மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.7.12

கண்ணுக்குள் வாழ்கின்றாய்!

 கண்ணுக்குள் வாழ்கின்றாய்!

இன்று என் தாயாருக்கு ஆண்டுத் திதி. அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவுறுகிறது. அவர்களுக்கு ஆண்டுத் திதி கொடுப்பதற்கான ஏற்பாட்டில் இருந்ததால் நேற்று பதிவில் எழுதவில்லை

அவர்களுடைய நினைவைப் போற்றும் விதமாக வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பதற்காக ஒரு சிறு புத்தகத்தை அச்சிட்டுள்ளேன். (1/16 demi size, 32 பக்கங்கள்). அதில் அவர்கள் அடிக்கடி பாடும் இறை வழிபாட்டுப் பாடல்களில் 12 பாடல்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

இன்று வகுப்பிற்கு விடுமுறை! அடுத்த பதிவு நாளை வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------



நன்மக்களைப் பெற்றெடுத்து
நாளும் வளர்த்தெடுத்து
உண்மையாய் வாழ்ந்திட்டாய்
ஒப்பற்ற தாயானாய்!

மண்ணைவிட்டுப் பிரிந்தாலும்
மலர்ந்தமுகம் மறைந்தாலும்
கண்ணுக்குள் வாழ்கின்றாய்
காலமெல்லாம் வணங்கிடுவோம்!
+++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

36 comments:

  1. அய்யா வணக்கம் . நம் முன்னோர்களை வணங்குவதால் அவர்களின் ஆசி என்றும் உண்டு

    ReplyDelete
  2. அன்னையைப் போற்றியோர்
    அகிலத்தில் உயர்ந்தார்
    அன்னையவளின் ஆசியே
    அகிலாலும் நாயகியிடமும் சேர்க்கும்.

    உமையாள் ஆச்சிக்கு நான் முன்பே
    கடிதம் ஒன்றை எழுதினேன்!
    ஐயா அவர்கள் வைத்தி இருப்பீர்கள்!
    துதி பாடியதாக அல்ல...
    தூய அன்னையின் மனம் குளிரும்!
    அவள்'' ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள்''

    ஆச்சி அவர்கள் நம்மை
    ஆசிவதிக்க இந்த நாளில்
    வேண்டி நிற்போம்.

    ReplyDelete
  3. ayya vankam .. ammavin asi ungluku kidigattum ..

    ReplyDelete
  4. வணக்கம்!
    அழகிய புத்தகமும் , சிறு கவிதையும் உங்களின் அன்பையும்
    மரியாதையையும் நன்கு பறை சாற்றுகிறது.. அவர்கள் மனம்
    குளிர்ந்து என்றும் உங்களை வாழ்த்தி ஆசி வழங்குவார்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம்
    எல்லோர்க்கும் நல்லவையே கிட்ட்டும்
    தாயை வணங்குவாதால்.
    நன்றி

    ReplyDelete
  7. அன்னையின் திருவடிகளை நினைத்து பணிந்து வண‌ங்கிறேன்.
    -ஜவகர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  8. அன்னையின் திருவடிகளை நினைத்து பணிந்து வண‌ங்கிறேன்.
    -ஜவகர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  9. அம்...மா...
    உச்சரிக்க
    உலர்ந்த உதடுகள் மறந்தாலும்

    தோன்றா துணையாய்
    என்றும் தொடருவார்

    வருடங்கள் உருண்டாலும்
    வலியின் வாசம் மட்டும்

    விலகாமல் என்றென்றும்..

    ReplyDelete
  10. தங்கள் மனதுள் அவர்கள் என்றென்றும் இருப்பதால் நினைவில் வாழுகிறார்கள். என்றும் அவர்கள் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.

    ReplyDelete
  11. annayin pugaipadathai pagirnthamaikku nandri ayya

    ReplyDelete
  12. "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்

    எனும் வாக்கிற்கிணங்க வாழ்ந்து என்றென்றும் நினைவில் நின்று வாழ்த்துபவர் தங்கள் அன்னை. இப்படியொரு அன்னை அமைய தாங்கள் கொடுத்து வைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க!

    ReplyDelete
  13. மலர்ந்த முகமாய் கண்ணுக்குள் வாழும் அன்னை அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

    ReplyDelete
  14. Guru Vanakkam,

    You will be blessed with all the riches in the world.

    Ramadu.

    ReplyDelete
  15. சிறு வயதில் தாயின் தாலாட்டும், பெரு வயதில் அவரின் ஆசியும் நம்மை வாழ வைக்கும், தாயை தாலாட்டும் தனயங்களுக்கு அந்த ஆசி இன்னும் பலம் கூட்டும்.அந்த பலமான ஆசி தாங்களுக்கு என்றென்றும் உண்டு.

    ReplyDelete
  16. 'பிரத்யட்சம் பிரம்மா' என்று ஒரு கருத்தோட்டம் நமது சமய மரபில் உண்டு.
    அதாவது கண்கண்ட தெய்வம். கண் முன்னர் தெரியும் தெய்வம்.பிரம்மம்தான் படைப்புக்கான தேவன் என்றாலும்,அவர் ஒரு மறைந்திருக்கும் சக்தியே. அவருடைய படைப்பின் மகிமையை இந்தப் பூமியில் கண் முன்னர் செயல் விளக்கமாகக் காண்பிப்பவர் அன்னையே.

    ஆண்டவன் தானே எல்லா இடத்திலும் இருப்பதற்கு பதிலாக‌ அன்னையரைத் தன் பிரதிநிதியாக வைத்தான்.

    ஐயாவின் தாயாரை ஒருமுறை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது 90 வயது தாண்டிய பழுத்த பழமாகக் கண்டேன்.

    'அம்மா என்றொரு தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை"

    ஐயாவின் தாயாருக்கு அவர் நினைவு நாளில் என் வணக்கங்கள்.

    ReplyDelete
  17. தாயின் ஆசி தங்களுக்கு என்றென்றும் உண்டு.

    ReplyDelete
  18. Anbu Aiyya,
    Annaiyin athma shanthinkkaga engal prarthanaigal.
    Anbudan,
    R.Saravanakumar,
    Colombo.

    ReplyDelete
  19. ////Blogger Gnanam Sekar said...
    அய்யா வணக்கம் . நம் முன்னோர்களை வணங்குவதால் அவர்களின் ஆசி என்றும் உண்டு/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////Blogger ஜி ஆலாசியம் said...
    அன்னையைப் போற்றியோர்
    அகிலத்தில் உயர்ந்தார்
    அன்னையவளின் ஆசியே
    அகிலாலும் நாயகியிடமும் சேர்க்கும்.
    உமையாள் ஆச்சிக்கு நான் முன்பே
    கடிதம் ஒன்றை எழுதினேன்!
    ஐயா அவர்கள் வைத்தி இருப்பீர்கள்!
    துதி பாடியதாக அல்ல...
    தூய அன்னையின் மனம் குளிரும்!
    அவள்'' ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள்''
    ஆச்சி அவர்கள் நம்மை
    ஆசிவதிக்க இந்த நாளில்
    வேண்டி நிற்போம்./////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. /////Blogger eswari sekar said...
    ayya vankam .. ammavin asi ungluku kidigattum ../////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. /////Blogger ஸ்ரவாணி said...
    வணக்கம்!
    அழகிய புத்தகமும் , சிறு கவிதையும் உங்களின் அன்பையும்
    மரியாதையையும் நன்கு பறை சாற்றுகிறது.. அவர்கள் மனம்
    குளிர்ந்து என்றும் உங்களை வாழ்த்தி ஆசி வழங்குவார்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  23. //////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    எல்லோர்க்கும் நல்லவையே கிட்டட்டும்
    தாயை வணங்குவதால்.
    நன்றி/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. /////Blogger Jawahar Govindaraj said...
    அன்னையின் திருவடிகளை நினைத்து பணிந்து வண‌ங்கிறேன்.
    -ஜவகர் கோவிந்தராஜ்//////

    உங்களுடைய மனம் நிறைவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே1!

    ReplyDelete
  25. /////Blogger அய்யர் said...
    அம்...மா...
    உச்சரிக்க
    உலர்ந்த உதடுகள் மறந்தாலும்
    தோன்றா துணையாய்
    என்றும் தொடருவார்
    வருடங்கள் உருண்டாலும்
    வலியின் வாசம் மட்டும்
    விலகாமல் என்றென்றும்../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  26. /////Blogger Parvathy Ramachandran said...
    தங்கள் மனதுள் அவர்கள் என்றென்றும் இருப்பதால் நினைவில் வாழுகிறார்கள். என்றும் அவர்கள் நம்மை ஆசீர்வதிக்கட்டும்./////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  27. //////Blogger arul said...
    annayin pugaipadathai pagirnthamaikku nandri ayya/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Blogger Thanjavooraan said...
    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்
    எனும் வாக்கிற்கிணங்க வாழ்ந்து என்றென்றும் நினைவில் நின்று வாழ்த்துபவர் தங்கள் அன்னை. இப்படியொரு அன்னை அமைய தாங்கள் கொடுத்து வைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க!/////

    உங்களின் மேலான பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  29. /////Blogger krishnar said...
    மலர்ந்த முகமாய் கண்ணுக்குள் வாழும் அன்னை அனைவரையும் ஆசீர்வதிப்பாராக./////

    உங்களின் மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. //////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    You will be blessed with all the riches in the world.
    Ramadu./////

    உங்களின் மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. /////Blogger MANIS said...
    ammavin asiyal akilamum adaikalam/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. //////Blogger thanusu said...
    சிறு வயதில் தாயின் தாலாட்டும், பெரு வயதில் அவரின் ஆசியும் நம்மை வாழ வைக்கும், தாயை தாலாட்டும் தனயங்களுக்கு அந்த ஆசி இன்னும் பலம் கூட்டும்.அந்த பலமான ஆசி தாங்களுக்கு என்றென்றும் உண்டு./////

    உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தனுசு!!

    ReplyDelete
  33. /////Blogger kmr.krishnan said...
    'பிரத்யட்சம் பிரம்மா' என்று ஒரு கருத்தோட்டம் நமது சமய மரபில் உண்டு.
    அதாவது கண்கண்ட தெய்வம். கண் முன்னர் தெரியும் தெய்வம்.பிரம்மம்தான் படைப்புக்கான தேவன் என்றாலும்,அவர் ஒரு மறைந்திருக்கும் சக்தியே. அவருடைய படைப்பின் மகிமையை இந்தப் பூமியில் கண் முன்னர் செயல் விளக்கமாகக் காண்பிப்பவர் அன்னையே.
    ஆண்டவன் தானே எல்லா இடத்திலும் இருப்பதற்கு பதிலாக‌ அன்னையரைத் தன் பிரதிநிதியாக வைத்தான்.
    ஐயாவின் தாயாரை ஒருமுறை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது 90 வயது தாண்டிய பழுத்த பழமாகக் கண்டேன்.
    'அம்மா என்றொரு தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை"
    ஐயாவின் தாயாருக்கு அவர் நினைவு நாளில் என் வணக்கங்கள்.///////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கும், வணக்கங்களுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!!

    ReplyDelete
  34. //////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    தாயின் ஆசி தங்களுக்கு என்றென்றும் உண்டு.////

    உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  35. //////Blogger R.Saravanakumar said...
    Anbu Aiyya,
    Annaiyin athma shanthinkkaga engal prarthanaigal.
    Anbudan,
    R.Saravanakumar,
    Colombo.//////

    நல்லது. மிக்க நன்றி சரவணகுமார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com