மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.7.12

கவிதைச் சோலை: தாசி இருந்த வீட்டில் குடியிருந்தால் என்ன ஆகும்?

கவிதைச் சோலை: தாசி இருந்த வீட்டில் குடியிருந்தால் என்ன ஆகும்?

நட்பு

நட்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கவியரசர் கண்ணதாசன் ’நச்’ சென்று சொல்லியுள்ளார். படித்து மகிழுங்கள்!

தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்
     தான்போய்க் குடியி ருந்தால்
தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா?
     சம்சாரி என்றறி யுமா?
நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்
     நீசரென் றேயழைப் பார்;
நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்
     நெருங்குமுன் அறிய வேண்டும்!
காசுபெரி தல்லநல் நண்பர் பெரி தாமென்று
     கருத்தினில் இருத்து வாயே!
கனிவுடைய சிறுகூடற் பட்டியில் வதிகின்ற
     கன்னிமலை யரசி துணையே!
               - கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------------------
27.7.2012

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2012

இன்று 30ஆவது ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் லண்டன் மாநகரில் துவங்குகிறது. விளையாட்டுப் போட்டிகள் அமைதியாக நடைபெற்று முழுமையடைய நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். இறைவனையும் பிரார்த்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23 comments:

ஸ்ரீராம். said...

'சேரிடம் அறிந்து சேர்' என்ற பழமொழியும், 'உன் நண்பர்களைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' எனும் சொல்லும் நினைவுக்கு வரவைக்கும் கவியரசரின் பாடல். நல்லதொரு பகிர்வு.

லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்து முடிய எங்கள் பிரார்த்தனைகளும்.

ஜி ஆலாசியம் said...

''உன் நண்பனைச் சொல்
நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்'' என்பர்...

நட்பு என்பது ''நல்பூ'' -வாக மலர்ந்தால் வாழ்வும் மணந்து சிறக்கும்.
நட்புக்கும் கற்புண்டு என்பதால் அது ஆத்ம தொடர்பானதாக இருக்கவேண்டும்.

எல்லாவற்றிற்கும் முன் கவியரசு மிக அழகாகச் சொல்கிறார்....

''நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்
நெருங்கு முன்அறியவேண்டும்!''

ஆய்ந்து தேர்ந்து கொள் என்று எச்சரிக்கையும் விடுகிறார்.

அருமை... அருமை... அருமை...

பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

Gnanam Sekar said...

நட்பு பற்றி கவிஞர் கூற்று முற்றிலும் சரியே . கலை வணக்கம் அய்யா .

Bhuvaneshwar said...

காலை வணக்கம், ஐயா.
மிகநல்ல பதிவு.
நன்றி.
-----
அன்புடன்
புவனேஷ்

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
உள்ளேன் ஜயா
நன்றி

arul said...

arumayana olymbic pugaipadathirku nandri

Tax Clinic said...

///நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும் நீசரென் றேயழைப் பார்;//

மனதை தொட்ட வரிகள்..

ananth said...

சேரிடம் அறிந்து சேர் (ஆத்திசூடி 51), கூடா நட்பு கேடாய் முடியும், இந்த கருத்துகளை வலியுருத்தும் இந்த கவிதை நன்று.

எனக்கு எதிரிகள் இல்லை, நண்பர்களும் இல்லை என்பதுதான் நிலைமை.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஸ்ரீராம். said...
'சேரிடம் அறிந்து சேர்' என்ற பழமொழியும், 'உன் நண்பர்களைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' எனும் சொல்லும் நினைவுக்கு வரவைக்கும் கவியரசரின் பாடல். நல்லதொரு பகிர்வு.
லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்து முடிய எங்கள் பிரார்த்தனைகளும்.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஜி ஆலாசியம் said...
''உன் நண்பனைச் சொல்
நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்'' என்பர்...
நட்பு என்பது ''நல்பூ'' -வாக மலர்ந்தால் வாழ்வும் மணந்து சிறக்கும்.
நட்புக்கும் கற்புண்டு என்பதால் அது ஆத்ம தொடர்பானதாக இருக்கவேண்டும்.
எல்லாவற்றிற்கும் முன் கவியரசு மிக அழகாகச் சொல்கிறார்....
''நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்
நெருங்கு முன்அறியவேண்டும்!''
ஆய்ந்து தேர்ந்து கொள் என்று எச்சரிக்கையும் விடுகிறார்.
அருமை... அருமை... அருமை...
பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!////

நிறைவான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Gnanam Sekar said...
நட்பு பற்றி கவிஞர் கூற்று முற்றிலும் சரியே . கலை வணக்கம் அய்யா .////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Bhuvaneshwar said...
காலை வணக்கம், ஐயா.
மிகநல்ல பதிவு. நன்றி.
அன்புடன்
புவனேஷ்///////

நல்லது. நன்றி புவனேஷ்வர்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
உள்ளேன் ஜயா
நன்றி/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
arumayana olymbic pugaipadathirku nandri////

நல்லது. நன்றி அருள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Tax Clinic said...
///நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும் நீசரென் றேயழைப் பார்;//
மனதை தொட்ட வரிகள்../////

நல்லது. நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
சேரிடம் அறிந்து சேர் (ஆத்திசூடி 51), கூடா நட்பு கேடாய் முடியும், இந்த கருத்துகளை வலியுருத்தும் இந்த கவிதை நன்று.
எனக்கு எதிரிகள் இல்லை, நண்பர்களும் இல்லை என்பதுதான் நிலைமை./////

உண்மையைச் சொல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger இராஜராஜேஸ்வரி said...
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்//////

நல்லது. நன்றி சகோதரி!

Thanjavooraan said...

கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்குக் கேட்க வேண்டுமா? நமது முன்னோர்கள் பல இலக்கியங்கள் வாயிலாகச் சொல்லிச் சென்றிருக்கிற கருத்துக்களைப் பிழிந்தெடுத்து 'நச்'சென்று நாலே வரிகளில் சொல்லும் ஆற்றல் பெற்றவர் அவர். ஒரு முறை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அறிஞர் அ.ச.ஞானசம்பந்தம் முதுகலை வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் ரா.ராகவையங்கார் வகுப்புக்கு வர காலதாமதம் ஆனபோது, அ.ச.ஞா. பாரதியார் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். "நின்னைச் சரணடைந்தேன்" முதலான பாடல்கள். வகுப்புக்கு வந்த ஆசிரியர் உள்ளே பாட்டுக் குரல் கேட்டு வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்துவிட்டு பின்னர் அ.ச.ஞாவிடம் நீ பாடிய பாடல்கள் யாருடையவை என்றார். பாரதியார் என்றதும், அடடே! அவன் இப்படியெல்லாம் பாடியிருக்கிறானா? அவன் ஏதோ நாட்டுப் பாடல் பாடுபவன் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன் என்று பாராட்டிவிட்டு, அன்று மாலையே அ.ச.ஞா.வை துணைவேந்தர் சீனிவாச சாஸ்திரியாரின் இல்லத்துக்கு வரவழைத்துப் பாடச் சொல்லி கேட்டு கண்ணீர் விட்டனராம். ஆழ்வார் பாடல்களை எப்படிப் பிழிந்து தந்திருக்கிறான் பாரதி என்று பாராட்டினராம். அப்படிப்பட்ட பாராட்டுதல்களை கவியரசர் கண்ணதாசனுக்கும் அளிக்கலாம். 'தாசி இருந்த வீட்டில் ஒரு குடும்பப் பெண் குடியேறினால்' விவரம் தெரியாமல் இரவில் வாயில் கதவைத் தட்டத்தான் செய்வார்கள். 'சேரிடம் தெரிந்து சேர்' என்பதை நிரூபிக்கும் வரிகள். அருமை. ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்துத் தரும் ஆசிரியர் ஐயா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவியரசரின் பிறந்த நாளை தமிழகம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அப்போதுதான் அந்த கவிஞன் மீண்டும் இந்த மண்ணில் வந்து பிறப்பான்.

Thanjavooraan said...

லண்டன் ஒலிம்பிக்ஸ் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற இறைவனை வேண்டுவோம். நிச்சயம் செய்வோம். அதோடு இன்னொரு வேண்டுதலையும் வைக்கலாமே! நம் பாரதத் திருநாடு கணிசமான பதக்கங்களைப் பெற்று வரவும் வேண்டுதல் செய்வோம்.

Thanjavooraan said...

"கூடா நட்பு கேடாய் முடியும்" என்பதெல்லாம் பட்டபின்பு ஞானி என்பதை நிரூபிக்கிறது. எதிலும் மிதமாகச் செயல்பட்டால், வஞ்சனையின்றி பழகினால், முடிந்தால் நன்மை செய், இல்லையேல் சும்மா இரு என்றிருந்தால் எந்தத் தீங்கும் இல்லை.

manikandaprakash said...

sirantha kavithai..

manikandaprakash said...

sirantha kavithai..thanks....