மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.9.12

Devotional: ஈறாறு கண்ணில் எதைப் பொழிகின்றான் அவன்?

 Devotional: ஈறாறு கண்ணில் எதைப் பொழிகின்றான் அவன்?
பக்தி மலர்

திருச்செந்தூரில் உறையும் சண்முகநாதனை யார் பாடினாலும், கேட்பவர்களின் மனம் குளிரும். இன்று புஷ்பவனம் குப்புசாமி சண்முகனைப் பாடி நம் மனதைக் குளிர வைக்கின்றார். கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------
காணொளி
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


கவிதைச் சோலை: காலத்தின் போக்கிலே பொழுதைக் கழிப்பவன் யார்?

பொய்யான கற்பனைப் போக்கிலே போனவன்
    புகழையும் இழப்ப துண்டு
         புகழெனும் போதையில் உண்மையை மறப்பவன்
    புத்தியை இழப்ப துண்டு
மெய்யான ஞானியும் விதிவிட்ட காற்றிலே
    விலையாகிப் போவ துண்டு
         விவரமே இல்லாமல் காலத்தின் போக்கிலே
    வீணர்கள் வாழ்வ துண்டு
மையாருங் கண்ணினால் மைந்தர்க்குச் சரியான
    வழிகாட்டும் வஞ்சி மயிலே!
         மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!

                   - கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18 comments:

  1. குருவிற்க்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
  2. ///விதி விட்ட காற்று ///

    புரியவில்லை..
    கவிஞரின் எண்ணப் போக்கை அறிந்து கொள்ள பொறுத்திருக்கின்றோம்.

    வெள்ளி என்றாலே
    வள்ளி மணாளனை பற்றிய பாடல் என

    பழக்கப் படுத்திக் கொண்டோம்
    பாடலோடு வரும் கவிஞரின் வரிகள்

    சிந்தித்து பதில் தந்து நம்மை
    சிந்திக்க பொருள் தந்து அமைகிறது

    மாற்றங்கள் வரும் வரை
    மாறாது காத்திருப்போம்

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,
    குழப்பம் ஒன்றும் புரியவில்லை
    ஏதேனும் எதிர்பார்க்கிறேன்

    கு ரா முருகன் பி‌எஸ்‌என்‌எல்

    ReplyDelete
  4. புஷ்பவனத்தின் கண்ணீர் குரலும் உச்சரிப்பின் அழுத்தமும் அவருக்கே உரிய சிறப்பு.
    அருமையான ஒரு முருக பக்திப் பாடலை கேட்டேன்...


    மனம்போன போக்கிலே போனவன் புகழை இழந்தான்
    புகழ் என்னும் போதையில் உழன்றவன் உண்மையை மறந்ததனால்
    புத்தியையே இழந்தான்.
    விஸ்வாமித்திரரே என்றாலும் விதியிலிருந்து தப்பித்தாரா?
    ஏதும் செய்யாது வீணாய்ப் போவோரும் உண்டு.

    எது எப்படியாயினும் நீ மட்டும் நினது மைந்தருக்கு சரியான வழியையே காட்டுகிறாயே!!!
    அன்னையே என்று போற்றும் கவியரசின் கவிதை நன்று.

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. வாத்தியாரும் ஆனந்தமுருகனும் ஆளும் கட்சி ஆதரவாளர்களோ?

    சொல்வதெல்லாம் நியாயமாகத் தான் இருக்கிறது. இருந்தும் பெட்ரோல் விலை ஏற்றம் மட்டும் ஜீரனிக்கமுடியவில்லை. எது எது எந்தெந்த நாட்டில் கிடைக்கிறதோ அது அது அந்தந்த நாட்டில் விலை குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு புருனையில் ஒரு லிட்டெர் பெட்ரோல் 35 காசு. ஒரு கப் டீ அல்லது காஃபி 80 காசு. ஒரு லிட்டெர்
    மினெரல் வாட்டெர் 1.20 . எனக்கு தெரிந்து இங்கு கடந்த 20 வருடமாக இதே தான் விலை மாற்றமில்லை. இவை மட்டுமல்ல வேறு எந்த பொருளுக்கும் விலை ஏற்றம் என்பதே இல்லை. நம் நாட்டு பிரச்சினையே விலை ஏறிக்கொண்டே இருப்பதுதான். இது ஏன்? இதை கண்டுபிடித்து கட்டுபடுத்துவதற்குள் கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதை கூட கண்டுபிடித்துவிடலாம்.

    என்ன செய்ய? பொறுத்துக்கொண்டு, பெருமை பட வேண்டிய விழயங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

    ReplyDelete
  6. திரு ஆனந்தமுருகன் அவர்கள் எழுதியுள்ள விலைவாசிப் பட்டியலைப் பார்த்து பலரும் மயங்கி விழும் நிலைமை. முன்பு நானும் என் நண்பரும் ஒரு ஓட்டலுக்குச் சென்று சாப்பிடும் அதே 2 இட்லி, ஒரு வடை, பொங்கல், காபி சாப்பிட்டோம். அப்போது ஐம்பது ரூபாயில் இருந்த பில் இன்று 130 ரூபாயைத் தாண்டியிருந்தது. இதுதான் இன்றைய நிலை. மிகப் பெரிய பொருளாதார நிபுணர் இந்திய நாட்டு சாமானியர்களுக்காக சாதித்திருக்கும் சாதனை.

    ReplyDelete
  7. vanakam .sir murugan song super ...sir jothidam books octber ..il varuma ...

    ReplyDelete
  8. ///thanusu said...
    பெட்ரோல் விலை ஏற்றம் மட்டும் ஜீரனிக்கமுடியவில்லை.

    இது ஏன்? இதை கண்டுபிடித்து கட்டுபடுத்துவதற்குள் ///

    "Pet" ROLL விலை ஏறினால் ஏன் சீரணிக்க முடியவில்லை ...?

    வாகனங்களை தவிர்க்க முடியாது என்ற ஆசை கொண்டுள்ளுவர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்க்கலாமே..

    இதை கண்டுபிடிக்க வேண்டுமா..
    தேவையில்லையே கவிஞரே..

    ஆசை இருக்கும் போது
    அதனால் வரும் கஷ்டங்களையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்

    யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.

    இது வள்ளுவம்..
    இதனை திரிஷ்ணம் என்று பௌத்தம் சொல்லும்

    ஆடையின்றி பிறந்தோமே
    ஆசையின்றி பிறந்தோமா

    என கண்ணதாசன் பாடலில் கேட்பார்

    மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை
    என்ற வைரமுத்துவின் வரிகள்..

    பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

    என்று சொல்வதை யோசித்துப் பாருங்கள் கவிஞரே..

    எத்தனை (சின்ன.. சின்ன..)ஆசை..

    ReplyDelete
  9. சிங்கை செல்வர் இவ்வாரமும் ஒரு
    சிறப்பான கவிமழை பொழிவார் என
    எதிர்பார்த்தோம்..

    மழையே இன்றி வானமே பொய்க்கிறது..
    மனம் கவரும் சிங்கையாரும் கவிமழை இன்றி அமைதி கொண்டுள்ளார்..

    வாரமலரில்லாவிடினும்
    வாரம் ஒரு கவி"தை" என

    தமிழ் கவி என்ற வெள்ளத்தில்
    ஓடோடி வந்த எங்களை ஏமாற்றலாமா?

    வணக்கமும் வாழ்த்துக்களுடன்
    வரும் வாரங்களின் காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  10. /// murugan said...
    குழப்பம் ஒன்றும் புரியவில்லை///

    குழப்பம் உங்களுக்குமா..
    குறைந்த பட்ச விளக்கமாக சொன்னால்

    நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறோம்
    நண்பர் முருகனாரே...

    ReplyDelete
  11. //Thanjavooraan said...
    அதே 2 இட்லி, ஒரு வடை, பொங்கல், காபி சாப்பிட்டோம். அப்போது ஐம்பது ரூபாயில் இருந்த பில் இன்று 130 ரூபாயைத் தாண்டியிருந்தது. இதுதான் இன்றைய நிலை.///

    அன்றும் இன்றும் சொன்னது சரி..
    அப்போது எத்தனை சம்பளம் இப்போது எத்தனை சம்பளம்..

    அப்போதிருந்த அரையணா (அறுகோண வடிவில் இருக்கும் 3 பைசா) இப்போ எங்கே..

    130 ருபாய் பவுன் விற்கும் போது
    நமக்கு சம்பளம் 30 ருபாய்

    இன்று 30000 விற்கும் போது
    சம்பளம் எத்தனை கூடியிருக்கிறது..

    இரண்டு வழிகள் உண்டு..
    ஒன்று..
    வருவாய்க்கு தகுந்தாற் போல் செலவு செய்வது
    இதனை வள்ளுவம்
    ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை போகாறு அகலாக்கடை என்று சொல்லும்
    மற்றொன்று..
    செலவுக்கு தகுந்தாற்போல் வருவாயை பெருக்கிக் கொள்வது..

    நீங்கள் எந்தப் பக்கம் என
    யோசித்தால் ...எல்லாம் எளிதாகும்...

    சரிதானே...

    ReplyDelete
  12. iyya vanakam jothida jathakam yendru suthathy
    intha thatu niraya sarkarai pongal yeanru koduthu oramai utkarnthu sappidu yenpathu poal thangal yealuthya vitham yeanaku KANNADHASAN avl BALAKUMARAN avl ealithuvatha i ghapagam paduthum vithamaga ullathu mika magilchi nandri nandri

    ReplyDelete
  13. நேற்று அலுவலகத்தில் சத்தமாக இருந்த நேரம் ஓரிரு வரிகள் எழுத எண்ணி அப்படியே விட்டுவிட்டேன்...
    இருந்தும் திருவாளர் நமது அய்யரின் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கே எனது கவிதை...


    புகழுக்கும் போகத்துக்கும் அடிமையான ராவணனோ
    புழுதியிலே புழுவாக மாண்டான்
    ஆசைக்கும் ஆணுவத்திற்கும் பேர்போன துரியோதனனோ
    ஆலம் விழுதுகளோடு மாண்டான்
    நன்றிக் கடனுக்காக கும்பகர்ணனோ ஸ்ரீராமனின்
    கரங்களிலே வேண்டியபடி வீழ்ந்தான்
    ஆபத்துக்கு உதவிய அயோக்கியனுக்காக குந்திமகனோ
    ஆனந்தனுக்கே தானம்செய்து மறைந்தான்
    மரணங்கள் வேறானாலும் சத்திமாக வாழ்ந்தவனின்
    மகத்துவம் நம்மார்போடு நிற்காதோ!
    சத்தியமும் தர்மமும் எங்குமுண்டு இருந்தும்
    புத்திக்கு விலங்கிட்டது விதியல்லவா!

    நன்றிகள் வாத்தியாரே! நன்றிகள் அய்யரே!!!

    ReplyDelete
  14. ஐயா வணக்கம்.


    திருச்செந்தூர் வேலவனை நினைக்க வைத்த ஐயாவிற்கு நன்றி.

    ReplyDelete
  15. ஜி ஆலாசியம் said...
    மரணங்கள் வேறானாலும் சத்திமாக வாழ்ந்தவனின்
    மகத்துவம் நம்மார்போடு நிற்காதோ!
    சத்தியமும் தர்மமும் எங்குமுண்டு இருந்தும்
    புத்திக்கு விலங்கிட்டது விதியல்லவா!

    கச்சிதமான வரிகள் .அள்ளிக்கொடுத்தவனும் மாண்டான்.கிள்ளிக்கொடுத்தவனும் மாண்டான் .பிறந்தால் மரணம் நிச்சயம். மரணத்துக்கு பின் வாழ்ந்ததுக்கு அடையாளம் ? செயல்! அது என்ன வகை செயல் !

    நல்ல வரிகள் ஆலாசியம் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  16. அய்யர் சொல்வதை ஓரளவுக்குத்தான் ஒப்புக்கொள்ள முடியும். விலைவாசி உயர்வின் வேகம், ஊதிய உயர்வின் வேகத்தைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருக்கிறது. நான் சொன்ன 'மெனு' வெகு நாட்களுக்கு முன்பு அல்ல. ஓரிரு வருடங்களுக்கு முன்புதான். அந்த குறுகிய காலத்துக்குள் விலைவாசி ஏறியிருக்கும் அளவைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. ஊதிய உயர்வும், வருமான உயர்வும் எல்லா மட்டத்தில் ஒரே சீராக இருப்பதில்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வதால் மட்டும், நாம் கூலிவேலைக்கு ஏவிடும் தொழிலாளிக்கு அதிகரித்துக் கொடுத்துவிடுவதில்லை. ஒரு பக்கம் செல்வம் ஏராளமாக குவிகின்ற இடங்களும் உண்டு, பல இடங்களில் சரிவில் மாட்டிக் கொண்டு சங்கடப்படும் ஏராளமானவர்கள் உண்டு. ஆகவே அய்யர் சொல்லும் சமாதானம் ஏற்பதற்கில்லை. முண்டாசுக்கார அண்ணாச்சி பொருளாதார நிபுணரேயானாலும், அவரது நடவடிக்கைகள் இந்தியரில் பெரும்பான்மையானவர்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கவும் ஒரு சிலரை கோடீஸ்வரர்களாக ஆக்கவுமே பயன்படும். இது உண்மை; சத்தியம்.

    ReplyDelete
  17. thanusu said...
    ///பிறந்தால் மரணம் நிச்சயம். ///

    நன்றி கவிஞரே..
    ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com