மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.10.11

Astrology எப்போது(டா) திருமணம் நடக்கும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology எப்போது(டா) திருமணம் நடக்கும்?

சிலபேர் நொந்துபோய் இருப்பார்கள். எத்தனையோ பிரயத்தனம் செய்தும் திருமணம் மட்டும் இன்னும் கூடிவராமல் இருக்கும். கடைசி நேரத்தில் தட்டிக்கொண்டு போய்விடும்.

நண்பர்கள் வேறு பிய்த்துக்கொண்டிருப்பார்கள்: “எப்போதுடா திருமணம்? நம்ம செட்டில எல்லாப் பசங்களுக்கும் ஆயிடுச்சு. உனக்கு மட்டும்தாண்டா பாக்கி!”

என்ன செய்வது? தர்ம சங்கடமாக இருக்கும்!

நான்கைந்து வருடமாக இதே கதை. ஆண்கள் என்றில்லை, பெண்களுக்கும் திருமணம் கூடி வராமல் தள்ளிக்கொண்டே போகும்.

ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது களத்திரகாரன் சுக்கிரனுடன் தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதமாகும்.

இத்தகைய தாமதம், தடைகள் எல்லாம் நீங்கி இறையருளால் ஒருவருக்குத் திருமணம் நடைபெற ஒரு சிவஸ்தலம் உள்ளது. அனைவருக்கும் தெரிந்த ஸ்தலம்தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இன்று பதிவிட்டுள்ளேன்
--------------------------------------------------------------------------------------------------------------
சிவஸ்தலத்தின் பெயர்: திருமணஞ்சேரி
அங்கே உறையும் இறைவனின் பெயர்    அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்
இறைவியின் பெயர்    கோகிலாம்பாள்
திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர்களால் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம்.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.

முகவரி   
அருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில்
கீழைத்திருமணஞ்சேரி
திருமணஞ்சேரி அஞ்சல்
குத்தாலம் S.O.
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609813


காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமையாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும்.

இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தமது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவார்கள் என்பதும் தல வரலாறாகும்.

திருமணப் பிரார்த்தனை விபரம்: திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.

திருமணம் கைகூடியவுடன். ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை, தம்பதி சமேதராக ஆலயத்திற்குச் சென்று அதை ஆலயத்தில் செலுத்திப் பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ளல் வேண்டும்.

தல வரலாறு: பார்வதி தேவியார் ஒருதடவை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார். சிவபெருமானும் கருணை கொண்டு அதற்குச் சம்மதித்தார். அதன்பிறகு ஒருமுறை பார்வதி தேவியார் சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரைப் பூவுலகில் பசுவாகி வாழக் கட்டளை யிட்டார். பசு உருக்கொண்ட பார்வதி தேவியார் தன் செயலை நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.

உமாதேவியாருடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய
யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.

நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதுதான் முக்கியம். இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்கும் ஆசாமிகள் எல்லாம் அங்கே செல்லாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது. மற்ற பக்தர்களுக்கும் நல்லது. ஆலயத்திற்கும் நல்லது.

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++=========
வாழ்க வளமுடன்!

17 comments:

  1. வாத்தியாருக்கு வணக்கம்!

    ஆலயங்களுக்கு நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்று மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தியுள்ளீர்!

    இது அனைவருக்கும் என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  2. மிகவும் நன்றி சுப்பையா ஐய்யா.
    எங்கள் வீட்டில்(குடும்பத்தில்) ஒரு பெண் இருக்கிறாள்.
    தகப்பன் இல்லாத குழந்தை. இறைவன் தந்தையாக இருந்து அவள் திருமணத்தை நடத்த வேண்டும்.
    வெளிநாட்டில் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு அவளுடைய அம்மா ஏதாவது செய்ய முடியுமா. அந்தப் பெண் வந்தால் திருமணஞ்சேரி போகும்படி கேட்டுக் கொள்கிறேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  3. திரும்ணஞ்சேரிக்கு வழி சொன்னதைப்போல ஸ்த்ல புராணத்தையும் சொல்லி இருந்தால் இரட்டை நம்பிக்கை வந்திருக்கும். நல்ல் ஆக்கம் ஐயா!

    ReplyDelete
  4. திருமணஞ்சேரி குறித்த செய்திகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. திருவையாற்றில் சப்தஸ்தானம் எனும் ஏழூர் உற்சவம் நடைபெறுவது அனைவருக்கும் தெரியுமென்று எண்ணுகிறேன். அந்த ஏழு ஊர்கள் முறையே திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருப்பந்துருத்தி, தில்லைத்தானம் ஆகியவை. இவற்றில் திருவேதியகுடியில் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்து கொள்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. நல்ல பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா,
    நானும் ஒரு மாதத்திற்க்கு என் தந்தையின் நண்பர் மூலமாக சென்று வந்தோம்.நன்றாக சுவாமி தரிசனம் செய்தோம்.அவர்கள் கூறியபடியே இன்றும் செய்து வருகிறேன்.இப்பொழுது தான் நல்ல வரன்கள் வரத் தொடங்கியுள்ளது.இறைவனின் கிருபையால் என் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்று நம்புகின்றேன்.கடவுள் ஒருவரால் மட்டும் தான் கஷ்டங்களில் இருந்து நம்மை மீட்க முடியும்.

    ReplyDelete
  6. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    வாத்தியாருக்கு வணக்கம்!
    ஆலயங்களுக்கு நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்று மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தியுள்ளீர்!
    இது அனைவருக்கும் என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்!/////

    ஆகா, எடுத்துக்கொள்ளலாம். நன்றி!

    ReplyDelete
  7. Blogger வல்லிசிம்ஹன் said...
    மிகவும் நன்றி சுப்பையா ஐய்யா.
    எங்கள் வீட்டில்(குடும்பத்தில்) ஒரு பெண் இருக்கிறாள்.
    தகப்பன் இல்லாத குழந்தை. இறைவன் தந்தையாக இருந்து அவள் திருமணத்தை நடத்த வேண்டும்.
    வெளிநாட்டில் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு அவளுடைய அம்மா ஏதாவது செய்ய முடியுமா. அந்தப் பெண் வந்தால் திருமணஞ்சேரி போகும்படி கேட்டுக் கொள்கிறேன். மிகவும் நன்றி.//////

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரி!

    ReplyDelete
  8. ////Blogger iyer said...
    Attendance marked/////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  9. /////Blogger CJeevanantham said...
    Nalladhu iyya....//////

    நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  10. //////Blogger kmr.krishnan said...
    திரும்ணஞ்சேரிக்கு வழி சொன்னதைப்போல ஸ்த்ல புராணத்தையும் சொல்லி இருந்தால் இரட்டை நம்பிக்கை வந்திருக்கும். நல்ல் ஆக்கம் ஐயா!/////

    உங்கள் விருப்பம் நிறைவேற்றப்பெற்றுள்ளது. நன்றி

    ReplyDelete
  11. /////Blogger Thanjavooraan said...
    திருமணஞ்சேரி குறித்த செய்திகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. திருவையாற்றில் சப்தஸ்தானம் எனும் ஏழூர் உற்சவம் நடைபெறுவது அனைவருக்கும் தெரியுமென்று எண்ணுகிறேன். அந்த ஏழு ஊர்கள் முறையே திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருப்பந்துருத்தி, தில்லைத்தானம் ஆகியவை. இவற்றில் திருவேதியகுடியில் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்து கொள்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. நல்ல பதிவிற்கு நன்றி.//////

    நீங்கள் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்பதோடு, வயதும், அனுபவமும் சேர்ந்து உங்களுக்குப் பல அரிய தகவல்கள் தெரிந்துள்ளன. பகிர்விற்கு நன்றி சார்!

    ReplyDelete
  12. ////Blogger R.Srishobana said...
    வணக்கம் அய்யா,
    நானும் ஒரு மாதத்திற்க்கு என் தந்தையின் நண்பர் மூலமாக சென்று வந்தோம்.நன்றாக சுவாமி தரிசனம் செய்தோம்.அவர்கள் கூறியபடியே இன்றும் செய்து வருகிறேன்.இப்பொழுது தான் நல்ல வரன்கள் வரத் தொடங்கியுள்ளது.இறைவனின் கிருபையால் என் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்று நம்புகின்றேன்.கடவுள் ஒருவரால் மட்டும் தான் கஷ்டங்களில் இருந்து நம்மை மீட்க முடியும்.///////

    அதுதான் நிதர்சனமான உண்மை. பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. ////Blogger RAJ said...
    Hopefully it will happen..:)//////

    நம்பிக்கையோடு இருங்கள். நல்லது நடக்கும்!

    ReplyDelete
  14. வாத்தியார் ஐயா!

    எதோ கஷ்ட நஷ்டத்தை நேரில் பார்த்தது போல மிகவும் அற்புதமாக திருமணம் செய்யாதவரின் உணர்வுகளை இன்றைய வகுப்பறையில் தந்து உள்ளீர்கள் ஐயா.

    கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற வேண்டி திருமணம் சேரி சென்று பூஜை மற்றும் நேர்த்தி கடனை செய்து விட்டு வந்தோம் ஐயா.

    தாங்கள் கூறியவாறு மாலையை இன்னும் மிகவும் பத்திரமாக பாது காத்து வருகின்றோம் திருமணம் ஆன உடன் நேர்த்திகடனை நடத்தி முடிக்க ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com