Astrology சந்திரனும் சட்னியும் - பகுதி 2
முன் பாடத்தைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------
சட்னியில் தேங்காயின் முக்கியத்துவம்!
அதாவது சந்திரனின் முக்கியத்துவம்!
மனிதனுக்கு உடல் நிலை எத்தனை முக்கியமோ, மன நிலையும் அத்தனை முக்கியமானது!
மனம் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது களத்தில் இறங்கினால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.
சிலர் எப்போதும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சிலர் எப்போதும் உற்சாகமில்லாது டல்லடித்து உட்கார்ந்திருப்பார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் ஜாதகக் கோளாறுகள்.
இன்றைய பாடத்தில் அதைப் பார்ப்போம்.
12 ராசிகளில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிக்கான பலனை முதலில் பார்ப்போம். எல்லாம் பொதுப்பலன்கள்
1. மேஷத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மன உறுதி கொண்டவன். சிந்தனை வயப்படுபவன். உணர்ச்சி வேகம் உள்ளவன். உணர்ச்சிகள்
தூண்டப்படும்போது அதற்குத் தகுந்தாற்போல செயல் படக்கூடியவன். கள்ளம் கபடு இல்லாதவன். வெளிப்படையாகப் பேசுபவன்.
2. ரிஷபத்தில் சந்திரன் இருந்தால், நிலையான மனதை உடையவன். எந்த சூநிலையிலும் தன்னை, தனக்கு விருப்பமில்லாவிட்டால், மாற்றிக் கொள்ளாதவன். அதனால் வீண் பிடிவாதக்காரன் போன்ற தோற்றத்தை அளிக்கக்கூடியவன்.
3. மிதுனத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் அதிபுத்திசாலியாக இருப்பான். சிலர் வஞ்சனை உள்ளவர்களாக, இரட்டை வேடம் போடுபவர்களாக இருப்பார்கள். அதையும் அடுத்தவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
4. கடகத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மிகவும் உணர்ச்சி வசப்படுபவனாக இருப்பான். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மேல் அக்கறை உள்ளவனாக இருப்பான்.
5. சிம்மத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் தன்முனைப்பு உள்ளவனாக, ஈகோ உள்ளவனாக இருப்பான். சிலரிடம் தான் என்னும் மனப்பாங்கு மிகுந்து இருக்கும். அகம்பாவம் இருக்கும். தற்பெருமைக்காரனாகவும் இருப்பான். அதே நேரத்தில் மகிழ்ச்சி உடையனாகவும், பலருடைய கண்களில் படுபவனாகவும் இருப்பான்.
6. கன்னியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் யதார்த்தமாக இருப்பான். உலக இயல்புகளோடு ஒத்துப்போகும் தன்மையுடையவனாக இருப்பான். குறிப்பிட்டுச்சொன்னால், He will be practical. எல்லா விஷயங்களிலும் ஒரு கண்ணோட்டத்துடன் இருப்பான். அத்துடன் extremely sensitive ஆக இருப்பான்.
7. துலாம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் அலைபாயும் மனதை உடையவன். swaying from one side to the other.swinging indecisively from one course of action or opinion to another. சட்டென்று முடிவு எடுக்க மாட்டார்கள். சிலர் சலன புத்திக்காரர்களாக இருப்பார்கள். ஆனாலும் அன்பு மற்றும் கருணை மிக்கவர்களாக இருப்பார்கள்.
8. விருச்சிகத்தில் சந்திரன் உள்ளவர்கள், மற்றவர்களை நேசிக்கும் மனதை உடையவர்கள். பக்தி, விசுவாசம் மிக்கவர்கள். மென்மையானவர்கள். அவர்களுடைய மனதைத் தொடும்படி பேசினால், மயங்கி விடக்கூடியவர்கள்.
9. தனுசில் ச்ந்திரன் இருக்கப்பிறந்தவர்கள், இறைவனின் ஆசி உள்ளவர்கள் (blessed people). பெருந்தன்மை மிக்கவர்கள். அதாவது பெரிய மனது உடையவர்கள். மற்றவர்களின் உணர்வை மதிக்கக்கூடியவர்கள்.
10. மகரத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன், யாரிடமும் நட்புக் கொள்ளும் மனதை உடையவன். எதையும் சாதிகக்ககூடிய மன வலுவை உடையவன். அட்சரசுத்தமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.செய்வதைத் திருந்தச் செய்யக்கூடியவன். முழுமையாகச் செய்யக்கூடியவன்.
11. கும்பத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் reserved மற்றும் serious nature உடையவனாக இருப்பான். ஆனாலும் மனிதநேயம் மிக்கவனாக இருப்பான்.
12. மீனத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாக இருப்பான். அடுத்தவர்களை நேசிப்பவனாக இருப்பான். அத்துடன் மாற்றங்களை விரும்புபவனாக இருப்பான்.
இவைகள் எல்லாமுமே பொது விதிகள். சந்திரனுடன் கூட்டாக உள்ள மற்ற கிரகங்களை வைத்து இவைகள் மாறுபடும். சுபக்கிரகங்களின் கூட்டு என்றால் யதார்த்தம் மற்றும் நற்பலன்கள் அதிகமாகும். தீய கிரகங்களின் கூட்டு என்றால் இந்தக் குணங்கள் மைனசாகி விடும். அதாவது குறைந்துவிடும்
சந்திரன், சுக்கிரனோடு சேர்ந்திருந்தால், எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் நட்பு பாராட்டக்கூடியவனாக இருப்பான். அத்துடன் இறைபக்தியுடைய வனாகவும், ரசனை உணர்வு மிக்கவனாகவும் இருப்பான். தனது மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வான். உலகத்தாரோடு ஒத்து வாழ்பவனாக இருப்பான்.
சந்திரன் குருவோடு சேர்ந்திருந்தால், அது மேன்மையான அமைப்பாகும். ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாகவும், பெருந்தன்மை மிக்கவனாக வும், மற்றவர்களின் தவறுகளை எளிதில் மன்னிக்கக்கூடியவனாகவும் இருப்பான். இந்த இரு கிரகங்களும் எந்த ராசியில் சேர்ந்திருந்தாலும் இந்தப் பலன்கள் மாறாது. ஆனால் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இந்த அமைப்பு இருந்தால் பலன்கள் மாறுபடும்.
சந்திரன் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இருந்தால் ஏற்படும் பாதகங்கள்.
6ல் (House of diseases)
8ல் (House of sins)
12ல் (House of losses & weakness)
ஆகிய இடங்களில் இருக்கும் சந்திரன் பலவீனமாகி ஜாதகனின் மனநிலையிலும், எண்ணங்களிலும் பாதகமான மாற்றங்களை உண்டாக்கும்.
அதே நேரத்தில் இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் சுபக்கிரகங்களான குரு அல்லது சுக்கிரனின் பார்வையைப் பெற்றிருந்தால், அந்தக் குறைகள் இருக்காது. அந்த இடங்களில் இருக்கும் சந்திரன் பலமாகி ஜாதகனுக்கு நன்மைகளையே செய்வார். அதை மனதில் கொள்க!
கீழ்க்கண்ட அமைப்பு ஜாதகனின் மனநிலையில் பாதகங்களை உண்டாக்கும்:
1. குரு லக்கினத்திலும் செவ்வாய் ஏழாம் வீட்டிலும் இருக்கும் அமைப்பு: உதாரணத்திற்கு மேஷ லக்கினம். ஜாதகனுக்கு கொடூரத்தன்மை இருக்கும். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம் ஆட்டி வைப்பான்.
2. சனி லக்கினத்திலும், செவ்வாய் சனிக்கு 6, 8 அல்லது 12ல் இருக்கும் நிலைமையும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.
3. சனி லக்கினத்திலும், சூரியன் 12லும், செவ்வாய் கோணங்களிலும் இருக்கும் அமைப்பும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.
4. மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் இருக்கும் நிலைமை ஜாதகனுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்
5. ஆறாம் வீடு ஒரு தீய கிரகத்தின் பார்வையுடன் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும். மன அழுத்தம் (Depression) என்றால் என்ன
வென்று தெரியுமல்லவா?
6. தேய்பிறைச சந்திரனும், சனியும் கூட்டாக 12ல் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும், ஜாதகனின் நடத்தையும் மாறுபடும்.
எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதத்திற்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே கவலை
கொள்ளாமல், ஜாதகத்தை அலசுங்கள். அப்படியே ஒரு அவுன்ஸ் 337 டானிக்கை ஒரு குவளை தண்ணீரில் கலந்து அவ்வப்போது குடியுங்கள்
(இது மேல்நிலை classroom2012 வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடங்களில் ஒன்று. உங்களுக்கும் பயன்படட்டும் என்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்.)
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
என்னுடைய ஜாதகத்தைத் தேட வேண்டும்! அப்புறம் அதில் சந்திரன் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். சொல்லப் பட்டுள்ள குண விசேஷங்களைக் கொண்டு பொருத்திப் பார்க்கவும் முடியவில்லை!
ReplyDeleteGood morning, Present Sir!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅதாவது பொதுப்படையான ஒரு ராசிபலன் சொல்லியிருக்கீங்க! சந்திரன் நின்ற வீடு தானே ராசி........
ReplyDeleteநேற்றே ஊகித்தேன். சந்திரன் மனோகாரகன். மற்ற கிரகங்கள் நல்லது பண்ணினாலும் கெட்டது பண்ணினாலும் அவற்றை மனிதனால் மனம் மூலமாக தானே perceive பண்ண முடிகிறது?மன நிலை நன்றாக உள்ளவனுக்கு எல்லாம் positive ஆக இருக்கும். மனநிலை பிறழ்ந்தவனுக்கோ என்ன நன்மைகள் மற்ற அமைப்புகள் தந்தும் என்ன பலன்? மனமே அழிந்து நசித்து விட்டவனுக்கோ எதைப்பற்றியும் கவலை இல்லை.
உலகத்தில் சந்தோஷமாக இருப்பது மூன்று பேர். கைக்குழந்தை, ஞானி மற்றும் பைத்தியக்காரன் (சித்தப்பிரமை பிடித்தவன்) என ஒரு பெரியவர் சொல்லுவார்.
.
அதனால், என்ன தான் மற்ற மிளகாய் இஞ்சி இத்யாதிகள் நன்றாக இருந்தாலும் தேங்காய் ஊசி விட்டால் வாயில் வைக்க முடியாது என சட்னி உவமை காட்டினீர்கள் போலும்!
May today bring lots of cheer and may your cup of mirth overflow!
மேலும் இது போன்ற பதிவுகளை நீங்கள் எழுதுவதை படிக்க ஆவலாக உள்ளேன்.
ReplyDeleteகட்டுரை பயனுள்ளதாக உள்ளது.
ReplyDeleteஎனக்கு 5ம் வீடு மேடத்தில், பரணி நட்சத்திரத்தில் சந்திரன் ராகுவுடன் கூட்டு. மேலும் சனி 8ம் வீடு கடகத்தில் இருந்து 10ம் பார்வை.இதனால் என்னவோ மன அமைதி குறைவு.
இருந்தும் வாழ்வு நகர்கின்றது
ஐயா, ஒரு ஐயம்.
ReplyDelete(அதிகப்ப்ரசங்கி என திட்டக்கூடாது please)
ஒரு ராசியில் சந்திரன் நின்றாலும் எந்த நக்ஷத்திரத்தின் சாரத்தில் நிற்கிறார் என்பதை பொறுத்து மேற்கூறிய குண நலன்கள் மாறுபடும் இல்லையா?
உதாரணமாக, சித்திரை துலா ராசி பெண்ணின் குணங்களும் விசாக துலா ராசி பெண்ணுக்கும் குணத்தில் வேறுபாடு உண்டு அல்லவா? சித்திரை கன்னிக்கும் ஹஸ்த கன்னிக்கும் குண நலன் வேறுபாடுகள் உண்டே.
அதெல்லாம் fine tuning போல என்று நினைக்கிறேன்.
காலை வணக்கம் அய்யா .
ReplyDeletegood morning sir
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
ReplyDeleteபாடம் நன்றக உள்ளது
நன்றி
வணக்கம் ஐயா !
ReplyDeleteமனமது செம்மையானால் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது ,
உங்கள் இடுகை கண்டு.
சந்திரனுடன் மாந்தி இணைத்து இருந்தாலும்
சனி இணைவு போன்ற பலன் தான் கொடுக்குமா ?
விளக்க பணிவன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி !
அருமையான கருத்துக்களோடு (பொது) வந்த அற்புதப் பதிவு..
ReplyDeleteஎனக்கும் ஐந்தில் மேஷத்திலே வளர்பிறைச் சந்திரன்...
''கூடவே நீசபங்க சனியும் கூட... அவன் செவ்வாயோடு பரிவர்த்தனை''
அப்படி இருக்க லக்னாதிபதியும் சுகாதிபதியுமான குருவும்..
லாபாதிபதியான சுக்கிரனோடு எழாம்பார்வையாக சந்திரனைப் பார்க்கிறார்கள்...
சத்திமான செயல்களுக்கு மட்டும்...தைரியம் இருக்கிறது...
என்ன தவறு என்று தெரிந்தால் அதைப் பார்த்துக்
கொண்டு வாயை சுமா வைத்துக் கொண்டு
நமக்கு என்னவென்று போக முடிவதில்லை...
பெரும்பாலும் நல் ஒழுக்கமில்லாமல் இருப்பவர்களை கண்டு வெறுப்போ! அல்லது
மிகவும் அன்னியமாகவோ பார்க்கும் குணமும் பெரிதாக முந்திக்கொண்டு நிற்கிறது...
(இப்போதெல்லாம் அது அவர்களின் ஜாதக கோளாறு என்று நினைத்துக் கொள்கிறேன்)
இது சனியின் வேலையாக இருக்குமா? ஐயா!
நல்லப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் பல ஐயா!
நல்ல பகிர்வுக்கு நன்றி ஐயா...எல்லாப் பாடங்களும் மறு பதிவாகவும், முன்பு படித்ததை திரும்ப ஞாபகப்படுத்துவதாகவும் இருக்கிறது. சந்திரன் -ராகு கூட்டணி, சந்திரன் - கேது கூட்டணி, சசி மங்கள யோகம், ஆரசரோரி யோகம் எல்லாம் இந்த சட்னிகளில் வரும் என எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஎப்போதும் நான் சந்திக்கும் பிரச்சினையால் கடந்த 5,6 நாட்களாக வகுப்புக்கு வரமுடியவில்லை.
ReplyDeleteஎனக்கு என்ன ராசி என்று நான் சொல்லத்தேவையில்லை. முழு பௌர்னமி சந்திரன் நான் , ஒன்பதில் தனித்திருக்கும் புதன் பார்க்கிறார். திரும்ப திரும்ப செய்யும் தவறுகளை கண்டால் அப்படி ஒரு கோபம் வரும்.ஆனால் பெரும்பாலும் மன்னிப்போம் மறப்போம் குனம் தான் .
இட்லி சட்னி காலை சாப்பாடு, வகுப்பறையில் விருந்து துவங்கியுள்ளது. காலை சாப்பாட்டோடு அடுத்து லன்ச்,டின்னெர் என்று வரிசக்கட்டி தலைவாழை யோடு மூக்குமுட்ட பரிமாறப்படும் என நினைக்கிறேன்.
பலவகையான சட்னியைப்போல் சிலவகையான இட்லிகளும் உள்ளன அதில் ரொம்ப பிரபலம் குஷ்பு இட்லி.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletearumai ayya
ReplyDeleteபதிவு மிகவும் அருமை அய்யா. மிக்க நன்றி.
ReplyDeleteநான் இன்றி நீ இல்லை
ReplyDeleteநீயே நானாகிவிட்டபோது
இப்போது
நான் (I) இன்றி எதுவுமில்லை.
ஆனால்
நான் நானாக வேண்டுமென்றால்
எனக்கு வெற்றி வேண்டும்
அது
நீ இன்றி கிடைக்காது
ஆமாம்
இப்போது
success வேண்டும்
அது
நீ (u) இன்றி கிடைக்குமா?
மாணவர்கள் வளர்ந்துவிட்டார்கள் வகுப்பறை மாறிவிட்டது. அதைத்தான் முகப்பு படம் சொல்கிறதோ.
ReplyDeleteSuperb one..
ReplyDeleteThank a lot sir.
தனுசு சந்திரனின் வீடான கடகத்திற்கு 6ம் வீடு. தனுசுவுக்குக் கடகம் 8ம் வீடு. இந்நிலையில் தனுசுவில் சந்திரன் தெய்வாம்சம் என்பது எப்படி சரியாகும் ஐயா?
ReplyDeleteஅதே போலத்தான் கும்பமும். 6க்கு எட்டு அல்லது 8க்கு ஆறாக வருகிறது.
தனுசுவுக்கான மூலம், பூராடம் நட்சத்திரப் பெண்கள் பலர் திருமணம் ஆகாமல் நிற்கிறார்களே! ஒரு எம் எஸ் படித்த மருத்துவர் பெண் மூலம் ஆனதால் திருமணம் ஆகாமல் தூக்கு மாட்டிக் கொண்டாள் ஐயா!
பாடம் விளக்கமாக நன்றாக உள்ளது.
'நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லையே...' என்று பாட வைக்கிறார் ஆனந்த முருகன்.
ReplyDeleteநான் என்ற அகங்காரம் அழிந்தால் எல்லாம் நீயே என்ற சரணாகதி வந்துவிடும். சொல்வது சுலபம்தான்...
/////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteஎன்னுடைய ஜாதகத்தைத் தேட வேண்டும்! அப்புறம் அதில் சந்திரன் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். சொல்லப் பட்டுள்ள குண விசேஷங்களைக் கொண்டு பொருத்திப் பார்க்கவும் முடியவில்லை!/////
என்ன அவசரம்? பொறுமையாகப் பாருங்கள்!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteGood morning, Present Sir!/////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஅதாவது பொதுப்படையான ஒரு ராசிபலன் சொல்லியிருக்கீங்க! சந்திரன் நின்ற வீடு தானே ராசி.......
நேற்றே ஊகித்தேன். சந்திரன் மனோகாரகன். மற்ற கிரகங்கள் நல்லது பண்ணினாலும் கெட்டது பண்ணினாலும் அவற்றை மனிதனால் மனம் மூலமாக தானே perceive பண்ண முடிகிறது?மன நிலை நன்றாக உள்ளவனுக்கு எல்லாம் positive ஆக இருக்கும். மனநிலை பிறழ்ந்தவனுக்கோ என்ன நன்மைகள் மற்ற அமைப்புகள் தந்தும் என்ன பலன்? மனமே அழிந்து நசித்து விட்டவனுக்கோ எதைப்பற்றியும் கவலை இல்லை.
உலகத்தில் சந்தோஷமாக இருப்பது மூன்று பேர். கைக்குழந்தை, ஞானி மற்றும் பைத்தியக்காரன் (சித்தப்பிரமை பிடித்தவன்) என ஒரு பெரியவர் சொல்லுவார். .
அதனால், என்ன தான் மற்ற மிளகாய் இஞ்சி இத்யாதிகள் நன்றாக இருந்தாலும் தேங்காய் ஊசி விட்டால் வாயில் வைக்க முடியாது என சட்னி உவமை காட்டினீர்கள் போலும்!//////
சந்திரன் நின்ற ராசிக்கு இன்றைய நிலையில் கோள்களின் சுழற்சியைக் கோர்த்துஎழுதுவதுதான் ராசிபலன் எனப்படும்! பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். பிறகு என்ன பலன் என்று சொல்லுங்கள் நண்பரே!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteமேலும் இது போன்ற பதிவுகளை நீங்கள் எழுதுவதை படிக்க ஆவலாக உள்ளேன்.////
நல்லது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இது போன்ற சிறப்புப் பதிவுகளை எழுதுகிறேன்!
/////Blogger krishnar said...
ReplyDeleteகட்டுரை பயனுள்ளதாக உள்ளது.
எனக்கு 5ம் வீடு மேடத்தில், பரணி நட்சத்திரத்தில் சந்திரன் ராகுவுடன் கூட்டு. மேலும் சனி 8ம் வீடு கடகத்தில் இருந்து 10ம் பார்வை.இதனால் என்னவோ மன அமைதி குறைவு.
இருந்தும் வாழ்வு நகர்கின்றது////
கோடி இன்பம் வைத்தான் இறைவன். ஆகவே வாழ்க்கை தன் சுவாரசியத்தை ஒருபோதும் இழக்காது. நகராமல் இருக்கவும் செய்யாது!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஐயா, ஒரு ஐயம்.
(அதிகப்பிரசங்கி என திட்டக்கூடாது please)
ஒரு ராசியில் சந்திரன் நின்றாலும் எந்த நக்ஷத்திரத்தின் சாரத்தில் நிற்கிறார் என்பதை பொறுத்து மேற்கூறிய குண நலன்கள் மாறுபடும் இல்லையா?
உதாரணமாக, சித்திரை துலா ராசி பெண்ணின் குணங்களும் விசாக துலா ராசி பெண்ணுக்கும் குணத்தில் வேறுபாடு உண்டு அல்லவா? சித்திரை கன்னிக்கும் ஹஸ்த கன்னிக்கும் குண நலன் வேறுபாடுகள் உண்டே.
அதெல்லாம் fine tuning போல என்று நினைக்கிறேன்.////
நீங்களே கேள்வியையும் கேட்டு, கடைசிவரியில் பதிலையும் சொல்லிவிட்டீர்கள். நன்றி!
//////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteகாலை வணக்கம் அய்யா ./////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
/////Blogger eswari sekar said...
ReplyDeletegood morning sir/////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!
/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
பாடம் நன்றக உள்ளது
நன்றி////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger ஸ்ரவாணி said...
ReplyDeleteவணக்கம் ஐயா !
மனமது செம்மையானால் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது ,
உங்கள் இடுகை கண்டு.
சந்திரனுடன் மாந்தி இணைத்து இருந்தாலும்
சனி இணைவு போன்ற பலன் தான் கொடுக்குமா ?
விளக்க பணிவன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி !/////
மாந்தி தீமையைத்தான் செய்யும்!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteஅருமையான கருத்துக்களோடு (பொது) வந்த அற்புதப் பதிவு..
எனக்கும் ஐந்தில் மேஷத்திலே வளர்பிறைச் சந்திரன்...
''கூடவே நீசபங்க சனியும் கூட... அவன் செவ்வாயோடு பரிவர்த்தனை''
அப்படி இருக்க லக்னாதிபதியும் சுகாதிபதியுமான குருவும்..
லாபாதிபதியான சுக்கிரனோடு எழாம்பார்வையாக சந்திரனைப் பார்க்கிறார்கள்...
சத்திமான செயல்களுக்கு மட்டும்...தைரியம் இருக்கிறது...
என்ன தவறு என்று தெரிந்தால் அதைப் பார்த்துக்
கொண்டு வாயை சுமா வைத்துக் கொண்டு
நமக்கு என்னவென்று போக முடிவதில்லை...
பெரும்பாலும் நல் ஒழுக்கமில்லாமல் இருப்பவர்களை கண்டு வெறுப்போ! அல்லது
மிகவும் அன்னியமாகவோ பார்க்கும் குணமும் பெரிதாக முந்திக்கொண்டு நிற்கிறது...
(இப்போதெல்லாம் அது அவர்களின் ஜாதக கோளாறு என்று நினைத்துக் கொள்கிறேன்)
இது சனியின் வேலையாக இருக்குமா? ஐயா!
நல்லப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் பல ஐயா!////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
///Blogger Balamurugan Jaganathan said...
ReplyDeleteபதிவு மிகவும் அருமை அய்யா. மிக்க நன்றி.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
Blogger thanusu said...
ReplyDeleteநான் இன்றி நீ இல்லை
நீயே நானாகிவிட்டபோது
இப்போது
நான் (I) இன்றி எதுவுமில்லை.
ஆனால்
நான் நானாக வேண்டுமென்றால்
எனக்கு வெற்றி வேண்டும்
அது
நீ இன்றி கிடைக்காது
ஆமாம்
இப்போது
success வேண்டும்
அது
நீ (u) இன்றி கிடைக்குமா?/////
u இன்றி success இல்லைதான். எடுத்துக் காட்டிய மேன்மைக்கு நன்றி தனுசு!
////Blogger thanusu said...
ReplyDeleteமாணவர்கள் வளர்ந்துவிட்டார்கள் வகுப்பறை மாறிவிட்டது. அதைத்தான் முகப்பு படம் சொல்கிறதோ.///////
இல்லை. ஒரே படத்தை எத்தனை நாட்களுக்குத்தான் தியேட்டரில் ஓட்டுவது? அதனால்தான் அந்த மாற்றம்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteதனுசு சந்திரனின் வீடான கடகத்திற்கு 6ம் வீடு. தனுசுவுக்குக் கடகம் 8ம் வீடு. இந்நிலையில் தனுசுவில் சந்திரன் தெய்வாம்சம் என்பது எப்படி சரியாகும் ஐயா?
அதே போலத்தான் கும்பமும். 6க்கு எட்டு அல்லது 8க்கு ஆறாக வருகிறது.
தனுசுவுக்கான மூலம், பூராடம் நட்சத்திரப் பெண்கள் பலர் திருமணம் ஆகாமல் நிற்கிறார்களே! ஒரு எம் எஸ் படித்த மருத்துவர் பெண் மூலம் ஆனதால் திருமணம் ஆகாமல் தூக்கு மாட்டிக் கொண்டாள் ஐயா!
பாடம் விளக்கமாக நன்றாக உள்ளது.//////
6ஆம் வீடு எட்டாம் வீடு என்று ஏன் கணக்குப் பார்க்கிறீர்கள். முதன்மை சுபக்கிரகமான குருவின் வீடு அது. மீனமும் குவின் வீடு என்றாலும்
கடிகாரச் சுற்றில் இதுதான் குருவின் முதல் வீடு. அத்துடன் வான ராசிகளில் இது ஒன்பதாம் வீடு. அதானால்தான் அந்த ஆசிர்வாதம்!
/////Blogger Arul said...
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு நன்றி ஐயா...எல்லாப் பாடங்களும் மறு பதிவாகவும், முன்பு படித்ததை திரும்ப ஞாபகப்படுத்துவதாகவும் இருக்கிறது. சந்திரன் -ராகு கூட்டணி, சந்திரன் - கேது கூட்டணி, சசி மங்கள யோகம், ஆரசரோரி யோகம் எல்லாம் இந்த சட்னிகளில் வரும் என எதிர்பார்க்கிறேன்./////
கிரகங்கள் ஒன்பது தானே. இதுவரை வந்த பாடங்கள் 555. ஆகவே கிரகம் வந்தாலே, ஞாபகம் வரக்கூடாது. இப்பாடத்தில் உள்ள வேறுபட்ட செய்திகளைப் பாருங்கள்
////Blogger thanusu said...
ReplyDeleteஎப்போதும் நான் சந்திக்கும் பிரச்சினையால் கடந்த 5,6 நாட்களாக வகுப்புக்கு வரமுடியவில்லை.
எனக்கு என்ன ராசி என்று நான் சொல்லத்தேவையில்லை. முழு பௌர்னமி சந்திரன் நான் , ஒன்பதில் தனித்திருக்கும் புதன் பார்க்கிறார். திரும்ப திரும்ப செய்யும் தவறுகளை கண்டால் அப்படி ஒரு கோபம் வரும்.ஆனால் பெரும்பாலும் மன்னிப்போம் மறப்போம் குனம் தான் .
இட்லி சட்னி காலை சாப்பாடு, வகுப்பறையில் விருந்து துவங்கியுள்ளது. காலை சாப்பாட்டோடு அடுத்து லன்ச்,டின்னெர் என்று வரிசக்கட்டி தலைவாழை யோடு மூக்குமுட்ட பரிமாறப்படும் என நினைக்கிறேன்.
பலவகையான சட்னியைப்போல் சிலவகையான இட்லிகளும் உள்ளன அதில் ரொம்ப பிரபலம் குஷ்பு இட்லி./////
பறிமாறுவதோடு என்வேலை முடிந்துவிடும். மூக்குமுட்டச் சாப்பிடுவதேல்லாம் அவரவர் சாமர்த்தியம்!
////Blogger arul said...
ReplyDeletearumai ayya/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
அன்புள்ள வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.ஒருவரின் ஜாதகத்தில் அமையும் பலம்பொருந்திய,பலம்குன்றிய சந்திரனின் நிலைப்பாட்டிற்கும்,கோட்ச்சார சந்திரனின் வளர்பிறை,தேய்பிறை நிலைப்பாட்டிற்கும் ஏதேனும் தொடர்பு இருந்தால்,அதைப்பற்றி சிறு விளக்கம் தருமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றிகள்.
ReplyDeleteநீயா நானா என
ReplyDeleteவிளக்கம் சொன்ன அனந்த முருகனின் பங்களிப்பு சிறப்பு...
இன்று நான்..
நாளை நீ...
சரி தானே
//சந்திரன் நின்ற ராசிக்கு இன்றைய நிலையில் கோள்களின் சுழற்சியைக் கோர்த்துஎழுதுவதுதான் ராசிபலன் எனப்படும்! பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். பிறகு என்ன பலன் என்று சொல்லுங்கள் நண்பரே!
ReplyDelete//
வாத்தியார் ஐயா,
ராசிபலன் என்று நான் கையாண்ட பதம் குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது என புரிகிறது. மன்னிக்கவும். நான் சொல்ல வந்த அர்த்தம் என்னவெனில், ஒருத்தன் ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடம் ராசி. நீங்கள் எழுதி இருப்பது சந்திரன் நின்ற வீட்டிற்கு பொதுவான பலன். ஆதலால் ராசி பலன் என சொன்னேன். நாட்காட்டி ராசி பலன் அல்ல.
(நாட்காட்டி ராசிபலனில்/பொதுவான கோசார பலனில் எனக்கு ஏனோ நம்பிக்கை இல்லை. ஒருத்தன் ஜாதகத்தை ஆராய்ந்து அதையும் கணக்கில் கொண்டே பலன்களை சொல்லலாம் - அது தான் துல்லியமாக இருக்க முடியும் என நம்புகிறேன். ஆதலால் பொது பலன்களை நான் பார்பதில்லை. இந்த அப்ரோச் சரியா தவறா தெரியலை)