உங்களுக்கு நன்றி என்னும் சொல் பல மொழிகளில் எழுதப்பெற்றுள்ளது! |
Astrology - Popcorn Post பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதிமூன்று
மொழி என்பது நம் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்துள்ளது. பேசுவதாகட்டும், படிப்பதாகட்டும் அல்லது எழுதுவதாகட்டும் சிலருக்கு
மட்டுமே மொழியில் ஆளுமை இருக்கும். சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் அந்தத் திறமை இருக்கும்.
முதலில் நம் தாய்மொழி நமக்கு வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து உலக அளவில் அதிகம் பேசப்படும் அல்லது அதிகம் பேர்களுக்குத் தெரிந்த ஆங்கிலமும் வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து கூடுதலாக இன்னும் ஒரு மொழி தெரிந்திருந்தால், அவர்களால் சிறப்பாகச் செயல்படமுடியும். உதாரணத்திற்கு வட இந்திய மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் இந்தி மொழியும் தெரிந்திருந்தால், அவர்களால் பிற மாநிலங்களுக்கும் சென்று பணியாற்ற முடியும்.
மொழியின் மேன்மை நாம் அடுத்த மாநிலங்களுக்குச் சென்று தங்கும்போதோ அல்லது அங்கே பயணிக்கும் போதே தெரியவரும்!
ஒருவர் பன்மொழிகளில் திறமை பெற்று விளங்க ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்?
அதை இன்று பார்ப்போம்!
----------------------------------
1. குரு பகவான் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் ஒன்பதாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும், ஜாதகனுக்குப் பன்மொழித் திறமை இருக்கும்.
2. வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது இருந்தாலும் ஜாதகனுக்கு மொழிகள் வசப்படும்.
3. இரண்டாம் வீட்டுக்காரன், தன்னுடைய வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும் ஜாதகனுக்குப் பன்மொழித்திறமை இருக்கும்
மலேசியாவில் இருக்கும் தமிழர்களுக்கு மலேயா மொழியில் பேசத் தெரியும். அதுபோல இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கும். மும்பை, தில்லி போன்ற நகரகங்களில் இருக்கும் தமிழர்களுக்கு இந்தி மொழி தெரிந்திருக்கும். ஆனால் பிறருடன் பேசுவதற்கு மட்டுமே தெரிந்த நிலை என்பது, அடிப்படை நிலைதான். அந்த மொழிகளில் படிப்பதற்கும், தவறின்றி எழுதுவதற்கும் திறமை இருக்கும் நிலையில்தான் அந்த மொழி அவர்களுக்கு வசப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள முடியும்.
ஆகவே ஒருவருக்குப் பன்மொழிகளில் பேசும் திறமை இருக்கலாம். எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது என்பதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே உங்களுக்கு எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது. ஜாதகப்படி அது கிடைத்துள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா? என்று ஒரு கவிஞர் அசத்தலாக பல்லவியைத் துவக்கினார். இன்னொரு கவிஞர் பெண்ணின் பார்வை ஒருகோடி அது பேசிடும் வார்த்தை பலகோடி என்று எழுதினார். பெண்ணின் கண்கள் பேசும் மொழிக்கெல்லாம் கணக்குக் கிடையாது. ஜாதகமும் கிடையாது:-)))))
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------- பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதிமூன்று

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
மேடைப் பேச்சு, எழுத்தாற்றல் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் ஆண்டவன் அருளால் கிடைத்தது.இரண்டாம் அதிபதி தன் வீட்டிலேயே அமர்ந்தார். அதுவே மொழியாற்றலுக்குக் காரணம் போலும். கூடவே புத்திகாரகன் புதனும். ஆனால் 7,8க்கு அதிபனான சனீஸ்வராரும் இரண்டில் அமர்ந்தார். அதனால் நான் பேசுவதையும்,எழுதுவதையும் புரிந்து கொள்பவர்கள் குறைவு. 'நுணலும் தன் வாயால் கெடும்'வகையறா நான். வாக்கில் சனி. சோதிடத்தில் அபரம்(தீயவை) சொன்னால் உடனே பலிக்கும்.'கரி நாக்கு கரி நாக்கு' என்று எல்லோரும் தூற்றுவார்கள். இதனை உணர்ந்ததால் என்னை நானே மிகுந்த முயற்சிக்குப் பின்னர் மாற்றிக் கொண்டு வாழ்த்துக்களையும், நல்ல சொற்களையுமே சொல்லப் பழகிவிட்டேன். இது எனக்கு 45 வயதுக்குப் பின்னர்தான் கைகூடியது.
ReplyDeleteநல்ல பதிவு ஐயா. நன்றிகள் பல.
பன்மொழித் திறனைப் பற்றிய பதிவுக்கு நன்றிகள்...
ReplyDeleteநான் அந்த மூன்றாவது பிரிவில் வருகிறேன்....
திறன் இல்லைஎன்றாலும்...
தெற்காசிய மொழிகளைப் பற்றிய சிறிய பயிற்சியும் (சமாளிக்கும் அளவிற்கு)
குறிப்பாக சீன மொழியில் (மேண்டரின்) கொஞ்சம் அதிகம் மற்றவைகளை ஒப்பிடுகையில்....
எனினும் இது போன்ற அமைப்பு சாதகம் என்றால் தீவிரமாகக் கற்றுக் கொள்ளலாம் போலும்...
பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!
"பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?" எனும் வரி என்னுடைய பழைய நினைவுகளைத் தூண்டியது. ஏ.பி.நாகராஜன் "பெண்ணரசி" எனும் பெயரில் ஒரு படம் எடுத்தார். அதில் அவர்தான் கதாநாயகன். அப்போது சிலர் அரசி என்றாலே பெண்தானே, பின்பு ஏன் "பெண்ணரசி" எனப் பெயர்? என்றனர். அதற்கு கவி.கா.மு.ஷெரீப் சொன்னார், அரசி என்பவள் அரசனின் மனைவி. பெண்ணரசி என்றால் நாட்டை ஆளும் பெண் என்பது என்றார். போகட்டும், உங்கள் இன்றைய பதிவுக்கு வருகிறேன். நாம் பன்மொழி பயில்வது அவசியம்; அதிலும் தாய்மொழியில் அதிகம் ஈடுபாடு காட்டுவது நன்று. மெட்றிக் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் 'ரைம்ஸ்' சொல்லித் தருகிறார்கள். அங்கு தமிழில் 'மழலைப் பாடல்களை'ச் சொல்லித் தருவது நன்றாக இருக்கும். நம் நாட்டுக்குப் பொருத்தமில்லாத பல ஆங்கிலப் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் நல்ல பல கருத்துள்ள மழலைப் பாடல்கள் உண்டு. தமிழ் பல்கலைக் கழகம் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறது. அவற்றைச் சிறிது சிறிதாக என்னுடைய வலைப்பூவில் வெளியிடத் தொடங்கியிருக்கிறேன். மழலைகளுக்குச் சொல்லித் தர அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
ReplyDeletehttp:/www.bharathipayilagam.blogspot.com.
இனிய காலை வணக்கம் ஐயா !
ReplyDeleteஅந்நிய மொழித் திறமையில் ராகுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லையா ?
///குருபகவான் ஒன்பதாம் இடத்தை தன் பார்வையில் வைத்திருந்தாலும்///
ReplyDelete////இரண்டாம் வீட்டுக்காரன் தன் வீட்டை தன் பார்வையில் வைத்திருதாலும் பன் மொழி திறமை இருக்கும்////
எனக்கு இந்த இரு அமைப்புமே இருக்கிறது. எனக்கு தமிழ், ஹிந்தி,ஆங்கிலம்,மலாய் இவை நான்கும் சரளமாக தெரியும். அத்துடன் கொஞ்சம் சைனீஸ் தெரியும்
ஆங்கிலம் படிப்பதாலும், வேலையில் இருப்பதாலும் ஓரளவுக்கு அனைவருக்கும் வந்துவிடுகிறது. இன்றைய தேதியில் தாய் மொழியும் ,ஆங்கிலமும் இன்றியமையாததாகிவிடுகிறது ஒவ்வொருவருக்கும் .
இன்றைய வீடுகளில் குழைந்தைகளுக்கு ஆரம்பமே மம்மி, டாடி ,ஒன்,டூ த்ரீ லன்ச்,டின்னெர், என்று தான் ஆங்கில ஆத்திசூடி ஆரம்பமாகிறது,இன்னும் சில இடங்களில் ஆங்கிலம் பேசும் அளவுக்கு தாய்மொழி பேசுவதில்லை.
பதிவுக்கு நன்றிகள் அய்யா.
காலை வணக்கம் ஐயா,
ReplyDeleteநல்ல பாடம்.
ஓர ஐயம்: புதனின் பங்கு இதில் குறிப்பிடாதது ஏனோ?
have a great week ahead!
-----
நன்றிகளுடன்,
புவனேஷ்
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteநல்ல ஒரு பாப்கார்ன் பதிவு
நன்றி
ஆகா.. அற்புதம்..
ReplyDeleteஎனக்கு வாத்தியார் சொன்ன முதலாம், 3ம் அமைப்பு இருக்கிறது. தமிழ், மலாய், ஆங்கிலம் மூன்று மொழியும் தெரியும். அடுத்து சமஸ்கிருதம் கற்க எண்ணியுள்ளேன்.
ReplyDeleteஇது பாப்கார்ன் பதிவு. எல்லா விதிமுறைகளையும் சொல்ல இயலாது. முக்கியமானவற்றை மட்டும் வாத்தியார் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஒன்றை வெறுமனே கற்றுக் கொள்வது மட்டும் என்றால் புதனுடைய அனுகிரகம் போதும். கற்றதைத் தன் வாழ்க்கைக்கு பயன் தரும் விதத்தில் அமைத்துக் கொள்வது, பிறருக்கு கற்பிப்பது இவற்றிற்கு வேறு கிரகங்களின் அனுகிரகம் அவசியம்.
பிற மொழிகள் வழக்கத்தில் உள்ள இடங்களில் வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் அல்லவா?
ReplyDeleteஉதாரணமாக மலேசியாவில்/ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி பேசும் வெளி நாட்டில் வளரும் தமிழர்கள் - மூன்று மொழிகள் வந்து விடும்.
இன்னொரு விஷயம் - ஆங்கிலப்பிரதானமான + ஐரோப்பிய நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு "நான் பார்த்த வரையில்" தாய்மொழிப்பற்று இருப்பதில்லை. ஒரேயடியாக ஆங்கிலம்/European languages சார்ந்து வளர்கிறார்கள்.
அவர்களது கல்வி முறை அப்படி. ஆங்கிலம்/ஐரோப்பிய மொழிகள் தவிர வேறு மொழிகளை கற்று தருவதில்லை, பெற்றோரும் சிரத்தை எடுப்பதில்லை (- அவர்களுக்கே எவ்வளவு தெரியும்?) ஆனால் மற்ற நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு - சீன, மலேசியா, சிங்கப்பூர், சீனா இத்யாதி - அம்மொழிகளோடு சேர்த்து தமிழும்/அவரவர் தாய்மொழியும் தெரிகிறது.
தமிழகத்திலேயே கூட "முக்கூடல் பகுதி"களில் - ஹோசூர் போல - கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகம் சந்திக்கும் இடங்களில் வளரும் என் போன்ற பிள்ளைகளுக்கு இம்மூன்று மொழிகளுமே by default வந்து விடும். சொல்லவே தேவை இல்லை, ஆங்கிலமும் வரும்.
நான் கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் பேசுவேன் ஆனால் படிக்க வராது.
வடமொழி தெரிந்ததால் இந்தி சரளமாக படிப்பேன் ஆனால் அவ்வளவாக புரியாது (சில வேறுபாடுகள் உண்டு எழுத்துகளில், எளிதில் பிடிபட்டு விடும்)
தமிழ், பள்ளி சேருமுன்பே அம்மா கற்று தந்தது.
சரி ஏன் இவ்வளவு பேச்சு? நமக்கு மேற்கூறிய எந்த அமைப்புமே இல்லை.
குரு + புதன் இரண்டில். அவ்வளவு தான்.
இன்னும் கொஞ்சம் நல்ல அமைப்பாக நீங்கள் சொல்லுவது போல அமைந்து இருந்தால் பன்மொழிப்புலவராக இருந்து இருப்பேனோ என்னவோ. இப்போதைக்கு ஆங்கிலமும் தமிழும் தான்.
+++++
நன்றி, வணக்கம்!
_
பிரியங்களுடன்
புவனேஷ்
முன்பு நமது வகுப்பறை தோழர்
ReplyDeleteலால்குடியார் வழங்கிய ஐ வில் கில் யூ (வெளிநாட்டில் வசிக்கும் அவர் தம் அன்பு பெயரன் பற்றிய) பதிவு தான் நினைவில் வருகிறது
நன்று .. நன்று..
எத்தனை மொழிகள் தெரிகிறதோ அவர்களை அத்தனை மனிதர்களுக்கு சமம் என்று சொல்லுவார்கள்..
ReplyDeleteவியக்க வைக்கின்றார் தோழர் புவனேஷ்..
தமிழ்
ஆங்கிலம்
இந்தி
சமஸ்கிருதம்
தெலுங்கு
கன்னடம்
மலையாளம்
அன்பையும் சேர்த்து
எட்டு மொழிகள் அறிந்த
அவருக்கு நல்வணக்கங்கள்..
வகுப்பறை சக மாணவர் அய்யரின் கனிவான பாராட்டுக்கு எனது நன்றிகள்.
ReplyDelete//ஒன்றை வெறுமனே கற்றுக் கொள்வது மட்டும் என்றால் புதனுடைய அனுகிரகம் போதும். கற்றதைத் தன் வாழ்க்கைக்கு பயன் தரும் விதத்தில் அமைத்துக் கொள்வது, பிறருக்கு கற்பிப்பது இவற்றிற்கு வேறு கிரகங்களின் அனுகிரகம் அவசியம்.//
ReplyDeleteTrue. Agreed :)
பகிர்வுக்கு நன்றி சார் !
ReplyDelete//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமேடைப் பேச்சு, எழுத்தாற்றல் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் ஆண்டவன் அருளால் கிடைத்தது.இரண்டாம் அதிபதி தன் வீட்டிலேயே அமர்ந்தார். அதுவே மொழியாற்றலுக்குக் காரணம் போலும். கூடவே புத்திகாரகன் புதனும். ஆனால் 7,8க்கு அதிபனான சனீஸ்வராரும் இரண்டில் அமர்ந்தார். அதனால் நான் பேசுவதையும்,எழுதுவதையும் புரிந்து கொள்பவர்கள் குறைவு. 'நுணலும் தன் வாயால் கெடும்'வகையறா நான். வாக்கில் சனி. சோதிடத்தில் அபரம்(தீயவை) சொன்னால் உடனே பலிக்கும்.'கரி நாக்கு கரி நாக்கு' என்று எல்லோரும் தூற்றுவார்கள். இதனை உணர்ந்ததால் என்னை நானே மிகுந்த முயற்சிக்குப் பின்னர் மாற்றிக் கொண்டு வாழ்த்துக்களையும், நல்ல சொற்களையுமே சொல்லப் பழகிவிட்டேன். இது எனக்கு 45 வயதுக்குப் பின்னர்தான் கைகூடியது.
நல்ல பதிவு ஐயா. நன்றிகள் பல./////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteபன்மொழித் திறனைப் பற்றிய பதிவுக்கு நன்றிகள்...
நான் அந்த மூன்றாவது பிரிவில் வருகிறேன்....
திறன் இல்லைஎன்றாலும்...
தெற்காசிய மொழிகளைப் பற்றிய சிறிய பயிற்சியும் (சமாளிக்கும் அளவிற்கு)
குறிப்பாக சீன மொழியில் (மேண்டரின்) கொஞ்சம் அதிகம் மற்றவைகளை ஒப்பிடுகையில்....
எனினும் இது போன்ற அமைப்பு சாதகம் என்றால் தீவிரமாகக் கற்றுக் கொள்ளலாம் போலும்...
பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////
ஆமாம் நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் ஆக்கபூர்வமான மொழிபெயர்ப்புக் கதைகள், கட்டுரைகளை எழுதலாம்!
/////Blogger Thanjavooraan said...
ReplyDelete"பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?" எனும் வரி என்னுடைய பழைய நினைவுகளைத் தூண்டியது. ஏ.பி.நாகராஜன் "பெண்ணரசி" எனும் பெயரில் ஒரு படம் எடுத்தார். அதில் அவர்தான் கதாநாயகன். அப்போது சிலர் அரசி என்றாலே பெண்தானே, பின்பு ஏன் "பெண்ணரசி" எனப் பெயர்? என்றனர். அதற்கு கவி.கா.மு.ஷெரீப் சொன்னார், அரசி என்பவள் அரசனின் மனைவி. பெண்ணரசி என்றால் நாட்டை ஆளும் பெண் என்பது என்றார். போகட்டும், உங்கள் இன்றைய பதிவுக்கு வருகிறேன். நாம் பன்மொழி பயில்வது அவசியம்; அதிலும் தாய்மொழியில் அதிகம் ஈடுபாடு காட்டுவது நன்று. மெட்றிக் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் 'ரைம்ஸ்' சொல்லித் தருகிறார்கள். அங்கு தமிழில் 'மழலைப் பாடல்களை'ச் சொல்லித் தருவது நன்றாக இருக்கும். நம் நாட்டுக்குப் பொருத்தமில்லாத பல ஆங்கிலப் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் நல்ல பல கருத்துள்ள மழலைப் பாடல்கள் உண்டு. தமிழ் பல்கலைக் கழகம் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறது. அவற்றைச் சிறிது சிறிதாக என்னுடைய வலைப்பூவில் வெளியிடத் தொடங்கியிருக்கிறேன். மழலைகளுக்குச் சொல்லித் தர அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. http:/www.bharathipayilagam.blogspot.com.////
உங்களின் பின்னூட்டத்திற்கும், மேலதிகத் தகவலுக்கும் நன்றி கோபாலன் சார்!
/////Blogger ஸ்ரவாணி said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் ஐயா !
அந்நிய மொழித் திறமையில் ராகுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லையா ?//////
மொழித் திறமைக்குக் கேதுவைத்தான் சேர்த்துக்கொண்டுள்ளார்கள். ராகுவை சேர்த்துக்கொள்ளவில்லை சகோதரி!
/////Blogger thanusu said...
ReplyDelete///குருபகவான் ஒன்பதாம் இடத்தை தன் பார்வையில் வைத்திருந்தாலும்///
////இரண்டாம் வீட்டுக்காரன் தன் வீட்டை தன் பார்வையில் வைத்திருதாலும் பன் மொழி திறமை இருக்கும்////
எனக்கு இந்த இரு அமைப்புமே இருக்கிறது. எனக்கு தமிழ், ஹிந்தி,ஆங்கிலம்,மலாய் இவை நான்கும் சரளமாக தெரியும். அத்துடன் கொஞ்சம் சைனீஸ் தெரியும்
ஆங்கிலம் படிப்பதாலும், வேலையில் இருப்பதாலும் ஓரளவுக்கு அனைவருக்கும் வந்துவிடுகிறது. இன்றைய தேதியில் தாய் மொழியும் ,ஆங்கிலமும் இன்றியமையாததாகிவிடுகிறது ஒவ்வொருவருக்கும் .
இன்றைய வீடுகளில் குழைந்தைகளுக்கு ஆரம்பமே மம்மி, டாடி ,ஒன்,டூ த்ரீ லன்ச்,டின்னெர், என்று தான் ஆங்கில ஆத்திசூடி ஆரம்பமாகிறது,இன்னும் சில இடங்களில் ஆங்கிலம் பேசும் அளவுக்கு தாய்மொழி பேசுவதில்லை.
பதிவுக்கு நன்றிகள் அய்யா./////
நான்கு மொழிகளில் பாண்டியத்யம் உள்ளது என்பதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது அம்மொழிகளில் உள்ள இலக்கியங்களைப் படியுங்கள் தனுசு!
//////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா,
நல்ல பாடம்.
ஓர ஐயம்: புதனின் பங்கு இதில் குறிப்பிடாதது ஏனோ?
have a great week ahead!
-----
நன்றிகளுடன்,
புவனேஷ்//////
நான் எப்படி புதனைச் சேர்த்துக்கொள்ள முடியும். மேம்பட்ட அறிவிற்கு (keen intelligence) குருவே முக்கியம் என்று புராதன நூல்கள் குறிப்பிடுகின்றன!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நல்ல ஒரு பாப்கார்ன் பதிவு
நன்றி/////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Tax Clinic said...
ReplyDeleteஆகா.. அற்புதம்..////
நல்லது. நன்றி விசுவநாதன்!
/////Blogger ananth said...
ReplyDeleteஎனக்கு வாத்தியார் சொன்ன முதலாம், 3ம் அமைப்பு இருக்கிறது. தமிழ், மலாய், ஆங்கிலம் மூன்று மொழியும் தெரியும். அடுத்து சமஸ்கிருதம் கற்க எண்ணியுள்ளேன்.
இது பாப்கார்ன் பதிவு. எல்லா விதிமுறைகளையும் சொல்ல இயலாது. முக்கியமானவற்றை மட்டும் வாத்தியார் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஒன்றை வெறுமனே கற்றுக் கொள்வது மட்டும் என்றால் புதனுடைய அனுகிரகம் போதும். கற்றதைத் தன் வாழ்க்கைக்கு பயன் தரும் விதத்தில் அமைத்துக் கொள்வது, பிறருக்கு கற்பிப்பது இவற்றிற்கு வேறு கிரகங்களின் அனுகிரகம் அவசியம்./////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteபிற மொழிகள் வழக்கத்தில் உள்ள இடங்களில் வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் அல்லவா?
உதாரணமாக மலேசியாவில்/ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி பேசும் வெளி நாட்டில் வளரும் தமிழர்கள் - மூன்று மொழிகள் வந்து விடும். இன்னொரு விஷயம் - ஆங்கிலப்பிரதானமான + ஐரோப்பிய நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு "நான் பார்த்த வரையில்" தாய்மொழிப்பற்று இருப்பதில்லை. ஒரேயடியாக ஆங்கிலம்/European languages சார்ந்து வளர்கிறார்கள்.
அவர்களது கல்வி முறை அப்படி. ஆங்கிலம்/ஐரோப்பிய மொழிகள் தவிர வேறு மொழிகளை கற்று தருவதில்லை, பெற்றோரும் சிரத்தை எடுப்பதில்லை (- அவர்களுக்கே எவ்வளவு தெரியும்?) ஆனால் மற்ற நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு - சீன, மலேசியா, சிங்கப்பூர், சீனா இத்யாதி - அம்மொழிகளோடு சேர்த்து தமிழும்/அவரவர் தாய்மொழியும் தெரிகிறது.
தமிழகத்திலேயே கூட "முக்கூடல் பகுதி"களில் - ஹோசூர் போல - கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகம் சந்திக்கும் இடங்களில் வளரும் என் போன்ற பிள்ளைகளுக்கு இம்மூன்று மொழிகளுமே by default வந்து விடும். சொல்லவே தேவை இல்லை, ஆங்கிலமும் வரும்.
நான் கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் பேசுவேன் ஆனால் படிக்க வராது.
வடமொழி தெரிந்ததால் இந்தி சரளமாக படிப்பேன் ஆனால் அவ்வளவாக புரியாது (சில வேறுபாடுகள் உண்டு எழுத்துகளில், எளிதில் பிடிபட்டு விடும்)
தமிழ், பள்ளி சேருமுன்பே அம்மா கற்று தந்தது.
சரி ஏன் இவ்வளவு பேச்சு? நமக்கு மேற்கூறிய எந்த அமைப்புமே இல்லை.
குரு + புதன் இரண்டில். அவ்வளவு தான்.
இன்னும் கொஞ்சம் நல்ல அமைப்பாக நீங்கள் சொல்லுவது போல அமைந்து இருந்தால் பன்மொழிப்புலவராக இருந்து இருப்பேனோ என்னவோ. இப்போதைக்கு ஆங்கிலமும் தமிழும் தான்.
+++++
நன்றி, வணக்கம்! _
பிரியங்களுடன்
புவனேஷ்//////
சரி, பேசத் தெரிந்த மொழிகளை வைத்து வெளுத்துக்கட்டுங்கள். நன்றி!
Blogger அய்யர் said...
ReplyDeleteமுன்பு நமது வகுப்பறை தோழர்
லால்குடியார் வழங்கிய ஐ வில் கில் யூ (வெளிநாட்டில் வசிக்கும் அவர் தம் அன்பு பெயரன் பற்றிய) பதிவு தான் நினைவில் வருகிறது
நன்று .. நன்று../////
நல்லது. நன்றி விசுவநாதன்!
////Blogger அய்யர் said...
ReplyDeleteஎத்தனை மொழிகள் தெரிகிறதோ அவர்களை அத்தனை மனிதர்களுக்கு சமம் என்று சொல்லுவார்கள்..
வியக்க வைக்கின்றார் தோழர் புவனேஷ்..
தமிழ்
ஆங்கிலம்
இந்தி
சமஸ்கிருதம்
தெலுங்கு
கன்னடம்
மலையாளம்
அன்பையும் சேர்த்து
எட்டு மொழிகள் அறிந்த
அவருக்கு நல்வணக்கங்கள்..//////
அன்பும் ஒரு மொழிதான். அதைப்போல சில சமயங்களில் மெளனமும் ஒரு மொழிதான்!
//////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteவகுப்பறை சக மாணவர் அய்யரின் கனிவான பாராட்டுக்கு எனது நன்றிகள்./////
பாராட்டிற்கு நன்றி தெரிவிப்பது நல்லதுதான்! பாராட்டுக்கள் இலவச டானிக்!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDelete//ஒன்றை வெறுமனே கற்றுக் கொள்வது மட்டும் என்றால் புதனுடைய அனுகிரகம் போதும். கற்றதைத் தன் வாழ்க்கைக்கு பயன் தரும் விதத்தில் அமைத்துக் கொள்வது, பிறருக்கு கற்பிப்பது இவற்றிற்கு வேறு கிரகங்களின் அனுகிரகம் அவசியம்.//
True. Agreed :)/////
ஆமாம். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை!
/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார் !//////
நல்லது. நன்றி நண்பரே!
Good afternoon sir,
ReplyDeletepresent sir.