Astrology யாரடா மேன்மக்கள்?
Key Points
முக்கியவிதிகள்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே;
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!
1
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது & தேய்பிறைச் சந்திரன் மற்றும் தீய கிரகத்துடன் கூட்டாக இருக்கும் புதன் ஆகியவை தீமைகளையே செய்யக்கூடியவை. குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுபக்கிரகத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கும் புதன் ஆகியவை எப்போதும் நன்மைகளையே செய்யக்கூடியவை.
2.
குரு மிகவும் வலிமையான கிரகம். நம்பர் ஒன் சுபக்கிரகம். தீமைகளைக் குறைக்கூடிய கிரகம். வாழ்வில் செழுமையை உண்டாக்கக்கூடிய கிரகம் (Prosperity in ones life) சுக்கிரனுக்குக் குருவைப்போன்று முழு வலிமை இல்லாவிட்டாலும், அதுவும் வலிமையான கிரகம்தான். நன்மைகளைச் செய்யும் கிரகம்தான். புதனுக்குக் குருவைப்போல வலிமை இல்லை யென்றாலும், சுபனோடு கூட்டணி போட்டால் வலிமை உடையதாகிவிடும்.
3.
குரு ஜாதகத்தில் நீசம் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்.
4.
குரு ஜாதகனுக்குப் பல விதங்களில் நன்மைகளையும், உதவிகளையும் செய்யக் கூடியது. சுக்கிரன் ஜாதகனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படும். வாழ்க்கையில் சொகுசை (Luxury) உண்டாக்கும். குருவிற்கு தேவகுரு என்று பெயர். சுக்கிரனுக்கு அசுர குரு என்று பெயர்.
5.
தீமை செய்யக்கூடிய கிரகங்களில் சனி முதன்மையானது. ஜாதகனுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கொடுக்கக்கூடிய கிரகமும் அதுதான். வாழ்க்கையின் பல பரிமாணங்களை உணரவைக்கக்கூடிய கிரகமும் அதுதான். இறையுணர்வை அதிகமாக்கும் கிரகமும் அதுதான்!
6.
செவ்வாய் அதற்கு (சனிக்கு) நேர்மாறானது. ஜாதகனுக்குக் கோபம், பழிவாங்கும் தன்மைகளை ஏற்படுத்தும். சில ஜாதகர்களை தீவிரவாதி யாக்கும். கலவரங்களில் ஈடுபடவைக்கும். ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து அவைகள் உண்டாகும்.
மேலே கூறியவற்றில் விதிவிலக்கும் உண்டு. சில தீய கிரகங்கள், சில லக்கினக்காரர்களுக்கு, இயற்கையாகவே நன்மை செய்யக்கூடிய
கிரகமாக இருக்கும்.
உதாரணத்திற்கு ரிஷப லக்கினக்காரர்களுக்கு சனி யோககாரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு சனி, ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு உரியவன். யோகங்களைக் கொடுக்கத் துவங்கிவிடுவான். திகைக்க வைக்கக்கூடிய அளவிற்கு யோகங்களைக் கொடுப்பான்.
இடத்தைவைத்து, தீய கிரகங்கள் நன்மை செய்வதைப்போல, நன்மை செய்யக்கூடிய கிரகங்கள், தீய இடங்களில் இருந்தாலும், தன்னுடைய இயற்கையான குணத்தை இழக்காமல், ஜாதகனுக்கு நன்மைகளையே செய்யும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
7.
கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் நல்ல நிலைமையில் வலுவாக இருக்கும் ராகுவும், கேதுவும், தங்களுடைய தசாபுத்திகளில், ஜாதகனுக்கு நன்மைகளையே செய்வார்கள்.
8.
கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருக்கும் குரு பகவான், ஜாதகனுக்குத் தன்னுடைய தசா புத்திகளில் அதிகமான அளவு நன்மைகளையே செய்வார். தனது 5, 7 & 9 ஆம் பார்வையால் பார்க்கும் வீடுகளுக்கு உரிய நன்மைகளை வாரி வழங்குவார். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்குத் திருமணத்தை நடத்திவைப்பார். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். குறிப்பாக லக்கினத்தைப் பார்க்கும் குரு ஜாதகனுக்கு மொத்தமாக நன்மைகளை வாரி வழங்குவார்.சுபக்கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்புக்கள்:
9. இருக்கும் இடத்தைவைத்து நன்மைகள் கிடைக்கும்
10. பார்வையை வைத்து நன்மைகள் கிடைக்கும்
11. அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதியோடு கூட்டு அல்லது பார்வையைவைத்து நன்மைகள் கிடைக்கும்.
12. அமர்ந்திருக்கும் இடத்திற்கான காரகனோடு ஆன பார்வையைவைத்து நன்மைகள் கிடைக்கும்.
13. ஒரு சுபக்கிரகம் மற்றொரு சுபக்கிரகத்துடன் கூட்டாக இருந்தாலும் அல்லது பார்வையோடு இருந்தாலும் இரண்டு மடங்கு நன்மைகளை வாரி வழங்கும்.
14. அதே அமைப்பில் ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்துடன் கூட்டு அல்லது பார்வையுடன் இருந்தால் இரண்டு மடங்கு தீமைகளையே செய்யும்!
15. நன்மையான கிரகங்கள், தீமையான இடத்தில் அமரும்போது தீமைகளைச் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ரிஷப லக்கினத்திற்கு குரு தீயவன். எட்டாம் இடத்து அதிபதி. எட்டாம் இடத்து அதிபதி லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகனுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவார் என்பது பொதுவிதி. ஆனால் ரிஷப லக்கினத்தில் அமரும் குரு அதைப் பொய்யாக்கிவிடுவார். அந்தப் பொதுவிதியைப் பொய்யாக்கிவிடுவார், ஜாதகன் பாதிப்பு அடையமாட்டான். குரு பகவானின் இயற்கத்தன்மை அது. அதை மனதில் வையுங்கள்.
மேல்நிலை வகுப்புப் பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை வைத்து பொத்தாம் பொதுவாக இதனால் நன்மை, அவற்றால் தீமை என்று சொல்லிவிடக்கூடாது. இருக்கும் இடம், காரத்துவம், யோககாரன் யார், யாருடைய பார்வை, யாருடைய சேர்க்கை என்று பலவற்றையும் ஆராய்ந்துதான் நன்மை தீமை இப்படி இருக்கலாம் என்று கோடிட்டு காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிய வைத்த பாடம் ஐயா.
ReplyDeleteஇன்று காலை பொற்றகடாயுதித்த உஷையின் மணவாளன், என்றும் நம் அனைவருக்கும் மேன்மை பொருந்திய சுடரொளியினையொத்த நல்லறிவினை நல்குவானாகுக. காலை வணக்கம், அன்பர்களே!
ReplyDeleteதங்கள் பாடங்களில் மிகவும் சிறந்த பாடமாக இது மனதில் பட்டது. நடையும் அருமை, கருத்தும் அருமை.
ReplyDelete"அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
...
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்!"
என்னும் ஔவை வாக்கினை நினைவு படுத்திய பதிவு.
உங்கள் வலைத்தளமும் இன்னொரு ஔவை வாக்கினை நினைவுபடுத்தும் விதமாக தான் அமைந்துள்ளது.
"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்"
நன்றிகள் பல, வாத்தியாரே.
இந்த நாளும் இனி வரும் நாட்களும், கற்றோர் அறிவும், மூத்தோர் சொல்வாக்கும், மேன்மக்கள் செல்வமும் போல பயனுள்ளதாக அமைய இறையருளை வேண்டுகிறேன்.
+++
நன்றிகளுடன்
புவனேஷ்
குரு மங்கள் யோகா என
ReplyDeleteவடமாநிலத்தவர் புகழ்வர்
சங்கு படம் சரி..
அந்த படம் எதற்கு..?
கூகிளால் முடியாதது என
கூறிச்சொல்லும் பதிப்பு நன்று
sir,
ReplyDeletegood morning .very good lesson with fundamental key points which have to be analysed while analyse horoscope.Thanks a lot.
By k.umapathy
Guruvirkku vnkkam
ReplyDeletepresent
Nandri
சங்கு சுட்டாலும் வெண்மை தரும். மேன்மக்கள் மேன்மக்களே. மேல் நிலை பாடத்தை இங்கும் தந்து வாத்தியாரே அதற்கு உதாரனமாகிவிட்டார்.
ReplyDeleteபாடம் அத்தனை சுலபமாக புரிகிறது அதற்கு தாங்களின் எழுத்துநடை என்று என்னுள் படுகிறது. நன்றிகள் அய்யா.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே;
ReplyDeleteசங்கு சுட்டாலும் வெண்மை தரும்!
சிறப்பான உதாரணங்களால் புரியவைத்த அருமையான பகிர்வுகள்.. நன்றி ஐயா..
Hello Sir,
ReplyDeleteThanks for this lesson.
Vannamalar
nalla padam ayya
ReplyDeleteமிகவும் அருமை. நன்றி ஐயா.
ReplyDeleteஐயா வணக்கம்.
ReplyDeleteஜோதிடம் பொய் என்று கூறும் நபர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு கூறுகின்றேன்.
நீச பங்கராஜ யோக ஜாதகம் கொண்ட பையனுக்கு பெண் வீட்டுக்காரர் வழிய வந்து பெண் கொடுக்க எத்தனையோ முறை முயன்றும் ஜோதிடத்தையே விதி என்று இருந்த நமது கதாநாயகன் 33 க்கு மேல் தான் கல்யாணம் என்று இருந்த முடிவால் கிடைத்த அமிர்த பரிசு என்ன என்று இருக்கும் என்று கூறுங்கள் பார்ப்போம் பெரியவர்களே , ஆம் ஒழுக்கம் கெட்ட பெண்ணிடம் இருந்து தப்பி விட்டான் .
பெண்ணை அடுத்த பையனுக்கு பேசி நிச்சயதார்த்தம் ஆகிய பின்னர் பெண் தன்னுடன் படித்தோ, or வேலை பார்த்த ஆணையோ கருசலன்காட்டில் கஷ்டபட்டு முது நிலை பட்டம் வரை படிக்க வைத்த தந்தைதைக்கு கொடுத்த பரிசு பெற்றவரிடம் கூறாமல் ஓடிவிட்டாள் பெற்றவர்களுக்கு அவமானம். அவமானம்.nalla வேலையாக தெய்வமே, சாமியே, சாஸ்திரமே, பெரியவர்களின் சொல்லுகின்ற படியே நடக்கணும் என்றே 33 varai கதியே கதி என்று இருந்த நமது ஒழுக்கம் உள்ள ஆளின் வாழ்க்கை நன்கு மலர போகின்றது ஏனெனில் இதனிளையும் அடி பட்டாச்சு அல்லவா?
3 varudamaaka முயன்றும் எதற்கும் அசராத நம்ம ஆள் பரம்பரையாக ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் போன்றவற்றியில் ஈடுபாடுகொண்ட குடும்ப பையனுக்கு அவனை விட அதிகம் படித்த் பெண் அதுவும்.
20 நாட்களுக்கு நடந்த உண்மை சன்பவம். பெண் கொடுக்க நிறைய ஆளிடம் தூது விட்டது சுமார் மூன்று வருசத்திற்கு மேல் ஆகும்.
சாமியுய்ம் உண்மை . சம்பிராதயம் மற்றும் சாஸ்திரமும் உண்மை ஆகும்.
பையன் வகுப்பறை மாணவன்தான் ஆனால் " பெண்ணோ ", நாற்றம் தேவை இல்லை. நல்லதை அதுவும் உண்மை சம்பவத்துடன் கூறும்பொழுது ஐயா >
--
Life is beautiful !!!
Dear Sir,
ReplyDeleteGood lesson sir. I read it fully and liked the way you expressed it. One doubt, I heard like Guru should not get Uttacham for Thula lagnam, if he gets, he doesn't do good things to native. Is it true? even if he has 8parals. Please explain in one word if you have time.
Thanks
Saravanan.S
Coimbatore.
அய்யா இரண்டு தீய கிரகங்கள் ஒரு இடத்தில அமரும் பொது திய பலன் எனில் ? விபரித்த ராஜா யோகா அமைப்பிற்கு என்ன பலன்?
ReplyDeleteஅய்யா இரடு திய கிரகங்கள் சேர்ந்தால் திய பலன் என்றல் விபரித்த ராஜா யோகத்தில் பலன் மாறுபடும் அல்லவா?
ReplyDeleteமீண்டும் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி ஐயா!
ReplyDelete////Blogger சரண் said...
ReplyDeleteஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை வைத்து பொத்தாம் பொதுவாக இதனால் நன்மை, அவற்றால் தீமை
என்று சொல்லிவிடக்கூடாது. இருக்கும் இடம், காரத்துவம், யோககாரன் யார், யாருடைய பார்வை, யாருடைய சேர்க்கை என்று
பலவற்றையும் ஆராய்ந்துதான் நன்மை தீமை இப்படி இருக்கலாம் என்று கோடிட்டு காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிய வைத்த பாடம் ஐயா./////
உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி சரண்!
/////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam sir/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஇன்று காலை பொற்றகடாயுதித்த உஷையின் மணவாளன், என்றும் நம் அனைவருக்கும் மேன்மை பொருந்திய சுடரொளியினையொத்த
நல்லறிவினை நல்குவானாகுக. காலை வணக்கம், அன்பர்களே!/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி புவனேஷ்வர்!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteதங்கள் பாடங்களில் மிகவும் சிறந்த பாடமாக இது மனதில் பட்டது. நடையும் அருமை, கருத்தும் அருமை.
"அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். ...
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்!"
என்னும் ஔவை வாக்கினை நினைவு படுத்திய பதிவு.
உங்கள் வலைத்தளமும் இன்னொரு ஔவை வாக்கினை நினைவுபடுத்தும் விதமாக தான் அமைந்துள்ளது.
"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்"
நன்றிகள் பல, வாத்தியாரே.
இந்த நாளும் இனி வரும் நாட்களும், கற்றோர் அறிவும், மூத்தோர் சொல்வாக்கும், மேன்மக்கள் செல்வமும் போல பயனுள்ளதாக அமைய இறையருளை வேண்டுகிறேன். +++
நன்றிகளுடன்
புவனேஷ்/////
ஆமாம். அவ்வையின் பாடல்வரிகள் அத்தனையும் முத்துக்கள். 3 பாடல்களைத் தொகுத்துக் கொடுத்த மேன்மைக்கு நன்றி!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteகுரு மங்கள் யோகா என
வடமாநிலத்தவர் புகழ்வர்
சங்கு படம் சரி..
அந்த படம் எதற்கு..?
கூகிளால் முடியாதது என
கூறிச்சொல்லும் பதிப்பு நன்று////
சங்கைப் பார்த்தால் அவர் நினைப்பு வராமல் இருக்குமா?
////Blogger k.umapathy said...
ReplyDeletesir,
good morning .very good lesson with fundamental key points which have to be analysed while analyse horoscope.Thanks a lot.
By k.umapathy////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteGuruvirkku vnkkam
present
Nandri/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
////Blogger thanusu said...
ReplyDeleteசங்கு சுட்டாலும் வெண்மை தரும். மேன்மக்கள் மேன்மக்களே. மேல் நிலை பாடத்தை இங்கும் தந்து வாத்தியாரே அதற்கு
உதாரணமாகிவிட்டார்.
பாடம் அத்தனை சுலபமாக புரிகிறது அதற்கு தாங்களின் எழுத்துநடை என்று என்னுள் படுகிறது. நன்றிகள் அய்யா//////.
உண்மைதான். அதனால்தான் இத்தனை பேர்கள் வந்து படிக்கிறார்கள். நானும் அதை மனதில் கொண்டு எழுதுகிறேன்!
////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே;
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!
சிறப்பான உதாரணங்களால் புரியவைத்த அருமையான பகிர்வுகள்.. நன்றி ஐயா../////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!
////Blogger Vannamalar said...
ReplyDeleteHello Sir,
Thanks for this lesson.
Vannamalar/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
////Blogger arul said...
ReplyDeletenalla padam ayya////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger vprasana kumar said...
ReplyDeleteமிகவும் அருமை. நன்றி ஐயா./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி பிரசன்ன குமார்!
Blogger Maaya kanna said...
ReplyDeleteஐயா வணக்கம்.
ஜோதிடம் பொய் என்று கூறும் நபர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு கூறுகின்றேன்.
நீச பங்கராஜ யோக ஜாதகம் கொண்ட பையனுக்கு பெண் வீட்டுக்காரர் வழிய வந்து பெண் கொடுக்க எத்தனையோ முறை முயன்றும் ஜோதிடத்தையே விதி என்று இருந்த நமது கதாநாயகன் 33 க்கு மேல் தான் கல்யாணம் என்று இருந்த முடிவால் கிடைத்த அமிர்த பரிசு என்ன என்று இருக்கும் என்று கூறுங்கள் பார்ப்போம் பெரியவர்களே , ஆம் ஒழுக்கம் கெட்ட பெண்ணிடம் இருந்து தப்பி விட்டான் .
பெண்ணை அடுத்த பையனுக்கு பேசி நிச்சயதார்த்தம் ஆகிய பின்னர் பெண் தன்னுடன் படித்தோ, or வேலை பார்த்த ஆணையோ
கருசலன்காட்டில் கஷ்டபட்டு முது நிலை பட்டம் வரை படிக்க வைத்த தந்தைதைக்கு கொடுத்த பரிசு பெற்றவரிடம் கூறாமல் ஓடிவிட்டாள் பெற்றவர்களுக்கு அவமானம். அவமானம்.nalla வேலையாக தெய்வமே, சாமியே, சாஸ்திரமே, பெரியவர்களின் சொல்லுகின்ற படியே நடக்கணும் என்றே 33 varai கதியே கதி என்று இருந்த நமது ஒழுக்கம் உள்ள ஆளின் வாழ்க்கை நன்கு மலர போகின்றது
ஏனெனில் இதனிளையும் அடி பட்டாச்சு அல்லவா?
3 varudamaaka முயன்றும் எதற்கும் அசராத நம்ம ஆள் பரம்பரையாக ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் போன்றவற்றியில் ஈடுபாடுகொண்ட குடும்ப பையனுக்கு அவனை விட அதிகம் படித்த் பெண் அதுவும்.
20 நாட்களுக்கு நடந்த உண்மை சன்பவம். பெண் கொடுக்க நிறைய ஆளிடம் தூது விட்டது சுமார் மூன்று வருசத்திற்கு மேல் ஆகும்.
சாமியுய்ம் உண்மை . சம்பிராதயம் மற்றும் சாஸ்திரமும் உண்மை ஆகும்.
பையன் வகுப்பறை மாணவன்தான் ஆனால் " பெண்ணோ ", நாற்றம் தேவை இல்லை. நல்லதை அதுவும் உண்மை சம்பவத்துடன் கூறும்பொழுது ஐயா >//////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி (மாய) கண்ணன்!!
////Blogger Saravana said...
ReplyDeleteDear Sir,
Good lesson sir. I read it fully and liked the way you expressed it. One doubt, I heard like Guru should not get Uttacham for Thula lagnam, if he gets, he doesn't do good things to native. Is it true? even if he has 8parals. Please explain in one word if you have time.
Thanks
Saravanan.S
Coimbatore.////
துலா லக்கினத்தற்கு குரு 3 & 6ற்கு உரியவன். அதனால் அப்படிச் சொல்வார்கள். ஆனால் குரு எந்த நிலையில் இருந்தாலும்
சுபக்கிரகமே. தன் சேர்க்கையால், பார்வையால் ஜாதகனுக்கு பல நன்மைகளைச் செய்யக்கூடியவர்
////Blogger manikandaprakash said...
ReplyDeleteஅய்யா இரண்டு திய கிரகங்கள் சேர்ந்தால் தீய பலன் என்றால் விபரித ராஜா யோகத்தில் பலன் மாறுபடும் அல்லவா?/////
நீங்களே யோகம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். யோகத்தில் அந்த அமைப்பிற்கு விதிவிலக்கு உண்டு!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமீண்டும் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி ஐயா! /////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!
Dear Sir,
ReplyDeleteYou have indicated that even if planet Jupiter does not have any powers, it will do good.
"குரு ஜாதகத்தில் நீசம் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்"
How about when Jupiter is very close to the Sun. In my horoscope, Sun and Jupiter are within 3 degrees to each other in Leo (2nd house) along with moon.
Thank you for your time.
M. Elayaraja, Davis, CA.
///Blogger Unknown said...
ReplyDeleteDear Sir,
You have indicated that even if planet Jupiter does not have any powers, it will do good.
"குரு ஜாதகத்தில் நீசம் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்"
How about when Jupiter is very close to the Sun. In my horoscope, Sun and Jupiter are within 3 degrees to each other in Leo (2nd house) along with moon.
Thank you for your time.
M. Elayaraja, Davis, CA./////
சூரியனோடு அஸ்தனமாகியிருந்தாலும் குரு, ஜாதகனுக்கு நன்மையே செய்வார்.
நல்ல தகவல்கள் ஐயா...நன்றி...
ReplyDeleteநன்றி அய்யா
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete