மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

26.7.12

Astrology சுகங்களை எப்போது இழக்க நேரிடும்?

Astrology சுகங்களை எப்போது இழக்க நேரிடும்?

Key Points - பகுதி 3

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.
2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்
3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.
4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.
5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.
6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.
8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.
9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.
10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)
11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.
12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடங்களில் ஒன்று, அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று வகுப்பறையில் வலை ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

Bhuvaneshwar said...

காலை வணக்கம் ஐயா,
நல்ல பாடம் தந்தமைக்கு நன்றி.
-----
புவனேஷ்

Balaji said...

good morning sir. when you say evil planets, do you mean general evil planets ( sun, jupiter, saturn, mars , rahu, ketu, waxing moon) or malefic planets for particular lagna ?

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
பாபகர்த்தாரி பாடம் நன்றாக உள்ளது
நன்றி

Arul said...

ஐயா, ரிசப மற்றும் துலாம் லக்கினத்துக்கு சனி யோககாரன் மற்றும் கேந்திராதிபத்ய தோசத்தால் சுப கிரகமாகிறார். அவர் இவ்விரு லக்கினங்களுக்கு 2மிடத்திலும் 12ல் ராகுவோ கேதுவோ இருந்தாலும் பாபகர்த்தாதி யோக கணக்கில் வருமா? பலன் எப்படி இருக்கும்?

Anonymous said...

நிறைய தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.
மிக்க நன்றி !
இதற்கு என்ன பரிஹாரம் செய்வது ?
பொதுவில்,பரிகாரங்கள் ஒரு ஜாதகருக்கு
எந்த அளவில் பலிக்கும் ?
அதற்கு எந்த 'வீடு' பார்க்க வேண்டும் ?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Bhuvaneshwar said...
காலை வணக்கம் ஐயா,
நல்ல பாடம் தந்தமைக்கு நன்றி.
-----
புவனேஷ்/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி புவனேஷ்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Balaji said...
good morning sir. when you say evil planets, do you mean general evil planets ( sun, jupiter, saturn, mars , rahu, ketu, waxing moon) or malefic planets for particular lagna ?/////

முதல் நிலை தீய கிரகங்கள்: சனி, ராகு & கேது
இரண்டாம் நிலை தீய கிரகங்கள்: செவ்வாய், சூரியன்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
பாபகர்த்தாரி பாடம் நன்றாக உள்ளது
நன்றி////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Arul said...
ஐயா, ரிசப மற்றும் துலாம் லக்கினத்துக்கு சனி யோககாரன் மற்றும் கேந்திராதிபத்ய தோசத்தால் சுப கிரகமாகிறார். அவர் இவ்விரு லக்கினங்களுக்கு 2மிடத்திலும் 12ல் ராகுவோ கேதுவோ இருந்தாலும் பாபகர்த்தாதி யோக கணக்கில் வருமா? பலன் எப்படி இருக்கும்?////

சனி இரண்டு வேலைகளையும் செய்யக்கூடியவர். ஆகவே அவர் கணக்கில் வருவார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஸ்ரவாணி said...
நிறைய தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.
மிக்க நன்றி !
இதற்கு என்ன பரிஹாரம் செய்வது ?
பொதுவில்,பரிகாரங்கள் ஒரு ஜாதகருக்கு
எந்த அளவில் பலிக்கும் ?
அதற்கு எந்த 'வீடு' பார்க்க வேண்டும் ?////

காசு செல்வழித்துச் செய்யும் பரிகாரம் எல்லாம் பரிகாரம் அல்ல!
இறைவழிபாடே உண்மையான பரிகாரம். அத்துடன் ராமேஷ்வரம், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஸ்தலங்களுச்சென்று அங்கே உறையும் இறைவனை மனம் உருகப் பிரார்த்தித்து வருவதும் நன்மையளிக்கும்!

அய்யர் said...

இது
வருகை பதிவு

ஜி ஆலாசியம் said...

///பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.///

இது புதியத் தகவல் எனக்கு.. பாவ கர்த்தாரி செய்த பாவங்களுக்குத் தகுந்தாற் போல் செயல் படும் போலிருக்கிறது.

இன்றையப் பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

Gnanam Sekar said...

அய்யா மாலை வணக்கம் .

eswari sekar said...

ayya vanakam.. naala padam .. ayya eppzthu sani bagavan kannil ..ullara thulaml ullra . vakragathi enral kanni rasi paduthma .. o..

thanusu said...

பாவகர்த்தாரி யோகத்தில் மாட்டிகொண்ட கிரகத்துக்கு குருவின் பார்வை இருப்பின் நன்மை செய்யுமா அய்யா.

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
இது
வருகை பதிவு/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger ஜி ஆலாசியம் said...
///பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.///
இது புதியத் தகவல் எனக்கு.. பாவ கர்த்தாரி செய்த பாவங்களுக்குத் தகுந்தாற் போல் செயல்படும் போலிருக்கிறது.
இன்றையப் பாடத்திற்கு நன்றிகள் ஐயா!/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Gnanam Sekar said...
அய்யா மாலை வணக்கம் ./////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger eswari sekar said...
ayya vanakam.. naala padam .. ayya eppzthu sani bagavan kannil ..ullara thulaml ullra . vakragathi enral kanni rasi paduthma .. o../////

சனி இப்போது வக்கிர சுழற்சியில் கன்னியில் உள்ளார். வக்கிர நிவர்த்தி பெற்றதும் சரியாகிவிடும். பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
பாவகர்த்தாரி யோகத்தில் மாட்டிகொண்ட கிரகத்துக்கு குருவின் பார்வை இருப்பின் நன்மை செய்யுமா அய்யா./////

ஓரளவிற்குச் செய்யும். ஒரு ஜாதகன் மருத்துவமனையில் படுத்திருந்தால், மருத்துவமனை செலவுகளுக்கு குரு ஏற்பாடு செய்வார். ஆனால் வலியும், வேதனையும் இல்லாமல் போகாது. ஜாதகன்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
விளக்கம் போதுமா?

hotcat said...

Dear Sir,

Hope you are doing good. My question is what if 11th house has mars and jupiter and 12th house has moon and venus
1st house has saturn, mercury and sun.
Is 12th is in avayogam? Please explain.

ரமேஷ் வெங்கடபதி said...

பாப கர்த்தாரி அவ யோகத்தின் பலாபலன்கள் பற்றிய பாடம் மிகவும் உபயோகமானது..! வாத்தியார் ஐயாவிற்கு மிக்க நன்றி!

ananth said...

//ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.//

இந்த அமைப்புள்ளவர்கள் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று பாடும் மனநிலையில் இருப்பார்கள் போலும்.

எந்த இடம் பாப கர்த்தாரி யோகத்தில் பாதிக்கப் பட்டிருந்தாலும் அதன் காரகத்துவம் பாதிக்கப் படும். வேறு நல்ல அமைப்புகள் அதை சரி செய்யாத பட்சத்தில், என்று புரிகிறது.

எனக்கு 10ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறது. இதை சரி செய்ய வேறு நல்ல அமைப்புகள் இருக்கின்றன.

வேறொரு வருமானம் வருவதால் இப்போது இருக்கும் வேலையை விட்டு விடலாம் என்று நினைத்தாலும் இந்த வேலை என்னை விடமாட்டேன் என்கிறது.

ஓம் தத் சத் said...

நன்றாக இருக்கும் கோயில்களுக்கு
சென்று பரிகாரம் செய்வதை மட்டும்
இல்லாமல் நலிந்து, கேட்பார் /
பார்ப்பார் / கவனிப்பார் / பூஜை இன்றி
இருக்கும் பண்டைய கோயில்களுக்கு
உடலுதவியாகவோ / பண
உதவியாகவோ செய்வது குரு
அருளாலும், இறை அருளாலும்
ஜென்ம ஜென்மமாய் தொடரும்
பாவங்களில் இருந்து விடுதலை
கிடைப்பது மட்டும் அல்லாமல்
இனி வரும் உலகத்தையாரையும், சந்ததியினரையும் நன்றாக வாழ வழி
செய்யும். இது மட்டும் இன்றி உதவி
செய்கின்றவருடைய பித்ருக்களுக்கும் குரு அருளாலும், இறை அருளாலும் நல்ல நிலை கிட்டுவதோடு
பித்ருக்களுடைய ஆசிர்வதாமும்
கிட்டும்.

உதாரணத்திற்கு ராகு/கேது சம்மந்தமுடைய தோஷ நிவர்த்திக்கு காலஹஸ்தி / கீழ்பெரும்பள்ளம் /
திருநாகேஸ்வரம் சென்று பூஜை / பரிகாரம் செய்வது மட்டும்
அல்லாமல், நாகநாத சுவாமி, நாகேஸ்வரர், திருப்பாம்புரம் நாகம்
சம்பந்த / பெயர் கொண்ட சிவன் கோயில்கள், சேஷம் சம்பந்த / பெயர் கொண்ட பெருமாள்
கோயில்கள், ராகு/கேது கிரகங்களுக்கு அதிபதி தெய்வங்கள் (துர்க்கை, பிள்ளையார்) சம்பந்தம் உடைய
கோயில் திருப்பணிகளுக்கு உடலுதவியாகவோ / பண உதவியாகவோ செய்வது அளப்பரிய பலன்களை அளிக்கும்.