மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.9.12

கவிதைச் சோலை: எதெதில் முன்னேற வேண்டும்?

பக்தி மலர்

ஆசையின் ஓசை எப்போது அடங்கும் என்பதை ஒரு அருமையான பாடல் மூலம் திருமதி அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கின்றார். அதை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்


காணொளியுடன் பாடல்:
Our sincere thanks to the person who uploaded the video clipping!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

கவிதைச் சோலை: எதெதில் முன்னேற வேண்டும்?

முன்னேறு

குதிரைவண் டியிலுமோர் கொடிபடை அணியிலும்
    கூட்டத்து மேடை தனிலும்
       குடும்பத்து வாழ்விலும் கொள்முதல் வாணிபம்
    குவித்திடும் செல்வ மதிலும்
மதியிலும் நோயிலா வாழ்விலும் ஆனதன்
    மானத்தைக் காப்ப ததிலும்
       மாற்றார்தம் நடுவிலே மாலை மரியாதைகள்
    வளர்த்திடும் மாண்பு தனிலும்
முடியழகு மங்கையின் மோகக் கலப்பிலும்
    முன்னேற வேண்டும் நீயே!
       முத்துமுக மீதுவியர் முத்துவிளை யாடிடும்
    மோனமீ னாட்சி துணையே!

                    - கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

krishnababuvasudevan said...
This comment has been removed by a blog administrator.
krishnababuvasudevan said...
This comment has been removed by a blog administrator.
kmr.krishnan said...

கவியரசரின் முன்னேற்றத்திற்கான 'டிப்ஸ்' நல்ல‌ சுவாரஸ்யம்தான்.
ஹும்..ஹும்.. 'முடியழகு மங்கையின் மோகக் கலப்பில்'முன்னேற்றம் இனி நமக்கேது?சரி, அது இளையவர்களுக்கானது.

குதிரை வண்டிப்பயணம் சேலத்தில் நிறையச்செய்து இருக்கிறேன்.இப்போதுள்ள குழந்தைகளுக்கு அந்த அனுபவமெல்லாம் இல்லை.

லால்குடி குதிரை ரேக்ளா ஓட்டத்தை இங்கே கண்டு மகிழுங்கள்

http://www.youtube.com/watch?v=R_Yld_0fYHQ

அனுராதா ஸ்ரீராமின் குரலோசையும் கேட்டு ரசித்தேன்
உங்கள் ரசனைகள் பன்முகம் ஆனவை. உங்கள் உற்சாகம் யாரையும் தழுவிவிடும். மிக்க நன்றி அய்யா!

krishnababuvasudevan said...
This comment has been removed by a blog administrator.
krishnababuvasudevan said...
This comment has been removed by a blog administrator.
krishnababuvasudevan said...
This comment has been removed by a blog administrator.
Gnanam Sekar said...

அய்யா காலை வணக்கம்

ஜி ஆலாசியம் said...

அருமையான பாடல் அழகான வரிகள்
இனிய குரலில்....

கவியரசின் பாடல்கள் இக வாழ்க்கை இன்பத்தை
அனுபவிக்க அன்னை அவளை அருள வேண்டி
அற்புத வரிகளோடு மிளிர்கிறது....

அதன் தாக்கத்தில் எனது வகுப்பறை கவிதையினையும்
இங்கே முருகனுக்கே சமர்பிக்கின்றேன் ஐயா!

ஆசையின் ஓசை அடங்கவில்லை -அழகா
ஆறுமுக மதைக் அனுதினம் காணும்
ஆசையின் ஓசை அடங்கவில்லை

இன்பமேதும் இல்லை இறைவா - எனக்கு
இனிய நினது நினை வன்றி
இன்பமேதும் இல்லை குமரா!

ஈடுயிணை யில்லை ஈசன் மைந்தா
ஈகையிலுயர்ந்தோரைக் காக்கும் வேலுக்கு
ஈடுயிணை யில்லை இளங்குமரா!

உறக்கம் கொள்ள வில்லை - என்மனம்
உள்ளொளி பெருக்கும் நினதருள் பெறவே
உறக்கம் கொள்ள வில்லை!

ஊனுடல் போற்ற விரும்பவில்லை -இருந்தும்
ஊஞ்சலாய் ஆடும் உள்மனமதில் முருகா
ஊறும் ஆசையை மறைக்கவில்லை!

எளியவன் யானுனை வேண்டுவதே நினை
எளிதினில் வந்து சேர்ந்திடவே - இன்னும்
எத்தனை தாமதமோ வேலா!

ஏறு மயில்ஏறி வா! ஏற்றமுற
ஏக்கமுடன் நின்பாதம் போற்றுமெனை ஏகாந்தமத்தில்
ஏற்றிவைப்பாயே திருப்பழனிக் குமரா!

ஐபுலனும் ஒடுங்க ஐங்கரனின் தம்பியே
ஐயமெல்லாம் தீர்த்து அணைத்துக் காக்க
ஐயா செந்தில் ஆண்டவா!

ஒப்பிலா மணியே ஒளியே எங்கும்நிறை
ஒளியின் ஒளியே உலகை காக்கும்
ஒப்பற்ற கருணைக் கடலே!

ஓமெனும் ஓங்காரத்தில் உறையும் ஒலியே!
ஓதும் மறைப்பொருளே உள்ளுவது உனையே
ஓயாமல் உன்னை நினைத்தேன்!

ஒளடதப் பொருளே! அழகே! - அன்னை
ஒளவையினை காத்து ரட்சித்த திருவே
மெளவல் நின்பாதம் பணிகிறேன்!

கரம் கூப்பி கரைந்து போற்றுமென்
சிரமதில் நின் பொற் பாதமதை
வைத்தே கரைசேர்ப்பாய் கந்தா!

அழகா! முருகா!! தமிழமுதா!!!

பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

Udhaya Kumar said...

Guruvirkku vanakkam
Arumaiyana paadal,
Arputhamana kvi perasuvin
kvithai
Atharkku pdmm

அய்யர் said...

நன்று..
ஆனால்
கவியரசரின் பாடல் வரிகள் புரியவில்லை..

சரி.. சரி..
இன்னமும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது புரிகிறது...

காத்திருப்போம்..

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
கவியரசரின் முன்னேற்றத்திற்கான 'டிப்ஸ்' நல்ல‌ சுவாரஸ்யம்தான்.
ஹும்..ஹும்.. 'முடியழகு மங்கையின் மோகக் கலப்பில்'முன்னேற்றம் இனி நமக்கேது?சரி, அது இளையவர்களுக்கானது.
குதிரை வண்டிப்பயணம் சேலத்தில் நிறையச்செய்து இருக்கிறேன்.இப்போதுள்ள குழந்தைகளுக்கு அந்த அனுபவமெல்லாம் இல்லை.
லால்குடி குதிரை ரேக்ளா ஓட்டத்தை இங்கே கண்டு மகிழுங்கள்
http://www.youtube.com/watch?v=R_Yld_0fYHQ
அனுராதா ஸ்ரீராமின் குரலோசையும் கேட்டு ரசித்தேன்
உங்கள் ரசனைகள் பன்முகம் ஆனவை. உங்கள் உற்சாகம் யாரையும் தழுவிவிடும். மிக்க நன்றி அய்யா!/////

சேலத்தில் share குதிரை வண்டி இருந்தது. share autoவைப்போல. நகரின் மையைப் பகுதியில் இருந்து செவ்வாய்ப் பேட்டைக்கு 4 அணா கொடுத்தால் போதும். மேலும் 3 பேர்களை நம்முடன் ஏற்றிக்கொண்டு பத்தே நிமிடங்களில் செவ்வாய்பேட்டையின் மையப் பகுதியில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். ரேக்ளா ஓட்டக் காணொளிக்கு நன்றி! இங்கே பன்முகத் திறமையாளர்கள் பலர் வருகிறார்கள். அவர்களுடன் நானும் ஒத்துப்போக வேண்டும் இல்லாவிட்டால் வண்டி ஓட்ட முடியாது சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Gnanam Sekar said...
அய்யா காலை வணக்கம்/////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger ஜி ஆலாசியம் said...
அருமையான பாடல் அழகான வரிகள்
இனிய குரலில்....
கவியரசின் பாடல்கள் இக வாழ்க்கை இன்பத்தை
அனுபவிக்க அன்னை அவளை அருள வேண்டி
அற்புத வரிகளோடு மிளிர்கிறது....
அதன் தாக்கத்தில் எனது வகுப்பறை கவிதையினையும்
இங்கே முருகனுக்கே சமர்பிக்கின்றேன் ஐயா!
ஆசையின் ஓசை அடங்கவில்லை -அழகா
ஆறுமுக மதைக் அனுதினம் காணும்
ஆசையின் ஓசை அடங்கவில்லை
இன்பமேதும் இல்லை இறைவா - எனக்கு
இனிய நினது நினை வன்றி
இன்பமேதும் இல்லை குமரா!
ஈடுயிணை யில்லை ஈசன் மைந்தா
ஈகையிலுயர்ந்தோரைக் காக்கும் வேலுக்கு
ஈடுயிணை யில்லை இளங்குமரா!
உறக்கம் கொள்ள வில்லை - என்மனம்
உள்ளொளி பெருக்கும் நினதருள் பெறவே
உறக்கம் கொள்ள வில்லை!
ஊனுடல் போற்ற விரும்பவில்லை -இருந்தும்
ஊஞ்சலாய் ஆடும் உள்மனமதில் முருகா
ஊறும் ஆசையை மறைக்கவில்லை!
எளியவன் யானுனை வேண்டுவதே நினை
எளிதினில் வந்து சேர்ந்திடவே - இன்னும்
எத்தனை தாமதமோ வேலா!
ஏறு மயில்ஏறி வா! ஏற்றமுற
ஏக்கமுடன் நின்பாதம் போற்றுமெனை ஏகாந்தமத்தில்
ஏற்றிவைப்பாயே திருப்பழனிக் குமரா!
ஐபுலனும் ஒடுங்க ஐங்கரனின் தம்பியே
ஐயமெல்லாம் தீர்த்து அணைத்துக் காக்க
ஐயா செந்தில் ஆண்டவா!
ஒப்பிலா மணியே ஒளியே எங்கும்நிறை
ஒளியின் ஒளியே உலகை காக்கும்
ஒப்பற்ற கருணைக் கடலே!
ஓமெனும் ஓங்காரத்தில் உறையும் ஒலியே!
ஓதும் மறைப்பொருளே உள்ளுவது உனையே
ஓயாமல் உன்னை நினைத்தேன்!
ஒளடதப் பொருளே! அழகே! - அன்னை
ஒளவையினை காத்து ரட்சித்த திருவே
மெளவல் நின்பாதம் பணிகிறேன்!
கரம் கூப்பி கரைந்து போற்றுமென்
சிரமதில் நின் பொற் பாதமதை
வைத்தே கரைசேர்ப்பாய் கந்தா!
அழகா! முருகா!! தமிழமுதா!!!
பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!


SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
Guruvirkku vanakkam
Arumaiyana paadal,
Arputhamana kvi perasuvin
kvithai
Atharkku pdmm////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger அய்யர் said...
நன்று..
ஆனால்
கவியரசரின் பாடல் வரிகள் புரியவில்லை..
சரி.. சரி..
இன்னமும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது புரிகிறது...
காத்திருப்போம்../////

நீங்கள் சொன்னால் சரிதான் விசுவநாதன்!
வேறு பேச்சிற்கு இடமில்லை!

krishnababuvasudevan said...

காத்திருப்போம் pathil gitagum, entru ellarugum 337, paralgal thaan.

kmr.krishnan said...

//இன்பமேதும் இல்லை இறைவா - எனக்கு
இனிய நினது நினை வன்றி
இன்பமேதும் இல்லை குமரா!//

நல்ல வரிகள் கவிஞரே! பாராட்டுக்கள்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger krishnababuvasudevan said...
காத்திருப்போம் pathil gitagum, entru ellarugum 337, paralgal thaan.//////

ஐந்தரை வருடமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இதுவரை சுமார் 590 பாடங்களை எழுதியுள்ளேன்.
மாதம் புதிதாக 60 உறுப்பினர்கள் உள்ளே நுழைகிறார்கள்.
படிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் சந்தேகம் கேட்டு, அத்துடன் அந்தப் பாடத்தை வைத்து, தங்கள் ஜாதக சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டு ஒவ்வொரு நாளும் இப்படி பின்னூட்டமழையாக, அல்லது மின்னஞ்சல் மழையாக எழுதினால் நான் எப்படிப் பதில் சொல்வது. நேரத்திற்கு நான் எங்கே போவது? தினமும் எனக்கு 50 மின்னஞ்சல்கள் வருகின்றன
அதுவும் 4 வருடங்களுக்கு முன்னால் எழுதிய பாடத்திற்கு எனது கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காக இன்றைய பதிவில் நுழைந்து பின்னூட்டமிட்டால் நான் எப்படி பதில் சொல்வது?
கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பாடங்கள் அனைத்தையும் முழுமையாகப் படியுங்கள். மண்டையில் ஏறும் வரை திரும்பத் திரும்பப் படியுங்கள். எல்லாப் பாடங்களையும் படித்து முடிக்கும்போது சந்தேகம் வராது. சந்தேகங்களுக்காக தனியாக 400 கேள்விகளுக்கு மேல் பதில் அளித்துப் பாடம் நடத்தியுள்ளேன். அதையும் படியுங்கள்.

அதைவிட முக்கியமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி என்ன? எந்த ஊரில் இருக்கிறீர்கள். என்ன வயது? என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை எழுதுங்கள் (இது எதற்காக என்றால் உங்களால் ஜோதிடம் படிக்க முடியுமா? அல்லது முடியாதா என்பதைத் தெரிந்து கொள்ள! அதனால் உங்களுடைய நேரமும் மிச்சமாகும். என்னுடைய நேரமும் மிச்சமாகும். அர்த்தமாயிந்தா சாரே?)

பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் அன்றாடப் பதிவில் வெளிவராது! அதை மனதில் கொள்க!

krishnababuvasudevan said...

ஐந்தரை வருடமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இதுவரை சுமார் 590 பாடங்களை எழுதியுள்ளேன். மண்டையில் ஏறும் வரை திரும்பத் திரும்பப் படியுங்கள். எல்லாப் பாடங்களையும் படித்து முடிக்கும்போது சந்தேகம் வராது. நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி Manigaum mutalil padangalai govanamaga podigirean tadangalu varunthugirean.

Loganathan S said...

good evening sir,Very useful and great lines sir! video clipping also nice!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Loganathan S said...
good evening sir,Very useful and great lines sir! video clipping also nice!/////

நல்லது. நன்றி நண்பரே!

kmr.krishnan said...

அதுவும் கிருஷ்ண புவனா வாசுதேவன் ஒன்று தமிழில் எழுத முயற்சிக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும். அதைவிட்டுத் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதினால் படிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது என்பது பற்றி முகப்பிலேயே விளக்கம் உள்ளது

Bhuvaneshwar said...

குதிரை வண்டி என்றதும் நினைவுக்கு வருகிறது...... நான் சின்னப்பிள்ளையாக இருக்கையில் ஆத்தூருக்கு போகும் போது பேருந்து நிலையத்தில் இருந்து அறுபதடி ரோட்டில் உள்ள எனது பாட்டி வீட்டுக்கு (அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி) குதிரை வண்டியில் தான் போவோம்...... நான் முன்னாவ் போய் வண்டிக்காரரோடு குதிரைக்கு அருகில் உட்கார்ந்து கொள்வேன்! :)
வண்டியில் வைக்கோல் போட்டு கம்பளம் போல விரித்திருப்பார்கள். பின்னால் கம்பி இழுத்து மூட வேண்டும்...... காலை தொங்கப்போட்டு கொண்டு பயணிக்கலாம்......
வண்டிக்காரர் இல்லாத போது குதிரையின் மேலே ஏறுவது, வாலைப்பிடித்து (வண்டியில் இருந்து தான், கீழே போனால் உதைக்கும்) விளையாடுவது என்று அழிச்சாட்டியம் பண்ணியதெல்லாம் உண்டு!
இப்போது எங்கு பார்த்தாலும் ஆட்டோ! மினி பஸ்!

Bhuvaneshwar said...

எங்கோ படித்த கதை...... சிங்காரம் என்ற மனிதனும் வீரன் என்கிற குதிரையும்........ ரொம்ப பழைய கதை..... பழைய பேப்பரில் வீடு பேருக்கும் போது சின்ன வயசில் படித்தது......

Bhuvaneshwar said...

முடியழகு மங்கையின் மோகக்கலப்பா?
முடி என்றால்? கூந்தலா இல்லை வீட்டில் எல்லா அதிகாரத்தையும் கைக்கொண்டதால் ராணி என சூடாமல் சூடிய மணி"முடி'யா? இவளுடைய அதிர்ஷ்டத்தால் கணவன் எடுத்த காரியத்தை எல்லாம் முடிக்க வகை செய்பவள் என்பதால் முடியழகி ஆனாளா? தன் கற்பு செழுமிய காதலால் கணவனை தனக்கே தனக்கென "முடி"ந்து வைத்துக்கொண்டதாலா? குடும்பத்தின் பிரச்சினைகளை தன் நுண்ணறிவால் லாகவமாக "முடி"ப்பவள் ஆதலாலா? ஒவ்வொரு நாளையும் தன் கை மணத்தால் அமுது பரிமாறி எல்லோரையும் தூங்கப்பண்ணி இனிதே "முடி"ப்பவள் ஆதலாலா?

(பி. கு: செய்தித்தாளை பார்த்தால் வேறு பயமான வியாக்யானங்களும் தோன்றும். தீயோரை ஆண்டவன் பார்த்துக்கொள்வான், நல்லோரை நாம் புகழ்வோம் என விட்டு விட்டேன்)

thanusu said...

ஜி ஆலாசியம் said..
///ஆசையின் ஓசை........

அற்புதம் ஆலாசியம். உயிர் எழுத்துக்கள் அனைத்தும் வரிகளின் முதலாககொண்டு அமைந்த பாடல். அருமை! அருமை!! அருமை!!!

ஜி ஆலாசியம் said...

பாராட்டிய வாத்தியாருக்கும், கிருஷ்ணன் சாருக்கும், கவிஞர் தனுசுவிற்கும் நன்றிகள்.

'முடி'யழகி என்பதை எத்தனை அழகாக பல முடிகளை போட்டு ஜடையாக பின்னி இருக்கிறார் சகோதரர்...
சும்மா பின்னீட்டீங்க போங்க! அருமை!