மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.7.12

Astrology அமெரிக்கக் கனவு நனவாகியதா?



Astrology அமெரிக்கக் கனவு நனவாகியதா?
அலசல் பாடம் 

இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு தமிழகத்தில் விண்ணப்பித்துள்ள வர்களின் எண்ணிக்கை சுமார் 1.75 லட்சம். இருக்கும் இடங்களின் எண்ணிக்கை சுமார் 1.71 லட்சம். விண்ணப்பித்த அத்தனை பேர்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.

விக்கி காமாட்சி அக்காவிடம் கேட்டு வாங்கிய புள்ளி விவரம்:
Tamil Nadu has 37 universities, 455 engineering colleges, 449 Polytechnic Colleges and 566 arts and science colleges இதில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளையும் சேர்த்தால் சுமார் 550 கல்லூரிகள் உள்ளன என்று மற்றொரு புள்ளி விவரம் கூறுகிறது.

இவற்றுள் தர வரிசையில் குறிப்பிடும்படியாக உள்ள கல்லூரிகள் எழுபத்தைந்தாம். அதில் இடம் கிடைத்துப் படிப்பவர்களுக்குத்தான் படிக்கும்போதே, வளாக நேர்காணலில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை.  படித்த பின்பு வேலை தேடி அலைய வேண்டியதாக இருக்கும். அல்லது கிடைக்கும் வேலையில், குறைந்த ஊதியத்திற்கு சேர்ந்து பணி செய்ய நேரிடும். சிரமப்பட்டு, இடம் பிடித்துப் படித்தும் திருப்தி இல்லாத நிலை.

இன்னும் சிலர் இங்கே பொறியியல் படித்த பின்பு, அமெரிக்கா சென்று, இரண்டு ஆண்டுகள் அங்கே M.S பட்டப் படிப்பைப் படிக்க விரும்புவார்கள். அதைப் படித்து தேர்ச்சி பெற்றால், நல்ல நிறுவனங்களில், அதிகமான ஊதியத்தில் வேலை கிடைக்கும். அங்கேயும் கிடைக்கும். இங்கேயும் கிடைக்கும்.

அப்படி மேல் படிப்பு, அதாவது வெளிநாடு சென்று மேல் படிப்புப் படிக்க ஜாதக ரீதியாக என்ன அமைப்பு இருக்க வேண்டும்?

இன்று ஒரு உதாரண ஜாதகத்துடன் அதை அலசுவோம்!
---------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்

சிம்ம லக்கின ஜாதகம்.
லக்கினத்தில் 3 (வெற்றிக்கான இடம்) & 10ம் (தொழில்/வேலைக்கான இடம்) இடங்களுக்கு அதிபதியான சுக்கிரன் அமர்ந்திருக்கிறார்
லக்கினாதிபதி சூரியன் இரண்டில். வித்யாகாரகன் புதன் மற்றும் தொழில்காரகன் சனியுடன். புதன் இங்கே உச்சம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும்.
4ல் அந்த வீட்டுக்காரன் செவ்வாய் ஆட்சி பலத்துடன்
ஒரே ஒரு குறை காலசர்ப்ப தோஷ ஜாதகம். அது லக்கினத்தில் உள்ள பரல்களுக்கான வயதைக் கடந்தவுடன் யோகமாக மாறும் தன்மையை உடையது. ஆகவே கவலைப் படத் தேவையில்லை!

இது ஒரு பெண்ணின் ஜாதகம்
ஜாதகி பொறியியல் படிப்பை முடிக்கும்போது அவருக்கு கேது திசை நடைபெற்றது. கேது குருபகவானின் வீட்டில் இருக்கிறார்.
வெளிநாட்டு வாழ்க்கைக்கு உரிய இடம் ஒன்பதாம் வீடு.
ஜாதகத்தில் குரு பகவான் மூன்றில் இருந்து ஒன்பதாம் வீட்டைப் பார்க்கிறார்.
கேது பகவான் செவ்வாயைப் போல செயல்படுவார். ஒன்பதாம் வீட்டு அதிபதி செவ்வாய். ஆகவே ஒன்பதாம் அதிபதியின் வேலையைத் தன்னுடைய திசையில் செய்து ஜாதகியைக் கேது பகவான் வெளிநாட்டிற்குப் படிக்க அனுப்பிவைத்தார்.

கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை ஜல ராசிகள் (Watery Signs)
ஊரைவிட்டுக் கடத்துவதில் 12ஆம் அதிபதிக்கும் பங்குண்டு. அவர் (சந்திரன்) ஜலராசியான விருச்சிகத்தில் வந்து செவ்வாயுடன் (4th Lord) கைகோர்த்து அமர்ந்திருந்ததால், ஜாதகியைக் கடல் கடந்த தேசத்துக்கு அனுப்பி வைத்தார். ஜாதகி படிக்கச் சென்றதில் அவருக்கும் பங்குண்டு!
கேதுவால் நன்மையும் கிடைக்கும் அதை மனதில் கொள்க!
ஜாதகியின் அமெரிக்கக் கனவு நனவாகியது!

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

73 comments:

  1. நல்ல அலசல் ஐயா!

    காலசர்ப்ப தோஷம் என்பது ஒரு நல்ல அமைப்பு என்றே சொல்லவேண்டும்!!??
    ஆமாம், எப்படியும் காலசர்ப்ப தோஷத்திற்கு பின்பு ஒரு உன்னதநிலை ஜாதகனுக்குக் கிடைக்கப் போகிறது. அந்த நிலையை சரியாக தக்க வைத்துக் கொள்ள நல்ல ஞானம் வேண்டும் (அனுபவ ஞானம்) அதை இந்த தோசக் காரர்கள் தாங்களே அனுபவித்து உணர்ந்தும் கொள்வார்கள். ஆக, இது ஒரு வரமே. துயரத்தை அனுபவிக்க கஷ்டம் அதே வேளையில்... அந்த துயரம் பூர்வ ஜன்மப் பாவங்களின் செலவில் தான் நடந்து கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்றல்லவே!

    அலசல் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் பன்னிரென்டிற்கு உரியவன், ஒன்பதிற்குரியவன் அவனது வீட்டில் இருந்து எட்டாம் வீட்டில், இரண்டாம் வீட்டில் ஆறிற்கு உரியவன்.... இந்த அமைப்புகள் முறையே பாக்கிய ஸ்தானத்தின் பாதிப்பு, சொந்த நாட்டில் / ஊரில் /வீட்டில் (தேர் திருவிழா..) என்று அனுபவிக்கும் பாக்கியம் போய்... கல்வி, வேலை, வீடு என்று முன்னேற அழிந்தாலும் சுகம் பாதிக்கப் படுகிறது தானே! குடும்பம் எங்கே (சுற்றம் சூழ சொந்தங்கள் வாழ்த்த) ஒண்டிக் குடுத்தனம் தானே!... ஐந்தில் கேது அந்த பூர்வ புண்ணியம் தான் காலசர்ப்ப தோஷத்தின் முன்னே கோடி பிடித்துச் செல்கிறது!.

    சுய ஞானம் கிடைக்கப் பெறுவது தான் பாக்கியம்.. அதற்கு இந்த சோதனைகள் / கடும் பயிற்சி அவசியம். வாத்தியார் சொல்வது போல்... இது இருந்தால் அது இல்லை... என்பதை இன்னும் அழுத்திச் சொன்னால் இது இருந்தால் அது இல்லையே என்று ஏங்கி இருப்பதை அனுபவிக்காமல் விடுவது தானே மனித இயல்பு எனலாம். எல்லோருக்கும் 337 தானே.

    பாடத்திற்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. முன்னேற அலைந்தாலும் என்று இருக்க வேண்டும்...

    பெரும்பாலும் முக்கியமாக இந்த அலசல் ஜாதகத்தில் தனது வீட்டிற்கு பன்னிரெண்டில் அமரவில்லை... என்பது சிறப்பு. அதே நேரம் ஆருக்கு எட்டு என்று இருக்கிறது!!!! இல்லாம் கால சர்ப்ப தோஷத்திற்கு காரணம் வேண்டும் அல்லவா!

    நேற்று சிலரின் பின்னூட்டத்தில் கேட்டக் கேள்வியில் அதைப் பார்த்தேன்... நன்றாக ஆட்சி உச்சம் பெற்றாலும்... முக்கியமாக சில கிரகங்கள் அந்த வீட்டிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் போச்சே! அதன் பலன் அப்படி தான் இருக்கும். அதோடு கூட இருப்பவன் கோபக் காரன், மன நோயாளியாக இருந்தாலும் வில்லங்கம் தான்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. வாத்தியார் அமெரிக்காவைப் பற்றிய பதிவில் எதற்காக ஆக்ஸ்ஃபோர்ட் படம்?!?!?!?!?!

    மேலதிகத் தகவல்கள்:
    பொறியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.8 லட்சம் மாணவர்களுக்கான, "ரேங்க்' பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் நேற்று வெளியிட்டார்.........
    விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் உண்டு என, பல்கலை அறிவித்துள்ளது. ........மாநிலத்தில் உள்ள, 504 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்து 51 ஆயிரத்து 454 இடங்கள் உள்ளன. இதில், 1 லட்சத்து 71 ஆயிரத்து 417 இடங்கள், கவுன்சிலிங் மூலமும், மீதமுள்ள 80 ஆயிரத்து 37 இடங்கள், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவு மூலமும் நிரப்பப்படும். இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.
    REF:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=497834


    சித்தாள் வேலை செய்யும் சிவில் இன்ஜினியர்கள்
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=494166
    ______________________
    எனக்கு லக்கினத்திற்கு மூன்றாவது வெற்றிக்குரிய இடத்தில் அழையா விருந்தாளி மாந்தி!!!!

    எனக்கு பாப்கார்ன் பதிவுகள் மிகவும்பிடித்துள்ளது. பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. ///நேற்று சிலரின் பின்னூட்டத்தில் கேட்டக் கேள்வியில் அதைப் பார்த்தேன்... நன்றாக ஆட்சி உச்சம் பெற்றாலும்... முக்கியமாக சில கிரகங்கள் அந்த வீட்டிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் போச்சே! அதன் பலன் அப்படி தான் இருக்கும். அதோடு கூட இருப்பவன் கோபக் காரன், மன நோயாளியாக இருந்தாலும் வில்லங்கம் தான்.///

    நன்றி ஆலாசியம்

    //// சுய ஞானம் கிடைக்கப் பெறுவது தான் பாக்கியம்.. அதற்கு இந்த சோதனைகள் / கடும் பயிற்சி அவசியம். வாத்தியார் சொல்வது போல்... இது இருந்தால் அது இல்லை... என்பதை இன்னும் அழுத்திச் சொன்னால் இது இருந்தால் அது இல்லையே என்று ஏங்கி இருப்பதை அனுபவிக்காமல் விடுவது தானே மனித இயல்பு எனலாம். ////

    அட அதுக்கெல்லாம்“ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய்”ன்னு சொல்றீங்களா? :))))))))))

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. எனக்கு இரண்டும் கலந்தால் போல தான் இருந்தது வெளிநாட்டு வாசம்.

    சொல்லி வைத்தது போல எதிரிகளும் துரோகம் செய்பவர்களும் நான் provoke பண்ணாமலேயே அங்கு உருவானார்கள். ஐந்து பேரை சந்தித்தால் மூன்று பேர் அடுத்த நாளே எதிரி ஆனான். அத்தனை பெரும் இந்திய மாணவர்கள். வெள்ளைக்காரர்களோடு தான் பின் குடி இருந்தேன்.

    நன்றாக சம்பாதித்து சமைத்து சாப்பிட்டேன், சுகமாக இருந்தேன், விருதும் வாங்கினேன். அதே சமயம் ஏன் எனவே தெரியாமல் விட்ட குறை தொட்ட குறை போல எதிரிகளையும் பெற்றேன். இதில் விந்தை என்னவெனில் அத்தனை பேரும் ஒன்று யாரென்றே தெரியாதவர்களாக இருப்பார்கள், அல்லது என்னிடம் உதவி பெற்றவர்களாக இருப்பார்கள். அதுக்குன்னே இருக்கே ஒரு லக்கினம், அந்த லக்கின விசேஷம் போல. (ராமாயணம் மகாபாரதம் படித்து ஆசைப்பட்டு சிறு குழந்தையிலேயே பாரம்பரிய வில் வித்தையில் ஆர்வம் கொண்டு வெளிநாட்டிலும் பயிற்சி எடுத்து அதில் இப்போது ஓரளவு தேறி உள்ளேன்)

    என்ன ஒரு நல்ல விஷயம்? தாய் நாட்டில் என்ன இல்லை வெளி நாட்டுக்கு வந்தோம் என புரிந்தது. போன வேலை முடிந்தது. திரும்பி விட்டேன். இனி கடல் கடந்து போனால் அது ராமேஸ்வரம், அந்தமான் நிகோபார் அல்லது த்வாரகைக்காக தான் இருக்கும்!

    ஆலாசியம் அண்ணா சொல்வது போல அத்தனையும் அனுபவம் தான்.

    குறை என்று இப்போது சில நாட்களாக அவ்வளவாக இல்லை.

    நல்ல பெற்றவர்கள் அமைந்து சொகுசாக வளர்ந்தேன், ஓரளவுக்கு நன்றாக சம்பாதித்து சொகுசாக வாழ்ந்தும் விட்டேன். ஒரே ஆசை இழுத்து கொண்டு போகாமல் பட்டென்று போய் விட வேண்டும்!

    வளர்ச்சியையும் பார்த்தேன், a matching வீழ்ச்சியையும் பார்த்தேன். வளர்ந்த போது ஆஹா என போற்றிய அதே வாய்கள் வீழ்ந்த போது "எனக்கு அப்பவே தெரியும்" என தூற்றியதையும் பார்த்தேன். "அட சீ, மக்களின், உறவுகளின் பாராட்டும் தூற்றுதலும் இவ்வளவுதானா" என பட்டு விட்டது. "நம்பிய நெஞ்சம் வஞ்சம் செய்யுமா, கள்ளமற்ற இந்த கண்களுக்குள்ளும் கபடம் இருக்குமா" என அழுத பின் ஓரளவு தெளிவு பிறந்தது.

    அனுபவங்கள் நல்லதோ கெட்டதோ, வரும் காலத்துக்கு உதவும் இல்லையா. இளமையிலேயே பட வேண்டியதை பட்டு விடுவது நல்லது. அந்த அனுபவங்கள் பிற்காலத்தில் கை கொடுக்கும் பாருங்கள்.

    இது புலம்பல் அல்ல. பகிர்கிறேன். அவ்வளவு தான்.

    நல்ல பாடம் தந்த வாத்தியாருக்கு நன்றிகள்.

    இந்த நாளும் எந்த நாளும் எல்லாருக்கும் இனிய நாளாக நலம் பயக்க இறையருளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. அன்புள்ள வாத்தியார் அய்யாவிற்கு வணக்கம். நல்ல அலசல் பாடம்.கிரகங்கள் எப்படி,தாங்கள் அமர்வினால்,பார்வையால்,ஆதிபத்தியத்தால் வேலை செய்கின்றன என குரும்பதிவிலும் தெளிவாக விளக்கியதற்காக நன்றிகள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.

    ReplyDelete
  9. ஜலராசியாக விருச்சிகம் இருப்பது எவ்வாறு என்று குழம்புகிறது.மேஷத்திற்கும் விருச்சிகத்திற்கும் ஒரே ராசி அதிபதி செவ்வாய் தான். மேஷ ராசியை நெருப்பு என்றும் விருச்சிகத்தை நீர் என்றும் சொவது ஏதோ முரணாகத் தோன்றுகிறது.

    கடல் கடந்து படிக்கச்சென்ற அம்மணியின் ஜாதகம் நன்கு அலசப்பட்டுள்ளது.நன்றி ஐயா!

    ReplyDelete
  10. //ஒரே ஆசை இழுத்து கொண்டு போகாமல் பட்டென்று போய் விட வேண்டும்!//

    புவனேஷ்வர் அடிக்கடி இதைப்போல ஒரு தத்துவக் கருத்தை கூறி வருகிறார்.
    'பட்'டென்றோ 'இழுத்துக்கொண்டோ'என்பதுவும் நம் கையில் இல்லை.

    என் உறவினர் பெண் ஒருத்திக்கு ஒரு ஸ்பாஸ்டிக் குழந்தை. இப்போது இருபதுவயது. கண்ணும் தெரியாது, பேசமுடியாது, சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு,வலிப்பு நோய், கால் நடக்க முடியாது...... மல்டிபிள் டிசபிலிடி.
    இருந்த இடத்தில் தன்னை அறியாமல் மலஜலம் கழிப்பான்.பிறந்தது முதல் இன்றுவரை அவனை யாரிடமும் காண்பித்துக் கொடுக்காமல், தானே அந்த ஏழைத்தாய் பராமரிக்கிறாள்.மாதம் 3000 மருத்துவச் செலவு ஆகிறது. அவள் பட்டினி கிடந்து அவனுக்கு மருந்து வாங்கிக் கொடுக்கிறாள்.இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் நாம் இழுத்துக் கொண்டு போக வேண்டும் என்று விதி இருந்தாலும் நமக்கு உதவிக்கு அந்த ஏழைத்தாயைப் போல யாராவது ஒருவரை கடவுள் அனுப்புவார்.கவலைப்பட வேண்டாம்.

    ReplyDelete
  11. அலசல் பாடம் புரியும்படி இருந்தது. ஒரே ஒரு டவுட். யோககாரகன் செவ்வாயுடன் விரயாதிபதி சேர்ந்திருப்பதால் விரயாதிபதி நன்மை செய்வாரா அல்லது யோககாரகன் கெடுவாரா? விரயாதிபதி நீச்சம் என்பதால் ஒருவேளை பாதிப்பு இல்லையோ? புத ஆதித்ய மற்றும் சந்திர மங்கள யோகங்கள் இருக்கின்றன இந்த ஜாதகத்தில்.

    ReplyDelete
  12. பொறியல் படிப்பில் சேர விண்ணப்பித்த//

    பொறியல் படிப்பா? கேள்விப்பட்டதேயில்ல!!!!

    எனக்கு பாப்கார்ன் பதிவுகள்//

    இது பாப்கார்ன் பதிவு இல்லை, வாத்தியார் அலசல் பாடம் என்று இதை வகைப்படுத்தியிருக்கிறார்.

    ReplyDelete
  13. //புவனேஷ்வர் அடிக்கடி இதைப்போல ஒரு தத்துவக் கருத்தை கூறி வருகிறார்.
    'பட்'டென்றோ 'இழுத்துக்கொண்டோ'என்பதுவும் நம் கையில் இல்லை.//

    Ah, dear Sir, that was inspired by Rebecca (Novel by Daphne Du Maurier)!

    தத்துவம் என்று இல்லை. அவ்வப்போது தோன்றும். எனது தாய்வழி தாத்தாவும் பாட்டியும் பட்ட அவஸ்தைகளை நான் கண்ணால் பார்த்ததால் ஒரு பயம். பத்திரமாக பார்த்து கொண்டாலும் அதே உறவினர்கள் திரை மறைவில் சலித்து கொண்டதையும், கோபத்தில் வார்த்தையை விடுவதையும் பார்த்து இருக்கிறேன். அத்தனையையும் சகித்து கொண்டு ஒரு வருஷம் இருவரும் படுக்கையில். அத்தியாவசிய தேவைகளை கூட தானே நிறைவேற்றி கொள்ளாத நிலை கொடியது. இளமையில் வறுமையை விட முதுமையில் இயலாமை மிகக்கொடியது.

    எனக்கு அச்சத்தை ஊட்டும் ஒரே விஷயம் அது தான். வேறு எதற்கும் அஞ்சினேன் இல்லை.

    அன்றில் பறவைகளை போல வாழ்ந்த எனது தாத்தாவும் பாட்டியும் மறைவிலும் ஒன்றாகவே சென்றனர். பாட்டி போன வெகு குறைந்த காலத்தில் தாத்தாவும் போய் விட்டார். சாப்பிடாமல் தூங்காமல் பேசாமல் இருந்தார். almost உடன்கட்டை என்கிற மாதிரி கால வித்தியாசம்.

    Oopsie daisy! I hear that dreaded inner voice that yells to me "Hey Bhuvaneshwar, you had better shut up now"!!!!!

    இதற்கு மேல் சொன்னால் பதிவுக்கு சம்பந்தம் இல்லை என memo வரும் ஆதலால், வகுப்பறை விதிமுறைகளை மதித்து, நல்ல பிள்ளையாக எனது திருவாயை அடக்கி வைக்கிறேன்!

    ReplyDelete
  14. ////Blogger ஜி ஆலாசியம் said...
    நல்ல அலசல் ஐயா!
    காலசர்ப்ப தோஷம் என்பது ஒரு நல்ல அமைப்பு என்றே சொல்லவேண்டும்!!??
    ஆமாம், எப்படியும் காலசர்ப்ப தோஷத்திற்கு பின்பு ஒரு உன்னதநிலை ஜாதகனுக்குக் கிடைக்கப் போகிறது. அந்த நிலையை சரியாக

    தக்க வைத்துக் கொள்ள நல்ல ஞானம் வேண்டும் (அனுபவ ஞானம்) அதை இந்த தோசக் காரர்கள் தாங்களே அனுபவித்து உணர்ந்தும்

    கொள்வார்கள். ஆக, இது ஒரு வரமே. துயரத்தை அனுபவிக்க கஷ்டம் அதே வேளையில்... அந்த துயரம் பூர்வ ஜன்மப் பாவங்களின்

    செலவில் தான் நடந்து கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்றல்லவே!
    அலசல் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் பன்னிரென்டிற்கு உரியவன், ஒன்பதிற்குரியவன் அவனது வீட்டில் இருந்து எட்டாம் வீட்டில்,

    இரண்டாம் வீட்டில் ஆறிற்கு உரியவன்.... இந்த அமைப்புகள் முறையே பாக்கிய ஸ்தானத்தின் பாதிப்பு, சொந்த நாட்டில் / ஊரில் /வீட்டில்

    (தேர் திருவிழா..) என்று அனுபவிக்கும் பாக்கியம் போய்... கல்வி, வேலை, வீடு என்று முன்னேற அழிந்தாலும் சுகம் பாதிக்கப் படுகிறது

    தானே! குடும்பம் எங்கே (சுற்றம் சூழ சொந்தங்கள் வாழ்த்த) ஒண்டிக் குடுத்தனம் தானே!... ஐந்தில் கேது அந்த பூர்வ புண்ணியம் தான்

    காலசர்ப்ப தோஷத்தின் முன்னே கோடி பிடித்துச் செல்கிறது!.
    சுய ஞானம் கிடைக்கப் பெறுவது தான் பாக்கியம்.. அதற்கு இந்த சோதனைகள் / கடும் பயிற்சி அவசியம். வாத்தியார் சொல்வது போல்...

    இது இருந்தால் அது இல்லை... என்பதை இன்னும் அழுத்திச் சொன்னால் இது இருந்தால் அது இல்லையே என்று ஏங்கி இருப்பதை

    அனுபவிக்காமல் விடுவது தானே மனித இயல்பு எனலாம். எல்லோருக்கும் 337 தானே.
    பாடத்திற்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா!/////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete
  15. ////Blogger ஜி ஆலாசியம் said...
    முன்னேற அலைந்தாலும் என்று இருக்க வேண்டும்...
    பெரும்பாலும் முக்கியமாக இந்த அலசல் ஜாதகத்தில் தனது வீட்டிற்கு பன்னிரெண்டில் அமரவில்லை... என்பது சிறப்பு. அதே நேரம்
    ஆருக்கு எட்டு என்று இருக்கிறது!!!! இல்லாம் கால சர்ப்ப தோஷத்திற்கு காரணம் வேண்டும் அல்லவா!
    நேற்று சிலரின் பின்னூட்டத்தில் கேட்டக் கேள்வியில் அதைப் பார்த்தேன்... நன்றாக ஆட்சி உச்சம் பெற்றாலும்... முக்கியமாக சில
    கிரகங்கள் அந்த வீட்டிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் போச்சே! அதன் பலன் அப்படி தான் இருக்கும். அதோடு கூட இருப்பவன்
    கோபக் காரன், மன நோயாளியாக இருந்தாலும் வில்லங்கம் தான்.
    நன்றிகள் ஐயா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. /////Blogger தேமொழி said...
    வாத்தியார் அமெரிக்காவைப் பற்றிய பதிவில் எதற்காக ஆக்ஸ்ஃபோர்ட் படம்?!?!?!?!?!
    மேலதிகத் தகவல்கள்:
    பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.8 லட்சம் மாணவர்களுக்கான, "ரேங்க்' பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் நேற்று வெளியிட்டார்.........
    விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் உண்டு என, பல்கலை அறிவித்துள்ளது. ........மாநிலத்தில் உள்ள, 504 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்து 51 ஆயிரத்து 454 இடங்கள் உள்ளன. இதில், 1 லட்சத்து 71 ஆயிரத்து 417 இடங்கள், கவுன்சிலிங் மூலமும், மீதமுள்ள 80 ஆயிரத்து 37 இடங்கள், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவு மூலமும் நிரப்பப்படும். இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.
    REF:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=497834
    சித்தாள் வேலை செய்யும் சிவில் இன்ஜினியர்கள்
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=494166 ______________________
    எனக்கு லக்கினத்திற்கு மூன்றாவது வெற்றிக்குரிய இடத்தில் அழையா விருந்தாளி மாந்தி!!!!
    எனக்கு பாப்கார்ன் பதிவுகள் மிகவும்பிடித்துள்ளது. பதிவிற்கு நன்றி ஐயா.////

    அடுத்த பிறவியிலாவது அங்கே படிக்க வேண்டும் என்ற ஆசையினால்தான் படத்தைப் போட்டேன்!:-))))
    அமெரிக்கா என்றால் எது நினைவிற்கு வரவேண்டுமோ, அந்தப் படத்தை இப்போது போட்டுள்ளேன். பதிவை மீண்டும் ஒருமுறை பாருங்கள்!
    இது பார்ப்கார்ன் பதிவு அல்ல! அலசல் பாடம். பதிவில் எழுதியுள்ளேனே!

    ReplyDelete
  17. ////Blogger தேமொழி said...
    ///நேற்று சிலரின் பின்னூட்டத்தில் கேட்டக் கேள்வியில் அதைப் பார்த்தேன்... நன்றாக ஆட்சி உச்சம் பெற்றாலும்... முக்கியமாக சில கிரகங்கள் அந்த வீட்டிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் போச்சே! அதன் பலன் அப்படி தான் இருக்கும். அதோடு கூட இருப்பவன்
    கோபக் காரன், மன நோயாளியாக இருந்தாலும் வில்லங்கம் தான்.///
    நன்றி ஆலாசியம்
    //// சுய ஞானம் கிடைக்கப் பெறுவது தான் பாக்கியம்.. அதற்கு இந்த சோதனைகள் / கடும் பயிற்சி அவசியம். வாத்தியார் சொல்வது
    போல்... இது இருந்தால் அது இல்லை... என்பதை இன்னும் அழுத்திச் சொன்னால் இது இருந்தால் அது இல்லையே என்று ஏங்கி
    இருப்பதை அனுபவிக்காமல் விடுவது தானே மனித இயல்பு எனலாம். ////
    அட அதுக்கெல்லாம்“ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய்”ன்னு சொல்றீங்களா? :))))))))))////

    டோய் எல்லாம் போட்டுச் சொல்வாரா? சாதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறார்!

    ReplyDelete
  18. /////Blogger Bhuvaneshwar said...
    எனக்கு இரண்டும் கலந்தால் போல தான் இருந்தது வெளிநாட்டு வாசம்.
    சொல்லி வைத்தது போல எதிரிகளும் துரோகம் செய்பவர்களும் நான் provoke பண்ணாமலேயே அங்கு உருவானார்கள். ஐந்து பேரை
    சந்தித்தால் மூன்று பேர் அடுத்த நாளே எதிரி ஆனான். அத்தனை பெரும் இந்திய மாணவர்கள். வெள்ளைக்காரர்களோடு தான் பின் குடி இருந்தேன். நன்றாக சம்பாதித்து சமைத்து சாப்பிட்டேன், சுகமாக இருந்தேன், விருதும் வாங்கினேன். அதே சமயம் ஏன் எனவே தெரியாமல் விட்ட குறை தொட்ட குறை போல எதிரிகளையும் பெற்றேன். இதில் விந்தை என்னவெனில் அத்தனை பேரும் ஒன்று யாரென்றே தெரியாதவர்களாக இருப்பார்கள், அல்லது என்னிடம் உதவி பெற்றவர்களாக இருப்பார்கள். அதுக்குன்னே இருக்கே ஒரு
    லக்கினம், அந்த லக்கின விசேஷம் போல. (ராமாயணம் மகாபாரதம் படித்து ஆசைப்பட்டு சிறு குழந்தையிலேயே பாரம்பரிய வில்
    வித்தையில் ஆர்வம் கொண்டு வெளிநாட்டிலும் பயிற்சி எடுத்து அதில் இப்போது ஓரளவு தேறி உள்ளேன்)
    என்ன ஒரு நல்ல விஷயம்? தாய் நாட்டில் என்ன இல்லை வெளி நாட்டுக்கு வந்தோம் என புரிந்தது. போன வேலை முடிந்தது. திரும்பி
    விட்டேன். இனி கடல் கடந்து போனால் அது ராமேஸ்வரம், அந்தமான் நிகோபார் அல்லது த்வாரகைக்காக தான் இருக்கும்!
    ஆலாசியம் அண்ணா சொல்வது போல அத்தனையும் அனுபவம் தான்.
    குறை என்று இப்போது சில நாட்களாக அவ்வளவாக இல்லை.
    நல்ல பெற்றவர்கள் அமைந்து சொகுசாக வளர்ந்தேன், ஓரளவுக்கு நன்றாக சம்பாதித்து சொகுசாக வாழ்ந்தும் விட்டேன். ஒரே ஆசை
    இழுத்து கொண்டு போகாமல் பட்டென்று போய் விட வேண்டும்!
    வளர்ச்சியையும் பார்த்தேன், a matching வீழ்ச்சியையும் பார்த்தேன். வளர்ந்த போது ஆஹா என போற்றிய அதே வாய்கள் வீழ்ந்த போது
    "எனக்கு அப்பவே தெரியும்" என தூற்றியதையும் பார்த்தேன். "அட சீ, மக்களின், உறவுகளின் பாராட்டும் தூற்றுதலும் இவ்வளவுதானா" என
    பட்டு விட்டது. "நம்பிய நெஞ்சம் வஞ்சம் செய்யுமா, கள்ளமற்ற இந்த கண்களுக்குள்ளும் கபடம் இருக்குமா" என அழுத பின் ஓரளவு தெளிவு
    பிறந்தது.
    அனுபவங்கள் நல்லதோ கெட்டதோ, வரும் காலத்துக்கு உதவும் இல்லையா. இளமையிலேயே பட வேண்டியதை பட்டு விடுவது நல்லது.
    அந்த அனுபவங்கள் பிற்காலத்தில் கை கொடுக்கும் பாருங்கள்.
    இது புலம்பல் அல்ல. பகிர்கிறேன். அவ்வளவு தான்.
    நல்ல பாடம் தந்த வாத்தியாருக்கு நன்றிகள்.
    இந்த நாளும் எந்த நாளும் எல்லாருக்கும் இனிய நாளாக நலம் பயக்க இறையருளை வேண்டுகிறேன்./////

    இறைவனிடம் விட்டுவிட்டால், மற்றதை எல்லாம் மறந்துவிடலாம். நம்பிக்கையோடு வணங்குவதுதானே முக்கியம்!

    ReplyDelete
  19. Blogger sadan raj said...
    அன்புள்ள வாத்தியார் அய்யாவிற்கு வணக்கம். நல்ல அலசல் பாடம்.கிரகங்கள் எப்படி,தாங்கள் அமர்வினால், பார்வையால்,ஆதிபத்தியத்தால் வேலை செய்கின்றன என குரும்பதிவிலும் தெளிவாக விளக்கியதற்காக நன்றிகள். கடுகு
    சிறுத்தாலும் காரம் குறையாது./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger kmr.krishnan said...
    ஜலராசியாக விருச்சிகம் இருப்பது எவ்வாறு என்று குழம்புகிறது.மேஷத்திற்கும் விருச்சிகத்திற்கும் ஒரே ராசி அதிபதி செவ்வாய் தான்.
    மேஷ ராசியை நெருப்பு என்றும் விருச்சிகத்தை நீர் என்றும் சொவது ஏதோ முரணாகத் தோன்றுகிறது.
    கடல் கடந்து படிக்கச்சென்ற அம்மணியின் ஜாதகம் நன்கு அலசப்பட்டுள்ளது.நன்றி ஐயா!/////

    கடகம், விருச்சிகம். மீனம் ஆகிய மூன்றும் ஜல ராசிகளாகும் சுவாமி. பழைய பாடங்களில் விவரம் உள்ளது!

    ReplyDelete
  21. /////Blogger kmr.krishnan said...
    //ஒரே ஆசை இழுத்து கொண்டு போகாமல் பட்டென்று போய் விட வேண்டும்!//
    புவனேஷ்வர் அடிக்கடி இதைப்போல ஒரு தத்துவக் கருத்தை கூறி வருகிறார்.
    'பட்'டென்றோ 'இழுத்துக்கொண்டோ'என்பதுவும் நம் கையில் இல்லை.
    என் உறவினர் பெண் ஒருத்திக்கு ஒரு ஸ்பாஸ்டிக் குழந்தை. இப்போது இருபதுவயது. கண்ணும் தெரியாது, பேசமுடியாது, சிறுநீரகக்

    கோளாறு, இதயக் கோளாறு,வலிப்பு நோய், கால் நடக்க முடியாது...... மல்டிபிள் டிசபிலிடி.
    இருந்த இடத்தில் தன்னை அறியாமல் மலஜலம் கழிப்பான்.பிறந்தது முதல் இன்றுவரை அவனை யாரிடமும் காண்பித்துக் கொடுக்காமல்,

    தானே அந்த ஏழைத்தாய் பராமரிக்கிறாள்.மாதம் 3000 மருத்துவச் செலவு ஆகிறது. அவள் பட்டினி கிடந்து அவனுக்கு மருந்து வாங்கிக்

    கொடுக்கிறாள்.இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் நாம் இழுத்துக் கொண்டு போக வேண்டும் என்று விதி இருந்தாலும் நமக்கு உதவிக்கு

    அந்த ஏழைத்தாயைப் போல யாராவது ஒருவரை கடவுள் அனுப்புவார்.கவலைப்பட வேண்டாம்./////

    நஷ்டத்தை விதி கொடுக்கும். நஷ்ட ஈட்டை இறைவன் கொடுப்பார்! அதனால்தான் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  22. Blogger Uma said...
    அலசல் பாடம் புரியும்படி இருந்தது. ஒரே ஒரு டவுட். யோககாரகன் செவ்வாயுடன் விரயாதிபதி சேர்ந்திருப்பதால் விரயாதிபதி நன்மை
    செய்வாரா அல்லது யோககாரகன் கெடுவாரா? விரயாதிபதி நீச்சம் என்பதால் ஒருவேளை பாதிப்பு இல்லையோ? புத ஆதித்ய மற்றும் சந்திர மங்கள யோகங்கள் இருக்கின்றன இந்த ஜாதகத்தில்.//////

    யோககாரகன், உடன் சேரும் விரையாதிபதியின் விரையத்தைக் குறைத்துவிடுவார். சந்திர மங்கள யோகமும் விரையாதிபதியின் விரையத் தன்மையை நீக்கிவிடும்

    ReplyDelete
  23. ///Uma said...
    பொறியல் படிப்பில் சேர விண்ணப்பித்த//
    பொறியல் படிப்பா? கேள்விப்பட்டதேயில்ல!!!!///


    தினமலர் தளத்தில் அப்படிதான் இருக்கிறது உமா, வெட்டி ஒட்டியது மட்டுமே என் வேலை, நான் சரியாக கவனிக்கவில்லை (உமாவிடம் தினமலர் மாட்டியதில் எனக்கு ஏன் இந்த அற்ப மகிழ்ச்சி என்று புரியவில்லையே)



    ///எனக்கு பாப்கார்ன் பதிவுகள்//
    இது பாப்கார்ன் பதிவு இல்லை, வாத்தியார் அலசல் பாடம் என்று இதை வகைப்படுத்தியிருக்கிறார்.///


    :))) இதுக்கு என்ன பதில் சொல்லி தப்பிகிறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.
    ம்ம்ம்ம். நான் படிக்கும்போது சாதாரணக் கண்ணாடிதான் போடுவேன் அதான் கவனிக்கவில்லை ( நீங்க படிக்கும்பொழுது பூதக் கண்ணாடி போடுவீங்களா?)

    ReplyDelete
  24. அலசல் பதிவு அருமை. 'கேதுவால் நன்மையும் கிடைக்கும்' பட்டென்று மனதில் நிற்கிறது. ஆனால் பூர்வ புண்ணியாதிபதி, 3ல். கேது 5ல். படிக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்தவர், மழலை பாக்கியத்தில் கைவைப்பாரா?!!

    ReplyDelete
  25. குருவிற்கு வணக்கம்
    கேதுவால் நன்மைய்ள்ளது,
    புரிந்து கொண்டேன் ஜயா
    அருமையான் பாப்கார்ன் பதிவு
    நன்றி

    ReplyDelete
  26. ( நீங்க படிக்கும்பொழுது பூதக் கண்ணாடி போடுவீங்களா?)//

    கண்ணாடியே போடமாட்டேன், அதான் தெளிவா எல்லாமே (குறிப்பா எழுத்துப் பிழைகள்) தெரியுது!!!!!

    ReplyDelete
  27. கேதுவால் நன்மைய்ள்ளது, புரிந்து கொண்டேன் ஜயா
    அருமையான் பாப்கார்ன் பதிவு //

    இந்த வாரம் மூச்சூடும் பாப்கார்ன் பதிவுகள்தான் என்று வாத்தியார் சுந்தரிக்கு அளித்த பதிலை எல்லோரும் நல்லா நினைவில் வைத்திருக்கிறார்கள், ஹி ஹி! இதுக்குத்தான் சிலபசை வெளியிட்டதும் மாத்தக்கூடாதுங்கறது!!!!!!

    ReplyDelete
  28. //// Uma said...
    ( நீங்க படிக்கும்பொழுது பூதக் கண்ணாடி போடுவீங்களா?)//

    கண்ணாடியே போடமாட்டேன், அதான் தெளிவா எல்லாமே (குறிப்பா எழுத்துப் பிழைகள்) தெரியுது!!!!!////

    நல்லவேளை நான் எப்படியோ தப்புச்சு விட்டேன் இம்முறை......

    எதுக்கும் முன்னாடியே சொல்லிடுறேன்... கண்ணாடி போடாமல் எழுதும் போதும்; நிறைய எழுதும் போதும் தவிர்க்க முடியவில்லை. கண்ணாடி போட்டு முன்னாடிப் பார்த்தா கழுத்தும்வலிக்குது. ஒத்தவிரலில் எழுதுபவன் நான் அதனால் தட்டச்சுப் பலகையில் மாத்திரமே கண் இருப்பதாலும் இது சாதாரணமாக நடக்கிறது...

    இருந்தாலும் உமா.. இரண்டில் குரு இருந்தால் இப்படித்தான் போலும்... :):))))

    ReplyDelete
  29. நல்லவேளை நான் எப்படியோ தப்புச்சு விட்டேன் இம்முறை..//

    நீங்க ஏன் தப்பித்தீர்கள் என்றால் இப்போ எல்லாம் உங்கள் பின்னூட்டத்தில் தவறுகள் கண்டுப்பிடிப்பது என்பது ரொம்ப டயர்டான வேலையாக ஆகிவிட்டதால்தான், ஹி ஹி. அதனால் ரொம்ப சந்தோஷப்படவேண்டாம்!!!

    நான் அதனால் தட்டச்சுப் பலகையில் மாத்திரமே கண் இருப்பதாலும்//
    அப்பப்ப மானிட்டரையும் பார்க்கலாமில்ல!!!

    இரண்டில் குரு இருந்தால் இப்படித்தான் போலும்... :):))))//
    :))))))))))))

    ReplyDelete
  30. /// Uma said...
    நல்லவேளை நான் எப்படியோ தப்புச்சு விட்டேன் இம்முறை..//

    நீங்க ஏன் தப்பித்தீர்கள் என்றால் இப்போ எல்லாம் உங்கள் பின்னூட்டத்தில் தவறுகள் கண்டுப்பிடிப்பது என்பது ரொம்ப டயர்டான வேலையாக ஆகிவிட்டதால்தான், ஹி ஹி. அதனால் ரொம்ப சந்தோஷப்படவேண்டாம்!!!///

    ஹி..ஹி..ஹி..:)::))))

    ReplyDelete
  31. கும்ப லக்னம்.4,9 ஆம் வீட்டுக்காரன் சுக்ரன் 2-ல் உச்சம்.அம்சத்தில் ஆட்சி.ராசியில் சுக்கிரன் சூரியன்,புதனுடன் சேர்ந்து இருக்கிறார்.

    லக்னாதிபதி சனி 12-ல் ஆட்சி.சந்திரன் 6-ல் ஆட்சி.ராசியில் 7-ல் நட்பாக இருக்கும் குரு அம்சத்தில் உச்சமாக இருக்கிறார்.
    புதன் ராசியில் நீசம்.3,10 ஆம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் சமம்.

    வெளிநாடு போய் படிக்கணும் படிக்கணும் என்று சும்மா நொய் நொய் என்றிருக்கும் என் மகன் ரிஷிக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதா???

    ReplyDelete
  32. ஐயா,

    நல்ல விளக்கங்கள்..நன்றி...எம்.ஜி.ஆர் அவர்களும் வெளிநாடு சென்றார் சிகிச்சைக்காக. அதில் 12ம் வீடு மட்டும் சம்பந்தபடுமா? அல்லது 9ம் வீட்டிற்கும் பங்கு இருக்குமா?

    ReplyDelete
  33. ////Blogger Parvathy Ramachandran said...
    அலசல் பதிவு அருமை. 'கேதுவால் நன்மையும் கிடைக்கும்' பட்டென்று மனதில் நிற்கிறது. ஆனால் பூர்வ புண்ணியாதிபதி, 3ல். கேது 5ல். படிக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்தவர், மழலை பாக்கியத்தில் கைவைப்பாரா?!!//////

    மழலை பாக்கியத்திற்கு 5ஆம் வீடு, அதன் அதிபதி, அதன் காரகன் என்று மூன்று விதிகள் (Rules) உள்ளன. பழைய பாடங்களில் எழுதியுள்ளேன். படித்தீர்களா?

    ReplyDelete
  34. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    கேதுவால் நன்மைய்ள்ளது,
    புரிந்து கொண்டேன் ஜயா
    அருமையான் பாப்கார்ன் பதிவு
    நன்றி/////

    பார்ப்பாகார்ன் பதிவல்ல சுவாமி. அலசல் பாடம் இது!

    ReplyDelete
  35. /////Blogger அமுதா கிருஷ்ணா said...
    கும்ப லக்னம்.4,9 ஆம் வீட்டுக்காரன் சுக்ரன் 2-ல் உச்சம்.அம்சத்தில் ஆட்சி.ராசியில் சுக்கிரன் சூரியன்,புதனுடன் சேர்ந்து இருக்கிறார்.
    லக்னாதிபதி சனி 12-ல் ஆட்சி.சந்திரன் 6-ல் ஆட்சி.ராசியில் 7-ல் நட்பாக இருக்கும் குரு அம்சத்தில் உச்சமாக இருக்கிறார்.
    புதன் ராசியில் நீசம்.3,10 ஆம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் சமம்.
    வெளிநாடு போய் படிக்கணும் படிக்கணும் என்று சும்மா நொய் நொய் என்றிருக்கும் என் மகன் ரிஷிக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதா???/////

    லக்கினாதிபதி 12ல் இருப்பதால் கடும் முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் புதன் வேறு நீசம். 7ல் குரு உச்சமாக இருப்பதாலும், சுக்கிரன் உச்சமாக இருப்பதாலும் வாய்ப்பு உள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. //////Blogger Arul said...
    ஐயா,
    நல்ல விளக்கங்கள்..நன்றி...எம்.ஜி.ஆர் அவர்களும் வெளிநாடு சென்றார் சிகிச்சைக்காக. அதில் 12ம் வீடு மட்டும் சம்பந்தபடுமா? அல்லது 9ம் வீட்டிற்கும் பங்கு இருக்குமா?/////

    எம்.ஜி.ஆர் மட்டுமல்ல என்.டி.ஆர் அவர்களும் சென்று வந்தார். இருவருமே சிகிச்சைக்காகச் சென்று வந்தார்கள். ஒன்பதாம் அதிபதி 12ல் இருந்தால் ஜாதகன் சிகிச்சைக்காக மட்டுமே வெளிநாட்டிற்குச் சென்று வருவான்!

    ReplyDelete
  37. இன்றும் ஒரு நல்ல பாடத்தின் அலசல் நன்றிகள் அய்யா.

    ///வெளி நாட்டு வாழ்கைக்கு உரிய இடம் ஒன்பதாம் வீடு///

    ///ஊரை விட்டு கடத்துவதில் பனிரெண்டாம் அதிபதிக்கும் பங்கு உண்டு//

    எனக்கு சரியாகத்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.எனக்கு ஒன்பதுக்கும் பனிரெண்டுக்கும் உடைய புதன் ஒன்பதில் ஆட்சி.பல காலம் ஆகிவிட்டது வெளிநாடு வந்து. இனி வெளி நாடு வேண்டாம் என இரண்டு முறை முடிவு செய்தும், முடியவில்லை,சென்ற ஆண்டு தீர்க்கமாக முடிவு செய்து வீட்டுக்கு போய் சொந்த பிசினஸ் செய்ய ஆயத்த பனிகள் துவங்கி தோல்வியான போது, மீண்டும் அதே கம்பெனியிலிருந்து இன்னும் கூடுதல் சம்பளம் கூடுதல் சலுகைகள் கொடுத்து அழைத்தார்கள்.

    நான் மிகவும் மதிக்கும் எங்கள் பக்க ஜோதிடர் திரு விஸ்வ அருனாசல அய்யர் அவர்கள் ,நீங்கள் நினைத்தாலும் இப்போது உங்களுக்கு வெளினாட்டு வாழ்கை முடியாது,சனி திசை துவங்கும் போதுதான் அது முடியும் , என்றார். எல்லம் இறைவன் செயல்.

    ReplyDelete
  38. ஐயா வணக்கம்,


    வெந்து போன இடத்தில் இன்னும் குணம் ஆகாமல் இருக்கின்ற பொழுது( புன்னு) ஈட்டியை கொண்டு குத்தி விட்டிர்களே ஐயா!

    ஏன் ஐயா இப்படி எல்லாம் பாடம் நடத்துகின்றீர்கள் ஐயா ?


    இது சுயநலமான கேள்விதான் ஆனால், தாங்கள் என்னுடைய ஜோதிட குருநாதர் என்கின்ற உரிமையில் கேக்கின்றேன் ஐயா!.

    ReplyDelete
  39. Uma said......மூச்சூடும் பாப்கார்ன்.....

    பாப்கார்னில் இப்படி ஒருவகை இருக்கிறதா?

    ReplyDelete
  40. Sir
    how to predict onsite opportunties for working professional.

    Doubt about bittergourd chapter.

    If Sun is in dhulam and Sukran also sitting with him as aatchi, then sun's neecham will get rolled out ?
    They say Sun in neecham will separate from father and affect father, then all kids born in Ippasi month will have this problem.

    ReplyDelete
  41. பாப்கார்னில் இப்படி ஒருவகை இருக்கிறதா?//

    இது வாத்தியார் உபயோகித்த வார்த்தை.

    ReplyDelete
  42. அலசல் பாடம் மிகவும் அருமை !!!. நன்றி அய்யா.

    ReplyDelete
  43. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  44. //////Blogger thanusu said...
    இன்றும் ஒரு நல்ல பாடத்தின் அலசல் நன்றிகள் அய்யா.
    ///வெளி நாட்டு வாழ்கைக்கு உரிய இடம் ஒன்பதாம் வீடு///
    ///ஊரை விட்டு கடத்துவதில் பனிரெண்டாம் அதிபதிக்கும் பங்கு உண்டு//
    எனக்கு சரியாகத்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.எனக்கு ஒன்பதுக்கும் பனிரெண்டுக்கும் உடைய புதன் ஒன்பதில் ஆட்சி.பல காலம் ஆகிவிட்டது வெளிநாடு வந்து. இனி வெளி நாடு வேண்டாம் என இரண்டு முறை முடிவு செய்தும், முடியவில்லை,சென்ற ஆண்டு தீர்க்கமாக முடிவு செய்து வீட்டுக்கு போய் சொந்த பிசினஸ் செய்ய ஆயத்த பனிகள் துவங்கி தோல்வியான போது, மீண்டும் அதே கம்பெனியிலிருந்து இன்னும் கூடுதல் சம்பளம் கூடுதல் சலுகைகள் கொடுத்து அழைத்தார்கள்.
    நான் மிகவும் மதிக்கும் எங்கள் பக்க ஜோதிடர் திரு விஸ்வ அருணாசல அய்யர் அவர்கள் ,நீங்கள் நினைத்தாலும் இப்போது உங்களுக்கு வெளினாட்டு வாழ்கை முடியாது,சனி திசை துவங்கும் போதுதான் அது முடியும் , என்றார். எல்லம் இறைவன் செயல்.//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  45. //////Blogger Maaya kanna said...
    ஐயா வணக்கம்,
    வெந்து போன இடத்தில் இன்னும் குணம் ஆகாமல் இருக்கின்ற பொழுது( புன்னு) ஈட்டியை கொண்டு குத்தி விட்டிர்களே ஐயா!
    ஏன் ஐயா இப்படி எல்லாம் பாடம் நடத்துகின்றீர்கள் ஐயா ?
    இது சுயநலமான கேள்விதான் ஆனால், தாங்கள் என்னுடைய ஜோதிட குருநாதர் என்கின்ற உரிமையில் கேக்கின்றேன் ஐயா!.//////

    ஈட்டியா? கோவை வட்டத்தில் ஈட்டி எல்லாம் கிடையாது ராசா!

    ReplyDelete
  46. /////Blogger thanusu said...
    Uma said......மூச்சூடும் பாப்கார்ன்.....
    பாப்கார்னில் இப்படி ஒருவகை இருக்கிறதா?/////

    முச்சூடும் என்றால் முழுவதும் என்று பொருள்!

    ReplyDelete
  47. ////Blogger VAOrnaments said...
    Sir
    how to predict onsite opportunties for working professional.
    Doubt about bittergourd chapter.
    If Sun is in dhulam and Sukran also sitting with him as aatchi, then sun's neecham will get rolled out ?
    They say Sun in neecham will separate from father and affect father, then all kids born in Ippasi month will have this problem./////

    ஐப்பசியில் பிறந்த குழந்தை உறவைப் பிரிக்கும் என்பதில் உண்மை இல்லை! எதையாவது கேட்டு, உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள். onsite opportunities களுக்கெல்லாம் இனிமேல் யாராவது பலன் எழுதினால்தான் உண்டு! தற்சமயம் இல்லை!

    ReplyDelete
  48. //////Blogger Uma said...
    பாப்கார்னில் இப்படி ஒருவகை இருக்கிறதா?//
    இது வாத்தியார் உபயோகித்த வார்த்தை./////

    முச்சூடும் என்றால் முழுவதும் என்று பொருள்!

    ReplyDelete
  49. /////Blogger Balamurugan Jaganathan said...
    அலசல் பாடம் மிகவும் அருமை !!!. நன்றி அய்யா./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  50. I thought I will offer a little explanation for the word முச்சூடு.

    முச்சூடு = மூன்று சூடு = காலை இளவெயில் ஒரு சூடு, மத்தியான உச்சி வெய்யில் ஒரு சூடு, மாலை வெயில் ஒரு சூடு. அதாவது நாள் முழுவதும் 9day time/work day) என்று பொருள். ஒரு நாள் முழுமையையும் குறிக்கும் பதம் முச்சூடு.

    ReplyDelete
  51. வாத்தியார் அய்யா, என் சொந்தத்தில் ஒருவர் - கன்னி ராசி - ஹஸ்த நட்சத்திரம், நாற்பத்தி நான்கு வயது ஆன அவருக்கு - வெளிநாட்டு யோகமும், ஆனால் கடந்த நான்கு வருடங்களாக நிரந்தர வேலை இல்லாமல் இருக்கு. இந்த நான்கு வருடங்களில் அவர் இரண்டு இடங்களில் மொத்தம் பத்து மாதங்களே மட்டுமே வேலை பார்த்துள்ளார். முதலில் இரண்டு வருடங்கள் வேலையில் இல்லை. கிடைத்த வேலையில் ஆறு மாதங்களே நீடித்தார். பிறகு சரியாக ஒரு வருடம் வேலை இல்லை. மீண்டும் நான்கு மாதங்களே வேலையில் இருந்தார். இப்போது மனமுடைந்து உள்ளார்.

    சிம்ம லக்னத்தில், குரு வாசம் செய்கிறார். இரண்டாம் இடத்தில சந்திரனும் கேதுவும், எட்டாம் இடத்தில ராகுவும் , சனியும், பத்தாம் இடத்தில சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் வெள்ளி என காலசர்பா தோஷ ஜாதகம். இப்போது சனி மஹா திசை ஆரம்பித்துள்ளது. ஏழரையில் இரண்டாம் சுற்று.

    இது வரை ஆறு வருடங்கள் வெளி நாட்டில் வசித்து வேலை செய்துள்ளார். நண்பர்கள் யாரும் உதவுவதில்லை. இவராக நிறைய பேருக்கு உதவி செய்கிறார்.

    அவரிடம் பேசுபவர்கள் எல்லாம், வெளிநாட்டில் வேலை செய்ய மட்டுமே கேட்கிறார்கள். நடக்குமா?

    ReplyDelete
  52. அலசல் அருமை..

    அங்கிருப்பவர்களுக்கு
    இது வெளிநாடு

    இங்கு இருப்பவருக்கு
    அது வெளிநாடு..

    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்

    நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
    நாயகமே நீயே சொந்தம்

    என்ற
    கவிஞரின் வரிகளை
    கருத்தில் வைத்து

    விவரித்து சொன்னாலும்
    சுருக்கி சொன்னாலும்

    நச்சுன்னு இருக்கு அதற்கு ஒரு
    நன்றிகள்

    ReplyDelete
  53. எனக்கு சிறு வயதிலேயே (1 முதல் 19 வயது வரை) ராகு தசை வந்து போய் விட்டது. மற்ற கிரக தசையில் ராகு மற்றும் கேது புத்தி/அந்தரங்களில் நிறைய நன்மை ஏற்பட்டிருக்கிறது. எனக்கு இப்போது நடக்கும் சனி தசை கேது புத்தியையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

    ReplyDelete
  54. ராகு கேது இவர்கள் திரிகோண ஸ்தானம் ஏதாவதொன்றில் இருந்தால் பெரும்பாலும் தங்கள் தசா புத்திகளில் நன்மை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. கேது இங்கு குறிப்பிட்ட ஜாதகத்தில் சொந்த நாட்டில் இருக்க விட்டு நன்மை செய்யாமல் நாடு கடத்தி நன்மையைச் செய்திருக்கிறார்.

    ReplyDelete
  55. சகோதரிஉமா,சகோதரி தேமொழி சகோதரர் ஆலோசியம் அப்புறம் சகோதரர் தனசு நீங்க யாரும் சத்தம் போடகூடாது எதுவாயிருந்தாலும் ப்டிங்க சரியா.

    சகோதரர் புவனேஸ்வருக்கு நீங்க ரொம்ப நல்லாபின்னூட்டமிடுகிறீர்கள் உங்களுடைய கருத்துகள் மனதிற்கு இதமாக இருந்தது நீங்க நல்ல பிள்ளையா வாயை முடவேண்டாம் நல்லா எதுனா சொல்லுங்கள் எழுதுங்கள்

    சார் வணக்கம்,
    நேற்றைய பதிவும் இன்றைய பதிவும் மிகவும் நன்றாக இருந்தது ரொம்ப் நன்றி சார் ஹி ஹி அஷ்டவர்க்கம் எப்போ சார்.

    ReplyDelete
  56. /////Blogger Bhuvaneshwar said...
    I thought I will offer a little explanation for the word முச்சூடு.
    முச்சூடு = மூன்று சூடு = காலை இளவெயில் ஒரு சூடு, மத்தியான உச்சி வெய்யில் ஒரு சூடு, மாலை வெயில் ஒரு சூடு. அதாவது நாள் முழுவதும் 9day time/work day) என்று பொருள். ஒரு நாள் முழுமையையும் குறிக்கும் பதம் முச்சூடு.////

    "என்ற ராசா, இன்னிக்கு முச்சூடும் அழுதாலும், நான் மசிய மாட்டேன்" என்பது வட்டார வழக்கு. அதற்கு இன்று முழுவதும் அழுதாலும் என்று பொருள். தமிழ் அகராதியில் மூச்சூடு என்னும் சொல் இல்லை. ஆகவே நாம் நமக்குத் தெரிந்ததைப் பொருளாகக் கொள்ளலாம். தவறில்லை!

    ReplyDelete
  57. ////Blogger Savitha said...
    வாத்தியார் அய்யா, என் சொந்தத்தில் ஒருவர் - கன்னி ராசி - ஹஸ்த நட்சத்திரம், நாற்பத்தி நான்கு வயது ஆன அவருக்கு - வெளிநாட்டு யோகமும், ஆனால் கடந்த நான்கு வருடங்களாக நிரந்தர வேலை இல்லாமல் இருக்கு. இந்த நான்கு வருடங்களில் அவர் இரண்டு இடங்களில் மொத்தம் பத்து மாதங்களே மட்டுமே வேலை பார்த்துள்ளார். முதலில் இரண்டு வருடங்கள் வேலையில் இல்லை. கிடைத்த வேலையில் ஆறு மாதங்களே நீடித்தார். பிறகு சரியாக ஒரு வருடம் வேலை இல்லை. மீண்டும் நான்கு மாதங்களே வேலையில் இருந்தார். இப்போது மனமுடைந்து உள்ளார்.
    சிம்ம லக்னத்தில், குரு வாசம் செய்கிறார். இரண்டாம் இடத்தில சந்திரனும் கேதுவும், எட்டாம் இடத்தில ராகுவும் , சனியும், பத்தாம் இடத்தில சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் வெள்ளி என காலசர்பா தோஷ ஜாதகம். இப்போது சனி மஹா திசை ஆரம்பித்துள்ளது. ஏழரையில் இரண்டாம் சுற்று.
    இது வரை ஆறு வருடங்கள் வெளி நாட்டில் வசித்து வேலை செய்துள்ளார். நண்பர்கள் யாரும் உதவுவதில்லை. இவராக நிறைய பேருக்கு உதவி செய்கிறார்.
    அவரிடம் பேசுபவர்கள் எல்லாம், வெளிநாட்டில் வேலை செய்ய மட்டுமே கேட்கிறார்கள். நடக்குமா?////

    அதுதான் உலக இயல்பு. கேட்பவர்கள் ஒரு ஆதங்கத்தில் கேட்கிறார்கள். போகட்டும். விட்டு விடுங்கள்!

    ReplyDelete
  58. /////Blogger அய்யர் said...
    அலசல் அருமை..
    அங்கிருப்பவர்களுக்கு
    இது வெளிநாடு
    இங்கு இருப்பவருக்கு
    அது வெளிநாடு..
    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்
    நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
    நாயகமே நீயே சொந்தம்
    என்ற
    கவிஞரின் வரிகளை
    கருத்தில் வைத்து
    விவரித்து சொன்னாலும்
    சுருக்கி சொன்னாலும்
    நச்சுன்னு இருக்கு அதற்கு ஒரு
    நன்றிகள்/////

    எனக்கு நீங்கள்தான் (மாணவக் கண்மணிகள்) முதல் சொந்தம். நாயகம் அடுத்த நிலையில்தான் உள்ளார்!

    ReplyDelete
  59. /////Blogger ananth said...
    எனக்கு சிறு வயதிலேயே (1 முதல் 19 வயது வரை) ராகு தசை வந்து போய் விட்டது. மற்ற கிரக தசையில் ராகு மற்றும் கேது புத்தி/அந்தரங்களில் நிறைய நன்மை ஏற்பட்டிருக்கிறது. எனக்கு இப்போது நடக்கும் சனி தசை கேது புத்தியையும் சேர்த்துதான் சொல்கிறேன்./////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  60. /////Blogger ananth said...
    ராகு கேது இவர்கள் திரிகோண ஸ்தானம் ஏதாவதொன்றில் இருந்தால் பெரும்பாலும் தங்கள் தசா புத்திகளில் நன்மை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. கேது இங்கு குறிப்பிட்ட ஜாதகத்தில் சொந்த நாட்டில் இருக்க விட்டு நன்மை செய்யாமல் நாடு கடத்தி நன்மையைச் செய்திருக்கிறார்./////

    ஆமாம்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  61. //////Blogger sundari said...
    சகோதரிஉமா,சகோதரி தேமொழி சகோதரர் ஆலோசியம் அப்புறம் சகோதரர் தனசு நீங்க யாரும் சத்தம் போடகூடாது எதுவாயிருந்தாலும் ப்டிங்க சரியா.
    சகோதரர் புவனேஸ்வருக்கு நீங்க ரொம்ப நல்லாபின்னூட்டமிடுகிறீர்கள் உங்களுடைய கருத்துகள் மனதிற்கு இதமாக இருந்தது நீங்க நல்ல பிள்ளையா வாயை முடவேண்டாம் நல்லா எதுனா சொல்லுங்கள் எழுதுங்கள்//////

    சட்டாம்பிள்ளை அக்கா, வணக்கம். அவ்வப்போது இப்படி வந்து, பார்த்து, கண்டித்து விட்டுச் செல்லுங்கள்!:-)))))
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ///// சார் வணக்கம்,
    நேற்றைய பதிவும் இன்றைய பதிவும் மிகவும் நன்றாக இருந்தது ரொம்ப நன்றி சார் ஹி ஹி அஷ்டவர்க்கம் எப்போ சார்./////

    ஆகஸ்ட் ஒன்று முதல். இங்கே அல்ல! இங்கே திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே அது தனி இணைய தளத்தில்! நடுவில் எனது சிறுகதைத் தொகுதிகள் 4ஆம் தொகுதி வெளியீட்டு விழா உள்ளது!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  62. அன்புள்ள வாத்தியார் அய்யா
    பாப்கான் பகுதிகள் அருமை...
    பழைய பாடங்களை படித்து கொண்டு இருக்கிறேன்.
    உங்களின் எழுத்து நடையும் அதை விளக்குகின்ற முறைகளும் ..ஆஹா...அற்புதம்...
    இன்று முதல் 2009 ஜனவரி பாடங்களை தொடங்க உள்ளேன் ..
    குருவாகிய தங்களின் ஆசீர்வாதம் வேண்டி தங்களின் புதிய மாணவன்
    இன்று வியாக்கிழமை ...நேற்று குரு பூர்னிமா ......நல்ல பொருத்தம்....அய்யாவிடம்
    ஆசீர்வாதம் வாங்க .....
    அன்புடன்
    ரா.சரவணன்

    ReplyDelete
  63. //"என்ற ராசா, இன்னிக்கு முச்சூடும் அழுதாலும், நான் மசிய மாட்டேன்" என்பது வட்டார வழக்கு. அதற்கு இன்று முழுவதும் அழுதாலும் என்று பொருள். தமிழ் அகராதியில் மூச்சூடு என்னும் சொல் இல்லை. ஆகவே நாம் நமக்குத் தெரிந்ததைப் பொருளாகக் கொள்ளலாம். தவறில்லை!
    //

    ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன். நீங்கள் சொன்ன அர்த்தம் தவறு என்று நான் சொல்லவே இல்லையே. ஏன் என்னை திட்டறீங்க வாத்தியார் ஐயா?

    ReplyDelete
  64. வாத்தியார்
    ///நஷ்டத்தை விதி கொடுக்கும். நஷ்ட ஈட்டை இறைவன் கொடுப்பார்! அதனால்தான் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது!///

    வைரம் பொதிந்த வரிகள்.

    ReplyDelete
  65. எனக்கு சிறு வயதிலேயே (1 முதல் 19 வயது வரை) ராகு தசை வந்து போய் விட்டது. மற்ற கிரக தசையில் ராகு மற்றும் கேது புத்தி/அந்தரங்களில் நிறைய நன்மை ஏற்பட்டிருக்கிறது. எனக்கு இப்போது நடக்கும் சனி தசை கேது புத்தியையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

    Wednesday, July 04, 2012 8:05:00 PM
    Blogger ananth said...

    ராகு கேது இவர்கள் திரிகோண ஸ்தானம் ஏதாவதொன்றில் இருந்தால் பெரும்பாலும் தங்கள் தசா புத்திகளில் நன்மை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. கேது இங்கு குறிப்பிட்ட ஜாதகத்தில் சொந்த நாட்டில் இருக்க விட்டு நன்மை செய்யாமல் நாடு கடத்தி நன்மையைச் செய்திருக்கிறார்.

    Wednesday, July 04, 2012 8:16:00 பம்

    // அப்படியா சார் ...எனக்கு rahu ஒன்பதாம் இடத்தில ,ரிஷபத்தில் ...ஆனால் செவ்வாயின் Nk இல் ...,rahu விற்கு மூன்றாம் இடத்தில உள்ள குருவின் பார்வை இருக்கிறது , கேது தசையில் ,rahu புக்தி முடிந்து விட்டது ,problems கம்மி தான் ..சுக்ரன் 12 -இல் சிம்ஹதில் இருக்கிறார் ,செவ்வாய் ,சனியை போல rahu படுத்தவில்லை ...

    sukra தசை 2013 - டிசம்பர் ல தான் ஆரம்பம் ,அதுவும் சுக்ரன் வர்கோதமம்,12 அம் அதிபதி sun ஜல ராசி கடகத்தில் ...என்னோட ஆபீஸ் இல் ,என்னை வெளி நாட்டிற்கு அனுப்பும chances மிக மிக அதிகம் ...

    ReplyDelete
  66. /////Blogger saravanan said...
    அன்புள்ள வாத்தியார் அய்யா
    பாப்கான் பகுதிகள் அருமை...
    பழைய பாடங்களை படித்து கொண்டு இருக்கிறேன்.
    உங்களின் எழுத்து நடையும் அதை விளக்குகின்ற முறைகளும் ..ஆஹா...அற்புதம்...
    இன்று முதல் 2009 ஜனவரி பாடங்களை தொடங்க உள்ளேன் ..
    குருவாகிய தங்களின் ஆசீர்வாதம் வேண்டி தங்களின் புதிய மாணவன்
    இன்று வியாக்கிழமை ...நேற்று குரு பூர்னிமா ......நல்ல பொருத்தம்....அய்யாவிடம்
    ஆசீர்வாதம் வாங்க .....
    அன்புடன்
    ரா.சரவணன்/////

    நான் எளியவன். பழநிஅப்பனின் அருளை வேண்டுங்கள். பாடம் எல்லாம் மனதில் பதியும்!

    ReplyDelete
  67. /////Blogger Bhuvaneshwar said...
    //"என்ற ராசா, இன்னிக்கு முச்சூடும் அழுதாலும், நான் மசிய மாட்டேன்" என்பது வட்டார வழக்கு. அதற்கு இன்று முழுவதும் அழுதாலும் என்று பொருள். தமிழ் அகராதியில் மூச்சூடு என்னும் சொல் இல்லை. ஆகவே நாம் நமக்குத் தெரிந்ததைப் பொருளாகக் கொள்ளலாம். தவறில்லை! //
    ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன். நீங்கள் சொன்ன அர்த்தம் தவறு என்று நான் சொல்லவே இல்லையே. ஏன் என்னை திட்டறீங்க வாத்தியார் ஐயா?/////

    3,319 மாணாக்கர்களில், திட்டினார் என்று வாத்தியாரைக் குறை சொல்லும் முதல் மாணவர் நீங்கள்தான். மாணவர் திலகம் என்ற பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. சந்தோஷமாக இருங்கள்!

    ReplyDelete
  68. ////Blogger krishnar said...
    வாத்தியார்
    ///நஷ்டத்தை விதி கொடுக்கும். நஷ்ட ஈட்டை இறைவன் கொடுப்பார்! அதனால்தான் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது!///
    வைரம் பொதிந்த வரிகள்./////

    வரிகளை சிலாகித்து எழுதிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  69. //3,319 மாணாக்கர்களில், திட்டினார் என்று வாத்தியாரைக் குறை சொல்லும் முதல் மாணவர் நீங்கள்தான். மாணவர் திலகம் என்ற பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. சந்தோஷமாக இருங்கள்!
    //


    Ahaaaa.....

    நான் எது சொன்னாலும் வம்பாகி விடுகிறதே! நான் ஒன்றும் சீரியசாக சொல்லவில்லை ஐயா. மன்னிக்கவும்.

    ReplyDelete
  70. வணக்கம் ஐயா, இந்த ஜாதகி பிறந்தது 1982 புரட்டாசி மாதம் சரியா? நான் பிறந்தது 1982 ஆவணி மாதம்.எனது ஜாதகதுக்கும் இந்த சகோதிரியின் ஜாதகதுக்கும் லக்னம், சந்திரன் மற்றும் சூரியன் மட்டும் தான் இடம் மாறியுள்ளது தங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  71. ////Blogger Bhuvaneshwar said...
    //3,319 மாணாக்கர்களில், திட்டினார் என்று வாத்தியாரைக் குறை சொல்லும் முதல் மாணவர் நீங்கள்தான். மாணவர் திலகம் என்ற பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. சந்தோஷமாக இருங்கள்! //
    Ahaaaa.....
    நான் எது சொன்னாலும் வம்பாகி விடுகிறதே! நான் ஒன்றும் சீரியசாக சொல்லவில்லை ஐயா. மன்னிக்கவும்./////

    நானும் சீரியசாகச் சொல்லவில்லையே சுவாமி! மன்னிப்பை வீணாக்காதீர்கள்.

    ReplyDelete
  72. ////Blogger Maheswaran said...
    வணக்கம் ஐயா, இந்த ஜாதகி பிறந்தது 1982 புரட்டாசி மாதம் சரியா? நான் பிறந்தது 1982 ஆவணி மாதம்.எனது ஜாதகதுக்கும் இந்த சகோதிரியின் ஜாதகதுக்கும் லக்னம், சந்திரன் மற்றும் சூரியன் மட்டும் தான் இடம் மாறியுள்ளது தங்கள் பதிவுக்கு நன்றி.////

    சரிதான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com