மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.7.12

Astrology திருமண வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?

Astrology திருமண வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?

அலசல் பாடம்

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரு சுப நிகழ்வு. அனைவருக்கும் அது நிகழ வேண்டும். சிலருக்கு இரண்டு அல்லது மூன்று முறை நிகழும். அத்தனை முறை எல்லாம் வேண்டாம். ஒரு முறை நிகழ்ந்தால் போதும். அது உருப்படியாக இருந்தால் போதும்.

எல்லோருக்கும் அது நிகழ்கிறதா? நிகழ்ந்த பின்னால் உருப்படியாக இருக்கிறதா?

சிலருக்கு நிகழ்ந்திருக்காது. சிலருக்கு நிகழ்ந்திருந்தாலும் கசப்பான அனுபவத்தால் ஆசாமி ஒடிந்து போயிருப்பான். அல்லது அதுவே பெண்ணாக இருந்தால் நொறுங்கிப்போயிருப்பாள். நொருங்கிப் போவதென்றால் என்னவென்று தெரியுமல்லவா?

36 வயதாகியும் இன்னும் திருமணம் கூடிவராமல் சிலபேர் காத்திருப்பார்கள். காத்திருப்பவர்களில் பெண்களின் நிலை மிகவும் சிரமத்திற்கு உரியது. கவலைக்கு உரியது. பெண்ணின் வசந்தகாலம் 36 ஆண்டுகள். அவள் 12 வயதில் பூப்படைந்திருந்தால் 48 வயதில் அவளுடைய வசந்தகாலம் காலாவதியாகிவிடும் (Expire)  மாதவிலக்கு அல்லது மாதவிடாய் எல்லாம் நின்று போய்விடும். அதற்குப் பிறகு  திருமணம் செய்து வைத்தால் அவளுக்கு எந்த மகிழ்ச்சியும் இருக்காது.

அத்துடன் மெனோபாஸ் வந்து படுத்தி எடுக்கும். மெனோபாஸ் பற்றித் தெரியாத அப்பாவிகளுக்காக அதை மூன்று வரிகளில் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன்.

Menopause is time in a woman's life when her periods (menstruation) eventually stop and the body goes through changes that no longer allow her to get pregnant. It is a natural event that normally occurs in women age 45 - 52

ஒரு பெண் 40 வயதாகியும் திருமணமாகாத நிலையில், மாப்பிள்ளை அப்படி வேண்டும், இப்படி வேண்டும் என்று பல நிபந்தனைகளை (conditions) விதித்தாள். அதைக் கண்ணுற்ற அவளுடைய தோழி சொன்னாள்:

“இருபதில் போட வேண்டிய நிபந்தனைகளை நாற்பதில் போட்டுக் கொண்டிருக்கிறாய். எந்தக் கண்டிஷனும் இல்லாமல், முழுக்கு நிற்பதற்குள் கிடைக்கிறவனைக் கல்யாணம் பண்ணிக்கொள்!”

உத்தேசமாக 12 பேர்களில் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு திருமணம் ஆகாது. தவறி ஆனாலும் திருமணவாழ்க்கை கெட்டுப்போய்
விடும். அது என்ன கணக்கு? அது தலை சுற்றுகிற பெரிய கணக்கு. அதை இன்னொரு நாள் விவரமாகப் பார்ப்போம். இப்போது பதிவு திசை மாறாமல் செல்கிற வழியிலேயே செல்லட்டும்

திருமணம் ஆகாமைக்கு ஜோதிடத்தில் ஒரு பெயர் உண்டு. திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் என்பார்கள்.

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் ஒன்றை இன்று அலசிப் பார்ப்போம்!
-------------------------------------------------------------------------
Example Horoscope for denial of Marriage

ஒரு அம்மணியின் ஜாதகம் இது

மகர லக்கினம். லக்கினாதிபதி ஏழில். லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறான். இது நல்ல அமைப்பு.

ஜாதகிக்கு அவன் சுயமாக நிற்கும் தன்மையை (standing Power) அளிப்பான்.

ஆனால் எட்டாம் அதிபதி சூரியன் நைசாக உள்ளே வந்து உறவாடிக் கொண்டிருக்கிறான். அது கேடானது. சனிக்கு கடும் பகைவன் அவன். அத்துடன் ஆறாம் அதிபதி (வில்லன்) புதனும் வந்து ஒட்டிக் கொண்டிருக்கிறான்.

அவர்கள் ஜாதகியின் வீரியத்தைக் குறைப்பார்கள்.

சுக ஸ்தானத்தில் கேது. அந்த வீட்டதிபதி எட்டில். சுகக் கேடு. நவாம்சத்தில் செவ்வாய் நீசம் பெற்றுள்ளான்.

சனியுடன் சுக்கிரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்?

அதீதமான காம உணர்வுகள் இருக்கும்.

ஜாதகிக்கும் இருந்தது.

தன்னைவிட இரண்டு வயது குறைவான இளைஞனைக் காதலித்ததோடு, திருமணமாகும் முன்பாகவே அவனுக்குத் தன்னைப் பலமுறை விருந்தாக்கி மகிழ்வித்தாள். தானும் மகிழந்தாள். அவன் கிரங்கிப் போனான். இவள் மீது பைத்தியமாகி விட்டான்.

அவனது பெற்றோர்களுக்கு, இந்தக் காதல் விவகாரம் தெரிந்தபோது, வயதில் மூத்த பெண் என்பதால் அவர்கள் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

அவன் போராடி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தபோது, இவள் சண்டித்தனம் செய்து மறுத்து விட்டாள்.

அதற்குக் காரணம், திருமணப் பேச்சின்போது, பையனின் தந்தை, இவளைத் தனியே சந்தித்துப் பேசிய தகாத வார்த்தைகள். இவள் ஒரேயடியாக மறுத்து விட்டாள். அவனுக்கு வேறு இடத்தில் திருமணமாகியது.

இவள் கடைசிவரை தனி மரமாகவே வாழ்ந்தாள்.

காரணம் கிரகக் கோளாறுதான்!

லக்கினத்தின் மீது நான்கு கிரகங்களின் பார்வை. இவளுக்கு முரட்டுக் குணத்தைக் கொடுத்தன. adjacency, unrelenting பிடிவாதக் குணம், வளைந்து கொடுத்துப் போகாத தன்மை!

ஏழில் சுக்கிரனுடன் சனியின் சேர்க்கை. இருவரும் சேர்ந்தால் அதீத காம உணர்வு. பிஞ்சிலேயே பழுத்துவிட்டாள்.

சின்ன வயதில் முடிந்தபோதெல்லாம் இன்பம் துய்த்தாள்

7ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள். கடுமையான கிரகயுத்தம் (Planetary war) களத்திரகாரகன் சுக்கிரன் சூரியனோடு ஜோதியில் கலந்து விட்டான் (அஸ்தமனமாகி விட்டான்) ஏழில் எல்லாக் கருமங்களும் அரங்கேறியுள்ளன.

அதனால் அவளுக்குத் திருமண வாழ்வு இல்லாமல் போய்விட்டது

இந்த விவகாரங்கள் எல்லாம் சனிதிசையில் நடந்தன. சனி லக்கின அதிபதி என்றாலும் கடுமையான கிரக யுத்ததில் இருக்கிறான். அத்துடன் கர்ம வினைப்பயன்களை அவன் யாராக இருந்தாலும் அளிக்கத்தவறுவதில்லை. அத்துடன் லக்கினத்தின் மேல் 6 மற்றும் 8 ஆம் அதிபதிகளின் பார்வை விழுகிறது. அதுவும் முக்கிய காரணமாகும். அதை மனதில் கொள்க!

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். மற்றவர்களுக்கும் பயன் படட்டும் என்பதற்காக இங்கே வகுப்பறையில் இன்று பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
 வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

35 comments:

  1. அன்புள்ள வாத்தியார் அவர்கட்கு வணக்கம். மேல்நிலையில் படித்த பாடம் திரும்பவும் படிக்கத்தந்தமைக்கு நன்றி. சிறு பிழை உள்ளது. ஏழாம் அதிபதி சுக்கிரன் என்று இருக்குமிடத்தில் திருமணகாரகன் சுக்கிரன் சூரியனோடு ஜோதியில் கலந்துவிட்டான் என இருக்கவேண்டும் என நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றிகள்.

    ReplyDelete
  2. குருவின் பார்வை கூட செல்லுபடியாகவில்லையே பாவம்...

    தாங்கள் சொல்லியுள்ளது போல்
    கர்ம வினைகள் சூழ்ந்து
    காமனால் வீழ்த்தியுள்ளது!
    கர்மகாரகன் தான் ஏது செய்வான்!

    பதிவுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. இந்த பதிவை படிக்கையில்
    இந்த நினைவுகள் தாம்......

    லால் குடி சகோதரர் முன்னர்
    லாவாகமாக கையாண்ட ஒரு பதிவு

    பென்ஷன் பணம் அவருக்கு
    பயன் உள்ளதாக இருக்கட்டுமே என

    60க்கு பிறகு ஒரு பிரம்மசாரி
    20யை கடந்த ஒருவரை மணம் செய்தது

    மண வாழ்க்கை என்பது
    மனப்பதால் மட்டுமல்ல

    தகுதியில்லாதவர் திருமணம் செய்யாமலிருப்பதும் உண்டு

    தகுதி யிருந்தும் மகிழ்ச்சி அடையாதவரும் உண்டு

    தகுதி இருந்தும்
    திருமண வாழ்வினை மறுப்பவர்
    அல்லது வெறுப்பவரும் உண்டு

    மேசையில் போட்டுவிட்டோம்
    சேர்ப்பதும் கோர்ப்பதும் உங்கள் பணி

    மனதில் வந்த
    மணப்பந்தல் என்ற பழைய திரைப்படத்திலிருந்து கவிஞரின் வரிகளை .... பகிர்நது கொள்கிறோம்

    மழலை பருவதில் தாய் காவல்
    வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்

    இளமயிலே ஒரு துணை காவல்
    இரந்துவிட்டால் பின் யார் காவல்

    சட்டம் என்பது வெளி காவல்
    தர்மம் என்றால் அது மன காவல்

    இரண்டும் போன பின் எது காவல்
    எது காவல் யார் காவல்

    காதல் முரிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்

    அவள் மாலை அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல்

    ReplyDelete
  4. //லால் குடி சகோதரர் முன்னர்
    லாவாகமாக கையாண்ட ஒரு பதிவு
    பென்ஷன் பணம் அவருக்கு
    பயன் உள்ளதாக இருக்கட்டுமே என//

    அந்தச் செய்தியை நான் ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்.அதனை வாத்தியார்தான் எடுத்து ஒரு கதையாகச் சொன்னார்(திரித்தார் என்றால் வாத்தியார் கோபித்துக் கொள்ளக் கூடாது ...ஹிஹிஹி....)

    அதற்குத் தஞ்சாவூரார் மறுப்புச்சொல்ல, அது ஒரு சுவாரஸ்யமான விவாதம் ஆயிற்று.

    'அப்படி நடக்க முடியாது பென்ஷன் கிடைக்காது' என்று ஒரு வாதம் முன் வைக்கப்பட்டது. பல இடங்களில் மெனக்கிட்டு விசாரித்தேன்.'சட்டப்படி திருமணம் செய்ய்ப்பட்ட‌ மனைவி என்றுதான் உள்ளதே தவிர, வயது வித்தியாசம் பற்றியெல்லாம் கூறவில்லை'என்ற பதில் கிடைத்தது.

    ஒரு வேளை அரசை ஏம்மாற்றும் நோக்கம் இருக்கும் என்ற சந்தேகம் வருமானால் விசாரிக்கிறோம் என்று கால தாமதம் செய்யலாமே தவிரப் பதிவுத் திருமணம் செய்த திருமணம் அந்த அபலைப் பெண்ணுக்கு குடும்ப ஓய்வூதியத்தைப் பெற்றுத்ததரும்.

    அருமையான பதிவு ஐயா. மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  5. மிக நல்ல ஜாதக அலசல் பாடம்.

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

    என்ற குறளை நினைவுபடுத்தியது. ஒருவரின் கர்மவினையின் அடிப்படையில் விதி வகுத்ததை அனுபவித்தே ஆகவேண்டும். கர்மகாரகன், தான் லக்கினாதிபதியே ஆயினும், தன் கடமையைச் சரியாக நிறைவேற்றி இருக்கிறார்.

    //அத்துடன் கர்ம வினைப்பயன்களை அவன் யாராக இருந்தாலும் அளிக்கத்தவறுவதில்லை. //

    உண்மையென உணர்த்தும் அருமையான பதிவு.

    ஜான் கீட்ஸின் அழகான வரிகளைத் தாங்கிய புகைப்படமும் அருமை. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. திருமனதடைக்கு எத்தனை காரனம் இருக்குமோ அத்தனையும் இப்பென்மனிக்கு இருக்கிறது

    /////சனி சுக்கிரன் சேர்க்கை அதீத காம உணர்வு//// ஏழாம் இடம் துணை என்பதால் அங்கு இருந்தால் மட்டுமா அல்லது இருக்கும் இடத்தை பொறுத்து அந்த உணர்வு மாறுமா,

    இன்றைய ஆக்கம் பழைய பாடத்தில் உள்ளது அய்யா.

    ReplyDelete
  7. ஜி ஆலாசியம் said...

    குருவின் பார்வை கூட செல்லுபடியாகவில்லையே பாவம்...

    அதே குருவின் பார்வை அந்த சனி+சுக்ரன் மீது விழுந்தால் குறையவோ காப்பாற்றப்படவோ செய்யுமா.

    ReplyDelete
  8. வாத்தியார் ஐயா !

    பிள்ளை குட்டிகள் என்று வத வதைனு பெறுவதை விட ஒன்னு பெற்றாலும்

    " கோகினூர் வைரம் ",

    போல

    " நல்ல பிள்ளை "!

    கிடைத்தால் அந்த ஒரு பாக்கியமே போதும். இந்த ஜென்மத்தில் கிடைத்த
    எதற்கும் ஈடு இணை ஆகாத பெரும் பாக்கியம் ஆகும்.

    இப்படி ஒரு பிள்ளைக்கு வேண்டி எத்தனை வருடம் தவம் இருந்தாலும் தகும் , எத்தனை துன்பத்தினை அனுபவித்தாலும் ஈடு இணை ஆக கூடியது ஆகும்.

    நிறையது அங்கு இங்கு ஒன்றுன்னு பலவகை ஆங்காங்கே நிற்கின்றது பரவாக இல்லை ஐயா!

    எல்லோரும் கூற கேட்டது உண்டு

    " மனு சாஸ்திரம் ",

    பற்றி கொஞ்சம் கூறுங்களே ஐயா !.
    --

    ReplyDelete
  9. ayya thula lagna buthan in lagna,
    raghu guru santhiran in third place
    sani in 8th and kethu in 9th place,
    suk in 11th and suryan in and sevvai in 12th place
    please analyis this horroscope
    born in 14.10.1972
    he is my relative
    anyway usful for analysis
    thanks in advance
    hemalatha

    ReplyDelete
  10. குருவிற்கு வணக்கம்
    அலசல் பாடம்
    நன்றகயுள்ளது
    நன்றி

    ReplyDelete
  11. 7ம் இடத்தை 4 கிரகங்கள் அவரவர் பங்குக்கு பதம் பார்த்தது போதாதென்று பெண்களுக்கு ஒழுக்கம், கற்பு இவற்றைக் குறிக்கும் 4ம் இடத்தை கேது தன் பங்குக்கு பதம் பார்த்திருக்கிறார். செவ்வாய் சந்திரனைப் பார்ப்பது, அவரது மனதை மேலும் சலனப் படுத்தி விட்டது போலும். அத்துடன் செவ்வாய் 2ம் இடத்தைப் பார்ப்பதும், சுக்கிரனுக்கு 2ம் இடத்தில் இருப்பதும், அவருக்கு குடும்பம் அமையாமல் செய்து விட்டார்.

    ReplyDelete
  12. எனக்கு தெரிந்த ஒரு சிறுவனுக்கு இதே போல் ஒரு அமைப்பு. இங்காவது பரவாயில்லை.அவன் ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி.அது போதாதென்று 7ம் அதிபதி சந்திரனுடன் ராகு கூட்டணி வேறு. அம்சத்திலும் சந்திரன் கேதுவுடன் கூட்டணி. ஒரே ஒரு நல்ல விசயம்...பத்தில் உள்ள குருவின் பார்வை 2ம் இடத்திற்கு உள்ளது. குரு பார்வை மட்டும் நல்ல குடும்ப வாழ்க்கை அமைத்து தருமா?

    ReplyDelete
  13. ///திருமணம் ஆகாமைக்கு ஜோதிடத்தில் ஒரு பெயர் உண்டு. திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் என்பார்கள்.///

    திருக்குறள் குறிப்பிடும் இல்லறமும், நல்ல வாழ்க்கைதுணை நலமும் கிடைக்காத பெண்ணின் ஜாதகம் என்று எடுத்துக்கொண்டு படித்தேன் ஐயா.
    திருமணம் நடக்கவில்லை என்பதை ஒப்புகொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.
    காரியம் ஆவதற்காக கையில் ஒரு கணையாழி மாட்டிவிட்டு காரியம் முடிந்தவுடன் கழண்டுகொள்ள வசதியாக அந்தக் காலத்திலேயே காந்தர்வ மணம் என்ற முறை சொல்வார்கள்.(காந்தர்வ விவாகம் இந்து தர்ம சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள எண் வகை விவாகங்களுள் ஒன்று. காந்தர்வ மணம் என்பது கருத்தொருமித்த ஆடவனும் பெண்ணும் தம்முள் இயைந்து கூடும் கூட்டமாகும். இவ்வகை மணம் பெரும்பாலும் களவொழுக்கமாகவே இருக்கும்., thanks wiki) அந்த வகையைச் சார்ந்தது இது. இயற்கையில் பிறந்து, வளர்ந்த உயிரினங்கள் இணைந்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் முயற்சிக்கு இல்லறம் என்று வைத்துக்கொண்டால், திருமணம் சட்டப்படி/சமூகத்தின்படி ஒரு அங்கீகாரம், அவ்வளவே. இந்தப் பையனும் பெண்ணும் அந்த அடுத்த தலைமுறையை உருவாக்கும் முயற்சி வரை அங்கீகாரம் இல்லாமலே சென்றுவிட்டார்கள்.

    திருமண அங்கீகாரம் கிடைத்த இல்வாக்கையும் முறிந்தோ, அல்லது வாழ்க்கைத்துணை மறைந்தோ தடைபடலாம். அதனால் சிறந்த இல்வாழ்க்கை அமையாமல் போகலாம். இந்தப் பெண் வாழ்கையில் இல்வாழ்கை அது போன்றே முடிந்துவிட்டது. அதற்கு கிரகங்கள் பழி செய்துவிட்டன. ஐந்தில் அமர்ந்த குருவும் கைவிட்டதுதான் கொடுமை. போங்கடா, நீங்களும் உங்கள் கல்யாணமும் என்று பெண் கொதித்தெழும் அளவுக்கு மாஜி மாமனார் என்ன கேட்டிருப்பார் என யூகிப்பதில் சிரமம் இருக்கவில்லை. அதனால் என்ன? பெண்ணிற்கு வயது 36 தானே ஆகிறது, அவளது சுயமரியாதைக்கு மதிப்பு கொடுக்கும், மறுமணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒரு ஆள் கிடைக்காமலா போகும். அதுபோல கிடைக்க வேண்டும், அவள் மனக்காயத்தை ஆற்றவேண்டும் என்றும் மனதார விரும்புகிறேன். அந்தப் பையனுக்கும் நாலில் கேது இருக்கலாம், அத்துடன் வாழ்கையில் ஒன்றிற்கு மேற்பட்டு பல மனைவிகள் அமைப்பும் இருந்திருக்கக் கூடும்.

    இந்தப் பெண்ணிற்கு திருமணம் நடக்கவில்லை என்று தமிழக அரசியல் சாணக்கியரிடம் சொல்லிப்பார்த்தால் ஒப்புக் கொள்ளமாட்டார். இந்தப் பெண்ணை செல்வி என்று சொல்லமாட்டேன் திருமதி என்றுதான் சொல்வேன் என்று அடம் பிடிப்பார். துறவு பூண்ட நித்திக்கும் மனைவி போன்ற துணை அமைந்து இல்வாழ்க்கை அமைந்தததுதானே. அது போன்ற உல்டா கேசு இது.

    இது சிறு வயதில் குமுதத்தில் படித்த ரா.கி. ரங்கராஜன் எழுதிய 'ராசி' என்ற கதையை நினைவுக்கு கொண்டு வந்தது. வங்கி ஊழியரான ஒரு பெண்ணும், தீயணைப்பு பணி செய்யும் ஒருவரும் (சியாமா? ராகுல்?), உறவினர் ஒப்புதல் அளிக்காததால் திருமணம் என்ற பந்தம் இல்லாமலே குடும்பம் நடத்தி குழந்தை பெறும் வரை செல்வார்கள். ஆனால் பாவம் தீயணைப்பு பணியில் கதாநாயகன் உயிரழக்க நேரிட்டு அவர்கள் இல்வாழ்கை தடைபடும். பரிதாபமான கதையின் முடிவை இன்றுவரை மறக்க முடியவில்லை.

    லக்கினாபதி ஏழில் சுக்கிரனுடன் அமர்ந்திருப்பது, (ஆறாம் அதிபதி என கணக்கில் கொல்லாமல்) ஒன்பதாம் அதிபதி புதனும் ஏழில் இருப்பது, சூரியனும் தனக்கு பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் பலனிழப்பது என்று நன்மை தரும் விதத்தில்/மாற்றுக் கோணத்தில் பார்க்கலாமா ஐயா? செவ்வாய் இரண்டாம் வீட்டைப் பார்பதுதான் பிடிக்கவில்லை. இந்தப் பதிவைப் படிக்கும்பொழுதே எனக்கும் ஏற்கனவே படித்து போன்ற நினைவு வந்தது. ஜாதக அலசல் பாடத்திற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. ///தமிழக அரசியல் சாணக்கியரிடம் சொல்லிப்பார்த்தால் .............

    துறவு பூண்ட நித்திக்கும்///

    அவரை அப்படி அழைப்பதும் சரியில்லை

    இவரை இப்படி அழைப்பதும் சரியில்லை..

    நிதி இருவர் பெயரிலும் உள்ளது..
    நிலைமை தான் மோசமாக உள்ளது

    ReplyDelete
  15. பின்னூட்டத்தையே ஆக்கம் போல எழுத அனுமதியுண்டா ஐயா? அப்போது நாள்தோறும் மாணவர் மலர் ஆகிவிடும்.(: (:

    ReplyDelete
  16. ///kmr.krishnan said...
    பின்னூட்டத்தையே ஆக்கம் போல எழுத அனுமதியுண்டா ஐயா? அப்போது நாள்தோறும் மாணவர் மலர் ஆகிவிடும்.///

    வழி மொழிகிறோம்..
    வழக்கமாக வரும் அந்த பெயர் வேண்டாமே..

    ReplyDelete
  17. /////Blogger sadan raj said...
    அன்புள்ள வாத்தியார் அவர்கட்கு வணக்கம். மேல்நிலையில் படித்த பாடம் திரும்பவும் படிக்கத்தந்தமைக்கு நன்றி. சிறு பிழை உள்ளது. ஏழாம் அதிபதி சுக்கிரன் என்று இருக்குமிடத்தில் திருமணகாரகன் சுக்கிரன் சூரியனோடு ஜோதியில் கலந்துவிட்டான் என இருக்கவேண்டும் என நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றிகள்/////.

    கவனக்குறைவு. மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  18. /////Blogger ஜி ஆலாசியம் said...
    குருவின் பார்வை கூட செல்லுபடியாகவில்லையே பாவம்...
    தாங்கள் சொல்லியுள்ளது போல்
    கர்ம வினைகள் சூழ்ந்து
    காமனால் வீழ்த்தியுள்ளது!
    கர்மகாரகன் தான் ஏது செய்வான்!
    பதிவுக்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  19. ////Blogger அய்யர் said...
    இந்த பதிவை படிக்கையில்
    இந்த நினைவுகள் தாம்......
    லால் குடி சகோதரர் முன்னர்
    லாவாகமாக கையாண்ட ஒரு பதிவு
    பென்ஷன் பணம் அவருக்கு
    பயன் உள்ளதாக இருக்கட்டுமே என
    60க்கு பிறகு ஒரு பிரம்மசாரி
    20யை கடந்த ஒருவரை மணம் செய்தது
    மண வாழ்க்கை என்பது
    மனப்பதால் மட்டுமல்ல
    தகுதியில்லாதவர் திருமணம் செய்யாமலிருப்பதும் உண்டு
    தகுதி யிருந்தும் மகிழ்ச்சி அடையாதவரும் உண்டு
    தகுதி இருந்தும்
    திருமண வாழ்வினை மறுப்பவர்
    அல்லது வெறுப்பவரும் உண்டு
    மேசையில் போட்டுவிட்டோம்
    சேர்ப்பதும் கோர்ப்பதும் உங்கள் பணி/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  20. /////Blogger kmr.krishnan said...
    //லால் குடி சகோதரர் முன்னர்
    லாவாகமாக கையாண்ட ஒரு பதிவு
    பென்ஷன் பணம் அவருக்கு
    பயன் உள்ளதாக இருக்கட்டுமே என//
    அந்தச் செய்தியை நான் ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்.அதனை வாத்தியார்தான் எடுத்து ஒரு கதையாகச் சொன்னார்(திரித்தார் என்றால் வாத்தியார் கோபித்துக் கொள்ளக் கூடாது ...ஹிஹிஹி....)
    அதற்குத் தஞ்சாவூரார் மறுப்புச்சொல்ல, அது ஒரு சுவாரஸ்யமான விவாதம் ஆயிற்று.
    'அப்படி நடக்க முடியாது பென்ஷன் கிடைக்காது' என்று ஒரு வாதம் முன் வைக்கப்பட்டது. பல இடங்களில் மெனக்கிட்டு விசாரித்தேன்.'சட்டப்படி திருமணம் செய்ய்ப்பட்ட‌ மனைவி என்றுதான் உள்ளதே தவிர, வயது வித்தியாசம் பற்றியெல்லாம் கூறவில்லை'என்ற பதில் கிடைத்தது.
    ஒரு வேளை அரசை ஏம்மாற்றும் நோக்கம் இருக்கும் என்ற சந்தேகம் வருமானால் விசாரிக்கிறோம் என்று கால தாமதம் செய்யலாமே தவிரப் பதிவுத் திருமணம் செய்த திருமணம் அந்த அபலைப் பெண்ணுக்கு குடும்ப ஓய்வூதியத்தைப் பெற்றுத்ததரும்.
    அருமையான பதிவு ஐயா. மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.//////

    பதிவு செய்யப்பெற்ற திருமணம் எனும்போது பிரச்சினை இருக்காது என்று வங்கியில் பணியாற்றும் நண்பர் ஒருவரிடம் உறுதி செய்து கொண்டபின்புதான் அக்கதையை எழுதினேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சார்!

    ReplyDelete
  21. /////Blogger Parvathy Ramachandran said...
    மிக நல்ல ஜாதக அலசல் பாடம்.
    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
    என்ற குறளை நினைவுபடுத்தியது. ஒருவரின் கர்மவினையின் அடிப்படையில் விதி வகுத்ததை அனுபவித்தே ஆகவேண்டும். கர்மகாரகன், தான் லக்கினாதிபதியே ஆயினும், தன் கடமையைச் சரியாக நிறைவேற்றி இருக்கிறார்.
    //அத்துடன் கர்ம வினைப்பயன்களை அவன் யாராக இருந்தாலும் அளிக்கத்தவறுவதில்லை. //
    உண்மையென உணர்த்தும் அருமையான பதிவு.
    ஜான் கீட்ஸின் அழகான வரிகளைத் தாங்கிய புகைப்படமும் அருமை. மிக்க நன்றி.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. ////Blogger thanusu said...
    திருமணதடைக்கு எத்தனை காரணம் இருக்குமோ அத்தனையும் இப்பெண்மணிக்கு இருக்கிறது
    /////சனி சுக்கிரன் சேர்க்கை அதீத காம உணர்வு//// ஏழாம் இடம் துணை என்பதால் அங்கு இருந்தால் மட்டுமா அல்லது இருக்கும் இடத்தை பொறுத்து அந்த உணர்வு மாறுமா,
    இன்றைய ஆக்கம் பழைய பாடத்தில் உள்ளது அய்யா./////

    இருந்தால் என்ன? சூடு பண்ணிக் கொடுத்திருக்கிறேன். சாப்பிடுங்கள்!

    ReplyDelete
  23. Blogger thanusu said...
    ஜி ஆலாசியம் said...
    குருவின் பார்வை கூட செல்லுபடியாகவில்லையே பாவம்...
    அதே குருவின் பார்வை அந்த சனி+சுக்ரன் மீது விழுந்தால் குறையவோ காப்பாற்றப்படவோ செய்யுமா.//////

    குரு பார்த்திருந்தால், காப்பாற்றியிருக்கும்! குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வது அதனால்தான்!

    ReplyDelete
  24. /////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயா !
    பிள்ளை குட்டிகள் என்று வத வதைனு பெறுவதை விட ஒன்னு பெற்றாலும்
    " கோகினூர் வைரம் ",
    போல
    " நல்ல பிள்ளை "!
    கிடைத்தால் அந்த ஒரு பாக்கியமே போதும். இந்த ஜென்மத்தில் கிடைத்த
    எதற்கும் ஈடு இணை ஆகாத பெரும் பாக்கியம் ஆகும்.
    இப்படி ஒரு பிள்ளைக்கு வேண்டி எத்தனை வருடம் தவம் இருந்தாலும் தகும் , எத்தனை துன்பத்தினை அனுபவித்தாலும் ஈடு இணை ஆக கூடியது ஆகும்.
    நிறையது அங்கு இங்கு ஒன்றுன்னு பலவகை ஆங்காங்கே நிற்கின்றது பரவாக இல்லை ஐயா!
    எல்லோரும் கூற கேட்டது உண்டு
    " மனு சாஸ்திரம் ",
    பற்றி கொஞ்சம் கூறுங்களே ஐயா!//////

    அனுஷ்கா சர்மாவைப்பற்றியும், அஞ்சலியைப் பற்றியும் (எங்கேயும், எப்போதும் நாயகி) எழுதினால் படிப்பதற்கு ஆள் கிடைக்கும். மனு சாஸ்திரம் பற்றி எழுதினால் (உங்களைத் தவிர வேறு) யார் படிப்பார்கள் சொல்லுங்கள்!

    ReplyDelete
  25. /////Blogger hema latha said...
    ayya thula lagna buthan in lagna,
    raghu guru santhiran in third place
    sani in 8th and kethu in 9th place,
    suk in 11th and suryan in and sevvai in 12th place
    please analyis this horroscope
    born in 14.10.1972 he is my relative
    anyway usful for analysis
    thanks in advance
    hemalatha////////

    பணிச்சுமைகளுக்கிடையே, தனிப்பட்டவர்களின் ஜாதகங்களை அலச நேரமில்லை அம்மணி. மன்னிக்கவும்!

    ReplyDelete
  26. Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    அலசல் பாடம்
    நன்றாகயுள்ளது
    நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. Blogger ananth said...
    7ம் இடத்தை 4 கிரகங்கள் அவரவர் பங்குக்கு பதம் பார்த்தது போதாதென்று பெண்களுக்கு ஒழுக்கம், கற்பு இவற்றைக் குறிக்கும் 4ம் இடத்தை கேது தன் பங்குக்கு பதம் பார்த்திருக்கிறார். செவ்வாய் சந்திரனைப் பார்ப்பது, அவரது மனதை மேலும் சலனப் படுத்தி விட்டது போலும். அத்துடன் செவ்வாய் 2ம் இடத்தைப் பார்ப்பதும், சுக்கிரனுக்கு 2ம் இடத்தில் இருப்பதும், அவருக்கு குடும்பம் அமையாமல் செய்து விட்டார்.

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!!

    ReplyDelete
  28. Blogger Arul said...
    எனக்கு தெரிந்த ஒரு சிறுவனுக்கு இதே போல் ஒரு அமைப்பு. இங்காவது பரவாயில்லை.அவன் ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி.அது போதாதென்று 7ம் அதிபதி சந்திரனுடன் ராகு கூட்டணி வேறு. அம்சத்திலும் சந்திரன் கேதுவுடன் கூட்டணி. ஒரே ஒரு நல்ல விசயம்...பத்தில் உள்ள குருவின் பார்வை 2ம் இடத்திற்கு உள்ளது. குரு பார்வை மட்டும் நல்ல குடும்ப வாழ்க்கை அமைத்து தருமா?//////

    அமைத்துத்தரும். உங்களுக்குத் தெரிந்த பையன் என்று சொல்லுகிறீர்கள் - இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனைக்கு நன்மையான பலன்கள் எப்போதும் உண்டு!

    ReplyDelete
  29. ///////Blogger தேமொழி said...
    ///திருமணம் ஆகாமைக்கு ஜோதிடத்தில் ஒரு பெயர் உண்டு. திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் என்பார்கள்.///
    திருக்குறள் குறிப்பிடும் இல்லறமும், நல்ல வாழ்க்கைதுணை நலமும் கிடைக்காத பெண்ணின் ஜாதகம் என்று எடுத்துக்கொண்டு படித்தேன் ஐயா.
    திருமணம் நடக்கவில்லை என்பதை ஒப்புகொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.
    காரியம் ஆவதற்காக கையில் ஒரு கணையாழி மாட்டிவிட்டு காரியம் முடிந்தவுடன் கழண்டுகொள்ள வசதியாக அந்தக் காலத்திலேயே காந்தர்வ மணம் என்ற முறை சொல்வார்கள்.(காந்தர்வ விவாகம் இந்து தர்ம சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள எண் வகை விவாகங்களுள் ஒன்று. காந்தர்வ மணம் என்பது கருத்தொருமித்த ஆடவனும் பெண்ணும் தம்முள் இயைந்து கூடும் கூட்டமாகும். இவ்வகை மணம் பெரும்பாலும் களவொழுக்கமாகவே இருக்கும்., thanks wiki) அந்த வகையைச் சார்ந்தது இது. இயற்கையில் பிறந்து, வளர்ந்த உயிரினங்கள் இணைந்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் முயற்சிக்கு இல்லறம் என்று வைத்துக்கொண்டால், திருமணம் சட்டப்படி/சமூகத்தின்படி ஒரு அங்கீகாரம், அவ்வளவே. இந்தப் பையனும் பெண்ணும் அந்த அடுத்த தலைமுறையை உருவாக்கும் முயற்சி வரை அங்கீகாரம் இல்லாமலே சென்றுவிட்டார்கள்.
    திருமண அங்கீகாரம் கிடைத்த இல்வாக்கையும் முறிந்தோ, அல்லது வாழ்க்கைத்துணை மறைந்தோ தடைபடலாம். அதனால் சிறந்த இல்வாழ்க்கை அமையாமல் போகலாம். இந்தப் பெண் வாழ்கையில் இல்வாழ்கை அது போன்றே முடிந்துவிட்டது. அதற்கு கிரகங்கள் பழி செய்துவிட்டன. ஐந்தில் அமர்ந்த குருவும் கைவிட்டதுதான் கொடுமை. போங்கடா, நீங்களும் உங்கள் கல்யாணமும் என்று பெண் கொதித்தெழும் அளவுக்கு மாஜி மாமனார் என்ன கேட்டிருப்பார் என யூகிப்பதில் சிரமம் இருக்கவில்லை. அதனால் என்ன? பெண்ணிற்கு வயது 36 தானே ஆகிறது, அவளது சுயமரியாதைக்கு மதிப்பு கொடுக்கும், மறுமணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒரு ஆள் கிடைக்காமலா போகும். அதுபோல கிடைக்க வேண்டும், அவள் மனக்காயத்தை ஆற்றவேண்டும் என்றும் மனதார விரும்புகிறேன். அந்தப் பையனுக்கும் நாலில் கேது இருக்கலாம், அத்துடன் வாழ்கையில் ஒன்றிற்கு மேற்பட்டு பல மனைவிகள் அமைப்பும் இருந்திருக்கக் கூடும்.
    இந்தப் பெண்ணிற்கு திருமணம் நடக்கவில்லை என்று தமிழக அரசியல் சாணக்கியரிடம் சொல்லிப்பார்த்தால் ஒப்புக் கொள்ளமாட்டார். இந்தப் பெண்ணை செல்வி என்று சொல்லமாட்டேன் திருமதி என்றுதான் சொல்வேன் என்று அடம் பிடிப்பார். துறவு பூண்ட நித்திக்கும் மனைவி போன்ற துணை அமைந்து இல்வாழ்க்கை அமைந்தததுதானே. அது போன்ற உல்டா கேசு இது.
    இது சிறு வயதில் குமுதத்தில் படித்த ரா.கி. ரங்கராஜன் எழுதிய 'ராசி' என்ற கதையை நினைவுக்கு கொண்டு வந்தது. வங்கி ஊழியரான ஒரு பெண்ணும், தீயணைப்பு பணி செய்யும் ஒருவரும் (சியாமா? ராகுல்?), உறவினர் ஒப்புதல் அளிக்காததால் திருமணம் என்ற பந்தம் இல்லாமலே குடும்பம் நடத்தி குழந்தை பெறும் வரை செல்வார்கள். ஆனால் பாவம் தீயணைப்பு பணியில் கதாநாயகன் உயிரழக்க நேரிட்டு அவர்கள் இல்வாழ்கை தடைபடும். பரிதாபமான கதையின் முடிவை இன்றுவரை மறக்க முடியவில்லை.
    லக்கினாபதி ஏழில் சுக்கிரனுடன் அமர்ந்திருப்பது, (ஆறாம் அதிபதி என கணக்கில் கொல்லாமல்) ஒன்பதாம் அதிபதி புதனும் ஏழில் இருப்பது, சூரியனும் தனக்கு பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் பலனிழப்பது என்று நன்மை தரும் விதத்தில்/மாற்றுக் கோணத்தில் பார்க்கலாமா ஐயா? செவ்வாய் இரண்டாம் வீட்டைப் பார்பதுதான் பிடிக்கவில்லை. இந்தப் பதிவைப் படிக்கும்பொழுதே எனக்கும் ஏற்கனவே படித்து போன்ற நினைவு வந்தது. ஜாதக அலசல் பாடத்திற்கு நன்றி ஐயா.//////

    தாய்க்குலம் சொன்னால் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும். காந்தர்வ மணம் என்று கதையை முடித்துவிட்டீர்களே. இன்றைய சமூக வாழ்க்கையில் (இந்திய மண்ணில்) காந்தர்வ மணம் உள்ளதா என்பதையும் நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  30. ////Blogger அய்யர் said...
    ///தமிழக அரசியல் சாணக்கியரிடம் சொல்லிப்பார்த்தால் .............
    துறவு பூண்ட நித்திக்கும்///
    அவரை அப்படி அழைப்பதும் சரியில்லை
    இவரை இப்படி அழைப்பதும் சரியில்லை..
    நிதி இருவர் பெயரிலும் உள்ளது..
    நிலைமை தான் மோசமாக உள்ளது//////

    காலம் ஒருநாள் மாறும்
    கலக்கம் எல்லாம் தீரும்
    என்று அவர்களுடைய ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!

    ReplyDelete
  31. /////Blogger kmr.krishnan said...
    பின்னூட்டத்தையே ஆக்கம் போல எழுத அனுமதியுண்டா ஐயா? அப்போது நாள்தோறும் மாணவர் மலர் ஆகிவிடும்.(: (://///

    மாற்றுக் கருத்து உள்ளவர்களும், கோணவழக்குப் பேசுபவர்களும், தங்கள் ஆக்கங்களைப் பின்னூட்டத்தில் எழுதுவார்கள். அதை என்ன செய்வது என்று சொல்லுங்கள் சார்!

    ReplyDelete
  32. /////Blogger அய்யர் said...
    ///kmr.krishnan said...
    பின்னூட்டத்தையே ஆக்கம் போல எழுத அனுமதியுண்டா ஐயா? அப்போது நாள்தோறும் மாணவர் மலர் ஆகிவிடும்.///
    வழி மொழிகிறோம்..
    வழக்கமாக வரும் அந்த பெயர் வேண்டாமே..////

    எந்தப் பெயரில் வந்தால் என்ன சுவாமி? மாற்றுக் கருத்து உள்ளவர்களும், கோணவழக்குப் பேசுபவர்களும், தங்கள் ஆக்கங்களைப் பின்னூட்டத்தில் எழுதுவார்கள். அதற்கு உங்களுடைய வழிமொழிதல் உண்டா?

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. || 7ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள். கடுமையான கிரகயுத்தம் (Planetary war) ஏழாம் அதிபதி சுக்கிரன் சூரியனோடு ஜோதியில் கலந்து விட்டான் (அஸ்தமனமாகி விட்டான்) ஏழில் எல்லாக் கருமங்களும் அரங்கேறியுள்ளன.
    ||

    ஏழாம் அதிபதி சந்திரன் மூன்றில் மீனத்தில் அல்லவா இருக்கிறார்? நீங்கள் களத்திர காரகனைக் குறித்தீர்களா?
    :))

    ReplyDelete
  35. //////Blogger அறிவன்#11802717200764379909 said...
    /////7ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள். கடுமையான கிரகயுத்தம் (Planetary war) ஏழாம் அதிபதி சுக்கிரன் சூரியனோடு ஜோதியில் கலந்து

    விட்டான் (அஸ்தமனமாகி விட்டான்) ஏழில் எல்லாக் கருமங்களும் அரங்கேறியுள்ளன./////
    ஏழாம் அதிபதி சந்திரன் மூன்றில் மீனத்தில் அல்லவா இருக்கிறார்? நீங்கள் களத்திர காரகனைக் குறித்தீர்களா? :))////

    ஆமாம். கவனக்குறைவு. இப்போது பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com