மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.10.12

Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா? பகுதி 2

Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா? பகுதி 2

22.10.2012 அன்று எழுதிய பாடத்தின் தொடர்ச்சி

ஜோதிடம் கற்றுக் கொள்பவர்களுக்கு முதன் முதலில் சொல்லித்தரும் பாடம் இதுதான்:

ஜோதிடர், ஜாதகத்தைப் பார்த்து இப்படி நடக்கலாம் என்று மட்டுமே சொல்ல வேண்டும் (He only can indicate what will take place) எந்தப் பலனையும் அறுதியிட்டு இப்படித்தான் நடக்கும் என்று சொல்லக் கூடாது. (He should not certainly say what will  happen)

அதைச் சொல்வதற்கும் அல்லது அதை நடத்திக் காட்டுவதற்கும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நம்மைப் படைத்தவர். இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அந்த சக்தி கிடையாது. ஜாதகத்தைப் பார்த்து 70 அல்லது 75 சதவிகித்மதான் என்ன நடக்கலாம் என்று சொல்லலாம். பூர்வ புண்ணியத்தின் பலனைக் கணிக்கும் அல்லது கணிக்கும் சக்தி யாருக்கும் கிடையாது.

விதியை அல்லது விதிக்கப் பெற்றதைத் த்டுத்து நிறுத்த முடியுமா? யாராலும் முடியாது. விதியை விட வலிமையானது ஒன்றும் கிடையாது. Nothing is stronger than destiny அதனால் தான் பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களில் சில ஊற்றிக்கொண்டு விடுகின்றன. ஜோதிடரை எப்படிக் குறை சொல்ல முடியும்? அவரின் வாக்கையும் மீறி அது நடந்திருக்கும்!

கணவனைப் பிரிந்து வாழ வேண்டும் என்பது அவளுடைய விதி என்றால், அவளுக்குத் திருமணம் நடக்கும். ஆனால் விதி அவளைப் பிரித்துக்கொண்டு வந்து விடும். செல்வம் தொலைந்து போக வேண்டும் என்றால், எவ்வளவுதான் வேலி போட்டுக் காப்பாற்றினாலும், அது தொலைந்து போகும். நிலைக்காது.

பூர்வ புண்ணியத்தால் நடக்க வேண்டிய நல்லது நடக்கும். கெட வேண்டியது கெடும்!

அதனால்தான் சில சமயம் ஜோதிடர் சொல்வது நடக்காமல் பொய்த்துப் போய் விடுகிறது!.

மகேந்திரப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துவைத்த சில தம்பதியருக்கு குழந்தை இல்லாமல் போய்விடும். மகேந்திரப் பொருத்தம் இல்லாத தம்பதியர் சிலருக்கு திருமணமான அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும். இதெல்லாம் ஜோதிட வினோதங்கள்

எத்தனைதான் ஜாதகம் பார்த்து, அதன்படி நடந்தாலும், அல்லது எச்சரிக்கையாக இருந்தாலும் வருவதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?

திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"

---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப் பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸி காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.

ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம். சேர்க்கும் பாக்கியம் உள்ளவன் சேர்ப்பதில்தான் முனைப்பாக இருப்பான். மற்றது எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டான்.

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"

...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient to avert it, It will itself be with us (before the thought)

"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"

...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான். அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power! தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.

ஆகவே வரும் எந்தத் துன்பத்தையும் விட தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்!

ஆகவே ஜாதகத்தை முழுமையாக நம்பி குழம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள். அவரை வணங்குங்கள். அவர் உங்களுக்கு, உங்களின் நல்ல மனதிற்குத் துணையாக வருவார்

ஜாதகத்தில் நல்ல தசா புத்தி வருகிறது. நன்மை செய்யும் கோள்சாரக் காலம் வருகிறது என்றால், அதற்க்காக அதிக சந்தோஷப் படவும் வேண்டாம், அதுபோல நேரம் சரியில்லை என்று தெரிந்தால், அதற்காக பயந்து போகவும் வேண்டாம்.

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இரண்டையும் சமமாக எடுத்துக்கொண்டால், எந்தப் பிரச்சினையும் அல்லது எந்த வருத்தமும் உங்களை அனுகாது.

இதை வலியுறுத்திதான், “இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி” என்று கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் ஒன்றின் சரணத்தில் எழுதினார்

ஆகவே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அல்லது ஜோதிடரை சந்தித்து உங்கள் பிரச்சினையைச் சொல்லி, அதற்கான தீர்வைக் கேளுங்கள். என்னுடைய எதிர்காலம் (Future) எப்படி இருக்கும் என்று ஒற்றை வரியில் கேட்காதீர்கள்

1.வேலை இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? என்க்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கேளுங்கள்
2.திருமணம் தள்ளிக்கொண்டே போகிறதா? எப்போது திருமணம் நடக்கும் என்று கேளுங்கள்.
3.கடனில் மூழ்கி அவதிப்படுகிறீர்களா? எப்போது கடன் தீரும் என்று கேளுங்கள்
4.குழந்தை இல்லாத கவலையா? எப்போது குழந்தை பிறக்கும் என்று கேளுங்கள்
5.மகனுக்கு படிப்பு ஏறவில்லையா? படிப்பானா? மாட்டானா? என்று கேளுங்கள்
6.வாடகை வீட்டில் அவதிப் படுகிறீகளா? வீடு வாங்கும் பாக்கியம் இருக்கிறதா என்று கேளுங்கள்.
7. மேல் படிப்பு படிக்கும் ஆசை இருக்கிறதா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று கேளுங்கள்
8. வெளிநாட்டில் சென்று வேலை செய்து, பொருள் ஈட்டும் எண்ணம் இருக்கிறதா? அதற்கான வாய்ப்பு உள்ளதா என்று கேளுங்கள்
9. வெளி நாட்டில் இருந்தது போதும். சொந்த மண்ணிற்குத் திருப்ப வேண்டும் என்ற எண்ணம இருக்கிறதா? அதற்கான நேரம் எப்போது வரும் என்று கேளுங்கள்
10. நோயால அவதிப்படுகிறீர்களா? நோய் நொடிகள் எப்போது தீரும் என்று கேளுங்கள்.

இப்படிspecific ஆகக் கேளுங்கள். ஜோதிடத்தில் ஞானம் உள்ள ஜோதிடர், இதற்கான பதில்க்ளைச் சொல்லி உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவார். நிமமதியை ஏற்படுத்துவார்.

உங்களுக்கு ராகு திசை அல்லது சனி திசை அல்லது 12ஆம் இடத்தின் திசை நடக்கிறது அது இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிவிற்கு வரும். அதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல காலம் என்று அவர் சொன்னால், அந்த மூன்று ஆண்டுகளை சகித்துக்கொண்டு நிம்மதியோடு அல்லது சந்தோஷத்துடன் இருப்பீர்கள் அல்லவா? அதுதான், அந்த நிம்மதிதான் ஜோதிடத்தின் மூலம் கிடைக்ககூடியது ஆகும்!!!

1. வீட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தை இருக்கிறது. அதன் எதிர்காலம் என்ன?
2. என் பையன் சின்ன வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அவன் திரும்ப வ்ருவானா? அல்லது மாட்டானா?

என்பது போன்ற சிக்கலான கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அதெல்லாம் கர்ம வினையால் வருவது. அத்ற்கெல்லாம் சரியான பதில் கிடைக்காது
------------------------------------------------------------------------------------------------
எது எப்ப்டியோ போகட்டும். நீங்கள் எதற்கும் கவலைப் படாத மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  Take it easy என்று எதையும் எடுத்துக்கொண்டு எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள். அதுதான் இந்த நீண்ட கட்டுரையின் நோக்கம்!

வாழ்க்கை குறுகியது.
நிலை இல்லாதது

சித்தர் பாடல்கள் பல அவற்றைத்தான் வலியுறுத்துகின்றன

உங்களுக்காக் பட்டினத்தார் எழுதிய பாடல் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்:

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே!

சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது
சதமல்ல என்றால் நிலையில்லாதது என்று பொருள் .

ஊரும் சதம் அல்ல - உடம்பே சொந்தமில்லை. அது வாடகை வீடு. ஊர் எப்படி சொந்தமாகும்?
உற்றார் சதம் அல்ல - அவனவனுக்கு அவன் குடும்பம மற்றும் அவனுடைய பிரச்சினைகளே பெரியது. நம்மைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஏது?
உற்று பெற்ற பேரும் சதம் அல்ல - பேரும் புகழும் நிரந்தரம் இல்லை.
பெண்டீர் சதம் அல்ல - மனைவி நிரந்தரமல்ல
பிள்ளைகளும் சதம் அல்ல, திரும்ணமானவுடன் தங்கள் வாழ்க்கையைப் பார்க்க அவர்கள் போய் விடுவார்கள்
சீரும் சதம் அல்ல - சொத்துக்கள் எல்லாம் நிரந்தரம் அல்ல.
செல்வம் சதம் அல்ல - செல்வம் எப்போது வேண்டு மென்றாலும் நம்மைவிட்டுப்போகும். அல்லது அதைவிட்டு நாம் போவோம்
தேசத்திலே யாரும் சதம் அல்ல - நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று எவரும் நிரந்தரமில்லை
நின் தாள் (இறைவனின் பாதங்கள்) சதம் - உன் திருவடிகள் மட்டுமே நிரந்தரமானது காஞ்சி மாநகரில் உறையும் ஏகாம்பரேஸ்வரனே!!!!!!!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

45 comments:

  1. மிக அழகான கருத்துரைகள்
    நன்றி !!

    ReplyDelete
  2. அருமையான கருத்துக் குவியலோடு வந்ததொரு பதிவு...

    வரும் துயரங்கள் நமது பாவத்தை செலவழிக்கின்றன...
    அப்படி பார்ப்பின் அதுவும் நல்ல விஷயம் தானே!

    எந்த துயரத்திலும் அதை சமாளிக்க அவசரப் பட்டு
    மீண்டும் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியமானது.

    ////ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power!
    தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.ஆகவே வரும் எந்தத் துன்பத்தையும் விட தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்!
    ஆகவே ஜாதகத்தை முழுமையாக நம்பி குழம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள்.
    அவரை வணங்குங்கள். அவர் உங்களுக்கு, உங்களின் நல்ல மனதிற்குத் துணையாக வருவார்///

    ''எப்பொழுதும் கவலையிலே இணங்கி இருப்பான் பாவி
    யொப்பி யுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்....''

    என்பான் மகாகவி. துயரத்தில் மூழ்காது இருக்க தாமரை இலைத் தண்ணீர் போல... என்பார் வாலி...
    அப்படி இருக்க இந்த பக்தி பேருதவி செய்கிறது. தெய்வ சிந்தனையால் அதனருளால் த்னபத்தை வெல்லலாம்.

    அருமையானப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. Dear Guruji,
    well said.Beautiful explanation of life.
    Yours sincerely,
    K.Umapathy

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்,
    மிகவும் அருமையான கருத்துகள்
    அற்புதம் குருவே,
    நன்றி

    ReplyDelete
  5. மிகஅருமையாக தொகுத்து அளிக்கபட்ட கருத்துக்கள் .
    ஆனால் , அவரவர்க்கு என்று பிரச்சனை வரும் போது இவை எல்லாமே
    மறந்து போகிறது .
    மற்றவற்களுக்கு சமாதானம் சொல்வதற்கு மிக எளிமையாக உள்ளது.
    அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி .

    ReplyDelete

  6. மதிப்பிற்கு உரிய ஐயா,

    நல்ல பதிவு. தங்களை பாராட்டும் தகுதிகள் எனக்கு இல்லை. உங்கள் உயரத்துக்கு ஏணி வைத்தாலும் இந்த இழிமகனுக்கு எட்டாது. ஏதோ உங்கள் பதிவுகளை படிக்கும் பாக்யமாவது இறைவன் எனக்கு தந்துள்ளான். அது குறித்து அவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.

    தாங்கள் கூறுவது மறுதலிக்க இயலாத உண்மை. நேரம் காலம் கெட்டால் புத்தி கெட்டுப்போகும் என தமிழிலும் விநாச காலே விபரீத புத்தி என்று ஆரியத்திலும் சொல்லுவது இதைத்தான். ரொம்ப நாள் வாழவில்லை என்றாலும் எனது வாழ்க்கையில் இயல்புக்கு மாறாக நான் புத்தி கெட்டு செய்த சில காரியங்களும் அதன் விளைவுகளும் அதன் பின் மீண்டும் இயல்புக்கு வந்து நாமா இப்படி செய்தோம் என நினைக்கும் நிலையம் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

    எப்படியாம்பட்ட கொம்பனையும் விதி தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தும். மூடனை அரசனாக்கும். மறுப்பதற்கில்லை. செவிட்டில் அறைந்தாற்போல ஒவ்வொரு வரியும் உள்ளது.

    "ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
    சுழினும் தான்முந்நுறும்"
    ...குறள் எண். 380

    விதியை மதியால் வெல்லலாம் என சொல்பவர்கள் கவனிக்க வேண்டியது இது. ரொம்ப கெட்டிக்காரத்தனமாக விதியை வெல்கிறேன் பேர்வழி என நீ செய்வதையே, தனக்கு உபாயமாக வைத்துக்கொண்டு விதி முந்திக்கொண்டு நிற்கும் என்பது.

    உதாரணமாக ஹிட்லர். அவன் நினைத்திருந்தால் உலகையே கைப்பற்றி இருக்கலாம். வெறும் மிரட்டளிலேயே அனைவரையும் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த அவன், ஆணவத்தால், பிரிட்டனை படையெடுக்காமல் ரஷ்யா மீது படைஎடுத்தான். பனிக்காலத்தில் வேண்டாம் என தளபதிகள் சொல்லியும் கேளாது போனான். இது "விநாச காலே விபரீத புத்தி" தானே? அவன் நினைத்தான் நான் ரஷ்யாவை பிடித்து சக்கரவர்த்தியாவேன் என்று. அங்கே தான் அவனுக்கு குழி பறிக்கபடுகிறது என்று விதி சிரித்தது;

    பகவான் ராமகிருஷ்ணர் சொல்வார், "விதி தானே ஒரு கழியை எடுத்துக்கொண்டு வந்து ஒருத்தன் மண்டையை உடைப்பதில்லை. அவனையே தவறான செயல்களை செய்ய விட்டு, அதன் மூலமாகவே அவனை குழியில் தள்ளுகிறது" என்று.

    இன்னொரு உதாரணம் கள்ளியங்காட்டு நீலி கதை. எல்லாரும் "கள்ளியங்காட்டுப்பக்கம் போகதே, உனக்கு அங்கே தான் ஆபத்து" என தடுத்தும், அது வரை ஜாக்கிரதையாக இருந்தவன் மதி கெட்டு மந்திரித்த கத்தி உள்ள தைரியத்தில் போகவில்லையா? அவன் ஆயுள் அப்படி தான் முடிய வேண்டும் என விதி இருந்தது. அவன் விதி அவனையே கருவியாக்கி மதி கெட வைத்து வேலையை செய்தது.

    சிலம்பை விற்க புகாரில் இடமே இல்லையா? மான உணர்ச்சியை கருவியாக கொண்டு மதுரைக்கு போக வைத்து, சம்பந்தமே இல்லாமல் ஒரு பொற்கொல்லனை சந்திக்க வைத்து கோவலனை விதி முடிக்கவில்லையா?

    "பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை"
    ...குறள் எண்.372

    தங்கள் உரையையே கொடுக்கிறேன்.......

    பொருள் போவதற்கு அல்லது காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்! உண்மை தான்!

    இது நம்முடைய ஊழ்வினையாக இருக்கும் போது ஜோதிடரையும் ஜோதிடத்தையும் நோவது பேதைமை. இறைவனை சரணாகதி பண்ணுவது தான் ஒரே வழி. தலைக்கு வருவது தலைப்பாகையோடாவது கழியும். அதனால் தான் சரணாகதி அதனை கஷ்டமானது. மனித இயற்கை தலை எடுத்து படுத்தும். கொஞ்சம் கொஞ்சமாக போராடி அந்த மனசை அடக்க முயற்சி பண்ணுவதும், மன்றாடியை மன்றாடுவதை விட நமக்கு வழி உண்டோ?

    சரண் அடைவதால் கிடைக்கும் நன்மை பெரிது. சாந்தி பெரிது. அதனால் தான் சராசரி மனுஷ மனம் முழு சரணாகதியை சில நிமிஷங்களுக்கு மேலே பண்ண முடிவதில்லை!

    முருகனருள் நிரம்பிய உங்களைப்போன்ற பெரியவர்களின் பதிவுகளை படிக்கும் பேற்றையாவது, எனது ஆயுஸ் முடிவதற்குள் இறைவன் கொடுத்தமைக்கு அவனுக்கு எனது நன்றிகள்.

    வணக்கங்களுடன்
    புவனேஷ்.

    ReplyDelete
  7. மிக அற்புதமான பதிவு.

    //மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்!//

    //ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power! தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.//

    மிக அருமையான வரிகள். மிக்க நன்றி.

    ReplyDelete
  8. இதோ..... குறட்களால் பதிவை நிரப்பினீர்கள்..... மாணவன் வாத்தியார் வழி செல்லணும் இல்லையா? இதோ...... நானும் நீங்கள் சொன்னதை மாணவனாக பின்பற்றி மற்றொரு குறள் வெண்பாவினால் அவனையே அழைக்கிறேன்..........

    ஆதியஞ் சோதியா மாலமர் தெய்வமே
    வழித்துணை யாகிநீ வா!

    ஆதி அம் ஜோதியாம் ஆலமர் தெய்வமே = ஆதியில் (அனைத்துக்கும் உள் ஆதாரமாக உள்ள), ஆலமரத்தின் கீழே அமர்ந்த, அழகிய ஆத்ம ஸ்வரூபமான சிவபெருமானே, நீயே இனி வழித்துணையாக வருவாய், வா! (முன்னம் ஓர் ஆலின் கீழ் நால்வர்க்கு அறம் உரைத்த....... பாடல் நினைவுக்கு வருகிறது)

    அவனருளாலே அவன் தாள் பணிந்து.......
    புவனேஷ்

    ReplyDelete
  9. விதி பற்றிய தங்கள் பதிவில்
    விசு அய்யர் மாறு படுகிறார்

    நாளும் கோளும் அடியார்களுக்கு
    நன்மையே செய்யும் என

    சாத்திரமும் அன்றாடம் துதிபாடும்
    தோத்திரமும் சொல்கிறது வாத்தி(யாரே)

    ஊழ் பெரிது என சொல்லும் வள்ளுவம்
    ஊழை வெல்ல முடியாது என சொல்வில்லை

    மெய்கண்ட சாத்திரம் 14ல்
    மெய்சிலிர்க்க சொல்லும் மூல மந்திரமும்

    உண்மையை பறை சாற்றுகின்றன.
    உலகியலில் அவை மறைக்கப்படுகிறது

    விவாதம் வேண்டாமென
    விடுகிறோம் அமைதியுடனே..

    இத்துடன்
    ஒருவர் எப்போது சோதிடம் கேட்க்க
    ஒரு சோதிடரிடம் போவார் என்ற

    குறிப்பினையும் தந்து விட்டால்
    குளிர்ச்சியாக இருக்குமே..

    ReplyDelete
  10. அனைவரும் வளமோடு நலம் பெற
    அன்பு வாழ்த்து சொல்லி

    "சென்று வருகிறோம்"

    வகுப்பறை தோழர்களுக்கு
    வாழ்த்துக்கள் ஈத் பண்டிகைக்கு..

    வாழ்த்துக் கவிதை ஒன்றினை
    வழக்கம் போல் சிங்கையார் அருளுவார்

    ReplyDelete
  11. பக்ரீத் வாழ்த்துக்கள்
    குறிப்பாக நம் வகுப்பறை தோழர்

    மொழி மாற்ற பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும்
    தோழி தேமொழி அவர்களுக்கும்

    சுறுக்கென பல செய்தியுடன் பதிவிடும்
    சப்பான் தோழர் மைனருக்கும்

    நெல்லை பெரியவர் அவர்களுக்கும்
    தொடர்ந்து பின்ஊட்டமிடும் அன்புள்ளங்களுக்கும்
    அவர்தம் அன்பு நெஞ்சங்களுக்கும்..

    மீண்டும் ஒரு முறை வாழ்த்து சொல்கிறோம்

    ReplyDelete
  12. வாழ்க்கை குறுகியது நிலை இல்லாதது அதில் 'தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்" அருமையான தலைப்பு -பதிவு.

    மதியம் சாப்பிடலாம் என்றுதான் காலையில் சமைக்கிறோம். பெருநாளுக்கு உடுத்தலாம் என்று தான் இன்று புது துணி எடுக்கிறோம் . இவை யாவும் நம்பிக்கையில். இதே நம்பிக்கை கஷ்டம் வரும் பொது "இதுவும் கடந்து போகும்" என்ற மன நிலையில் இருந்தால் எல்லாம் முடியும் .ஆனால் இந்த மன நிலை இளமையில் வர பக்குவப்பட வேண்டி உள்ளது .

    வள்ளுவன். கண்ணதாசன் , பட்டினத்தார் ஆகியோரின் உதாரணங்களுடன் இன்று வாத்தியார் எடுத்திருக்கும் பாடம் தன் மாணவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவரின் மன நிலையையோ?

    நல்லதொரு மனப்பயிற்சி கிடைத்திருக்கிறது இன்று .நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  13. ////Blogger sridhar said...
    மிக அழகான கருத்துரைகள்
    நன்றி !!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger ஸ்கூல் பையன் said...
    அருமை.../////

    ஒரு வார்த்தையில் அருமை என்று சொல்லிப் பாராட்டியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. Blogger ஜி ஆலாசியம் said...
    அருமையான கருத்துக் குவியலோடு வந்ததொரு பதிவு...
    வரும் துயரங்கள் நமது பாவத்தை செலவழிக்கின்றன...
    அப்படி பார்ப்பின் அதுவும் நல்ல விஷயம் தானே!
    எந்த துயரத்திலும் அதை சமாளிக்க அவசரப் பட்டு
    மீண்டும் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியமானது.
    ////ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power!
    தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.ஆகவே வரும் எந்தத் துன்பத்தையும் விட தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்!
    ஆகவே ஜாதகத்தை முழுமையாக நம்பி குழம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள்.
    அவரை வணங்குங்கள். அவர் உங்களுக்கு, உங்களின் நல்ல மனதிற்குத் துணையாக வருவார்///
    ''எப்பொழுதும் கவலையிலே இணங்கி இருப்பான் பாவி
    யொப்பி யுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்....''
    என்பான் மகாகவி. துயரத்தில் மூழ்காது இருக்க தாமரை இலைத் தண்ணீர் போல... என்பார் வாலி...
    அப்படி இருக்க இந்த பக்தி பேருதவி செய்கிறது. தெய்வ சிந்தனையால் அதனருளால் த்னபத்தை வெல்லலாம்.
    அருமையானப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. /////Blogger k.umapathy said...
    Dear Guruji,
    well said.Beautiful explanation of life.
    Yours sincerely,
    K.Umapathy////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger KJ said...
    Excellent message. Thanks sir.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    மிகவும் அருமையான கருத்துகள்
    அற்புதம் குருவே,
    நன்றி////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. ///Blogger rajanblogs said...
    மிகஅருமையாக தொகுத்து அளிக்கபட்ட கருத்துக்கள் .
    ஆனால் , அவரவர்க்கு என்று பிரச்சனை வரும் போது இவை எல்லாமே
    மறந்து போகிறது .
    மற்றவற்களுக்கு சமாதானம் சொல்வதற்கு மிக எளிமையாக உள்ளது.
    அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி .////

    உண்மைதான்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ///Blogger Bhuvaneshwar said...
    Good Morning Sir!////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete

  21. ////Blogger Bhuvaneshwar said...
    மதிப்பிற்கு உரிய ஐயா,
    நல்ல பதிவு. தங்களை பாராட்டும் தகுதிகள் எனக்கு இல்லை. உங்கள் உயரத்துக்கு ஏணி வைத்தாலும் இந்த இழிமகனுக்கு எட்டாது. ஏதோ உங்கள் பதிவுகளை படிக்கும் பாக்யமாவது இறைவன் எனக்கு தந்துள்ளான். அது குறித்து அவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.
    தாங்கள் கூறுவது மறுதலிக்க இயலாத உண்மை. நேரம் காலம் கெட்டால் புத்தி கெட்டுப்போகும் என தமிழிலும் விநாச காலே விபரீத புத்தி என்று ஆரியத்திலும் சொல்லுவது இதைத்தான். ரொம்ப நாள் வாழவில்லை என்றாலும் எனது வாழ்க்கையில் இயல்புக்கு மாறாக நான் புத்தி கெட்டு செய்த சில காரியங்களும் அதன் விளைவுகளும் அதன் பின் மீண்டும் இயல்புக்கு வந்து நாமா இப்படி செய்தோம் என நினைக்கும் நிலையம் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன.
    எப்படியாம்பட்ட கொம்பனையும் விதி தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தும். மூடனை அரசனாக்கும். மறுப்பதற்கில்லை. செவிட்டில் அறைந்தாற்போல ஒவ்வொரு வரியும் உள்ளது.
    "ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
    சுழினும் தான்முந்நுறும்"
    ...குறள் எண். 380
    விதியை மதியால் வெல்லலாம் என சொல்பவர்கள் கவனிக்க வேண்டியது இது. ரொம்ப கெட்டிக்காரத்தனமாக விதியை வெல்கிறேன் பேர்வழி என நீ செய்வதையே, தனக்கு உபாயமாக வைத்துக்கொண்டு விதி முந்திக்கொண்டு நிற்கும் என்பது.
    உதாரணமாக ஹிட்லர். அவன் நினைத்திருந்தால் உலகையே கைப்பற்றி இருக்கலாம். வெறும் மிரட்டளிலேயே அனைவரையும் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த அவன், ஆணவத்தால், பிரிட்டனை படையெடுக்காமல் ரஷ்யா மீது படைஎடுத்தான். பனிக்காலத்தில் வேண்டாம் என தளபதிகள் சொல்லியும் கேளாது போனான். இது "விநாச காலே விபரீத புத்தி" தானே? அவன் நினைத்தான் நான் ரஷ்யாவை பிடித்து சக்கரவர்த்தியாவேன் என்று. அங்கே தான் அவனுக்கு குழி பறிக்கபடுகிறது என்று விதி சிரித்தது;
    பகவான் ராமகிருஷ்ணர் சொல்வார், "விதி தானே ஒரு கழியை எடுத்துக்கொண்டு வந்து ஒருத்தன் மண்டையை உடைப்பதில்லை. அவனையே தவறான செயல்களை செய்ய விட்டு, அதன் மூலமாகவே அவனை குழியில் தள்ளுகிறது" என்று.
    இன்னொரு உதாரணம் கள்ளியங்காட்டு நீலி கதை. எல்லாரும் "கள்ளியங்காட்டுப்பக்கம் போகதே, உனக்கு அங்கே தான் ஆபத்து" என தடுத்தும், அது வரை ஜாக்கிரதையாக இருந்தவன் மதி கெட்டு மந்திரித்த கத்தி உள்ள தைரியத்தில் போகவில்லையா? அவன் ஆயுள் அப்படி தான் முடிய வேண்டும் என விதி இருந்தது. அவன் விதி அவனையே கருவியாக்கி மதி கெட வைத்து வேலையை செய்தது.
    சிலம்பை விற்க புகாரில் இடமே இல்லையா? மான உணர்ச்சியை கருவியாக கொண்டு மதுரைக்கு போக வைத்து, சம்பந்தமே இல்லாமல் ஒரு பொற்கொல்லனை சந்திக்க வைத்து கோவலனை விதி முடிக்கவில்லையா?
    "பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை"
    ...குறள் எண்.372
    தங்கள் உரையையே கொடுக்கிறேன்.....
    பொருள் போவதற்கு அல்லது காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்! உண்மை தான்!
    இது நம்முடைய ஊழ்வினையாக இருக்கும் போது ஜோதிடரையும் ஜோதிடத்தையும் நோவது பேதைமை. இறைவனை சரணாகதி பண்ணுவது தான் ஒரே வழி. தலைக்கு வருவது தலைப்பாகையோடாவது கழியும். அதனால் தான் சரணாகதி அதனை கஷ்டமானது. மனித இயற்கை தலை எடுத்து படுத்தும். கொஞ்சம் கொஞ்சமாக போராடி அந்த மனசை அடக்க முயற்சி பண்ணுவதும், மன்றாடியை மன்றாடுவதை விட நமக்கு வழி உண்டோ?
    சரண் அடைவதால் கிடைக்கும் நன்மை பெரிது. சாந்தி பெரிது. அதனால் தான் சராசரி மனுஷ மனம் முழு சரணாகதியை சில நிமிஷங்களுக்கு மேலே பண்ண முடிவதில்லை!
    முருகனருள் நிரம்பிய உங்களைப்போன்ற பெரியவர்களின் பதிவுகளை படிக்கும் பேற்றையாவது, எனது ஆயுஸ் முடிவதற்குள் இறைவன் கொடுத்தமைக்கு அவனுக்கு எனது நன்றிகள்.
    வணக்கங்களுடன்
    புவனேஷ்.////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி புவனேஷ்வரன்!!!

    ReplyDelete
  22. ///Blogger Parvathy Ramachandran said...
    மிக அற்புதமான பதிவு.
    //மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்!//
    //ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power! தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.//
    மிக அருமையான வரிகள். மிக்க நன்றி.////

    உங்களின் மனமுவந்த பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. ////Blogger Bhuvaneshwar said...
    இதோ..... குறட்களால் பதிவை நிரப்பினீர்கள்..... மாணவன் வாத்தியார் வழி செல்லணும் இல்லையா? இதோ...... நானும் நீங்கள் சொன்னதை மாணவனாக பின்பற்றி மற்றொரு குறள் வெண்பாவினால் அவனையே அழைக்கிறேன்........
    ஆதியஞ் சோதியா மாலமர் தெய்வமே
    வழித்துணை யாகிநீ வா!
    ஆதி அம் ஜோதியாம் ஆலமர் தெய்வமே = ஆதியில் (அனைத்துக்கும் உள் ஆதாரமாக உள்ள), ஆலமரத்தின் கீழே அமர்ந்த, அழகிய ஆத்ம ஸ்வரூபமான சிவபெருமானே, நீயே இனி வழித்துணையாக வருவாய், வா! (முன்னம் ஓர் ஆலின் கீழ் நால்வர்க்கு அறம் உரைத்த....... பாடல் நினைவுக்கு வருகிறது)
    அவனருளாலே அவன் தாள் பணிந்து.......
    புவனேஷ்/////

    அவன்தாள் பணிந்து ஒரு குறளைச் சொன்ன மேன்மைக்கு நன்றி புவனேஷ்வரன்!!!!

    ReplyDelete
  24. ////Blogger அய்யர் said...
    விதி பற்றிய தங்கள் பதிவில்
    விசு அய்யர் மாறு படுகிறார்
    நாளும் கோளும் அடியார்களுக்கு
    நன்மையே செய்யும் என
    சாத்திரமும் அன்றாடம் துதிபாடும்
    தோத்திரமும் சொல்கிறது வாத்தி(யாரே)
    ஊழ் பெரிது என சொல்லும் வள்ளுவம்
    ஊழை வெல்ல முடியாது என சொல்வில்லை
    மெய்கண்ட சாத்திரம் 14ல்
    மெய்சிலிர்க்க சொல்லும் மூல மந்திரமும்
    உண்மையை பறை சாற்றுகின்றன.
    உலகியலில் அவை மறைக்கப்படுகிறது
    விவாதம் வேண்டாமென
    விடுகிறோம் அமைதியுடனே..
    இத்துடன்
    ஒருவர் எப்போது சோதிடம் கேட்க்க
    ஒரு சோதிடரிடம் போவார் என்ற
    குறிப்பினையும் தந்து விட்டால்
    குளிர்ச்சியாக இருக்குமே..///

    நீங்கள் மாறுபடுவதுதான் தெரிந்தவிஷயம் ஆயிற்றே!
    மாறுபடாவிட்டால்தான் நான் வருத்தம் அடைவேன் விசுவநாதன்.!

    ReplyDelete
  25. ////Blogger அய்யர் said...
    அனைவரும் வளமோடு நலம் பெற
    அன்பு வாழ்த்து சொல்லி
    "சென்று வருகிறோம்"
    வகுப்பறை தோழர்களுக்கு
    வாழ்த்துக்கள் ஈத் பண்டிகைக்கு..
    வாழ்த்துக் கவிதை ஒன்றினை
    வழக்கம் போல் சிங்கையார் அருளுவார்////

    உங்கள் கைலாயப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! எங்களுக்கும் சேர்த்து ஈசனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்!!!

    ReplyDelete
  26. ////Blogger அய்யர் said...
    பக்ரீத் வாழ்த்துக்கள்
    குறிப்பாக நம் வகுப்பறை தோழர்
    மொழி மாற்ற பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும்
    தோழி தேமொழி அவர்களுக்கும்
    சுறுக்கென பல செய்தியுடன் பதிவிடும்
    சப்பான் தோழர் மைனருக்கும்
    நெல்லை பெரியவர் அவர்களுக்கும்
    தொடர்ந்து பின்ஊட்டமிடும் அன்புள்ளங்களுக்கும்
    அவர்தம் அன்பு நெஞ்சங்களுக்கும்..
    மீண்டும் ஒரு முறை வாழ்த்து சொல்கிறோம்////

    உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் முக்கியமான ஒருவரை விட்டுவிட்டீர்களே சுவாமி!

    ReplyDelete
  27. ///Blogger thanusu said...
    வாழ்க்கை குறுகியது நிலை இல்லாதது அதில் 'தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்" அருமையான தலைப்பு -பதிவு.
    மதியம் சாப்பிடலாம் என்றுதான் காலையில் சமைக்கிறோம். பெருநாளுக்கு உடுத்தலாம் என்று தான் இன்று புது துணி எடுக்கிறோம் . இவை யாவும் நம்பிக்கையில். இதே நம்பிக்கை கஷ்டம் வரும் பொது "இதுவும் கடந்து போகும்" என்ற மன நிலையில் இருந்தால் எல்லாம் முடியும் .ஆனால் இந்த மன நிலை இளமையில் வர பக்குவப்பட வேண்டி உள்ளது .
    வள்ளுவன். கண்ணதாசன் , பட்டினத்தார் ஆகியோரின் உதாரணங்களுடன் இன்று வாத்தியார் எடுத்திருக்கும் பாடம் தன் மாணவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவரின் மன நிலையையோ?
    நல்லதொரு மனப்பயிற்சி கிடைத்திருக்கிறது இன்று .நன்றிகள் அய்யா./////

    மனப்பயிற்சி கிடைத்திருக்கிறது என்று மேன்மையுடன் சொல்லிப் பாராட்டியமைக்கு நன்றி தனுசு!!

    ReplyDelete
  28. ////Blogger eswari sekar said...
    vanakam sir////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  29. அய்யா தங்களது பதிவை கடந்த அயிந்து ஆண்டுகளாக தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரை எனது கருத்தை தெரிவித்ததில்லை. வொவ்வொரு பதிவும் மிக அருமையாக உள்ளது. இன்றைய பதிவு எனது மனதை தொட்டது. அகவை அறுபதை கடந்த நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை விட இளையவர் என்றே எண்ணுகின்றேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இந்த பணியை தொடர்ந்து செய்ய இறைவனை வேண்டுகின்றேன்,தமிழில் எனது முதல் பதிவு பிழை இருப்பின் மன்னிக்கவும்

    ReplyDelete
  30. NEENDA NATKALAGA UNGAL PAADANGALAI PADITHUKKONDU VARUGIREN. MIGAVUM ARUMAIYAGA ULLATHU. INDRUTHAAN UNGAL BLOGGER-IL INAINTHULLEN. MIGAVUM SANTHOSHAMAGA ULLATHU.

    ReplyDelete
  31. Ivaai anvarugum trintirnthum yarrugum mannam paguvapadavillyae

    ReplyDelete
  32. /////Blogger chandramohan said...
    அய்யா தங்களது பதிவை கடந்த அயிந்து ஆண்டுகளாக தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரை எனது கருத்தை தெரிவித்ததில்லை. வொவ்வொரு பதிவும் மிக அருமையாக உள்ளது. இன்றைய பதிவு எனது மனதை தொட்டது. அகவை அறுபதை கடந்த நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை விட இளையவர் என்றே எண்ணுகின்றேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இந்த பணியை தொடர்ந்து செய்ய இறைவனை வேண்டுகின்றேன்,தமிழில் எனது முதல் பதிவு பிழை இருப்பின் மன்னிக்கவும்////

    உங்களின் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும், உங்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. ////Blogger Muthukrishnan Prakash said...
    NEENDA NATKALAGA UNGAL PAADANGALAI PADITHUKKONDU VARUGIREN. MIGAVUM ARUMAIYAGA ULLATHU. INDRUTHAAN UNGAL BLOGGER-IL INAINTHULLEN. MIGAVUM SANTHOSHAMAGA ULLATHU./////

    நல்லது. உங்கள் இணைப்பு நல் இணைப்பாக இருக்கட்டும். தொடர்ந்து படியுங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. /////Blogger krishnababuvasudevan said...
    Ivaai anvarugum trintirnthum yarrugum mannam paguvapadavillyae/////

    இவை அனைவருக்கும் தெரிந்தும், யாருக்கும் மனப் பக்குவப் படவில்லையே என்கிறீர்களா?
    அதெல்லாம், ஒரு நாள் நடக்கும், ஒரு மணித்துளி நேரமாவது, வாழ்ந்த வாழ்க்கையை சிந்தித்துப் பார்ப்பார்கள். அந்த நிமிடத்தில் மனம் பக்குவப்ப்டும்
    கூடிவரும் கூட்டம் கொள்ளி வரை வராது என்பதை, கவியரசர் எழுதிய வரிகளின் அர்த்தத்தை அப்போது உணர்வார்கள். அப்படி உணரவைக்காமல் சனீஷ்வரன் யாருக்கும் போர்டிங் பாஸைத் தரமாட்டான் - மேலே போவதற்கு!!!!!

    ReplyDelete
  35. ////Blogger john said...
    Very nice sir...
    Regards,
    John////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. மிக நல்ல பதிவு, மனதிற்கு பாரம் குறைந்தது போல் ஆனது. மிக்க நன்றி ஐயா.

    கருவூர் முருகன்

    ReplyDelete

  37. கருத்துக்கள் நிறைந்த

    பதிவு.
    நன்றி!
    வணக்கம்!!

    ReplyDelete
  38. Respected guruji
    Super super.Very practical life style one has to adopt in this life, is explained in detail,and what way & to what level astrologer will help is given beautifully.

    ReplyDelete
  39. ////உங்கள் கைலாயப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! எங்களுக்கும் சேர்த்து ஈசனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்!!!...///

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..
    மன்னிக்க..

    நாம் வேண்டுதல் செய்யவது இல்லை
    நமது கடவுள் கொள்கையும் வழிபாட்டு முறையும் வேறானது..

    இறைவனிடம் வேண்டுதல் வைப்பதை தவிர்த்து
    இறைவனுக்கு நன்றி சொல்ல பழகி கொள்ளலாம்

    நன்றி

    ReplyDelete
  40. dear sir
    Ennathan take it easy sonnalum solumpothum kekum pothum nala irukum sir but experience than kastam

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com