மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.10.11

Tribute to a Genius - மேதைக்கு ஓர் அஞ்சலி!

----------------------------------------------------------------------------------
Tribute to a Genius - மேதைக்கு ஓர் அஞ்சலி!
தனது அரிய கண்டுபிடிப்புக்கள் மூலம் நமது வாழ்க்கையை
மேன்மைப் படுத்திய திருவாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் (56) அவர்கள் காலமான
செய்திஉலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நாளிதழ்கள்
பலவற்றில் அதுதான் தலைப்புச் செய்தி.

அவர் ஆன்மா சாந்தியடைய நம் வகுப்பறையின் சார்பிலும், உங்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க அவர் புகழ்! வளர்க அவர் தந்துவிட்டுப்போன தொழில்நுட்பம்!!

An Icon who revolutionized Mobile Communications, Music, Movies And Modern Culture, Made Technology Beautiful, Ended The Region of  Personal Computers, And Changed our Lives

Jobs Takes Iway To Heaven, At 56, Loses Battle Against Cancer
- Tribute by Times of India' News Paper

நட்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------
Apple founder, Steve Jobs, lost his battle with pancreatic cancer Wednesday (Oct. 5). He was 56. The Silicon Valley technological visionary reinvented the wheel with his company and, right up until his death, continued to deliver Apple products that would change the way we share and consume information.

"Steve's brilliance, passion and energy were the source of countless innovations that enrich and improve all of our lives," Apple said in a statement. "The world is immeasurably better because of Steve."

Jobs co-founded Apple Inc. in 1976 with Steve Wozniak. The pair built the Apple 1 in Jobs' parents garage. Eight years later Apple would release the Macintosh and the rest is history. However, in 1986 Jobs would eventually be fired the company he built, only to return to save the company in 1996. With Jobs back in the fold, Apple Inc. would make a major comeback and release the iPod in 2001, followed by iTunes, the iPhone, the iPhone, and Jobs' latest invention, the iPad.

Jobs was diagnosed with a rare form of pancreatic cancer in 2004. In 2009, the tech titan underwent a liver transplant. He stepped down as Apple's CEO in August stating that he could "no longer meet [his] duties and expectations
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

44 comments:

  1. iPod, iPad வைத்திருப்போர் எல்லாருக்கும் jobs பத்தித் தெரியாமல் இருக்காது..

    கணினிக்கையால்வை எளிமைப்படித்தி இனிமைப்படுத்தித் தந்தவர்..

    iPod கொண்டு வாழ்வின் இனிய கணங்களை அனுபவிக்கும்போதேலாம்

    Steve Jobs க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்..

    ReplyDelete
  2. உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர்,வாழ்வின் உச்ச கட்டத்தை அடைந்து விட்டார். அவரின் ஆன்மா சாந்தி ஆகட்டும்.

    ReplyDelete
  3. ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டுபிடித்தipad தான் இப்போ மேர்கத்திய நாடுகளின்
    fad
    ipodஇல்லை ipad.

    ஸ்டீவ் ஒரு திருமணமாகாத கல்லூரி மாணவிக்குப் பிறந்தவராம்.அவரை கருவில் சுமந்த தாய் தன் மகனை பிறந்தவுடனேயே தத்துக் கொடுக்க தயாராக இருந்தாளாம்.ஆனால் அவள் விருப்பம் தத்து எடுப்பவர்கள் கல்லூரியில் படித்துப்பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதாம். ஸ்டீவின் வளர்ப்புப் பெற்றோர் தாங்கள் பட்டதாரிகள்தான் என்று பொய் சொல்லி தத்து எடுத்துவிட்டார்களாம்.பின்னர் தெரிந்தபோது, 'எப்பாடுபட்டாவது ஸ்டீவைக் கல்லூரியில் படிக்க வைக்கிறோம்'என்றார்கள்.சொன்னபடியே கல்லூரியில் சேர்த்தார்கள்.சாதாரண தொழிலாளிகள் ஆன அவர்கள் வாழ்க்கை முழுதும் சேமித்த தொகை கறைவதையும்,தனக்கும் கல்லூரிப் படிப்பு சுவையாக இல்லாததலும் கல்லுரியிலிருந்து ஸ்டீவ் பாதியிலேயே வெளியேறினார்.

    மிகவும் வறுமையில் இருந்தபோது வாரம் ஒரு முறை நல்ல உணவு இலவசமாகச் சாப்பிட ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு 7 மைல் நடந்து சென்று சாப்பிடுவாராம்

    தனக்கு மனதிற்குப்பிடித்தமானதைச் செய்யத் துவங்கினார்.apple தோன்றியது
    30 வயதில் தான் துவங்கிய கம்பெனியிலிருந்தே வெளியேற்றப்பாடார்.
    neXt தொன்றியது.neXT ஐ APPLE வாங்கியது 10 ஆண்டுக்குப்பின்னர் மீண்டும் APPLE ceo!

    ReplyDelete
  4. அய்யா வணக்கம்

    ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிறாத்திக்கிறேன்.

    ReplyDelete
  5. பிறரது கருத்துக்கள் உங்கள் உள்ளுணர்வை மூழ்கடித்து விடஅனுமதிக்காதீர்கள். உங்கள் ஆயுட்காலம் குறுகியது, பிறரதுவாழ்க்கையை வாழ்ந்து உங்கள் காலத்தை வீணடிக்காதீர்கள்.உங்கள் மனமும், உள்ளுணர்வும் சொல்லும்படி வாழும்துணிவைக் கொள்ளுங்கள்,பசித்திருங்கள்; அறிவுப் பசியோடுஇருங்கள்.

    மேதை ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள்.

    ReplyDelete
  6. உண்மை தான் இந்த மேதையை இந்த உலகம் உள்ளவரை மறக்க முடியாது.
    இவரைப் பற்றிய இன்னும் அறிய வேண்டிய புதிய ஒன்பது விஷயங்கள் என்னும்
    தலைப்பில் வந்த செய்தியை எனது வலைப்பூவில் http://tamizhvirumbi.blogspot.com/ வெளியிட்டு இருக்கிறேன்.
    அனைவரும் வந்துப் படிக்கலாம்.

    அதிலே என்னைக் கவர்ந்தது இவரின் தந்தை இஸ்லாமியர், தாய் கிருஸ்துவர் (ஆங்கில கலாச்சார படி காலச் சூழலில் பிறப்பு நிகழ்ந்துள்ளது ஆக, அதைப் பற்றிய பேச்சை நாம் பேசுவது அவசியமாகிறது).
    இவர் இளமைக் காலங்களில் வாரம் ஒரு முறை ஏழு மைல்கள் நடந்து சென்று ஹரே கிருஷ்ண கோவிலில் நல்ல உணவை வாங்கி உண்டதாக குறிப்பிடுகிறார்.. எத்தனை முறை யாத்திரை சென்றாரோ!!!

    அது போக இவரின் திருமணம் ஒரு ஜென் துறவி முன்னிலையில் நடந்திருக்கிறது.
    பின்னாளில் இவர் இந்தியாவிற்கு வந்து ஒரு பெரிய புத்த மடத்தில் தன்னை முழு புத்த ஜென் மதத்தவராக ஆக்கியும் சென்றுள்ளார் என்பது தான்.

    வாழ்வில் கேழே இருந்தாலும், எவ்வளவு மேலே சென்றாலும் தேடல் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதுவும், அதோடு பல மதங்களிலும் இவர் வாழ்வு தொடர்பு கொண்டிருப்பதும் தான் அதிசயம் சிறப்பும் ஆகும்.
    வாழ்க வளர்க அவரின் புகழ். அவரின் அறிவில் விழைந்த அற்புதத்தால் நாமெல்லாம் இன்றுக் கூடி குலாவ முடிகிறது என்ற நன்றி உணர்வோடு என்றும் அவரை நினைவில் வைப்போம்.

    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம். கோ.

    ReplyDelete
  7. ஸ்டீவ் அவர்களே தன்னைப்பற்றிக் கூறியதை இங்கே கேட்கலாம்.

    http://news.stanford.edu/news/2005/june15/jobs-061505.html

    .

    ReplyDelete
  8. ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இதோ
    http://www.marketwatch.com/story/12-lessons-for-us-all-from-the-life-of-steve-jobs-2011-10-07?pagenumber=1

    இவருடைய ஜாதகம் இருந்தால், ஐயா அவர்கள் அலசினால், பல சுவையான பாடங்கள் கிட்டும்.

    நன்றி

    ReplyDelete
  9. ஆலாசியம் அவர்களின் கருத்தும் அவர் வலைப்பூ பதிவும் மனதை தொட்டது.
    மிகச் சிறந்த மேதை ஸ்டீவ் ஜாப்ஸ்.. அவர் வாழ்வில் என்னை கவர்ந்த தருணம்...
    அவர் உருவாக்கிய நிறுவனத்தில், அவர் வேலைக்கு சேர்த்த 'ஜான் ஸ்கல்லி'யே அவரை வெளியேற்றி துரத்திய நிகழ்ச்சியும் அதன் விளைவும். என்ன ஒரு கொடுமை, என்ன ஒரு நம்பிக்கை துரோகம். மனிதர் சற்றும் சலிக்காமல் மேலே வந்து சில ஆண்டுகளில் அதே ஆப்பிள் நிறுவனத்தில் நுழைந்து, துவண்டு கிடந்த நிருவனத்தை தூக்கி நிறுத்தி அதை உலகமே திரும்பி பார்க்க உயர வைத்தாரே.

    அத்துடன் அந்த நிகழ்ச்சியை தன் வாழ்வில் நடந்த மிக சிறந்த நிகழ்ச்சியாகவும், ஆக்கபூர்வமான சிந்தனை உருவாக உதவிய காலமாகவும், ஒரு மாதத்திற்கு முன்புதான் குறிப்பிட்டார் ("The heaviness of being successful was replaced by the lightness of being a beginner again, less sure about everything. It freed me to enter one of the most creative periods of my life.") வாழ்வில் தடுமாறி விழுந்து வருந்துபவர்களுக்கு அவர் வாழ்கை ஓர் நம்பிக்கை நட்சத்திரம்.
    எங்கே அந்த ஜான் ஸ்கல்லி இப்பொழுது? ...எங்கே என்று தேட வேண்டிய நிலையில் எங்கோ ஓர் சிறு நிறுவனத்தில்.

    நம் தமிழ் படங்களில் இதற்கெல்லாம் ஓர் சிச்சுவேஷன் பாடல் வரும், அது போல் 'அண்ணாமலை' படத்தில் வந்த கீழே குறிப்பிட்ட 'வெற்றி நிச்சயம்' பாடல் மிகவும் சரியாக பொருந்துகிறது. ஸ்டீவ் ஜாப்ஸய் நினைத்து இந்த பாடலை இரண்டு மூன்று முறை ஏற்கனவே கேட்டு விட்டேன்.
    ஆசிரியருக்கு தாழ்மையான வேண்டுகோள் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் ஜாதக அலசல் ஒரு முறை செய்வீர்களா?

    வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்
    கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
    என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
    என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
    அடேய் நண்பா! உண்மை சொல்வேன் !
    சவால் வேண்டாம், உன்னை வெல்வேன் !
    வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்
    கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்

    இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
    சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
    வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் தூவாது
    எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது
    ஒவ்வொரு விதையிலும் விருக்ஷம் ஒளிந்துள்ளதே
    ஒவ்வொரு விடியலும் எனது பேர் சொல்லுதே
    பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே
    அடேய் நண்பா ! உண்மை சொல்வேன்!
    சவால் வேண்டாம், உன்னை வெல்வேன் !
    வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்
    கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்

    இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
    வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
    மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
    பாறைகள் நீங்கினால் கோடைகில்லை சங்கீதம்
    பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
    ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
    எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே
    அடேய் நண்பா! உண்மை சொல்வேன்!
    சவால் வேண்டாம், உன்னை வெல்வேன்!
    கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
    [காணொளி இங்கே --- http://youtu.be/WLLMTinh9Is ]

    ReplyDelete
  10. \\\\தேமொழி said...
    எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே
    \\\\\\
    கலக்குறீங்க வீரமங்கை..

    நல்ல பாட்டு..செம ஸ்பிரிட் கொடுக்கும் பாட்டு..

    நானும் பலதரம் கேட்டதுண்டு..ஆனா steve jobs ஐ நினைத்து அல்ல..

    ReplyDelete
  11. //////தேமொழி said...
    என்ன ஒரு கொடுமை, என்ன ஒரு நம்பிக்கை துரோகம்.///////

    துரோகிகள் எப்போதும் கூடவே இருக்கிறார்கள்..

    இல்லை..பலசமயங்களில் நாம்தான் அவர்களை உருவாக்குகிறோம்..

    ஒருகட்டத்தில் துரோகி என்று பகிரங்கமாகும்போது பாதிக்கப்படுகிறோம்..

    துரோகிகள் புத்திசாலிகள்..ஆனால் நன்றி கெட்ட கயவர்கள்..

    அவர்களை ஆரம்பத்திலிருந்தே விலக்காமல் வளர்த்து வந்தவர்கள் ஏமாளிகள்..

    எதிரி நல்லவன்..துரோகி கெட்டவன்..

    கடைசிவரை துரோகிக்கு எதிரிக்குரிய அந்தஸ்து இல்லை..

    எதிரியை மன்னிக்கலாம்..

    துரோகி.... வேரடி மண்ணோடு வீழ்த்தப்படவேண்டியவன்..

    ReplyDelete
  12. ////Blogger minorwall said...
    iPod, iPad வைத்திருப்போர் எல்லாருக்கும் jobs பத்தித் தெரியாமல் இருக்காது..
    கணினிக்கையால்வை எளிமைப்படித்தி இனிமைப்படுத்தித் தந்தவர்..
    iPod கொண்டு வாழ்வின் இனிய கணங்களை அனுபவிக்கும்போதேலாம்
    Steve Jobs க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்../////

    ஆமாம். ஆமாம். ஆமாம் மைனர்!

    ReplyDelete
  13. /////Blogger Nila said...
    உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர், வாழ்வின் உச்ச கட்டத்தை அடைந்து விட்டார். அவரின் ஆன்மா சாந்தி ஆகட்டும்.////

    என்ன, இன்னும் கொஞ்ச நாள் இருந்துவிட்டு, உச்சத்தைத் தொட்டிருக்கலாம். அதெல்லாம் நம் கையிலா இருக்கிறது?

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டுபிடித்தipad தான் இப்போ மேர்கத்திய நாடுகளின் fad ipodஇல்லை ipad.
    ஸ்டீவ் ஒரு திருமணமாகாத கல்லூரி மாணவிக்குப் பிறந்தவராம்.அவரை கருவில் சுமந்த தாய் தன் மகனை பிறந்தவுடனேயே தத்துக் கொடுக்க தயாராக இருந்தாளாம்.ஆனால் அவள் விருப்பம் தத்து எடுப்பவர்கள் கல்லூரியில் படித்துப்பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதாம். ஸ்டீவின் வளர்ப்புப் பெற்றோர் தாங்கள் பட்டதாரிகள்தான் என்று பொய் சொல்லி தத்து எடுத்துவிட்டார்களாம்.பின்னர் தெரிந்தபோது, 'எப்பாடுபட்டாவது ஸ்டீவைக் கல்லூரியில் படிக்க வைக்கிறோம்'என்றார்கள்.சொன்னபடியே கல்லூரியில் சேர்த்தார்கள்.சாதாரண தொழிலாளிகள் ஆன அவர்கள் வாழ்க்கை முழுதும் சேமித்த தொகை கறைவதையும்,தனக்கும் கல்லூரிப் படிப்பு சுவையாக இல்லாததலும் கல்லுரியிலிருந்து ஸ்டீவ் பாதியிலேயே வெளியேறினார்.
    மிகவும் வறுமையில் இருந்தபோது வாரம் ஒரு முறை நல்ல உணவு இலவசமாகச் சாப்பிட ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு 7 மைல் நடந்து சென்று சாப்பிடுவாராம்
    தனக்கு மனதிற்குப்பிடித்தமானதைச் செய்யத் துவங்கினார்.apple தோன்றியது
    30 வயதில் தான் துவங்கிய கம்பெனியிலிருந்தே வெளியேற்றப்பட்டார்.
    neXt தொன்றியது.neXT ஐ APPLE வாங்கியது 10 ஆண்டுக்குப்பின்னர் மீண்டும் APPLE ceo!///////

    தகவல் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////Blogger sekar said...
    அய்யா வணக்கம்
    ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////Blogger தமிழ் விரும்பி said...
    பிறரது கருத்துக்கள் உங்கள் உள்ளுணர்வை மூழ்கடித்து விடஅனுமதிக்காதீர்கள். உங்கள் ஆயுட்காலம் குறுகியது, பிறரதுவாழ்க்கையை வாழ்ந்து உங்கள் காலத்தை வீணடிக்காதீர்கள்.உங்கள் மனமும், உள்ளுணர்வும் சொல்லும்படி வாழும்துணிவைக் கொள்ளுங்கள்,பசித்திருங்கள்; அறிவுப் பசியோடுஇருங்கள்.
    மேதை ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள்./////

    உண்மைதான். நல்ல அறிவுரை!

    ReplyDelete
  17. /////Blogger தமிழ் விரும்பி said...
    உண்மை தான் இந்த மேதையை இந்த உலகம் உள்ளவரை மறக்க முடியாது.
    இவரைப் பற்றிய இன்னும் அறிய வேண்டிய புதிய ஒன்பது விஷயங்கள் என்னும்
    தலைப்பில் வந்த செய்தியை எனது வலைப்பூவில் http://tamizhvirumbi.blogspot.com/ வெளியிட்டு இருக்கிறேன்.
    அனைவரும் வந்துப் படிக்கலாம்.
    அதிலே என்னைக் கவர்ந்தது இவரின் தந்தை இஸ்லாமியர், தாய் கிருஸ்துவர் (ஆங்கில கலாச்சார படி காலச் சூழலில் பிறப்பு நிகழ்ந்துள்ளது ஆக, அதைப் பற்றிய பேச்சை நாம் பேசுவது அவசியமாகிறது).
    இவர் இளமைக் காலங்களில் வாரம் ஒரு முறை ஏழு மைல்கள் நடந்து சென்று ஹரே கிருஷ்ண கோவிலில் நல்ல உணவை வாங்கி உண்டதாக குறிப்பிடுகிறார்.. எத்தனை முறை யாத்திரை சென்றாரோ!!!
    அது போக இவரின் திருமணம் ஒரு ஜென் துறவி முன்னிலையில் நடந்திருக்கிறது.
    பின்னாளில் இவர் இந்தியாவிற்கு வந்து ஒரு பெரிய புத்த மடத்தில் தன்னை முழு புத்த ஜென் மதத்தவராக ஆக்கியும் சென்றுள்ளார் என்பது தான்.
    வாழ்வில் கீழே இருந்தாலும், எவ்வளவு மேலே சென்றாலும் தேடல் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதுவும், அதோடு பல மதங்களிலும் இவர் வாழ்வு தொடர்பு கொண்டிருப்பதும் தான் அதிசயம் சிறப்பும் ஆகும்.
    வாழ்க வளர்க அவரின் புகழ். அவரின் அறிவில் விழைந்த அற்புதத்தால் நாமெல்லாம் இன்றுக் கூடி குலாவ முடிகிறது என்ற நன்றி உணர்வோடு என்றும் அவரை நினைவில் வைப்போம்.
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம். கோ.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கும் தகவல் பகிர்விற்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  18. ////Blogger sriganeshh said...
    ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இதோ
    http://www.marketwatch.com/story/12-lessons-for-us-all-from-the-life-of-steve-jobs-2011-10-07?pagenumber=1
    இவருடைய ஜாதகம் இருந்தால், ஐயா அவர்கள் அலசினால், பல சுவையான பாடங்கள் கிட்டும்.
    நன்றி/////

    பார்க்கலாம் நண்பரே!

    ReplyDelete
  19. ///Blogger kmr.krishnan said...
    ஸ்டீவ் அவர்களே தன்னைப்பற்றிக் கூறியதை இங்கே கேட்கலாம்.
    http://news.stanford.edu/news/2005/june15/jobs-061505.html////

    உங்களின் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  20. //////Blogger தேமொழி said...
    ஆலாசியம் அவர்களின் கருத்தும் அவர் வலைப்பூ பதிவும் மனதை தொட்டது.
    மிகச் சிறந்த மேதை ஸ்டீவ் ஜாப்ஸ்.. அவர் வாழ்வில் என்னை கவர்ந்த தருணம்...
    அவர் உருவாக்கிய நிறுவனத்தில், அவர் வேலைக்கு சேர்த்த 'ஜான் ஸ்கல்லி'யே அவரை வெளியேற்றி துரத்திய நிகழ்ச்சியும் அதன் விளைவும். என்ன ஒரு கொடுமை, என்ன ஒரு நம்பிக்கை துரோகம். மனிதர் சற்றும் சலிக்காமல் மேலே வந்து சில ஆண்டுகளில் அதே ஆப்பிள் நிறுவனத்தில் நுழைந்து, துவண்டு கிடந்த நிருவனத்தை தூக்கி நிறுத்தி அதை உலகமே திரும்பி பார்க்க உயர வைத்தாரே.
    அத்துடன் அந்த நிகழ்ச்சியை தன் வாழ்வில் நடந்த மிக சிறந்த நிகழ்ச்சியாகவும், ஆக்கபூர்வமான சிந்தனை உருவாக உதவிய காலமாகவும், ஒரு மாதத்திற்கு முன்புதான் குறிப்பிட்டார் ("The heaviness of being successful was replaced by the lightness of being a beginner again, less sure about everything. It freed me to enter one of the most creative periods of my life.") வாழ்வில் தடுமாறி விழுந்து வருந்துபவர்களுக்கு அவர் வாழ்கை ஓர் நம்பிக்கை நட்சத்திரம்.
    எங்கே அந்த ஜான் ஸ்கல்லி இப்பொழுது? ...எங்கே என்று தேட வேண்டிய நிலையில் எங்கோ ஓர் சிறு நிறுவனத்தில்.
    நம் தமிழ் படங்களில் இதற்கெல்லாம் ஓர் சிச்சுவேஷன் பாடல் வரும், அது போல் 'அண்ணாமலை' படத்தில் வந்த கீழே குறிப்பிட்ட 'வெற்றி நிச்சயம்' பாடல் மிகவும் சரியாக பொருந்துகிறது. ஸ்டீவ் ஜாப்ஸய் நினைத்து இந்த பாடலை இரண்டு மூன்று முறை ஏற்கனவே கேட்டு விட்டேன்.
    ஆசிரியருக்கு தாழ்மையான வேண்டுகோள் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் ஜாதக அலசல் ஒரு முறை செய்வீர்களா?/////

    பார்க்கலாம் சகோதரி!

    ReplyDelete
  21. /////Blogger minorwall said...
    //////தேமொழி said...
    என்ன ஒரு கொடுமை, என்ன ஒரு நம்பிக்கை துரோகம்.///////
    துரோகிகள் எப்போதும் கூடவே இருக்கிறார்கள்..
    இல்லை..பலசமயங்களில் நாம்தான் அவர்களை உருவாக்குகிறோம்..
    ஒருகட்டத்தில் துரோகி என்று பகிரங்கமாகும்போது பாதிக்கப்படுகிறோம்..
    துரோகிகள் புத்திசாலிகள்..ஆனால் நன்றி கெட்ட கயவர்கள்..
    அவர்களை ஆரம்பத்திலிருந்தே விலக்காமல் வளர்த்து வந்தவர்கள் ஏமாளிகள்..
    எதிரி நல்லவன்..துரோகி கெட்டவன்..
    கடைசிவரை துரோகிக்கு எதிரிக்குரிய அந்தஸ்து இல்லை..
    எதிரியை மன்னிக்கலாம்..
    துரோகி.... வேரடி மண்ணோடு வீழ்த்தப்படவேண்டியவன்..//////

    ஆஹா...மிகவும் பாதிக்கப்பெற்றுள்ளீர்கள் போலிருக்கிறதே! நானும் பல துரோகங்களை, துரோகிகளைச் சந்தித்தவன்தான். இந்தியன் பீனல் கோடு சட்டம் குறுக்கே நின்றதால், நான் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஒதுக்கி வைத்துவிட்டேன். அவர்களைத் தண்டிக்கும் பணியை என் நண்பன் பழநியப்பனிடம் விட்டுவிட்டேன். இந்தியன் பீனல் கோடு எல்லாம் அவனிடம் செல்லாது! அவன் மலை மீது ஏ.கே47 உடன் (தண்டாயுதத்தோடு) இருக்கிறான். பலரை அவன் தண்டித்தும் இருக்கிறான். துரோகிகள் இப்போது அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதையும் நான் கண்கூடாக பார்க்கும்படியான வாய்ப்பையும் அவன் நல்கி விட்டான்.

    ReplyDelete
  22. Vanakkam Ayya,
    A Great Innovator,creator has Lived,Living and will be Lived on with us through his Innovative creations...Steven Paul Jobs is an well lived example of a person with pennyless starter of life could reach a worthy Life,if we have worthy Ambitious Innovations lying with us...The world has once again suffered a setback with a loss of a Great Genius,ambitious and Target "Hungry" good Human being like Steve Jobs...Let's his soul rest in peace.

    ReplyDelete
  23. //// SP.VR. SUBBAIYA said...
    அவன் மலை மீது ஏ.கே47 உடன் (தண்டாயுதத்தோடு) இருக்கிறான். பலரை அவன் தண்டித்தும் இருக்கிறான். துரோகிகள் இப்போது அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதையும் நான் கண்கூடாக பார்க்கும்படியான வாய்ப்பையும் அவன் நல்கி விட்டான்./////

    எல்லாம் நியூட்டன் 3rd லா..
    இப்பவெல்லாம் ரொம்ப ஃபாஸ்ட்..ரியாக்ஷன்..நீங்க பார்த்ததுபோலவே..
    பழனி என்றதும்..
    பழனியிலே நேற்று என் கோழிகோடு சின்னம்மா பையன் வீட்டு
    (தம்பி-மாமா மகள் தம்பதியின் குழந்தைக்கு) காதணிபூட்டி விழா நடந்து இன்று காலைதான் வீடு திரும்பியுள்ளார்கள் எங்கள் வீட்டு ஆட்கள்..
    கடைசிவரை உடல்நிலை சரியில்லாது போகமுடியாது என்றிருந்த பயணம்
    கடும் அழைப்புக்குப் பின் 'முருகன் கூப்பிடிகிறான்- அவனே பார்த்துக்குவான்' என்ற நம்பிக்கையில் சென்று
    திரும்பினார் என் தாயார்..

    ReplyDelete
  24. ///// தேமொழி said...
    ஆலாசியம் அவர்களின் கருத்தும் அவர் வலைப்பூ பதிவும் மனதை தொட்டது.
    மிகச் சிறந்த மேதை ஸ்டீவ் ஜாப்ஸ்.. அவர் வாழ்வில் என்னை கவர்ந்த தருணம்...
    அவர் உருவாக்கிய நிறுவனத்தில், அவர் வேலைக்கு சேர்த்த 'ஜான் ஸ்கல்லி'யே அவரை வெளியேற்றி துரத்திய நிகழ்ச்சியும் அதன் விளைவும். என்ன ஒரு கொடுமை, என்ன ஒரு நம்பிக்கை துரோகம். மனிதர் சற்றும் சலிக்காமல் மேலே வந்து சில ஆண்டுகளில் அதே ஆப்பிள் நிறுவனத்தில் நுழைந்து, துவண்டு கிடந்த நிருவனத்தை தூக்கி நிறுத்தி அதை உலகமே திரும்பி பார்க்க உயர வைத்தாரே./////

    நன்றிகள் சகோதிரி...
    உண்மைதான் துரோகம் இழைக்கப்பட்டாலும்... இந்த மேதை மீண்டும் சாதித்து காண்பித்ததோடு அவரின் பழைய நிறுவனத்தையும் தூக்கி நிறுத்தி சாதித்து காண்பித்து இருப்பது தான்!!!
    அவர் இந்த உலகத்தையும், தன்னையும் எவ்வளவு உண்மையாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.
    உன்களின் பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரி..

    ReplyDelete
  25. Three APPLES Changed the World...

    First - Adam & Eve...
    Second - Sir Issac Newton
    Third - Steve Jobs...

    It's not practical for me to think my life withoud iProducts...

    Your iDeas changed the world Steve...You are a LEGEND...

    Our Generation will surely remember you and our kids ofcourse they will remember in History...

    Pandian

    ReplyDelete
  26. அந்த
    ஆப்பிளை
    அவர் தொட்டதால்
    உலகில்
    உயிரினம் வந்தது.

    இந்த
    ஆப்பிள்ளை
    இவர் தீட்டியதால்
    உயிரினதிடம்
    உலகம் வந்தது .

    ReplyDelete
  27. அஞ்சலி செலுத்தும் இந்த வகுப்பில்
    அவருக்கு மௌனம் சாதித்தபடி...

    அறிஞர் பொன்மொழியினை
    அள்ளித் தருகிறோம் சிந்தனைக்கு..

    "Nobody dies; they live in memories and in the genes of their children”.

    ReplyDelete
  28. //// bhuvanar said...
    Three APPLES Changed the World...

    First - Adam & Eve...
    Second - Sir Issac Newton
    Third - Steve Jobs.../////

    It so good sense of timing to publish this sentence in this classroom. Exposing all the co-readers to the
    tribute send to Steve Jobs by Prince of Saudi (Alwaleed) touched our heart.
    Really thanks to bhuvanar.

    ReplyDelete
  29. ///அவன் மலை மீது ஏ.கே47 உடன் (தண்டாயுதத்தோடு) இருக்கிறான்///

    ஏகே 47 என குறிப்பிட்டுச் சொல்வதில்
    ஏனோ எமக்கு உடன் பாடு இல்லை..

    அப்படி சொல்வது உல்லுல்லாய்க்கு தான் என்றாலும்
    அதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறது..

    ஆரவரிகக்காமலே.. இக்குறளை தந்து
    அமைதி கொள்கிறோம்..

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.

    ReplyDelete
  30. Blogger R.Srishobana said...
    Vanakkam Ayya,
    A Great Innovator,creator has Lived,Living and will be Lived on with us through his Innovative creations...Steven Paul Jobs is an well lived example of a person with pennyless starter of life could reach a worthy Life,if we have worthy Ambitious Innovations lying with us...The world has once again suffered a setback with a loss of a Great Genius,ambitious and Target "Hungry" good Human being like Steve Jobs...Let's his soul rest in peace./////

    நல்லது. உங்களின் இரங்கற் செய்திக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  31. //////Blogger minorwall said...
    //// SP.VR. SUBBAIYA said...
    அவன் மலை மீது ஏ.கே47 உடன் (தண்டாயுதத்தோடு) இருக்கிறான். பலரை அவன் தண்டித்தும் இருக்கிறான். துரோகிகள் இப்போது அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதையும் நான் கண்கூடாக பார்க்கும்படியான வாய்ப்பையும் அவன் நல்கி விட்டான்./////
    எல்லாம் நியூட்டன் 3rd லா..
    இப்பவெல்லாம் ரொம்ப ஃபாஸ்ட்..ரியாக்ஷன்..நீங்க பார்த்ததுபோலவே..
    பழனி என்றதும்..
    பழனியிலே நேற்று என் கோழிகோடு சின்னம்மா பையன் வீட்டு
    (தம்பி-மாமா மகள் தம்பதியின் குழந்தைக்கு) காதணிபூட்டி விழா நடந்து இன்று காலைதான் வீடு திரும்பியுள்ளார்கள் எங்கள் வீட்டு ஆட்கள்..
    கடைசிவரை உடல்நிலை சரியில்லாது போகமுடியாது என்றிருந்த பயணம்
    கடும் அழைப்புக்குப் பின் 'முருகன் கூப்பிடிகிறான்- அவனே பார்த்துக்குவான்' என்ற நம்பிக்கையில் சென்று
    திரும்பினார் என் தாயார்../////

    நியூட்டனின் விதிகளைச் சொல்லி என்னைப் பழைய பள்ளிப்பாட நினைவுகளில் தள்ளிவிட்டீர்கள் மைனர். மறக்காமல் இருக்க இணையத்தில் எடுத்து அதைப் புதுப்பித்துக் கொண்டேன். “ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.” சரிதானே?

    “ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. மனிதனால் முடியாவிட்டாலும், இறையருள் அதைச் செய்யும். ஆகவே யாருக்கும் துரோகம் செய்யாதே. மீறிச் செய்தால் அதே துரோகம் உன்னை ஒருநாள் திருப்பி அதே வேகத்துடன் அடிக்கும்” இதுவும் சரிதானே மைனர்?

    ReplyDelete
  32. ////Blogger தமிழ் விரும்பி said...
    ///// தேமொழி said...
    ஆலாசியம் அவர்களின் கருத்தும் அவர் வலைப்பூ பதிவும் மனதை தொட்டது.
    மிகச் சிறந்த மேதை ஸ்டீவ் ஜாப்ஸ்.. அவர் வாழ்வில் என்னை கவர்ந்த தருணம்...
    அவர் உருவாக்கிய நிறுவனத்தில், அவர் வேலைக்கு சேர்த்த 'ஜான் ஸ்கல்லி'யே அவரை வெளியேற்றி துரத்திய நிகழ்ச்சியும் அதன் விளைவும். என்ன ஒரு கொடுமை, என்ன ஒரு நம்பிக்கை துரோகம். மனிதர் சற்றும் சலிக்காமல் மேலே வந்து சில ஆண்டுகளில் அதே ஆப்பிள் நிறுவனத்தில் நுழைந்து, துவண்டு கிடந்த நிருவனத்தை தூக்கி நிறுத்தி அதை உலகமே திரும்பி பார்க்க உயர வைத்தாரே./////
    நன்றிகள் சகோதிரி...
    உண்மைதான் துரோகம் இழைக்கப்பட்டாலும்... இந்த மேதை மீண்டும் சாதித்து காண்பித்ததோடு அவரின் பழைய நிறுவனத்தையும் தூக்கி நிறுத்தி சாதித்து காண்பித்து இருப்பது தான்!!!
    அவர் இந்த உலகத்தையும், தன்னையும் எவ்வளவு உண்மையாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.
    உன்களின் பாராட்டிற்கு நன்றிகள் சகோதரி..//////

    மன்னிப்பதுதான் மிக உயர்ந்த குணம். அவருக்கு அது இருந்திருக்கிறது. அதனால்தான் தன்னை வெளியேற்றிய துரோகத்தைக்கூட மன்னித்திருக்கிறார் அந்த மாமனிதர்!

    ReplyDelete
  33. ////Blogger bhuvanar said...
    Three APPLES Changed the World...
    First - Adam & Eve...
    Second - Sir Issac Newton
    Third - Steve Jobs...
    It's not practical for me to think my life withoud iProducts...
    Your iDeas changed the world Steve...You are a LEGEND...
    Our Generation will surely remember you and our kids ofcourse they will remember in History...
    Pandian/////

    ஆகா அசத்தலாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி பாண்டியன்!

    ReplyDelete
  34. Blogger thanusu said...
    அந்த
    ஆப்பிளை
    அவர் தொட்டதால்
    உலகில் உயிரினம் வந்தது.
    இந்த
    ஆப்பிள்ளை
    இவர் தீட்டியதால்
    உயிரினத்திடம் உலகம் வந்தது .//////

    அவற்றை நீங்கள் தொட்டதால்
    வகுப்பறைக்கொரு
    நல்ல செய்தி வந்தது!

    ReplyDelete
  35. //////Blogger iyer said...
    அஞ்சலி செலுத்தும் இந்த வகுப்பில்
    அவருக்கு மௌனம் சாதித்தபடி...
    அறிஞர் பொன்மொழியினை
    அள்ளித் தருகிறோம் சிந்தனைக்கு..
    "Nobody dies; they live in memories and in the genes of their children”.///////

    உண்மைதான். நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  36. ///////Blogger minorwall said...
    //// bhuvanar said...
    Three APPLES Changed the World...
    First - Adam & Eve...
    Second - Sir Issac Newton
    Third - Steve Jobs.../////
    It so good sense of timing to publish this sentence in this classroom. Exposing all the co-readers to the
    tribute send to Steve Jobs by Prince of Saudi (Alwaleed) touched our heart.
    Really thanks to bhuvanar./////

    ஆமாம் மைனர், நீங்கள் புவனருக்குத் தெரிவித்த நன்றியை, அவர் வகுப்பறையின் சார்பாகவும் எடுத்துக்கொள்ளட்டும்!

    ReplyDelete
  37. ///////“ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. மனிதனால் முடியாவிட்டாலும், இறையருள் அதைச் செய்யும். ஆகவே யாருக்கும் துரோகம் செய்யாதே. மீறிச் செய்தால் அதே துரோகம் உன்னை ஒருநாள் திருப்பி அதே வேகத்துடன் அடிக்கும்” இதுவும் சரிதானே மைனர்?\\\\\
    சரிதான் சார்.. பிசிகல் object ஐ கொண்டு சொல்லப்பட்ட விதியாகிப்போனாலும்..
    எண்ண அலைகள் பத்தின ஆராய்ச்சிகள் ஒரு ஷேப்புக்கு வந்து சேரும் காலம்
    இப்புடி எதிர்வினை இயற்கையான ரூபத்திலே எந்தவொரு வினைக்கும் உண்டு என்று வினையாகுமுன்பே விதையாகும் எண்ணம் பற்றியும் இந்த விதி பொருந்தும் என்று
    அறிவியல்பூர்வமாக ப்ரூவ் பண்ண வருங்கால சமுதாயத்தில் யாராவது வருவார்கள்..
    'காசிநகர்ப் புலவர் கேட்கும் உரைதான் இங்கு காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்ற
    வரிகளுக்கு ஒரு ஷேப் இன்று கிடைத்ததா இல்லையா?
    ஒரு படி மேலே போய் 'லைவ் ஷோ'வாகவே பார்க்கமுடிகிறதே?
    அதுனாலே
    everything is possible.
    Just a matter of time...

    ReplyDelete
  38. minorwall said...
    Really thanks to bhuvanar./////

    My name is Pandian...BUVANA !!! athu namma Palaya Figure Name...(Tharpothaya Nilavara Padi..Mother for 2 Kids)...Hmmm..

    ReplyDelete
  39. ////Blogger minorwall said...
    ///////“ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. மனிதனால் முடியாவிட்டாலும், இறையருள் அதைச் செய்யும். ஆகவே யாருக்கும் துரோகம் செய்யாதே. மீறிச் செய்தால் அதே துரோகம் உன்னை ஒருநாள் திருப்பி அதே வேகத்துடன் அடிக்கும்” இதுவும் சரிதானே மைனர்?\\\\\
    சரிதான் சார்.. பிசிகல் object ஐ கொண்டு சொல்லப்பட்ட விதியாகிப்போனாலும்..
    எண்ண அலைகள் பத்தின ஆராய்ச்சிகள் ஒரு ஷேப்புக்கு வந்து சேரும் காலம்
    இப்புடி எதிர்வினை இயற்கையான ரூபத்திலே எந்தவொரு வினைக்கும் உண்டு என்று வினையாகுமுன்பே விதையாகும் எண்ணம் பற்றியும் இந்த விதி பொருந்தும் என்று
    அறிவியல்பூர்வமாக ப்ரூவ் பண்ண வருங்கால சமுதாயத்தில் யாராவது வருவார்கள்..
    'காசிநகர்ப் புலவர் கேட்கும் உரைதான் இங்கு காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்ற
    வரிகளுக்கு ஒரு ஷேப் இன்று கிடைத்ததா இல்லையா?
    ஒரு படி மேலே போய் 'லைவ் ஷோ'வாகவே பார்க்கமுடிகிறதே?
    அதுனாலே
    everything is possible.
    Just a matter of time...//////

    டச் பண்ணீட்டீங்க மைனர்!

    ReplyDelete
  40. ////////Blogger bhuvanar said...
    minorwall said...
    Really thanks to bhuvanar./////
    My name is Pandian...BUVANA !!! athu namma Palaya Figure Name...(Tharpothaya Nilavara Padi..Mother for 2 Kids)...Hmmm..//////

    அடடா, சூப்பராக இருக்கிறதே பாண்டியன். புனைப்பெயர் வைப்பதற்கு இதுவும் நல்ல யோசைதான். அப்படிப் பார்த்தால் நான் நான் 50ல் இருந்து 60 புனைப்பெயர்கள்வரை வைத்துக்கொள்ளலாம் பாண்டியன்:-))))))

    ReplyDelete
  41. ////Blogger bhuvanar said...
    minorwall said...
    Really thanks to bhuvanar./////
    My name is Pandian...BUVANA !!! athu namma Palaya Figure Name...(Tharpothaya Nilavara Padi..Mother for 2 Kids)...Hmmm..//////

    நல்லது..பாண்டியன்..ஏற்கனவே தெரிந்ததுதான்..இதன் காரணமாக எழுந்த உங்களின் படைப்பு படித்து வாசக நண்பர் மாம்ஸ் உங்களை 'கிழிந்தசட்டைக்காரர்' என்ற ஒரு பெயர் சூட்டி மகிழ்ந்ததை எல்லாம் மறந்துவிடவில்லை..
    அது போகட்டும்..இந்த (2 kids மேட்டர்) எப்ப நடந்தது?யாரின் கைங்கரியம்?
    அந்த முன்னாள் fugure இந்நாளிலும் உங்களோடு தொடர்பிலில்லையா?
    நேத்திக்கு ஒரு டிவி-ல நெட் சேனல்ல ஒரு சினிமா பார்த்தேன்..
    'the champ' என்ற 1979 படம்.1931 ரீமேக்..இத்தாலிய டிரெக்டோர் பிரான்கோ ஜெப்ரியெல்லி என்பவரின் படம்.
    மிகமிக உருக்கமான படம்..வாழ்க்கைப் போராட்டத்தில் காரணமாகி
    டிவோர்ஸ் பண்ணி வாழும் தம்பதிக்குப் பிறந்த குழந்தை..பற்றிய கதை..
    தாய் வேறொரு வசதியான கனவான் டாக்டரை மணந்து வாழ்கிறாள்..
    கணவன் champ எக்ஸ்-பாக்ஸ் சாம்பியன் தன் மகனுடன் தனியே ரேஸ் குதிரை சொந்தமாகக்கொண்டு ஜீவனத்தில் வசிக்கிறான்..
    'பையனுக்கு அவன் தாய் இறந்துவிட்டாள்..'என்று உண்மையை சொல்லாமலே வளர்க்கிறான்..
    அந்தத் தாய் மகனைத் தேடி அடையத் துடிக்கும் காட்சிகளும், 'அப்போது விட்டுவிட்டு வசதிதேடி ஓடிப்போன நீ இப்போது எப்படி உரிமை கொண்டாடலாம்?' என்று உணர்ச்சியில் கொந்தளிக்கும் காட்சிகளும், ஒரு கட்டத்தில் குதிரை ரேசில் காயப்பட்டு நிதிநிலைச் சிக்கல்கள்
    காரணமாக சிறைசெல்ல நேர்ந்து பையனை அந்தத் தாயிடமே அனுப்பிவைக்கும் காட்சி என்று படம் முழுக்க 'டச்சிங்' கா(ன)ண சீன்கள் ஏராளம்..அப்படிச் சென்ற பையனிடம் தான்தான் அவனின் தாய் என்று வெளிப்படுத்திக்கொள்ளும் கட்டத்தில் அதை ஏற்கமறுத்து சிறுபையன் குமுறி வெளியேறி அப்பாவிடம் ஓடும் நடிப்புக்கு அவனைத் தவிர வேறுயாரும் ஈடு இணை கிடையாது..
    முடிவை வெள்ளித்திரையில் காண்க..
    1931 படம். ரீமேக் இன் 1979 .
    உறவுகள்..தொடர்கதை..?

    ReplyDelete
  42. SP.VR. SUBBAIYA said...
    நான் 50ல் இருந்து 60 புனைப்பெயர்கள்வரை வைத்துக்கொள்ளலாம் பாண்டியன்:-)))))) ///

    Vaathiyaar polaye Maanavan uruvaga valthungal...

    ReplyDelete
  43. minorwall said...
    அது போகட்டும்..இந்த (2 kids மேட்டர்) எப்ப நடந்தது?யாரின் கைங்கரியம்?///
    Mams sathiyama Naan Illai...

    அந்த முன்னாள் fugure இந்நாளிலும் உங்களோடு தொடர்பிலில்லையா?///
    Thodarbu vendam Minor Mams...thodarbu iruntha athu peru "kalla thodarbu"...

    ReplyDelete
  44. //// bhuvanar said...
    Thodarbu vendam Minor Mams...thodarbu iruntha athu peru "kalla thodarbu".../////////

    நல்லது ..எதுக்கு நமக்கு கள்ளதெல்லாம்?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com