மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.7.12

Mental Health நேசிக்கும், நெகிழவைக்கும் உறவுகள்!


Mental Health நேசிக்கும், நெகிழவைக்கும் உறவுகள்!

மனவளக் கட்டுரை

எத்தனை கோடி பணம் இருந்தாலும், பணத்தால் வாங்க முடியாத விஷயங்கள்  பல உள்ளன.

அவற்றுள் முக்கியமானது உறவுகள்.

உறவுகளை நீங்கள் தேடிப்பிடித்து வாங்க முடியாது. கருணை மிக்க இறைவனால் கொடுக்கப் படுபவை அவை!

"தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை
முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை
பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை"

என்று அசத்தலாக,  திரைப்படப் பாடலாக எழுதிவைத்தான் ஒரு கவிஞன்! எத்தனை சத்தியமான வார்த்தைகள்! வரிகள்!

தாய், தந்தையைப் போலவே, சகோதரன், சகோதரியையும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. தாய்வழி உறவுகளையும் நீங்கள் தேர்ந்
தெடுக்க முடியாது. தாயோடு வந்தவை அவை! தந்தைவழி
உறவையும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அதுவும்
தகப்பனோடு வந்தவை

மனைவியை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியுமா என்றால்,
100% அது உங்கள் கையில் இருப்பதுபோல தோன்றும். தோற்றம்தான்!
உண்மை நிலவரம் வேறு. அதுவும் உங்கள் இல்லை!

வருபவள் தேவதையாக இருந்தாலும் இருக்கலாம். அல்லது பிசாசாக இருந்தாலும் இருக்கலாம். வந்த பிறகுதான் தெரியும்.

காதலித்து மணந்தவளாக இருந்தாலும் அல்லது பெற்றோர்கள் தேர்வு
செய்ய மணந்தவளாக இருந்தாலும் அல்லது மணந்தவனாக இருந்தாலும் அதுதான் நிலைமை! காதலிக்கும் போது, தங்களைப் பற்றிய நல்லதை மட்டுமே அவர்கள் காட்டுவதால் அந்த நிலைமை. உண்மைத் தோற்றம் திருமணத்திற்குப் பிறகு, காலம் கடந்துதான் தெரியவரும்

பழத்தை வெட்டிய பிறகுதான் தெரியும், உள்ளே எத்தனை வண்டுகள் இருக்கின்றன என்று!

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்!"

என்று 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்துவிட்டுப்போனார்.

ஆகவே அந்த உறவும் இறைவனால் கொடுக்கப்படுவதுதான்! அதையும் மனதில் வையுங்கள்
-----------------------------------------------------------------------------------------
உறவைவிட நட்பு மேலானது போல தோன்றும்.

நட்பு மேலானதுதான். அதில் சந்தேகமில்லை. நல்ல நட்பு கிடைத்தால் உங்களைவிட பாக்கியசாலி யாருமில்லை!

நட்பு எப்படி மேலானது என்று 40 பக்கங்களுக்குக் குறையாமல்  எழுதலாம். கட்டுரை திசை மாறி விடும். ஆகவே எழுதவில்லை. பின்னொரு சமயம் பார்க்கலாம்!

நட்பைத் தேர்ந்தெடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. அதிலும் சந்தேகமில்லை!
------------------------------------------------------------------------------------------
சரி, நட்பிற்கும், உறவிற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்ன?

நட்பை வேண்டாம் என்றால் நீங்கள் விட்டு விடலாம். உறவை விட முடியாது!

நட்பு உத்தேசமாக ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியது. உறவு அப்படி மாறாது. நீங்கள் பிறந்ததில் இருந்து,
உங்களைக் காலன் அள்ளிக் கொண்டு செல்லும் வரை,  தொடர்ந்து
வருவது உறவாகும்

பள்ளியில் படித்தபோது கிடைத்த நண்பர்களில் எத்தனை பேர்
இன்றும் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்?
கல்லூரியில் படித்தபோது கிடைத்த நண்பர்களில் எத்தனை பேர்
இன்றும் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்? வேலை
கிடைத்து, நீங்கள் பயிற்சி பெற்ற காலத்தில் கிடைத்த நண்பர்களில்
எத்தனை பேர் இன்றும் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்? வேலையில் சேர்ந்து பணி செய்த இடங்களில், மற்றும் வசித்த ஊர்களில் உங்களுக்குக் கிடைத்த நண்பர்களில் எத்தனை பேர் இன்றும் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்?

இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

எண்ணிக்கையைச் சொல்லுங்கள்!
அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு மாறும்.
கூடலாம் அல்லது குறையலாம்
இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்!
----------------------------------------------------------------
உறவு அப்படி அல்ல!

உறவின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடுமே தவிர, குறையாது. உறவுகளில் இரண்டு பேர் இறந்திருந்தால், நான்கு பேர்களுக்கு திருமணமாகியிருக்கும் அல்லது குழந்தை பிறந்திருக்கும் - அந்தப் புது உறவுகள், உறவுகளின் எண்ணிக்கையைக் குறையாமல் பார்த்துக்கொள்ளும்!

”சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது”

என்று அதற்கும் ஒரு பாடலை எழுதிவைத்தார் நமது கவியரசர் கண்ணதாசன்.
------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

உறவுகளுக்கு உங்கள் மேலுள்ள அன்பு மாறாமல் இருக்க என்ன
செய்ய வேண்டும்? உங்கள் மேல் கசப்பு ஏற்படாமல் இருக்க
என்ன செய்ய வேண்டும்?

கடன் கேட்காமல் கெட்டது
உறவு பார்க்காமல் கெட்டது
என்பார்கள்

நேரம் இல்லை என்று சொல்லாமல், உறவினர்கள் அழைக்கும்போது அவர்களது வீட்டு விஷேசங்களுக்கும், விழாக்களுக்கும் தவறாமல்
சென்று வாருங்கள். அதில் ஒரு வசதி, அனேக உறவுகளை நீங்கள் ஒரே இடத்தில் சந்தித்து மகிழலாம்.

அதுபோல உள்ளூரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு மாதம் ஒருமுறை
யாவது சென்று வாருங்கள். சும்மா கையை வீசிக்கொண்டு சென்று
வராமல், போகும்போது பழங்கள் அல்லது பிஸ்கெட்டுகள் வாங்கிக்
கொண்டு செல்லுங்கள். அவர்கள் வீட்டில் சின்னக் குழந்தைகள்
இருந்தால் வேஃபர் பிஸ்கெட்ஸ், டெய்ரிமில்க் சாக்லேட்டுக்கள் போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்லுங்கள்

அடுத்ததாக யாரிடமும் குறை கண்டு பிடித்து, அதை ஊதிப் பெரிதாக்கிப் பேசிக்கோண்டிருக்காதீர்கள். யாரிடம்தான் குறைகள் இல்லை.
உங்களிடம் இல்லையா?

உங்கள் உறவினர்களில் ஒருவன் பெண்டாட்டி தாசனாக
இருக்கலாம். அல்லது தன்னைப் பேணியாக இருக்கலாம்.
அல்லது கஞ்சனாகஇருக்கலாம். அதெல்லாம் ஜாதகக்
கோளாறுகள் (அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக
அலசலாம்) அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்
விட்டு விடுங்கள்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது முதுமொழி. அதை மனதில் வையுங்கள்
----------------------------------------------------------------------------

உறவுகள் அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பார்த்து, அவர்களுடன் பழகாதீர்கள்
அன்பை வெளிப் படுத்தும் முகமாகப் பேசுங்கள்
கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்
உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்யுங்கள்.
உங்கள் மேலுள்ள மதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

இவை எல்லாம் உங்களால் முடிந்தவைதான்
செய்யுங்கள்.
என்ன நடக்கிறதென்று பிறகு பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
வெள்ளிக்கிழமை!
பக்தி மலர்


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே!
               - திருநாவுக்கரசர்
-----------------------------------------------
3.

செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான்.
செவ்வாய் கிரகத்திற்கான துதிப் பாடல் சென்னை வடபழநிக் கோவிலில் உள்ளது
அறியத் தந்தவர், நமது வகுப்பறை மாணவர் சக்தி கணேஷ், சென்னை
அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
-----------------------------------------
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், செவ்வாய் தசா புத்திகளால் பாதிப்பை எதிர்நோக்குபவர்களும் இந்தப் பாடலைப் பாராயணம் செய்யலாம்!
----------------------------------------
பரசிவன் விளிணுதல் படர்வியர் வைத்துளி
பாரினில் தெரித்திட நீஉறு வானவன் !
பரத்து வசானல் முனிவர்பால் பலதலை
பழுதறப் பயின்றரும் வல்லவ னானவன்!
கருத்தினில் சிவனையே கவினுரத் தாங்கிநீ
கடுந்தவம் புரிந்தொரு கோளென நின்றவன்!
அருணன், சந்திரன், வியாழன் ஆகியோர்க்(கு)
அன்புயர் நண்பனாய் விளங்கிடு கின்றவன்!

பொன்னொளிர் பூமியின் காரக னாகநீ
பொலிந்துல கோர்கெலாம் நலம்புரி கின்றவன்!
செந்நிற மேனியோ டிரவியின் இடப்புறம்
திகழ்வுற இருந்துநீ தென்திசை ஆள்பவன்!
பன்னிரு கையனை அதிதே வதைஎனப்
பாங்குடன் கொண்டுநீ ஓங்கியே வாழ்பவன்!
அன்னமும் ஆடும்நீ அமரும்வா கனங்களாம்
அழகிய செண்பக மலருனக் குரியதாம்!

செய்ய துவரயைத் தினமும்நீ புசிப்பவன்!
செம்பவ ளத்தையும் செம்பையும் நயப்பவன் !
நெய்யெரி சமித்தென கருங்காலி கொள்பவன் !
நித்தமும் துவர்ப்பு சுவையினை விழைபவன்!
வையகம் தன்னிலே உடன்பிறந் தோழர்களை!
வாழவே வைத்திடும் பொறுப்பினை ஏற்றவன்!
மெய்யாக ஆண்மகன் தன்மையைக் கொண்டவன்!
மேஷ விருச்சிக ராசிகட்க் குரியவன்!

என்றுமே குறுநகை சிந்திய முகத்தினன்
இரண்டோ டிரண்டு கரங்களை உடையவன் !
நன்றெனக் கதையும் சக்தியும் மேற்புறம்
நனிதிகள் கரங்களில் வலமிடம் கொண்டவன்!
வென்றிடும் சூலமும் வரதமும் கீழ்புறம்
விளங்கிடும் கைகளில் துலங்கிடப் பெற்றவன்!
குன்ற ஒளிதரும் பொற்குன் டலததொடு
கோலச் செம்மணி முடியையும் அணிந்தவன்!

விரிந்தசெங் கொடியிலே மரியுரு வெளில்தர,
வியன்மிகு செங்குடை உச்சியில் நிழல்தர,    
புரவிகள் எட்டெனப் பூட்டிய பொன்றதம்
புவிவலம் வருவதற் கிசைவுடன் கொள்ளுவாய்!
தருமமும் நேர்மையும் சத்திய வாழ்கையும்
தரணியில் குப்புறச் சாய்வது நீதியே!
அருமைகள் பொருந்திய பாரதம் ஓங்கிட
அங்கா ரகனெனும் அய்யனே அருள்வையே

சொல்லரும் சக்தியாய் நின்னரும் தேவியைச்
சுந்தர மாகவே இடப்புறம் கொண்டானை !
எல்லையில் லாதநற் கருணையினால் எவர்க்குமே
இன்பமும் அமைதியும் இனிதுநீ நல்குவாய்
நல்லுல கத்தினம் தீமையின் பிடியிலே
நசுக்குறல் உனக்குள சம்மதம் ஆகுமோ ?
அல்லலை நொடியிலே அகற்றிட வேண்டினேன்
அங்கா ரகனெனும் அய்யனே அருள்வையே!

நாதன் தாள் வாழ்க !
++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

32 comments:

  1. குருவுக்கு கோடி நமஸ்காரங்கள்
    இன்றைய உறவுகள் பற்றிய பதிவு மிக அருமை''
    பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
    ''உறவுகள் தொடர்கதை ..
    உணர்வுகள் சிறுகதை ..''
    அவள் அப்படித்தான் என்ற படத்திலிருந்து..
    வெள்ளி மலர் ....படிக்க படிக்க சூப்பர் ....
    உணர்ந்து படிப்பவர்க்கு புரியும் அது...
    நன்றி பல கோடி..

    அன்புடன்......ரா.சரவணன்

    ReplyDelete
  2. மிகவும் அருமையா, அவசியமான, சத்தியமானக் கருத்துக்களைக் கொணர்ந்த அற்புதமான மனவளக் கட்டுரை.

    அத்தனையும் அருமை... பலாப் பலத்தில் எந்தச் சுளை சுவை என்பேன்...
    அப்படியானக் கட்டுரை இது.

    ///உங்கள் உறவினர்களில் ஒருவன் பெண்டாட்டி தாசனாக
    இருக்கலாம். அல்லது தன்னைப் பேணியாக இருக்கலாம்.
    அல்லது கஞ்சனாகஇருக்கலாம். அதெல்லாம் ஜாதகக்
    கோளாறுகள்///

    மிகவும் அருமையானக் கருத்து... அவர்களின் நிலை கண்டு வெறுப்புறு வதைவிட அவர்களுக்காக வருந்தவே வேண்டும் என்பது தான் உண்மை.


    ////உறவுகள் அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பார்த்து, அவர்களுடன் பழகாதீர்கள்
    அன்பை வெளிப் படுத்தும் முகமாகப் பேசுங்கள்
    கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்
    உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்யுங்கள்.
    உங்கள் மேலுள்ள மதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

    இவை எல்லாம் உங்களால் முடிந்தவைதான்
    செய்யுங்கள்.
    என்ன நடக்கிறதென்று பிறகு பாருங்கள்!///

    அவர்கள் நம்மை உறவுமுறையோடு பெருங்கூட்டத்திலும் சத்தமாக அன்புப் பெருக்கோடு அழைப்பதை கேட்டும் கண்டும் இன்புறலாம் சரிதானே ஐயா!

    (இந்தக் காலத்தில் எந்தக் காலத்திலும் உண்டோ?..... பெற்றபிள்ளைகளே.. வயதான... வாகெடுத்து சீவாத தாய் தந்தையரை பின்னுக்கு விட்டு ரொம்ப தூரம் நடப்பதையும்... அப்பா, அம்மா.. மாமா என்று வாய்விட்டு நாலு பேருக்கு கேட்க்கும் அளவிற்கு கூப்பிடாத பிள்ளைகளையும் கண்டிருக்கிறேன்)

    பக்திமலர் பரவசம் ஊட்டுகிறது... செவ்வாய் திசை ராகு புத்தி நடப்பு அப்பன் முருகனை துதிக்க அற்புதப் பாடலை பெற்றேன். அன்பர் சக்தி கணேஷ் அவர்களுக்கு நன்றி.

    மிகவும் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. "நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? இல்லை
    என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?"

    என்ற கவிஞரின் வரிகளுக்கு கட்டியம் சொன்னது மவக

    ஒழுக்கமும் இறைவனும் மட்டுமே உறவாக உள்ளவருக்கு மற்றவர்கள் எல்லோரும் நண்பர்களே..

    மாறுதல்கள் தான்
    மனமகிழ்ச்சி தரும்

    நண்பர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாறிக் கொண்டிருப்பதால் தான் நட்பு சிறக்கிறது என்போம்

    நட்பில் கூட உறவை சொல்லி அழைப்பதுண்டு..

    கல்லையும் கண்ணாடியையும் ஒரு பையில் வைத்து கீறல் விழாமல் எடுத்துச் சென்ற பாணி அருமை,,

    ReplyDelete
  4. மலரில் மலர்ந்தது..
    மனதை கவர்ந்தது..

    ...

    சக்தி தரும் பாடலினை தந்த
    சக்தி கணேஷூக்கு நன்றிகள்..(மட்டும் போதுமா..)

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்
    மனவளக் கட்டுரை உறவு, அன்பு, பாசம்
    அருமைஇருந்தது,நன்றி ஜயா.
    பக்தித்ரும் முருகனின் பாடல்,காட்டிய
    சக்தி கணேஷ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. மிக நல்ல மனவளக்கட்டுரை ஐயா.
    பக்தி மலரும், அன்பர் சக்தி கணேஷுக்கும் நன்றிகள்.
    -----
    All we dream of we don't get,
    There is to choose from - a given set,
    Some get angels some devils get,
    In God we trust, to choose we let!

    -----

    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. வாத்தியார் வண்க்கம்,
    வெள்ளிகிழமை இரண்டு பதிவு மனவளம் பதிவு ரொம்ப ரொம்ப அதிகமா பிடித்திருக்கிறது. ரொம்ப நன்றி சார் வடபழனி கோவில் சுவற்றின் மேல் ரொம்ப பாட்டுகள் எழுதி வைத்திருப்பர்ர்கள் அதை அறிய தந்த சகோதரருக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  10. guruvirku vannkam arumiana catturi thanks sir

    ReplyDelete
  11. இன்றைய மனவளர் கட்டுரை எந்த வயதினருக்கும் எந்த காலத்துக்கும் ஏற்ற கட்டுரை.வாத்தியாரின் ஒவ்வொரு வரிகளும் நாம் எடுத்து கையாள வேண்டிய சத்தியமான உன்மைகள்.

    அடுத்தவரைப்பற்றி பேசும்போதும் அவர்களின் செயலைப் பார்க்கும் போதும் அந்த இடத்தில் நம்மை வைத்து பேசினாலோ பார்த்தாலோ அந்த வீரியம் நமக்கு புரியும்.பொதுவாக எத்தனை வேலை செய்தாலும் முதலாளிக்கு பற்றாது, எத்தனை சம்பளம் கொடுத்தாலும் தொழிலாளிக்கு பத்தாது. அதே போன்று தான் உறவு முறைகளும்,

    நாமும் ஆதரவு தேடி அங்கும் இங்கும் ஓடுவோம், ஆனால் நம்மை ஆதரிக்க நம் பக்கத்திலேயே இருப்பார்கள், அதை நாம் மதிக்க மாட்டோம்.அறிந்திருக்க மாட்டோம்.

    நன்பர்களும், பிள்ளைகளூம் தான் நம் கஷ்டக்குரல் கேட்டவுடன் வரக்கூடியவர்கள். மீதி உறவுகள் அதனால் அவர்களுக்கு ஆகக்கூடிய சாதக பாதகங்களை ஆராய்ந்தே வருவார்காள். அதனால்தான் குற்றம் கண்டால் சுற்றம் இல்லை என்பதை நினைவில்கொண்டு நாம் வலிய கைகொடுத்து உறவை தக்கவைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

    ///உங்கள் உறவினர்களில் ஒருவன் பெண்டாட்டி தாசனாக
    இருக்கலாம். அல்லது தன்னைப் பேணியாக இருக்கலாம்.
    அல்லது கஞ்சனாகஇருக்கலாம். அதெல்லாம் ஜாதகக்
    கோளாறுகள்///

    ஆமாம் அவரிடம் உள்ள அந்த பொண்டாட்டியை நேசிக்கும் தன்மையை மட்டும் நாமும் எடுத்துக்கொண்டு செய்வோம். தேவை இல்லாததை வாங்குவதில் அவர் போல் கஞ்சனாக இருப்போம்.

    ////உறவுகள் அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பார்த்து, அவர்களுடன் பழகாதீர்கள்
    அன்பை வெளிப் படுத்தும் முகமாகப் பேசுங்கள்
    கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்
    உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்யுங்கள்.
    உங்கள் மேலுள்ள மதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்////

    அசத்தலான அறிவுறை அனைத்தும் நம்மால் முடியக்கூடியதுதான் .நன்றி நன்றி அய்யா.

    ReplyDelete
  12. “ஆளுங்கட்சிக்காரங்க செய்யற ‘இந்தத் திட்டம்’ மக்களுக்கு நல்ல பலனத்தரும். இந்தத் திட்டத்துக்கு எங்களோட ‘முழு ஆதரவு’ உண்டு”-னு ஒரு எதிர்கட்சி சொன்னா எப்படி இருக்கும்?
    அதே மாதிரி, “எதிர்கட்சிக்காரங்க சொன்ன கருத்த அலசிப் பார்த்ததுல, ‘இந்தத் திட்டத்துனால’ மக்கள் அடையற பயனவிட, கஷ்டம் அதிகமாயிருக்கும்-ங்கறது புரியுது. அதுனால, இந்த திட்டத்த கைவிடறோம். அறிவுரை சொன்ன எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிச்சுக்கறோம்’. அப்படினு ஆளும் கட்சி சொன்னா எப்படி இருக்கும்?

    யோசிச்சுப் பார்ப்பதற்கே ரொம்ப நல்லா இருக்கே...இது மட்டும் நடந்தால்??? மிகவும் பயனுள்ள கட்டுரை. நன்றி ஐயா...

    ReplyDelete
  13. /////Blogger saravanan said...
    குருவுக்கு கோடி நமஸ்காரங்கள்
    இன்றைய உறவுகள் பற்றிய பதிவு மிக அருமை''
    பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
    ''உறவுகள் தொடர்கதை ..
    உணர்வுகள் சிறுகதை ..''
    அவள் அப்படித்தான் என்ற படத்திலிருந்து..
    வெள்ளி மலர் ....படிக்க படிக்க சூப்பர் ....
    உணர்ந்து படிப்பவர்க்கு புரியும் அது...
    நன்றி பல கோடி..
    அன்புடன்......ரா.சரவணன்/////

    பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, நம் மக்கள் உணர்ந்து படித்திருப்பது தெரியவருகிறது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சரவணன்!

    ReplyDelete
  14. ////Blogger ஜி ஆலாசியம் said...
    மிகவும் அருமையா, அவசியமான, சத்தியமானக் கருத்துக்களைக் கொணர்ந்த அற்புதமான மனவளக் கட்டுரை.
    அத்தனையும் அருமை... பலாப் பலத்தில் எந்தச் சுளை சுவை என்பேன்...
    அப்படியானக் கட்டுரை இது.
    ///உங்கள் உறவினர்களில் ஒருவன் பெண்டாட்டி தாசனாக
    இருக்கலாம். அல்லது தன்னைப் பேணியாக இருக்கலாம்.
    அல்லது கஞ்சனாகஇருக்கலாம். அதெல்லாம் ஜாதகக்
    கோளாறுகள்///
    மிகவும் அருமையானக் கருத்து... அவர்களின் நிலை கண்டு வெறுப்புறு வதைவிட அவர்களுக்காக வருந்தவே வேண்டும் என்பது தான் உண்மை.
    ////உறவுகள் அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பார்த்து, அவர்களுடன் பழகாதீர்கள்
    அன்பை வெளிப் படுத்தும் முகமாகப் பேசுங்கள்
    கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்
    உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்யுங்கள்.
    உங்கள் மேலுள்ள மதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
    இவை எல்லாம் உங்களால் முடிந்தவைதான்
    செய்யுங்கள்.
    என்ன நடக்கிறதென்று பிறகு பாருங்கள்!///
    அவர்கள் நம்மை உறவுமுறையோடு பெருங்கூட்டத்திலும் சத்தமாக அன்புப் பெருக்கோடு அழைப்பதை கேட்டும் கண்டும் இன்புறலாம் சரிதானே ஐயா!
    (இந்தக் காலத்தில் எந்தக் காலத்திலும் உண்டோ?..... பெற்றபிள்ளைகளே.. வயதான... வாகெடுத்து சீவாத தாய் தந்தையரை பின்னுக்கு விட்டு ரொம்ப தூரம் நடப்பதையும்... அப்பா, அம்மா.. மாமா என்று வாய்விட்டு நாலு பேருக்கு கேட்க்கும் அளவிற்கு கூப்பிடாத பிள்ளைகளையும் கண்டிருக்கிறேன்)
    பக்திமலர் பரவசம் ஊட்டுகிறது... செவ்வாய் திசை ராகு புத்தி நடப்பு அப்பன் முருகனை துதிக்க அற்புதப் பாடலை பெற்றேன். அன்பர் சக்தி கணேஷ் அவர்களுக்கு நன்றி.
    மிகவும் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

    எழுதிய கருத்துக்கள், உங்களைப் போன்ற நம் வகுப்பறை மாணாக்கர்களைச் சென்றடைந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். தொடர்ந்து மனவளக் கட்டுரைகள் எழுத இதுபோன்ற பின்னூட்டங்கள்தான் எனக்கு ஊக்கமருந்து. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  15. /////Blogger அய்யர் said...
    "நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? இல்லை
    என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?"
    என்ற கவிஞரின் வரிகளுக்கு கட்டியம் சொன்னது மவக
    ஒழுக்கமும் இறைவனும் மட்டுமே உறவாக உள்ளவருக்கு மற்றவர்கள் எல்லோரும் நண்பர்களே..
    மாறுதல்கள் தான்
    மனமகிழ்ச்சி தரும்
    நண்பர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாறிக் கொண்டிருப்பதால் தான் நட்பு சிறக்கிறது என்போம்
    நட்பில் கூட உறவை சொல்லி அழைப்பதுண்டு..
    கல்லையும் கண்ணாடியையும் ஒரு பையில் வைத்து கீறல் விழாமல் எடுத்துச் சென்ற பாணி அருமை,,/////

    எடுத்துச் சென்ற பாணியைக் குறிப்பிட்டுச் சொன்ன மேன்மைக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  16. /////Blogger அய்யர் said...
    மலரில் மலர்ந்தது..
    மனதை கவர்ந்தது..
    சக்தி தரும் பாடலினை தந்த
    சக்தி கணேஷூக்கு நன்றிகள்..(மட்டும் போதுமா..)/////

    சக்தி கணேஷ்ற்கு உங்கள் நன்றியைத் தெரிவித்தமைக்குத் தனியாக ஒரு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  17. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    மனவளக் கட்டுரை உறவு, அன்பு, பாசம்
    அருமைஇருந்தது,நன்றி ஜயா.
    பக்தித்ரும் முருகனின் பாடல்,காட்டிய
    சக்தி கணேஷ் அவர்களுக்கு நன்றி./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  18. //////Blogger Bhuvaneshwar said...
    மிக நல்ல மனவளக்கட்டுரை ஐயா.
    பக்தி மலரும், அன்பர் சக்தி கணேஷுக்கும் நன்றிகள்.
    -----
    All we dream of we don't get,
    There is to choose from - a given set,
    Some get angels some devils get,
    In God we trust, to choose we let!
    -----
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com/////

    உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி புவனேஷ்வர்!

    ReplyDelete
  19. ///Blogger sundari said...
    வாத்தியார் வணக்கம்,
    வெள்ளிகிழமை இரண்டு பதிவு மனவளம் பதிவு ரொம்ப ரொம்ப அதிகமா பிடித்திருக்கிறது. ரொம்ப நன்றி சார் வடபழனி கோவில் சுவற்றின் மேல் ரொம்ப பாட்டுகள் எழுதி வைத்திருப்பர்ர்கள் அதை அறிய தந்த சகோதரருக்கு ரொம்ப நன்றி./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. ///Blogger eswari sekar said...
    guruvirku vanakkam. arumaiyana katturi thanks sir////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. /////Blogger thanusu said...
    இன்றைய மனவளர் கட்டுரை எந்த வயதினருக்கும் எந்த காலத்துக்கும் ஏற்ற கட்டுரை.வாத்தியாரின் ஒவ்வொரு வரிகளும் நாம் எடுத்து கையாள வேண்டிய சத்தியமான உண்மைகள்.
    அடுத்தவரைப்பற்றி பேசும்போதும் அவர்களின் செயலைப் பார்க்கும் போதும் அந்த இடத்தில் நம்மை வைத்து பேசினாலோ பார்த்தாலோ அந்த வீரியம் நமக்கு புரியும்.பொதுவாக எத்தனை வேலை செய்தாலும் முதலாளிக்கு பற்றாது, எத்தனை சம்பளம் கொடுத்தாலும் தொழிலாளிக்கு பத்தாது. அதே போன்று தான் உறவு முறைகளும்,
    நாமும் ஆதரவு தேடி அங்கும் இங்கும் ஓடுவோம், ஆனால் நம்மை ஆதரிக்க நம் பக்கத்திலேயே இருப்பார்கள், அதை நாம் மதிக்க மாட்டோம்.அறிந்திருக்க மாட்டோம்.
    நன்பர்களும், பிள்ளைகளூம் தான் நம் கஷ்டக்குரல் கேட்டவுடன் வரக்கூடியவர்கள். மீதி உறவுகள் அதனால் அவர்களுக்கு ஆகக்கூடிய சாதக பாதகங்களை ஆராய்ந்தே வருவார்காள். அதனால்தான் குற்றம் கண்டால் சுற்றம் இல்லை என்பதை நினைவில்கொண்டு நாம் வலிய கைகொடுத்து உறவை தக்கவைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
    ///உங்கள் உறவினர்களில் ஒருவன் பெண்டாட்டி தாசனாக
    இருக்கலாம். அல்லது தன்னைப் பேணியாக இருக்கலாம்.
    அல்லது கஞ்சனாகஇருக்கலாம். அதெல்லாம் ஜாதகக்
    கோளாறுகள்///
    ஆமாம் அவரிடம் உள்ள அந்த பொண்டாட்டியை நேசிக்கும் தன்மையை மட்டும் நாமும் எடுத்துக்கொண்டு செய்வோம். தேவை இல்லாததை வாங்குவதில் அவர் போல் கஞ்சனாக இருப்போம்.
    ////உறவுகள் அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பார்த்து, அவர்களுடன் பழகாதீர்கள்
    அன்பை வெளிப் படுத்தும் முகமாகப் பேசுங்கள்
    கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்
    உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்யுங்கள்.
    உங்கள் மேலுள்ள மதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்////
    அசத்தலான அறிவுறை அனைத்தும் நம்மால் முடியக்கூடியதுதான் .நன்றி நன்றி அய்யா./////

    இன்று வந்துள்ள பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, நம் மக்கள் அனைவரும் கட்டுரையை உணர்ந்து படித்திருப்பது தெரியவருகிறது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு!!

    ReplyDelete
  22. /////Blogger Arul said...
    “ஆளுங்கட்சிக்காரங்க செய்யற ‘இந்தத் திட்டம்’ மக்களுக்கு நல்ல பலனத்தரும். இந்தத் திட்டத்துக்கு எங்களோட ‘முழு ஆதரவு’ உண்டு”-னு ஒரு எதிர்கட்சி சொன்னா எப்படி இருக்கும்?
    அதே மாதிரி, “எதிர்கட்சிக்காரங்க சொன்ன கருத்த அலசிப் பார்த்ததுல, ‘இந்தத் திட்டத்துனால’ மக்கள் அடையற பயனவிட, கஷ்டம் அதிகமாயிருக்கும்-ங்கறது புரியுது. அதுனால, இந்த திட்டத்த கைவிடறோம். அறிவுரை சொன்ன எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிச்சுக்கறோம்’. அப்படினு ஆளும் கட்சி சொன்னா எப்படி இருக்கும்?
    யோசிச்சுப் பார்ப்பதற்கே ரொம்ப நல்லா இருக்கே...இது மட்டும் நடந்தால்??? மிகவும் பயனுள்ள கட்டுரை. நன்றி ஐயா.../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!

    ReplyDelete
  23. நல்ல‌ மன வளக் கட்டுரைக்கு நன்றி ஐயா!

    "ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற் பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு" என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லிவிட்டுப் போன தாத்தாவின் திருக்குறளுக்கு விளக்க உரை போல உள்ளது ஐயா!

    1973ல் இருந்து ஒருவரைப் பழக்கம். இன்றும் ஒருவரை ஒருவர் நன்கு
    அறிவோம்.அவருடைய வளர்ச்சி நிலையை நான் அறிவேன். என்னுடைய வாழ்க்கை மாற்றங்களை அவர் அறிவார்.நடுவில் விட்டுப்போன தொடர்புகளை
    இணையதளம் மீண்டும் இணைத்து வைத்தது.தானாகவே மின் அஞ்சல் அனுப்பி நட்பைப் புதுப்பித்தார்.நானும் பதில் மின் அஞ்சல் அனுப்பினேன்.இரண்டு மின் அஞ்சல்களுக்குப் பின்னர் சொல்லிக் கொள்ளாமல் விலகி விட்டார்.பலமுறை காரணம் கேட்டும் பதில் கூறாமல் என்னைத் தவிர்த்து விட்டார்.

    வகுப்பறையிலும் அவர் வந்து பின்னூட்டம் இடக் கூடியவரே. முருக பக்தர்.இங்கேயும் பலமுறை வெளீப்படையாகக் கேட்டு விட்டேன். பதில் இல்லை.

    1 ஜூலை 2012 அன்று, இதே போல 1973 முதல் நட்பு மாறாமல் இருக்கும் ஒரு பொது நண்பர் வீட்டு விசேடத்திற்குச் சென்னை சென்று இருந்தேன்.அங்கே முதலில் சொன்ன நண்பர் மனைவியுடன் வந்தார். வாயிலில் வரவேற்பிலேயே நின்று அழைத்தேன். கண்டு கொள்ளவில்லை.நானாக வலியச்சென்று அவர்கள் இருக்குமிடத்தில் அமர்ந்து நலம் விசாரித்தேன். அவருடைய மனைவியார் எனக்கு பதிலளித்தார்கள். நண்பர் முக‌த்தைத் திருப்பிக் கொண்டாரே தவிர என்னை நலமா என்று கூடக் கேட்கவில்லை.

    இன்ன காரணத்தால் உன் நட்பு எனக்குக் கசக்கிறது என்று சொல்லிவிட்டால் கூட மனம் ஆறிவிடும் போலுள்ளது.ஒன்றும் சொல்லாமல் 'நீ யாரோ நான் யாரோ'என்று அலட்சியப்படுத்துவதைத் தாங்கவே முடியவில்லை.'என்ன தவறு செய்தேன்?' என்று மனம் அதிலேயே நிற்கிறது.

    நீங்கள் சொல்லும் இந்த மன வளத்தையெல்லாம் 10 ஆண்டுகளுக்கு மேல்
    எங்கள் பயிற்சிக் கல்லூரியில் பாடம் நடத்தியவர் அவர்.அதனைத் தன் கடமையாகத்தான் பார்த்துள்ளார்.வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதாக நினைக்கவில்லையோ?

    Interpersonal relationship, Transactional Analysis

    என்று புத்தகம் படிக்கலாம். நடைமுறை என்று வரும் போது சிறிது சிரமம்தான்.

    ReplyDelete
  24. "கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் " என்ற வரிகளில் மனம் லயித்து அதனையே மந்திர ஜபமாகச் சொல்ல வைக்கிறது. உயிர் ப‌யம் வரும் போது உள்ளம் நினைக்காதாம். அதனால்தான் 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்'என்றார்கள் ஆழ்வார்கள். நல்ல பதிகத்தினை நினைவூட்டியதற்கு நன்றி.

    செவ்வேளின் பாடலைப் பிரதி எடுத்து அனுப்பிய நண்பர் சக்திகணேஷுக்கு நன்றி.

    ReplyDelete
  25. அன்புள்ள வாத்தியார் அய்யா,
    மிக்க நன்றி, செவ்வாயின் பாடலை தங்கள் வெள்ளி மலரில் வெளியிட்டமைக்கு நன்றி !
    தாங்கள் எனக்கு ஒருமுறை செவ்வாய் வீக்காக இருப்பதால் டெய்லி வடபழனி முருகனை வழிபடுமாறு கூறினீர்கள், மேலும் தங்கள் பதிவில் தாங்கள் பழ நியா ண்டவனை எல்லா செவ்வாய் கிழமையும் வழிபட்டு தங்கள் தமக்கையார் திருமணம் நடந்ததாகவும் எழுதி இருந்தீர்கள். எனக்கும் செவ்வாய் நீசம் மேலும் கடந்த ஆண்டு ராகு திசை முடிவில் செவ்வாய் புத்தி நடந்த பொழுது எல்லா செவ்வாய் கிழமையும் தவறாமல் வட பழனி முருகனையும அங்குள்ள செவ்வாய் பகவானையும் வழிபட்டதில் பிரச்சனைகள் குறைந்து சில நல்ல முடிவுகளும் ஏற்பட்டது. செவ்வாய் பூமி , உத்தியோகம் , சகோதர காரகன் இந்த காரகங்களில் பூமி , உத்தியோகம் சம்பந்தமாக சில நல்ல நிகழ்வுகள் ஏற்பட்டன!
    தாங்கள் சொன்ன எழுதிய நல்ல கருத்துக்களை நம்பிக்கையுடன் செய்ததில் நல்ல பலன் கிடைத்தது , தங்களின் அணைத்து மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்று மேற்படி செவ்வாயின் பாட்டை பிரதி எடுத்து அனுப்பினேன், மேலும் இந்த பாடலை எல்லா செவ்வாய் கிழமை யும் படித்ததில் நல்ல பலன் கிடைத்தது. செவ்வாய்
    எல்லோருடைய கஷ்டங்களை போக்கி நல்ல பலன் தர உங்கள் அப்பன் /நம் எல்லோருக்கும் அப்பன் வட பழனி முருகனை பிரார்த்திக்கிறேன்.
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி - சக்தி கணேஷ் - சென்னை .

    ReplyDelete
  26. சம்பந்தரின் 'தோடுடைய செவியன்' வரிகளைத் தொடர்ந்து
    நாவுக்கரசரின் 'சொற்றுணை வேதியன்' வரிகள்.
    அப்பரின் 'மாசில் வீணையும் மாலை மதியமும்' வரிகள் வரும் என எதிபார்த்தேன்.
    (சரி, சரி போட்டதைப் படிக்கலாம் இல்லாவிட்டால் சுந்தரி பிரம்புடன் வந்துவிடுவார்கள்)
    அடுத்து சுந்தரரின் "பித்தா பிறை சூடி" சரியா, ஐயா?

    'செவ்வாய் போற்றி' வரிகளை நகலெடுத்து வந்து பகிர்ந்துகொண்ட சக்தி கணேஷுக்கு நன்றி.

    நல்ல மனவளக் கட்டுரை ஐயா. ஆனால் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு...அது ஏற்பட்ட அநுபவத்தினால்.
    ஒரு கை ஓசை எழுப்புவதில்லை. உறவு ஒரு கூட்டு முயற்சி.
    "மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதருக்கு ஒளவை சொன்னது
    அது ஒளவை சொன்னது அதில் அர்த்தமுள்ளது"
    என்ற பாடல் வரிகள் அதனால் பிடிக்கும், பதிவுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  27. நல்லதொரு மனவளக் கட்டுரைக்கு நன்றி சார்! சக்தி கணேஷுக்கும் என் நன்றிகள்!

    ReplyDelete
  28. அற்புதமான மன வளக் கட்டுரை.

    //யாரிடமும் குறை கண்டு பிடித்து, அதை ஊதிப் பெரிதாக்கிப் பேசிக்கோண்டிருக்காதீர்கள். யாரிடம்தான் குறைகள் இல்லை.
    உங்களிடம் இல்லையா? //

    பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய வைர வரிகள்.

    //உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்யுங்கள்.
    உங்கள் மேலுள்ள மதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்//

    உறவுகளின் அருமை நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தான் புரியும். எத்தனை பணம் இருந்தாலும், ஒரு நல்லது கெட்டதுக்கு நாமே நின்று செய்ய முடியாது.

    ஒரு திருமணமென்றாலும், வாசலில் வரவேற்கவும், மணப்பந்தலில் நிற்கவும்,
    பந்தி விசாரிக்கவும் மாமா, அத்தை, சித்தப்பா, பெரியம்மா என்று ஒரு கூட்டமே கூடி நின்று ஒருங்கிணைந்து வாய் நிறைய உபசரித்து நடத்தும் விழாவுக்குச் சென்று வரும்போது மனம் நிறைவது உண்மை. மாறாக,

    கோடீஸ்வரக் குடும்பங்களின் திருமணங்களில் சீருடை அணிந்த,யாரென்றே தெரியாத பெண்கள் வரவேற்று உபசரிக்க, மணமக்களைப் பெற்றவர்கள், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் மும்முரமாகக் காணப்படும் திருமணங்களில், போனேன், போஸ் கொடுத்தேன், வந்தேன் என்றிருக்கவே பிடிக்கிறது.

    பணம் முக்கியப்படும்போது உறவு ரெண்டாம் பட்சமாகிறது. 'காசை விட்டெறிஞ்சா ஆள்' என்ற மனப்பான்மை, உறவுகளின் அஸ்தமனத்திற்கல்லவா வழிவகுக்கிறது?. பணமும் தேவை. உறவும் தேவை.

    'முன் கை நீண்டால் முழங்கை நீளும்'. ஒருவருக்கு நாம் நெருக்கடியில்
    உதவாமல், தனக்கு வரும் போது மட்டும் எல்லோரும் ஓடி வர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும் அது நடக்காதபோது எரிச்சலுறுவதும், அதன் காரணமாக மேலும் தூற்றித் தூற்றியே உறவைக் கெடுத்துக் கொள்வதும் ஒரு சமயசந்தர்ப்பத்திற்கு யாரும் இல்லாத தனிமரமாக இருக்கும் நிலையை ஏற்படுத்தும்.

    கொத்து மலர் போல் உறவுகள் கூடி நின்று, மங்கல வாழ்த்துப் பாடி, செய்த திருமணங்களும், விழாக்களும் காலமெல்லாம் நினைவில் இன்பமூட்டும் என்பது உண்மை.

    //கடன் கேட்காமல் கெட்டது
    உறவு பார்க்காமல் கெட்டது//

    நல்ல அருமையான பழமொழி. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  29. நாவுக்கரசரின் மிக அருமையான தேவாரப்பதிகம் படிக்கத் தந்தமைக்கு நன்றி.
    அங்காரக பகவானின் அற்புதத் துதிப்பாடல் பிரதி எடுத்து அனுப்பி உதவிய சக்தி கணேஷூக்கு நன்றி.

    நான் கிட்டத்தட்ட ஐந்தாண்டு காலம் சென்னை வடபழனியில் தான் இருந்தேன். வடபழனி முருகன், தென்பழனி முருகனைப்போல், ஒரு காலைச் சற்று முன்னெடுத்து, பக்தர்கள் கூப்பிட்டால் ஓடி வருவதற்குத் தயாராக இருப்பது போல் இருக்கும் தோற்றம் உடையவர். கூர்ந்து கவனித்தால் அறியலாம். செவ்வாய்க்கு அஜ(ஆடு) வாகனாரூடராகத் தனி சன்னதி இருப்பதும், உட் பிரகாரத்தில், நாக சுப்பிரமணியன் எனும் நாக தோஷம் நீக்க வல்ல மூர்த்தம் இருப்பதும் தனிச்சிறப்பு. முருகனின் சன்னதிக்கு நேர் பின்புறம், உட்பிரகாரத்தில் உள்ள பிரம்மாவுக்கு அர்ச்சனை செய்தால் கல்வி சம்பந்தமான தடங்கல்கள் நீங்குவது கண்கூடு. 'ஆதி பீடம்' எனும் இடத்தில் சித்தர் பெருமக்கள் பூஜை செய்த சுப்பிரமணியரின் படம் உள்ளது. கோவிலுக்குச் சற்றுத் தள்ளி தனி இடத்தில் இருக்கும் சித்தர் பெருமக்களின் அதிஷ்டானத்தில், ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் கூட நல்ல அதிர்வலைகளை உணரலாம். இது என் சொந்த அனுபவம்.

    ReplyDelete
  30. @சகோதரி பார்வதி:

    அருமையான பின்னூட்டம், சகோதரி. அசாத்தியமான சொல்லாட்சி.

    //கொத்து மலர் போல் உறவுகள் கூடி நின்று, மங்கல வாழ்த்துப் பாடி, செய்த திருமணங்களும், விழாக்களும் காலமெல்லாம் நினைவில் இன்பமூட்டும் என்பது உண்மை.//

    இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்து படித்து ரசித்தேன்.

    முன்கை நீண்டால் முழங்கை நீளும் - இந்த அறிவுரையை எனது அம்மா நூறாயிரம் தடவை என்னிடம் சொல்லுவார்கள். படிக்கையில் ஒரு வினாடி அவர் சொல்லுவது போலவே இருந்தது.

    நல்ல பின்னூட்டத்துக்கு நன்றிகள் பல பல.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com