மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.7.12

Astrology - Popcorn Posts பாகற்காயின் குணம் எப்போது மாறும்?

Astrology - Popcorn Posts பாகற்காயின் குணம் எப்போது மாறும்?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி எட்டு

ஒரு சந்நியாசி இருந்தார். உண்மையிலேயே எல்லாவற்றையும் துறந்தவர். அவர் மேலுள்ள மதிப்பினால், ஊர் மக்களே தங்குவதற்கு ஒரு இடத்துடன் பெரிய ஓடுகள் வேய்ந்த வீட்டையும் கொடுத்திருந்தார்கள். ஆசிரமம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஆசிரமத்திற்குப் பின்புறம் பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆசிரமம், மரம், செடி கொடிகள் நிறைந்து ரம்மியமாக இருக்கும்.
ஆசிரமத்தில் இருந்த அரச மரத்தடியில் ஒரு பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுக்கொண்டிருந்தார். உள்ளூர் மக்களும் வந்து வழிபடுவார்கள். உணவிற்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் கொடுப்பார்கள்

ஆசிரமத்தில் இருந்த கூறை வேய்ந்த மேடை ஒன்றில் இருந்து வாரம் இரண்டு முறை மக்களுக்கு நல்வழியில் நடக்க போதனைகள் செய்வார். அவருக்கு மூன்று சீடர்கள் இருந்தார்கள்.

ஒரு நாள் அந்த சீடர்கள் மூவரும், சந்நியாசியிடம் வந்து,” சுவாமி, நாங்கள் மூன்று நாட்கள் தீர்த்த யாத்திரை செல்ல விரும்புகிறோம்.அருகில் உள்ள புண்ணிய நதிகளில் எல்லாம் நீராடிவிட்டு வர விரும்புகிறோம். நீங்களும் வர வேண்டும்” என்றார்கள்

"நம் ஊர் ஆற்றிற்கு என்ன ஆயிற்று?” என்றார்.

“அதில்தான் தினமும் நீராடுகிறோமே - வேறு புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டு வர விரும்புகிறோம்” என்றார்கள்

”நான் வரவில்லை. நீங்கள் போய் வாருங்கள்” என்றார்

அவர்கள் வலியுறுத்தி மீண்டும் மீண்டும் சொல்லவே, அருகில் இருந்த பாகற்காய் கொடி ஒன்றைக் காட்டியதுடன், ஒரு காயைப் பறித்துக்கொண்டு வரும்படி சொன்னார். அப்படியே செய்தார்கள்

“இந்தக் காயை நானாக நினைத்துக்கொண்டு நீங்கள் தீர்த்தமாடும், நதிகளிலும், ஊருணிகளிலும் இந்தக் காயை நமச்சிவாய என்று சொல்லி மூன்று முறை முக்கி எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்றார்
 
                                              ++++++++++++++++++++++++

மூன்று நாட்கள் சென்றன. யாத்திரை முடிந்து திரும்பிய அவர்கள், குருவிடம் வந்து தங்கள் பயண அனுபவத்தை விவரித்தார்கள்.

“பாகற்காய் என்ன ஆயிற்று?” என்றார்

“நீங்கள் சொன்னபடி அதற்கு நீராட்டி, பத்திரமாகக் கொண்டு வந்திருக்கிறோம் சுவாமி” என்றார்கள்

“இன்று சமையலில் அதையும் சேர்த்துவிடுங்கள்” என்றார்.

                                                 +++++++++++++++++++++++

மதியம் தன் சீடர்களுடன் சேர்ந்து உணவருந்தும்போது சுவாமிஜி கேட்டார்: “பாகற்காய் எப்படி இருக்கிறது?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்: “எப்போதும் போலவே கசப்பாய் இருக்கிறது.ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை சுவாமி.”

சுவாமிஜி முத்தாய்ப்பாய்ச் சொன்னார்: “எத்தனை புண்ணிய நதிகளில் குளித்தாலும் பாகற்காயின் குணம் மாறவில்லை அல்லவா? அதுபோல எத்தனை புண்ணிய நதிகளில் குளித்தாலும், மனிதனின் அடிப்படைக் குணம் மாறாது!”

பாகற்காயின் குணம் எப்போதும் மாறாது. மனிதனின் அடிப்படைக் குணமும் எப்போதும் மாறாது. கஞ்சன் எப்போதும் கஞ்சன்தான். காமுகன் எப்போதும் காமுகன்தான்

                                               +++++++++++++++++++++++
தீய கிரகங்களுக்கும் அப்படி அடிப்படைக் குணம் உண்டு. தீய கிரகங்கள் தீமையையே பயக்கும். செய்யும்.

பாகற்காயுடன் வெல்லம் போட்டு சமைத்து, அதன் கசப்பைக் குறைப்பார்கள். அதுபோல தீய கிரகங்கள் சுபக் கிரகங்களுடன் சேரும் போது அல்லது பார்வை பெறும்போது, தீமைகள் பெரும் அளவிற்குக் குறையும்.

ஒரு தீய கிரகம் நீசமடைந்த நிலையில் ஒரு நல்ல வீட்டில் இருப்பது நல்லதா? அல்லது ஒரு தீய கிரகம் வலிமை இழந்த நிலையில் ஒரு தீய வீட்டில் இருப்பது நல்லதா? எது நல்லது?

ஒரு வீக்காக உள்ள தீய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் - அதாவது கேந்திர கோணங்கள் போன்ற நல்ல வீட்டில் இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 போன்ற தீய வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டைக் கெடுக்கவே செய்வான். அதுவும் வலிமையுள்ள ஒரு தீயவனைவிட அதிகமாகவே கெடுதல் செய்வான்.

A weak evil planet in a good house or a bad house, wherever he may be, will spoil the house more than a strong evil planet. Evil planets, wherever they may be, spoil the house they occupy. The weaker they are will be more harmful!
                                   -----------------------------------

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

47 comments:

ரமேஷ் வெங்கடபதி said...

தீய கிரகங்களின் தன்மையை பாகற்காயின் கசப்புடன் ஒப்பீடு செய்தமை மிக்க அழகு..எளிதில் புரிந்தது..ஐயாவிற்கு நன்றி..வணக்கம்!

தேமொழி said...

இது போலவே "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்". குரு எந்த நிலையில் இருந்தாலும் தீமை செய்வது கிடையாது என்று பலமுறை விளக்கி சொல்லி உள்ளீர்கள் என்பதும் நினைவிற்கு வருகிறது, நன்றி ஐயா.

சரண் said...

பாகற்காயுடன் வெல்லம்போட்டு சமைத்தால் கசப்பு குறையும் அவ்வளவுதான் என்ற உதாரணம், தீமை செய்யும் கிரகங்களின் தீமை சுபர்களின் சேர்க்கையால் குறையும் என்ற விளக்கம் தெளிவாக இருந்தது.

Parvathy Ramachandran said...

ஜாதகத்தில் நல்ல இடங்களான குடம் பாலில் தீய கிரகங்களான துளி விஷம் சேரும் போது என்ன ஆகும் என்பதை விளக்கிக் காட்டிய பதிவு அருமை

இதைப் படித்தவுடன் குடும்பத்தலைவன் திரைப்படத்தில் வரும் கவியரசரின் "மாறாதய்யா மாறாது, மனமும் குணமும் மாறாது" என்ற பாடல் வரிகள் தோன்றின, உடன் நல்ல கிரகங்களின் குணத்தை விளக்குவது போல் அமைந்த,
தமிழ் மூதாட்டியின் மூதுரை வரிகளான,

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

என்ற வரிகளும்

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று (திருக்குறள், சான்றாண்மை) எனும் வள்ளுவப் பெருமான் வாக்கும் நினைவில் வந்து சிந்தை நிறைந்தது.

பதிவின் கருத்தும் அது மறக்காத வண்ணம் தாங்கள் கூறும் உதாரணமும் அருமை. மிக்க நன்றி.

eswari sekar said...

vannakam sir

ஜி ஆலாசியம் said...

பாகற்காய் கதை அருமை...

////ஒரு வீக்காக உள்ள தீய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் - அதாவது கேந்திர கோணங்கள் போன்ற நல்ல வீட்டில் இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 போன்ற தீய வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டைக் கெடுக்கவே செய்வான். அதுவும் வலிமையுள்ள ஒரு தீயவனைவிட அதிகமாகவே கெடுதல் செய்வான்.///

வலிமையுள்ள தீயகிரகம் என்பது.... நாம் மோதி காயங்கள் ஏற்படுத்தாத எதிரி போன்றவன்..
வலிமையற்ற தீயகிரகம்... நம்மோடு மோதி அடிவாங்கியவன் போன்றவன்...
ஆக, அவனின் கோபமும், உக்கிரமும் அதிகமாக இருக்கும் என்றுப் புரிந்துக் கொள்கிறேன்.

நன்றிகள் ஐயா!

kmr.krishnan said...

Nurture Vs Nature என்பதைப் பற்றி முடிவில்லாத விவாதங்கள் நடந்து வருகின்றன. பாகற்காயின் குணத்தை அறிவியலால் மாற்றிக் காட்டுகிறோம் என்று கிளம்பலாம்.ஆனாலும் பாகற்காய் கசப்பாயிருந்தால்தான் அது பாகற்காய். புலியைப் பூனை போல் ஆக்குவதால் என்ன பயன்? புலி தன் புலித் தன்மை மாறாமல் இருந்தாலே அது புலி.

தீய கிரஹம், நல்ல கிரஹம் என்பதெல்லாமும் நம் இருமையின் பாற்பட்டதல்லவா? ஒருமையுடன் இறைவனின் திருவடிகளை நினைக்கத் துவங்கிவிட்டால் 'அவை நல்ல நல்ல' என்று தீய கிரகங்களையும் போற்றத் துவங்கிவிடுவோம் அல்லவா?

பின்னூட்டங்களையே ஆக்கத்திற்குப் பயன் படுத்திக்கொள்ளலாம் போல் இருக்கிறதே! தேமொழி வழிகாட்டுகிறாரோ?

Bhuvaneshwar said...

மீள்பதிவு. நன்றாக இருக்கிறது.
நன்றி ஐயா.

thanusu said...

தீய கிரகம், பாகற்காய் ஒற்றுமை படுத்தி காட்டிய விளக்கம் அருமை.எனக்கு பாகற்காய் சாப்பிட பிடிக்காது. இன்றளவிலும் அதனை ஒதுக்கியே வைத்து சாப்பிடுகிறேன்.

Gee Tax Clinic said...
This comment has been removed by the author.
அய்யர் said...

கங்கை ஆடிலன் காவிரி ஆடிலன்
என்ற அப்பர் திருவாக்கை நினைவுபடுத்தி அமைந்தது காய் தகவல்

அடிப்படை உணர்வுகளில்
படிப்படியாக பார்த்தால் இருவரும் ஒருவரே

அவர் மடம் கட்ட முடியவில்லை என வருந்துவர்
இவர் வீடு கட்ட முடியவில்லை என வருந்துவர்

அவர் சிஷ்யர்கள் சொல் பேச்சு கேட்பதில்லை என துக்கிப்பர்
இவர் பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பதில்லை என சஞ்சலப்படுவர்

இப்படி
இன்னமும் பல..

கிரகங்கள் தமது இருக்குமிடத்தை கொண்டு
தன் கடமைகளை ஆற்றுகின்றன இல்லையா...

Balamurugan Jaganathan said...

பதிவு அருமை அய்யா. மிக்க நன்றி _/\_.

arul said...

nice post

VAOrnaments said...

Sir, but neecha graham if it is sitting in a rasi where rasi lord is Ucham then it gets cancelled know.

VAOrnaments said...

Sir, but neecha graham if it is sitting in a rasi where rasi lord is Ucham then it gets cancelled know.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
தீய கிரகங்களின் தன்மையை பாகற்காயின் கசப்புடன் ஒப்பீடு செய்தமை மிக்க அழகு..எளிதில் புரிந்தது..ஐயாவிற்கு நன்றி..வணக்கம்!////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
இது போலவே "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்". குரு எந்த நிலையில் இருந்தாலும் தீமை செய்வது கிடையாது என்று பலமுறை விளக்கி சொல்லி உள்ளீர்கள் என்பதும் நினைவிற்கு வருகிறது, நன்றி ஐயா./////

உங்களின் நினைவாற்றலுக்கு ஒரு சல்யூட்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சரண் said...
பாகற்காயுடன் வெல்லம்போட்டு சமைத்தால் கசப்பு குறையும் அவ்வளவுதான் என்ற உதாரணம், தீமை செய்யும் கிரகங்களின் தீமை சுபர்களின் சேர்க்கையால் குறையும் என்ற விளக்கம் தெளிவாக இருந்தது./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சரண்!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Parvathy Ramachandran said...
ஜாதகத்தில் நல்ல இடங்களான குடம் பாலில் தீய கிரகங்களான துளி விஷம் சேரும் போது என்ன ஆகும் என்பதை விளக்கிக் காட்டிய பதிவு அருமை
இதைப் படித்தவுடன் குடும்பத்தலைவன் திரைப்படத்தில் வரும் கவியரசரின் "மாறாதய்யா மாறாது, மனமும் குணமும் மாறாது" என்ற பாடல் வரிகள் தோன்றின, உடன் நல்ல கிரகங்களின் குணத்தை விளக்குவது போல் அமைந்த,
தமிழ் மூதாட்டியின் மூதுரை வரிகளான,
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
என்ற வரிகளும்
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று (திருக்குறள், சான்றாண்மை) எனும் வள்ளுவப் பெருமான் வாக்கும் நினைவில் வந்து சிந்தை நிறைந்தது.
பதிவின் கருத்தும் அது மறக்காத வண்ணம் தாங்கள் கூறும் உதாரணமும் அருமை. மிக்க நன்றி./////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
vannakam sir/////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜி ஆலாசியம் said...
பாகற்காய் கதை அருமை...
////ஒரு வீக்காக உள்ள தீய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் - அதாவது கேந்திர கோணங்கள் போன்ற நல்ல வீட்டில் இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 போன்ற தீய வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டைக் கெடுக்கவே செய்வான். அதுவும் வலிமையுள்ள ஒரு தீயவனைவிட அதிகமாகவே கெடுதல் செய்வான்.///
வலிமையுள்ள தீயகிரகம் என்பது.... நாம் மோதி காயங்கள் ஏற்படுத்தாத எதிரி போன்றவன்..
வலிமையற்ற தீயகிரகம்... நம்மோடு மோதி அடிவாங்கியவன் போன்றவன்...
ஆக, அவனின் கோபமும், உக்கிரமும் அதிகமாக இருக்கும் என்றுப் புரிந்துக் கொள்கிறேன்.
நன்றிகள் ஐயா!/////

நல்லது. உங்களின் பாராட்டிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
Nurture Vs Nature என்பதைப் பற்றி முடிவில்லாத விவாதங்கள் நடந்து வருகின்றன. பாகற்காயின் குணத்தை அறிவியலால் மாற்றிக் காட்டுகிறோம் என்று கிளம்பலாம்.ஆனாலும் பாகற்காய் கசப்பாயிருந்தால்தான் அது பாகற்காய். புலியைப் பூனை போல் ஆக்குவதால் என்ன பயன்? புலி தன் புலித் தன்மை மாறாமல் இருந்தாலே அது புலி.
தீய கிரஹம், நல்ல கிரஹம் என்பதெல்லாமும் நம் இருமையின் பாற்பட்டதல்லவா? ஒருமையுடன் இறைவனின் திருவடிகளை நினைக்கத் துவங்கிவிட்டால் 'அவை நல்ல நல்ல' என்று தீய கிரகங்களையும் போற்றத் துவங்கிவிடுவோம் அல்லவா?
பின்னூட்டங்களையே ஆக்கத்திற்குப் பயன் படுத்திக்கொள்ளலாம் போல் இருக்கிறதே! தேமொழி வழிகாட்டுகிறாரோ?/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Bhuvaneshwar said...
மீள்பதிவு. நன்றாக இருக்கிறது.
நன்றி ஐயா.//////

மீள் பதிவா? புது மாவில் செய்த (சுட்ட) இட்லி சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger thanusu said...
தீய கிரகம், பாகற்காய் ஒற்றுமை படுத்தி காட்டிய விளக்கம் அருமை. எனக்கு பாகற்காய் சாப்பிட பிடிக்காது. இன்றளவிலும் அதனை ஒதுக்கியே வைத்து சாப்பிடுகிறேன்.//////

அதுபோல வேண்டாத கிரகங்களை ஒதுக்கி வைக்கும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?:-)))

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
கங்கை ஆடிலன் காவிரி ஆடிலன்
என்ற அப்பர் திருவாக்கை நினைவுபடுத்தி அமைந்தது காய் தகவல்
அடிப்படை உணர்வுகளில்
படிப்படியாக பார்த்தால் இருவரும் ஒருவரே
அவர் மடம் கட்ட முடியவில்லை என வருந்துவர்
இவர் வீடு கட்ட முடியவில்லை என வருந்துவர்
அவர் சிஷ்யர்கள் சொல் பேச்சு கேட்பதில்லை என துக்கிப்பர்
இவர் பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பதில்லை என சஞ்சலப்படுவர்
இப்படி
இன்னமும் பல..
கிரகங்கள் தமது இருக்குமிடத்தை கொண்டு
தன் கடமைகளை ஆற்றுகின்றன இல்லையா.../////

ஆமாம். ஆமாம்.ஆமாம் விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Balamurugan Jaganathan said...
பதிவு அருமை அய்யா. மிக்க நன்றி _/\_.//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி பாலமுருகன்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
nice post////

உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger VAOrnaments said...
Sir, but neecha graham if it is sitting in a rasi where rasi lord is Ucham then it gets cancelled know./////

மேஷத்தில் சனி நீசம். அங்கே சூரியன் உச்சம். இருவரும் ஒன்றாக இருந்தால் நீசம் கேன்சலாகும். அந்த ராசிக்கு அதிபதி செவ்வாய். அங்கே அவர் இருந்தால் (செவ்வாய்) எப்படி உச்சம் பெறுவார்? சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள் சுவாமி!

Maaya kanna said...

ஐயா! விற்கு வணக்கம்.

அக்கா! தே மொழிக்கு

" தாங்கள் வேதம் புதிது "!

என்னும் சினிமா படத்தை பார்த்து இருப்பிர்கள் . அதனில், கிழே கொடுக்கபட்டுள்ள

" சாமி பெரிது, சாஸ்திரம் பெரிது என்பதை விட மனிசாளுகாதான் பெரிது!",

என்று நடந்துக்கிடியே .!"............ etc இப்படி ஒரு படம் வருமா என்பது சந்தேகமே

" எல்லாரும் ஆசைப்படுகின்ற எல்லாத்தையும் வாங்கி கொடுக்கின்ற நான், என்னுடைய புள்ள ஆசைபட்டதை வாங்கி கொடுக்க முடிய வில்லையே".!

என்று ஒரு வசனம் வரும் .


வேதம் புதிது

05 Vetham Puthithu

அதனை போல,

நாராயணா என்னும் பாராயணம் ! நலம் யாவும் தருகின்ற தேவார்மிதம்
தேவார்மிதம். கோவிந்த நாம சந்கிர்த்தனம் குடிகொண்டவர் நெஞ்சம் தான் பேராலயம்! பேராலயம் .. !

என்னும் பாடலை அக்காவிடம் இருந்து எதிர் பார்க்கின்றேன் . தருவிர்களா அக்கா !

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
உள்ளேன் ஐயா
நன்றி

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
உள்ளேன் ஐயா
நன்றி

arumuga nainar said...

ஐயா வணக்கம்,

மேஷத்தில் சனி நீசம். அங்கே சூரியன் உச்சம். இருவரும் ஒன்றாக இருந்தால் நீசம் கேன்சலாகும்.
மீனத்தில் புதன் நீசம் அங்கே சுக்கிரன் உச்சம் இருவரும் ஒன்றாக இருந்தால் நீசம் கேன்செலாகும்
அப்போம் உச்சனுடன் நீசம் சேர்த்தால் நீசம் கேன்சலாகும்.

Maaya kanna said...

Dear Sir!

Good evening.

mrs. Demozhi sister

Thanks & Reg

kannan seetharaman


Here link.

By LakshmanaSruthi.com

Lyricist - Udumalai NarayanaKavi.

Singer - Seergazhi - S - Govindarajan.


Naaraayanaa yenum Paaraayanam.

ananth said...

//ஒரு தீய கிரகம் நீசமடைந்த நிலையில் ஒரு நல்ல வீட்டில் இருப்பது நல்லதா? அல்லது ஒரு தீய கிரகம் வலிமை இழந்த நிலையில் ஒரு தீய வீட்டில் இருப்பது நல்லதா? எது நல்லது?//

இதில் எது நல்லது என்பது எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்ப்பதைப் போன்றதுதான்.

sundari said...

ananth said...

//ஒரு தீய கிரகம் நீசமடைந்த நிலையில் ஒரு நல்ல வீட்டில் இருப்பது நல்லதா? அல்லது ஒரு தீய கிரகம் வலிமை இழந்த நிலையில் ஒரு தீய வீட்டில் இருப்பது நல்லதா? எது நல்லது?//

இதில் எது நல்லது என்பது எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்ப்பதைப் போன்றதுதான்.//
சார் இரண்டும் நல்ல கொள்ளிதான் சார்.நீங்க அமைதியாயிருந்தது திடீரென்று ஜோக் அடிக்கிறீங்க சுப்பையா சார் மாதரி.
சார் வணக்கம்,
பாப்கான் நல்லாயிருந்தது ரொம்ப நன்றி இந்த வாரம் முழு சாப்பாடு போடுவிங்களா நேரமிருந்தால் தாங்கள்.

தேமொழி said...

கண்ணா,
It's my pleasure.

முன்பு கொடுத்த தகவலை @
http://classroom2007.blogspot.com/2012/06/poetry-poetry.html?showComment=1340860791929#c4825389955460941433
நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நினைத்திருந்தேன்..........

இந்தப் பாடலை இசை வடிவமாக கேட்க இந்த சுட்டியைத் தொடரவும்:
http://www.raaga.com/play/?id=9736

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
உள்ளேன் ஐயா
நன்றி/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arumuga nainar said...
ஐயா வணக்கம்,
மேஷத்தில் சனி நீசம். அங்கே சூரியன் உச்சம். இருவரும் ஒன்றாக இருந்தால் நீசம் கேன்சலாகும்.
மீனத்தில் புதன் நீசம் அங்கே சுக்கிரன் உச்சம் இருவரும் ஒன்றாக இருந்தால் நீசம் கேன்செலாகும்
அப்போம் உச்சனுடன் நீசம் சேர்த்தால் நீசம் கேன்சலாகும்./////

வணக்கம் நைனார். அவருடைய கேள்வி என்ன என்பதைப் பார்த்தீர்களா?

SP.VR. SUBBAIYA said...

//////Blogger ananth said...
//ஒரு தீய கிரகம் நீசமடைந்த நிலையில் ஒரு நல்ல வீட்டில் இருப்பது நல்லதா? அல்லது ஒரு தீய கிரகம் வலிமை இழந்த நிலையில் ஒரு தீய வீட்டில் இருப்பது நல்லதா? எது நல்லது?//
இதில் எது நல்லது என்பது எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்ப்பதைப் போன்றதுதான்./////

ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான். நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger sundari said...
ananth said...
//ஒரு தீய கிரகம் நீசமடைந்த நிலையில் ஒரு நல்ல வீட்டில் இருப்பது நல்லதா? அல்லது ஒரு தீய கிரகம் வலிமை இழந்த நிலையில் ஒரு தீய வீட்டில் இருப்பது நல்லதா? எது நல்லது?//
இதில் எது நல்லது என்பது எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்ப்பதைப் போன்றதுதான்.//
சார் இரண்டும் நல்ல கொள்ளிதான் சார்.நீங்க அமைதியாயிருந்தது திடீரென்று ஜோக் அடிக்கிறீங்க சுப்பையா சார் மாதரி.
சார் வணக்கம்,
பாப்கான் நல்லாயிருந்தது ரொம்ப நன்றி இந்த வாரம் முழு சாப்பாடு போடுவிங்களா நேரமிருந்தால் தாங்கள்./////

இந்த வாரம் முச்சூடும் பாப்கார்ன்தான். அடுத்த வாரம் பார்க்கலாம் சகோதரி!

Uma said...

என் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் நீசம், செவ், சந் மற்றும் கேது. இவற்றில் இரண்டு நீச்சபங்கம் அடைந்து தப்பித்துவிட்டன. கேது தசையில் அம்மாவை விட்டுப் பிரித்தது. நீச்ச சந்திரனுடன், ராகு சேர்க்கை, கேது பார்வை எல்லாம் சேர்ந்து கும்மியடித்தன. கேது இருக்கும் வீட்டிற்கு அதிபதி நாலில் நான்கு பரல்களுடன் இருப்பதால் நீசம் என எடுத்துக்கொள்ள முடியாது என நினைக்கிறேன். மிகவும் வீக்காக இருப்பது செவ் மூன்று பரல்களுடன். இருப்பது கேந்திரத்தில். இருப்பினும் காய்கறிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது பாகற்காய்தான். வெல்லம் போட்டு செய்வது திவசத்திற்கு மட்டும்தான். மற்ற நாட்களில் மேலே இருக்கும் தோலைச் சீவிவிட்டு வெங்காயம், தக்காளி, மசாலா போட்டுச் செய்தால் கசப்பே தெரியாது.

SP.VR. SUBBAIYA said...

////Blogger Uma said...
என் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் நீசம், செவ், சந் மற்றும் கேது. இவற்றில் இரண்டு நீச்சபங்கம் அடைந்து தப்பித்துவிட்டன. கேது தசையில் அம்மாவை விட்டுப் பிரித்தது. நீச்ச சந்திரனுடன், ராகு சேர்க்கை, கேது பார்வை எல்லாம் சேர்ந்து கும்மியடித்தன. கேது இருக்கும் வீட்டிற்கு அதிபதி நாலில் நான்கு பரல்களுடன் இருப்பதால் நீசம் என எடுத்துக்கொள்ள முடியாது என நினைக்கிறேன். மிகவும் வீக்காக இருப்பது செவ் மூன்று பரல்களுடன். இருப்பது கேந்திரத்தில். இருப்பினும் காய்கறிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது பாகற்காய்தான். வெல்லம் போட்டு செய்வது திவசத்திற்கு மட்டும்தான். மற்ற நாட்களில் மேலே இருக்கும் தோலைச் சீவிவிட்டு வெங்காயம், தக்காளி, மசாலா போட்டுச் செய்தால் கசப்பே தெரியாது.////

பாகற்காய் சிப்ஸ் செய்து சாப்பிட்டுபாருங்கள். ரிங், ரிங்காக வெட்டிக்கொண்டு, உப்பு + மஞ்சள் தூள் கலவையில் தோய்தெடுத்து, சற்று காயவைத்து, கலவை சார்ந்தவுடன், வாழைக்காய் சிப்ஸ் செய்வதைப்போல எண்ணெயில் வறுத்து எடுத்துவிடுங்கள். கசப்பு தெரியாது சூப்பராக இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...
This comment has been removed by the author.
Uma said...

பாகற்காய் சிப்ஸ் செய்து சாப்பிட்டுபாருங்கள். ரிங், ரிங்காக வெட்டிக்கொண்டு, உப்பு + மஞ்சள் தூள் கலவையில் தோய்தெடுத்து, சற்று காயவைத்து, கலவை சார்ந்தவுடன், வாழைக்காய் சிப்ஸ் செய்வதைப்போல எண்ணெயில் வறுத்து எடுத்துவிடுங்கள்.//

படிக்கும்போதே சாப்பிடும் ஆசையைத் தூண்டுகிறது, நிச்சயம் செய்கிறேன்!!!!

Uma said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் ஒப்பீடு அருமை சார் ! பகிர்வுக்கு நன்றி !

SP.VR. SUBBAIYA said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
தங்களின் ஒப்பீடு அருமை சார் ! பகிர்வுக்கு நன்றி !////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!