மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.7.12

Astrology எது மேலானது ? கையா அல்லது காலா?

Astrology   எது மேலானது ? கையா அல்லது காலா?

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் ஆகிய இரண்டிலும் எது மேலானது? எது நம்பகத்தன்மை மிகுந்தது? எது உயர்வானது?

இரண்டுமே மேலானதுதான். பிரித்துச் சொல்ல முடியாது!

கைகள், கால்களில் எது மேலானது? அல்லது எது முக்கியமானது? என்று கேட்டால் இரண்டுமே மேலானதுதான். இரண்டும் முக்கியமானதுதான். அவைகளில் ஒன்று இல்லாதவர்களை அல்லது ஒன்றில் குறைபாடு உள்ளவர்களைக்கேளுங்கள் அற்புதமாகப் பதில் தருவார்கள்.

மருத்துவத்தில் எது மேலானது அலோபதியா அல்லது ஹோமியோபதியா அல்லது ஆயுர்வேதமா அல்லது நாட்டு வைத்தியமா எது மேலானது
என்று கேட்டால் என்னத்தைச் சொல்வது? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் உயர்ந்ததுதான்! அந்தத்துறையில் உள்ள விற்பன்னர்களின்
(Experts) கையில் அவைகள் எல்லாமுமே மேலானதுதான்

பிறந்த நேரத்தில் தவறு இருந்தால், ஜாதகம் தவறாகப் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் கைரேகை தவறாகிப் போவதற்கு வாய்ப்பே  இல்லை. நோ சான்ஸ்!

ஆனால் ஜோதிடத்தின் பிரம்மாண்டம் கைரேகை சாஸ்திரத்தில் இல்லை. அது மட்டும் உண்மை!
-----------------------------------------------------------------------------------------------
கைரேகை சாஸ்திரத்தில் மேதை ஒருவர் இருந்தார். உலகம் அறிந்த, உலகமே போற்றிய மனிதர் அவர்

அவருடைய பெயர் ’சீரோ’ (Cheiro)

வில்லியம் ஜான் வார்னர் என்பது அவரது முழுப்பெயர்.
வாழ்ந்த காலம்: 1.11.1866 முதல் 8.10.1936 வரை
சுமார் 70 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார். ஐரீஷ்காரர்.
கைரேகை சாஸ்திரம், ஜோதிடம் எண்கணிதம் என்று எல்லாவற்ரையும் ஒருகை பார்த்தவர்.

வாழ்ந்த காலத்தில் பல உலகப்பிரமுகர்கள் அவருடைய அபிமானிகளாகவும், வாடிக்கையாளராகவும் இருந்தார்கள். அதிரடியாக பலரது எதிர்காலத்தைக் கணித்து துல்லியமாகச் சொல்லியவர் அவர்.

இந்தக் கலைகளை எல்லாம் தான் கற்றுத் தேர்ந்தது இந்தியாவில்தான். இந்தியர்களுக்கு என்றும் கடைமைப்பட்டுள்ளேன் என்று  தன்னுடைய நூல்களில் குறிப்பிட்டுள்ளார்

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் பட்டத்து இளவரசின் கையைப் பார்த்துவிட்டு, இவன் அரியணை ஏறமாட்டான் என்று அதிரும்படியாகச்
சொன்னவர் அவர். அதுபோலவே நடந்தது. தன் காதலிக்காக நாட்டையே துறந்துவிட்டுச் சென்ற இளவரசன் அவன்.

அதுபோல தன் மரணத்தைத் துல்லியமாகச் சொன்னவர் அவர். தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் பெரிய விருந்து கொடுத்துவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றவர் அவர். அன்று இரவு தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

இதுபோன்று அவரைப்பற்றிப் பல செய்திகள் உள்ளன. பிறகு ஒரு நாள் அதை விரிவாக எழுதுகிறேன்.

அவரைப் பற்றி மேலும் படிப்பதற்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்:
http://en.wikipedia.org/wiki/Cheiro
--------------------------------------
From Cheiro's writings:

Look at the following numbers and discover your significant ages for turning points and eventful highlights in your life: 

Those born on the 1st, 10th, 19th and 28th of any month will find the most important ages are:
1, 7, 10, 16, 19, 28, 34, 37, 43, 46, 52, 61, 70, 73, 79, and 82

Those born on the 2nd, 11th, 20th, and 29th of any month:
2, 7, 11, 16, 20, 25, 29, 34, 38, 43, 47, 52, 56, 70, 74, 79, and 83

Those born on the 3rd, 12th, 21st and 30th of any month:
3, 12, 21, 30, 39, 48, 57, 66, 75, and 84

Those born on the 4th, 13th, 22nd and 31st of any month:
1, 4, 10, 13, 19, 22, 28, 31, 37, 40, 46, 49, 55, 58, 64, 67, 73, and 76
 
Those born on the 5th, 14th and 23rd of any month:
5, 14, 23, 32, 41, 50, 59, 68, 77, and 86

Those born on the 6th, 15th and 24th of any month:
6, 15, 24, 33, 42, 51, 60, 69, 78 and 87

Those born on the 7th, 16th and 25th of any month:
2, 7, 11, 16, 20, 25, 29, 34, 38, 43, 47, 56, 61, 65, 70, 74, 79, and 83

Those born on the 8th, 17th or 26th of any month:
8, 17, 26, 35, 44, 53, 62, 71, 80, and 89

Those born on the 9th, 18th or 27th of any month:
9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, and 90

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

39 comments:

  1. அய்யா , காலை வணக்கம்

    ReplyDelete
  2. வாத்தியாருக்கும் மற்றுள அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
    பொழுது இனியதாகவும் பயன் செறிந்ததாகவும் அமைய இறையருளை நாடுகிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பாடம். ஏறக்குறைய மீள்பதிவு. அன்னாரின் வாழ்க்கையை ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் 7 - 11 - 2007 அன்று ஜோதிடத்தொடரின் ஐம்பதாவது பதிவாக பதிவிட்டு இருந்தீர்கள். மீண்டும் அவரைப்பற்றி படிப்பது Nostalgic மகிழ்ச்சி. பிறந்த தேதி எண்களை பற்றிய தகவல் புதியது. நன்றிகள் பல.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மேற்குறிப்பிட்ட பதிவில், நீங்கள் சீரோ அவர்கள் ஒரு கொலைகாரரின் கைரேகையை பார்த்து இது ஒரு கொலைகாரனின் ரேகை, ஆனால் மரண தண்டனை நிறைவேறாது" என் கூறியதாக போட்டு இருந்தீர்கள் அல்லவா. அதை பற்றி இணையத்தில் நான் பார்த்த தகவல்.

    சுவாரஸ்யமாக இருந்ததால் I thought it would not be a bad idea to share it here.

    PS: Chair is a method of execution. Google for more information on that.

    +++++

    ///
    This about a famous prediction made by Mr Cheiro the renowned palmistry, in America, in 1936. When he was in California, the press reporters showed him two hand prints of a person and wanted him to predict about the man. Cheiro predicted about the man, who he later came to know as one Dr. Mayor who was an Insurance agent and arrested a few days ago for poisoning his clients to grab the insured money. Mr. Cheiro predicted about all his actions and said that this man when he attained the age of forty will be caught, sentenced to death but he will not die. The trial proceeded as usual and he was found guilty and sentenced to death by the lower courts which was finally upheld by the apex court.

    7 days before his execution, Dr Mayor was asked his last wish and he wanted to see Mr. Cheiro before his death. So Mr. Cheiro was called from Italy and taken to Dr Mayor.

    Mr Cheiro had vividly mentioned about this meeting in his autobiography.

    This what he had written. “As soon as the broken man saw me in his prison cell he stretched out both his hands at me and said Mr. Cheiro I had read your predictions given to the press long ago. What ever you have said were all correct but still I can’t believe your last sentence, since after two days I am going to be executed. I saw both his hands again and found no sign of an imminent death. So my automatic utterance was "Perhaps some miracle will happen.”

    Mr. Cheiro decided to stay in America to watch the happenings as he was also curious to see if that man is destined not to die after two days. On the night of execution he could not sleep in his hotel room till the morning hours when the hawkers shouted – Dr. Mayor escapes chair. The chair did not work and the judge present, immediately converted the sentence to life imprisonment and Dr Mayor there after lead a happy life up to 70 years. ///

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம் ,
    ஜோதிடம் தான் பிரம்மாண்டம்,
    இன்றய பதிவு நன்றக உள்ளது
    நன்றி

    ReplyDelete
  7. புதிய மாணவர்கள், அல்லது புதிதாகப் பதிவிட வ‌ந்துள்ள பழைய‌ மாணவர்கள்
    நலன் கருதி மீள் பதிவுகளில் மூழ்கிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது.நல்ல் பதிவுக்கு நன்றி ஐயா!

    புவனேஷ்வரின் துடிப்பான, செரிவான பின்னூட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன.

    ReplyDelete
  8. நல்ல பல தகவல்களை உள்ளடக்கிய சிறந்ததொரு பதிவைத்தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. எண்ணங்களின் பதிவுகளே ரேகைகள்..
    எண்ணங்களே வாழ்க்கை என்பது உளவியலாரின் கருத்தும் (உளவியல் துறையை சேர்ந்த லால்குடியாரின் கருத்தறிய ஆவல்)

    ரேகைகள் மூலம் எண்ணங்களை அறிந்தால் அவர்களின் வாழ்க்கை நிலையை அறியலாம் என்பதுவே

    எமது ஆய்வின் தொகுப்பு.. அன்று
    சென்னை பல்கலை துணை வேந்தர் வழங்கிய பாராட்டு பழைய நினைவுகளை நிழலாட வைத்தது..

    கைரேகை...
    நம்ம துறை பக்கம் என்பதால் கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி..

    மன்னிக்க..
    எமது துறை என்பதினால் கூடுதல் ஆவலில் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது..

    ReplyDelete
  11. //எண்ணங்களே வாழ்க்கை என்பது உளவியலாரின் கருத்தும் (உளவியல் துறையை சேர்ந்த லால்குடியாரின் கருத்தறிய ஆவல்)//

    "நீ எதுவாக உன்னை எண்ணிக் கொள்கிறாயோ அதுவாகவே நீ ஆகின்றாய்" என்பார் சுவாமி விவேகாநந்தர்."ஏ! சிங்கக் குட்டிகளே! ஆட்டுக்குட்டிகள் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள்!" என்று அழகிய ஆங்கிலத்தில் அறைகூவல் விடுப்பார்.அவருடைய இந்தக் கருத்து ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஒரு கதையில் இருந்து பெறப்பட்டது.

    ஒரு கருவுற்ற தாய்ப் புலி ஆட்டு மந்தையை வேட்டையாடும் போது ஒரு புலிக் குட்டியைப் பிரசவித்துவிட்டு அதனை கவனிக்காமல் காட்டுக்குள் ஓடிவிட்டது.
    புலிக்குட்டி ஆட்டு மந்தையிலேயே வளர்ந்தது. ஆடுகளைப்போலவே இலை தழைகளைத்தின்று 'மே மே' என்று கத்திக்கொண்டு அலைந்தது.ஒரு நாள் ஒரு காட்டுப்புலி, ஆட்டு மந்தையை வேட்டையாடும் போது இந்த ஆட்டுப் புலியைப் பார்த்தது.'அடடா தான் ஒரு புலி என்று தெரியாத அறியாமையில் இருக்கிறானே' என்று அந்த பயந்த ஆட்டுப்புலியை இழுத்துச் சென்று ஒரு கிணற்றுக்குள் அதன் உருவத்தைக்காட்டி அதற்குத் 'தான் ஒரு புலிதான் ஆடல்ல' என்பதைப் புரிய வைத்தது.ஆடு என்று மனதில் நினைத்தவரை புலியும் ஆடாகவே இருந்தது.மனத்தில் புலி என்ற எண்ணம் வந்தவுடன் புலித்தன்மை தானக வந்துவிட்டது.எனவே எண்ணம் தான் வாழ்க்கை. மனம் போல மாங்கல்யம்.

    ReplyDelete
  12. ஜோசியம் சொல்பவர்களில் சிலர் கெடுதலை மட்டுமேயும், சிலர் நல்லவைகளை மட்டுமேயும் சொல்வது ஏன்? ஜோசியம் சொல்பவர்களுக்கு வாக்கு காலம் என்று ஒன்று உண்டு என்றும் அந்தக் காலத்தில் சொல்லப் படும் பலன்களே உண்மையாக இருக்கும் என்பது உண்மையா? கடந்தகாலத்தை சிறப்பாகச் சொல்லும் பலர் எதிர்காலம் பற்றிச் சொல்வது நடப்பதில்லையே ஏன்? தன்னுடைய கைரேகையைத் தானே பார்த்துப் பலன் சொல்வது நடக்குமா? எண்ணங்கள் மாறினால் (கை) ரேகையும் மாறுமா?

    ReplyDelete
  13. //ஜோசியம் சொல்பவர்களுக்கு வாக்கு காலம் என்று ஒன்று உண்டு என்றும் அந்தக் காலத்தில் சொல்லப் படும் பலன்களே உண்மையாக இருக்கும் என்பது உண்மையா? //

    இந்த‌ நிலையை நான் அனுபவித்து உள்ளேன். என் கேது தசாவின் போது நான் சொன்னது எல்லாம் பலித்தது என்று பலர் சொல்லியுள்ளார்கள். இத்தனைக்கும்
    அப்போது எனக்கு சோதிடம் தெரியாது என்றே சொல்லலாம்.மனம் முழுதும் இறைச் சிந்தனையும், நற்கருமமும் புரிந்து வந்த காலம். தரையில் கால் பாவாமல் எப்போதும் காற்றில் மிதப்பது போல ஓர் உணர்வில் இருந்து வந்தேன்.கிட்டத்தட்ட குறி சொல்பவனாக என்னை மக்கள் மாற்றிவிட்டார்கள்.

    நல்ல வேளையாக சுக்கிர தசாவில் அந்த நிலை கலைந்து சாதாரணமாக உணர ஆரம்பித்தேன்.இந்த அனுபவங்களையெல்லாம் எழுத ஆசைதான்.....
    ஆனால்?!!!

    ReplyDelete
  14. ///எண்ணம் தான் வாழ்க்கை. மனம் போல மாங்கல்யம்...///

    லால்குடி தோழருக்கு நன்றிகள் பல..
    ஒத்திசைந்த கருத்து
    ஒருமித்த உணர்வு

    "கைரேகை"க்கு கொடுத்த ஒரு
    கைக்கு ஒரு சபாஷ்..

    வலமிருந்து இடமாக படித்தாலும்
    இடமிருந்து வலமாக படித்தாலும் ஒரு பொருளை தரும் கை ரே கை

    கோடுகளை கொண்டு மட்டும் பலன் சொல்வதில்லை

    பல புள்ளிகளே கோடுகளாக அமைகின்றது. அந்த புள்ளிகள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியும் இருப்பதில்லை

    ஆழ்ந்து படித்து பொறுமையாக புரிந்து கொண்டு தெளிவாக சொன்னால் மட்டுமே இதன் துல்லியம் அறியலாம்.

    இதனைத் தான் காவல் துறையில் பேசும் போதும் பல்கலையின் criminology துறையில் பேசும் போதும் சொன்னதை நிழலாட வைத்தது உங்கள் எழுத்து..

    ஏற்கனவே அறிந்த கதை தான்
    எனினும் உங்கள் எழுத்துக்களில் படிப்பது இனிமை சேர்க்கிறது

    நன்றி.. தொடரும் நன்றிகளுடன்..

    ReplyDelete
  15. ///kmr.krishnan said...
    இந்த அனுபவங்களையெல்லாம் எழுத ஆசைதான்.....
    ஆனால்?!!!///

    படிக்க எங்களுக்கும் ஆ"சை" தான்..
    ஆனால்...???!

    (ஒரு கேள்விக்குறியை தொடருது 3 ஆச்சரிய குறி..
    ஆனால்
    3 கேள்விக்குறிகளை தொடர்ந்து ஒரு ஆச்சரிய குறியாக அய்யர் சொன்னது புரிந்தால் மகிழ்ச்சி)

    ReplyDelete
  16. ////ஸ்ரீராம். said...
    தன்னுடைய கைரேகையைத் தானே பார்த்துப் பலன் சொல்வது நடக்குமா? எண்ணங்கள் மாறினால் (கை) ரேகையும் மாறுமா?///

    வாத்தியாரின் அனுமதியுடன்
    பதில் சொல்ல விரும்புகிறோம்
    (எமது துறை சார்ந்த கேள்விகள் என்பதினால் உரிமையுடன்)

    தன்னுனைடய கையை பார்த்து பலன் சொல்வது நடக்கும். இது ஒரு arithmatics என்பது அய்யரின் கருத்து.

    உமது இரண்டாவது கேள்வி
    எண்ணங்கள் மாறும் போது கையின் ரேகைகளும் மாறும்

    (இங்கே ரேகை என குறிப்பிடுவது கோடுகள் அல்ல கோடுகளை அமைக்கம் புள்ளிகள்...

    சென்ற பின் ஊட்டத்தில் சொன்னது போல் பல புள்ளிகளே ரேகைகளாக அமைகிறது)

    வட்டமாக சதுரமாக நீள் சதுரமாக நீள் வட்டமாக முறையற்ற ஒரு கோடாக என பலவாறாக அமைந்திருக்கும் புள்ளிகளில் மாற்றம் தெரியும்..

    எண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியுமா என்பதனை கூட சொல்ல முடியும் என்பது அய்யரின் கருத்து..

    ரேகைகள் எல்லா உயிர்களுக்கும் உண்டு. செடி கொடி முதல் விலங்குள் வரை .. ஒரு மரத்தில் இருந்து வரும் இரண்டு இலைகளுக்கு ஒரே மாதிரி ரேகைகள் இருப்பதில்லை..

    சோதிடம் மனிதருக்கு மட்டும் என்பதை ஒப்பிடும் போது ரேகை சாத்திரம் வேறுபட்டு நிற்கிறது..

    தொடர்ந்து பேசுவோம்..
    வாய்ப்பு கிடைத்தால்....

    ReplyDelete
  17. பாடம் விளக்கமாக நன்றாக உள்ளது.

    Thanks
    siva

    ReplyDelete
  18. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா , காலை வணக்கம்/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  19. //////Blogger Bhuvaneshwar said...
    வாத்தியாருக்கும் மற்றுள அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
    பொழுது இனியதாகவும் பயன் செறிந்ததாகவும் அமைய இறையருளை நாடுகிறேன்./////

    நல்லமனம் வாழ்க!
    நாடுபோற்ற வாழ்க!

    ReplyDelete
  20. /////Blogger Bhuvaneshwar said...
    நல்ல பாடம். ஏறக்குறைய மீள்பதிவு. அன்னாரின் வாழ்க்கையை ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் 7 - 11 - 2007 அன்று ஜோதிடத்தொடரின் ஐம்பதாவது பதிவாக பதிவிட்டு இருந்தீர்கள். மீண்டும் அவரைப்பற்றி படிப்பது Nostalgic மகிழ்ச்சி. பிறந்த தேதி எண்களை பற்றிய தகவல் புதியது. நன்றிகள் பல./////

    ஆர்யபட்டர், வராஹிமிகிரர், பராசுரர், நாஸ்டர்டாமஸ், சீரோ போன்றவர்கள் எல்லாம் வகுப்பறைக்கு அவ்வப்போது வருவார்கள். மீள் பதிவு என்று சொல்லாமல், மகிழ்ச்சி கொள்ளுங்கள்!

    ReplyDelete
  21. ////Blogger Bhuvaneshwar said...
    மேற்குறிப்பிட்ட பதிவில், நீங்கள் சீரோ அவர்கள் ஒரு கொலைகாரரின் கைரேகையை பார்த்து இது ஒரு கொலைகாரனின் ரேகை, ஆனால் மரண தண்டனை நிறைவேறாது" என் கூறியதாக போட்டு இருந்தீர்கள் அல்லவா. அதை பற்றி இணையத்தில் நான் பார்த்த தகவல்.
    சுவாரஸ்யமாக இருந்ததால் I thought it would not be a bad idea to share it here.
    PS: Chair is a method of execution. Google for more information on that.
    +++++
    ///
    This about a famous prediction made by Mr Cheiro the renowned palmistry, in America, in 1936. When he was in California, the press reporters showed him two hand prints of a person and wanted him to predict about the man. Cheiro predicted about the man, who he later came to know as one Dr. Mayor who was an Insurance agent and arrested a few days ago for poisoning his clients to grab the insured money. Mr. Cheiro predicted about all his actions and said that this man when he attained the age of forty will be caught, sentenced to death but he will not die. The trial proceeded as usual and he was found guilty and sentenced to death by the lower courts which was finally upheld by the apex court.
    7 days before his execution, Dr Mayor was asked his last wish and he wanted to see Mr. Cheiro before his death. So Mr. Cheiro was called from Italy and taken to Dr Mayor.
    Mr Cheiro had vividly mentioned about this meeting in his autobiography.
    This what he had written. “As soon as the broken man saw me in his prison cell he stretched out both his hands at me and said Mr. Cheiro I had read your predictions given to the press long ago. What ever you have said were all correct but still I can’t believe your last sentence, since after two days I am going to be executed. I saw both his hands again and found no sign of an imminent death. So my automatic utterance was "Perhaps some miracle will happen.”
    Mr. Cheiro decided to stay in America to watch the happenings as he was also curious to see if that man is destined not to die after two days. On the night of execution he could not sleep in his hotel room till the morning hours when the hawkers shouted – Dr. Mayor escapes chair. The chair did not work and the judge present, immediately converted the sentence to life imprisonment and Dr Mayor there after lead a happy life up to 70 years. ///

    இதனுடைய தமிழாக்கச் செய்தி முன்பு கட்டுரையாக பத்திரிக்கை ஒன்றில் வந்தது. அந்தப்பகுதியை வெட்டி எனது சேகரிப்புக் கிடங்கில் வைத்துள்ளேன்! தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  22. ///Blogger eswari sekar said...
    goodmorning sir.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  23. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம் ,
    ஜோதிடம் தான் பிரம்மாண்டம்,
    இன்றய பதிவு நன்றக உள்ளது
    நன்றி////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  24. ////Blogger KARIKAL said...
    Good morning sir/////

    நல்லது. நன்றி நண்பரே! என்ன பெயர் சாமி? கரிகால்வளவனா?

    ReplyDelete
  25. ///Blogger kmr.krishnan said...
    புதிய மாணவர்கள், அல்லது புதிதாகப் பதிவிட வ‌ந்துள்ள பழைய‌ மாணவர்கள்
    நலன் கருதி மீள் பதிவுகளில் மூழ்கிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது.நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!
    புவனேஷ்வரின் துடிப்பான, செரிவான பின்னூட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன./////

    மீள் பதிவு அல்ல. இதிலும் சில செய்திகள் உள்ளன! நன்றி!

    ReplyDelete
  26. //////Blogger Parvathy Ramachandran said...
    நல்ல பல தகவல்களை உள்ளடக்கிய சிறந்ததொரு பதிவைத்தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  27. /////Blogger அய்யர் said...
    எண்ணங்களின் பதிவுகளே ரேகைகள்..
    எண்ணங்களே வாழ்க்கை என்பது உளவியலாரின் கருத்தும் (உளவியல் துறையை சேர்ந்த லால்குடியாரின் கருத்தறிய ஆவல்)
    ரேகைகள் மூலம் எண்ணங்களை அறிந்தால் அவர்களின் வாழ்க்கை நிலையை அறியலாம் என்பதுவே
    எமது ஆய்வின் தொகுப்பு.. அன்று சென்னை பல்கலை துணை வேந்தர் வழங்கிய பாராட்டு பழைய நினைவுகளை நிழலாட வைத்தது..
    கைரேகை... நம்ம துறை பக்கம் என்பதால் கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி..
    மன்னிக்க.. எமது துறை என்பதினால் கூடுதல் ஆவலில் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது../////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  28. ////Blogger arul said...
    arumai ayya/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!

    ReplyDelete
  29. ////Blogger john said...
    very nice sir/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஜான்!

    ReplyDelete
  30. /////Blogger kmr.krishnan said...
    //எண்ணங்களே வாழ்க்கை என்பது உளவியலாரின் கருத்தும் (உளவியல் துறையை சேர்ந்த லால்குடியாரின் கருத்தறிய ஆவல்)//
    "நீ எதுவாக உன்னை எண்ணிக் கொள்கிறாயோ அதுவாகவே நீ ஆகின்றாய்" என்பார் சுவாமி விவேகாநந்தர்."ஏ! சிங்கக் குட்டிகளே! ஆட்டுக்குட்டிகள் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள்!" என்று அழகிய ஆங்கிலத்தில் அறைகூவல் விடுப்பார்.அவருடைய இந்தக் கருத்து ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஒரு கதையில் இருந்து பெறப்பட்டது.
    ஒரு கருவுற்ற தாய்ப் புலி ஆட்டு மந்தையை வேட்டையாடும் போது ஒரு புலிக் குட்டியைப் பிரசவித்துவிட்டு அதனை கவனிக்காமல் காட்டுக்குள் ஓடிவிட்டது.
    புலிக்குட்டி ஆட்டு மந்தையிலேயே வளர்ந்தது. ஆடுகளைப்போலவே இலை தழைகளைத்தின்று 'மே மே' என்று கத்திக்கொண்டு அலைந்தது.ஒரு நாள் ஒரு காட்டுப்புலி, ஆட்டு மந்தையை வேட்டையாடும் போது இந்த ஆட்டுப் புலியைப் பார்த்தது.'அடடா தான் ஒரு புலி என்று தெரியாத அறியாமையில் இருக்கிறானே' என்று அந்த பயந்த ஆட்டுப்புலியை இழுத்துச் சென்று ஒரு கிணற்றுக்குள் அதன் உருவத்தைக்காட்டி அதற்குத் 'தான் ஒரு புலிதான் ஆடல்ல' என்பதைப் புரிய வைத்தது.ஆடு என்று மனதில் நினைத்தவரை புலியும் ஆடாகவே இருந்தது.மனத்தில் புலி என்ற எண்ணம் வந்தவுடன் புலித்தன்மை தானக வந்துவிட்டது.எனவே எண்ணம் தான் வாழ்க்கை. மனம் போல மாங்கல்யம்./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!

    ReplyDelete
  31. /////Blogger ஸ்ரீராம். said...
    ஜோசியம் சொல்பவர்களில் சிலர் கெடுதலை மட்டுமேயும், சிலர் நல்லவைகளை மட்டுமேயும் சொல்வது ஏன்? ஜோசியம் சொல்பவர்களுக்கு வாக்கு காலம் என்று ஒன்று உண்டு என்றும் அந்தக் காலத்தில் சொல்லப் படும் பலன்களே உண்மையாக இருக்கும் என்பது உண்மையா? கடந்தகாலத்தை சிறப்பாகச் சொல்லும் பலர் எதிர்காலம் பற்றிச் சொல்வது நடப்பதில்லையே ஏன்? தன்னுடைய கைரேகையைத் தானே பார்த்துப் பலன் சொல்வது நடக்குமா? எண்ணங்கள் மாறினால் (கை) ரேகையும் மாறுமா?/////

    ஜோதிடருக்கும் கிரகபலன்கள் உண்டு அல்லவா? அவருக்கு நல்ல தசா/புத்திகள் நடக்கும்போதுதான் அவர் சொல்லும் பலன்கள் பலிக்கும்!
    கைரேகை சாஸ்திரம் எனக்குப் பழக்கமில்லை. அதனால் அது பற்றி விளக்கம் அளிக்க எனக்கு விருப்பமில்லை!

    ReplyDelete
  32. ///Blogger kmr.krishnan said...
    //ஜோசியம் சொல்பவர்களுக்கு வாக்கு காலம் என்று ஒன்று உண்டு என்றும் அந்தக் காலத்தில் சொல்லப் படும் பலன்களே உண்மையாக இருக்கும் என்பது உண்மையா? //
    இந்த‌ நிலையை நான் அனுபவித்து உள்ளேன். என் கேது தசாவின் போது நான் சொன்னது எல்லாம் பலித்தது என்று பலர் சொல்லியுள்ளார்கள். இத்தனைக்கும்
    அப்போது எனக்கு சோதிடம் தெரியாது என்றே சொல்லலாம்.மனம் முழுதும் இறைச் சிந்தனையும், நற்கருமமும் புரிந்து வந்த காலம். தரையில் கால் பாவாமல் எப்போதும் காற்றில் மிதப்பது போல ஓர் உணர்வில் இருந்து வந்தேன்.கிட்டத்தட்ட குறி சொல்பவனாக என்னை மக்கள் மாற்றிவிட்டார்கள்.
    நல்ல வேளையாக சுக்கிர தசாவில் அந்த நிலை கலைந்து சாதாரணமாக உணர ஆரம்பித்தேன்.இந்த அனுபவங்களையெல்லாம் எழுத ஆசைதான்.....
    ஆனால்?!!!//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  33. ////Blogger sivakumar Balu said...
    பாடம் விளக்கமாக நன்றாக உள்ளது.
    Thanks
    siva////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com