மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.9.12

Astrology லக்கின சந்திப்புக்களில் ஏற்படும் பிறப்புக்கள் (Border births between 2 lagnas)

 Astrology லக்கின சந்திப்புக்களில் ஏற்படும் பிறப்புக்கள்  
(Border births between 2 lagnas)

இது நேற்றைய பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு, இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பஞ்சாங்க வகைகள்

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன.
1. திருக்கணித பஞ்சாங்கம்
2. வாக்கிய பஞ்சாங்கம்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். தமிழகக் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

திருக்கணித பஞ்சாங்கம்
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும்.

திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கள்:
வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம்,
ஆதவன் திருக்கனிதப் பஞ்சாங்கம்,
குமரன் திருக்கணித பஞ்சாங்கம்,
பாலன் திருக்கணித பஞ்சாங்கம்,
ராஷ்ட்ரீய பஞ்சாங்கம்,
சபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம்,
ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம்,
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம்.
ஆகியவைகள் புகழ்பெற்ற திருக்கணிதப் பஞ்சாங்களாகும்.

வாக்கிய பஞ்சாங்கம்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள் ஒன்று கூடி எழுதிய சுலோகங்களில் உள்ள கணித முறைப்படி அப்படியே எழுதப்படும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமாகும். வாக்கியம் என்பது மாறுதல் இல்லாமல் ரிஷிகளின் வாக்கை அப்படியே பிரதிபலிக்ககூடியதாகும்..

தமிழ்நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம்தான் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.

ஆற்காடு ஸ்ரீசீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,
திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம்,
ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம்,
பாம்புப் பஞ்சாங்கம்,
ஸ்ரீகாஞ்சி மடத்து பஞ்சாங்கம்,
சிருங்கேரி மடம் பஞ்சாங்கம்,
ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம்,
ஆகியவைகள் புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்கங்களாகும்!.

இந்த வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
----------------
சரியான கணக்குகளுக்கு என்றால் திருக்கணிதம் சிறந்தது. சரியான ஜாதகத்திற்கு என்றால் வாக்கியம் சிறந்தது. (நமது பெற்றோர்கள் கணித்துவைத்துள்ள ஜாதகம் இதன் அடைப்படையில்தான்) ஆகவே கணினியில் திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, எங்கப்பா எழுதி வைத்ததுபோல இல்லையே என்று சொல்லாதீர்கள்
--------------------------------
உங்க அப்பா எழுதியதுபோல வேண்டுமென்றால், ராமன் அயனாம்சத்தில் கணித்து வைத்துக் கொள்ளுங்கள். ராமன் அயனாம்சத்திலும்
360 நாள் கணக்கை வைத்துக் கணித்துக்கொள்ளுங்கள். அதற்கான படம் கீழே உள்ளது


எனக்கு அப்படித்தான் எழுதிவைத்திருக்கிறேன். சரியாக உள்ளது. என் தாத்தா எழுதி வைத்திருப்பதைப் போல இருக்கிறது.

சிலருக்கு வித்தியாசம் வருகிறது என்று ஏன் சொல்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது. கால சந்திப்பில்  (Border Birth) பிறந்தவர்களுக்கு அதுபோன்று வரும். அவர்கள் ராமன் அயனாம்சத்தில் கணித்து வைத்துக்கொள்வது நல்லது. ராமன் அவர்கள்தான் ஜோதிடத்திற்கு அத்தாரிட்டியாக எல்லோராலும் போற்றப்பட்டு வந்தவர். அதை மனதில் வையுங்கள்.

பொதுவாக லக்கின சந்திப்புக்களில் (Border birth between 2 lagnas) பிறந்தவர்களுக்கு ஜாதகங்களில் லக்கினக் குழப்பம் இருக்கும். அதுபோல் கிரகங்கள் ராசி சந்திப்பில் நகரும் காலத்தில் (Border between 2 rasis for planets) பிறந்தவர்களுக்கு கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடக் குழப்பம் ஏற்படும். அவைகள் தவிர்க்க முடியாது. அவர்கள் தங்கள் ஜதகத்தைக் கணித்து வைத்துக்கொண்டு, வேறு முறைகளுடன் தங்கள் ஜாதகத்தை நோண்டிப் பார்ப்பதை அல்லது தோண்டிப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிரச்சினை இருக்காது. குழப்பம் இருக்காது.
---------------------------------------------
பிரச்சினை தீர வேண்டுமென்றால், உங்க அப்பா எழுதிவைத்துள்ளதை உங்களுடைய ஜாதகமாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் அஷ்டகவர்க்கம் இல்லை என்றால், அஷ்டகவர்கத்தை மட்டும் தனியாகக் கணித்து அதனுடன் சேர்த்துவைத்துக்கொள்ளுங்கள்.
------------------------------------------------------
ஜோதிட மென்பொருட்களில் லஹிரி, ராமன், கிருஷ்ணமூர்த்தி முறை என்று இருப்பதைப் போல, வாக்கியத்திற்கும் option உள்ள மென் பொருள் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, கீழே ஒரு புதிய மென்பொருளைக் கொடுத்துள்ளேன். அதில் வாக்கியமுறைக்கான சாய்ஸ் உள்ளது.அதைப் பயன் படுத்திக் கொள்ளூங்கள். பயன் படுத்திப் பார்த்து விட்டு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள். அந்த மென் பொருளுக்கான சுட்டியை நமது வகுப்பறைக் கண்மணி ஒருவர் கொடுத்தார். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!


image

அதற்கான சுட்டி  (URL) http://www.astraura.org/Charter2/CharterVak3.aspx

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. குருவிற்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அயனாம்சம் என்பது என்ன? பதில் பூமி அச்சு வருடம் தேராயமாக 1கலை பின் நோக்கி நகர்கிறது இவ்வாறு நகரும் நிலையை மேல்நாட்டவர் சயான முறை என்றும் மேஷபுள்ளி என்றும் அழைக்கின்றனர் நிலையாக அமைந்த புள்ளியை அஷ்வனிபுள்ளி என்றும் நிராயனமுறை என்று நாம் அழைக்கிறோம் இருந்தாலும் ஒரு காலத்தில் அஷ்வனி புள்ளியும் மேஷபுள்ளியும் ஒன்றாக இருந்த காலத்தை ஜோதிடமேதைகள் வெவ்வெறாக கணிக்கின்றனர் லகரி கி பி 285லும் K P கி பி 297லும் பி வி ராமன் கி பி 397லும் இரண்டும் ஒன்றாக இணைந்தாக கணிப்பதால் கணிதங்களில் வித்தியாசம் ஏற்படுகிறது இதை கம்யூட்டர் ஜாதகங்களில் எளிதாக காண முடியும் ஆகவே நகரும் மேஷபுள்ளிக்கும் நிலையான அஷ்வனிபுள்ளிக்கும் உள்ள வித்தியாசமே அயனாம்சம் ஆகும் இந்த குழப்பத்தை நீக்கும் பொருட்டு புனேயில் கி பி 1926ல் ஒர் ஜோதிட மாநாடு கூடி கி பி 300ல் இரண்டு புள்ளிகளும் இணைந்திருந்தாகவும் மேஷபுள்ளி வருடம் 50.26 விகலை பின்நோக்கி நகர்வதாகவும் உறுதி செய்யபட்டு திருக்கணித அயனாம்சம் என்று பொதுவாக உறுவாக்கபட்டது இதை பயன்படுத்தியே ஆனந்த போதினி பஞ்சாங்கம் கணிக்கபட்டதாக சி ஜி ராஜன் பஞ்சாங்க கணணம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்

      Delete
  2. Sir,

    What is the option i have to select for Zone,time system and latitude selection.

    ReplyDelete
  3. புதிய மென் பொருள் நல்ல உபயோகம் தான்.சுட்டிய தோழருக்கும் வெளியிட்ட உங்களுக்கும் நன்றி.

    day light saving time
    என்பதைப்பற்றியும் ஏதாவது கூறுங்களேன்.

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.

    என்னுடைய ஜாதகம் லக்ன சந்திப்பில் மட்டுமல்ல. ராசி சந்திப்பிலும் சிக்கியிருக்கிறது. சந்திரன் உத்திராடம் 2ஆம் பாதம். லக்னம் விசாகம் 3ஆம் பாதம்.
    ராசி ஒரு ஸ்டெப் முன்னால் வைத்தால் தனுசு ராசி. லக்னம் ஓரடி பின்னால் வைத்தால் விருச்சிக லக்னம்.

    இந்த குழப்பங்களுக்கெல்லாம் உங்கள் பழைய பதிவுகள் மூலமாக இன்றைய பதிவில் உள்ள மென்பொருட்கள் மூலம் ஓரளவு குழப்பம் தீர்ந்தது.

    கணிணியில் திருக்கணிதம் கணித்ததை என்னுடைய ஜாதகமே இல்லை என்று நினைத்து பொதுவாக பலன் கணித்து பார்த்தால் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை. ஆனால் வீட்டில் எழுதி வைத்த படி (வாக்கிய முறை) உள்ள ஜாதகம் 99 சதவீதம் பொருந்துவதால் நான் அதையே பின்பற்றுகிறேன்.

    ------------------------------------
    கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களில் பலருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு வருகிறது. இதில் நாலு பேர் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் காலை கொடுத்து தெய்வாதீனமாக பிழைத்து வந்திருக்கிறார்கள்.


    மற்றொரு நண்பர், மாற்றுத்திறனாளி. சில வாரங்களுக்கு முன்பு அவரைக்குறிப்பிட்டு பின்னூட்டமிட்டுள்ளேன். அவர் முழுவதும் கையினால் நகர்ந்து செல்பவர். அவர் கால் தரையில் லேசாக படும் அவ்வளவுதான். அவர் டியூஷன் பாடம் நடத்தும் இடத்தில் வழக்கம்போல் இறங்கும் போது லேசாக ஸ்லிப் ஆகி நாலு படிகள் சறுக்கலில் கால் எலும்பில் நன்றாக அடிபட்டு ஒரு மாதம் அவஸ்தை.

    மற்ற சிலர் இப்படி தடுக்கி விழுந்து அடிபட்டு காலில் எலும்பு முறிவு என்று சிரமப்பட்டு வருகிறார்கள். இதில் என்ன ஒற்றுமை என்றால், இவர்களில் 90 சதவீதம் பேர் (எனக்கு தெரிந்த மிகச் சிலரில்) மீனம், மேஷம், கடகம், துலாம் ராசிக்காரகள் அதிகம். நாளை (செப்.12) சனி வக்ர நிவர்த்தியாகும் வரை இந்த சிரமமோ என்று என் மனதில் ஒரு குழப்பம்.

    எல்லாருக்கும் காலில் அடிபட்டு வருகிறது. மகர ராசி நாதனாக இருந்தாலும் அவர் வேலையை காட்டுவாரே என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்து வந்தேன். நாளை விக்ர நிவர்த்தி என்ற நிலையில் எதேச்சையாக என் காலை கவனித்தேன். 20 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டிக்கு பின்னால் குடியிருக்கும் ஒருவருக்கு திருமணம். வாசலில் சின்னதாக ஒரே ஒரு சிமெண்ட் பிளேட் மட்டும்தானே இருக்கு. கொஞ்சமாக டேமேஜ் ஆகி ஓரங்கட்டப்பட்டிருக்கும் மற்றொரு பிளேட்டை நானும் இன்னொருவரும் சேர்த்து தூக்கி வடிகால் பகுதியில் போட்டு நேராக நகர்த்தும்போது ஒரு செ.மீ அகலத்தில் லேசாக தோல் சீவப்பட்டது. அது ஒரு வாரம் வரை காலணி அணியும் போது லேசான வேதனை தந்து கொண்டேதான் இருந்தது.

    பாதிப்பு சின்னது என்று இருந்ததால் அதை கவனிக்காமல் இனிதான் சனி எனக்கு ஆப்பு வைக்கப்போவதாக ஜாக்கிரதையாக இருப்பதாக என்னையே நான் ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறேன்.

    25 அல்லது 26 ஆண்டுகளுக்கு முன்பே சனி இதேபோல் துலாமிலோ விருச்சிகத்திலோ வக்ர நிவர்த்தி கேம் ஆடிக்கொண்டிருக்கும்போது என்னுடைய 5 வயதில் காலில் துருப்பிடித்த தகரம் கிழித்து 3 தையல் போட்டாயிற்று. ஆனாலும் இந்த முறையும் அவர் வேலையை கச்சிதமாக செய்து விட்டு போயிருக்கிறார்.

    மனிதர்கள்தான் கடமை தவறுகிறோமே தவிர கிரகங்கள் தவறுவதே இல்லை.

    ReplyDelete
  5. சுட்டிக் காட்டிய தோழருக்கு நன்றி
    கெட்டியாக பிடித்துக் கொண்டோம்..

    பதிவில் சேர்த்த வாத்தியாருக்கு நன்றி
    பத்திரமாக கோப்பில் சேர்த்துக் கொண்டோம்.

    ReplyDelete
  6. நான் பிறந்த போது என் தந்தையார் திருக்கணித முறையில்தான் ஜாதகம் கணித்து வைத்தார். இன்றுவரை நான் அதைதான் பயன்படுத்தி வருகிறேன்.

    ReplyDelete
  7. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger Subbramania balaji said...
    Sir,
    What is the option i have to select for Zone,time system and latitude selection./////

    http://www.heavens-above.com/ என்று ஒரு தளம் உள்ளது. அங்கே latitude & longitudeகள் எல்லா ஊர்களுக்கும், கிராமங்களுக்குக்கூடக் கிடைக்கும். மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு அங்கே விவரங்கள் கிடைக்கும்

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    புதிய மென் பொருள் நல்ல உபயோகம் தான்.சுட்டிய தோழருக்கும் வெளியிட்ட உங்களுக்கும் நன்றி.
    day light saving time
    என்பதைப்பற்றியும் ஏதாவது கூறுங்களேன்./////

    அது வெள்ளைக்காரர்களுக்கு. நமக்கில்லை. Daylight saving time (DST)—also summer time in several countries, in British English, and European official terminology (see Terminology)—is the practice of advancing clocks so that evenings have more daylight and mornings have less. Typically clocks are adjusted forward one hour near the start of spring and are adjusted backward in autumn.[7]

    Though mentioned by Benjamin Franklin in 1784, the modern idea of daylight saving was first proposed in 1895 by George Vernon Hudson [8] and it was first implemented during the First World War. Many countries have used it at various times since then.

    ReplyDelete
  10. ////Blogger சரண் said...
    வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.
    என்னுடைய ஜாதகம் லக்ன சந்திப்பில் மட்டுமல்ல. ராசி சந்திப்பிலும் சிக்கியிருக்கிறது. சந்திரன் உத்திராடம் 2ஆம் பாதம். லக்னம்

    விசாகம் 3ஆம் பாதம்.
    ராசி ஒரு ஸ்டெப் முன்னால் வைத்தால் தனுசு ராசி. லக்னம் ஓரடி பின்னால் வைத்தால் விருச்சிக லக்னம்.
    இந்த குழப்பங்களுக்கெல்லாம் உங்கள் பழைய பதிவுகள் மூலமாக இன்றைய பதிவில் உள்ள மென்பொருட்கள் மூலம் ஓரளவு குழப்பம்

    தீர்ந்தது.
    கணிணியில் திருக்கணிதம் கணித்ததை என்னுடைய ஜாதகமே இல்லை என்று நினைத்து பொதுவாக பலன் கணித்து பார்த்தால்

    கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை. ஆனால் வீட்டில் எழுதி வைத்த படி (வாக்கிய முறை) உள்ள ஜாதகம் 99 சதவீதம் பொருந்துவதால்

    நான் அதையே பின்பற்றுகிறேன்.//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //// கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களில் பலருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு வருகிறது.

    இதில் நாலு பேர் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் காலை கொடுத்து தெய்வாதீனமாக பிழைத்து வந்திருக்கிறார்கள்.
    மற்றொரு நண்பர், மாற்றுத்திறனாளி. சில வாரங்களுக்கு முன்பு அவரைக்குறிப்பிட்டு பின்னூட்டமிட்டுள்ளேன். அவர் முழுவதும்

    கையினால் நகர்ந்து செல்பவர். அவர் கால் தரையில் லேசாக படும் அவ்வளவுதான். அவர் டியூஷன் பாடம் நடத்தும் இடத்தில்

    வழக்கம்போல் இறங்கும் போது லேசாக ஸ்லிப் ஆகி நாலு படிகள் சறுக்கலில் கால் எலும்பில் நன்றாக அடிபட்டு ஒரு மாதம் அவஸ்தை.
    மற்ற சிலர் இப்படி தடுக்கி விழுந்து அடிபட்டு காலில் எலும்பு முறிவு என்று சிரமப்பட்டு வருகிறார்கள். இதில் என்ன ஒற்றுமை

    என்றால், இவர்களில் 90 சதவீதம் பேர் (எனக்கு தெரிந்த மிகச் சிலரில்) மீனம், மேஷம், கடகம், துலாம் ராசிக்காரகள் அதிகம். நாளை

    (செப்.12) சனி வக்ர நிவர்த்தியாகும் வரை இந்த சிரமமோ என்று என் மனதில் ஒரு குழப்பம்.
    எல்லாருக்கும் காலில் அடிபட்டு வருகிறது. மகர ராசி நாதனாக இருந்தாலும் அவர் வேலையை காட்டுவாரே என்று மிகவும்

    எச்சரிக்கையாக இருந்து வந்தேன். நாளை விக்ர நிவர்த்தி என்ற நிலையில் எதேச்சையாக என் காலை கவனித்தேன். 20 நாட்களுக்கு

    முன்பு எங்கள் வீட்டிக்கு பின்னால் குடியிருக்கும் ஒருவருக்கு திருமணம். வாசலில் சின்னதாக ஒரே ஒரு சிமெண்ட் பிளேட் மட்டும்தானே

    இருக்கு. கொஞ்சமாக டேமேஜ் ஆகி ஓரங்கட்டப்பட்டிருக்கும் மற்றொரு பிளேட்டை நானும் இன்னொருவரும் சேர்த்து தூக்கி வடிகால்

    பகுதியில் போட்டு நேராக நகர்த்தும்போது ஒரு செ.மீ அகலத்தில் லேசாக தோல் சீவப்பட்டது. அது ஒரு வாரம் வரை காலணி அணியும்

    போது லேசான வேதனை தந்து கொண்டேதான் இருந்தது.
    பாதிப்பு சின்னது என்று இருந்ததால் அதை கவனிக்காமல் இனிதான் சனி எனக்கு ஆப்பு வைக்கப்போவதாக ஜாக்கிரதையாக

    இருப்பதாக என்னையே நான் ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறேன்.
    25 அல்லது 26 ஆண்டுகளுக்கு முன்பே சனி இதேபோல் துலாமிலோ விருச்சிகத்திலோ வக்ர நிவர்த்தி கேம்

    ஆடிக்கொண்டிருக்கும்போது என்னுடைய 5 வயதில் காலில் துருப்பிடித்த தகரம் கிழித்து 3 தையல் போட்டாயிற்று. ஆனாலும் இந்த

    முறையும் அவர் வேலையை கச்சிதமாக செய்து விட்டு போயிருக்கிறார்.
    மனிதர்கள்தான் கடமை தவறுகிறோமே தவிர கிரகங்கள் தவறுவதே இல்லை./////

    சனி வக்கிரகதியில் இருக்கும்போது எச்சரிக்கையாக இருப்பதுடன், அவரைப் பிரார்த்தித்து வருவதும் நன்மை பயக்கும்!

    ReplyDelete
  11. /////Blogger அய்யர் said...
    சுட்டிக் காட்டிய தோழருக்கு நன்றி
    கெட்டியாக பிடித்துக் கொண்டோம்..
    பதிவில் சேர்த்த வாத்தியாருக்கு நன்றி
    பத்திரமாக கோப்பில் சேர்த்துக் கொண்டோம்./////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  12. /////Blogger ananth said...
    நான் பிறந்த போது என் தந்தையார் திருக்கணித முறையில்தான் ஜாதகம் கணித்து வைத்தார். இன்றுவரை நான் அதைதான் பயன்படுத்தி வருகிறேன்./////

    அப்படி ஒரு நிலைப் பாட்டுடன் இருந்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது! உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  13. இங்கு மலேசியாவில் நான் பார்த்த வரையில் ஆலயங்களிலும், பல ஜோதிடர்களாலும் வாக்கியப் பஞ்சாங்கம்தான் உபயோகப் படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணம் கொக்குவில் ரகுநாதையர் வாக்கியப் பஞ்சாங்கம் பல வருடங்களாக (நான் பிறப்பதற்கு முன்னிலிருந்து - எத்தனை ஆண்டு என்பது நினைவில் இல்லை) இங்கு மிகவும் பரவலாகப் பயன் பாட்டில் உள்ளது. சில ஆண்டுகளாக இந்த நாட்டிலேயே இங்குள்ள நேரத்தை கணக்கில் எடுத்து ஒரு வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. இது இப்போது சற்று பிரபலமாகி வருகிறது. நேரத்தை கூட்டுவது/கழிப்பது என்ற தொல்லை இதனால் இல்லை என்ற காரணம்தான்.

    ReplyDelete
  14. Ithai balamuri vilagivitergall ungaal vagupadi naan tiruganthamuraiyaaa nampigai ullean

    ReplyDelete
  15. /////Blogger ananth said...
    இங்கு மலேசியாவில் நான் பார்த்த வரையில் ஆலயங்களிலும், பல ஜோதிடர்களாலும் வாக்கியப் பஞ்சாங்கம்தான் உபயோகப் படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணம் கொக்குவில் ரகுநாதையர் வாக்கியப் பஞ்சாங்கம் பல வருடங்களாக (நான் பிறப்பதற்கு முன்னிலிருந்து - எத்தனை ஆண்டு என்பது நினைவில் இல்லை) இங்கு மிகவும் பரவலாகப் பயன் பாட்டில் உள்ளது. சில ஆண்டுகளாக இந்த நாட்டிலேயே இங்குள்ள நேரத்தை கணக்கில் எடுத்து ஒரு வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. இது இப்போது சற்று பிரபலமாகி வருகிறது. நேரத்தை கூட்டுவது/கழிப்பது என்ற தொல்லை இதனால் இல்லை என்ற காரணம்தான்./////

    உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  16. /////Blogger krishnababuvasudevan said...
    Ithai balamuri vilagivitergall ungaal vagupadi naan tiruganthamuraiyaaa nampigai ullean/////

    இரண்டில் ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்து அதைக் கடைப்பிடித்தால் சரிதான்!

    ReplyDelete
  17. vanakkam ayya,

    1.lagna santhipil piranthavargaluku astavargam ella muraiyulum ore pondru irukuma allathu veru paduma?

    2.Veru padumaanal, avargal palanum veru padum allava? piragu eppadi ethaavathai nambi kadaipidipathu? nambinalum nambavittalum, ethu seriyana graha amaypo athuthane nadakum?

    Neengal orumurai sonnathupol, pirakum pothu parthaneram sari enpathey oru nambikkai than. gadigarathil mani 5 nimidam mun pin kuda irukkalam!

    Engal Jadhagathaal naangal kulamaba vendum endru engal jadagathil irukum poliruku!:):):)

    Ennavo Ayya.Nadapathu Nadakattu:)nam kayil ondrum illai.

    ReplyDelete
    Replies
    1. Ayya Vanakkam.

      Kindly reply and clarify doubts.I asked those late.

      Mark attendance for this late comer.

      Delete
  18. /////Blogger praveen'z blog said...
    vanakkam ayya,
    1.lagna santhipil piranthavargaluku astavargam ella muraiyulum ore pondru irukuma allathu veru paduma?////

    லக்கின சந்திப்பில் பிறந்தவர்களுக்கு, வாக்கியம், திருக்கணிதம் ஆகிய இரண்டிலும் ஜாதகத்தைக் கணித்துவைத்துக்கொண்டு, மண்டையைப் பிய்த்துக்கொள்ளும்போதுதான் எல்லாக் குழப்பங்களும் வரும்.

    மன உறுதியோடு ஏதாவது ஒருமுறையில் ஜாதகத்தைக் கணித்துவைத்துக்கொண்டு நிம்மதியாக இருங்கள்! உங்கள் பெற்றோர்கள் எழுதிவைத்துள்ள ஜாதகத்தை மட்டும் பின் பற்றுங்கள். குழப்பம் வராது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com