மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.10.11

Astrology சோதனைமேல் சோதனை ஏனடா சாமி?

---------------------------------------------------------------------------------------------
  
Astrology சோதனைமேல் சோதனை ஏனடா சாமி?

“சார், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை வைத்து பாடம் நடத்துகிறீர்கள். அதுபோல சமூகத்தில் உயர முடியாமல் பின்தங்கிய நிலையில் இருப்பவர் ஒருவரின் ஜாதகத்தை வைத்துப் பாடம் நடத்துங்கள்” என்று நமது வகுப்பறைக் கண்மணி ஒருவர் கேட்டிருந்தார். இன்றையப் பாடம் அவருக்கு சமர்ப்பணம்!
----------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
இது ஒரு பெண்மணியின் ஜாதகம். அவரை எனக்கு நன்கு தெரியும். அதனால் பெயரைக் குறிப்பிடவில்லை.

1931ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்தவர். இன்னும் 42 நாட்களில் அவருக்கு எண்பது வயது நிறைவடைய உள்ளது. ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் அளவு வாழ்க்கையில் சோதனைகளைச் சந்தித்தவர் அபூர்வம்.

1. ஜாதகி அழகான தோற்றம் உடையவர். லக்கினத்தில் இருக்கும் சந்திரன் அதை வழங்கியது.

2. நல்ல உடல் ஆரோக்கியம் மிக்கவர். சுயவர்க்கத்தில் வலுவாக இருக்கும் சூரியன் அதை வழங்கியது. நல்ல உடல் ஆரோக்கியமான பெண்மணி. இன்றைக்கும் இருபது கிலோ மீட்டர் நடக்க வேண்டுமென்றால், அசராமல் நடக்கக்கூடியவர். அந்த அளவிற்கு உடல் நலமிக்கவர். இதுவரை ஒருமுறைகூட மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எதையும் மேற்கொள்ளாதவர்

3. ஜாதகி நல்ல உயர்வான குடும்பத்தில் பிறந்தார். பாக்கியஸ்தானத்தில் 30 பரல்கள். தந்தைக்கு உரிய சூரியன் 11ல், தாய்க்கு உரிய சந்திரன் திரிகோணத்தில் (1ல்)

4. பெண்களின் ஜாதகத்தில் பாக்கியாதிபதி கெட்டுவிடக்கூடாது. பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் நீசமடைந்துள்ளார். கிலோ கணக்கில் கிடைக்க வேண்டிய பாக்கியம் கிராம் கணக்கில் கிடைத்தது. சூரியன் தன் சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருக்கிறார். அதனால் கொடுத்தார்.

5. பூராட நட்சத்திரம் என்பதாலும், 7ஆம் வீட்டின் மேல் சனியின் பார்வை விழுந்ததாலும், களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்ததாலும் உரிய வயதில் திருமணம் ஆகவில்லை. தாமதமாகத் திருமணம் நடைபெற்றது. 28 வயது முடியும் தருவாயில் திருமணம் நடைபெற்றது.

6. எழாம் வீட்டில் 22 பரல்கள் மட்டுமே அத்துடன் அதன் அதிபதி புதன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில், அந்த வீட்டிற்கு ஆறில். நல்ல கணவன் அமையவில்லை. துக்கடா ஆசாமி. செல்வந்தர் வீட்டுப் பையன் என்றாலும் தன்னுடைய தீய பழக்கங்களினால் எல்லாவற்றையும் குறுகிய காலத்தில் ஒழித்துக் கட்டிவிட்டான். அவன் இந்த அம்மணியுடன் வாழ்ந்தது. 11 ஆண்டுகள் மட்டுமே. இறந்துவிட்டான்.

7. அம்மணி 39 வயதில் விதவை. லக்கினத்தில் உள்ள சனியின் கைங்கர்யம் அது!

8. குடும்ப ஸ்தானத்தில் குறைவான பரல்கள் (24) அத்துடன் அதன் அதிபதி சனி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். நல்ல குடும்ப வாழ்க்கை அமையவில்லை. இருந்தாலும் குருவின் பார்வை அந்த வீட்டின் மேல் இருப்பதால் பெயர் கெடாமல் ஒரு குடும்ப அமைப்பு உள்ளது. தற்சமயம் மகனுடன் சொந்த வீட்டில் மினிமம் வசதிகளுடன் இருக்கிறார்.

9. லக்கினாதிபதி உச்சம், மற்றும் பரிவர்த்தனை யோகத்துடன் இருந்தாலும் எட்டாம் வீட்டில் - மறைவிடத்தில் இருப்பதால் போராட்டமான வாழ்க்கை.

10. மனகாரகன் சந்திரன் சனியுடன் இருப்பதால் மனப் போராட்டங்களுக்கும் குறைவில்லை.

11. நான்கில் (சுகஸ்தானத்தில்) இருக்கும் ராகுதான் முக்கியமான வில்லன். அம்மணிக்கு வாழ்க்கையில் எந்த சுகமும் இல்லாமல் செய்துவிட்டான்.
ஜாதகத்தில் 4ஆம் வீடு முக்கியம் (House of comforts) அதில் ராகு போய் அமர்தால் என்ன ஆகும். அண்டா பாலில், ஒரு பாட்டில் விஷத்தை ஊற்றியது போலத்தான் அது. மொத்த பாலும் கெட்டுவிடாதா?

12. பூர்வ புண்ணிய அதிபதி செவ்வாய் மிகவும் பலவீனமாக  (1 பரல்) இருக்கிறார். எல்லாம் கர்ம வினைப் பலன். சூரியனைத் தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் சுய வர்க்கத்தில் குறைவான பரல்களுடன் இருப்பதைப் பாருங்கள்

13. சுக்கிரனும் புதனும் சேர்ந்ததால் ஜாதகி நிபுணத்துவம் மிக்கவர். எதையும் எளிதில் கற்றுக்கொண்டு செய்யக்கூடியவர். அந்த நிபுணத்துவ அமைப்பு லக்கினத்திற்குப் 12ல் அமைந்ததால், அது ஜாதகிக்குக் கைகொடுக்க முடியவைல்லை. பள்ளத்தில் கிடப்பவன், அடுத்தவனுக்கு எப்படிக் கை கொடுக்க முடியும்?

14. சுக்கிர திசையில் இருப்பு - 4 வருடம் 8 மாதங்கள் 18 நாட்கள் + சூரிய திசை 6ஆண்டுகள் + சந்திரன் 10 ஆண்டுகள் + செவ்வாய் 7ஆண்டுகள் ஆக மொத்தம் சுமார் 28 ஆண்டுகள் வரை பெற்றோரின் அரவனைப்பில் ராஜகுமாரியாக இருந்த ஜாதகியை, ராகு தன் திசை துவங்கியவுடன் போட்டுப் பார்த்துவிட்டான். திருமணம் மூலமாக பல கேடுகளைச் செய்து பல சோதனைகளை ஜாதகி சந்திக்கும் படி செய்தான். அதற்குப் பிறகுவந்த குருதிசையும் (16 ஆண்டுகள் - எட்டாம் இடத்தில் இருப்பவனின் திசை) சோதனைகள் குறையாமல் பார்த்துக்கொண்டது. அதற்குப் பிறகு சனி திசை         (18 வருடங்கள் ஓடி விட்டது. இன்னும் ஒரு ஆண்டு பாக்கி உள்ளது) அந்த சனிக்கும் ஜாதகத்தில் சுயவர்க்கத்தில் குறைவான பரல்களே 2 பரல்கள் மட்டுமே. மிகவும் வீக். அதனால் சோதனைகள் விடாமல் துரத்தின.

15. கடந்த 52 ஆண்டுகளாக சோதனைகள். சோதனைகள். ஏனடா சாமி என்று கடவுளைக் கேட்கும் அளவிற்கு சோதனைகள். ஆனாலும் ஜாதகி தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறார். காரணம் அரச கிரகங்களான சூரியனும் சந்திரனும் அதைச் செய்து வருகின்றன. சூரியன் 11ல், சந்திரன் 1ல் (Both of the planets confers standing power to the native of the horoscope)

விளக்கம் போதுமா?

என்னை அறியாமல் எதையாவது விவரிப்பதற்கு விட்டிருந்தால், இந்தப் பதிவைப் படிக்கும் நமது வகுப்பறையின் சீனியர் மாணவர்களான திருவாளர் கே.முத்துராமகிருஷ்ணன் அவர்களும், திருவாளர் மலேசியா ஆனந்த் அவர்களும் அதைப் பூர்த்தி செய்துவிடுவார்கள்.

காதைக் கொண்டு வாருங்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன். என்னுடைய “தந்தி மீனி ஆச்சி” கதையின் அடைப்படை நாயகி இவர்தான். கதையின் போக்கையும்,  முடிவையும் நான் வேறு மாதிரி எழுதினேன். அது கதையின் மேன்மைக்காக!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

47 comments:

  1. ஐயா,
    மீனி ஆச்சி பிறக்கும் பொழுதே சுக்கிர திசையில் பிறந்துள்ளாரே, நீங்கள் சிலமுறை "குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும்" என்று சில பாடங்களில்குறிப்பிட்டுளீர்கள், அது இந்த அம்மையார் வாழ்விற்கும் பொருந்துமா?

    The damsel in distress, so after marriage this lady didn't live happily ever after.

    சந்திரசேகரின் கருத்துக்கும் நன்றி. இந்த புதிய முறை -- "எளியோரின் ஜாதக அலசல்" என் போன்ற கத்துக் குட்டிமாணவர்களை நிறைய சுயமாக யோசிக்க வைக்கும் என நம்புகிறேன். வழக்கம் போல் எளிய விளக்கங்கள்.... இந்த முறை பரல்களுடன் கூட, இதுபோன்று பாடம் நடத்தும் முறையில் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது என் கருத்து. நன்றி.
    மாணவி தேமொழி

    ReplyDelete
  2. ஆயுள் ஸ்தானாதிபதியும் (வளர்பிறை சுபச் சந்திரன்) ஆயுள் காரகனும் லக்கினத்தில் இருப்பதும், ஆயுள் பாவம் உச்ச குருவினால் பலம் பெற்றிருப்பதும் , ஆயுள் ஸ்தான பரல்கள் சமநிலையில் இருப்பதாலும் (56-28 = 28), ஆயுள் கெட்டியாக உள்ளது. சரியா அய்யா?

    ReplyDelete
  3. Guru Vanakkam,

    Villan Mandhi is also in Sayana sthanam 12 , which would have caused the main trouble. Am I right ?

    Ramadu

    ReplyDelete
  4. சயன ஸ்தானத்தில் மாந்தி,7ம் அதிபன்,காமத்துக்கான சுக்ரன் ஆகியோரால் தாம்பத்ய சுகம் நீடிக்க முடியவில்லை.குரு பார்வையால் ஏதோ சிறிது பரவாயில்லை.நிச்சயம் தூக்கம் பிடிக்காத புலம்பல் கேசாகத்தான் இருப்பார்.
    சனி சந்திரன் கூட்டு வேறு கிட்டத்தட்ட மன நோயாளி போல ஆக்கியிருக்கும். நல்ல வேளையாக 6 கிரஹங்கள் உச்ச‌ குருவின் பார்வை பெறுகின்றன.எனவே தப்பித்தார்.

    நல்ல அலசலுடன், தந்திமீனி ஆச்சியின் ஜாதகம் என்று வேறு சொல்லிவிட்டீர்கள். மீண்டும் கதையைப் படித்துப் பார்க்க ஆவலாகிவிட்டது.

    ReplyDelete
  5. சபாஷ்..

    அருமை..யான அலசல்..
    அப்படிபோடு சந்துரு அண்ணாச்சிக்கு

    வழக்கம் போல் இந்த
    வகுப்பில் கவிஞர் வரிகளை சிந்திப்போம்

    ---
    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

    கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
    என் கோலத்தில் இனிமேல்
    எழில் வருமோ

    பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
    என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

    ..அமைதியில்லாத நேரத்திலே
    அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்

    நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
    இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

    ReplyDelete
  6. Sir,

    Poorada nakshtrathirathil piranthaal thirumanam thamadham aaguma?

    and pls check my mail id: rgovind07@gmail.com is in your list.

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா.. சில சந்தேகங்கள்.

    அய்யா, 8 க்கு உரிய சுக்கிரன் 12ல் இருப்பது விபரீத ராஜ யோகமாகாதா? அப்படியானால் இந்த யோகம் சுக்கிர தசையில் பலன் கொடுத்திருக்குமா..?

    குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்களே.. குரு இரண்டாம் இடமான குடும்பஸ்தானத்தைப் பார்க்கையில் குடும்பத்தில் அவலம் எப்படி..?

    அய்ந்திற்குரியவனும், பத்திற்குரியவனும் சேர்ந்திருக்கையில் (கோண கேந்திராதிபதிகள்..) வரும் யோகம் இவருக்கு எப்படி பலன் கொடுத்திருக்கும்..?

    குரு பார்வை அய்ந்தாம் அதிபதிக்கும் களத்திர காரகனுக்கும் கிடைத்தும் பயனில்லையே.. ஏன்?

    உங்கள் பாடம் தெளிவாய் இருந்தது..

    நன்றிகள்.

    ReplyDelete
  8. Dear sir,

    Thank you very much for good lesson.Saturn & Moon in lagnam -- is a punrapoosa dosa?

    ReplyDelete
  9. Thanxs for a fantastic lesson.I have a doubt she lost her husband due to punarpoosa dosam as Moon & Saturn in lagnam.

    ReplyDelete
  10. //////Blogger தேமொழி said...
    ஐயா,
    மீனி ஆச்சி பிறக்கும் பொழுதே சுக்கிர திசையில் பிறந்துள்ளாரே, நீங்கள் சிலமுறை "குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும்" என்று சில பாடங்களில்குறிப்பிட்டுளீர்கள், அது இந்த அம்மையார் வாழ்விற்கும் பொருந்துமா?
    The damsel in distress, so after marriage this lady didn't live happily ever after.////////

    பிறப்பில் சுக்கிரதிசை 4வருடம் 9 மாதம் 18 நாள் மட்டும்தானே! தொடர்ந்து வந்த நீச சூரியனின் திசையும் சேர்ந்து சின்ன வயது வாழ்க்கையை நெறிப்படுத்தவில்லை. அம்மணி படித்தது எட்டாம் வகுப்பு வரைதான்!

    //////// சந்திரசேகரின் கருத்துக்கும் நன்றி. இந்த புதிய முறை -- "எளியோரின் ஜாதக அலசல்" என் போன்ற கத்துக் குட்டிமாணவர்களை நிறைய சுயமாக யோசிக்க வைக்கும் என நம்புகிறேன். வழக்கம் போல் எளிய விளக்கங்கள்.... இந்த முறை பரல்களுடன் கூட, இதுபோன்று பாடம் நடத்தும் முறையில் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது என் கருத்து. நன்றி.
    மாணவி தேமொழி////////

    உங்கள் கருத்து வாழ்க! என்னைப் போல பாடம் நடத்தும் திறமையுள்ளவர்கள் இருக்கலாம். நமக்குத் தெரியாததால், அதுபற்றி அறுதியிட்டுச் சொல்வது தவறாகிவிடும்!

    ReplyDelete
  11. Blogger Srinivasarajulu.M said...
    ஆயுள் ஸ்தானாதிபதியும் (வளர்பிறை சுபச் சந்திரன்) ஆயுள் காரகனும் லக்கினத்தில் இருப்பதும், ஆயுள் பாவம் உச்ச குருவினால் பலம் பெற்றிருப்பதும் , ஆயுள் ஸ்தான பரல்கள் சமநிலையில் இருப்பதாலும் (56-28 = 28), ஆயுள் கெட்டியாக உள்ளது. சரியா அய்யா?/////

    சரிதான் நண்பரே! அத்துடன் லக்கினாதிபதியும் (குரு) எட்டாம் அதிபதியும் (சந்திரனும்) பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதையும் பாருங்கள் அதுதான் அதி முக்கியமான காரணம்.

    ReplyDelete
  12. /////////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Villan Mandhi is also in Sayana sthanam 12 , which would have caused the main trouble. Am I right ?
    Ramadu//////

    அதுவும் ஒரு காரணம்!

    ReplyDelete
  13. Blogger kmr.krishnan said...
    சயன ஸ்தானத்தில் மாந்தி,7ம் அதிபன்,காமத்துக்கான சுக்ரன் ஆகியோரால் தாம்பத்ய சுகம் நீடிக்க முடியவில்லை. குரு பார்வையால் ஏதோ சிறிது பரவாயில்லை.நிச்சயம் தூக்கம் பிடிக்காத புலம்பல் கேசாகத்தான் இருப்பார். சனி சந்திரன் கூட்டு வேறு கிட்டத்தட்ட மன நோயாளி போல ஆக்கியிருக்கும். நல்ல வேளையாக 6 கிரஹங்கள் உச்ச‌ குருவின் பார்வை பெறுகின்றன.எனவே தப்பித்தார்.
    நல்ல அலசலுடன், தந்திமீனி ஆச்சியின் ஜாதகம் என்று வேறு சொல்லிவிட்டீர்கள். மீண்டும் கதையைப் படித்துப் பார்க்க ஆவலாகிவிட்டது/////

    பாருங்கள்! மூலக் கரு மட்டும்தான் அவர். கதையின் போக்கு, முடிவு எல்லாம் வேறு. கதையின் மேன்மைக்காக அப்படி எழுதப்பெற்றது!.

    ReplyDelete
  14. /////Blogger iyer said...
    சபாஷ்..
    அருமை..யான அலசல்..
    அப்படிபோடு சந்துரு அண்ணாச்சிக்கு/////

    சபாஷ் யாருக்கு? வாத்தியாருக்கா அல்லது அப்படிப்போட்ட சந்துருவுக்கா?

    ///////வழக்கம் போல் இந்த
    வகுப்பில் கவிஞர் வரிகளை சிந்திப்போம்
    ---
    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
    கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
    என் கோலத்தில் இனிமேல்
    எழில் வருமோ
    பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
    என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
    ..அமைதியில்லாத நேரத்திலே
    அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
    நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
    இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்//////

    நக்கீரர்: இதன் மூலம் எங்கள் அரசசபைக்குத் தாங்கள் சொல்ல வரும் செய்தி என்னவோ?

    ReplyDelete
  15. ///////Blogger govind said...
    Sir,
    Poorada nakshtrathirathil piranthaal thirumanam thamadham aaguma?
    and pls check my mail id: rgovind07@gmail.com is in your list.////////

    மூலம்,. பூராடம், ஆயில்யம் கேட்டை போன்ற நட்சத்திரங்கள் கல்யாணச் சந்தையில் எடுபடுவதில்லை. ஆகவே இயற்கையாகவே இந்த நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் தாமதப்படும்!

    ReplyDelete
  16. /////Blogger Govindasamy said...
    வணக்கம் அய்யா.. சில சந்தேகங்கள்.
    அய்யா, 8 க்கு உரிய சுக்கிரன் 12ல் இருப்பது விபரீத ராஜ யோகமாகாதா? அப்படியானால் இந்த யோகம் சுக்கிர தசையில் பலன் கொடுத்திருக்குமா..?
    குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்களே.. குரு இரண்டாம் இடமான குடும்பஸ்தானத்தைப் பார்க்கையில் குடும்பத்தில் அவலம் எப்படி..?
    அய்ந்திற்குரியவனும், பத்திற்குரியவனும் சேர்ந்திருக்கையில் (கோண கேந்திராதிபதிகள்..) வரும் யோகம் இவருக்கு எப்படி பலன் கொடுத்திருக்கும்..?
    குரு பார்வை அய்ந்தாம் அதிபதிக்கும் களத்திர காரகனுக்கும் கிடைத்தும் பயனில்லையே.. ஏன்?
    உங்கள் பாடம் தெளிவாய் இருந்தது..
    நன்றிகள்.//////////

    1. என்ன அவசரம்? சுக்கிரன் எட்டுக்கு உரியவன்தானா என்பதை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.
    2. குரு பார்வை. (5, 7 9ஆம் பார்வைகள்) கோடி புண்ணியம் அதனால் ஜாதகத்தில் உள்ள குறைகள் எல்லாம் போய்விடும் என்றால், எல்லோருமே நலமாக இருப்பார்கள். புகாருக்கும், திகாருக்கும் வேலை இல்லாமல் போய்விடும்!
    3. 5ஆம் & 10 ஆம் அதிபதிகள் பள்ளத்தில் அல்லவா (12ல்) இருக்கிறார்கள். அவர்கள் எப்படி கை கொடுக்க முடியும்?
    4. விரையத்தில் அமர்ந்தது அமர்ந்ததுதான். நீங்கள் சொல்லும் பார்வையினால்தான் அம்மணிக்குத் திருமணம் நடந்தது. அது மட்டுமல்ல பதினோரு ஆண்டுகள் (கணவனுடன் சேர்ந்த) குடும்ப வாழ்க்கையும் அமைந்தது. லக்கினத்தில் உள்ள சனி தனது வீட்டோ பவரை வைத்து, அதைக் காலி செய்தது. Veto Power என்றால் என்னவென்று தெரியுமல்லவா? தெரியாவிட்டால் அடுத்தவரியைப் படியுங்கள்:
    To prevent (a legislative bill) from becoming law by exercising the power of veto.

    ReplyDelete
  17. மன்னிக்கவும்..

    6க்கு உரிய சுக்கிரன் 12ல் இருப்பது விபரீத ராஜ யோகம் தானே அய்யா..?

    ஆர்வக் கோளாரால் நடந்த தவறு..
    மறுபடி மன்னிக்கவும்.

    ReplyDelete
  18. விளக்கம் அருமை..

    மறுபடி நன்றிகள் அய்யா..

    ReplyDelete
  19. ஐயா, அதாவது ஆச்சிக்கு ராகு தசை கேது புக்தி நடந்த சமயம், ஏழரை சனியும் வாட்டியது... அப்பொழுது அவர் கணவனை பறி கொடுத்தாரா? நான் சொல்வது சரியா?
    [நை.. நை... செய்வதற்கு மன்னிக்கவும் :)]

    ReplyDelete
  20. Perfect or near perfact அலசல். விடுபட்டதை பூதக் கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும். இருப்பினும் என் கருத்தைச் சொல்லி விடுகிறேன். முன்னால் போனால் முட்டுகிறது. பின்னால் போனால் உதைக்கிறது என்பது போல்தான் இருக்கிறது இந்த ஜாதகம். வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால் 1,5,9 அதிபதிகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இந்த இடங்களிலோ இதன் அதிபதிகளுடனோ மறைவுஸ்தானாதிபதிகள், இருந்தோ, பார்த்தோ, சேர்ந்தொ, இருந்து குட்டையை குழப்பக் கூடாது. 1,5,9 அதிபதிகளில் ஒருவர் 8ல் இருக்கிறார், ஒருவர் 12ல் இருக்கிறார். இன்னொருவர் நீசமாக இருக்கிறார். அடுத்து கேந்திராதிபதிகள். அவர்கள் நிலையும் சொல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் இழப்பீடாக நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருக்கிறாரே. அது போதாதா Health is wealth.

    ReplyDelete
  21. 39 பது வயதில் ஏழரைச் சனிக்கு வாய்ப்பில்லை...

    ஒருவேளை தசா புத்தி காரணமாயிருக்கலாம்..

    அய்யா, என் கருத்து சரிதானே..?

    ReplyDelete
  22. அன்புள்ள ஆசிரியருக்கு,பதிவு அருமை.வாழ்ந்தவர்களைவிட வாழ்ந்து கெட்டவர்களிடம் தான் நிறைய விஷயங்கள்(ஞானம்) இருக்கும்.இது போன்ற பதிவுகளை முன்பே கேட்கலாம் என்று இருந்தேன்.நண்பர் முந்திவிட்டார்.அடுத்தமுறை திடீரென உச்சத்தைத் தொட்டுவிட்டு அதளபாதாளத்தை அடைந்தவர்கள் நிறைய உண்டு.அவர்களின் ஜாதகங்களையும் அலச வேண்டுகிறேன்.உதாரணம் நடிகர் திரு.ராமராஜன் அவர்கள்.

    ReplyDelete
  23. அய்யா, ஒரு பொதுக் கேள்வி.

    சுக்கிரனுக்கு எட்டாமிடம் மறைவுஸ்தானமா?

    ReplyDelete
  24. இங்கு லக்கினாதிபதியும் ராசிநாதனும் (குரு) எட்டில் மறைந்ததால் கெடு பலனா..?

    குருவின் உச்சம் பயனளிக்க வில்லையா..?

    ReplyDelete
  25. ///கிலோ கணக்கில் கிடைக்க வேண்டிய பாக்கியம் கிராம் கணக்கில் கிடைத்தது.///
    ///அண்டா பாலில், ஒரு பாட்டில் விஷத்தை ஊற்றியது போலத்தான் அது. மொத்த பாலும் கெட்டுவிடாதா?///
    ////பள்ளத்தில் கிடப்பவன், அடுத்தவனுக்கு எப்படிக் கை கொடுக்க முடியும்?////
    ////ராகு தன் திசை துவங்கியவுடன் போட்டுப் பார்த்துவிட்டான்.////
    ///குருதிசையும் (16 ஆண்டுகள் - எட்டாம் இடத்தில் இருப்பவனின் திசை) சோதனைகள் குறையாமல் பார்த்துக்கொண்டது.///
    நக்கீரர்: இதன் மூலம் எங்கள் அரசசபைக்குத் தாங்கள் சொல்ல வரும் செய்தி என்னவோ?
    /////குரு பார்வை. (5, 7 9ஆம் பார்வைகள்) கோடி புண்ணியம் அதனால் ஜாதகத்தில் உள்ள குறைகள் எல்லாம் போய்விடும் என்றால், எல்லோருமே நலமாக இருப்பார்கள். புகாருக்கும், திகாருக்கும் வேலை இல்லாமல் போய்விடும்!////
    ////லக்கினத்தில் உள்ள சனி தனது வீட்டோ பவரை வைத்து, அதைக் காலி செய்தது. Veto Power என்றால் என்னவென்று தெரியுமல்லவா?////
    ////இதுபோன்று பாடம் நடத்தும் முறையில் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது என் கருத்து. நன்றி.////

    ///உங்கள் கருத்து வாழ்க! என்னைப் போல பாடம் நடத்தும் திறமையுள்ளவர்கள் இருக்கலாம். நமக்குத் தெரியாததால், அதுபற்றி அறுதியிட்டுச் சொல்வது தவறாகிவிடும்!///

    நான் இன்றைய பதிவில் ரசித்த இடங்களைப் பட்டியலிட்டுள்ளேன்..
    சோதிட ரீதியான விஷயங்கள் நெட்டிலே ஆங்காங்கே கொட்டிக்கிடக்கின்றன..
    அதைச் சொல்கிற விதம்..சுவாரஸ்யம்..
    தனித்தன்மைதான் சிலரைமட்டும் உயர்த்திப்பிடிக்கிறது..
    இதை எடுத்துச்சொன்ன மாணவி உங்களுக்கு ஒரு ஜால்ரா என்றால் நான் அவருக்கு இப்படி பாயின்ட் எடுத்துக் கொடுத்து
    இன்னொரு ஜால்ராவாக இருந்துவிட்டுப்போவதில் வருத்தமொன்றுமில்லை..
    உண்மை..சிலருக்குக் கசக்கும்..

    ReplyDelete
  26. மன்னிக்கவும்.

    லக்கினாதிபதியும் ராசிநாதனும் பலப்பட்டிருப்பதால்தான் நீண்ட ஆயுள்..

    நான் அரைகுறை மாணவன் அய்யா..

    பொறுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  27. Sir vanakkam, sir analysis of this kind of simple birthcharts helps us to learn a lot. Thank you sir. Expecting more simple persons birthcharts analysis in future. Take care. God bless..

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா,
    7,ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் என்றால் மணவாழ்க்கை சரியாக அமையாது,
    2 ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் என்றால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது,
    அனால் 9 ஆம் வீட்டில் பரல்கள் (28 அல்லது) அதற்கு மேல் இருந்து, பாகயதிபதி உச்சம்,ஆட்சி,
    பெற்று, சுய வர்க்கத்தில் 4 அல்லது அதற்க்கு மேல் பரல்கள் பெற்று, நல்ல இடத்தில் (1 , 5 , 7 ) இருந்தால் பலன்கள் எப்படி சொல்வது?

    ReplyDelete
  29. //////////Blogger வெட்டிப்பேச்சு said...
    மன்னிக்கவும்..
    6க்கு உரிய சுக்கிரன் 12ல் இருப்பது விபரீத ராஜ யோகம் தானே அய்யா..?
    ஆர்வக் கோளாரால் நடந்த தவறு..
    மறுபடி மன்னிக்கவும்.///////

    12ல் மாந்தியுடன் சேர்ந்து 4 பேர்கள் இருக்கிறார்கள். கிரகயுத்தம், அஸ்தமனம் என்ற கணக்கெல்லாம் பார்க்க வேண்டாமா? பையில் வெறும்
    100 ரூபாயை வைத்துக்கொண்டு ஸ்டார் ஹோட்டலுக்கு எப்படிப் போவது?

    ReplyDelete
  30. ////////Blogger வெட்டிப்பேச்சு said...
    விளக்கம் அருமை..
    மறுபடி நன்றிகள் அய்யா..///////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  31. /////////Blogger Govindasamy said...
    நன்றிகள்//////

    நிறைய பின்னூட்டங்கள். நன்றிக்குத் தனியாக ஒரு பின்னூட்டமா?

    ReplyDelete
  32. //////Blogger தேமொழி said...
    ஐயா, அதாவது ஆச்சிக்கு ராகு தசை கேது புக்தி நடந்த சமயம், ஏழரை சனியும் வாட்டியது... அப்பொழுது அவர் கணவனை பறி

    கொடுத்தாரா? நான் சொல்வது சரியா?
    [நை.. நை... செய்வதற்கு மன்னிக்கவும் :)///////

    ஜாதகிக்கு 16.2.1970ல் ராகு திசையில் கேது புத்தி துவங்கியது. துவங்கிய இரண்டாவது மாதமே கணவரைத் தூக்கிவிட்டது. உங்கள் கணிப்பு சரிதான். ஏழரைச் சனி அது சமயம் இல்லை. பிறந்த போது ராசியில் இருக்கும் சனி 39 ஆண்டுகள் கழித்து எங்கே இருந்திருக்கும் நீங்களே
    யோசித்துப்பாருங்கள்

    ReplyDelete
  33. //////Blogger ananth said...
    Perfect or near perfact அலசல். விடுபட்டதை பூதக் கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும். இருப்பினும் என் கருத்தைச் சொல்லி விடுகிறேன். முன்னால் போனால் முட்டுகிறது. பின்னால் போனால் உதைக்கிறது என்பது போல்தான் இருக்கிறது இந்த ஜாதகம். வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால் 1,5,9 அதிபதிகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இந்த இடங்களிலோ இதன் அதிபதிகடனோ
    மறைவுஸ்தானாதிபதிகள், இருந்தோ, பார்த்தோ, சேர்ந்தொ, இருந்து குட்டையை குழப்பக் கூடாது. 1,5,9 அதிபதிகளில் ஒருவர் 8ல் இருக்கிறார்,
    ஒருவர் 12ல் இருக்கிறார். இன்னொருவர் நீசமாக இருக்கிறார். அடுத்து கேந்திராதிபதிகள். அவர்கள் நிலையும் சொல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் இழப்பீடாக நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருக்கிறாரே. அது போதாதா Health is wealth.///////

    பலர் இந்த இழப்பீடையும், காப்பீடையும் நினைப்பதில்லை. அவைகள் இல்லை என்றால் எல்லோருக்கும் பொது மதிப்பெண் 337 எப்படி வரும்? நன்றி ஆனந்த்! நீங்கள் எப்போதுமே குட்டையைக் குழப்புவதில்லை. அதற்குத் தனியாக ஒரு நன்றி!

    ReplyDelete
  34. ////////Blogger Govindasamy said...
    39 பது வயதில் ஏழரைச் சனிக்கு வாய்ப்பில்லை...
    ஒருவேளை தசா புத்தி காரணமாயிருக்கலாம்..
    அய்யா, என் கருத்து சரிதானே..?////////

    கரெக்ட் தசாபுத்திதான் காரணம். ராகுதிசையில் கேது புத்தி அதைச் செய்தது.

    ReplyDelete
  35. //////////Blogger Rajaram said...
    அன்புள்ள ஆசிரியருக்கு,பதிவு அருமை.வாழ்ந்தவர்களைவிட வாழ்ந்து கெட்டவர்களிடம் தான் நிறைய விஷயங்கள்(ஞானம்) இருக்கும்.இது போன்ற பதிவுகளை முன்பே கேட்கலாம் என்று இருந்தேன்.நண்பர் ுந்திவிட்டார்.அடுத்தமுறை திடீரென உச்சத்தைத் தொட்டுவிட்டு
    அதளபாதாளத்தை அடைந்தவர்கள் நிறைய உண்டு.அவர்களின் ஜாதகங்களையும் அலச வேண்டுகிறேன்.உதாரணம் நடிகர் திரு.ராமராஜன் அவர்கள்.////////

    நீங்கள் சொல்வது சரி. அதுபோன்ற ஜாதகங்கள் அல்லது பிறப்பு விவரங்கள் கிடைக்க வேண்டுமே? அதற்கு என்ன செய்யலாம்?

    ReplyDelete
  36. /////////Blogger Govindasamy said...
    அய்யா, ஒரு பொதுக் கேள்வி.
    சுக்கிரனுக்கு எட்டாமிடம் மறைவுஸ்தானமா?//////////

    லக்கினத்தில் இருந்து வீடுகளுக்குத்தான் மறைவு ஸ்தானங்கள். கிரகங்களை வைத்தல்ல. நீங்கள் எதையாவது புதிதாகக் கிளப்பி விடாதீர்கள்!

    ReplyDelete
  37. /////////Blogger Govindasamy said...
    இங்கு லக்கினாதிபதியும் ராசிநாதனும் (குரு) எட்டில் மறைந்ததால் கெடு பலனா..?
    குருவின் உச்சம் பயனளிக்க வில்லையா..?//////////

    லக்கினாதிபதி வேறு. ராசிநாதன் வேறு. இரண்டையும் ஒன்றாக்கி கும்மி அடிக்காதீர்கள்!

    ReplyDelete
  38. //////////Blogger minorwall said...
    ///கிலோ கணக்கில் கிடைக்க வேண்டிய பாக்கியம் கிராம் கணக்கில் கிடைத்தது.///
    ///அண்டா பாலில், ஒரு பாட்டில் விஷத்தை ஊற்றியது போலத்தான் அது. மொத்த பாலும் கெட்டுவிடாதா?///
    ////பள்ளத்தில் கிடப்பவன், அடுத்தவனுக்கு எப்படிக் கை கொடுக்க முடியும்?////
    ////ராகு தன் திசை துவங்கியவுடன் போட்டுப் பார்த்துவிட்டான்.////
    ///குருதிசையும் (16 ஆண்டுகள் - எட்டாம் இடத்தில் இருப்பவனின் திசை) சோதனைகள் குறையாமல் பார்த்துக்கொண்டது.///
    நக்கீரர்: இதன் மூலம் எங்கள் அரசசபைக்குத் தாங்கள் சொல்ல வரும் செய்தி என்னவோ?
    /////குரு பார்வை. (5, 7 9ஆம் பார்வைகள்) கோடி புண்ணியம் அதனால் ஜாதகத்தில் உள்ள குறைகள் எல்லாம் போய்விடும் என்றால்,

    எல்லோருமே நலமாக இருப்பார்கள். புகாருக்கும், திகாருக்கும் வேலை இல்லாமல் போய்விடும்!////
    ////லக்கினத்தில் உள்ள சனி தனது வீட்டோ பவரை வைத்து, அதைக் காலி செய்தது. Veto Power என்றால் என்னவென்று

    தெரியுமல்லவா?////
    ////இதுபோன்று பாடம் நடத்தும் முறையில் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது என் கருத்து. நன்றி.////
    ///உங்கள் கருத்து வாழ்க! என்னைப் போல பாடம் நடத்தும் திறமையுள்ளவர்கள் இருக்கலாம். நமக்குத் தெரியாததால், அதுபற்றி

    அறுதியிட்டுச் சொல்வது தவறாகிவிடும்!///
    நான் இன்றைய பதிவில் ரசித்த இடங்களைப் பட்டியலிட்டுள்ளேன்..
    சோதிட ரீதியான விஷயங்கள் நெட்டிலே ஆங்காங்கே கொட்டிக்கிடக்கின்றன..
    அதைச் சொல்கிற விதம்..சுவாரஸ்யம்..
    தனித்தன்மைதான் சிலரைமட்டும் உயர்த்திப்பிடிக்கிறது..
    இதை எடுத்துச்சொன்ன மாணவி உங்களுக்கு ஒரு ஜால்ரா என்றால் நான் அவருக்கு இப்படி பாயின்ட் எடுத்துக் கொடுத்து
    இன்னொரு ஜால்ராவாக இருந்துவிட்டுப்போவதில் வருத்தமொன்றுமில்லை..
    உண்மை..சிலருக்குக் கசக்கும்..////////

    பேசுவதற்கு ஒன்றுமில்லை. கைகளைத் தூக்கிவிட்டேன் மைனர்!
    (Hands off Minorwall!)

    ReplyDelete
  39. //////Blogger Govindasamy said...
    மன்னிக்கவும்.
    லக்கினாதிபதியும் ராசிநாதனும் பலப்பட்டிருப்பதால்தான் நீண்ட ஆயுள்..
    நான் அரைகுறை மாணவன் அய்யா..
    பொறுத்துக் கொள்ளுங்கள்./////

    அரைகுறை மட்டுமல்ல அவசரக் குடுக்கையும்கூட!

    ReplyDelete
  40. ////////Blogger Nareshkumar said...
    Sir vanakkam, sir analysis of this kind of simple birthcharts helps us to learn a lot. Thank you sir. Expecting more simple persons

    birthcharts analysis in future. Take care. God bless../////////

    உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே. இந்த வகை அலசலும் தொடரும்.

    ReplyDelete
  41. //////////Blogger arumuga nainar said...
    வணக்கம் ஐயா,
    7,ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் என்றால் மணவாழ்க்கை சரியாக அமையாது,
    2 ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் என்றால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது,
    அனால் 9 ஆம் வீட்டில் பரல்கள் (28 அல்லது) அதற்கு மேல் இருந்து, பாக்யாதிபதி உச்சம்,ஆட்சி,
    பெற்று, சுய வர்க்கத்தில் 4 அல்லது அதற்கு மேல் பரல்கள் பெற்று, நல்ல இடத்தில் (1 , 5 , 7 ) இருந்தால் பலன்கள் எப்படி
    சொல்வது?///////

    சில படங்கள் கதைக்காக ஓடும். சில படங்கள் நடிகர்களுக்காக ஓடும். பாக்கியாதிபதி ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அவர் படத்தை ஓட
    வைத்துவிடுவார் நைனா(ர்). பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் அதை எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார். கவலையை விடுங்கள்.

    ReplyDelete
  42. வசதி வாய்ப்புகளை விட்டு விட்டுப் பார்த்தால் துலாபாரம் கதாநாயகியின் ஜாதகம் போல் உள்ளது. பொதுவான சில சந்தேகங்கள்:

    நீசமான இடத்திலுள்ள கிரகத்திற்கு அதிக பரல்கள் கிடைப்பது எப்படி? அத்தகைய தருணங்களில் எதைக் கணக்கில் கொள்ள வேண்டும்? நீசத்தையா, அதிக பரல்களையா?

    ராசி சக்கரத்தில் நீசம் பெற்ற கிரகம் அம்சத்தில் ஆட்சி பலம் பெற்றால்
    நீசம் (0%), ஆட்சி பலம் (100%) என்பதன் சராசரியாக அந்த கிரகம் 50% பலன் தரும் எனப் புரிந்து கொள்ளலாமா?

    ஒரே கிரகம் ஒரு நல்ல இடத்திற்கும் (உதாரணம் பூர்வ புண்ய ஸ்தானம்) ஒரு மறைவிடத்திற்கும் (அஷ்டமாதிபதி) அதிபதியாக இருந்தால் அந்த கிரகத்தின் செயல்பாடுகள், தசா புக்திகள், கோள் சாரம் எப்படி இருக்கும்?

    ஸ்தான அதிபதியின் நிலையை விட காரகனின் நிலையைத்தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
    ஸ்தான அதிபதி நிலை சரியில்லை என்றாலும் காரகன் வலுவாக இருந்தால் பலன்கள் நன்றாக
    இருக்கும். என் புரிதல் சரியா?

    ReplyDelete
  43. நல்ல அலசல் சார், நேற்றே படித்துவிட்டேன், ஆனால் பின்னூட்டம் போட இயலவில்லை.

    இந்த அஷ்டவர்க்கத்தில் எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. எனக்குத்தெரிந்த ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிற்கு 19 பரல்கள்தான் இருக்கின்றன. ஆனாலும் நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்திருக்கிறது. வசதியாகவும் இருக்கிறார். அது எப்படி? நீங்கள் சொல்லும் முறைப்படி பலன் பார்த்தால் சரியாக வரவில்லையே? இரண்டாம் அதிபதியும் மூன்றில். உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  44. minorwall said..

    /சோதிட ரீதியான விஷயங்கள் நெட்டிலே ஆங்காங்கே கொட்டிக்கிடக்கின்றன..
    அதைச் சொல்கிற விதம்..சுவாரஸ்யம்..
    தனித்தன்மைதான் சிலரைமட்டும் உயர்த்திப்பிடிக்கிறது//

    உண்மை.. உண்மை . இதில் வாத்தியாருக்கு மிகுந்த சிறப்பு இருக்கிறது.

    ReplyDelete
  45. //////Govindasamy said...
    உண்மை.. உண்மை . இதில் வாத்தியாருக்கு மிகுந்த சிறப்பு இருக்கிறது.////
    சரியான விஷயங்களை சுட்டிக்காட்டுவது எனக்குப் பிடிக்கும்..நீங்க அதை ஆமோதித்ததுக்கு நன்றி..

    அதுக்காக நீங்களும் தேமொழிகிட்டேயிருந்து ப்ரோஃபைல் படம் வாங்கி போட்டுராதீங்கோ..
    அது அவுங்க ஸ்பெஷல்..

    ReplyDelete
  46. Thank you very much sir. Lesson is easily understood.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com