மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.9.12

Happy Birth Day Ganesha!

சகல காரியங்களையும் சித்தியடையச் செய்யும் விநாயகருக்கு இன்று பிறந்த நாள். அவரை வணங்கி மகிழ்வோம்!

Ganesha Chaturthi (Marathi: गणेश चतुर्थी, Konkani: चवथ, Gujarati: ગણેશ ચતુર્થી, Hindi: गणेश चतुर्थी, Malayalam: വിനായക ചതുര്‍ത്ഥി, Tamil: விநாயகர் சதுர்த்தி, Kannada: ಗಣೇಶ ಚತುರ್ಥೀ, Telugu: వినాయక చవితి), also known as Vinayaka Chaturthi, also called Vinayagar in Tamil Nadu, is the Hindu festival celebrated on the occasion of birthday of Lord Ganesha[2], the son of Shiva and Parvati, who is believed to bestow his presence on earth for all his devotees in the duration of this festival. It is the day Shiva declared his son Ganesha as superior to all the gods. Ganesha is widely worshipped as the god of wisdom, prosperity and good fortune and traditionally invoked at the beginning of any new venture or at the start of travel.- information from wiki Maharaj
---------------------------------------------------------------------

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் .................அடிபேணிக்
(கைத்தல)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...............கடிதேகும்
(கற்றிடும்)

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய ............மதயானை
(மத்தமும்)

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...........பணிவேனே
(மத்தள)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...............முதல்வோனே
(முத்தமிழ்)

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ..........அதிதீரா
(முப்புரம்)

அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை........... இபமாகி
(அத்துய)

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் .............பெருமாளே.
(அக்குற)

பாடல்: திருப்புகழ்
ஆக்கம்: அருணகிரிநாதர்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++=======

24 comments:

  1. விநாயகர் ச்துர்த்தி வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. ஆஹா.. அற்புதமானப் பாடல்..
    விநாயகர் சதுர்த்தியான இன்று
    அவனின் அருள் பெற்று யாவரும் நலம் பெற வேண்டி....

    எக்குறை வருமினும் அக்குறை தீர்த்திட
    சிக்கெனப்பிடித் தேனுன் பொற்பாதமலரை

    திக்கெட்டும் திகழும் இப்புவனம் புகழும்
    மற்றற்ற மாசிலா மணியே!

    பற்றற்று நின்று கற்பக மலரனை
    போற்றிப் பணியும் பக்தரை

    நற்கதி புகுத்தும் நால்வேத நாயகன்
    நின்தாள் பணிந்து உய்வோமே!

    வினை தீர்ப்பை நாதனே பிரம்மா தேவனே என்று திருப்பாதம் பணிகிறேன்.
    அருமையானப் பாடல் பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. அன்புள்ள வகுப்பரை ஆசிரியர் மற்றும் சக மாணவர் அனைவருக்கும் இனிய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ ஆனைமுகத்தானை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. ஐயா! பதிவில் இந்தத் தகவல்களையும் இணைத்தால் இன்னும் சிறக்கும். நன்றிகள் ஐயா!

    விநாயகப் பெருமானைக் குறித்த தொன்மங்களும் புராணக் கதைகளும் ஆழ்ந்த உட்பொருள் கொண்டவை. பார்வதியின் அன்பு மகனாக உருவெடுத்து சிவகணங்களுடனும் சிவபிரானுடனுமே போர் செய்து ஆனைமுகனாக வடிவுகொள்வது ஒரு தொன்மம். இறைவனும் இறைவியும் களிறும் பிடியுமாகிக் கலந்து ஆனைமுகன் அவதரிப்பது மற்றொரு தொன்மம். மாதங்கர்கள் என்ற பழங்குடிகள் வழிபட்ட புராதன யானைமுகக் கடவுள்தான் விநாயகராக “ஆரிய மயமாக்கப்பட்டு” விட்டார் என்பது ஒரு தரப்பு சமூக வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் நவீன தொன்மம். ரிக்வேத மந்திரங்களில் புகழப்படும் பிரகஸ்பதி, பிரமணஸ்பதி ஆகிய தெய்வங்களின் இயல்பான பரிமாண வளர்ச்சியே கணபதி என்பது வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எப்படியானாலும், இந்தத் தொன்மங்களின் தொகுப்பாகவும், இவை அனைத்தையும் உள்ளடக்கி அவற்றையும் கடந்து திகழும் பேரொளியாகவும் திகழ்கிறார் கணநாதர். தியானிப்போரின், வழிபடுவோரின் ஆன்ம நலன்களையும், உலக நலன்களையும் ஒருங்கே விகசிக்கச் செய்பவராக விநாயகர் விளங்குகிறார். வேதாந்தத்தின் ஒளியால் சுடர்விடும் “தத்துவத் தெய்வமாகவும்” எளிய மக்களின், பழங்குடி மக்களின், விளிம்பு நிலை மாந்தரின் “இயற்கைத் தெய்வமாகவும்” அவரே அருள்பாலிக்கிறார். இத்தத்துவத்தை பாரதியும் எடுத்துரைக்கிறார்–

    இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்
    தாயாய்த் தந்தையாய், சக்தியும் சிவனுமாய்
    உள்ளொளி யாகி உலகெலாம் திகழும்
    பரம்பொருளேயோ பரம்பொருளேயோ!
    ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்

    தேவதேவா சிவனே கண்ணா
    வேலா சாத்தா விநாயகா மாடா
    இருளா சூரியா இந்துவே சக்தியே
    வாணீ காளீ மாமகளேயோ!
    ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது

    யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே!
    வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே..

    ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்
    வேத முனிவர் விரிவாய்ப் புகழ்ந்த
    பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்

    தானே யாகிய தனிமுதற் கடவுள்,
    ’யான்’ ’எனது’ அற்றார் ஞானமே தானாய்
    முக்தி நிலைக்கு மூலவித்தாவான்,
    சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
    நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்…

    இத்தகைய சத்திய வடிவான கடவுளிடம் உலகியல் வெற்றியையும், ஆன்மிக அருள் சக்தியையும் ஒருங்கே வேண்டித் தொழுகிறார் மஹாகவி.

    அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்
    நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்
    அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்

    உடைமை வேண்டேன் உன்துணை வேண்டினேன்
    வேண்டா தனைத்தையும் நீக்கி
    வேண்டிய தனைத்தையும் அருள்வதுன் கடனே.

    நல்வாழ்க்கையையும், வெற்றியையும், அன்பையும் அருளையும் தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும், தன் நாட்டுக்காவும் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், அனைத்து உயிர்களுக்கும், புல்பூண்டுகளுக்கும் அருளுமாறு விநாயகரை வேண்டுகிறார்.

    பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்;
    கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
    மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
    விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
    யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே,

    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
    செய்தல் வேண்டும், தேவதேவா!
    ஞானாகாசத்து நடுவே நின்றுநான்
    ‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
    விளங்குக! துன்பமும், மிடிமையும் நோவும்

    சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
    இன்புற்று வாழ்க’என்பேன்! இதனை நீ
    திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
    ‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!

    பாரதி கண்ட விநாயக தத்துவம் இத்தகு உயர்ந்த விழுமியங்களையும், வாழ்க்கை நெறிகளையும் உள்ளடக்கியது. குறும்புக்காரக் குழந்தை விநாயகன், குவலயம் அனைத்திற்கும் ஒளிதரும் விஸ்வரூப விநாயகனும் ஆவான் என்பதை பாரதியின் பனுவல் நமக்கு உணர்த்துகிறது.

    ''மக்கள் வீடுகளுக்குள் தெய்வ வழிபாடாக செய்து வந்த விநாயக பூஜையை பாலகங்காதர திலகர் சமூக விழாவாக மாற்றியமைத்து மகாராஷ்டிரத்தில் பெரியதொரு தேசிய விழிப்புணர்வை உண்டாக்கினார். பின்னர் அது பாரத தேசமெங்கும் பரவியது. ''

    “மனது கட்டுக்கடங்காமல் அலைபாய்ந்து குழப்பமாக இருக்கும் நேரங்களில் அப்படியே தெருவில நடந்துபோய் ஒன்றிரண்டு பிள்ளையார்களைப் பார்த்துவிட்டு வருவேன். மனது தெளிந்து நிர்மலமாகி விடும்,” என்று சொல்வாராம் ஜெயகாந்தன். ”நான் நாத்திகன். ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப்பேன்,” என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நாத்திகவாதிகள் அடுத்த சில நாள்கள் இதற்காக அவரை வறுத்தெடுத்து வசைபாடித் தள்ளிவிட்டார்கள்! ஆனால் பிள்ளையாருக்கு ஒன்றுமில்லை. அப்படி அறிவித்துக் கொண்ட நாத்திகரையும் பிள்ளையார் நிச்சயம் தன் தும்பிக்கையால் அரவணைப்பார். அதில் சந்தேகத்திற்கே இடமில்லை.

    (நன்றி தமிழ் ஹிந்து வலைப்பூ)

    ReplyDelete
  5. Guruvirkku vanakkm
    vinayagar paadal arputham.
    thangalukku vinayagar Arul Eappozhuthum unndu.
    Nandri.

    ReplyDelete
  6. பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
    இவை நான்கும் கலந்து உனக்கு
    நான் தருவேன்..
    கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே
    நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
    வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா.
    அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வினை தீர்க்கும் விநாயகன் அடிபணிந்து அருள் பெறுவோம்!

    ReplyDelete
  8. கடவுள் என்று சொல்லிவிட்டால் அவருக்கு பிறப்பு கற்பிப்பது தவறு..
    அது அறிவீனம்

    கடவுள் இல்லை என்று சொன்னால் அவருக்கு எத்தனை பிறப்பு வேண்டுமானாலும் சொல்லலாம்..
    இது அறியாமை

    ஆக
    விநாயகருக்கு பிறந்த நாள் என பிறப்பு சொன்னதினால்
    நீங்கள் விநாயகரை கடவுள் இல்லை என கொள்கிறீர்கள் என பொருள் கொள்வதா?

    இல்லை..
    அவர் கடவுள் என்றே வணங்க தக்கவர்
    என்று சொல்கிறோம். அவருக்கு பிறந்த நாள் என்று தவறாக குறித்துவிட்டோம் என வருத்தம் சொல்லப் போகிறீர்கள் என (காத்திருந்து)கொள்வதா?

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டுனில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே

    ReplyDelete
  9. வாத்தியார் அவர்களுக்கும் சக மாணவர்களுக்கும் விநாயக சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள். அற்புதமான பாடல் படிக்கத் தந்த நல்லதொரு பதிவுக்கு நன்றி ஐயா!!.

    ReplyDelete
  10. //ஞானாகாசத்து நடுவே நின்றுநான்
    ‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
    விளங்குக! துன்பமும், மிடிமையும் நோவும்
    சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
    இன்புற்று வாழ்க’என்பேன்! இதனை நீ
    திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
    ‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!//

    விநாயகர் நான் மணிமாலையில் மகாகவியின் ஆகச் சிறந்த வரிகளை எடுத்துக்கொடுத்த கவிஞர் ஹாலாஸ்யத்திற்கு நன்றி.

    'அங்ஙனமே ஆகுக' என்பது 'ததாஸ்து' என்பதின் தமிழ் வடிவம். 'ஆமென்'னும் அதே பொருள் தான்.இஸ்லாமியரின் 'அமீனு'ம் அப்படியே!
    நாட்டுப்புற கதைசொல்லிகள், வில்லுப்பாட்டுக்காரர்களுக்குப் பின்னால் அமர்ந்து 'ஆமாஞ்சாமி' போடுவதும் அதே மரபுதான்.

    மகாகவி ஒரு வேத கோஷ்டியின் தலைமை உபாத்தியாயராக இருந்து
    நல்வாக்குச் சொல்வாராம்.அதற்கு விநாயகர் அவ‌ருடன் வந்த உதவியாளர் போல பின்னணியில் இருந்து 'அப்படியே ஆகட்டும்' என்று ஆமோதிக்க வேண்டுமாம். மகாகவி பாரதியின் தன்னம்பிக்கையும், அவர் தெய்வத்தை
    எவ்வளவு பாவங்களில் அனுபவிக்கிறார் என்பதும் இந்த வரிகளில் காணக் கிடைக்கிறது.

    வகுப்பறை வாத்தியாருக்கும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது விநாயகச் சதுர்த்தி நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  11. //விநாயகருக்கு பிறந்த நாள் என பிறப்பு சொன்னதினால்
    நீங்கள் விநாயகரை கடவுள் இல்லை என கொள்கிறீர்கள் என பொருள் கொள்வதா?//

    பக்தி நிலையில் நின்று பார்க்கும் போது தெய்வம் அல்லது இறைவன் அல்லது கடவுளுக்கு பக்தன் தான் அனுபவிக்கும் அனைத்தையும் அவர் மீது சார்த்திப் பார்க்கிறான்.பக்தி மார்க்கத்தில் புராணக் கருத்துக்களை நம்புவதும், 'பிறவான் இறவான்' என்று வாயால் பாடிக் கொண்டே பிறந்த நாள் கொண்டாடுவதும்
    உண்டு. அய்யர் ஞானப்பாதையில் செல்பவராயின் அது அவருக்குச் சரி.

    யார் எந்தப் பாதையைச் சார்ந்து, அதில் அயர்வுராமல் பயணித்து வந்தாலும் இறுதியில் சென்று அடையப் போவது அந்தக் கடவுளையே.

    'சமயகோடிகள் எல்லாம் எந்தெய்வம் உன் தெய்வம் என்று எதிர் வழக்காடினாலும்' சென்றடையப் போவதென்னவோ ஒரே பரம் பொருளையே.

    எனவே அறிவு ஜீவியான அய்யர், உணர்வுபூர்வமான பக்தர்களை சிறிது தனியே விட்டு, விலகி நின்று மனதிற்குள் சிரித்துக் கொள்ளலாம்.

    வருத்தம் தெரிவிக்கச் சொல்லி வறுத்து எடுக்க வேண்டாம் என்று நட்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

    "சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே"

    ReplyDelete
  12. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    விநாயகர் ச்துர்த்தி வாழ்த்துகள்.../////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ஆஹா.. அற்புதமானப் பாடல்..
    விநாயகர் சதுர்த்தியான இன்று
    அவனின் அருள் பெற்று யாவரும் நலம் பெற வேண்டி....
    எக்குறை வருமினும் அக்குறை தீர்த்திட
    சிக்கெனப்பிடித் தேனுன் பொற்பாதமலரை
    திக்கெட்டும் திகழும் இப்புவனம் புகழும்
    மற்றற்ற மாசிலா மணியே!
    பற்றற்று நின்று கற்பக மலரனை
    போற்றிப் பணியும் பக்தரை
    நற்கதி புகுத்தும் நால்வேத நாயகன்
    நின்தாள் பணிந்து உய்வோமே!
    வினை தீர்ப்பை நாதனே பிரம்மா தேவனே என்று திருப்பாதம் பணிகிறேன்.
    அருமையானப் பாடல் பதிவிற்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete
  14. /////Blogger sadan raj said...
    அன்புள்ள வகுப்பரை ஆசிரியர் மற்றும் சக மாணவர் அனைவருக்கும் இனிய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ ஆனைமுகத்தானை வேண்டுகிறேன்./////

    உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி பாளையத்தாரே!

    ReplyDelete
  15. /////Blogger Sundarajan Nardarajan said...
    Happy birthday Ganesha////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ஐயா! பதிவில் இந்தத் தகவல்களையும் இணைத்தால் இன்னும் சிறக்கும். நன்றிகள் ஐயா!
    விநாயகப் பெருமானைக் குறித்த தொன்மங்களும் புராணக் கதைகளும் இயல்பான பரிமாண வளர்ச்சியே கணபதி என்பது வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எப்படியானாலும், இந்தத் தொன்மங்களின் தொகுப்பாகவும், இவை அனைத்தையும் உள்ளடக்கி அவற்றையும் கடந்து திகழும் பேரொளியாகவும் திகழ்கிறார் கணநாதர். தியானிப்போரின், வழிபடுவோரின் ஆன்ம நலன்களையும், உலக நலன்களையும் ஒருங்கே விகசிக்கச் செய்பவராக விநாயகர் விளங்குகிறார். வேதாந்தத்தின் ஒளியால் சுடர்விடும் “தத்துவத் தெய்வமாகவும்” எளிய மக்களின், பழங்குடி மக்களின், விளிம்பு நிலை மாந்தரின் “இயற்கைத் தெய்வமாகவும்” அவரே அருள்பாலிக்கிறார். இத்தத்துவத்தை பாரதியும் எடுத்துரைக்கிறார்–
    இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்
    தாயாய்த் தந்தையாய், சக்தியும் சிவனுமாய்
    உள்ளொளி யாகி உலகெலாம் திகழும்
    பரம்பொருளேயோ பரம்பொருளேயோ!
    ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்
    தேவதேவா சிவனே கண்ணா
    வேலா சாத்தா விநாயகா மாடா
    இருளா சூரியா இந்துவே சக்தியே
    வாணீ காளீ மாமகளேயோ!
    ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது
    யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே!
    வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே..
    ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்
    வேத முனிவர் விரிவாய்ப் புகழ்ந்த
    பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்
    தானே யாகிய தனிமுதற் கடவுள்,
    ’யான்’ ’எனது’ அற்றார் ஞானமே தானாய்
    முக்தி நிலைக்கு மூலவித்தாவான்,
    சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
    நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்…
    இத்தகைய சத்திய வடிவான கடவுளிடம் உலகியல் வெற்றியையும், ஆன்மிக அருள் சக்தியையும் ஒருங்கே வேண்டித் தொழுகிறார் மஹாகவி.
    அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்
    நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்
    அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்
    உடைமை வேண்டேன் உன்துணை வேண்டினேன்
    வேண்டா தனைத்தையும் நீக்கி
    வேண்டிய தனைத்தையும் அருள்வதுன் கடனே.
    நல்வாழ்க்கையையும், வெற்றியையும், அன்பையும் அருளையும் தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும், தன் நாட்டுக்காவும் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், அனைத்து உயிர்களுக்கும், புல்பூண்டுகளுக்கும் அருளுமாறு விநாயகரை வேண்டுகிறார்.
    பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்;
    கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
    மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
    விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
    யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே,
    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
    செய்தல் வேண்டும், தேவதேவா!
    ஞானாகாசத்து நடுவே நின்றுநான்
    ‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
    விளங்குக! துன்பமும், மிடிமையும் நோவும்
    சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
    இன்புற்று வாழ்க’என்பேன்! இதனை நீ
    திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
    ‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!
    பாரதி கண்ட விநாயக தத்துவம் இத்தகு உயர்ந்த விழுமியங்களையும், வாழ்க்கை நெறிகளையும் உள்ளடக்கியது. குறும்புக்காரக் குழந்தை விநாயகன், குவலயம் அனைத்திற்கும் ஒளிதரும் விஸ்வரூப விநாயகனும் ஆவான் என்பதை பாரதியின் பனுவல் நமக்கு உணர்த்துகிறது.
    ''மக்கள் வீடுகளுக்குள் தெய்வ வழிபாடாக செய்து வந்த விநாயக பூஜையை பாலகங்காதர திலகர் சமூக விழாவாக மாற்றியமைத்து மகாராஷ்டிரத்தில் பெரியதொரு தேசிய விழிப்புணர்வை உண்டாக்கினார். பின்னர் அது பாரத தேசமெங்கும் பரவியது. ''
    “மனது கட்டுக்கடங்காமல் அலைபாய்ந்து குழப்பமாக இருக்கும் நேரங்களில் அப்படியே தெருவில நடந்துபோய் ஒன்றிரண்டு பிள்ளையார்களைப் பார்த்துவிட்டு வருவேன். மனது தெளிந்து நிர்மலமாகி விடும்,” என்று சொல்வாராம் ஜெயகாந்தன். ”நான் நாத்திகன். ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப்பேன்,” என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நாத்திகவாதிகள் அடுத்த சில நாள்கள் இதற்காக அவரை வறுத்தெடுத்து வசைபாடித் தள்ளிவிட்டார்கள்! ஆனால் பிள்ளையாருக்கு ஒன்றுமில்லை. அப்படி அறிவித்துக் கொண்ட நாத்திகரையும் பிள்ளையார் நிச்சயம் தன் தும்பிக்கையால் அரவணைப்பார். அதில் சந்தேகத்திற்கே இடமில்லை.
    (நன்றி தமிழ் ஹிந்து வலைப்பூ)//////

    நல்ல வேளை sourceஐப் போட்டீர்கள். இது பின்னூட்டத்தில் இருப்பதே நல்லது. பதிவைப் போலவே பின்னூட்டப் பக்கத்திற்கும் தனி மதிப்பு உள்ளது. அனைவரும் படிக்கின்றார்கள். ஆகவே எங்கே இருந்தால் என்ன? நன்றி!

    ReplyDelete
  17. /////Blogger Udhaya Kumar said...
    Guruvirkku vanakkm
    vinayagar paadal arputham.
    thangalukku vinayagar Arul Eappozhuthum unndu.
    Nandri./////

    நமக்கு என்று சொல்லுங்கள் உதயகுமார்

    ReplyDelete
  18. /////Blogger yishun270 said...
    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
    இவை நான்கும் கலந்து உனக்கு
    நான் தருவேன்..
    கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே
    நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
    வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா.
    அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. /////Blogger Yoga.S. said...
    வினை தீர்க்கும் விநாயகன் அடிபணிந்து அருள் பெறுவோம்!/////

    உங்களின் பிரார்த்தனை நிறைவேறும் நண்பரே! நன்றி!

    ReplyDelete
  20. /////Blogger அய்யர் said...
    கடவுள் என்று சொல்லிவிட்டால் அவருக்கு பிறப்பு கற்பிப்பது தவறு..
    அது அறிவீனம்
    கடவுள் இல்லை என்று சொன்னால் அவருக்கு எத்தனை பிறப்பு வேண்டுமானாலும் சொல்லலாம்..
    இது அறியாமை
    ஆக
    விநாயகருக்கு பிறந்த நாள் என பிறப்பு சொன்னதினால்
    நீங்கள் விநாயகரை கடவுள் இல்லை என கொள்கிறீர்கள் என பொருள் கொள்வதா?
    இல்லை..
    அவர் கடவுள் என்றே வணங்க தக்கவர்
    என்று சொல்கிறோம். அவருக்கு பிறந்த நாள் என்று தவறாக குறித்துவிட்டோம் என வருத்தம் சொல்லப் போகிறீர்கள் என (காத்திருந்து)கொள்வதா?/////

    விநாயகர் சதுர்த்திக்கு உங்களுடைய விளக்கம் என்ன? அதைச் சொல்லுங்கள் முதலில்!

    ReplyDelete
  21. /////Blogger Parvathy Ramachandran said...
    வாத்தியார் அவர்களுக்கும் சக மாணவர்களுக்கும் விநாயக சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள். அற்புதமான பாடல் படிக்கத் தந்த நல்லதொரு பதிவுக்கு நன்றி ஐயா!!.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. /////Blogger kmr.krishnan said...
    //ஞானாகாசத்து நடுவே நின்றுநான்
    ‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
    விளங்குக! துன்பமும், மிடிமையும் நோவும்
    சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
    இன்புற்று வாழ்க’என்பேன்! இதனை நீ
    திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
    ‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!//
    விநாயகர் நான் மணிமாலையில் மகாகவியின் ஆகச் சிறந்த வரிகளை எடுத்துக்கொடுத்த கவிஞர் ஹாலாஸ்யத்திற்கு நன்றி.
    'அங்ஙனமே ஆகுக' என்பது 'ததாஸ்து' என்பதின் தமிழ் வடிவம். 'ஆமென்'னும் அதே பொருள் தான்.இஸ்லாமியரின் 'அமீனு'ம் அப்படியே!
    நாட்டுப்புற கதைசொல்லிகள், வில்லுப்பாட்டுக்காரர்களுக்குப் பின்னால் அமர்ந்து 'ஆமாஞ்சாமி' போடுவதும் அதே மரபுதான்.
    மகாகவி ஒரு வேத கோஷ்டியின் தலைமை உபாத்தியாயராக இருந்து
    நல்வாக்குச் சொல்வாராம்.அதற்கு விநாயகர் அவ‌ருடன் வந்த உதவியாளர் போல பின்னணியில் இருந்து 'அப்படியே ஆகட்டும்' என்று ஆமோதிக்க வேண்டுமாம். மகாகவி பாரதியின் தன்னம்பிக்கையும், அவர் தெய்வத்தை
    எவ்வளவு பாவங்களில் அனுபவிக்கிறார் என்பதும் இந்த வரிகளில் காணக் கிடைக்கிறது.
    வகுப்பறை வாத்தியாருக்கும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது விநாயகச் சதுர்த்தி நமஸ்காரங்கள்.////

    நல்லது. உங்களுடைய வந்தனங்களுக்கு (நமஸ்காரங்கள்) நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  23. ////Blogger kmr.krishnan said...
    //விநாயகருக்கு பிறந்த நாள் என பிறப்பு சொன்னதினால்
    நீங்கள் விநாயகரை கடவுள் இல்லை என கொள்கிறீர்கள் என பொருள் கொள்வதா?//
    பக்தி நிலையில் நின்று பார்க்கும் போது தெய்வம் அல்லது இறைவன் அல்லது கடவுளுக்கு பக்தன் தான் அனுபவிக்கும் அனைத்தையும் அவர் மீது சார்த்திப் பார்க்கிறான்.பக்தி மார்க்கத்தில் புராணக் கருத்துக்களை நம்புவதும், 'பிறவான் இறவான்' என்று வாயால் பாடிக் கொண்டே பிறந்த நாள் கொண்டாடுவதும்
    உண்டு. அய்யர் ஞானப்பாதையில் செல்பவராயின் அது அவருக்குச் சரி.
    யார் எந்தப் பாதையைச் சார்ந்து, அதில் அயர்வுராமல் பயணித்து வந்தாலும் இறுதியில் சென்று அடையப் போவது அந்தக் கடவுளையே.
    'சமயகோடிகள் எல்லாம் எந்தெய்வம் உன் தெய்வம் என்று எதிர் வழக்காடினாலும்' சென்றடையப் போவதென்னவோ ஒரே பரம் பொருளையே.
    எனவே அறிவு ஜீவியான அய்யர், உணர்வுபூர்வமான பக்தர்களை சிறிது தனியே விட்டு, விலகி நின்று மனதிற்குள் சிரித்துக் கொள்ளலாம்.
    வருத்தம் தெரிவிக்கச் சொல்லி வறுத்து எடுக்க வேண்டாம் என்று நட்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
    "சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே"/////

    கடவுள் வேறு, தெய்வம் வேறு, இறைவன் வேறு, என்பார் அவர். எங்களுக்கு எல்லாம் ஒன்றுதான். ருசிக்குச் சாப்பிடுகிறவன் இருக்கிறான். பசிக்குச் சாப்பிடுகிறவன் இருக்கிறான். நாங்கள் பசிக்குச் சாப்பிடுகிறவர்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com