஐயா ... இது ஒரு முக்கிய பாப்கார்ன் பாடம் !!

    ReplyDelete
  2. Good Morning Sir. Thanks for the lesson. I have a doubt. If for Thanus lagnam, Saturn is in the Bhava of Thulaa but is present in Vrischiga, how do we take it? As sani with ucha characteristics in Vrischigam?

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
  4. அடிப்படை பாடத்தைத் தந்து ரிவிஷன் செய்த வாத்தியாருக்கு நன்றி.

    ReplyDelete
  5. http://www.gandhitoday.in/2012/10/blog-post.html#comment-form

    'காந்தி இன்று' என்ற மேற்கண்ட‌ வலை தளத்தில் எனது 'காந்திஜியை முதன் முதலாக மகாத்மா என்று அழைத்தது யார்?' என்ற கட்டுரை 8 அக்டோபர் 2012 அன்று பிரசுரமாகியுள்ளது.

    வகுப்பறை நண்பர்கள் வாசித்துப் பயனுற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. /////Blogger Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger eswari sekar said...
    good morning sir./////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. /////Blogger Sanjai said...
    காலை வணக்கம் ... உள்ளேன் ஐயா ... இது ஒரு முக்கிய பாப்கார்ன் பாடம் !!////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சஞ்சை!

    ReplyDelete
  9. //////Blogger Bhuvaneshwar said...
    Good Morning Sir. Thanks for the lesson. I have a doubt. If for Thanus lagnam, Saturn is in the Bhava of Thulaa but is present in Vrischiga, how do we take it? As sani with ucha characteristics in Vrischigam?/////

    உச்ச சனி விருச்சிகத்தில் எப்படித் தலைவைத்துப் படுத்திருக்கிறது? நிலைப்படியில் தலைவைத்து சிலர் படுப்பார்களே...அது போலவா? சனியின் காலகள் எங்கே துலா ராசியிலா?

    ReplyDelete
  10. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    அடிப்படை பாடத்தைத் தந்து ரிவிஷன் செய்த வாத்தியாருக்கு நன்றி./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    http://www.gandhitoday.in/2012/10/blog-post.html#comment-form
    'காந்தி இன்று' என்ற மேற்கண்ட‌ வலை தளத்தில் எனது 'காந்திஜியை முதன் முதலாக மகாத்மா என்று அழைத்தது யார்?' என்ற கட்டுரை 8 அக்டோபர் 2012 அன்று பிரசுரமாகியுள்ளது.
    வகுப்பறை நண்பர்கள் வாசித்துப் பயனுற வேண்டுகிறேன்./////

    ஆகா, அனைவரும் படித்துவிடுவார்கள்!!!!!
    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger அய்யர் said...
    வருகை பதிவு.../////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  14. /////Blogger geetha lakshmi said..
    vanakkam ayya/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. //ஆகா, அனைவரும் படித்துவிடுவார்கள்!!!!!//

    ஆறு ஆச்சரியக்குறிக‌ள்தான் ஆச்சரியப்படவைக்கின்றன.அதற்கான பொருள்
    பாதி புரிந்ததுபோல் உள்ளது.
    ஏதோ ஹாலாஸ்யம்ஜியும், தனுசுவும் மட்டுமாவது படிக்க மாட்டார்களா?
    ஆம்.படித்தேவிட்டார்கள்.பின்னூட்டமும் அங்கேயே போட்டுவிட்டார்கள்.அதற்காக அவர்களுக்கு இங்கே நன்றி கூறுகிறேன்

    தஞ்சாவூர் பெரியவர் படித்து இருந்தாலும் அடியேனுக்கு அள‌ந்துதான் அளிப்பார்.
    ஓர் ஆயுள் பரியந்தம் பழக்கம் ஆதலால் என் குறைகளை நன்கு அறிந்தவர்.

    அந்தக் கட்டுரை வகுப்பறைக்காக முன்பே எழுதி வைக்கப்பட்டது.இன்னும் சொர்கவாசல் திறக்கவில்லையே என்று அங்கே அனுப்பினேன்.

    ReplyDelete
  16. ஒரு கிரகம் உச்சமானால் அது தனக்கு விருப்பமான (அல்லது தன் குணத்திற்கு உகந்த) இடத்தில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். அது போல்தான் சாத்வீக குணமுடைய குரு சாத்வீக குணமுடைய ராசியான கடகத்தில் உச்சமடைகிறார். தாமச குணமுடைய செவ்வாய் தாமச குணமுடைய மகரத்தில் உச்சமடைகிறார். தம் குணத்திற்கு நேர்மாறான ராசியில் நீசமடைகிறார்கள். இதுபோல்தான் மற்ற கிரகங்களும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com