Astrology எங்கும் இலவசம். எதிலும் இலவசம். எல்லாம் இலவசம்
ஜாதகத்தைக் கணித்து வைத்துக்கொள்வதற்கு, பஞ்சாங்கமும், ஜோதிடர்களும் இன்றைய காலகட்டத்தில் தேவையில்லாமல் போய்விட்டது. கணினி அந்த வேலையைச் செய்து தருவதால், எல்லாம் சுலபமாக ஆகிவிட்டது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, கணினி ஜாதகத்திற்குக்கூட, மையங்களுக்குச் சென்று, காசு கொடுத்து, அவர்கள் கணித்து, பிரதி எடுத்துக் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரவேண்டும்.
இப்போது அந்த வேலையும் இல்லை.
வீட்டில் கணினி இருந்தால் நாமே கணித்துக் கொள்ளலாம். அதற்குத் தேவையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.
இலவசம் என்றால்தான் நமக்கு மிகவும் பிடிக்குமே. அதைப் பற்றி இன்று பார்ப்போம்!
---------------------------------------------------
இந்தியாவின் தேசியப் பறவை மயில்
இந்தியாவின் தேசிய மலர் தாமரை
இந்தியாவின் தேசியக் குணம் இலவசம்
ஒரு குடிமகனின் ஆதங்கம்: “டாஸ்மாக் சரக்கு இலவசமாகக் கிடைத்தால் எத்தனை ஆனந்தமாக இருக்கும்?”
----------------------------------------------------
1.
மிகவும் விவரமாக உள்ள ஜோதிட மென்பொருள் ஜகந்நாத ஹோரா
அதற்கான சுட்டி (URL)
http://www.vedicastrologer.org/jh/
அதைத் தரவிறக்கம் (Download) செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (install it in your computer)
Basic calculation
Complete calculation
என்று எல்லா வசதிகளும் உள்ளன.
------------
Chakras (Rasi chakra, Navamsa chakra)
Basics
Strengths > Ashtakavarga
Dasas
என்று எல்லாவற்றிற்கும் வசதி உள்ளது. மெனு பாரைப் பாருங்கள். அதை க்ளிக்கி அல்லது நோண்டி அல்லது தோண்டிப் பாருங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். எதாக இருந்தாலும் தோண்டிப் பார்த்துக் கற்றுக்கொள்வேன். அதுதான் என்னுடைய பழக்கம். அவ்வாறே செய்யுங்கள்.
---------------------------
சரி, ஜாதகத்தை எப்படி அதில் உருவாக்குவது? மெனு பாரில் ஆறாவதாக Data என்னும் பட்டன் இருக்கும் அதை அமுக்கிப் பாருங்கள். கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு புதிய ஜன்னல் வரும். அதில் உங்கள் பிறப்பு விவரங்களை உள்ளிடுங்கள். உங்களுக்குத் தேவையான ஜாதகத்தை அது கண் இமைக்கும் நேரத்திற்குள் தயாரித்துக் கொடுத்துவிடும்.
----------------------------
இதைச் சொல்லிக் கொடுத்தும் ஒருவர் என்னை விடவில்லை. ஜோதிடத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாக்கியப் பஞ்சாங்கம் என்று இரண்டு சனியன்கள் உள்ளதே! அவற்றிற்கிடையே இரண்டு பாகைகள் வித்தியாசம் இருந்து ஆளையும் கொள்கிறதே. அதைப் போக்குவதற்கு இதில் என்ன வழி?
வழி இல்லாமல் இல்லை! இருக்கிறது.
Menu Bar > Preferences > Related to calculations > Ayanamsa > select ayanamsa இங்கே உங்களுக்கு கீழ்க் கண்ட அமைப்பில் ஜன்னல் கிடைக்கும்
”என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு - என்
கண்ணில்பட்டு ரொம்ப நாளாச்சு”
என்று பாடிக்கொண்டே அதில் உங்களுக்குத் தேவையான அயனாம்சத்தைத் தெரிவு செய்து கொள்ளூங்கள்
Lahiri = திருக்கணிதம்
Raman = வாக்கியம்
இப்போது நீங்கள் விரும்பியபடி உங்கள் ஜாதகம் கிடைக்கும்!
++++++++++++++++++++++++++++++++
இந்த உதவி செய்யப்போய், ஒருமுறை, பல்கலைக் கழகம் ஒன்றில் ஜோதிடப் பாடம் படிக்கும் மாணவர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு விட்டேன். என்னை அவர் பிலு பிலுவென்று பிடித்துக்கொண்டுவிட்டார்.
”ராமன் அயனாம்சத்தை நம் ஊர் வாக்கியப் பஞ்சாங்களோடு ஒப்பிட முடியாது. என் பெற்றோர் எழுதி வைத்துள்ளது போலவே அச்சு அசலாக ஒரு ஜாதகம் கிடைக்க வழி சொல்லுங்கள்” என்றார்
சொன்னேன்
அது நாளை
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

Thanks Sir. Am using Josiam Pakrathu software. But i need marriage matching software. Please refer any website or software for marriage matching.
ReplyDeleteகாலை வணக்கம் ... உள்ளேன் ஐயா :)
ReplyDeleteகாலை வணக்கங்கள், ஐயா.
ReplyDeleteஜகன்னாத ஹோரை நல்ல மென்பொருள் தான். ஐயம் இல்லை.
ReplyDeleteஆனால் இதற்கும் Astrovisionக்கும் சில பல subtle மாற்றங்கள் உள்ளன.
அஷ்டகவர்க்க பரல்கள் வேறுபடுகின்றன; என்னுடைய ஜாதகத்தை போட்டு பார்த்த போது அம்சத்தில் மாந்தியின் நிலை வேறுபட்டது.
இப்படி சில பல வேறுபாடுகள் உள்ளன. மொத்தத்தில் மிக நல்ல மென்பொருள். குழப்பங்கள் வருகையில் முழிக்க வைக்கிறது.
என்ன இப்போ......
நாம் தான் வண்டி ஓட்டுனர் என்றால் முன்னால் பாதை மிக தெளிவாக தெரிய வேண்டும்.இந்த வண்டியிலோ டோவிங் லாரி இழுத்து போகும் கார் போல நிலைமை. வழி தெரிந்தாலென்ன தெரியாவிட்டால் என்ன? அடங்கி கிடப்பதே மேல்!
அவர் செயலன்றி யாதொன்றுமில்லை, நாமறியோம் பராபாரமே.
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteஇலவசம் என்றல் மக்களுக்கு நிறைய பிடிக்கும்
நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல பதிவு...ஜகன்னாதா ஹோராவில் திருக்கணித முறையில் நட்டல் சார்ட் கணித்து பின் அந்த ஜாதகத்திற்கு ஹோரா அதிபதியை வைத்து திதி பிரவேச சார்ட் மூலமாக திருமண காலத்தை கணிப்பது 95% சரியாக உள்ளது...இதில் வாக்கிய பஞ்சாங்கமும் சேர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
ReplyDeleteஅய்யா எனக்கு அவ்வளவாக ஜோசியம் தெரியாது. எந்த முறை என குழப்பம் வந்த போது வாக்யம் என்று உங்களாலேயே முடிவு செய்தேன். பல ஜாதகங்கள் சரியாக கிடைக்கின்றன,ஆனால் என் நண்பர் ஒருவரின் ஜாதகத்திற்கு மட்டும் மாறுபட்டு வருகிறது. கணினியில் ராமன் வாக்யத்துக்கும் ஊரில் வாக்ய பஞ்சாங்கம் வைத்து கனித்து கொடுத்ததற்கும் வித்தியாசம் வருகிறது. ஆனால் www.asraura.org .இந்த வலையில் லஹிரி, திருக்கனிதம், ராமன்,வாக்யம் என தனித்தனி option வருகிறது இதில் வாக்யா option கிளிக் செய்தால் ஊரில் பஞ்சாங்கம் வைத்து கனித்து கொடுத்த அதே ஜாதகம் சரியாக கிடைக்கிறது. ஆனால் ராமன் option கிளிக் செய்தால் இரண்டு கிரகங்கள் இடம் மாறி வருகிறது. இந்த மாறுபட்ட அமைப்பு என் நண்பரின் ஜாதகத்துக்கு மட்டுமே வருகிறது, மற்றபடி மற்ற ஜாதகங்கள் யாவும் சரியாக வருகின்றன. அதனால் ராமன்,வாக்யம் இரண்டும் ஒன்றா என ஒரு குழப்பம் வருகிறது.
ReplyDelete//////........."ராமன் அயனாம்சத்தை நம் ஊர் வாக்யபஞ்சாக்கத்தோடு ஒப்பிடமுடியாது. என் பெற்றோர் எழுதி வத்தது போல ஒரு அச்சு அசலா ஒரு ஜாதகம் கிடைக்க ஒரு வழி சொல்லுங்கள்" என்றார்.
சொன்னேன்
அது நாளை//////
மிகுந்த ஆவலில் உள்ளேன்.
சுப்பையா சார்..
ReplyDeleteஅஸ்ட்ரோ விஷன் ப்ரடிக்ட் மென்பொருளை ஒருமுறை நண்பர் ஒருவர் மூலம் உங்கள் தளத்தில் பகிர்ந்தீர்கள்...
அது விண்டோஸ் எக்ஸ் பிக்கு உள்ளது..
விண்டோஸ் 7 ல் வேலை செய்யும் ப்ரடிக்ட் கிடைக்குமா?
நன்றி..
நீங்கள் பல்கலை மாணவருக்கு என்ன பதில் கூறினீர்கள் என்று அறியக் காத்துக் கொண்டிருக்கிறேன்..
சந்தடி சாக்கில் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் நானும் இதே கேள்வியை உங்களிடம் மடலிட்டுக் கேட்டேன்...ஆனால் பதில் பெற வில்லை என்பதையும் சொல்லி வைக்கிறேன். :))
ஜகன்னாத ஹோரா உண்மையில் நன்றாகவே இருக்கிறது..தமிழில் டிஸ்பளேயை மாற்றும் வசதி சரியாக வேலை செய்வதில்லை..தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
வடகரை வேலனின் படம் பார்த்து:
ReplyDeleteசந்தோஷ தருனங்கள்
கொண்டாட்ட நேரங்கள்
இதில்
வெடி வெடிப்பதும்
ராக்கெட் போடுவதும்
நம் பழக்கம்.
இந்த மூத்தகுடியின்
உழைப்பை போற்றி
இஸ்ரோ
நூறாவது ராக்கெட் அனுப்பி
கொண்டாடுகிறது.
/////இலவசம்/////
ReplyDeleteகைபேசி இலவசமாய் தரப்படும்
அரசு அறிவிப்பு !
ஆனால்
படிப்பு விலைபேசியே தரப்படும்
இது நடப்பு !
ஜகன்னாத ஹோரா எனக்குச் சிறிது கடினமாக உள்ளது. அஸ்ட்ரோவிஷன்தான் பயன்படுத்துகிறேன்.
ReplyDeleteவகுப்பறையில் மாணவரான ஒரு முதியவர் சென்றமாதம் திருமணம் தள்ளிப்போகும் மகளையும், திருமணமாகி சிறிது குழப்பத்திலும் பிரிவிலும் இருக்கும் தன் மகனையும், தன் மனைவியுடன் அழைத்து வந்து நட்சத்திரக் கோவில் பற்றி ஐயாவின் கட்டுரையில் கண்ட இடையாற்றுமங்கலம் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார்.அப்போது அவர்கள் சாதகத்தைப்பர்த்து(அஸ்ட்ரோவிஷன் =சித்ர பக்ஷ)நாடி சோதிடம் கோள்சாரத்தினை நம்பி அக்டோபர் 2012 மாதத்திற்குள் திருமணம் கூடிவரும் என்று கூறினேன்.இப்போதுதான் தொலைபேசி அழைப்பு வந்தது 28 செப் சென்னையில் நிச்சயம், 15 பெப்ரவரி 2013 காஞ்சியில் திருமணம் என்று.
Mikaa nantri iyaa vannagakm
ReplyDeleteஇலவசம் எல்லாம் இப்போ
ReplyDeleteஇது நம் வசம் அதனால் ...
வகுப்பறை பாடங்களும்
வரிசை வைக்கும் ஊட்டங்களும்
பட்டியலிட்டால் பறக்கும் பலமைல்
படித்துவிட்டால் திறக்கும் அன்பு வயிறுஃபுல்
இருக்கட்டும்
இவர்களுக்கு சொல்வோம் நன்றி..
இலவசங்களையும் காசாக்கி வரும்சிலர்
இன்னமும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்ன செய்ய..?
///சொன்னேன்
ReplyDeleteஅது நாளை///
That doesn't matter Sir. Only God is perfect in this world. You have taught us in detail topics like Ashtakavargha System(Ekathipathya, Trikona Reductions), Vipareetha Rajayoga etc which is a rare resource to find in organised form, even on the Internet.
To cite one example, I was particularly impressed on reading the lessons in which you stated that evil effects of Kalasarpa Yoga will diminish greatly once the native attains the age coressponding to the number of parals in lagna and not necessarily till age of 33 always.
In none of the astrology articles either in internet or Astrology magazines, I found this valuable information / rule. I found this information true and useful in my life too. Thanks !
ஐயா வணக்கம்
ReplyDeleteமூன்று வருடங்களுக்கு முன்பே இந்த மென்பொருளை பற்றி கூறியுள்ளீர் ஆனால், தமிழில் டிஸ்பளேயை மாற்றும் வசதி சரியாக வேலை செய்வதில்லை. என்று ஒரு நண்பர் கூறியுள்ளார் அது எப்படி கொடு போடுங்களேன், ரோடு போடுகிறேன்.
murugan bsnl chennai 51
Dear Sir,
ReplyDeleteI have noticed some typo and missing words in my comment posted earlier, which I noticed today only after the comment is published. Correct version is given below.
I am looking forward to your lesson for tomorrow with utmost eagerness. The horoscope that I have, does not mention time of birth and I tried with both free and paid softwares and could not match with the original written horoscope, and after buying both Thirukanitham and Vakya panchangam, finally found out that my horoscope is written based on Thirukanitham but still not able to match Navamsa position (atleast one planet differs in its place) and find substantial difference in Dasa bukthi. Have also tried with Agathiyar and Pulipani books for description of lagna (including situation of residential house at the time of birth, etc) and also book on BTR by Sastry, but still not able to land on correct birth time. Would be glad if you can write more exhaustive series on Birth time rectification for the benefit of many of us. The fruit of correct Birth time can be realised with correct future prediction based on planetary positions at the time of birth, Dasabukthi and Kocharam. The paid consultancies (many) did not yield correct Birth time despite having given exhaustive list of major happenings in life. Therefore would look for a assistance from you and/or any of the learned members of our classroom. With best regards. PULICAT BALA, Riyadh
ஜாதகங்களையோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அவற்றை கணிப்பதற்கு நான் ஜகன்னாத ஹோரா மட்டும்தான் பயன் படுத்துகிறேன். நான் எதிர்பார்ப்பது அனைத்தும் (features) வேறு free softwareகளில் இருப்பதில்லை.
ReplyDelete////Blogger சில்க் சதிஷ் said...
ReplyDeleteThanks Sir. Am using Josiam Pakrathu software. But i need marriage matching software. Please refer any website or software for marriage matching.///
அது இணையத்தில் உள்ளது. தேடிப்பிடியுங்கள். கிடைக்கும்!
////Blogger Sanjai said...
ReplyDeleteகாலை வணக்கம் ... உள்ளேன் ஐயா :)////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteகாலை வணக்கங்கள், ஐயா.////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஜகன்னாத ஹோரை நல்ல மென்பொருள் தான். ஐயம் இல்லை.
ஆனால் இதற்கும் Astrovisionக்கும் சில பல subtle மாற்றங்கள் உள்ளன.
அஷ்டகவர்க்க பரல்கள் வேறுபடுகின்றன; என்னுடைய ஜாதகத்தை போட்டு பார்த்த போது அம்சத்தில் மாந்தியின் நிலை வேறுபட்டது.
இப்படி சில பல வேறுபாடுகள் உள்ளன. மொத்தத்தில் மிக நல்ல மென்பொருள். குழப்பங்கள் வருகையில் முழிக்க வைக்கிறது.
என்ன இப்போ......
நாம் தான் வண்டி ஓட்டுனர் என்றால் முன்னால் பாதை மிக தெளிவாக தெரிய வேண்டும்.இந்த வண்டியிலோ டோவிங் லாரி இழுத்து போகும் கார் போல நிலைமை. வழி தெரிந்தாலென்ன தெரியாவிட்டால் என்ன? அடங்கி கிடப்பதே மேல்!
அவர் செயலன்றி யாதொன்றுமில்லை, நாமறியோம் பராபாரமே.////
உண்மைதான். நான் ஜோசியம் பார்க்கிறது மென்பொருளைப் பயன் படுத்துகிறேன். ஒரு குழப்பமும் இல்லை!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
இலவசம் என்றல் மக்களுக்கு நிறைய பிடிக்கும்
நன்றி////
உண்மைதான். நன்றி!
Blogger Arul said...
ReplyDeleteநல்ல பதிவு...ஜகன்னாதா ஹோராவில் திருக்கணித முறையில் நட்டல் சார்ட் கணித்து பின் அந்த ஜாதகத்திற்கு ஹோரா அதிபதியை வைத்து திதி பிரவேச சார்ட் மூலமாக திருமண காலத்தை கணிப்பது 95% சரியாக உள்ளது...இதில் வாக்கிய பஞ்சாங்கமும் சேர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்./////
நல்லது. ஜமாயுங்கள்!
////Blogger thanusu said...
ReplyDeleteஅய்யா எனக்கு அவ்வளவாக ஜோசியம் தெரியாது. எந்த முறை என குழப்பம் வந்த போது வாக்யம் என்று உங்களாலேயே முடிவு செய்தேன். பல ஜாதகங்கள் சரியாக கிடைக்கின்றன,ஆனால் என் நண்பர் ஒருவரின் ஜாதகத்திற்கு மட்டும் மாறுபட்டு வருகிறது. கணினியில் ராமன் வாக்யத்துக்கும் ஊரில் வாக்ய பஞ்சாங்கம் வைத்து கனித்து கொடுத்ததற்கும் வித்தியாசம் வருகிறது. ஆனால் www.asraura.org .இந்த வலையில் லஹிரி, திருக்கனிதம், ராமன்,வாக்யம் என தனித்தனி option வருகிறது இதில் வாக்யா option கிளிக் செய்தால் ஊரில் பஞ்சாங்கம் வைத்து கனித்து கொடுத்த அதே ஜாதகம் சரியாக கிடைக்கிறது. ஆனால் ராமன் option கிளிக் செய்தால் இரண்டு கிரகங்கள் இடம் மாறி வருகிறது. இந்த மாறுபட்ட அமைப்பு என் நண்பரின் ஜாதகத்துக்கு மட்டுமே வருகிறது, மற்றபடி மற்ற ஜாதகங்கள் யாவும் சரியாக வருகின்றன. அதனால் ராமன்,வாக்யம் இரண்டும் ஒன்றா என ஒரு குழப்பம் வருகிறது.
//////........."ராமன் அயனாம்சத்தை நம் ஊர் வாக்யபஞ்சாக்கத்தோடு ஒப்பிடமுடியாது. என் பெற்றோர் எழுதி வத்தது போல ஒரு அச்சு அசலா ஒரு ஜாதகம் கிடைக்க ஒரு வழி சொல்லுங்கள்" என்றார்.
சொன்னேன்
அது நாளை//////
மிகுந்த ஆவலில் உள்ளேன்.////
உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!
/////Blogger அறிவன்#11802717200764379909 said...
ReplyDeleteசுப்பையா சார்..
அஸ்ட்ரோ விஷன் ப்ரடிக்ட் மென்பொருளை ஒருமுறை நண்பர் ஒருவர் மூலம் உங்கள் தளத்தில் பகிர்ந்தீர்கள்...
அது விண்டோஸ் எக்ஸ் பிக்கு உள்ளது..
விண்டோஸ் 7 ல் வேலை செய்யும் ப்ரடிக்ட் கிடைக்குமா?
நன்றி..
நீங்கள் பல்கலை மாணவருக்கு என்ன பதில் கூறினீர்கள் என்று அறியக் காத்துக் கொண்டிருக்கிறேன்..
சந்தடி சாக்கில் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் நானும் இதே கேள்வியை உங்களிடம் மடலிட்டுக் கேட்டேன்...ஆனால் பதில் பெற வில்லை என்பதையும் சொல்லி வைக்கிறேன். :))
ஜகன்னாத ஹோரா உண்மையில் நன்றாகவே இருக்கிறது..தமிழில் டிஸ்பளேயை மாற்றும் வசதி சரியாக வேலை செய்வதில்லை..தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.////
இணையத்தில் தேடிப்பாருங்கள். கிடைக்கும் வாய்ப்பு உள்ளது!
////Blogger thanusu said...
ReplyDeleteவடகரை வேலனின் படம் பார்த்து:
சந்தோஷ தருனங்கள்
கொண்டாட்ட நேரங்கள்
இதில்
வெடி வெடிப்பதும்
ராக்கெட் போடுவதும்
நம் பழக்கம்.
இந்த மூத்தகுடியின்
உழைப்பை போற்றி
இஸ்ரோ
நூறாவது ராக்கெட் அனுப்பி
கொண்டாடுகிறது.////
நல்லது. நன்றி தனுசு!
////Blogger thanusu said...
ReplyDelete/////இலவசம்/////
கைபேசி இலவசமாய் தரப்படும்
அரசு அறிவிப்பு !
ஆனால்
படிப்பு விலைபேசியே தரப்படும்
இது நடப்பு ////!
கலியுகம்! அப்படித்தான் இருக்கும்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஜகன்னாத ஹோரா எனக்குச் சிறிது கடினமாக உள்ளது. அஸ்ட்ரோவிஷன்தான் பயன்படுத்துகிறேன்.
வகுப்பறையில் மாணவரான ஒரு முதியவர் சென்றமாதம் திருமணம் தள்ளிப்போகும் மகளையும், திருமணமாகி சிறிது குழப்பத்திலும் பிரிவிலும் இருக்கும் தன் மகனையும், தன் மனைவியுடன் அழைத்து வந்து நட்சத்திரக் கோவில் பற்றி ஐயாவின் கட்டுரையில் கண்ட இடையாற்றுமங்கலம் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார்.அப்போது அவர்கள் சாதகத்தைப்பர்த்து(அஸ்ட்ரோவிஷன் =சித்ர பக்ஷ)நாடி சோதிடம் கோள்சாரத்தினை நம்பி அக்டோபர் 2012 மாதத்திற்குள் திருமணம் கூடிவரும் என்று கூறினேன்.இப்போதுதான் தொலைபேசி அழைப்பு வந்தது 28 செப் சென்னையில் நிச்சயம், 15 பெப்ரவரி 2013 காஞ்சியில் திருமணம் என்று./////
வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும். நன்றி!
////Blogger daran said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
ஜகன்னாத ஹோரா வில் ஜாதகத்தின் தேதி, மாதம் மற்றும் வருடம் - இவற்றை real time (Move time forward/backward) இல் மாற்றி ஒரு நொடியில் ஜாதகம் கணிக்கலாம். மாற்ற மாற்ற ஜாதகத்தில் கிரக அமைப்பு மாறுவதை பார்க்கலாம். ரொம்ப வசதியான மென்பொருள்.
மேலும் தோண்ட தோண்ட அதில் பல புதிய விஷயங்களும் உள்ளன.////
உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி தரண்!
////Blogger krishnababuvasudevan said...
ReplyDeleteMikaa nantri iyaa vannagakm/////
வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
////Blogger அய்யர் said...
ReplyDeleteஇலவசம் எல்லாம் இப்போ
இது நம் வசம் அதனால் ...
வகுப்பறை பாடங்களும்
வரிசை வைக்கும் ஊட்டங்களும்
பட்டியலிட்டால் பறக்கும் பலமைல்
படித்துவிட்டால் திறக்கும் அன்பு வயிறுஃபுல்
இருக்கட்டும்
இவர்களுக்கு சொல்வோம் நன்றி..
இலவசங்களையும் காசாக்கி வரும்சிலர்
இன்னமும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்ன செய்ய..?////
காலதேவன் கையில் கணக்குப் புத்தகம் உள்ளது சாமி! செய்யும் பாவங்கள் எல்லாம் பதிவாகிக்கொண்டு வருகிறது!
/////Blogger Arul Murugan. S said...
ReplyDelete///சொன்னேன் அது நாளை///
That doesn't matter Sir. Only God is perfect in this world. You have taught us in detail topics like Ashtakavargha System(Ekathipathya, Trikona Reductions), Vipareetha Rajayoga etc which is a rare resource to find in organised form, even on the Internet.
To cite one example, I was particularly impressed on reading the lessons in which you stated that evil effects of Kalasarpa Yoga will diminish greatly once the native attains the age coressponding to the number of parals in lagna and not necessarily till age of 33 always.
In none of the astrology articles either in internet or Astrology magazines, I found this valuable information / rule. I found this information true and useful in my life too. Thanks !////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
Blogger murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்
மூன்று வருடங்களுக்கு முன்பே இந்த மென்பொருளை பற்றி கூறியுள்ளீர் ஆனால், தமிழில் டிஸ்பளேயை மாற்றும் வசதி சரியாக வேலை செய்வதில்லை. என்று ஒரு நண்பர் கூறியுள்ளார் அது எப்படி கொடு போடுங்களேன், ரோடு போடுகிறேன்.
murugan bsnl chennai 51
தமிழில் எடுத்துக்கொள்ளூம் வசதி உள்ளது சாமி Top Menu > Preferences > related to display > chart style & Lanquage > Tamil
ஆனால் மண் ரோடுதான் போட்டிருக்கிறார்கள். பாதிப் பகுதிதான் தமிழில் வருகிறது. வந்தவரைக்கும் லாபம்!
/////Blogger Balasubramanian Pulicat said...
ReplyDeleteDear Sir,
I have noticed some typo and missing words in my comment posted earlier, which I noticed today only after the comment is published. Correct version is given below.
I am looking forward to your lesson for tomorrow with utmost eagerness. The horoscope that I have, does not mention time of birth and I tried with both free and paid softwares and could not match with the original written horoscope, and after buying both Thirukanitham and Vakya panchangam, finally found out that my horoscope is written based on Thirukanitham but still not able to match Navamsa position (atleast one planet differs in its place) and find substantial difference in Dasa bukthi. Have also tried with Agathiyar and Pulipani books for description of lagna (including situation of residential house at the time of birth, etc) and also book on BTR by Sastry, but still not able to land on correct birth time. Would be glad if you can write more exhaustive series on Birth time rectification for the benefit of many of us. The fruit of correct Birth time can be realised with correct future prediction based on planetary positions at the time of birth, Dasabukthi and Kocharam. The paid consultancies (many) did not yield correct Birth time despite having given exhaustive list of major happenings in life. Therefore would look for a assistance from you and/or any of the learned members of our classroom. With best regards. PULICAT BALA, Riyadh////
பொறுத்திருங்கள். செய்வோம். தற்சமயம் நேரமில்லை பாலா!
////Blogger ananth said...
ReplyDeleteஜாதகங்களையோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அவற்றை கணிப்பதற்கு நான் ஜகன்னாத ஹோரா மட்டும்தான் பயன் படுத்துகிறேன். நான் எதிர்பார்ப்பது அனைத்தும் (features) வேறு free softwareகளில் இருப்பதில்லை.////
அது என்னவோ உண்மைதான். ஆனால் முழுமையாக தமிழில் இல்லாதது ஒரு குறையே!
தமிழில் எடுத்துக்கொள்ளூம் வசதி உள்ளது. Top Menu > Preferences > related to display > chart style & Lanquage > Tamil
ஆனால் மண் ரோடுதான் போட்டிருக்கிறார்கள். பாதிப் பகுதிதான் தமிழில் வருகிறது.