மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.9.12

Astrology செவ்வாயும் அதன் தோஷங்களும்!

Astrology செவ்வாயும் அதன் தோஷங்களும்!

மேல்நிலைப் பாடம்
முக்கியமான விதிகள்
தலைப்பு: செவ்வாய் தோஷம்


செவ்வாய் தோஷம் என்ற சொல் திருமணச் சந்தையில் சில சிக்கல்களை உண்டு பண்ணும்!

தோஷம் இல்லாத சுத்த ஜாதகத்தையுடைய குழந்தைகளுக்கு வரன் பார்க்கும் போது, அவர்களின் பெற்றோர்கள், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்றால் வேண்டாம் என்று மறுத்துவிடுவார்கள்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
அது உண்டா அல்லது இல்லையா?
அதனால் பாதிப்பு உண்டா அல்லது இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை இன்று பார்ப்போம்!
---------------------------------------------
ஒரு ஜாதகத்தில் லக்கினம், நான்காம் வீடு, 7ம் வீடு, 8ம் வீடு மற்றும்12ம் வீடுகளில் செவ்வாய் இருந்தால் ( If mars is placed in those houses) அந்த ஜாதகம் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம் ஆகும். அதிலும் ஒரு கணக்கு உண்டு. 7ல் அல்லது 8ல் செவ்வாய் இருந்தால் அது முழு தோஷம் என்றும் மற்ற இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு கால், அரை, முக்கால் என்று அளவையும் சொல்வார்கள். சில ஜோதிடர்கள் இரண்டாம் வீட்டையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வார்கள்

பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்தப் பெண்ணிற்கு வரன் பார்க்கும் போது, அதே போன்று அல்லது அதைவிட அதிகமாக தோஷமுள்ள பையனைத் தேடுவார்கள்.

அப்படி தோஷப் பொருத்தம் இல்லாமல் செய்யப்படும் திருமணங்கள் அவலத்தில் முடிவதுண்டு. பிரச்சினையில் முடிவதுண்டு.

உதாரணத்திற்கு ஒரு பெண் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருந்தால், அது மாங்கல்ய ஸ்தானம் என்பதால், கடுமையான தோஷம் என்பார்கள். அதற்குப் பலன், ஒன்று அவள் விதவையாகி விடுவாள் அல்லது அவளூடைய கணவனுக்கு ஆயுள் அதிகமாக இருக்கும் அமைப்பில், அவள் தன் கணவனை விட்டுப் பிரிந்து வந்து விடுவாள் என்பார்கள்.

ஆனால் சில ஜோதிடர்கள் அதற்கு விதிவிலக்கு என்று சில கணக்குகளைச் சொல்வார்கள்.

மேஷ லக்கினத்திற்கும், விருச்சிக லக்கினத்திற்கும் செவ்வாய் அதிபதி. ஆகவே அந்த லக்கினக்காரர்களை செவ்வாய் தோஷம் ஒன்றும் செய்யாது. செவ்வாயே லக்கினாதிபதியானதால், அவன் தனக்குத் தானே எப்படி தோஷத்தைச் செய்வான்? ஆகவே அந்த இரு லக்கினக்காரகளும் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள் என்பார்கள். ஜாதகத்தில் உச்சம் பெற்றுள்ள செவ்வாயும் தோஷத்தைக் கொடுக்காது என்பார்கள்.

தோசம் உண்டு என்று சொல்லும் ஜோதிடர்கள் எல்லாம் தங்கள் அனுபவத்தை வைத்து அவ்வாறு சொல்வார்கள். ஆகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்! அதாவது அனுபவமிக்க ஜோதிடர்சொன்னால், தோஷத்தை எடுத்துக் கொண்டு ஒழுங்கு மரியாதையாக தோஷமுள்ள ஜாதகத்தையே இணைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ரிஸ்க் எடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்

எனக்குத் தெரிந்த பெண்கள் இருவரின் வாழ்வில் அவ்வாறு நடந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் எட்டில் செவ்வாய். அதுவும் உச்சம் பெற்ற செவ்வாய். ஆனால் அவர்கள் செவ்வாயால் திருமண வாழ்வில் பலத்த அடி வாங்கிக்கொண்டு திரும்பி வந்துவிட்டார்கள். மேட்டர் நீதி மன்றம் வரை சென்று விவாகரத்தும் ஆகிவிட்டது.

சில பெண்கள் இந்த செவ்வாய் தோஷத்தால், தங்கள் கணவனைப் பறி கொடுத்திருக்கலாம். ஆனால் அது செவ்வாயின் இருப்பிடத்தை மட்டும் ஏற்பட்டதாக இருக்காது. செவ்வாய் ஜாதகத்தில் வேறு ஏதாவது தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் வலிமை கெட்டு இருக்கும் நிலைமையால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே முழு ஜாதகத்தையும் அலசிப் பார்ப்பது அவசியம்.

செவ்வாய் தோஷத்தால் வாழ்க்கையே முடிந்து விடாது. முதலில் கவலைப் படுவதை அல்லது பயப்படுவதை நிறுத்த வேண்டும். அந்த தோஷம் காலாவதியாகிவிடும் என்று பல உப விதிகள் சொல்லப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதையும் பார்க்க வேண்டும். உலகில் விதிகளும் உண்டு. விதிவிலக்குகளும் உண்டு. அதை மனதில் கொள்க!

சில ஜோதிடர்கள், கடுமையான செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகங்களுக்கு (கடுமை என்பது 7 அல்லது 8ல் செவ்வாயுடன், ராகு, கேது அல்லது சனி சேர்ந்து இருக்கும் நிலைமை) சில பரிகாரங்களைச் சொல்வார்கள். அவ்வாறான அமைப்பு உள்ள பெண்ணிற்கு திருமணம் செய்ய முனையும்போது, மனைவியை இழந்த இளைஞனுக்கு, இரண்டாம் தாராமாக அப்பெண்ணைத் திருமணம் செய்யச் சொல்வார்கள்

இன்றைய கால கட்டத்தில் இரண்டாம் தாரமாகக் கழுத்தை நீட்ட எந்தப் பெண்ணும் ஒப்புக்கொள்ள மாட்டாள். எடுத்துச் சொன்னாலும் அவளுக்குப் பிடிபடாது. அவ்வாறு அமைப்பு இருப்பதால் மட்டுமே அவள் விதவை யாகிவிடுவாள் என்று சொல்லிவிட முடியாது. ஜாதகத்தில் உள்ள மற்ற சுப அமைப்புக்களையும் பார்க்க வேண்டும்.

ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:

லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: சிறு விஷயங்களுக்குக்கூட விவாதம் செய்யக்கூடியவர். உறவுகளின் மேல் தன் அதிகாரத்தைச் செலுத்தக்கூடியவர்.

இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: கேட்பவைனைக் கோபப்பட வைக்கும் பேச்சை உடையவர்.

நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதன் காரணமாக அடிக்கடி அவருடைய வேலை அல்லது தொழிலில் சிக்கல்கள், மாற்றங்கள் ஏற்படலாம்.

ஏழில் செவ்வாய் இருந்தால்: அதீதமான செயலாற்றல் உடையவர். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உடையவர். பல சமயங்கள் மற்றவர்களுடன் ஒத்துப்போக மாட்டார்.

எட்டில் செவ்வாய் இருந்தால்: இளம் வயதிலேயே கணவன் அல்லது மனைவியைப் பறிகொடுக்க நேரிடலாம்.

பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: பண இழப்புக்கள். அதிகமான விரோதிகள். அடக்கமுடியாத கோப மனப்பான்மை உடைய ஜாதகம்.

இவை அனைத்தும் பொது விதிகள். சுபக் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையால் இவைகள் குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

பண்டைய நூல்களில் குறிப்பாக பிருஹத் பாரசார ஹோர சாஸ்திர நூலில் செவ்வாய் தோஷத்தைப் பற்றிக் குறிப்பிடப் பெற்றுள்ளது. 1, 4,7, 8 & 12ல் சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன்  இருக்கும் செவ்வாய்,  தோஷத்தைக் கொடுக்காது என்கிறது அந்த நூல். அதுபோன்ற சுபகிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இல்லாமல் தனித்திருக்கும் செவ்வாய் தோஷத்தை உண்டாக்குமாம். அவ்வாறு 7 அல்லது 8ல் செவ்வாய் இருக்கும் பெண் தன் கணவனை இளம் வயதிலேயே பறி கொடுக்க நேரிடும் என்று அந்த நூல் கூறுகின்றது.

தோஷத்திற்கான சில விஷேச விதிவிலக்குகள்

ரிஷப லக்கினக்காரர்களுக்கும் சிம்ம லக்கினக்காரர்களுக்கும் இரண்டாம் வீட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

மகர லக்கினக்காரர்களுக்கு 4ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

மகர லக்கினத்திற்கு 7ல் அல்லது கடக லக்கினத்திற்கு 7ல் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

சிம்ம லக்கினத்திற்கு எட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

மிதுன லக்கினத்திற்கு 12ல் இருக்கும் செவ்வாயாலும், விருச்சிக லக்கினத்திற்கு 2ல் இருக்கும் செவ்வாயாலும் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

கடக, மற்றும் சிம்ம லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் யோககாரகன், ஆகவே அவர்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருந்தாலும் தோஷம் இல்லை என்பது விதி (rule)

லக்கினத்தில் குரு அல்லது சுக்கிரன் அமர்ந்திருக்கும் ஜாதகர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்பது விதி (rule)

குரு அல்லது சந்திரனுடன் சேர்ந்திருக்கும் அல்லது அவர்களின் நேரடிப்பார்வையில் இருக்கும் செவ்வாயால், தோஷம் இல்லை என்பது விதி (rule)

செவ்வாய் தோஷம் இருந்தாலும் 28 வயதிற்கு மேல், அந்த தோஷம் வலிமை இழந்து விடும் என்பவர்களும் உண்டு. பொதுவாக 30 வயதில் ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் காலாவதியாகிவிடும்.

தோஷம் உள்ள ஜாதகர்கள் அவ்வாறு தோஷம் உள்ள ஜாதகரையே தேடிப் பிடித்து மணந்து கொள்வது நல்லது.

முருகப் பெருமானின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர் செவ்வாய். ஆகவே முருகப் பெருமானை வழிபடுவது தோஷத்தைக் குறைக்கும்.
--------------------------------------------------------------
என்ன படிக்கப் படிக்க தலையைச் சுற்றுகிறதா?

ஜோதிடம் என்றால் சும்மாவா? அப்படித்தான் சுற்றும்.

அதை போக்க அஷ்டகவர்க்கம்337 சரக்கில் இரண்டு பெக் அடித்துவிட்டு, நிம்மதியாக இருங்கள்.

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

50 comments:

  1. குருவிற்கு வணக்கம்
    செவ்வாய் தோஷம் பாடம் நன்றக
    உள்ளது.
    நன்றி

    ReplyDelete
  2. காலை வணக்கம், ஐயா.

    ReplyDelete
  3. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்.
    போட்டது முளைக்கும், செய்தது கிடைக்கும்.....
    எண்ணம் போல வாழ்வு!

    ReplyDelete
  4. நல்ல பாடம் ஐயா...1, 4, 7, 8 மற்றும் 12ல் உள்ள செவ்வாய் நீசமானால் தோசம் உண்டா? அதே போல் ராசியில் தோசத்துடனும் அம்சத்தில் சுபகிரகத்துடனும் இருந்தால் என்ன பலன்?

    ReplyDelete
  5. Sir if a person having viruchiga lagna and guru and kethu in the lagna and Sruyan and sevvai is in the 8th place from lagna,will they be considered as Chevvai dosham?

    ReplyDelete
  6. In a horoscoper,Guru and Kethu in lagna(Viruchiga lagna)and in the 8th place Chevvai and Suryan.Will they be considered as Chevvai dosham?

    ReplyDelete
  7. அய்யா காலை வணக்கம்

    ReplyDelete
  8. மேல் நிலைப்பாடத்தில் படித்துள்ளதால் எனக்கு இது மீள்பதிவுதான்.
    நன்றாக இருக்கிறது என்று சொல்லவும் வேண்டுமோ?

    என் மூத்த மகளுக்கு 7ல் கேது எட்டில் செவ்வாய். அதேபோல மாப்பிள்ளைக்கு 8ல் செவ்வாய் உள்ளது. எனவே தோஷ சமானம். ஏதோ ஓடிக் கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  9. வாத்தியார் ஜாயா 2 ஆம் வீடுகளில்
    இருக்கும் செவ்வாயால் ஜாதகனுக்கு தோஷம் இல்லையா?


    ஜாயா ராகு கேது ரிசபத்தில் நீசமடையும் விருச்சிகத்தில் உச்சம் அடையும் அப்படி யென்றால் ராகு விருச்சிகத்தில் உச்சம் அடையும் போது கேது ரிசபத்தில் நீசமடையும் அது ஏன்? இரட்டையர்களில் ஒருவா் உச்சமடைவதும் ஒருவா் நீசமடைவதும் ஏன் இப்படி?

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய வாத்தியார் ஜாயா அவர்களே வணக்கம் “ஜகந்நாதா ஹோரா” மூலம் America உள்ளிட்ட வெளிநாடுகளில் பிறந்தவர்களின் ஜாதகத்தை கணக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?

    ReplyDelete
  11. Dear Sir,

    Thank you very much for the detailed explanation of the general rules related to "Sevvai-Dhosam".

    M. Elayaraja,
    Davis.

    ReplyDelete
  12. thansu .lagnam 12 iil chavai thozom unda iila sir ..

    ReplyDelete
  13. சந்(திர)தோஷம் கு(டி)றித்த பதிவு
    சரியாக ஆவணி தொடக்கத்தில் ..

    சினிமா திரையரங்குகள் mall ஆனது போல்
    திருமண மண்டபங்களும் உரு மாற்றப் பெறும் காலம் தொலைவில் இல்லை..

    என்ற சிந்தனையுடன் வருகை பதிவு..

    ReplyDelete
  14. Mor guruji
    Informative posting.I would like to add some more on it.
    1. 7 & 8th are longevity of individual's and also connected with the partners longevity.
    2. These two houses represent sexual organs, Mars represents Vitality, hence, the sexual compatibility is also essential for non-breaking of married life.
    3.Of all the cruel planet Mars is the killer & harsh, Violent.We watch lot of cruelty in married life- In speech, Physically.
    4.For 7 & 8 Mars its always best to pair with same position.
    5.Its better to marry after 28th year.
    6.There is NO Parihara Chevvai, as some astrologer says while matching.
    7.Visit to Vaideeswaran temple is must.or PALANI murugan.Hence, Chevva Dosham is keenly taken in chart matching.
    kkdxb having the Dosha. Vrichigam

    ReplyDelete
  15. Astakavargam patri entha varudm/paadam/pathivil eazithi ullergall naan dobull promotion manavan nanri iyaa vanagam

    ReplyDelete
  16. 28 அல்லது 30 வயதிற்குள் தோஷ காலாவதி என்பதற்கு காரணங்கள் ஏதேனும் உண்டா ?? இதற்கு விதிவிலக்குகள் ஏதேனும் உள்ளனவா ??

    ReplyDelete
  17. /////Blogger eswari sekar said...
    vanakam sir/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  18. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    செவ்வாய் தோஷம் பாடம் நன்றாக
    உள்ளது.
    நன்றி////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. //////Blogger Bhuvaneshwar said...
    காலை வணக்கம், ஐயா./////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  20. //////Blogger Bhuvaneshwar said...
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்.
    போட்டது முளைக்கும், செய்தது கிடைக்கும்.....
    எண்ணம் போல வாழ்வு!//////

    கிடைப்பதை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும்!

    ReplyDelete
  21. /////Blogger Arul said...
    நல்ல பாடம் ஐயா...1, 4, 7, 8 மற்றும் 12ல் உள்ள செவ்வாய் நீசமானால் தோசம் உண்டா? அதே போல் ராசியில் தோசத்துடனும் அம்சத்தில் சுபகிரகத்துடனும் இருந்தால் என்ன பலன்?//////

    உண்டு! தோஷத்திற்கெல்லாம் ராசியை மட்டும்தான் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  22. /////Blogger kkdxb said...
    Sir if a person having viruchiga lagna and guru and kethu in the lagna and Sruyan and sevvai is in the 8th place from lagna,will they be considered as Chevvai dosham?/////

    செவ்வாய் எட்டில் இருக்கிறதல்லவா? பிறகு என்ன சந்தேகம்?

    ReplyDelete
  23. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம்/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  24. /////Blogger kmr.krishnan said...
    மேல் நிலைப்பாடத்தில் படித்துள்ளதால் எனக்கு இது மீள்பதிவுதான்.
    நன்றாக இருக்கிறது என்று சொல்லவும் வேண்டுமோ?
    என் மூத்த மகளுக்கு 7ல் கேது எட்டில் செவ்வாய். அதேபோல மாப்பிள்ளைக்கு 8ல் செவ்வாய் உள்ளது. எனவே தோஷ சமானம். ஏதோ ஓடிக் கொண்டு இருக்கிறது./////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  25. /////Blogger warman raja said...
    வாத்தியார் ஜாயா 2 ஆம் வீடுகளில்
    இருக்கும் செவ்வாயால் ஜாதகனுக்கு தோஷம் இல்லையா?//////

    கால் அளவு தோஷம் உண்டு!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ஜாயா ராகு கேது ரிசபத்தில் நீசமடையும் விருச்சிகத்தில் உச்சம் அடையும் அப்படி யென்றால் ராகு விருச்சிகத்தில் உச்சம் அடையும் போது கேது ரிசபத்தில் நீசமடையும் அது ஏன்? இரட்டையர்களில் ஒருவா் உச்சமடைவதும் ஒருவா் நீசமடைவதும் ஏன் இப்படி?/////

    இருவரும் ஒருவருக்கொருவர் 180 பாகை வித்தியாசத்தில் பயணிப்பதால்!
    இதெல்லாம் அடிப்படைப் பாடம். அதை எல்லாம் படிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

    ReplyDelete
  26. /////Blogger vasi said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் ஜாயா அவர்களே வணக்கம் “ஜகந்நாதா ஹோரா” மூலம் America உள்ளிட்ட வெளிநாடுகளில் பிறந்தவர்களின் ஜாதகத்தை கணக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?/////

    நீங்கள் ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டாம். அதில் எல்லா வசதிகளும் உள்ளன. பொறுமையாக அதில் உள்ள வசதிகள் அனைத்தையும் தோண்டிப் பாருங்கள்!

    ReplyDelete
  27. /////Blogger Unknown said...
    Dear Sir,
    Thank you very much for the detailed explanation of the general rules related to "Sevvai-Dhosam".
    M. Elayaraja,
    Davis./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Blogger arul said...
    nalla paadam////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. Blogger eswari sekar said...
    thansu .lagnam 12 iil chavai thozom unda iila sir ../////

    கால் அளவு தோஷம் உண்டு!

    ReplyDelete
  30. /////Blogger அய்யர் said...
    சந்(திர)தோஷம் கு(டி)றித்த பதிவு
    சரியாக ஆவணி தொடக்கத்தில் ..
    சினிமா திரையரங்குகள் mall ஆனது போல்
    திருமண மண்டபங்களும் உரு மாற்றப் பெறும் காலம் தொலைவில் இல்லை..
    என்ற சிந்தனையுடன் வருகை பதிவு..//////

    ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போல திருமணமின்றி ஜோடிகள் சேர்ந்து வாழப் போகும் காலமும் தூரத்தில் இல்லை!

    ReplyDelete
  31. /////Blogger Vrichigam said...
    Mor guruji
    Informative posting.I would like to add some more on it.
    1. 7 & 8th are longevity of individual's and also connected with the partners longevity.
    2. These two houses represent sexual organs, Mars represents Vitality, hence, the sexual compatibility is also essential for non-breaking of married life.
    3.Of all the cruel planet Mars is the killer & harsh, Violent.We watch lot of cruelty in married life- In speech, Physically.
    4.For 7 & 8 Mars its always best to pair with same position.

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  32. /////Blogger krishnababuvasudevan said...
    Astakavargam patri entha varudm/paadam/pathivil eazithi ullergall naan dobull promotion manavan nanri iyaa vanagam/////

    அஷ்டகவர்க்கம் மேல்நிலைப் பாடம். அதற்கு தனி இணைய தளம் உள்ளது http://classroom337.com

    ReplyDelete
  33. /////Blogger daran said...
    அஸ்தங்கதம் ஆன செவ்வாய் நல்லதா? அஸ்தங்கதம் ஆகாமல் சூரியன் உடன் சேர்ந்து இருந்தால் என்ன ஆகும்?
    செவ்வாய் தோஷத்திற்கு இரத்த தானம் செய்து பரிகாரம் தேடலாம் என்று படித்ததாக ஞாபகம்.////

    அஸ்தமனம் ஆனதால் மட்டும் தோஷம் போகாது! பரிகாரம் எல்லாம் கிடையாது!

    ReplyDelete
  34. /////Blogger நான் said...
    28 அல்லது 30 வயதிற்குள் தோஷ காலாவதி என்பதற்கு காரணங்கள் ஏதேனும் உண்டா ?? இதற்கு விதிவிலக்குகள் ஏதேனும் உள்ளனவா ??/////

    அதெல்லாம் அனுபவ மொழிதான். காரணங்கள், ஆதாரங்கள் எல்லாம் இல்லை!

    ReplyDelete
  35. வணக்கம் ஐயா,
    இது என் கருத்து
    தோஷம் தோஷமே செவ்வாயின் காரகத்துவம் பாவங்களில் மற்ற கிரக பார்வை மற்றும் கூட்டுக்களின் மூலம் பலன்கள் வெளிப்படும். ரத்தம் Rh காம்பினேஷன்.Complicated volatile heat which created for the sex. இந்த குணங்கள் 28,வயதிற்குள், இரண்டு பாலினதிற்கும், பல்வேறு காரணங்களால் மாற்றம் ஏற்பட்டுவிடும், அதனை வெளியில் சொல்லமுடியாது ஏனென்றால் செவ்வாய் அப்படி, என் அனுபவ ஜாதக ஆராய்ச்சியில் இறப்பு சதவீதம் குறைவு
    g r murugan

    ReplyDelete
  36. ஐயா,வணக்கம்,

    எனக்கு http://classroom337.com
    இல் சேருவதற்கான அனுமதி எண்
    எண் இமெயிலுக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் விண்ணபித்துக்கொள்கிறேன்

    g r murugan bsnl

    ReplyDelete
  37. Sir but the astrologer shown me a book for my case that if chevvai with suryan in 8th place,it wont be Chevvai dosham.ie wat i asked.As u said each astrologer will foloow different view based upon that experience

    ReplyDelete
  38. Sir but the astrologer shown me a book for my case that if chevvai with suryan in 8th place,it wont be Chevvai dosham.ie wat i asked.As u said each astrologer will foloow different view based upon that experience

    ReplyDelete
  39. தாங்கள் குறிப்பிட்டது போல்தான் புராதன ஜோதிட நூல்களில் இருக்கின்றன. பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் நேரடியாக செவ்வாய் தோஷம் என்று சொல்லப் படவில்லை. இருப்பினும் அதன் Chapter 80, verse 47,48,49 அதை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்.

    47. The woman born becomes a widow, if Mangal be in the 12th, 4th, 7th, or 8th from Lagn, without aspect by, or association with any benefic.

    48-49. The Yog, which causes the woman to become widow also causes a male native to become a widower. If the man and woman, possessing this Yog, join in wedlock, the Yog ceases to have any effect.

    ReplyDelete
  40. இன்னொன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன். இன்னொரு புராதன ஜோதிட நூலான ஜாதகப் பாரிஜாதத்தில் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் 2,4,7,8,12 இடங்களில் இருந்தால் மனைவிக்கு மரணத்தை கொடுக்கும் என்றும் இதற்கு மாறாக பெண் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் கணவருக்கு மரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவும் பொது பலன்தான். இன்றைய ஜோதிடர்கள் இந்த அமைப்புகளுக்கு செவ்வாய் தோஷம் என்று ஒரு உருவம் கொடுத்து இதை பூதாகரமான விட்டார்கள்.

    ReplyDelete
  41. ////Blogger murugan said...
    வணக்கம் ஐயா,
    இது என் கருத்து
    தோஷம் தோஷமே செவ்வாயின் காரகத்துவம் பாவங்களில் மற்ற கிரக பார்வை மற்றும் கூட்டுக்களின் மூலம் பலன்கள் வெளிப்படும். ரத்தம் Rh காம்பினேஷன்.Complicated volatile heat which created for the sex. இந்த குணங்கள் 28,வயதிற்குள், இரண்டு பாலினதிற்கும், பல்வேறு காரணங்களால் மாற்றம் ஏற்பட்டுவிடும், அதனை வெளியில் சொல்லமுடியாது ஏனென்றால் செவ்வாய் அப்படி, என் அனுபவ ஜாதக ஆராய்ச்சியில் இறப்பு சதவீதம் குறைவு
    g r murugan/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  42. ////Blogger murugan said...
    ஐயா,வணக்கம்,
    எனக்கு http://classroom337.com
    இல் சேருவதற்கான அனுமதி எண்
    எண் இமெயிலுக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் விண்ணபித்துக்கொள்கிறேன்
    g r murugan bsnl////

    classroom2007@gmail.com மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்! அப்போதுதானே உங்களுடைய மின்னஞ்சல் எனக்குத் தெரியவரும்!

    ReplyDelete
  43. ////Blogger kkdxb said...
    Sir but the astrologer shown me a book for my case that if chevvai with suryan in 8th place,it wont be Chevvai dosham.ie wat i asked.As u said each astrologer will foloow different view based upon that experience////

    கரெக்ட்!
    அது என்ன ஜேம்ஸ்பாண்ட் 007 போல உங்கள் பெயரில் kkdxb என்ற எழுத்துக்கள். அதற்கு விளக்கம் என்ன? உங்கள் உண்மைப்பெயர் என்ன? எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  44. ////Blogger ananth said...
    தாங்கள் குறிப்பிட்டது போல்தான் புராதன ஜோதிட நூல்களில் இருக்கின்றன. பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் நேரடியாக செவ்வாய் தோஷம் என்று சொல்லப் படவில்லை. இருப்பினும் அதன் Chapter 80, verse 47,48,49 அதை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்.
    47. The woman born becomes a widow, if Mangal be in the 12th, 4th, 7th, or 8th from Lagn, without aspect by, or association with any benefic.
    48-49. The Yog, which causes the woman to become widow also causes a male native to become a widower. If the man and woman, possessing this Yog, join in wedlock, the Yog ceases to have any effect./////

    உங்களின் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  45. ////Blogger krishnababuvasudevan said...
    Sevaai, nallavaraa, getavaraa./////

    இரண்டும் கலந்தவர்!

    ReplyDelete
  46. /////Blogger ananth said...
    இன்னொன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன். இன்னொரு புராதன ஜோதிட நூலான ஜாதகப் பாரிஜாதத்தில் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் 2,4,7,8,12 இடங்களில் இருந்தால் மனைவிக்கு மரணத்தை கொடுக்கும் என்றும் இதற்கு மாறாக பெண் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் கணவருக்கு மரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவும் பொது பலன்தான். இன்றைய ஜோதிடர்கள் இந்த அமைப்புகளுக்கு செவ்வாய் தோஷம் என்று ஒரு உருவம் கொடுத்து இதை பூதாகரமான விட்டார்கள்./////

    இருக்கலாம். நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com