மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

6.9.12

Astrology என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே!!!!

Astrology என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே!!!!

அலசல் பாடம்!

"என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்... எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே"
என்று கவியரசர் கண்ணதாசன் பல்லவி ஒன்றில் எழுதினார்

அதை மாற்றி நாம் இப்படிப் பாட வேண்டியதுதான்:

”என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே
நினைத்தால்... எனக்கே அழுகைவரும் சமயத்திலே”

சில ஜாதகங்கள் அப்படி அமைந்துவிடும்!
-----------------------------------------
கர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும். அரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.

சிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.

பொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.

பலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:

1.  நமக்கு ஏற்ற தொழில் எது?
2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்
-----------------------------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


இது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒரு திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி. அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான்.

அத்துடன்  லக்கினாதிபதியும், தொழில்காரகனுமாகிய சனீஷ்வரன் நீசம்.
ஏழாம் அதிபதி சந்திரனும் நீசம்

”பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்ததுபோல” என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது ஒருவன் பனை மரத்தின் உச்சியில் இருந்து பிடி நழுவி தடால் என்று கீழே விழுந்துவிட்டானாம். இடுப்பு எலும்பு முறிந்து பலமான அடி. அவன் என்ன நடந்தது என்று பார்ப்பதற்குள், அந்தப் பக்கமாகத் தறிகெட்டு ஓடிவந்த பொலி காளை மாடு ஒன்று அவனை நன்றாக மிதித்துவிட்டு ஓடியதாம். ஒரே நேரத்தில் இரண்டு விபத்துக்கள்.

அதுபோல ஜாதகனுக்கு லக்கினாதிபதியும் அவுட். தொழில்காரகனும் அவுட், பத்தாம் அதிபதியும் அவுட். அவுட்டோ அவுட்!!!! பாவம்தான் என்ன செய்வது? வாங்கிவந்த வரம்! அவ்வளவுதான்!

ஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதலீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.

சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான்.

இது மேல்நிலை வகுபிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31 comments:

sundinesh1 said...
This comment has been removed by the author.
sundinesh1 said...

"சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை" என்று எழுதி உள்ளீர்கள்

சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இருந்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்குமா , அல்லது 10ம் அதிபதி 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இருந்தால் வேலை வெளிநாட்டில் கிடைக்குமா ??

eswari sekar said...

vanakam sir

ஜி ஆலாசியம் said...

ஜாதகன் மகர லக்னன்...
அவனுடைய கைகளுக்கு அதிலும் விரல்களுக்கு விசேசம் உண்டு...
விருச்சிக ராசி வாயை மூடிக் கொண்டிருக்க எப்போதும் வெத்திலை பாக்குப் போட்டுக் கொண்டு இருக்கலாம்.
லனத்திலே ராகுவும் புதனும் வேதியியல் தொடர்பான தொழில் கெமிக்கல் தொழிலில் இருக்கலாம்.

வேதியியல் வாத்தியாராகாவும் கூட இருக்கலாம்... பத்திற்கு உரியவன் குருவின் வீட்டில் இருப்பதும் மகர லக்னத்திலே ராகுவும் புதனும் இருப்பது அதைச் செய்யலாம்.

மூன்றிற்கு உரியவன் லாபஸ்தானத்தில் தைரியத்திற்கு பஞ்சமிருக்காது (அப்போது தானே பனைமரத்தடியில் இருந்து அடிபட்டாலும் எழுந்து இருக்க முடியும்) கூடவே ஆட்சி பெற்ற சுக ஸ்தானாதிபதி இருக்கிறார் அவரே, லாபஸ்தானத்திர்கான அதிபதியும் கூட. அவனின் நான்காம் பார்வையில் தன்ஸ்தானமும் கூட...

குருவின் பார்வை மூன்றிலும் ஐந்திலும் ஏழிலும் விழுவது சிறப்பு! ஏழிற்கு உரியவன் சந்திரன் நீசமானாலும் லாபஸ்தானத்தின் அதிபதியும் குருவும் சூழ இருப்பது மனைவியின் மூலம் (சகி மூல யோகம் ::::)))) ) இருக்கும்.

சூரியன் ராஜ கிரகம், அதிலும் எட்டாம் இடத்திற்கும் உரியவன் பாதகம் இல்லாது துணிச்சலான பேச்சையும் தருவான்...

இப்போது சந்திர திசை நடக்கும், ஏழரைச் சனி (விரைய சனி படுத்தி எடுக்கும்) சந்திர திசையில் செவ்வாய், புதன், வியாழன் புத்திகள் நன்றாக இருக்கும்.

அடுத்து வரும் செவ்வாய் திசை நன்றாக இருக்கும் என்றும் நம்பலாம்.

சரி தானா ஐயா! தாங்கள் தான் சொல்ல வேண்டும் தேறுகிறேனா! என்று.

பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

murugan said...

ஐயா வணக்கம்,
எல்லாம் சர கிரகங்களின் விஷயமாக உள்ளதே 11இல் உள்ள சந்திரன் செவ்வாய் அமைப்பு குருவுடன் உள்ள கிரகங்கள் எதுவும் செய்யாதா? வியாபாரத்தில் போய்சொல்லீ பணம் சம்பாதிப்பான் என்று தெரிகிறது குருசந்த்ரயோகம் குருமங்கலயோகம் முதலியன இவருக்கு இல்லயா 7ஆம் அதிபதி நீச்சம் பெற்ற அந்த வீட்டின் அதிபதி ஆட்சி பெற்றிருக்கிறாரே அதுவும் 11இல் ஏதேனும் பலன் உண்டல்லவா 11இல் மாந்தீ நல்லது செய்வரே. 6க்கும் 9க்கும் உடையவன் நட்பு கிரகத்தில் ராகுவுடன் இருப்பதால் மனிதர் உயரமாகவும் மந்தபுதியுடன் ஆயுள்விருத்தியோடு இருப்பார்
ஐயா இந்த பிஞ்சுக்கு ஜாதகம் சொல்ல வருகிறதா
தவறு இருந்தால் மன்னிக்கவும்
G R MURUGAN BSNL

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நன்றக உள்ளது அலசல் பாடம்
நன்றி

eswari sekar said...

sir..laknapathi nitchem ellia .sir

selva murugan said...

sir, lakna owner nesam, but chandra lakna owner atche. With guru so aul athigam.

அய்யர் said...

வேலைக்கு வலை போட்டு
விலைக்கு விற்காமல் போனால்...

அது வரமா? சாபமா?
அது இருவினையின் இயைபே..

அவ்வை அருளிய இந்த
அமுத மொழிகளை தந்து

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.

வணக்கக்த்துடன்
வருகை பதிவு

ananth said...

சுக்கிரன், சனி இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நன்றாக இருந்திருந்தால் வாய்ப்பு ஓரளவேனும் இருந்திருக்கும்.

எந்த அமைப்பிற்கும் simple rule இல்லை என்பதால் ”என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே
நினைத்தால்... எனக்கே அழுகைவரும் சமயத்திலே” என்றுதான் பல சமயங்களில் பாடத் தோன்றும்.

vprasana kumar said...

sir, gaja kesari yogam, sasi mangala yogam, guru mangala yogam & neecha banga raja yogam, evai anaithum ulladhu, chevvai sondha veetil ull adhu, sarithanae ayya.

Ajith M S said...

வணக்கம் ஐயா,

நான்கில் நீச்சமாக உள்ள சனியும் பதினொன்றில் நீச்சமாக உள்ள சந்திரனும் நீசபங்கமாக உள்ளதே.. பத்தாமிடத்திற்கு நீச்சபங்கம் பெற்ற சனியின் அதுவும் லக்னாதிபதியின் பார்வை உள்ளதே.. அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேன்டாமா..? தயவு செய்து சந்தேகத்தை போக்குங்கள் ஐயா..

Uma said...

அலசல் பாடம் அருமை! ஒரு சந்தேகம் தொழில் காரகன் சனி / ஒன்பதாம் அதி சர ராசியில் இருப்பதும், சந்திரன் ஜல ராசியில் இருப்பதும் வெளிநாட்டுப் பயணத்திற்கு துணை செய்யாதா?

Uma said...

குருவின் பார்வை மூன்றிலும் ஐந்திலும் ஏழிலும் விழுவது சிறப்பு! ஏழிற்கு உரியவன் சந்திரன் நீசமானாலும் லாபஸ்தானத்தின் அதிபதியும் குருவும் சூழ இருப்பது மனைவியின் மூலம் (சகி மூல யோகம் ::::)))) ) இருக்கும். //

இதிலும் ஒரு சந்தேகம், இந்த ஜாதகருக்கு குரு விரைய அதி கூட, கூட மாந்தி, காரகன் சுக் பனிரெண்டில். மேலும் இரண்டாம் வீட்டில் அஷ்டம அதி, பகை வீட்டில், இரண்டாம் அதி நீசம். ஏழில் கேது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும் என்றே தோன்றுகிறது. வாத்தியார்தான் உறுதிப்படுத்தவேண்டும்.

kmr.krishnan said...

என் ஜாதகத்திலும் 10க்குடையவனும் யோககாரகனுமான செவ்வாய் பகை வீட்டில் 12ல் மறைவு. பெரிய அளவு உத்யோகத்தில் முன்னேற்றம் இல்லை.
'எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார்' என்ற ரீதியில் ஏதோ எல் ஐ சியில் 37.5 ஆண்டுகள் குப்பை கொட்டினேன்.அங்கே பதவி அந்தஸ்து கிடைக்கவில்லை என்றாலும் பல சமூக அந்தஸ்துகள் கிடைத்தன. நல்ல பதிவு ஐயா!

krishnababuvasudevan said...

Nantri, vanagam

SP.VR. SUBBAIYA said...

/////Blogger sundinesh1 said...
"சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு

ஜாதகத்தில் இல்லை" என்று எழுதி உள்ளீர்கள்
சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இருந்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்குமா , அல்லது 10ம்

அதிபதி 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இருந்தால் வேலை வெளிநாட்டில் கிடைக்குமா ??/////

சுக்கிரன் ஜாதகத்திற்கு 6, 8 அல்லது 12ஆம் இடத்துக்காரனாக இருக்கக்கூடாது. அதையும் பார்க்க வேண்டும்

SP.VR. SUBBAIYA said...

///Blogger eswari sekar said...
vanakam sir////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஜி ஆலாசியம் said...
ஜாதகன் மகர லக்னன்...
அவனுடைய கைகளுக்கு அதிலும் விரல்களுக்கு விசேசம் உண்டு...
விருச்சிக ராசி வாயை மூடிக் கொண்டிருக்க எப்போதும் வெத்திலை பாக்குப் போட்டுக் கொண்டு இருக்கலாம்.
லனத்திலே ராகுவும் புதனும் வேதியியல் தொடர்பான தொழில் கெமிக்கல் தொழிலில் இருக்கலாம்.
வேதியியல் வாத்தியாராகாவும் கூட இருக்கலாம்... பத்திற்கு உரியவன் குருவின் வீட்டில் இருப்பதும் மகர லக்னத்திலே ராகுவும்

புதனும் இருப்பது அதைச் செய்யலாம்.
மூன்றிற்கு உரியவன் லாபஸ்தானத்தில் தைரியத்திற்கு பஞ்சமிருக்காது (அப்போது தானே பனைமரத்தடியில் இருந்து அடிபட்டாலும்

எழுந்து இருக்க முடியும்) கூடவே ஆட்சி பெற்ற சுக ஸ்தானாதிபதி இருக்கிறார் அவரே, லாபஸ்தானத்திர்கான அதிபதியும் கூட. அவனின்

நான்காம் பார்வையில் தன்ஸ்தானமும் கூட...
குருவின் பார்வை மூன்றிலும் ஐந்திலும் ஏழிலும் விழுவது சிறப்பு! ஏழிற்கு உரியவன் சந்திரன் நீசமானாலும் லாபஸ்தானத்தின் அதிபதியும்

குருவும் சூழ இருப்பது மனைவியின் மூலம் (சகி மூல யோகம் ::::)))) ) இருக்கும்.
சூரியன் ராஜ கிரகம், அதிலும் எட்டாம் இடத்திற்கும் உரியவன் பாதகம் இல்லாது துணிச்சலான பேச்சையும் தருவான்...
இப்போது சந்திர திசை நடக்கும், ஏழரைச் சனி (விரைய சனி படுத்தி எடுக்கும்) சந்திர திசையில் செவ்வாய், புதன், வியாழன் புத்திகள்

நன்றாக இருக்கும்.
அடுத்து வரும் செவ்வாய் திசை நன்றாக இருக்கும் என்றும் நம்பலாம்.
சரி தானா ஐயா! தாங்கள் தான் சொல்ல வேண்டும் தேறுகிறேனா! என்று.
பாடத்திற்கு நன்றிகள் ஐயா!/////

ஓரளவிற்கு. இன்னும், மேலும் படியுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger murugan said...
ஐயா வணக்கம்,
எல்லாம் சர கிரகங்களின் விஷயமாக உள்ளதே 11இல் உள்ள சந்திரன் செவ்வாய் அமைப்பு குருவுடன் உள்ள கிரகங்கள் எதுவும்

செய்யாதா? வியாபாரத்தில் போய்சொல்லீ பணம் சம்பாதிப்பான் என்று தெரிகிறது குருசந்த்ரயோகம் குருமங்கலயோகம் முதலியன

இவருக்கு இல்லயா 7ஆம் அதிபதி நீச்சம் பெற்ற அந்த வீட்டின் அதிபதி ஆட்சி பெற்றிருக்கிறாரே அதுவும் 11இல் ஏதேனும் பலன்

உண்டல்லவா 11இல் மாந்தீ நல்லது செய்வரே. 6க்கும் 9க்கும் உடையவன் நட்பு கிரகத்தில் ராகுவுடன் இருப்பதால் மனிதர் உயரமாகவும்

மந்தபுதியுடன் ஆயுள்விருத்தியோடு இருப்பார்
ஐயா இந்த பிஞ்சுக்கு ஜாதகம் சொல்ல வருகிறதா
தவறு இருந்தால் மன்னிக்கவும்
G R MURUGAN BSNL////

லக்கினாதிபதி நீசமானால் ஜாதகத்தில் வேறு எந்த நல்லது இருந்தாலும் ஜாதகனால் அதை அனுபவிக்க முடியாது என்பதை மறக்க வேண்டாம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நன்றக உள்ளது அலசல் பாடம்
நன்றி////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger eswari sekar said...
sir..laknapathi nitchem ellia .sir////

நல்லவேளை தப்பித்தீர்கள் சகோதரி! உங்கள் பெயரில் ஈஷ்வரி இருக்கிறாரே. அவர் கை கொடுப்பார். கவலையை விடுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger selva murugan said...
sir, lakna owner nesam, but chandra lakna owner atche. With guru so aul athigam./////

புதிதாக வந்துள்ளீர்கள். முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் படியுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
வேலைக்கு வலை போட்டு
விலைக்கு விற்காமல் போனால்...
அது வரமா? சாபமா?
அது இருவினையின் இயைபே..
அவ்வை அருளிய இந்த
அமுத மொழிகளை தந்து
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.
வணக்கக்த்துடன்
வருகை பதிவு////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
சுக்கிரன், சனி இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நன்றாக இருந்திருந்தால் வாய்ப்பு ஓரளவேனும் இருந்திருக்கும்.
எந்த அமைப்பிற்கும் simple rule இல்லை என்பதால் ”என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே
நினைத்தால்... எனக்கே அழுகைவரும் சமயத்திலே” என்றுதான் பல சமயங்களில் பாடத் தோன்றும்./////

ஆமாம். எந்த அமைப்பிற்கும் simple rule இல்லை என்பது உண்மை! நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger vprasana kumar said...
sir, gaja kesari yogam, sasi mangala yogam, guru mangala yogam & neecha banga raja yogam, evai anaithum ulladhu, chevvai sondha
veetil ull adhu, sarithanae ayya.////

நீங்கள் சொல்லும் அந்த இரண்டு யோகங்களை கொடுக்கக்கூடிய கூட்டணியில், இருவரில் ஒருவன் (சந்திரன்) நீசம் ஆகிவிட்டானே சாமி!
கூட்டணி எப்படி வெற்றி பெறும்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ajith M S said...
வணக்கம் ஐயா,
நான்கில் நீச்சமாக உள்ள சனியும் பதினொன்றில் நீச்சமாக உள்ள சந்திரனும் நீசபங்கமாக உள்ளதே.. பத்தாமிடத்திற்கு நீச்சபங்கம்
பெற்ற சனியின் அதுவும் லக்னாதிபதியின் பார்வை உள்ளதே.. அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேன்டாமா..? தயவு செய்து சந்தேகத்தை

போக்குங்கள் ஐயா../////

நீசனானவன் பார்வையால் என்ன நன்மை சொல்லுங்கள். அவனே செல்லாக்காசு. செல்லாத காசை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? சனி தனியாகத்தானே உள்ளான். நீச பங்கத்திற்கு அங்கே என்ன உள்ளது சொல்லுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Uma said...
அலசல் பாடம் அருமை! ஒரு சந்தேகம் தொழில் காரகன் சனி / ஒன்பதாம் அதி சர ராசியில் இருப்பதும், சந்திரன் ஜல ராசியில்
இருப்பதும் வெளிநாட்டுப் பயணத்திற்கு துணை செய்யாதா?/////

சனியும் நீசம். சந்திரனும் நீசம். லக்கின அதிபதியும் நீசம். ராசி அதிபதியும் நீசம். அவர்களே அடிபட்டுக் கிடக்கிறார்கள். அவர்கள் எப்படித் துணைக்கு வருவார்கள்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Uma said...
குருவின் பார்வை மூன்றிலும் ஐந்திலும் ஏழிலும் விழுவது சிறப்பு! ஏழிற்கு உரியவன் சந்திரன் நீசமானாலும் லாபஸ்தானத்தின் அதிபதியும் குருவும் சூழ இருப்பது மனைவியின் மூலம் (சகி மூல யோகம் ::::)))) ) இருக்கும். //
இதிலும் ஒரு சந்தேகம், இந்த ஜாதகருக்கு குரு விரைய அதி கூட, கூட மாந்தி, காரகன் சுக் பனிரெண்டில். மேலும் இரண்டாம்
வீட்டில் அஷ்டம அதி, பகை வீட்டில், இரண்டாம் அதி நீசம். ஏழில் கேது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும் என்றே

தோன்றுகிறது. வாத்தியார்தான் உறுதிப்படுத்தவேண்டும்./////

இரண்டில் அஷ்டம அதிபதி. இரண்டாம் அதிபதி நீசம். பணக் கஷ்டம் உள்ள ஜாதகம். பணக் கஷ்டம் உள்லவனுக்கு, குடும்ப வாழ்க்கை எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
என் ஜாதகத்திலும் 10க்குடையவனும் யோககாரகனுமான செவ்வாய் பகை வீட்டில் 12ல் மறைவு. பெரிய அளவு உத்யோகத்தில் முன்னேற்றம் இல்லை.
'எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார்' என்ற ரீதியில் ஏதோ எல் ஐ சியில் 37.5 ஆண்டுகள் குப்பை கொட்டினேன்.அங்கே பதவி
அந்தஸ்து கிடைக்கவில்லை என்றாலும் பல சமூக அந்தஸ்துகள் கிடைத்தன. நல்ல பதிவு ஐயா!////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger krishnababuvasudevan said...
Nantri, vanagam/////

நல்லது. நன்றி நண்பரே!