பின்னூட்டப் பெட்டி மட்டுமே சாட்டிங் (Chatting) களமல்ல!
அன்புள்ள நெஞ்சங்களே!
நம் வகுப்பறை மாணவக் கண்மணிகள் இரண்டு பேர்களிடமிருந்து இன்று எனக்கு வந்த மின்னஞ்சல்களையும், நமது வகுப்பறையின் நண்பரும், நம் மதிப்பிற்குரிய பெரியவருமான தஞ்சை திரு.வெ,கோபாலன் அவர்களின் மின்னஞ்சலையும் உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன். அவர்கள் மூவருடைய கருத்துக்களுக்கும் மதிப்புக்கொடுத்து, பின்னூட்டப் பெட்டியைத் திறந்து விடுகிறேன்.
பிரச்சினைக்குரியவர்கள் (மொத்தம் 4 பேர்கள்) தங்கள் தவறை உணர்ந்து, இனி பதிவிற்கு சம்பந்தமான விமர்சனங்களையே வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். பின்னூட்டத்தை Chatting களமாக மாற்றித் தங்கள் நண்பர்களைப் பாராட்டுவதற்கும், எதிரிகளைச் சாடுவதற்கும் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் நம்புகிறேன். எதையும் சுழல விட வேண்டாம். சுற்ற விட வேண்டாம். மறைமுகத் தாக்குதல் வேண்டாம்! நேர்மையாகச் செயல்படுங்கள்!
என் வேண்டுகோளையும் மீறி அவர்கள் பின்னூட்டமிட்டால், அவர்களுடைய பின்னூட்டங்கள் இரக்கமின்றி, தயவு தாட்சண்யமின்றி நீக்கப்படும். நீக்கப்படும் பின்னூட்டங்களுக்கான காரணத்தைச் சொல்லவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை! இதை அவர்கள் மனதில் கொள்வார்களாக!
என்றும் அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
1
Gopalan Venkataraman, தஞ்சாவூர்
privarsh@gmail.com
to me
மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா திரு சுப்பையா அவர்களுக்கு,
வணக்கம். சில காலமாக வகுப்பறையில் எனது கருத்துக்களை வெளியிடாமல் இருந்தேன். ஆனால் தினமும் ஒரு முறையாவது
'வகுப்பறை'யைத் திறந்து பார்க்காமல் இருந்ததில்லை. இப்போது வகுப்பறையின் கதவுகளும், பலகணிகளும் மூடப்பட்ட செய்தியறிந்து வருந்த மடைந்தேன். பலதரப்பட்ட மனிதர்கள், பலவகைக் கருத்துக்கள் அனைத்தும் சங்கமித்து வந்த அரியதொரு கூடமாக இருந்ததுவகுப்பறை. யார் 'த்ருஷ்டி' பட்டதோ, அதில் கலகம் நேர்ந்து விட்டது. கருத்துக்களை வெளியிடுவதும், பிறரது கருத்தை சில நேரங்களில்மறுப்பதும் சரிதான், ஆனால் அது எல்லை கடந்து போகும்போது தொல்லை தருகிறது. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடுவதோ, பிறரது கருத்துக்களுக்கு மறுப்பு மட்டுமில்லாமல் எதிர்ப்பும் காட்டுவதோ,மீறினால் மனக்கசப்பை சொல் வடிவில் வெளியிடு வதோ நல்ல ஆரோக்கியமான செயல் அல்ல. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நல்லதொரு ஆரோக்கியமான சூழ்நிலையில் வகுப்பறை யில் பங்கு பெற விருப்பத்தினை அனைவரும் தெரிவித்து, சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு, மீறினால் ஆசிரியரின் கத்திரியைப் பயன்படுத்தி, மீண்டும் 'வகுப்பறை'க்கு உயிரூட்டினால் மகிழ்ச்சியடைவேன்.
வகுப்பறையினால் நான் பயனடைந்தது உண்மை. அதுபோல பலரும் தங்கள் திறமை பளிச்சிட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது என் விருப்பம். பூசல்களுக்கு வகுப்பறை இடமல்ல. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை நீக்கி பள்ளி வகுப்பறையில் சீருடையணிவது போல ஒருமித்தகருத்துடை அணிந்து பங்கு பெறுங்கள் என்பது என் வேண்டுகோள். செவி சாய்ப்பார்களா? பொருத்திருந்து பார்க்கலாம்.
தங்கள் அன்புள்ள,
தஞ்சை வெ.கோபாலன்
----------------------------------------
2
Uma S, தில்லி
umas1234@gmail.com
to me
வணக்கம் ஐயா,
இன்று பின்னூட்டம் போடலாம் என்று வந்தால் இப்படி ஓர் அறிவிப்பு. அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் அறிவிப்புகளாக வெளியிட்டு வருகிறீர்கள், ஆனால் நீங்கள் சொல்லும் காரணங்கள்தான் எனக்கு ஏற்புடையதாக இல்லை.
இது உங்கள் வலைப்பூ என்ன வேண்டுமானாலும் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது. இருப்பினும் முதலில் ................ கட்டுரையால் வாரமலரை நிறுத்தினீர்கள், இப்போது என்ன காரணமோ பின்னூட்டப் பெட்டியையும் பூட்டிவிட்டீர்கள். நீங்கள் எழுதிய சுழல விடுவது என்பதிலிருந்து ............ அவர்களின் பங்களிப்பு இருக்கிறது என உணர்ந்தேன். அப்படி அவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை.
இருப்பினும் அதற்காக நீங்கள் இப்படிச் செய்வதால் பாதிக்கப்படுவது மற்றவர்கள்தான். குறிப்பிட்ட நாலைந்து பேரைத் தவிர மற்ற
அனைவரும் சர்ச்சைக்கு இடமின்றியே பின்னூட்டம் இடுகிறார்கள். உங்களின் இந்த முடிவு அவர்களையும் வருத்தமடையச் செய்யும். யார்
மூலமாகப் பிரச்சனையோ, அவர்களிடமே இனி இதுபோல் மின்னஞ்சலோ / பின்னூட்டமோ அனுப்பவேண்டாம் என்று சொல்லிவிடலாமே?
இருப்பினும் உங்களின் முடிவே இதில் இறுதியானது. எனது கருத்தாக மட்டுமே இதைச் சொல்கிறேன். இன்னொன்றும் கேட்க விரும்பினேன். வாரமலரை திரும்ப ஆரம்பிக்கும் எண்ணமிருக்கிறதா ஐயா?
நீங்கள் விரும்பினால் சர்ச்சைக்குரிய ................ அனுப்பிய கட்டுரையை எனக்கு அனுப்புங்கள், அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் எனப் படிக்க விரும்புகிறேன். அவரிடம் கேட்டிருந்தேன், ஆனால் அவர் அனுப்பவில்லை.
அன்புடன்,
உமா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
thanusu rasi
thanusurasi@gmail.com
to me
வணக்கம் அய்யா.
பின்னூட்டப்பெட்டியை பூட்டியது வருத்தமளிக்கிறது. முன்பு வாரமலரை நிறுத்ததுக்கு காரணம் பலரின் ஆக்கங்கள் அன்றைய தினம், அதனால் சிலரின் வருத்தங்கள் அதை நிறுத்தியது சரி . ஆனால் இப்போது உங்களின் ஆக்கம் மட்டும் வரும் போதும் பிரச்சினை அதனால் பின்னூட்டப்பெட்டி நிறுத்தப்படுகிறது, தெரியபடுத்துவதை அஞ்சலில் அனுப்புங்கள் என்றால், நாளை மின் அஞ்சலும் பிரச்சினை ஆகவே பதிவை நிறுத்துகிறேன் என்றால் என்ன ஆவது. எழுதுவதை நீங்களாக நிறுத்தினால் அது வேறு, இப்படி அடுத்தவருக்கு பயந்தது போல் ஓவ்வொன்றாக நிறுத்தினால் எப்படி?
தினமலர், தினகரன், என இல்லாமல் எத்தனை ஆயிரம் தளங்கள் உள்ளதோ அத்தனை தளங்களும் கருத்துக்களையும் கேட்கிறது. கருத்துகளில் பதிவு ஆவது அவரவரின் சொந்த கருத்து அதற்கு நாளிதழின் ஆசிரியரோ,தளமோ பொருப்பல்ல . அதைபோல் ஒரு அறிவிப்பை முகப்பில் வெளியிட்டால் போதுமானது.அதேபோல் அத்தனை கருத்துக்கும் நீங்கள் பதில் சொல்ல தேவையில்லை. அந்த வலைத்தளம் உங்களுடையது. உங்களின் கருத்தான ஆக்கத்தை அங்கு வெளியிடுகிறீர்கள்.
நீங்கள் உங்கள் கருத்தை பதிவு செய்யும் போது பார்க்க வந்த நான் பார்த்துவிட்டோ படித்துவிட்டோ போகிறேன்,எனக்கு தோன்றியதை
பின்னூட்டமாக அனுப்பினால் அது அந்த ஆக்கத்திற்கு ஒத்ததாக உங்கள் தளத்தின் கொள்கைக்கு ஒத்ததாக இருந்தால் அனுமதியுங்கள்,
எதிர் மறையாக இருந்தால் 'தனுசு உங்களின் கருத்தும் வாக்கியமும் இந்த தளத்திற்கு ஒவ்வாதது என் வலைப்பூவை விட்டு வெளியேறுங்கள்,
என்று பின்னூட்டத்திலேயே மறைமுகம் இல்லாமல் நேரடியாக சொல்லி வெளியேற்றுங்கள். தாங்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்.நேற்றைய முன் தினம் வந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடல்
"மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்"
இது தலைவரின் படப்பாடல், இன்னுமொரு தலைவரின் படத்தில் வரும் பாடல்
"அச்சம் என்பது மடமையாடா"
என்பதை தயை கூர்ந்து நினைவுறுத்துகிறேன் அய்யா.
அன்புடன்
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

மிக நல்ல அறிவிப்பு ஐயா!!. தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தமைக்கு மிக்க நன்றி. நான் எப்போதும் தங்கள் முடிவுக்குக் கட்டுப்படுபவள். ஆனால், பின்னூட்டப் பெட்டியை நீக்கும் அறிவிப்பு மிக மன வருத்தமடையச் செய்தது உண்மை. சக மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் பின்னூட்டப் பெட்டியை இணைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா!
ReplyDeleteசத்தியமாக.... கோபாலன் ஐயாவின் கருத்துக்களை அச்சு பிசகாது நான் சற்று முன் சத்தியமாக தட்டச்சு செய்து மின் அஞ்சலில் அனுப்ப இருந்தேன்.. ஆனால் எனது அலுவலக இணையத்தில் வந்த கோளாறால் அனுப்ப முடியாமல் போனது கண்டு வருத்தத்தோடு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது நான் கூற நினைத்த அதேக் கருத்தை அழகாக ஐயா அவர்கள் கூறியது உண்மையில் ஈஸ்வர அனுகிரகமே...
ஐயாவின் கருத்தே எனதும்... அதோடு இன்னொருக் கருத்தையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சில காலங்களாக அறிவோம் அப்படி இருக்க கருத்து வேறுபாடு வந்தாலும் தமது கருத்தை மிகவும் கடுமையாக விமர்சிக்க எண்ணும் போது சம்பந்தப் பட்ட இருவரும் நேரடியாக மின் அஞ்சலில் பேசிக் கொள்ளலாம் என்பதும்.
நாம் அலையா விருந்தாளியாக வாத்தியாரின் நடு வீட்டில் வந்தமர்ந்துக் கொண்டு அவரை அதிகாரம் செய்வதும் நியாயமாகாது என்பதையும் மனதில் கொண்டும். அவரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்காமல் நாம் அனைவரும் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் அன்புடன் பிடித்தக் கருத்தை வெறித்தனம் இல்லாமல் பண்போடு பகிர்ந்து கொள்வோம் அதே வேண்டாதவரிடம் வலுக்கட்டாயமாக திணிக்காமலும் இருப்போம் என்று எனது விருப்பத்தையும் உறுதியையும் கூறி வாத்தியார் அவர்களின் மறுபரிசீலனைக்கும் முடிவுக்கும் எனது நன்றியும் வணக்கமும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றிகள் ஐயா!
மிக்க நன்றிகள் அய்யா.
ReplyDeleteஒரே குடும்பத்தில் சண்டை சச்சரவு வருவது இயற்கை தானே, மீண்டும் இனைவதும் இயற்கைதானே. அப்படியே நாம் எடுத்துக்கொள்வோம்.
ஈசலும்
ஈக்களும் மோதி
இரும்புக்கோட்டை இடியாது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமிகவும் சந்தோஷம் அய்யா...நன்றி நன்றி நன்றி...
ReplyDeletethanks sir.
ReplyDeleteஅய்யா வேலை பளு காரணமாக வகுப்பறைக்கு சில நாட்கள் வரமுடியவில்லை...மன்னிக்கவும்...
ReplyDeleteபின்னூட்டப் பெட்டி மீண்டும் திறந்தது பற்றி மகிழ்ச்சி வரவேற்கிறேன்.
ReplyDeleteநான் மற்றவர் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து உண்டானால் இங்கே பதிவு செய்துதான் வந்திருக்கிறேன். ஆனால் மாற்றுக் கருத்து உள்ளவர்களுடைய பின்னூட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற தனி மின்னஞ்சல் ஐயாவுக்கு நான் அனுப்பியதே கிடையாது. இனியும் அனுப்பவும் மாட்டேன்.ஐயாவுடன் தனிப்பட்ட தொடர்பு எனக்கு முன்பும் இப்போதும் இல்லை.
ஆம். தனுசு சொல்வது போல இது ஒரு குடும்பம். எல்லோரும் விட்டுக் கொடுத்து மாற்றுக் கருத்துக்களையும் இனிய சொற்களால் சொல்லிக்கொண்டு
மகிழ்ச்சியுடன் இருப்போம்.
பிரச்சனைக்குரிய நபர்களில் நான் இல்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
படிக்கும் மாணவர்கள், ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க மட்டுமே உரிமை உண்டு. சக வாசகர்களை .... உரிமையில்லை! ஆதலால், முடிவு எடுப்பது ஆசிரியர் மட்டுமே!
ReplyDeleteவாத்தியார் ஐயாவின் முடிவினை மதிக்கிறேன்.
ReplyDeleteஅதே சமயம். பதிவுக்கு சம்பந்தம் உடையது என முழு மனசாட்சியுடன் நம்பி ஒரு மாணவர் பின்னூட்டம் இடும் போழ்து அஃது பிடிக்காத சக மாணவர்கள் ஒன்று சகிப்புத்தன்மையினை கைக்கொள்ள வேண்டும் அல்லது தங்கள் கண்ணியத்தினை காக்கும் விதம் சொல்லாட்சி செய்து நடந்து கொள்ள வேண்டும். இனி மாற்றுக்கருத்து உள்ளவர்களை சொல்லால் அடிப்பது நிற்கும் என்பது மகிழ்ச்சியானதும் வரவேற்கத்தக்கதும் ஆகும்.
என் சார்பில் நான் எப்போதும் சொல்லும் உறுதிமொழி: பதிவிற்கு சம்பந்தம் உள்ள பின்னூட்டத்தினை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தான் நான் இடுவது தான் வழக்கம். அது பற்றிய சர்ச்சைகளுக்கு நான் பொறுப்பாகவோ அவற்றில் கலந்து கொள்ளவோ இயலாது.
சம்பந்தப்பட்ட பின்னூட்டங்கள் யாருக்காவது பிடிக்கவில்லை எனில் தனிப்பட்ட மின்னஞ்சல் பண்ணலாமே? அதை விடுத்து வகுப்பறையில் தேவை அற்ற வார்த்தைகளை பயன்படுத்தி வேறொருவர் சர்ச்சையை கிளப்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
சம்பந்தப்பட்ட பிரச்சினையில் நான் ஒரு மறுமொழியும் கூறவில்லை என்பது காண்க.
இந்தப் பின்னூட்டமும்பதிவிற்கு சம்பந்தம் உடையதே. மனம் புண்பட்டு இதை இடுகிறேன்.
Enough said. No more have I, to say on this. The chapter is firmly closed from my side.
---
Best Regards,
Mr. (Dr.) Bhuvaneshwar D
இன்றைய பிரார்த்தனையின்
ReplyDeleteமுடிவாக
பின்னுட்ட பெட்டி மீண்டும் திறக்கப்பட்டது மெத்த மகிழ்ச்சி..
தும்மல் வரும் போது
தும்மி விடுவேண்டும்..
அது
அருகில் இருப்பவருக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்..
ஆரேக்கியமான கருத்துப் பறிமாற்றத்திற்கு அதுவே நல்லது..
தொடரட்டும் ....
தொடருகிறோம்...
அன்புள்ள வாத்தியாருக்கு:
ReplyDeleteஎனது பின்னூட்டங்கள் சர்ச்சையில் இது வரை தங்களுக்கு நேரடியாக மனவருத்தத்தினை ஏற்படுத்தி இருந்தால்/அசௌகரியம் தந்து இருந்தால் முழு மனதுடன் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் பிறர் பிழைகளிக்கு நான் மன்னிப்பு கேட்க இயலாது.
If my comments had directly caused the slightest inconvenience by their own nature, I offer my heartfelt apologies to the owner of this blog.
But under no circumstance shall I agree to be held responsible for a controversy created by some one else, the reason notwithstanding. Nor shall I offer an apology for a fault that was't mine.
My comments hereafter, shall only be my declaration of my attendance if present.
Thanks.
---
Best Regards,
Mr. (Dr.) Bhuvaneshwar D
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteGuru vanakkam,
ReplyDeleteMany thanks to Goplan Sir, Mrs.Uma and Thanusu for bringing this back to life. Ofcourse thanks to Guru for considering this.
Regards
Ramadu.
நன்றி அய்யா . வேகுசிலரின் பின்னூட்டங்கள் அறிவுப்பூர்வமாகவும் , மனதை கவருவதாகவும் உள்ளது.பின்னூட்ட பெட்டியை திறந்ததிற்கு நன்றி.
ReplyDeleteஅன்புள்ள வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம். வகுப்பரையின் மூத்த மாணவர்களின் வேண்டுகோள்களை ஏற்று பின்னூட்டபெட்டியை திறந்ததில் எனக்கு மிகமகிழ்ச்சி.நன்றிகள்.
ReplyDeleteநன்றி ஐயா!!!
ReplyDeleteஉங்கள் பதிவு தரும் தகவல்கள் பல என்றாலும் பின்னூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களின் பதில் தரும் தகவல்கள் அதிகம்.உங்கள் முடிவிற்கு நன்றி...ஐயா சொன்னதுபோல் இது *Chatting* தளம் அல்ல.தனக்கு தெரிந்த தகவல்களை அனேகம் பேர் தெரிந்து கொள்ள *யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வகுப்பறை* என்ற நோக்குடன் ஐயா இந்த வகுப்பறையை ஆரம்ம்பித்தார்கள்.கடந்த மூன்று வருடமாக நான் இதன் பலனை அனுபவித்து வருகிறேன்.நண்பர்களும் இதை உணர்ந்து பதிவுக்கு ஏற்புடைய பின்னூட்டங்களை மட்டும் அனுப்பினால் இந்த வகுப்பறையின் நோக்கம் நிறைவேறும். வகுப்பறை பிரச்சினை இன்றி தொடர நம் அனைவரின் ஒத்துழைப்பும் அவருக்கு அவசியம்..
மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா, வணக்கம். அடியேனின் வேண்டுகோளுக்கும் டெல்லி உமா, கவிஞர் தனுசு ஆகியோரின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து மீண்டும் பின்னூட்டங்களுக்கு இடமளிக்க ஒப்புக் கொண்டதற்கு மனமார்ந்த நன்றி. காரணம், வகுப்பறை ஜோசியப் பாடங்கள் மட்டுமல்லாமல் பல அரிய கருத்துக்களை, பல துறை சார்ந்த அன்பர்களின் அனுபவங்கள், விமர்சனங்கள், விளக்கங்கள் என்று வந்து குவிந்து கொண்டிருந்தன, அவை அனைத்தையும் ஒரே நாளில் இழப்பதை மனம் ஒப்பவில்லை. யாருடைய அஞ்சல் குழப்பத்துக்குக் காரணம் என்றெல்லாம் இப்போது ஆய்வு செய்யத் தேவையில்லை. இனி வருங்காலங்களில் அவரவர் துறை சார்ந்த பல அரிய கருத்துக்களையும், பிறர் சொல்லும் கருத்துக்களின் மீதான விமர்சனங்களை எல்லை மீறாமலும் எழுதி வரவேண்டுமென்பது என் வேண்டுகோள். ஒரே ஊரில் வாழ்ந்தால் ஒருசில நண்பர்கள்தான், இதுபோன்ற வலைத்தளங்கள் மூலம் எத்தனை நண்பர்கள் நமக்கு? என் பேத்தி சிங்கப்பூருக்குக் கல்வி பயிலச் சென்றாள். நான் உடனடியாகத் தொடர்பு கொண்டது அங்கு வசிக்கும் எனது "வகுப்பறை" நண்பரைத்தான். அவரும் அவர் குடும்பத்தாரும் இப்போது என் பேத்திக்கு உறுதுணையாக அங்கு இருந்து வருகின்றனர். இது எதனால் சாத்தியமானது என்பதை சிந்தித்துப் பார்க்கிறேன். வள்ளுவர் பதில் சொல்கிறார்: "முக நக நட்பது நட்பல்ல, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு" என்று. நெஞ்சங்கள் சங்கமிக்கும் நட்புக் கடல் நமது "வகுப்பறை"; அதில் மூழ்கி முத்தெடுப்போம். நன்றி வகுப்பறை நண்பர்களே. ஆசிரியர் ஐயாவுக்கு மீண்டும் நன்றி.
ReplyDeleteதிரு கோபாலன் அவர்களுக்கு எனது நன்றி. வாத்தியாருக்கு மிக மிக நன்றி. வகுப்பறையினால் நான் பயனடைந்தது உண்மை. முடிவை மறுபரிசீலனை செய்தமைக்கும் பின்னூட்டப் பெட்டியை திறந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி
ReplyDeleteதஞ்சாவூர் பெரியவரின் அனுபவம் போல் இன்று வகுப்பறையால் ஒரு நட்பு வட்டத்துடன் நேரடியான தொடர்பு ஏற்பட்டது.
ReplyDeleteநட்சத்திரக்கோவில் வரிசையில், ஐயா இடையாற்றுமங்கலம் கோவிலைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்த ஓர் ஓய்வு பெற்ற பெரியவர், நான் லால்குடியில் இருப்பதை வகுப்பறை மூலம் அறிந்து, திருமணம் தள்ளிப்போகும் தன் மகன், மகளுக்காக இங்கே வந்து ஓரிரவு தங்கி சுவாமி தரிசனம் செய்ய விரும்பி என் சேவையைக் கேட்டார். நானும் மன மகிழ்ச்சியுடன் அவர்களை இங்கே வரவேற்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தேன். இதை தற்பெருமை என யாரும் நினைக்க வேண்டாம் என்று பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.எதற்குப் பதிவு செய்கிறேன் எனில் இந்த வகுப்பறை ஏற்படுத்தும் நட்பு வட்டத்தின் மகிமையைச் சொல்லவதற்காகத்தான்.எனவே நாம் அனைவரும் ஒற்றுமையாக உடன் பிறவாச் சகோதர சகோதரிகளாக பல்லாண்டுகள் மகிழ்ச்சியுடன் வகுப்பறையை முன்னெடுத்துச் செல்வோம்.
நமது அறிவை/திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ளும் அதே நேரத்தில் நாம் எழுதிய செய்தியால் வரக்கூடிய விமர்சனக்களின் பாங்கை யோசித்து, இனிமையான சொற்களைப் பயன் படுத்துவோம்.
To err is human; To forgive is divine!
Dear Sir,
ReplyDeleteWhen I was doing project in IOCL, Panipat , due to frustration just started browsing the web , there I found the classroom2007.It has given me lot of joy by reading the lessons & comments though I do not know how to write.
One thing I understood writing is art & some times I use to afraid of the class room will be closed due to fighting among students due to their EGO. But strong minded Teacher will conduct the class room in such a manner so that good students like me will get the benefit.
Thank you sir
G.seenivasan.Bharuch.
////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteமிக நல்ல அறிவிப்பு ஐயா!!. தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தமைக்கு மிக்க நன்றி. நான் எப்போதும் தங்கள் முடிவுக்குக்
கட்டுப்படுபவள். ஆனால், பின்னூட்டப் பெட்டியை நீக்கும் அறிவிப்பு மிக மன வருத்தமடையச் செய்தது உண்மை. சக மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் பின்னூட்டப் பெட்டியை இணைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி./////
நல்லது. நன்றி சகோதரி!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா!
சத்தியமாக.... கோபாலன் ஐயாவின் கருத்துக்களை அச்சு பிசகாது நான் சற்று முன் சத்தியமாக தட்டச்சு செய்து மின் அஞ்சலில் அனுப்ப இருந்தேன்.. ஆனால் எனது அலுவலக இணையத்தில் வந்த கோளாறால் அனுப்ப முடியாமல் போனது கண்டு வருத்தத்தோடு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது நான் கூற நினைத்த அதேக் கருத்தை அழகாக ஐயா அவர்கள் கூறியது உண்மையில் ஈஸ்வர அனுகிரகமே...
ஐயாவின் கருத்தே எனதும்... அதோடு இன்னொருக் கருத்தையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர்
சில காலங்களாக அறிவோம் அப்படி இருக்க கருத்து வேறுபாடு வந்தாலும் தமது கருத்தை மிகவும் கடுமையாக விமர்சிக்க எண்ணும் போது
சம்பந்தப் பட்ட இருவரும் நேரடியாக மின் அஞ்சலில் பேசிக் கொள்ளலாம் என்பதும்.
நாம் அலையா விருந்தாளியாக வாத்தியாரின் நடு வீட்டில் வந்தமர்ந்துக் கொண்டு அவரை அதிகாரம் செய்வதும் நியாயமாகாது
என்பதையும் மனதில் கொண்டும். அவரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்காமல் நாம் அனைவரும் நண்பர்களாகவும், உறவினர்களாகவும்
அன்புடன் பிடித்தக் கருத்தை வெறித்தனம் இல்லாமல் பண்போடு பகிர்ந்து கொள்வோம் அதே வேண்டாதவரிடம் வலுக்கட்டாயமாக
திணிக்காமலும் இருப்போம் என்று எனது விருப்பத்தையும் உறுதியையும் கூறி வாத்தியார் அவர்களின் மறுபரிசீலனைக்கும் முடிவுக்கும்
எனது நன்றியும் வணக்கமும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றிகள் ஐயா!/////
உங்களின் மேலான கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!!
////Blogger thanusu said...
ReplyDeleteமிக்க நன்றிகள் அய்யா.
ஒரே குடும்பத்தில் சண்டை சச்சரவு வருவது இயற்கை தானே, மீண்டும் இனைவதும் இயற்கைதானே. அப்படியே நாம்
எடுத்துக்கொள்வோம்.
ஈசலும்
ஈக்களும் மோதி
இரும்புக்கோட்டை இடியாது.//////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!
/////Blogger Pandian said...
ReplyDeleteமிகவும் சந்தோஷம் அய்யா...நன்றி நன்றி நன்றி.../////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger eswari sekar said...
ReplyDeletethanks sir./////
நல்லது. நன்றி சகோதரி!
////Blogger Pandian said...
ReplyDeleteஅய்யா வேலை பளு காரணமாக வகுப்பறைக்கு சில நாட்கள் வரமுடியவில்லை...மன்னிக்கவும்.../////
அதனால் ஒன்றும் பாதகமில்லை. நேரம் கிடைக்கும்போது வாருங்கள். நன்றி!
Blogger kmr.krishnan said...
ReplyDeleteபின்னூட்டப் பெட்டி மீண்டும் திறந்தது பற்றி மகிழ்ச்சி வரவேற்கிறேன்.
நான் மற்றவர் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து உண்டானால் இங்கே பதிவு செய்துதான் வந்திருக்கிறேன். ஆனால் மாற்றுக் கருத்து
உள்ளவர்களுடைய பின்னூட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற தனி மின்னஞ்சல் ஐயாவுக்கு நான் அனுப்பியதே கிடையாது. இனியும்
அனுப்பவும் மாட்டேன்.ஐயாவுடன் தனிப்பட்ட தொடர்பு எனக்கு முன்பும் இப்போதும் இல்லை.
ஆம். தனுசு சொல்வது போல இது ஒரு குடும்பம். எல்லோரும் விட்டுக் கொடுத்து மாற்றுக் கருத்துக்களையும் இனிய சொற்களால் சொல்லிக்கொண்டு
மகிழ்ச்சியுடன் இருப்போம்.
பிரச்சனைக்குரிய நபர்களில் நான் இல்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Atchaya said...
ReplyDeleteபடிக்கும் மாணவர்கள், ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க மட்டுமே உரிமை உண்டு. சக வாசகர்களை .... உரிமையில்லை! ஆதலால், முடிவு எடுப்பது ஆசிரியர் மட்டுமே!/////
ஆமாம். எது வேண்டுமென்றாலும், வாத்தியாரிடமே கேளுங்கள். நன்றி நண்பரே!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteவாத்தியார் ஐயாவின் முடிவினை மதிக்கிறேன்.
அதே சமயம். பதிவுக்கு சம்பந்தம் உடையது என முழு மனசாட்சியுடன் நம்பி ஒரு மாணவர் பின்னூட்டம் இடும் போழ்து அஃது பிடிக்காத சக மாணவர்கள் ஒன்று சகிப்புத்தன்மையினை கைக்கொள்ள வேண்டும் அல்லது தங்கள் கண்ணியத்தினை காக்கும் விதம் சொல்லாட்சி செய்து நடந்து கொள்ள வேண்டும். இனி மாற்றுக்கருத்து உள்ளவர்களை சொல்லால் அடிப்பது நிற்கும் என்பது மகிழ்ச்சியானதும்
வரவேற்கத்தக்கதும் ஆகும்.
என் சார்பில் நான் எப்போதும் சொல்லும் உறுதிமொழி: பதிவிற்கு சம்பந்தம் உள்ள பின்னூட்டத்தினை மனசாட்சிக்கு விரோதம்
இல்லாமல் தான் நான் இடுவது தான் வழக்கம். அது பற்றிய சர்ச்சைகளுக்கு நான் பொறுப்பாகவோ அவற்றில் கலந்து கொள்ளவோ
இயலாது.
சம்பந்தப்பட்ட பின்னூட்டங்கள் யாருக்காவது பிடிக்கவில்லை எனில் தனிப்பட்ட மின்னஞ்சல் பண்ணலாமே? அதை விடுத்து
வகுப்பறையில் தேவை அற்ற வார்த்தைகளை பயன்படுத்தி வேறொருவர் சர்ச்சையை கிளப்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
சம்பந்தப்பட்ட பிரச்சினையில் நான் ஒரு மறுமொழியும் கூறவில்லை என்பது காண்க.
இந்தப் பின்னூட்டமும்பதிவிற்கு சம்பந்தம் உடையதே. மனம் புண்பட்டு இதை இடுகிறேன்.
Enough said. No more have I, to say on this. The chapter is firmly closed from my side.
---
Best Regards,
Mr. (Dr.) Bhuvaneshwar D/////
சர்ச்சைகள் இன்று வகுப்பறை நடந்தால் எனக்கும் மகிழ்ச்சியே! அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அதுதான் முக்கியம்! நன்றி!
///Blogger Gee Tax Clinic said...
ReplyDeleteஇன்றைய பிரார்த்தனையின்
முடிவாக
பின்னுட்ட பெட்டி மீண்டும் திறக்கப்பட்டது மெத்த மகிழ்ச்சி..
தும்மல் வரும் போது
தும்மி விடுவேண்டும்..
அது
அருகில் இருப்பவருக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்..
ஆரேக்கியமான கருத்துப் பறிமாற்றத்திற்கு அதுவே நல்லது..
தொடரட்டும் ....
தொடருகிறோம்.../////
இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்! நன்றி!
//////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஅன்புள்ள வாத்தியாருக்கு:
எனது பின்னூட்டங்கள் சர்ச்சையில் இது வரை தங்களுக்கு நேரடியாக மனவருத்தத்தினை ஏற்படுத்தி இருந்தால்/அசௌகரியம் தந்து இருந்தால் முழு மனதுடன் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் பிறர் பிழைகளுக்கு நான் மன்னிப்பு கேட்க இயலாது.
If my comments had directly caused the slightest inconvenience by their own nature, I offer my heartfelt apologies to the owner of this blog.
But under no circumstance shall I agree to be held responsible for a controversy created by some one else, the reason notwithstanding. Nor shall I offer an apology for a fault that was't mine.
My comments hereafter, shall only be my declaration of my attendance if present.
Thanks.
---
Best Regards,
Mr. (Dr.) Bhuvaneshwar D/////
யாரும் மன்னிப்பு கேகவேண்டாம். வகுப்பறை அமைதியாக நடக்க ஒத்துழைப்பை நல்கினால் போதும்! நன்றி!
/////Blogger RAMADU Family said...
ReplyDeleteGuru vanakkam,
Many thanks to Goplan Sir, Mrs.Uma and Thanusu for bringing this back to life. Ofcourse thanks to Guru for considering this.
Regards
Ramadu./////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteநன்றி அய்யா . வெகுசிலரின் பின்னூட்டங்கள் அறிவுப்பூர்வமாகவும் , மனதை கவருவதாகவும் உள்ளது.பின்னூட்ட பெட்டியை
திறந்ததிற்கு நன்றி./////
நல்லது. நன்றி சகோதரி!
//////Blogger sadan raj said...
ReplyDeleteஅன்புள்ள வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம். வகுப்பரையின் மூத்த மாணவர்களின் வேண்டுகோள்களை ஏற்று பின்னூட்டபெட்டியை
திறந்ததில் எனக்கு மிகமகிழ்ச்சி. நன்றிகள்./////
நல்லது. நன்றி சதன்ராஜ்!
/////Blogger Arul said...
ReplyDeleteநன்றி ஐயா!!!
உங்கள் பதிவு தரும் தகவல்கள் பல என்றாலும் பின்னூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களின் பதில் தரும் தகவல்கள்
அதிகம்.உங்கள் முடிவிற்கு நன்றி...ஐயா சொன்னதுபோல் இது *Chatting* தளம் அல்ல.தனக்கு தெரிந்த தகவல்களை அனேகம் பேர்
தெரிந்து கொள்ள *யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வகுப்பறை* என்ற நோக்குடன் ஐயா இந்த வகுப்பறையை ஆரம்ம்பித்தார்கள்.கடந்த
மூன்று வருடமாக நான் இதன் பலனை அனுபவித்து வருகிறேன்.நண்பர்களும் இதை உணர்ந்து பதிவுக்கு ஏற்புடைய பின்னூட்டங்களை
மட்டும் அனுப்பினால் இந்த வகுப்பறையின் நோக்கம் நிறைவேறும். வகுப்பறை பிரச்சினை இன்றி தொடர நம் அனைவரின் ஒத்துழைப்பும் அவருக்கு அவசியம்../////
உங்களின் புரிந்துணர்விற்கும், பரிந்துரைக்கும் நன்றி நண்பரே!
/////Blogger Thanjavooraan said...
ReplyDeleteமரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா, வணக்கம். அடியேனின் வேண்டுகோளுக்கும் டெல்லி உமா, கவிஞர் தனுசு ஆகியோரின்
கருத்துக்களுக்கும் மதிப்பளித்து மீண்டும் பின்னூட்டங்களுக்கு இடமளிக்க ஒப்புக் கொண்டதற்கு மனமார்ந்த நன்றி. காரணம், வகுப்பறை ஜோசியப் பாடங்கள் மட்டுமல்லாமல் பல அரிய கருத்துக்களை, பல துறை சார்ந்த அன்பர்களின் அனுபவங்கள், விமர்சனங்கள், விளக்கங்கள் என்று வந்து குவிந்து கொண்டிருந்தன, அவை அனைத்தையும் ஒரே நாளில் இழப்பதை மனம் ஒப்பவில்லை. யாருடைய அஞ்சல் குழப்பத்துக்குக் காரணம் என்றெல்லாம் இப்போது ஆய்வு செய்யத் தேவையில்லை. இனி வருங்காலங்களில் அவரவர் துறை சார்ந்த பல அரிய கருத்துக்களையும், பிறர் சொல்லும் கருத்துக்களின் மீதான விமர்சனங்களை எல்லை மீறாமலும் எழுதி வரவேண்டுமென்பது என்
வேண்டுகோள். ஒரே ஊரில் வாழ்ந்தால் ஒருசில நண்பர்கள்தான், இதுபோன்ற வலைத்தளங்கள் மூலம் எத்தனை நண்பர்கள் நமக்கு? என்
பேத்தி சிங்கப்பூருக்குக் கல்வி பயிலச் சென்றாள். நான் உடனடியாகத் தொடர்பு கொண்டது அங்கு வசிக்கும் எனது "வகுப்பறை"
நண்பரைத்தான். அவரும் அவர் குடும்பத்தாரும் இப்போது என் பேத்திக்கு உறுதுணையாக அங்கு இருந்து வருகின்றனர். இது எதனால்
சாத்தியமானது என்பதை சிந்தித்துப் பார்க்கிறேன். வள்ளுவர் பதில் சொல்கிறார்: "முக நக நட்பது நட்பல்ல, நெஞ்சத்து அக நக நட்பது
நட்பு" என்று. நெஞ்சங்கள் சங்கமிக்கும் நட்புக் கடல் நமது "வகுப்பறை"; அதில் மூழ்கி முத்தெடுப்போம். நன்றி வகுப்பறை நண்பர்களே.ஆசிரியர் ஐயாவுக்கு மீண்டும் நன்றி./////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கோபாலன் சார்!
//////Blogger PS said...
ReplyDeleteதிரு கோபாலன் அவர்களுக்கு எனது நன்றி. வாத்தியாருக்கு மிக மிக நன்றி. வகுப்பறையினால் நான் பயனடைந்தது உண்மை. முடிவை
மறுபரிசீலனை செய்தமைக்கும் பின்னூட்டப் பெட்டியை திறந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி/////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteதஞ்சாவூர் பெரியவரின் அனுபவம் போல் இன்று வகுப்பறையால் ஒரு நட்பு வட்டத்துடன் நேரடியான தொடர்பு ஏற்பட்டது.
நட்சத்திரக்கோவில் வரிசையில், ஐயா இடையாற்றுமங்கலம் கோவிலைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்த ஓர் ஓய்வு பெற்ற பெரியவர், நான் லால்குடியில் இருப்பதை வகுப்பறை மூலம் அறிந்து, திருமணம் தள்ளிப்போகும் தன் மகன், மகளுக்காக இங்கே வந்து ஓரிரவு தங்கி சுவாமி தரிசனம் செய்ய விரும்பி என் சேவையைக் கேட்டார். நானும் மன மகிழ்ச்சியுடன் அவர்களை இங்கே வரவேற்று அனைத்து
ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தேன். இதை தற்பெருமை என யாரும் நினைக்க வேண்டாம் என்று பணிந்து கேட்டுக்
கொள்கிறேன்.எதற்குப் பதிவு செய்கிறேன் எனில் இந்த வகுப்பறை ஏற்படுத்தும் நட்பு வட்டத்தின் மகிமையைச் சொல்வதற்
காகத்தான்.எனவே நாம் அனைவரும் ஒற்றுமையாக உடன் பிறவாச் சகோதர சகோதரிகளாக பல்லாண்டுகள் மகிழ்ச்சியுடன்
வகுப்பறையை முன்னெடுத்துச் செல்வோம்.
நமது அறிவை/திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ளும் அதே நேரத்தில் நாம் எழுதிய செய்தியால் வரக்கூடிய
விமர்சனக்களின் பாங்கை யோசித்து, இனிமையான சொற்களைப் பயன் படுத்துவோம்.
To err is human; To forgive is divine!//////
உங்களின் அனுபவப் பகிர்விற்கும் பரிந்துரைக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
//////Blogger seenivasan said...
ReplyDeleteDear Sir,
When I was doing project in IOCL, Panipat , due to frustration just started browsing the web , there I found the classroom2007.It has
given me lot of joy by reading the lessons & comments though I do not know how to write.
One thing I understood writing is art & some times I use to afraid of the class room will be closed due to fighting among students due
to their EGO. But strong minded Teacher will conduct the class room in such a manner so that good students like me will get the benefit.
Thank you sir
G.seenivasan.Bharuch.//////
உங்களின் பின்னூட்டத்திற்கும், அனுபவப் பகிர்விற்கும் நன்றி நண்பரே!