மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.7.12

Astrology பித்தான பித்தல்லவோ, பெண்ணின் மேல் பித்தல்லவோ!


 Astrology பித்தான பித்தல்லவோ, பெண்ணின் மேல் பித்தல்லவோ!

பெண் பித்தருக்கான உதாரண ஜாதகம்
  பயிற்சிப் பாடம்

பெண்களின் மேல் ஈர்ப்பு இல்லாத மனிதனே இருக்க முடியாது. ஆனால் அது பித்தாக மாறினால் என்ன ஆகும்? வாழ்க்கையே மோசமாகி விடும். அதனால்தான் பொன்னாசை, மண்ணாசை & பெண்ணாசை கூடாது என்றார்கள். ஆசை இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் பித்தாகும் அளவிற்கு அந்த ஆசை முற்றிவிடக்கூடாது. அதுதான் முக்கியம்

அதற்கான ஒரு உதாரண ஜாதகத்தை இன்று பார்ப்போம்:


மீன லக்கினம். லக்கினாதிபதி குரு மூன்றில் பகை வீட்டில். குடும்ப, தன, மற்றும் வாக்கு ஸ்தானத்தில் கேது. மன ஸ்தானத்தில் சனி. ஏழாம் வீடில் நான்கு கிரகங்கள் சூரியன், புதன், சந்திரன் மற்றும் செவ்வாய். எட்டில் சுக்கிரன் & ராகு. காலசர்ப்ப தோஷ ஜாதகம். செப்டம்பர் 1976ல் பிறந்தவர்.

ஜாதகர் பொறியாளர். 4ஆம் அதிபதி புதன் உச்சம் பெற்று லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருப்பதால் நன்றாகப் படிக்கவைத்தான். கர்மகாரகன் சனிக்குக் திரிகோணம் கிடைத்ததால் ஜாதகருக்கு நல்ல வேலையும் கிடைத்தது.

அதீத காம இச்சைகளாலும், தீய பழக்கங்களாலும் ஜாதகர் கெட்டலைந்தார். குடி, பெண்கள் சகவாசம் என்று எல்லா தீய பழக்கங்களும் கைவரப்பெற்றவர்.

The native of the horoscope is an immoral person. நடத்தை கெட்டவர். வாளிப்பான பெண்களைப் பார்த்தால் ஜொள் விடுவார். சாய்க்க ஆசைப்படுவார். பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப் பட மாட்டார்.

சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து எட்டில் இருப்பதைப் பாருங்கள். ஒரு மனிதனை womanizer ஆக்குவதற்கு அது ஒன்றே போதும்.

அதிகம் படித்த, அழகான மனைவி வாய்த்தாள். ஏழாம் வீட்டில் இருக்கும் சந்திரன் அதைச் செய்து கொடுத்தது.ஐந்தாம் வீட்டு அதிபதி சந்திரன், ஏழாம் வீட்டு அதிபதி புதன், இரண்டாம் வீட்டு அதிபதி செவ்வாய் ஆகிய மூவரும் கூட்டணி ஒப்பந்தத்தில் இருப்பதால், அவருக்கு ஒரு நல்ல, மற்றும் அழகான மனைவியையும், நல்லதொரு குடும்ப வாழ்க்கையையும் அமைத்துக்கொடுத்தார்கள்.

அவர்கள் கொடுத்தால் போதுமா? எட்டாம் இடத்து ராகுவும் சுக்கிரனும் கூட்டாக அதற்கு எதிராக வேலை செய்தன. ஒரு நாள் குடும்ப வாழ்க்கை கெட்டுப்போய் ஊற்றிக் கொண்டு விட்டது. ஏழில் அமர்ந்த ஆறாம் வீட்டுக்காரனும் (வில்லன்) அதற்கு ஒத்து ஊதி முடித்து வைத்தான்.

மனைவி பக்தி மிகுந்தவள். மென்மையான பெண்மணி. முதலில் அவனுடைய குடிப்பழக்கத்தைப் பொறுத்துக் கொண்டவள். மற்ற பெண் சகவாசங்களைப் பொறுத்துக்கொள்ளவில்லை. தன் கணவனுக்கு, அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்று தெரிய வந்தவுடன் கொதித்து விட்டாள்.

அப்புறம்?

அப்புறம் என்ன? எல்லாம் முடிந்துவிட்டது. உறவுகள் சிக்கலாகி, அவள் விவாகர்த்து வாங்கிக்கொண்டு போய்விட்டாள்.

அஸ்தமன புதன் பெரிதாக நன்மைகளைச் செய்யவில்லை. ஏழாம் வீட்டில் டென்ட் அடித்துக் குடியிருக்கும் செவ்வாய், ஜாதகனுக்கு அதீதமான துணிச்சலைக் கொடுத்தது.அதைக் குறித்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

38 comments:

  1. காலை வணக்கம் ஆசிரியரே.
    நல்ல பாடம்.
    நன்றிகள்.
    இந்த நாள் இனியதாக அமைய இறையருளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. இப்படிப்பட்ட ஆட்களால் அதே பாலினத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு தான் தொல்லை. அதுவும் தெரிந்த ஆளாக போய் விட்டால் வம்பு. அக்கா தங்கை இருந்தால் நம் வீட்டுக்குள் சேர்க்கவே கூடாது என்ற மாதிரி ஆட்கள்.

    சிலரை தெரியும். இந்த மாதிரி. அப்படி இந்த பெண்களிடம் (/ஆண்களிடம்) என்ன தான் கண்டார்களோ தெரியவில்லை. லோ லோ என அலைகிறார்கள். This post is like a continuation of yesterday's post.

    பதிவுக்கு தொடர்புடையது என்ற ஒரே காரணத்தினால் மட்டும், எனது வெண்பாவினை இங்கு பகிர்கிறேன்.

    கண்மணி யென்றவளும் கலவிநு கர்ந்துன்னைப்
    பொன்மணி யென்னப் புகழ்ந்தவளும் – மன்னவனே
    மண்ணிற்க் கடைவழிக்கு வாராள் காண் மன்னுபுகழ்
    கண்ணுத லோனே துணை;

    மண்ணினா லானதிந்தப் பெண்ணுடம்பு நீயதனை
    நண்ணி யழியாதே நன்னெஞ்சே – மண்ணுலகில்
    பண்ணியபல் பாதகங்கள் போதுமொரு பாதியுமை
    தண்ணடியே தஞ்சம் இனி.

    Thank you, and may all here have a wonderful day.
    -------
    Best Regards,
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  3. நல்ல பாடம் ஐயா...இரண்டாம் இடத்தில் உள்ள கேதுவையும், ஏழாமிடத்துக்கு ஆறாமிடமான கும்பத்தின் அதிபதி சனியின் பார்வை இரண்டாமிடத்துக்கு இருப்பதையும் கணக்கில் எடுக்கலாமா?

    ReplyDelete
  4. சுக்ரன் செவ்வய் சேர்க்கையும் ஆகாது, சுக்ரன் ராகுவும் ஆகாது. மீதி இரண்டு பேர் கேது, சனி சேர்க்கையிருந்தாலும் கொஞ்சம் ஆளு அப்படி இப்படிதானோ ஐயா?

    அப்போ தனித்த‌ சுக்ரம் உச்சமாக, ஆட்சி, நட்பு வீட்டில் இருக்கும் ஜாதகரே கற்புடன் இருப்பார்களோ?

    சுவாரஸ்யமான பதிவு. நன்றி ஐயா!

    ReplyDelete
  5. பாவம் அந்த பெண் அது தான் வாங்கிவந்த வரம் என்றாலும்!
    அவருக்கும் ஏழாம் இடத்தைப் பார்த்து தான் செய்திருப்பார்கள்
    இருந்தும் இது போன்ற தீராத மோகம் கொண்ட பெண்பித்தனால் தான்
    அதன் தாக்கம் இருந்திருக்கிறது எனும் போதும் மிகவும் கொடுமையே.

    சகோதரர் புவனேஸ்வரரின் 'பா' நன்றாக இருக்கிறது...
    இது அந்த ஜாதகருக்கு ஒருவேளை(??!!) பட்டு ஞானம் வந்த பிறகு அல்லது ஆடி ஓய்ந்தப் பிறகு பயன்படலாம்.
    (ஒருவேளை! ஏனென்றால் சிலர் எழுபது எண்பதானாலும் இப்படியே காமுற்றே அலைவதை கண்டும் கேள்வியுற்றும் இருக்கிறேன்).

    சுக்கிர ராகுவின் கூட்டுச் சூத்திரம் அறியப் பெற்றேன்.
    பொது விதியானாலும் போதிய கவனம் தேவை என்பதையும் அறிந்தேன்.
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நல்ல பிட்ச், சொங்கியான எதிரணி பந்து வீச்சு, அமைந்து பலமான பேட்டிங் உள்ள அணி ரன்களை குவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    பச்சையான புல் வளர்ந்த பிட்ச், அற்புதமான எதிரணி பந்து வீச்சு + overcast skies, அமைந்து அவ்வளவாக திறமை இல்லாத பேட்டிங் உள்ள அணியானால் ரன் குவிக்க தடுமாறும்.

    ரன் குவிக்க நல்ல அம்சங்கள் நிறைந்தாலும் திமிரெடுத்து என்னை ஒருத்தனும் அவுட் ஆக்க முடியாது என்று ஆஃப் ஸ்டம்பிற்கு அரை மைல் தூரம் போகும் பந்தை நோக்கி மட்டையை வீசி ஆடினால் நல்ல அணியும் ஊற்றிக்கொள்ளும்.

    கஷ்டமான சூழ்நிலைகளிலும் விடா முயற்சியுடன் ரிஸ்க் எடுக்காமல் ஆடி நிதானமாக ஆடி முயலும் அணி, நல்ல ரன் குவிக்கும்.

    அது போல, நல்ல ஜாதகம் அமைந்தாலும் இந்த ஜன்மாவில் சத்காரியமும் இறை வழிபாடும் இருந்தால் வண்டி நன்கு பாதுகாப்பாக ஓடும். தலை கால் புரியாமல் ஆடினால் கொஞ்சம் காலம் கழித்து விளங்காது.

    கெட்ட ஜாதகம் அமைந்தாலும் இறை வழிபாடு, நல் ஒழுக்கம் இருந்தால் இறைவன் கட்டாயம் கைகொடுப்பார்.

    கற்பு தவறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை தான் ஜாதகம் காட்டும். தவறுவார் என்று அறுதியிட்டு சொல்லாது. ஒழுக்கமானவனாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று தான் சொல்லுமே தவிர இவன் ஒழுக்க சீலன் என அறுதி இட முடியாது. அப்படி சொலி விட்டால் இந்த பிறப்பில் நல்லன செய்தால் உய்யலாம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போகுமே.

    தவற வாய்ப்பு இருப்பவன் ஒழுக்கமாக இருப்பது தானே சிறப்பு?

    ReplyDelete
  8. ஐயா!
    எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். என் அப்பா ஒரு ஜோதிடர். என்னோட சிறு வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்.
    ஜோதிட கற்றுகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்கள் வாங்கி படித்திருந்தாலும் இது போன்ற இம் மாதிரியான ஒழுக்ககேடான ஜாத‌கத்தை கண்டறியும் சூச்சுமம் தான் அவசியம் தேவை. இம் மாதிரியான பதிவுகள் என்னைப் போல் உள்ள தந்தைகளுக்கு மிகமிக அவசியம்.

    குறிப்பு: ஒரு ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டு அதன் பலன்கள்(கடந்த காலத்தில்) அவருக்கு பொருந்துகிறதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

    நன்றி
    அன்புடன்
    மணி

    ReplyDelete
  9. arumayana pathivu ayya arumayana ponmoli adipattu irukkum enakku aaruthalai thanthathu

    ReplyDelete
  10. ஐயா...சுக்கிரன் & ராகு கூட்டணி இருந்தால் வேறு இனம் அல்லது மதத்தினருடன் திருமணம் ஆவதற்கு சாத்தியம் உள்ளதா? ஏனென்றால் என்னிடம் உள்ள ஜாதகங்களில் இரண்டில் அப்படி சேர்க்கை உள்ளது. இரண்டும் பெண் ஜாதகர்கள். ஒன்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட மதக் கலப்பு திருமணம். மற்றொன்று ஒன்று பெரியோர்களின் அனுமதியுடன் நடந்த காதல் ஜாதிக் கலப்பு திருமணம்.
    சுக்கிரன் & ராகு கூட்டணிதான் இதற்கு காரணமா?

    ReplyDelete
  11. ராகு சுக்கிரன் சேர்ந்த இந்த அமைப்பு காதல் கலப்புத்திருமணத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புள்ளது. எந்த மாதிரியான பலன் என்பது மற்ற கிரகங்களின் நிலையும் சேர்ந்துதான் முடிவு செய்வதாக இருக்கும். ஒன்றை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அதாவது ஜோதிடம் என்பது கடினமானது என்பதை சொல்ல வருகிறேன்.

    இந்த வரிசையில் அடுத்து காதல் மன்னருக்கான ஜாதகம் இடம் பெருமா?

    ReplyDelete
  12. கடந்த நாட்களில் தொடர்ந்த
    கறுப்பு இன்னமும் தொடர்கிறதோ..

    "முழுசா பாட்டில் சொல்ல
    முடியாது என்னாலே"

    என்று சொன்ன இந்த பாடலே
    எமது எண்ணத்தில் வந்தமையால் பகிர்ந்து கொள்கிறோம்


    ஆவதும் பெண்ணாலே
    மனுசன் அழிவதும் பெண்ணாலே

    வாழ்வதும் பெண்ணாலே
    அவனே தாழ்வதும் பெண்ணாலே

    தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு
    வெந்ததும் பெண்ணாலே

    அன்று விளையாட்டு சிறுபிள்ளை
    வீர சிவாஜியானதும் பெண்ணாலே

    நில் என்று சொன்னதும்
    சுள் என்று சூரியன்
    நின்றது பெண்ணாலே

    சின்ன தாலிக்கயிற்றுக்கு
    பாசக்கயிறு அன்று
    தோற்றதும் பெண்ணாலே

    இந்தியா தங்க பதக்கம்
    ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே

    மனம் கெட்டு தசரதன்
    செத்து செத்து விட்டு
    உயிர் விட்டதும் பெண்ணாலே

    அட பத்து தலையிலும்
    பித்தம் கொண்டு மன்னன்
    கெட்டதும் பெண்ணாலே

    பாலைவனம் எங்கும் மூளை கெட்டு
    மஜ்னு போனதும் பெண்ணாலே

    அந்த ரோமாபுரி அன்று
    ரத்தகுளம் என்று
    ஆனதும் பெண்ணாலே

    இந்தக்கால கட்சிகளும்
    இரண்டாச்சு பெண்ணாலே

    பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று
    கொடி நட்டதும் பெண்ணாலே

    நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு
    பயல்களும் கெட்டதும் பெண்ணாலே

    கொள்ளை கொள்ளும்
    ஒரு வெள்ளை தாஜ்மஹால்
    வந்ததும் பெண்ணாலே

    பாண்டிமன்னன் அரன்மனை
    மண்ணோடு மண்ணாகி
    போனதும் பெண்ணாலே

    நல்லதும் கெட்டதும் இங்கே
    நடப்பதெல்லாம் பெண்ணாலே

    ReplyDelete
  13. சுக்கிரன் & ராகு கூட்டணிதான் இதற்கு காரணமா?//

    ராகு ஏழில் இருந்தால் வேற்று சாதி மதத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம்.

    ReplyDelete
  14. இந்த ஜாதகத்திற்கும் என் ஜாதகத்துக்கும் லக்னம் மட்டுமே வேறு இடத்தில் உள்ளது.. நான் பிறந்த தேதியில், வேறு நேரத்தில் பிறந்திருப்பார் போலிருக்கிறது.. :)

    ReplyDelete
  15. குருவிற்கு வணக்கம்,
    நல்ல பயிற்ச்சி பாடம்
    மிகவும் நன்றாக உள்ளது
    நன்றி

    ReplyDelete
  16. /////Blogger Bhuvaneshwar said...
    காலை வணக்கம் ஆசிரியரே.
    நல்ல பாடம்.
    நன்றிகள்.
    இந்த நாள் இனியதாக அமைய இறையருளை வேண்டுகிறேன்./////

    பயனுள்ளதாகவும் இருக்கட்டும்! இனிமையைவிட பயன்பாடு முக்கியம் இல்லையா?

    ReplyDelete
  17. Blogger Bhuvaneshwar said...
    இப்படிப்பட்ட ஆட்களால் அதே பாலினத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு தான் தொல்லை. அதுவும் தெரிந்த ஆளாக போய் விட்டால் வம்பு.

    அக்கா தங்கை இருந்தால் நம் வீட்டுக்குள் சேர்க்கவே கூடாது என்ற மாதிரி ஆட்கள்.
    சிலரை தெரியும். இந்த மாதிரி. அப்படி இந்த பெண்களிடம் (/ஆண்களிடம்) என்ன தான் கண்டார்களோ தெரியவில்லை. லோ லோ என

    அலைகிறார்கள். This post is like a continuation of yesterday's post.
    பதிவுக்கு தொடர்புடையது என்ற ஒரே காரணத்தினால் மட்டும், எனது வெண்பாவினை இங்கு பகிர்கிறேன்.
    கண்மணி யென்றவளும் கலவிநு கர்ந்துன்னைப்
    பொன்மணி யென்னப் புகழ்ந்தவளும் – மன்னவனே
    மண்ணிற்க் கடைவழிக்கு வாராள் காண் மன்னுபுகழ்
    கண்ணுத லோனே துணை;

    மண்ணினா லானதிந்தப் பெண்ணுடம்பு நீயதனை
    நண்ணி யழியாதே நன்னெஞ்சே – மண்ணுலகில்
    பண்ணியபல் பாதகங்கள் போதுமொரு பாதியுமை
    தண்ணடியே தஞ்சம் இனி.

    Thank you, and may all here have a wonderful day.
    -------
    Best Regards,
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com//////

    பாடலுக்கு ஒரு ஓ போட்டுவிடுகிறோம் புவனேஷ்வர்! அத்துடன் நன்றி!

    ReplyDelete
  18. /////Blogger Balamurugan Jaganathan said...
    Good lesson Sir.../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger Arul said...
    நல்ல பாடம் ஐயா...இரண்டாம் இடத்தில் உள்ள கேதுவையும், ஏழாமிடத்துக்கு ஆறாமிடமான கும்பத்தின் அதிபதி சனியின் பார்வை
    இரண்டாமிடத்துக்கு இருப்பதையும் கணக்கில் எடுக்கலாமா?/////

    ஆகா எடுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  20. /////Blogger kmr.krishnan said...
    சுக்ரன் செவ்வய் சேர்க்கையும் ஆகாது, சுக்ரன் ராகுவும் ஆகாது. மீதி இரண்டு பேர் கேது, சனி சேர்க்கையிருந்தாலும் கொஞ்சம் ஆளு

    அப்படி இப்படிதானோ ஐயா?
    அப்போ தனித்த‌ சுக்ரம் உச்சமாக, ஆட்சி, நட்பு வீட்டில் இருக்கும் ஜாதகரே கற்புடன் இருப்பார்களோ?
    சுவாரஸ்யமான பதிவு. நன்றி ஐயா!//////

    ஆமாம். எல்லாம் கிரகக்கோளாறுகள்தான். 75% மாட்டிக்கொண்டுவிடுவார்கள். விதி வலியது!

    ReplyDelete
  21. //////Blogger ஜி ஆலாசியம் said...
    பாவம் அந்த பெண் அது தான் வாங்கிவந்த வரம் என்றாலும்!
    அவருக்கும் ஏழாம் இடத்தைப் பார்த்து தான் செய்திருப்பார்கள்
    இருந்தும் இது போன்ற தீராத மோகம் கொண்ட பெண்பித்தனால் தான்
    அதன் தாக்கம் இருந்திருக்கிறது எனும் போதும் மிகவும் கொடுமையே.
    சகோதரர் புவனேஸ்வரரின் 'பா' நன்றாக இருக்கிறது...
    இது அந்த ஜாதகருக்கு ஒருவேளை(??!!) பட்டு ஞானம் வந்த பிறகு அல்லது ஆடி ஓய்ந்தப் பிறகு பயன்படலாம்.
    (ஒருவேளை! ஏனென்றால் சிலர் எழுபது எண்பதானாலும் இப்படியே காமுற்றே அலைவதை கண்டும் கேள்வியுற்றும் இருக்கிறேன்).
    சுக்கிர ராகுவின் கூட்டுச் சூத்திரம் அறியப் பெற்றேன்.
    பொது விதியானாலும் போதிய கவனம் தேவை என்பதையும் அறிந்தேன்.
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete
  22. /////Blogger Bhuvaneshwar said...
    நல்ல பிட்ச், சொங்கியான எதிரணி பந்து வீச்சு, அமைந்து பலமான பேட்டிங் உள்ள அணி ரன்களை குவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
    பச்சையான புல் வளர்ந்த பிட்ச், அற்புதமான எதிரணி பந்து வீச்சு + overcast skies, அமைந்து அவ்வளவாக திறமை இல்லாத பேட்டிங் உள்ள அணியானால் ரன் குவிக்க தடுமாறும்.
    ரன் குவிக்க நல்ல அம்சங்கள் நிறைந்தாலும் திமிரெடுத்து என்னை ஒருத்தனும் அவுட் ஆக்க முடியாது என்று ஆஃப் ஸ்டம்பிற்கு அரை
    மைல் தூரம் போகும் பந்தை நோக்கி மட்டையை வீசி ஆடினால் நல்ல அணியும் ஊற்றிக்கொள்ளும்.
    கஷ்டமான சூழ்நிலைகளிலும் விடா முயற்சியுடன் ரிஸ்க் எடுக்காமல் ஆடி நிதானமாக ஆடி முயலும் அணி, நல்ல ரன் குவிக்கும்.
    அது போல, நல்ல ஜாதகம் அமைந்தாலும் இந்த ஜன்மாவில் சத்காரியமும் இறை வழிபாடும் இருந்தால் வண்டி நன்கு பாதுகாப்பாக ஓடும். தலை கால் புரியாமல் ஆடினால் கொஞ்சம் காலம் கழித்து விளங்காது.
    கெட்ட ஜாதகம் அமைந்தாலும் இறை வழிபாடு, நல் ஒழுக்கம் இருந்தால் இறைவன் கட்டாயம் கைகொடுப்பார்.
    கற்பு தவறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை தான் ஜாதகம் காட்டும். தவறுவார் என்று அறுதியிட்டு சொல்லாது. ஒழுக்கமானவனாகஇருக்க வாய்ப்பு உள்ளது என்று தான் சொல்லுமே தவிர இவன் ஒழுக்க சீலன் என அறுதி இட முடியாது. அப்படி சொலி விட்டால் இந்த
    பிறப்பில் நல்லன செய்தால் உய்யலாம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போகுமே.
    தவற வாய்ப்பு இருப்பவன் ஒழுக்கமாக இருப்பது தானே சிறப்பு?/////

    ஆமாம்.ஆமாம்.ஆமாம்!

    ReplyDelete
  23. ////Blogger mani said...
    ஐயா!
    எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். என் அப்பா ஒரு ஜோதிடர். என்னோட சிறு வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்.
    ஜோதிட கற்றுகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்கள் வாங்கி படித்திருந்தாலும் இது போன்ற இம் மாதிரியான
    ஒழுக்ககேடான ஜாத‌கத்தை கண்டறியும் சூச்சுமம் தான் அவசியம் தேவை. இம் மாதிரியான பதிவுகள் என்னைப் போல் உள்ள தந்தைகளுக்கு மிகமிக அவசியம்.
    குறிப்பு: ஒரு ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டு அதன் பலன்கள்(கடந்த காலத்தில்) அவருக்கு பொருந்துகிறதா? என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
    நன்றிஅன்புடன்
    மணி////

    அதெல்லாம் பொருந்தாமல் போகாது. ஜாதகர் மறைத்தால் மட்டும் சில மேட்டர்கள் தெரியாது.

    ReplyDelete
  24. /////Blogger arul said...
    arumayana pathivu ayya arumayana ponmoli adipattu irukkum enakku aaruthalai thanthathu/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. /////Blogger Arul said...
    ஐயா...சுக்கிரன் & ராகு கூட்டணி இருந்தால் வேறு இனம் அல்லது மதத்தினருடன் திருமணம் ஆவதற்கு சாத்தியம் உள்ளதா?
    ஏனென்றால் என்னிடம் உள்ள ஜாதகங்களில் இரண்டில் அப்படி சேர்க்கை உள்ளது. இரண்டும் பெண் ஜாதகர்கள். ஒன்று பெரியோர்களால்
    நிச்சயிக்கப்பட்ட மதக் கலப்பு திருமணம். மற்றொன்று ஒன்று பெரியோர்களின் அனுமதியுடன் நடந்த காதல் ஜாதிக் கலப்பு திருமணம்.
    சுக்கிரன் & ராகு கூட்டணிதான் இதற்கு காரணமா?////

    ஆமாம். அதுதான் முக்கிய காரணமாக இருக்கும். மற்ற அமைப்புக்களும் ஜாதகனைத் தள்ளிக்கொண்டு போகும்

    ReplyDelete
  26. /////Blogger ananth said...
    ராகு சுக்கிரன் சேர்ந்த இந்த அமைப்பு காதல் கலப்புத்திருமணத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புள்ளது. எந்த மாதிரியான பலன்
    என்பது மற்ற கிரகங்களின் நிலையும் சேர்ந்துதான் முடிவு செய்வதாக இருக்கும். ஒன்றை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது.
    அதாவது ஜோதிடம் என்பது கடினமானது என்பதை சொல்ல வருகிறேன்.
    இந்த வரிசையில் அடுத்து காதல் மன்னருக்கான ஜாதகம் இடம் பெறுமா?/////

    அவர் பிறந்த நேரமும், ஊரும் தெரிய வேண்டும் ஆனந்த்! அவர் பிறந்ததேதி நவம்பர் 17’ வருடம் 1920 என்று விக்கி காமாட்சி அக்கா சொல்கிறார். ஊரை புதுக்கோட்டை மாவட்டம் என்றுதான் சொல்கிறார்

    ReplyDelete
  27. Blogger அய்யர் said...
    கடந்த நாட்களில் தொடர்ந்த
    கறுப்பு இன்னமும் தொடர்கிறதோ..
    "முழுசா பாட்டில் சொல்ல
    முடியாது என்னாலே"
    என்று சொன்ன இந்த பாடலே
    எமது எண்ணத்தில் வந்தமையால் பகிர்ந்து கொள்கிறோம்
    ஆவதும் பெண்ணாலே
    மனுசன் அழிவதும் பெண்ணாலே
    வாழ்வதும் பெண்ணாலே
    அவனே தாழ்வதும் பெண்ணாலே
    தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு
    வெந்ததும் பெண்ணாலே
    அன்று விளையாட்டு சிறுபிள்ளை
    வீர சிவாஜியானதும் பெண்ணாலே
    நில் என்று சொன்னதும்
    சுள் என்று சூரியன்
    நின்றது பெண்ணாலே
    சின்ன தாலிக்கயிற்றுக்கு
    பாசக்கயிறு அன்று
    தோற்றதும் பெண்ணாலே
    இந்தியா தங்க பதக்கம்
    ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
    மனம் கெட்டு தசரதன்
    செத்து செத்து விட்டு
    உயிர் விட்டதும் பெண்ணாலே
    அட பத்து தலையிலும்
    பித்தம் கொண்டு மன்னன்
    கெட்டதும் பெண்ணாலே
    பாலைவனம் எங்கும் மூளை கெட்டு
    மஜ்னு போனதும் பெண்ணாலே
    அந்த ரோமாபுரி அன்று
    ரத்தகுளம் என்று
    ஆனதும் பெண்ணாலே
    இந்தக்கால கட்சிகளும்
    இரண்டாச்சு பெண்ணாலே
    பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று
    கொடி நட்டதும் பெண்ணாலே
    நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு
    பயல்களும் கெட்டதும் பெண்ணாலே
    கொள்ளை கொள்ளும்
    ஒரு வெள்ளை தாஜ்மஹால்
    வந்ததும் பெண்ணாலே
    பாண்டிமன்னன் அரண்மனை
    மண்ணோடு மண்ணாகி
    போனதும் பெண்ணாலே
    நல்லதும் கெட்டதும் இங்கே
    நடப்பதெல்லாம் பெண்ணாலே/////

    கறுப்பு எப்படித் தொடரும்? பழநிஅப்பன் கூடவே இருக்கிறாரே. அத்துடன் அவர் கையில் தண்டாயுதமும் இருக்கிறதே!

    ReplyDelete
  28. ///Blogger Jagannath said...
    சுக்கிரன் & ராகு கூட்டணிதான் இதற்கு காரணமா?//
    ராகு ஏழில் இருந்தால் வேற்று சாதி மதத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம்.////

    இல்லை. ஏழாம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்கு பனிரெண்டில் இருந்தால் கலப்புத்திருமணம் நடக்கும் வாய்ப்பு. இதுபொது விதி!

    ReplyDelete
  29. ////Blogger sasikrr said...
    suppose 2 il guru irunthu 8 m vittai parthirunthal?/////

    6ஆம் வீடு கடுமையான பாபகர்த்தரி யோகத்தில் சிக்கியிருக்கிறது. குரு பார்வையும் பயன் பட்டிருக்காது!

    ReplyDelete
  30. /////Blogger ACE !! said...
    இந்த ஜாதகத்திற்கும் என் ஜாதகத்துக்கும் லக்னம் மட்டுமே வேறு இடத்தில் உள்ளது.. நான் பிறந்த தேதியில், வேறு நேரத்தில்
    பிறந்திருப்பார் போலிருக்கிறது.. :)////

    இருக்கலாம். நன்றி!

    ReplyDelete
  31. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    நல்ல பயிற்ச்சி பாடம்
    மிகவும் நன்றாக உள்ளது
    நன்றி////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. ///கறுப்பு எப்படித் தொடரும்? பழநிஅப்பன் கூடவே இருக்கிறாரே. ///

    கறுப்பு என்று சொல்ல வந்தது... இது

    1) படம் முழுதும் கறுப்பு இருப்பது
    2) ஜாதகரின் கறுப்பு வாழ்க்கையை காட்டியது
    3) கற்ப்பு பற்றிய தகவல் சென்ற வகுப்பில் என்று தொடர்வது

    என ஒரு சொல்லில் சில கூடுதல் தகவலையும் சேர்த்தது


    அய்யர் சொல்ல வந்தது சரிதானே
    அய்யா..

    ReplyDelete
  33. ///////Blogger அய்யர் said...
    ///கறுப்பு எப்படித் தொடரும்? பழநிஅப்பன் கூடவே இருக்கிறாரே. ///
    கறுப்பு என்று சொல்ல வந்தது... இது
    1) படம் முழுதும் கறுப்பு இருப்பது
    2) ஜாதகரின் கறுப்பு வாழ்க்கையை காட்டியது
    3) கற்ப்பு பற்றிய தகவல் சென்ற வகுப்பில் என்று தொடர்வது
    என ஒரு சொல்லில் சில கூடுதல் தகவலையும் சேர்த்தது
    அய்யர் சொல்ல வந்தது சரிதானே
    அய்யா..//////

    நான் நினைத்தது இது:
    கறுப்புக்கும் கறுப்பான சனீஷ்வரன்
    வாத்தியார் சொன்னதும் சரிதானே?

    ReplyDelete
  34. Dear sir,

    while calculating the character of a person

    we have to consider the bava also

    if the person lagna starts 25 degree and above . the general rules may differ .
    is it correct sir.

    ReplyDelete
  35. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  36. //////Blogger Chintoo said...
    Dear sir,
    while calculating the character of a person
    we have to consider the bava also
    if the person lagna starts 25 degree and above . the general rules may differ .
    is it correct sir.//////

    28 பாகைகளுக்குமேல் காலசந்திப்பில் பிறந்த ஜாதகர்களுக்கு மாறும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com