மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.11

Short Story: ஆத்தா எழுதிய கடிதங்கள்

-----------------------------------------------------------------
Short Story: ஆத்தா எழுதிய கடிதங்கள்
அகத்தில் இருப்பவள் ஆத்தாள். அம்மா என்பதற்கான தூய தமிழ்ச்சொல். செட்டி நாட்டில் அன்னையை  ஆத்தாள் என்றுதான் சொல்லுவார்கள் பிறப்பில் இருந்து நம் உள்ளத்தில் இருக்கும் பெண்மணி ஆத்தா(ள்)

அகம் + ஆள் = அகத்தாள் = ஆத்தாள்

ஒரு ஆத்தாள் தன் மகனுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்துக் கதையாக்கியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். இந்தமாதம், ஒரு மாத இதழுக்காக எழுதியது. அது அந்த இதழில் வெளியாகி  உள்ளது. நீங்களும் படித்து மகிழ அதை உங்களுக்காக இன்று வலையேற்றி இருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++                    
1
15.12.2007

பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

நேற்றுக் காலை, என்னை, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, போகும்போது, நீ கண்கலங்கிய காட்சி என்  நெஞ்சிற்குள்ளேயே நிற்கிறது.

கவலைப் படாதே! நான் நினைத்த அளவிற்கு, இங்கே ஒன்றும்
மோசமாக இல்லை. எல்லாம் முறையாகத்தான்  நடக்கிறது. இந்த
முதியோர் காப்பகம் கட்டி ஐந்து ஆண்டுகளாகிறதாம். இதை
முதியோர் இல்லம் என்று சொல்லாமல், முதியோர் காப்பகம்
என்றுதான் சொல்கிறார்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
என்று என்  அறிவிற்கு எட்டவில்லை!

இன்றையத் தேதிக்கு மொத்தம் 450 பேர்கள் இருக்கிறார்களாம். பத்துப்பேர்களாவது நட்பாகக் கிடைத்தால்  போதும்.
மிச்சக் காலத்தை ஓட்டிவிடுவேன்.

இங்கே பக்கத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவ பெருமாள்
கோவில் என்னும் திருக்கோவில் உள்ளதாம்.பதினொன்றாம்
நூற்றாண்டில் கட்டப்பெற்ற பழம் பெருமை வாய்ந்த கோவிலாம். ஆழ்வார்களில் மூத்தவரானமகான் ராமானுஜர் அவதரித்த ஊராம்
இது. வயதான காலத்தில் இங்கே வந்து சேர்ந்ததால், என்னுடைய  வைகுண்டப்  பிராப்த்தி நிறைவேறும் என்று நம்புகிறேன். அதை
நினைத்தால் சற்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெத்தபிள்ளைகள், தாயபிள்ளைகள், பங்காளிகள், செட்டிநாட்டில்
உள்ள நம் ஊர் மக்கள் என்று அனைவரையும்  பிரிந்து வந்து இங்கே
இருக்க வேண்டிய கட்டாகட்டியான சூழ்நிலையை நினத்தால் மட்டும்
மிகவும் வருத்தமாகஉள்ளது. வேறு ஒரு வருத்தமும் இல்லை.

மாதம் ஒருமுறையாவது வந்து பார்த்துவிட்டுப்போ! வரும்போது, சென்னையில் இருந்து இவ்வளவு தூரம்  மோட்டார்  சைக்கிளில்  வர  வேண்டாம். காலம் கெட்டுக்கிடக்கிறது. நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் சொல்லும்படியாக  இல்லை. வாகனங்களில் செல்பவர்கள் எல்லாம் விமானம் செல்லும் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

உன்னை நம்பி, என்னுடன் சேர்த்து நான்கு ஜீவன்கள் இருக்கின்றன. ஆகவே பஸ்சிலேயே வந்துவிட்டுப்போ!

அன்புடன்,
காலத்தால் கரை ஒதுங்கிப்போன உன் ஆத்தா,
கமலம்பாள்
                          ++++++++++++++++++++++++++++

2
1.1.2008

பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

இங்கே வந்து 15 தினங்களாகி விட்டன! எல்லாம் ஓரளவிற்குப் பழகி
விட்டது. காலையில் இட்லியும், பொங்கலும்  தருகிறார்கள். மதிய
உணவாக சாதத்துடன் சாம்பார் அல்லது புளிக்குழம்பு, ஒரு கூட்டு,
ஒரு பொரியல்  தருகிறார்கள்.

மோர் புளிக்காமல் அம்சமாக இருக்கிறது. இரவில் இட்லி,
தோசை அல்லது சப்பாத்தி. எதை வேண்டுமென்றாலும்
வாங்கிக் கொள்ளலாம். மாலையில் 4 மேரி பிஸ்கெட்டுகளும்,
டீயும் தருகிறார்கள். காலை எட்டு மணிக்கு  ஃபில்டர் காப்பியும்,
பகல் 11 மணிக்கு வெஜிடெபிள் சூப்பும் தருகிறார்கள். எல்லாம் சூடாக இருக்கிறது. வீட்டுச்  சாப்பாட்டிற்கு இது தேவலை. அதாவது அடுத்தவர் கையை எதிர்பார்த்துச் சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

காலை மற்றும் மாலையில் தினமும் 40 நிமிடங்களுக்குக் குறையாமல் அனைவரும் நடைப் பயிற்சி மேற்கொள்ள  வேண்டும். அதைக் கண்காணிக்க ஆள் போட்டிருக்கிறார்கள்.

பொது வாசகசாலையும், பொது தொலைக்காட்சி அரங்கமும் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் யாராவது ஒருவர்  வந்து ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துக்கிறார்.

ஒரு அறைக்கு இரண்டு பேர்கள். என் அறையில் என்னுடன் ஸ்ரீரங்கத்து
மாமி ஒருவர் இருக்கிறார். வயது அறுபத்தைந்து. என்னைவிட ஐந்து
வயது குறைவானவர். வேதங்கள் உபநிடதங்கள் எல்லாம் தெரிந்தவராக இருக்கிறார். அவருக்கு ஒரே மகன். தில்லியில் பெரிய பதவியில் இருக்கிறானாம். மருமகள் கலப்பாம். உணவு, கலாச்சாரம்
பிடிக்கவில்லை. இங்கே வந்துவிட்டேன் என்கிறார்.

இங்கே உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு கதை இருக்கிறது.
என்னத்தைச் சொல்வது? கலிகாலம்! “வடித்த சோறும்,  உப்பும்,
தண்ணீரும், கிடைத்தால் போதும் என்ற காலம் வரப்போகிறது”
என்று எங்கள் அப்பச்சி சொல்வார்கள்.அப்படித்தான் எதிர்காலம் இருக்கும்போலத் தெரிகிறது!

அடுத்தமுறை வரும்போது உன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வா!

அன்புடன்,
உன் ஆத்தா,
கமலம்பாள்
                         +++++++++++++++++++++++++++++++++

3
1.4.2008

பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

“நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்”


என்று அந்தச் சிறுகூடல்பட்டிக் கவிஞன் எழுதிவைத்துவிட்டுப்போனது எனக்கும் சேர்த்துத்தான் என்பது  இப்போதுதான் தெரிகிறது.

வயதான காலத்தை முதியோர் இல்லத்தில் கழிக்கும்படியாக நேரிடும்
என்று ஒரு நாளும் நான் நினைத்ததில்லை. "உனக்கென்ன நான்கு
பிள்ளைகள். வயதான காலத்தில் உன்னை ராணி மாதிரி வைத்துக்கொள்வார்கள்" என்று உங்கள் அப்பச்சி முன்பு சொன்ன
தெல்லாம் நீர் மேல் எழுத்தாகப் போய்விட்டது.

நான்கில் மூன்று, பெண் பிள்ளைகளாகப் போய்விட்டன.
அவர்களைக் கட்டிக்கொடுத்தாகிவிட்டது. கொட்டிக்  கொடுத்துக் கட்டிவைக்கவில்லை. எதவாகத்தான் கட்டிக்கொடுத்தோம்.
கைக்கும் வாய்க்குமான வருமானத்தில் அவர்கள் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். என்னை வைத்து அவர்களால்
எப்படிப் பராமரிக்க முடியும்?  அது நியாயமுமல்ல!

உங்கள் அப்பச்சியின் மறைவிற்குப்பின் உன்னைத்தான் நான் நம்பியிருந்தேன்.

நீ நல்லவன். சத்திய சிந்தன். ஆனாலும் கிரகக்கோளாறு. மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க  வேண்டிய சூழ்நிலை.

“என்ன செலவானாலும் பரவாயில்லை, முதியோர் இல்லலத்தில் உங்கள் தாயாரை விட்டுவிடுங்கள். என்னால் பார்த்துக்கொள்ள முடியாது” என்று அவள் உத்தரவு போட்ட பிறகு உன்னால் என்ன செய்ய முடியும்?

எம்காம், சிஏ என்று உன்னை நன்றாகப் படிக்கவைத்தேன். பழநி அப்பன் அருளால் உனக்கு மத்திய அரசு  வேலையும் கிடைத்தது. கை நிறையச் சம்பளமும் வருகிறது. ஆனாலும் என்ன பிரயோசனம்?

அந்நியத்தில் வேண்டாம், அனுசரனையாக இருப்பாள் என்று  உனக்கு சொந்தத்தில் மணம் முடித்தேன். வந்த மகராசி, வாய்க்கு ருசியாக ஒரு நாள் கூட சமைப்பதில்லை. மாதத்தில் பாதி நாள், லெட்சுமி குழம்பும்,
வாழைத் தண்டு பொரியலும்தான். பொங்கலன்று மட்டும்தான் பொரித்த அப்பளத்தைக் கண்ணில் காட்டுவாள். 

உனக்காவது பரவாயில்லை. தினமும் ஒருவேளை, அலுவலகத்தில் ஊழியர்களுக்கென்று உள்ள குறைந்த கட்டணக் கேன்ட்டீனில்
சாப்பிட்டு விடுகிறாய். இரண்டு பெண் பிள்ளைகளும் என்ன செய்யும்? கேட்டால்,அவர்களுக்காகத் தான் பணத்தைச் சேர்க்கிறேன் என்கிறாள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதாவது உன்  அப்பச்சி இறந்த பிறகு
உங்கள் வீட்டிற்கு வந்தநாள் முதலாக அவளுடைய சிக்கனத்தைப்
பார்த்துப்  பலமுறை நான் அதிர்ந்து போயிருக்கிறேன். அதைச் சிக்கனம்
என்று சொல்ல முடியாது. மகாக் கருமித்தனம். பிள்ளைகள்
இரண்டிற்கும் வயதிற்குத் தக்க வளர்ச்சி இல்லை. தேய்ந்து
போய் இருக்கின்றன. உன் மனைவி  கடுகைக் கூட எண்ணிப்
போட்டுத்தான் தாளிக்கிறாள். அந்தக் கொடுமையை எங்கே போய்ச்
சொல்வது? அதை எல்லாம் நீ கண்டு கொள்வதில்லை. பிள்ளைகள்
இரண்டும் தேய்ந்துபோய்,  சோகை பிடித்ததுபோல  இருந்தால் எவன் கட்டிக்கொள்வான்?  பின்னால் உனக்குத்தான் கஷ்டம்!

நேற்று நீ இங்கே என்னைப் பார்க்க வந்திருந்தபோது, உன் மகள்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு  வந்திருந்தாய்.அவர்கள் இருவரும்
‘அப்பத்தா’ என்று என்னைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டார்கள். நீங்கள்  திரும்பிச் சென்றதில் இருந்து உங்கள் நினைவாகவே இருக்கிறது. அதனால்தான் மன ஆறுதலுக்காக இந்தக்  கடித்தத்தை எழுதுகிறேன்.
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உன்னை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. பழநி அப்பனை பிராத்திப்பதைத் தவிர எனக்கு வேறு  வழி ஒன்றும் தெரியவில்லை.
உனக்கும் அப்பச்சி இல்லை. எனக்கும் அப்பச்சி இல்லை. அப்பச்சி
இல்லாதவர்களுக்கெல்லாம் அவன்தான் அப்பச்சி! அவன்தான் உன்
வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்!

கண்ணீருடன்,
உன் ஆத்தா,
கமலம்பாள்

                         +++++++++++++++++++++++++++++++++++++

4
15.10.2008

பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

நேற்று கிறுகிறுவென்று தலை சுற்றுவதுபோல இருந்தது. சுதாகரித்து, அருகில் இருந்த தூணைப் பிடிப்பதற்குள்  தவறிக் கீழே விழுந்துவிட்டேன். முன்பக்கத் தலையில் அடிப்பட்டுவிட்டது. நெற்றி நன்றாகப் புடைத்துக் கொண்டு விட்டது.

அருகில் இருந்தவர்கள் பதறி விட்டார்கள். ஐஸ் கட்டிகளை வைத்து முதல் உதவி செய்தார்கள். விடுதிக்கு  வழக்கமாக வரும் மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்த்துவிட்டு, தாழ் இரத்த அழுத்த நோய்  (Low Blood
Pressure) உள்ளது என்று சொல்லி, அதற்காக மாத்திரைகளைக் கொடுத்து விட்டுப் போனார். நெற்றியில் இன்று காலையில் வீக்கம் வற்றிவிட்டது.

இருந்தாலும் பத்து நாட்கள் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லி, பக்கத்தில் உள்ள மருத்துவ  சிகிச்சைப் பகுதிக்கு என்னை மாற்றி விட்டார்கள்.

அந்தப் பகுதிக்கு, தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று நிதி
உதவி அளிக்கிறதாம். அங்கே பெண்களுக்காகத்  தனி அரங்கும், ஆடவர்களுக்காகத் தனி அரங்கும் உள்ளது. தலா பத்துப் பேர்களைத்
தங்க வைத்து சிகிச்சைஅளிக்கும் வசதிகள் உள்ளன.

அங்கே நம் செட்டிநாட்டு கிராமம் ஒன்றைச் சேர்ந்த சாலி ஆச்சி
அவர்களைச் சந்தித்தேன். இங்கிருந்து பத்துக்  கிலோ மீட்டர்
தொலைவில் ‘சிவன்தங்கல்’ என்னும் கிராமத்தில் இருக்கும்
முதியோர் இல்லத்தில் இருக்கிறார்களாம். அந்த இல்லமும்
இதைச் சேர்ந்ததுதானாம். அங்கே எண்பது வயதிற்கு மேற்பட்டவர்
களைத் தங்க வைத்துள்ளார்களாம்.

அந்த ஆச்சி தன் மனக்குறையைச் சொல்லி ‘ஓ’ வென்று கதறி
அழுததைப் பார்த்து அரண்டுபோய் விட்டேன். அந்த ஆச்சிக்கு
நான்கு மகன்களாம். அண்ணா நகரில் ஆச்சி பெயரில் இருந்த
பெரிய வீட்டை இரண்டு கோடிக்கு விற்றுக் காசாக்கிப் பங்கு
வைத்துக்கொண்டு விட்டார்களாம். ஆச்சியை ஆளுக்கு மூன்று
மாதங்கள்  வைத்துக் கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்துப்
பேசியவர்கள், அதன்படி செய்யவில்லையாம். அங்கேயும்
மருமக்கள் பிரச்சினைதான். ஒருவருக்கொருவர் தன்முனைப்புப் பிரச்சினையும் உள்ளதாம். இங்கே கொண்டுவந்து  விட்டு விட்டார்களாம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆச்சி இங்கேதான் இருக்கிறார்களாம்.

இப்போது அதிகப்படியாக எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால்,
வயது மூப்பின் காரணமாக (சாலி ஆச்சிக்கு  வயது எண்பத்தெட்டு -
அதை நினைவில் கொள்ளவும்) இயற்கை உபாதைகள் அனைத்தும்
ஆச்சிக்கு சில சமயங்களில் இருக்கும் இடத்திலேயே நடந்து விடுகிறதாம். பாதி நேரம் தன்னினைப்பு இல்லாததுதான் அதற்குக்  காரணமாம். அங்கிருக்கும் ஊழியர்கள் இரண்டு மூன்று முறை அடித்து
விட்டார்களாம். “ஏன் ஆச்சி இப்படிச் செய்கிறாய்? ஒன்னுக்கு வந்தால் எழுந்துபோய் இருந்துவிட்டு வருவதற்கு என்ன கேடு?” என்று வேறு  திட்டுகிறார்களாம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னைப் பார்க்க வந்த தன் மூத்த
மகனிடம் ஆச்சி அதைச் சொல்லித் தேம்பித்  தேம்பி அழுதிருக்கிறார்கள்.

“அப்பச்சி என்னை இங்கே அடிக்கிறாங்கடா. ஒத்த மகள்னு சின்ன
வயசிலே எங்க அப்பச்சி என்னைச் செல்லமா  வளர்த்தாருடா. என் ஆம்பிள்ளையானும் என்னை ஓவியமா வச்சிருந்தாருடா! அவ்க இருந்தவரைக்கு ஒரு துரும்பு என்மேலே பட்டதில்லைடா! இங்கே
யிருந்து என்னைக் கூட்டிக்கொண்டு போங்கடா ராசாக்களா!
இல்லைன்னா  ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுங்கடா, சாப்பிட்டு உயிரைப் போக்கிக்கிறேன்டா!” என்று சொல்லிஅழுதவர்களை
சமாதானப் படுத்திவிட்டு, ஊழியர்களை அழைத்து, ஆளுக்கு ஐநூறு
ரூபாய் கொடுத்து, இனி  அடிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டுப்
போனாரே தவிர, மூத்த மகன் வேறு ஒன்றும் செய்யவில்லையாம்.
அதற்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக இங்கே வரவுமில்லையாம்.

நெஞ்சு கணக்கிறது. கண்கள் பனிக்கின்றன. இதற்கு மேல் எழுத வரவில்லை. மற்றவை அடுத்த கடிதத்தில்

அன்புடன்,
ஆத்தா,
கமலாம்பாள்
                   ++++++++++++++++++++++++++++++++++++++++++

5
11.11.2008

பிரியமுள்ள மகன் பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

இப்போது ஓரளவிற்கு நலமாக இருக்கிறேன். மீண்டும் பெரிய
விடுதிக்கே என்னை மாற்றிவிட்டார்கள். இப்போது  ஸ்ரீரங்கம்
மாமியுடன் இருந்த அறையல்ல. வேறு ஒரு புதிய அறை. உணவுக்
கூடத்திற்கு அருகிலேயே போட்டுக்  கொடுத்து விட்டார்கள். கோவை சூலூரைச் சேர்ந்த அம்மணியம்மாள் என்னும் பெண்மணி என்னுடன் இருக்கிறார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராம். கலகலப்பாகப் பேசுகிறார்.

பகல் பொழுது எப்படியோ கழிந்து விடுகிறது. இரவில்தான் தூக்கம்
சரியாக இருப்பதில்லை. எதிர்காலத்தை  நினைத்தால் பயமாக
இருக்கிறது. சாலி ஆச்சி அடிக்கடி கண்முன் நிற்பதுபோலத்
தோன்றுகிறது.

அப்படிச் சமயங்களில் கந்த சஷ்டிக் கவசத்தை மனதிற்குள் சொல்லி
என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். எத்தனை நாட்கள் இந்த
அவதியோ? காலம்தான் கணக்கை முடித்து ஐந்தொகையைக் கொடுக்க வேண்டும்.

அன்புடனும், சற்றுக் கலக்கத்துடனும்
உன் ஆத்தா,
கமலம்பாள்

                 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6
3.3.2009

பிரியமுள்ள மகன் பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

மறுபடியும் கிறுகிறுப்பு தலை சுற்றல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்று அதிகாலை கட்டிலில் இருந்து இறங்கிக் கழிப்பறைக்குச் செல்லும் வழியில் விழுந்துவிட்டேன். அடிபடவில்லை. யாரும் பார்க்கவுமில்லை. எழுந்து விட்டேன்.

அதற்குக் காரணம் எனக்குத் தெரியும். தினமும், இரண்டு வேளை
சாப்பிடுங்கள் என்று சொல்லி மருத்துவர்  கொடுத்த  மாத்திரைகளை
நான் சாப்பிடுவ தில்லை. அதிக நாள் உயிர் வாழ விரும்பவில்லை.
சாலி ஆச்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எனக்கும் ஏற்படக்கூடாது.
சீக்கிரம் வைகுண்டத்திற்குப் போய்விடவேண்டும்.

மாத்திரையைச் சுற்றி இருக்கும் தாள்களைக் கிழித்து அறையில்
இருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டு  விடுவேன்.  மாத்திரை
களைக் கழிப்பறைப் பேசினில் போட்டுத் தண்ணீர் ஊற்றித் தள்ளி விட்டுவிடுவேன். தினமும் ஒழுங்காக மாத்திரைகளைச் சாப்பிடுவதைப்போலப் பாவனை செய்து கொண்டிருக்கிறேன்.

எத்தனை நாள் ஆகுமோ - எப்போது உயிர் போகுமோ? தெரிய
வில்லை!

எல்லாம் அவன் செயல்!

இறைவனின் அழைப்பிற்காக பொறுமையுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
உன் ஆத்தா
கமலாம்பாள்

                   +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

7
6.6.2009

பிரியமுள்ள மகன் பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

எச்சு வருகிறது. உடம்பும், மனமும் சோர்ந்து விட்டது. ரெம்ப நாள்
தாங்காது.

உனக்கு இதுவரை எழுதிய கடிதங்கள் எதையும் உனக்கு நான் 
அஞ்சலில் அனுப்பவில்லை. அனுப்புவதற்கான  வசதிகள் இங்கே 
இருந்த போதும் உனக்கு நான் அனுப்பவில்லை. உன் மனம் மிகுந்த வேதனைப்படும்  என்பதால் ஒன்றைக்கூட அனுப்பவில்லை.

நான் காலமான பிறகு, அவை அனைத்தையும் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் என் பெட்டியிலேயே  இவற்றைச் சேர்த்து 
வைத்துள்ளேன். அனேகமாக உனக்கு நான் எழுதும் கடைசிக் 
கடிதம் இதுவாக இருக்கலாம்! மூன்று பெண்களுடன் பிறந்த உனக்கு
ஒன்றும் வைக்காமல் போகக்கூடாது என்பதற்காக, நம் வீட்டு இரட்டை  அறையில் உள்ள பெட்டகத்தில் 30 பவுன் நகைகளை வைத்துள்ளேன்.
என் அப்பச்சி எனக்குப் பிற்காலத்தில் கொடுத்தது. அத்துடன் சோழ
வந்தான் கிராமத்தில் அவர்களுக்கு உரிய இடத்தில் இரண்டு ஏக்கர்
பூமியை  எனக்காக எழுதிக்கொடுத்தார்கள். அதற்கான பத்திரமும்
நகைகளுடன் உள்ளது. அவைகள் பெட்டகத்தின்  இரகசிய அறையில்
உள்ளன. அவைகள் உனக்குத்தான். உன் பெண்களின் திருமணச்
செலவிற்கு அவற்றை  நீ பயன் படுத்திக்கொள். பழநியில் உள்ள 
சாதுக்கள் மடத்திற்கு அன்னதானத்திற்கென ரூபாய் பத்தாயிரம்  
மட்டும் எனக்காகச் செலுத்திவிடு. அது மட்டும் எனக்காக 
நீ செய்தால் போதும்!

முருகனருள் முன்னிற்கும்!


அன்புடன்
உன் ஆத்தா
கமலாம்பாள்

                    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பதினைந்து நாட்களில், ஒரு அமாவாசைத் திதியன்று கமலாம்பாள் ஆச்சி அவர்கள் இறைவனடி சேர்ந்து  விட்டார்கள். தகவல் தெரிந்து வந்த மகன் பெரிச்சியப்பன், தன் தாயாரின் பூத உடலை அம்புலன்ஸ் வாகனம்
ஒன்றில் ஏற்றிக் கொண்டு, அங்கிருந்து நேராக திருவொற்றியூர் நகர விடுதிக்குச் சென்று விட்டான். கலங்கிய  மனதுடன் தாயாரின் அந்திமக் காரியங்களுக்கு ஏற்பாடு செய்யத் துவங்கினான்.

அவனுடன் முதியோர் இல்லத்திற்கு வந்த அவனுடைய மனைவி,
இல்லத்தில் உள்ள புத்தகத்தில் கையெழுத்தை  இட்டு விட்டு,
ச்சியின் உடலையும், உடமைகளையும் பெற்றுக்கொண்டதற்கான சடங்குகளை முடித்துக் கொண்டு தன் தம்பியுடன் காரில் புறப்பட்டாள்.

அப்போதுதான் அது நடந்தது.

காப்பகத்தின் மேலாளர் ஆச்சியின் பெட்டியைக் கொண்டுவந்து
கொடுத்தார். எடுத்துக்கொள்ளாமல் போகிறீர்களே என்றும் சொன்னார்.
அதில் என்ன இருக்கும் என்று மகராசிக்குத் தெரியாதா என்ன?
வேண்டாம் என்று சொன்னாள். அவர் விடவில்லை. நீங்கள்தான்
எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று கையில் திணித்து,  அனுப்பி வைத்தார்.

காப்பகத்தை விட்டு வெளியே வந்தவள், அங்கே பக்கத்தில் இருந்த
பெரிய குப்பைத் தொட்டியில் அதைப்  போட்டு விட்டுத் தன் தம்பியுடன்
காரில் கிளம்பிப் போய்விட்டாள்.

பார்த்துக்கொண்டிருந்த பிச்சைக்காரன் ஒருவன் பெட்டியைப்
பிரித்துப் பார்த்தான். பழங்காலத்து இரும்புப் பெட்டி.எடைக்குப்
போட்டால் நூறு, இருநூறு கிடைக்கும். உள்ளே இருந்த நான்கு
சேலைகளில் நன்றாக இருந்த இரண்டு  சேலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, நைட்டி எனப்படும் இரவு உடைகளுடன் மற்ற துணிமணிகளையும், சீப்பு,  கண்ணாடி இத்யாதிகளுடன், கொத்தாக
இருந்த கடிதங்களையும் குப்பைத்தொட்டியிலேயே வீசிவிட்டுப்
போய்விட்டான்.

அடுத்த நாள் ஆச்சி சிதையில் எரிந்து கொண்டிருந்த அதே 
நேரத்தில், ஸ்ரீபெரும்புதூர்  நகராட்சி குப்பைக்  கிடங்கில் 
ஆச்சியின் கடிதங்களும் தீக்கிரையாகின!

                      ++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதையின் முடிவு திருப்தியாக இல்லையா? உங்களுக்காக
கதையின் இன்னொரு க்ளைம்மாக்ஸைக் கீழே  கொடுத்துள்ளேன்.
படித்துப் பாருங்கள்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

அடுத்து வந்த பதினைந்தாம் நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதை
இறைச் செயல் என்றும் சொல்லலாம்.

ஆத்தாவின் திரேக்கியத்தை எப்படிச் செய்யலாம். மனைவி, மக்களுக்கு, மற்றும் உடன் பிறப்புக்களுக்கு  புதுத்துணிகளை என்ன பட்ஜெட்டில் வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், பெரிச்சியப்பனின்
மனதில் பொறிதட்டியது.

யாரோ ஒரு புண்ணியவான் காப்பகத்திற்கு வந்தவர், அங்கிருந்த
அததனை பெண்களுக்கும் ஒரு காட்டன்  புடவையைத் தானமாகக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாராம்.

ஒரு மாதத்திற்கு முன்பு, பெரிச்சியப்பன் தன் தாயாரைப் பார்க்கப் போயிருந்தபோது, “நான் எங்கே அப்பச்சி அதைக் கட்டிக்கொள்ளப்
போகிறேன்? அந்தப் புடவையைக் கொண்டுபோய் என் பேர்த்தியிடம்
கொடு” என்று தன்  தாயார் சொன்னபோது, தன் தாயாரின் பெட்டியில்,
மேலாக இருந்ததை எடுத்துக்கொண்டு வந்தது நினைவிற்கு  வந்தது.
த்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்த சமயம், தன்னுடைய மனைவியும், மகள்களும் வெளியூர் சென்றிருந்ததால், தன்னுடைய அலமாரியில்
அதை வைத்ததும் பெரிச்சியப்பனின் நினைவிற்கு வந்தது.

இப்போது அது நினைவிற்குவர, அதை எடுத்துத் தன் மூத்த மகளிடம் கொடுத்தான்.

“அய்ய்ய்...” என்று ஆச்சரியம் மேலிட, வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவள், ஒரே நிமிடத்தில்  திரும்பி வந்தாள்.

“அப்பா, அப்பத்தா கொடுத்த சேலைக்குள் இந்தக் கடிதம் இருந்தது”

ஆமாம், அது ஆச்சி அவர்கள் எழுதியிருந்த கடைசிக் கடிதம். படித்தவுடன் பெரிச்சியப்பன் அதிர்ச்சிக்கு  ஆளாகிவிட்டான். பலவிதமான உணர்வுகள் கண்ணிலும் மனதிலும் தோன்றி மறைந்தன. மற்ற கடிதங்கள் எல்லாம்
மனைவி கடாசிவிட்டு வந்த பெட்டியோடு போய்விட்டதை உணர்ந்தான். கடவுள் அருளால் முக்கியமான அந்தக்  கடிதமாவது மிஞ்சியதே என்று மகிழ்ந்தான்.

எல்லாம் பழநி அப்பனின் கைங்கர்யம். அந்தக் கடிதத்தில், பழநி சாதுக்கள் மடத்திற்கு பத்தாயிரம் ரூபாய்  கொடுக்கும்படி ஆச்சி எழுதியிருந்தார் அல்லவா? அதை நிறைவேற்றும் விதமாக அந்தக் கடிதம் மட்டும்  தப்பித்திருக்கிறது.

வைக்கும் நியாமான கோரிக்கைகள் நிறைவேறாமல் போகாது. அதுதான் பழநி அப்பனின் மகிமை!

  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

65 comments:

  1. அகம் + ஆள் = அகத்தாள் = ஆத்தாள்

    கேள்விப்படாத விளக்கம் ..
    அருமை ஐயா ...

    // அடுத்த நாள் ஆச்சி சிதையில் எரிந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் ஆச்சியின் கடிதங்களும் தீக்கிரையாகின! //

    அன்னையின் மீதான அன்பெல்லாம் பட்டினத்தார் காலத்தோடு போச்சோ என்னமோ ?

    அவர் அன்னை எரிவதைக் கூட அவரால் பொறுக்கமுடியவில்லை என்பதை காண்கிறோம் ...

    வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டு தீ மூட்டுவேன்

    என்றும்,

    வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ ? என்னை மறந்தாளோ ? சந்ததமும் உன்னையே
    நோக்கி உகந்து வரம் கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த தாய் ..

    என்றும்

    கதறி அழுத ( துறவியாய் இருந்தும் )பட்டினத்தாரின் தாய்ப்பாசம் நினைவிற்கு வருகிறது ,,,

    ம்ம்.. இது கலிகாலம் ஆச்சே !

    படித்ததும் மனம் கனத்துப் போனது...

    ReplyDelete
  2. ////நேற்றுக் காலை, என்னை, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, போகும்போது, நீ கண்கலங்கிய காட்சி என் நெஞ்சிற்குள்ளேயே நிற்கிறது///
    முதலிலே தன மகனின் கையாலாகாத தனத்திற்கு அவனே வருந்துவதை கண்ணுறும் தாய், அதை நெஞ்சிலே நிறுத்தி வருந்துகிறாள்!

    ReplyDelete
  3. /////உன்னை நம்பி, என்னுடன் சேர்த்து நான்கு ஜீவன்கள் இருக்கின்றன. ஆகவே பஸ்சிலேயே வந்துவிட்டுப்போ!////
    தனது காதலி கேட்டால் என்பதற்காக தனது அன்னையின் இதயத்தை அறுத்துக் கொண்டு சென்ற பாதகன், கல் இடறி விழுந்த போது...
    தம்பி! பார்த்துப் போப்பா!! எதுவும் அடிபட்டுவிவட போகிறது என்றதாம் அந்த தாயின் இதயம்... என்ற பழைய பாடல் வரிகள் ஞாபகம் வருது...

    ReplyDelete
  4. எல்லாமே அந்த பூர்வ புண்ய ஸ்தானாதிபதி செய்யும் வேலை.
    அஞ்சாம் இடம் சரியில்லே அப்படின்னா
    அஞ்சு பெத்தா என்ன
    அஞ்சு கோடி இருந்தா என்ன‌
    செஞ்ச பாவம் தான் கூட வரும்

    சுப்பு

    ReplyDelete
  5. ////அதாவது அடுத்தவர் கையை எதிர்பார்த்துச் சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.////
    உண்மை தான்... ஊருக்காக / சொத்துக்காக அல்லது தனது பிள்ளைகளையும், வீட்டையும், தோட்டத்தையும் காக்கவேண்டும் என்று மட்டும் தமது பெற்றோரை வீட்டோடு பார்ப்பவர்களும் கூட இது போன்ற சோற்றை எதிர் பார்ப்பதில்லை... அன்பும் மரியாதையும் கலந்த பழைய சோறே போதும்.. அது அமிர்தமாய் தோன்றும்... அப்படி இல்லாத போது ஆச்சி சொன்னது தான் சரி.

    ReplyDelete
  6. //// "உனக்கென்ன நான்கு
    பிள்ளைகள். வயதான காலத்தில் உன்னை ராணி மாதிரி வைத்துக்கொள்வார்கள்" என்று உங்கள் அப்பச்சி////
    சில வேளையில் இதுவும் ஒரு தாய்க்கு சாத்தியப் படலாம்... (அதுவும் தாய்க்கு மட்டும் தான்)
    பெண் பிள்ளைகள் தாயை மட்டும் தான் பெரிதாக அரவணைப்பார்கள்!!??!!...
    தாயாது மருமகள் இல்லாவிட்டாலும் மகளிடம் அண்டிக்கொள்ளலாம்..
    அதே தகப்பன் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.

    ReplyDelete
  7. ///உங்கள் அப்பச்சியின் மறைவிற்குப்பின் உன்னைத்தான் நான் நம்பியிருந்தேன்.
    நீ நல்லவன். சத்திய சிந்தன். ஆனாலும் கிரகக்கோளாறு. மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை.///
    இங்கும் தனது நம்பிக்கையை விட தனது பிள்ளையின் சூழ்நிலையைத் தான் யோசிக்கிறாள்.

    ReplyDelete
  8. /// அவன்தான் அப்பச்சி! அவன்தான் உன்
    வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்!////

    இல்லத்தொல்லாள்; இடுக்கண் நாளும் தரும் இரும்புச் சங்கிலியால் கட்டி இருட்டில் வாழும் தனது மகனின் வாழ்வில் பழனியப்பன் தான் ஒளி ஏற்ற வேண்டும்...

    எத்தனை நாள் ஆகுமோ - எப்போது உயிர் போகுமோ? தெரிய
    வில்லை!

    ReplyDelete
  9. /////“அப்பச்சி என்னை இங்கே அடிக்கிறாங்கடா. ஒத்த மகள்னு சின்ன வயசிலே எங்க அப்பச்சி என்னைச் செல்லமா வளர்த்தாருடா. என் ஆம்பிள்ளையானும் என்னை ஓவியமா வச்சிருந்தாருடா! அவ்க இருந்தவரைக்கு ஒரு துரும்பு
    என்மேலே பட்டதில்லைடா! இங்கேயிருந்து என்னைக் கூட்டிக்கொண்டு போங்கடா ராசாக்களா! இல்லைன்னா ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுங்கடா, சாப்பிட்டு உயிரைப் போக்கிக்கிறேன்டா!”/////
    இந்த வரிகள் என்னை தேமி அழவைத்தது என்பது தான் உண்மை... இப்படி ஒரு நிலை வந்தால் என் தாயைக் காக்க நான் ஓர் ஆயிரம் கொலைகள் செய்வேன்.... இப்படி ஒரு வார்த்தையை தனது தாய் கூற கேட்டும் துடிக்காத அந்த மகனின் தலையை வெட்டினால் தான் என்ன? ஒரு குழந்தையாய்ப் போன அந்த தாயின் அவலக் குரல் தான் எத்தனைக் கொடுமை... கதை என்றாலும் இது அவலத்தின் உட்சம்.....

    ReplyDelete
  10. ///பெட்டகத்தில் 30 பவுன் நகைகளை வைத்துள்ளேன்.
    என் அப்பச்சி எனக்குப் பிற்காலத்தில்
    கொடுத்தது. அத்துடன் சோழ
    வந்தான் கிராமத்தில் அவர்களுக்கு உரிய இடத்தில் இரண்டு ஏக்கர்
    பூமி////

    கொண்டு வந்தால் மனைவி..
    கொடுத்தால் சகோதிரி
    கொண்டு வராவிட்டாலும் கொடுக்காவிட்டாலும் தன பிள்ளைக்காக ஏதாவது முந்தானையில் முடிந்து வைத்திருப்பாள் / அதுவும் முடியாவிட்டாலும்... முனியனையும் கருப்பனையும் வேண்டி முட்ச்ச்சந்தி வரை வந்து மகன் வழி பார்த்துக் காத்திருப்பாள்.. அருகில் இருக்கும் அத்தனையும் தெரியாது... தூரத்தில் வரும் ஆளின் நடை மட்டும் தனது மகனின் நடை என்பதை அறிவாள்... தனது மகனின் சந்தோசத்திற்காக தனது உயிரையே தரவும் துணிவாள்...

    தாயின் பெருமையை வானமெல்லாம் எழுதினாலும்... எழுதி முடிக்க இடம் போதாது...

    அற்புதக் கதை... அருமை... அருமை... இதில் கடைசியாக அந்த என்ன செலவானாலும் பரவாயில்லை என்றுக் கூறிய மருமகளுக்கு.. ஏதாவது ஒரு வகையில் பாடம் சொல்லியிருக்கலாம்... அது சற்று ஆறுதலாக இருந்திருக்கும் எங்களுக்கு.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  11. இன்றைய கதைக்குத் தகுந்த பொன்மொழி.

    *ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும். - தெய்வத் திரு கிருபானந்த வாரியார்.

    இருக்கும் இடத்தை விட்டு விட்டு
    இல்லாத இடம் தேடி எங்கெங்கோ
    அலைகின்றார் ஞானத்தங்கமே!
    என்ற கவிஞரின் சிந்தனையும்
    மேலிடுகிறது. நன்றி.

    ReplyDelete
  12. முதியோர் இல்லத்திலுள்ள ஒவ்வொரு ஆச்சியிடமும் இதுபோன்ற வரலாறு முடங்கிக் கிடக்கிறது. இது ஒரு பக்கம் தான். கதை அருமை. கண்ணீர் வரவழைக்கும் சோகம் ததும்பியதுதான். உங்கள் கதைப்படி அந்தந்த கதா பாத்திரங்கள் அமைந்திருக்குமானால் நிகழ்வுகளும், முடிவும் சோகம் தருபவையே! ஆனால் இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு என்பது என் அனுபவம். இளம் வயதில் விதவையான ஒரு பெண்மணி தன் மகனுக்குத் திருமணம் செய்வது வரை நடவடிக்கைகளில் மாற்றமிருந்ததில்லை. மகனுக்குத் திருமணம் ஆனவுடன், அவள் ஒரு மாற்றத்தை அப்போதுதான் கவனித்தாள். அது, தன் மகன் தன்னைத் தவிர, தன் மனைவியிடமும் அன்போடு, அந்தரங்கத்தோடு இருக்கிறான் என்பதை தன் இருபது வயதிற்குள் விதவையாகிவிட்ட அந்தப் பெண் உணரத் தொடங்கியதும்தான் ஏற்பட்டது பிரளயம். அந்த இளம் தம்பதியர் ஒன்றாக இருப்பதை அந்த விதவைப் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியவில்லையோ என்னவோ, இவர்கள் இரவில் அறைக்குள் சென்ற சில நிமிட நேரத்துக்குள், வெளியே தனக்குத் தாங்கமுடியாத குளிர் ஜுரம் வந்துவிட்டது போலவும், அல்லது மயக்கம் வந்து விழுந்துவிட்டது போலவும் நடிக்கத் தொடங்குவதோடு, இரவு முழுவதும் மகனும் மருமகளும் அவளுக்கு ஊழியம் செய்து தேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கத் தொடங்கினாள். மகன் வேலைக்குச் சென்றதும், மருமகளைத் தாங்காத கொடுமைக்கு ஆளாக்கத் தொடங்கினாள். அவளுக்குத் தொடையில் சூடு போட்டுவிட்டு மகனிடம் ஒன்றும் வாய் திறக்காமல் இருந்து விட்டாள். படுக்கை அறையில் அந்தப் பெண் மகனோடு அனுசரித்துப் போகாமல் சில நாட்கள் இருந்த பிறகுதான் அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. பலமுறை விசாரித்தும், கூட குடியிருந்த அன்பான அம்மையார் சொன்ன பிறகுதான் இவனுக்கு சூடு போட்ட செய்தி தெரிந்தது. கேட்கப் போய் வீட்டில் ஒரு பிரளயம் ஏற்பட்டு விட்டது. அந்த விதவைக்குத் தான் சொன்னதுதான் நடக்க வேண்டும். தன்னிடம்தான் எல்லோரும் எந்த விஷயமானாலும் கேட்டு நடக்க வேண்டும். வீட்டின் பண வரவு செலவு தாந்தான் செய்ய வேண்டும். இப்படிப் பல கட்டுப்பாடுகள். அது தவிர, அவளுக்கு ஒரு மூத்த மகள். அவளையும், அவளது குழந்தைகளையும்தான் உறவாக நினைக்கத் தொடங்கினாளே தவிர, தன் மகனையோ அவனுக்குப் பிறந்த குழந்தைகளையோ அல்ல. மேலும் மகன் வீட்டுக்கு எந்தப் பொருள் வாங்கினாலும் அவளுக்குப் பிடிக்காது. அவள் மகள் வறுமை நிலையில் இருந்ததால், அவள் அங்கு சிரமப்பட்டுக் கொண்டு இருக்கும்போது இங்கு எதற்கு இதெல்லாம் என்று வயிற்றெரிச்சல் படுவாள். அடிக்கடி மகனிடமும் மருமகளிடமும் சண்டையிட்டுக் கொண்டு மகள் வீட்டுக்கு ஓடிவிடுவாள். வீட்டில் வரவு செலவு மருமகள் கைக்குப் போய்விட்டது. அதைக் கண்டும் தாங்கமுடியாத ஆத்திரம். இப்படி ஆண்டில் பத்து மாதம் மகள் வீட்டில் கழிக்கத் தொடங்கி, பிரச்சினை முற்றி, ஒரேயடியாக மகள் வீட்டிலேயே தங்கத் தொடங்கினாள். இத்தனைக்கும் மருமகள் வாயில்லாப் பூச்சி. சின்னதாராபுரம் அருகில் ஒரு கிராமத்துப் பெண். அவளுக்கு இப்படியொரு பழி. கிழவியின் மகள் வருமையினாலும், இயலாமையினாலும் கிழவியை சங்கர மடம் நடத்தும் ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டு விட்டாள். இப்போதும், மகனைப் பற்றியோ, மகனுடைய குழந்தைகள் பற்றியோ கவலையின்றி, அந்த முதியோர் இல்லத்தில் இருக்கிறாள். யாரையாவது பார்த்து விட்டால் காப்பிப் பொடி, சர்க்கரை வாங்க என்று பணம் கேட்டு வாங்குவாளே தவிர, தன் பிள்ளை, அவன் குழந்தைகள் எப்படி இருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டாள். இந்த நிலையில் மருமகள் இறந்து போனாள். அவள் இறந்ததுதான் தாமதம், கிழவி இனி இங்கு நாந்தான் இருக்க வேண்டும் என்று வந்துவிட்டாள். ஆனால், மகனுடைய குழந்தைகள் விவரம் தெரிந்தவர்களாக ஆனதால், விரட்டி விட்டார்கள். எங்கள் அம்மா இருந்தவரை வராத உனக்கு இங்கு இனி இடமில்லை என்று சொல்லி விட்டார்கள். மகள், மருமகள் அனைவரும் இறந்த பிறகும் கிழவி மட்டும் சங்கர மடம் முதியோர் இல்லத்தில் நலமாக உறவினர் எவருடைய நினைவுமின்றி செளக்கியமாக இருக்கிறாள். இந்த கிழவி குறித்து ஆசிரியர் அவர்களே, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். கேட்கிறேன்.

    ReplyDelete
  13. அன்புடன் வணக்கம் "

    ''' என்ன தாத்தா உன் சிரட்டை கிளாசை நீட்டு காபி தாரேன் !!!பத்திரமாக வைத்திரு பின்னாளில் எங்க அப்பாவுக்கு இதிலேதான் காபி கொடுக்கணும்..[இப்போ தேங்காய் விக்கிற விலைல எங்க அம்மா..தேங்காவே வாங்கிறதில்லை ??ரெண்டு தேங்கா சில்லு வாங்கி சமையல் முடிச்சிருதா ??]]இது இங்கே நடந்த சம்பவம் என் அம்மா சொல்லி கேட்டது !! .ஆனால் அந்த பழனியப்பன் தனக்குண்டான பங்கை நச்சுனு ?? புடிச்சு வாங்கிட்டானா!! பல மக்களுக்கு இந்த அரண்டு விஷயமும் புரிவதில்லை {அழ்ந்த நாழி பானைக்கு இடுவலில் என என் அம்ம அடிகடி சொல்லுவார்கள் !!இதன் அர்த்தம் இன்னைக்கு நீ என்ன செய்கிறாயோ?? அது நாளைக்கு உனக்கு??-இன்று நீ எந்த நாழியால்அள்க்ராயோ ..அதே நாழி பானைக்கு இடுவலில் இருக்கிறது..... அது நாளைக்கு உனக்கு உன் மகனால் அள்க்கபடும் . }நன்றி வாத்தியார் அய்யா ..

    ReplyDelete
  14. அன்புடன் வணக்கம் திரு தஞ்சாவூரான் சார் .. உங்கள் கருத்து !!!""" என் கண் முன்னே எனது மிக நெருங்கிய உறவு பெண்ணுக்கு நடந்து கொண்டிருக்கிறது இதில் என்ன அவளுடனே அவளின் நாத்தானார் திருமணம் ஆகாமல். இருக்கிறாள் என்ன சூடு கிடையாது தினமும் அளந்துதான் காய்கறி பலசரக்கு கொடுப்பாள் அதற்குள் சமைத்து இரவு ..12 ..வரை இருந்து மகன் வந்து அம்மாவுடன்தான் பேசி இருக்க வேண்டும்.. எப்பிடியோ ஒரு குழந்தைக்கு தாய் ஆகி விட்டாள்.. அனால் கொடுமை சொல்லி முடியாது அந்த காந்திமதி நெல்லை அப்பர்தான் கேட்கவேணும்...

    ReplyDelete
  15. கதையல்ல நிஜம்,கண்ணீரை வரவழைத்து விட்டது.

    ReplyDelete
  16. உண்மைதான் ஆலாசியம்,

    //தாயாது மருமகள் இல்லாவிட்டாலும் மகளிடம் அண்டிக்கொள்ளலாம்..
    அதே தகப்பன் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.//

    தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
    தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை

    எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் ...

    கணவன் இறந்தால் பெண்ணின் மஞ்சள் குங்குமம் மட்டும் தான் நிலைப்பதில்லை ஆனால்

    மனைவி இறந்தாலோ ஆண்களுக்கு எதுவுமே இல்லை

    என்பது கவீஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள் இல்லையா ?

    ReplyDelete
  17. தாரமும், தங்க‍‍‍‍‍‍ஆறமும், தாய்ப்பாலுக்கு ஈடாகுமா ???

    ReplyDelete
  18. கதையின் யுக்தி, ஏற்கனவே தாங்க‌ள் வெளியிட்ட, அமெரிக்காவில் கட்டிக் குடுக்கப்பட்ட ஒரு அந்தணப் பெண்ணின் மனக் குமுறலை அப்பாவுக்குக் கடிதங்களாக எழுதி, அதை அனுப்பாமல் வைத்துக்கொண்டது... அது ஆங்கிலத்தில் இருந்தது. அதிலும் 6 கடிதஙளுக்குக் குறையாமல் இருந்தன‌.

    நம் சமூக அமைப்பு மாறி விட்ட நிலையில், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து விட்ட நிலையில் முதியோருக்கு காப்பகங்க‌ள் தவிர்க்க முடியாதவையே. சென்னை, மும்பை டெல்லி போன்ற் பெரு நகரங்களில் மிகச் சிறிய அபார்ட்மெண்டுகளில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் முதியோரை வைத்துப் பராமரிப்பதில் உள்ள சிரமங்களை அதை அனுபவித்துப் பார்க்காதவர்களுக்குப் புரிய வைக்க முடியாது.படிக்கும் குழந்தைகளை வைத்துக் கொண்டு,மாலை 5 முதல் இரவு 11 வரை சீரியல் பார்ப்பேன் என்று அடம் பிடிக்கும் முதியோரை என்ன செய்யலாம்?

    கடந்த 28 பிப்ரவரி அன்று ஒரு 60க்கு60 கல்யாணத்தில் ஓய்வு பெற்ற பல உறவினர்களும் சந்தித்தோம். அப்போது இந்தத் தலைப்புத் தான் அலசப்பட்டது.அப்போது கூறப்பட்ட கருத்துக்கள் சில:

    1. வயதான காலத்தில் பேச வேண்டும் என்ற பித்து நமக்கு ஏற்படுகிறது.நம் அனுபவத்தையெல்லாம் சொல்ல விரும்புகிறோம்.ஆனால் இளைய சமுதாயத்திற்கு இருக்கும் பிரச்சனைகளில் நமக்குக் காதைக்கொடுத்துக் கொண்டு அமர நேரமில்லை. எனவே முதியோர் காப்பகத்தில் ஓரிருவராவது நம் பேச்சைக் கேட்பார்கள்;நாம் அவர்களுடைய பேச்சைக் கேட்கவும், அவர்கள் நம் பேச்சைக் கேட்கவும் ஆக இருப்பதில் மன பாரம் குறையும்.

    2.வீடு பராமரிப்பு,சமையல் ஆகிய நித்ய வேலைகள் இல்லாமல் இருக்கலாம்.ஆகவே உண்மையான ஓய்வு கிடைக்கும்.ஆன்மீகத்திற்கு அதிக நேரம் கிடைக்கும்.

    3. வீட்டில் உள்ளோரின் கஷ்ட நஷ்டங்கள் முதியோரையும் பாதித்து, அவர்களையும் kavaலைக்குள்ளாக்குகிறது.முதியோர் விலகி விட்டால் அந்த பாதிப்பு இல்லை

    4.பரபரப்ப்பு மிகுந்த சூழலில், முதியோரின் நிதானமான நடை,பேச்சு எல்லாம்
    இளையோர்ருக்குச்சலிப்பைக்
    கொடுக்கிறது.எனவே நமது நிதானத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் அமைப்பு முதியோர் காப்பகமே.

    5.நாம் படுத்துக் கொண்டால் பணிவிடை புரிய மருமகள் ஒன்றும் செவிலியர் வேலைக்குப் படித்தவள் இல்லை.எனவே எப்படியிருப்பினும் வெளியாரின் சேவையை மருத்துவமனையில் சேர்ந்துதான் பெற வேண்டும். வீட்டில் இருந்தால் பெண்,மருமகள் அசுத்தம் பார்க்காமல் செய்வார்கள் என்று நினைக்க வேண்டாம்.எனவே மருத்துவ வசதியுடன் கூடிய முதியோர் இல்லம் உத்தமமான இடம்.

    6.2வது குநந்தைத் தன்மை வந்து விட்ட முதியவர்கள்,மற‌தித் தன்மை வந்து விட்ட muதியவர்கள்,அழ்மீசியர்ஸ் நோய் வந்த முதியவர்களை வீட்டில் பரமரிப்பது மிகக் கடினம்.

    கோபால்ஜி எழுதியுள்ள செய்தியிலும் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டுவது உள்ளது.

    சூரிஜி(சுப்புரெத்தினம்) நலம் என்பது அறிய மகிழ்ச்சி. என் ஏதாவது ஓர் ஆக்கத்திற்காவது பின்னூட்டம் இடுங்கள் சூரிஜி!. ஏன் இந்த டூ?

    ReplyDelete
  19. Ayya,

    While reading the letters , Lot of pain is occuring to mind and feeling heavy.

    Again we have to console ourself by citing the duties of all ghragams.

    NSK

    ReplyDelete
  20. தற்போதைய நிலையில் பிறப்பறுத்தலை விட பெற்ற பாசத்தை அறுப்பதே பெருஞ்செயல். இதைச் செய்ய முடிந்தால் பிறப்பறுத்து பெரும் இன்பத்தை இங்கேயே பெறலாம்.. என்ன செய்ய..

    ReplyDelete
  21. கதை சுபெர்ப் சார்.

    பொதுவா எனக்கு ரொம்ப tragedy ஆன முடிவு பிடிக்காது. அதனால என் ஒட்டு இரண்டாவது கிளைமாக்சுக்கே. சினிமா கூட அப்படித்தான், அழுதுடுவோம் போலக் காட்சிகள் இருந்தா பார்க்கமாட்டேன் (விதிவிலக்கு: அஞ்சலி, மகாநதி).

    ReplyDelete
  22. மோர் புளிக்காமல் அம்சமாக இருக்கிறது. // இப்படி ஒரு அல்ப சந்தோஷமா?

    மாதத்தில் பாதி நாள், லெட்சுமி குழம்பும்// இது என்ன காய் எதுவும் போடாம வைக்கும் வெறும் குழம்பா?

    பொங்கலன்று மட்டும்தான் பொரித்த அப்பளத்தைக்// எதுகை மோனை சுபெர்ப்.

    உன் மனைவி கடுகைக் கூட எண்ணிப் போட்டுத்தான் தாளிக்கிறாள்// கடுகைக்கூட எண்ணித்தான் போடறாங்கன்னா எவ்ளோ பொறுமைசாலியா இருக்கணும்!!

    என் ஆம்பிள்ளையானும் என்னை ஓவியமா வச்சிருந்தாருடா!// நல்ல சொல்நயம்.

    கணக்கை முடித்து ஐந்தொகையைக் கொடுக்க வேண்டும்// இதுக்கு என்ன அர்த்தம்?

    எச்சு வருகிறது// அப்படின்னா?

    ReplyDelete
  23. அஞ்சாம் இடம் சரியில்லே அப்படின்னா அஞ்சு பெத்தா என்ன
    அஞ்சு கோடி இருந்தா என்ன‌ செஞ்ச பாவம் தான் கூட வரும்//

    nice கமெண்ட்

    ReplyDelete
  24. தாயாது மருமகள் இல்லாவிட்டாலும் மகளிடம் அண்டிக்கொள்ளலாம்.. //

    இது என் மாமியார் விஷயத்தில் எதிர்மறையாக நடந்தது. அவர்கள் ரொம்பவும் நம்பிய மகள் கடைசிக்காலத்தில் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சதா சர்வ காலமும் தூற்றிய மகனும், மருமகளும்தான் கவனித்தார்கள்.

    ReplyDelete
  25. கொண்டு வந்தா ல் மனைவி.. கொடுத்தால் சகோதிரி
    கொண்டு வராவிட்டாலும் கொடுக்காவிட்டாலும் தன பிள்ளைக்காக ஏதாவது முந்தானையில் முடிந்து வைத்திருப்பாள்//

    இதுல நீங்க ஒண்ணை விட்டுடீங்க. பரவாயில்லை, நான் எடுத்துக்கொடுக்கிறேன். 'கொலையும் செய்வாள் பத்தினி'. ஹி ஹி.

    ReplyDelete
  26. ஆனால் இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு என்பது என் அனுபவம்.//

    கோபாலன் சார், இதை நான் வழிமொழிகிறேன். இதே மாதிரி ஒருத்தரை நானும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  27. சென்னை, மும்பை டெல்லி போன்ற் பெரு நகரங்களில் மிகச் சிறிய அபார்ட்மெண்டுகளில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் முதியோரை வைத்துப் பராமரிப்பதில் உள்ள சிரமங்களை அதை அனுபவித்துப் பார்க்காதவர்களுக்குப் புரிய வைக்க முடியாது.//

    சிரமம் என்பது உண்மைதான். ஆனால் நகரமாக இருந்தாலும், கிராமமாக இருந்தாலும், செய்ய வேண்டும் என்று நினைத்தால் எதுவுமே சாத்தியம்தான்.

    படிக்கும் குழந்தைகளை வைத்துக் கொண்டு,மாலை 5 முதல் இரவு 11 வரை சீரியல் பார்ப்பேன் என்று அடம் பிடிக்கும் முதியோரை//

    இந்தக் கூத்தெல்லாம் எங்கள் வீட்டிலும் நடந்திருக்கிறது.

    நீங்கள் கூறிய பாயிண்டுகள் எல்லாம் ஓகே. ஆனால் முதியோர் இல்லத்தில் ஒத்துப்போக முடிந்தவர்களுக்கு வீட்டில் ஏன் முடிவதில்லை?

    ReplyDelete
  28. அம்மா...
    அம்...மா....

    நெஞ்சம் நெகிழ... வைத்து
    சொல்ல நா ...

    ReplyDelete
  29. very good emotional story, god is great.

    thank you sir

    ReplyDelete
  30. கலியுகதில் மனங்களும் கல்லாகிவிட்டன.மனம் இருந்தும்,மதியிருந்தும் இயலாமை.

    ReplyDelete
  31. கோபாலன் சார் சொல்வது போன்ற கொடுமைக் காரிகளை நானும் என் கண்ணில் பார்த்திருக்கிறேன் எங்கள் வீதிக்கு பின் புறம் உள்ள வீதியில் அப்படி ஒரு பாதகி.... தனது மருமகளுக்கு அவளின் மார்பகத்திலும் தொடையிலும் சூடு வைத்து கொடுமை செய்ததை... அதுவும் ஒரு ரகமே... இருந்தும் இவைகள் (மிகவும் கொடிய) ஆயிரத்தில் ஒன்றாக இருந்தாலும்... மூலத்தை ஆராய்ந்தால் அது முழுக்க முழுக்க மனநோய் சம்பந்தப்படுகிறது... அப்படிப் பட்டவர்கள் சரியான வைத்தியத்திற்கு உட்படுத்த வேண்டியதாகிறது... இருந்தும் பல நல்லத் தாய் மார்களும் சில நேரங்களில் அல்ல பல நேரங்களில் அதுவும் தான் பெற்ற பெண்பிள்ளை கணவன் வீட்டில் நன்றாக இருந்தால் கூட; எங்கிருந்தோ வந்த மருமகள் இங்கு அத்தனையும் அனுபவிக்கிறாள் என் பெண் பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லையே என்று வெளிப் படுத்த முடியாத ஆதங்கத்தோடு மருமகளிடம் காண்பிப்பதும் நடக்கிறது...

    ஆக இவ்வளவு கொடுமை செய்யக்கூடியவள் (மாமியோ, மருமகளோ) பெண்ணே அல்ல பெண் உருவில் உள்ள பிசாசே! முத்திய மன நோயாளிகளை வைத்தியம் செய்து சரி செய்ய முயற்சிக்கலாம். பாதிப்பின் அளவைப் பார்த்து சரி செய்ய வேண்டிய கடமை ஆண்மகனிடம் இருக்க வேண்டும்... ஒரு நல்ல மகன், நல்ல கணவன், நல்ல தந்தை என பல பரிமாணங்களில் நிச்சயம் ஜொலிப்பான். கொடுமையை எதிர்க்கும் திறனும் பெற்ற புதுமைப் பெண்களாக மாறவேண்டும். பெண்ணிற்கு சமமான உரிமையும் கல்வியும் தர வேண்டும். அப்படி கல்வியும், அதனால் உண்மையான அறிவு மேன்மையும் பெறாத "தையல் சொல் கேளேல்".

    "இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
    இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
    வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
    புலிகிடந்த தூறாய் விடும்"

    இந்த ஒளவையாரின் பாடலை முன்பே படித்திருந்தாலும்... சத்தியமாக என் அம்மா மறைந்த வீட்டிலே எனது தந்தையார் இந்தப் பாடலைப் பாடி புலம்பி அழுதது தான் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்த்ள்ளது..... இருந்தும் அப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அப்போதே முடிவெடுத்து விட்டேன்..

    வாத்தியாரின் கதையில் வரும் தாய் தெய்வத் தாய்.... அவளின் ஆசையும் மகனின் நிலையும்.... மேலும் உள்ளப் பிரச்சனை போதாது என்று மேலும் அங்கு சந்திக்கும் பலரின் நிலைகளைக் கண்கொண்டு நமக்கும் அப்படி நிகழுமோ என்று இன்னும் கவலைப் படவைப்பது... அதிலும் கொடுமையே...

    "நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
    நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
    தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
    குலத்து அளவே ஆகுமாம் குணம்"

    கொடுமைக்கார மாமியையும் கடைசிவரை அள்ளிக்கொட்டி பார்த்து வழி அனுப்பிய சகோதிரிகள் நாமில் பலரும் இருக்கிறார்கள் அவர்களுக்காக மேலே உள்ளப் பாடல்...

    கோபாலன் சார்... ஆசிரியருக்கு மாத்திரம் கருத்து சொல்ல சொல்லியிருந்தும்... நான் எனது கருத்தை கூறி அதிக பிரசங்கித் தனத்தை காண்பித்துள்ளேன். ஐயா அவர்கள் மன்னிக்கணும்.

    ReplyDelete
  32. Story thaan short..Ana solla vantha visiyamo romba perusu...Enna solvatha endru theriyala..Abadi oru kathai...

    ReplyDelete
  33. முதலில் சொல்லப் பட்ட முடிவுதான் எனக்குப் பிடித்திருந்தது. Because they don't deserve it.

    ReplyDelete
  34. /////சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    அகம் + ஆள் = அகத்தாள் = ஆத்தாள்
    கேள்விப்படாத விளக்கம் ..
    அருமை ஐயா ...
    // அடுத்த நாள் ஆச்சி சிதையில் எரிந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் ஆச்சியின் கடிதங்களும் தீக்கிரையாகின! //
    அன்னையின் மீதான அன்பெல்லாம் பட்டினத்தார் காலத்தோடு போச்சோ என்னமோ ?
    அவர் அன்னை எரிவதைக் கூட அவரால் பொறுக்கமுடியவில்லை என்பதை காண்கிறோம் ...
    வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டு தீ மூட்டுவேன்
    என்றும்,
    வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ ? என்னை மறந்தாளோ ? சந்ததமும் உன்னையே
    நோக்கி உகந்து வரம் கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த தாய் ..
    என்றும்
    கதறி அழுத ( துறவியாய் இருந்தும் )பட்டினத்தாரின் தாய்ப்பாசம் நினைவிற்கு வருகிறது ,,,
    ம்ம்.. இது கலிகாலம் ஆச்சே !
    படித்ததும் மனம் கனத்துப் போனது.../////

    கதையை ஒரு உணர்வுடன், அந்தத் தாயின் உணர்வுடன் எழுதினேன். எழுதும்போது தெரியவில்லை. எழுதிப் படித்தவுடன் எனக்கும் மனது கனத்துப்போனது நண்பரே!

    ReplyDelete
  35. ////Alasiam G said...
    ////நேற்றுக் காலை, என்னை, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, போகும்போது, நீ கண்கலங்கிய காட்சி என் நெஞ்சிற்குள்ளேயே நிற்கிறது///
    முதலிலே தன மகனின் கையாலாகாத தனத்திற்கு அவனே வருந்துவதை கண்ணுறும் தாய், அதை நெஞ்சிலே நிறுத்தி வருந்துகிறாள்!///////

    அதுதான் தாய்மையின் மேன்மை ஆலாசியம்!

    ReplyDelete
  36. ///////Alasiam G said...
    /////உன்னை நம்பி, என்னுடன் சேர்த்து நான்கு ஜீவன்கள் இருக்கின்றன. ஆகவே பஸ்சிலேயே வந்துவிட்டுப்போ!////
    தனது காதலி கேட்டால் என்பதற்காக தனது அன்னையின் இதயத்தை அறுத்துக் கொண்டு சென்ற பாதகன், கல் இடறி விழுந்த போது...
    தம்பி! பார்த்துப் போப்பா!! எதுவும் அடிபட்டுவிவட போகிறது என்றதாம் அந்த தாயின் இதயம்... என்ற பழைய பாடல் வரிகள் ஞாபகம் வருது...//////

    அதுதான் தாய்மையின் பரிதவிப்பு. தாய்மைக்கு மட்டுமே உரியது!

    ReplyDelete
  37. ////subburathinam said...
    எல்லாமே அந்த பூர்வ புண்ய ஸ்தானாதிபதி செய்யும் வேலை.
    அஞ்சாம் இடம் சரியில்லே அப்படின்னா
    அஞ்சு பெத்தா என்ன
    அஞ்சு கோடி இருந்தா என்ன‌
    செஞ்ச பாவம் தான் கூட வரும்
    சுப்பு/////

    அடடா, வாங்க சுப்பு சார். மேன்மையான உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சார்! அடிக்கடி வந்து எங்களை உற்சாகப் படுத்துங்கள். ஊக்கப் படுத்துங்கள்! உங்களின் ஊக்கம் எங்களுக்கு டானிக் மாதிரி!

    ReplyDelete
  38. ////Alasiam G said...
    ////அதாவது அடுத்தவர் கையை எதிர்பார்த்துச் சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.////
    உண்மை தான்... ஊருக்காக / சொத்துக்காக அல்லது தனது பிள்ளைகளையும், வீட்டையும், தோட்டத்தையும் காக்கவேண்டும் என்று மட்டும் தமது பெற்றோரை வீட்டோடு பார்ப்பவர்களும் கூட இது போன்ற சோற்றை எதிர் பார்ப்பதில்லை... அன்பும் மரியாதையும் கலந்த பழைய சோறே போதும்.. அது அமிர்தமாய் தோன்றும்... அப்படி இல்லாத போது ஆச்சி சொன்னது தான் சரி./////

    உணவு மனதிற்கும் உணவாக அமைதல் நலம். அதுதான் உண்பதின் மேன்மை ஆலாசியம்!

    ReplyDelete
  39. ////Alasiam G said...
    //// "உனக்கென்ன நான்கு
    பிள்ளைகள். வயதான காலத்தில் உன்னை ராணி மாதிரி வைத்துக்கொள்வார்கள்" என்று உங்கள் அப்பச்சி////
    சில வேளையில் இதுவும் ஒரு தாய்க்கு சாத்தியப் படலாம்... (அதுவும் தாய்க்கு மட்டும் தான்)
    பெண் பிள்ளைகள் தாயை மட்டும் தான் பெரிதாக அரவணைப்பார்கள்!!??!!...
    தாயாது மருமகள் இல்லாவிட்டாலும் மகளிடம் அண்டிக்கொள்ளலாம்..
    அதே தகப்பன் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.//////

    அதுபோன்ற தந்தையார்களை நிறையப் பார்த்துள்ளேன். அவர்களுக்கு ஒரு கதை எழுதலாம் என்று உள்ளேன் ஆலாசியம்!

    ReplyDelete
  40. /////Alasiam G said...
    ///உங்கள் அப்பச்சியின் மறைவிற்குப்பின் உன்னைத்தான் நான் நம்பியிருந்தேன்.
    நீ நல்லவன். சத்திய சிந்தன். ஆனாலும் கிரகக்கோளாறு. மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை.///
    இங்கும் தனது நம்பிக்கையை விட தனது பிள்ளையின் சூழ்நிலையைத் தான் யோசிக்கிறாள்./////

    தாயின் உள்ளம் எப்போதும் தன் பிள்ளைகளிடம் குறை காணாது!

    ReplyDelete
  41. ////Alasiam G said...
    /// அவன்தான் அப்பச்சி! அவன்தான் உன்
    வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்!////
    இல்லத்தொல்லாள்; இடுக்கண் நாளும் தரும் இரும்புச் சங்கிலியால் கட்டி இருட்டில் வாழும் தனது மகனின் வாழ்வில் பழனியப்பன் தான் ஒளி ஏற்ற வேண்டும்...
    எத்தனை நாள் ஆகுமோ - எப்போது உயிர் போகுமோ? தெரியவில்லை!/////

    தாயின் பிரார்த்தனைதான் பல பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது ஆலாசியம்

    ReplyDelete
  42. //////Alasiam G said...
    /////“அப்பச்சி என்னை இங்கே அடிக்கிறாங்கடா. ஒத்த மகள்னு சின்ன வயசிலே எங்க அப்பச்சி என்னைச் செல்லமா வளர்த்தாருடா. என் ஆம்பிள்ளையானும் என்னை ஓவியமா வச்சிருந்தாருடா! அவ்க இருந்தவரைக்கு ஒரு துரும்பு என்மேலே பட்டதில்லைடா! இங்கேயிருந்து என்னைக் கூட்டிக்கொண்டு போங்கடா ராசாக்களா! இல்லைன்னா ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுங்கடா, சாப்பிட்டு உயிரைப் போக்கிக்கிறேன்டா!”/////
    இந்த வரிகள் என்னை தேமி அழவைத்தது என்பது தான் உண்மை... இப்படி ஒரு நிலை வந்தால் என் தாயைக் காக்க நான் ஓர் ஆயிரம் கொலைகள் செய்வேன்.... இப்படி ஒரு வார்த்தையை தனது தாய் கூற கேட்டும் துடிக்காத அந்த மகனின் தலையை வெட்டினால் தான் என்ன? ஒரு குழந்தையாய்ப் போன அந்த தாயின் அவலக் குரல் தான் எத்தனைக் கொடுமை... கதை என்றாலும் இது அவலத்தின் உட்சம்..../////

    இது (பிரதானக் கதைக்குள் வரும் இந்த உபகதை) கற்பனையல்ல - உண்மையில் நடந்த சம்பவம்!

    ReplyDelete
  43. /////Alasiam G said...
    ///பெட்டகத்தில் 30 பவுன் நகைகளை வைத்துள்ளேன்.
    என் அப்பச்சி எனக்குப் பிற்காலத்தில்
    கொடுத்தது. அத்துடன் சோழவந்தான் கிராமத்தில் அவர்களுக்கு உரிய இடத்தில் இரண்டு ஏக்கர்
    பூமி////
    கொண்டு வந்தால் மனைவி..
    கொடுத்தால் சகோதிரி
    கொண்டு வராவிட்டாலும் கொடுக்காவிட்டாலும் தன பிள்ளைக்காக ஏதாவது முந்தானையில் முடிந்து வைத்திருப்பாள் / அதுவும் முடியாவிட்டாலும்... முனியனையும் கருப்பனையும் வேண்டி முட்ச்ச்சந்தி வரை வந்து மகன் வழி பார்த்துக் காத்திருப்பாள்.. அருகில் இருக்கும் அத்தனையும் தெரியாது... தூரத்தில் வரும் ஆளின் நடை மட்டும் தனது மகனின் நடை என்பதை அறிவாள்... தனது மகனின் சந்தோசத்திற்காக தனது உயிரையே தரவும் துணிவாள்... தாயின் பெருமையை வானமெல்லாம் எழுதினாலும்... எழுதி முடிக்க இடம் போதாது...
    அற்புதக் கதை... அருமை... அருமை... இதில் கடைசியாக அந்த என்ன செலவானாலும் பரவாயில்லை என்றுக் கூறிய மருமகளுக்கு.. ஏதாவது ஒரு வகையில் பாடம் சொல்லியிருக்கலாம்... அது சற்று ஆறுதலாக இருந்திருக்கும் எங்களுக்கு.
    நன்றிகள் ஐயா!/////

    உங்களுடைய வரிக்கு வரி தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி ஆலாசியம். மருமகளுக்குப் பாடம் சொல்ல ஆரம்பித்தால் அது தொடர்கதையாகிவிடும் ஆலாசியம். அதனால் சொல்லவில்லை. அதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிட்டேன் ஆலாசியம்

    ReplyDelete
  44. Alasiam G said...
    இன்றைய கதைக்குத் தகுந்த பொன்மொழி.
    *ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும். - தெய்வத் திரு கிருபானந்த வாரியார்.
    இருக்கும் இடத்தை விட்டு விட்டு
    இல்லாத இடம் தேடி எங்கெங்கோ
    அலைகின்றார் ஞானத்தங்கமே!
    என்ற கவிஞரின் சிந்தனையும்
    மேலிடுகிறது. நன்றி.//////

    இதை அனைவரும் உணர்ந்தால் நலம். உலகம் மேன்மையுறும்!

    ReplyDelete
  45. ////Thanjavooraan said...
    முதியோர் இல்லத்திலுள்ள ஒவ்வொரு ஆச்சியிடமும் இதுபோன்ற வரலாறு முடங்கிக் கிடக்கிறது. இது ஒரு பக்கம் தான். கதை அருமை. கண்ணீர் வரவழைக்கும் சோகம் ததும்பியதுதான். உங்கள் கதைப்படி அந்தந்த கதா பாத்திரங்கள் அமைந்திருக்குமானால் நிகழ்வுகளும், முடிவும் சோகம் தருபவையே! ஆனால் இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு என்பது என் அனுபவம். இளம் வயதில் விதவையான ஒரு பெண்மணி தன் மகனுக்குத் திருமணம் செய்வது வரை நடவடிக்கைகளில் மாற்றமிருந்ததில்லை. மகனுக்குத் திருமணம் ஆனவுடன், அவள் ஒரு மாற்றத்தை அப்போதுதான் கவனித்தாள். அது, தன் மகன் தன்னைத் தவிர, தன் மனைவியிடமும் அன்போடு, அந்தரங்கத்தோடு இருக்கிறான் என்பதை தன் இருபது வயதிற்குள் விதவையாகிவிட்ட அந்தப் பெண் உணரத் தொடங்கியதும்தான் ஏற்பட்டது பிரளயம். அந்த இளம் தம்பதியர் ஒன்றாக இருப்பதை அந்த விதவைப் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியவில்லையோ என்னவோ, இவர்கள் இரவில் அறைக்குள் சென்ற சில நிமிட நேரத்துக்குள், வெளியே தனக்குத் தாங்கமுடியாத குளிர் ஜுரம் வந்துவிட்டது போலவும், அல்லது மயக்கம் வந்து விழுந்துவிட்டது போலவும் நடிக்கத் தொடங்குவதோடு, இரவு முழுவதும் மகனும் மருமகளும் அவளுக்கு ஊழியம் செய்து தேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கத் தொடங்கினாள். மகன் வேலைக்குச் சென்றதும், மருமகளைத் தாங்காத கொடுமைக்கு ஆளாக்கத் தொடங்கினாள். அவளுக்குத் தொடையில் சூடு போட்டுவிட்டு மகனிடம் ஒன்றும் வாய் திறக்காமல் இருந்து விட்டாள். படுக்கை அறையில் அந்தப் பெண் மகனோடு அனுசரித்துப் போகாமல் சில நாட்கள் இருந்த பிறகுதான் அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. பலமுறை விசாரித்தும், கூட குடியிருந்த அன்பான அம்மையார் சொன்ன பிறகுதான் இவனுக்கு சூடு போட்ட செய்தி தெரிந்தது. கேட்கப் போய் வீட்டில் ஒரு பிரளயம் ஏற்பட்டு விட்டது. அந்த விதவைக்குத் தான் சொன்னதுதான் நடக்க வேண்டும். தன்னிடம்தான் எல்லோரும் எந்த விஷயமானாலும் கேட்டு நடக்க வேண்டும். வீட்டின் பண வரவு செலவு தாந்தான் செய்ய வேண்டும். இப்படிப் பல கட்டுப்பாடுகள். அது தவிர, அவளுக்கு ஒரு மூத்த மகள். அவளையும், அவளது குழந்தைகளையும்தான் உறவாக நினைக்கத் தொடங்கினாளே தவிர, தன் மகனையோ அவனுக்குப் பிறந்த குழந்தைகளையோ அல்ல. மேலும் மகன் வீட்டுக்கு எந்தப் பொருள் வாங்கினாலும் அவளுக்குப் பிடிக்காது. அவள் மகள் வறுமை நிலையில் இருந்ததால், அவள் அங்கு சிரமப்பட்டுக் கொண்டு இருக்கும்போது இங்கு எதற்கு இதெல்லாம் என்று வயிற்றெரிச்சல் படுவாள். அடிக்கடி மகனிடமும் மருமகளிடமும் சண்டையிட்டுக் கொண்டு மகள் வீட்டுக்கு ஓடிவிடுவாள். வீட்டில் வரவு செலவு மருமகள் கைக்குப் போய்விட்டது. அதைக் கண்டும் தாங்கமுடியாத ஆத்திரம். இப்படி ஆண்டில் பத்து மாதம் மகள் வீட்டில் கழிக்கத் தொடங்கி, பிரச்சினை முற்றி, ஒரேயடியாக மகள் வீட்டிலேயே தங்கத் தொடங்கினாள். இத்தனைக்கும் மருமகள் வாயில்லாப் பூச்சி. சின்னதாராபுரம் அருகில் ஒரு கிராமத்துப் பெண். அவளுக்கு இப்படியொரு பழி. கிழவியின் மகள் வருமையினாலும், இயலாமையினாலும் கிழவியை சங்கர மடம் நடத்தும் ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டு விட்டாள். இப்போதும், மகனைப் பற்றியோ, மகனுடைய குழந்தைகள் பற்றியோ கவலையின்றி, அந்த முதியோர் இல்லத்தில் இருக்கிறாள். யாரையாவது பார்த்து விட்டால் காப்பிப் பொடி, சர்க்கரை வாங்க என்று பணம் கேட்டு வாங்குவாளே தவிர, தன் பிள்ளை, அவன் குழந்தைகள் எப்படி இருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டாள். இந்த நிலையில் மருமகள் இறந்து போனாள். அவள் இறந்ததுதான் தாமதம், கிழவி இனி இங்கு நாந்தான் இருக்க வேண்டும் என்று வந்துவிட்டாள். ஆனால், மகனுடைய குழந்தைகள் விவரம் தெரிந்தவர்களாக ஆனதால், விரட்டி விட்டார்கள். எங்கள் அம்மா இருந்தவரை வராத உனக்கு இங்கு இனி இடமில்லை என்று சொல்லி விட்டார்கள். மகள், மருமகள் அனைவரும் இறந்த பிறகும் கிழவி மட்டும் சங்கர மடம் முதியோர் இல்லத்தில் நலமாக உறவினர் எவருடைய நினைவுமின்றி செளக்கியமாக இருக்கிறாள். இந்த கிழவி குறித்து ஆசிரியர் அவர்களே, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். கேட்கிறேன்./////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி கோபாலன் சார்!. நீங்கள் சொல்லும் பெண்மணிகளும் உள்ளார்கள். நல்ல உள்ளம் கொண்ட தாய்மார்களை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவர்களை மட்டுமே போற்றி எழுதலாம் என்பதும் என்னுடைய கருத்து. நன்றி சார்

    ReplyDelete
  46. >>>>//ஏன் எனில் குருவே லக்ன காரகன். லக்ன காரகனான குரு லக்னத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் அடுத்தது லக்னமே இல்லாமல் செய்ய வேண்டும். அதாவது அடுத்த பிறவியே இல்லாமல் செய்யவேண்டும்.
    (இது உண்மையோ பொய்யோ ஆண்டவனுக்கே வெளிச்சம்....)
    எனவே குரு லக்னத்தில் இருப்பது நல்லது என்பதற்கு இதுவே மறைமுகமான முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. உங்களுடைய கருத்து?//

    புரட்சி மணியின் 'கேள்வியும் நானே பதிலும் நானே' வலைப் பூவிலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளேன்.ஆனந்த் போன்ற‌வர்கள் அபிப்ராயம் சொல்லலாமே>>>>>

    திரு கிருஷ்னன் அவர்களின் நேற்றைய பின்னூட்டத்தை இன்றுதான் கவனித்தேன். புரட்சி மணியின் வலைதளத்திற்கும் சென்று இதை முழுமையாக படித்தும் பார்த்தேன். படித்து விட்டு எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. ஏனென்றால் லக்னத்திற்கு காரகன் சூரியன். குரு அல்ல. உடல், உடலாரோக்கியம், ஆத்மா, self இவற்றை குறிப்பிடுது சூரியன் மற்றும் லக்னம்.

    குருவின் காரகத்துவம் Family, wealth (2nd house); traditional learning (4th house); children, intelligence (5th house); teacher, religion, fortune (9th house); elder brother, gains (11th house). இவையெல்லாம் ஜோதிடத்தின் அடிப்படையான விஷயங்கள். இது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் ஜோதிடத்தைப் பற்றி எழுத முனைவது தவறு.

    ReplyDelete
  47. ///////hamaragana said...
    அன்புடன் வணக்கம் "
    ''' என்ன தாத்தா உன் சிரட்டை கிளாசை நீட்டு காபி தாரேன் !!!பத்திரமாக வைத்திரு பின்னாளில் எங்க அப்பாவுக்கு இதிலேதான் காபி கொடுக்கணும்..[இப்போ தேங்காய் விக்கிற விலைல எங்க அம்மா..தேங்காவே வாங்கிறதில்லை ??ரெண்டு தேங்கா சில்லு வாங்கி சமையல் முடிச்சிருதா ??]]இது இங்கே நடந்த சம்பவம் என் அம்மா சொல்லி கேட்டது !! .ஆனால் அந்த பழனியப்பன் தனக்குண்டான பங்கை நச்சுனு ?? புடிச்சு வாங்கிட்டானா!! பல மக்களுக்கு இந்த அரண்டு விஷயமும் புரிவதில்லை {அழ்ந்த நாழி பானைக்கு இடுவலில் என என் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள் !!இதன் அர்த்தம் இன்னைக்கு நீ என்ன செய்கிறாயோ?? அது நாளைக்கு உனக்கு??-இன்று நீ எந்த நாழியால்அளக்கின்றாயோ ..அதே நாழி பானைக்கு இடுவலில் இருக்கிறது..... அது நாளைக்கு உனக்கு உன் மகனால் அளக்கப்படும்} நன்றி வாத்தியார் அய்யா ..///////

    உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  48. balajikannan said...
    கதையல்ல நிஜம், கண்ணீரை வரவழைத்து விட்டது.//////

    நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பாலாஜி கண்ணன்!

    ReplyDelete
  49. //////sanjay said...
    தாரமும், தங்க‍‍‍‍‍‍ஆரமும், தாய்ப்பாலுக்கு ஈடாகுமா ???//////

    நல்லது. உங்களின் பின்னூடத்திற்கு நன்றி சஞ்சைய்!

    ReplyDelete
  50. kmr.krishnan said...
    கதையின் யுக்தி, ஏற்கனவே தாங்க‌ள் வெளியிட்ட, அமெரிக்காவில் கட்டிக் குடுக்கப்பட்ட ஒரு அந்தணப் பெண்ணின் மனக் குமுறலை அப்பாவுக்குக் கடிதங்களாக எழுதி, அதை அனுப்பாமல் வைத்துக்கொண்டது... அது ஆங்கிலத்தில் இருந்தது. அதிலும் 6 கடிதஙளுக்குக் குறையாமல் இருந்தன‌.
    நம் சமூக அமைப்பு மாறி விட்ட நிலையில், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து விட்ட நிலையில் முதியோருக்கு காப்பகங்க‌ள் தவிர்க்க முடியாதவையே. சென்னை, மும்பை டெல்லி போன்ற் பெரு நகரங்களில் மிகச் சிறிய அபார்ட்மெண்டுகளில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் முதியோரை வைத்துப் பராமரிப்பதில் உள்ள சிரமங்களை அதை அனுபவித்துப் பார்க்காதவர்களுக்குப் புரிய வைக்க முடியாது.படிக்கும் குழந்தைகளை வைத்துக் கொண்டு,மாலை 5 முதல் இரவு 11 வரை சீரியல் பார்ப்பேன் என்று அடம் பிடிக்கும் முதியோரை என்ன செய்யலாம்?
    கடந்த 28 பிப்ரவரி அன்று ஒரு 60க்கு60 கல்யாணத்தில் ஓய்வு பெற்ற பல உறவினர்களும் சந்தித்தோம். அப்போது இந்தத் தலைப்புத் தான் அலசப்பட்டது.அப்போது கூறப்பட்ட கருத்துக்கள் சில:
    1. வயதான காலத்தில் பேச வேண்டும் என்ற பித்து நமக்கு ஏற்படுகிறது.நம் அனுபவத்தையெல்லாம் சொல்ல விரும்புகிறோம்.ஆனால் இளைய சமுதாயத்திற்கு இருக்கும் பிரச்சனைகளில் நமக்குக் காதைக்கொடுத்துக் கொண்டு அமர நேரமில்லை. எனவே முதியோர் காப்பகத்தில் ஓரிருவராவது நம் பேச்சைக் கேட்பார்கள்;நாம் அவர்களுடைய பேச்சைக் கேட்கவும், அவர்கள் நம் பேச்சைக் கேட்கவும் ஆக இருப்பதில் மன பாரம் குறையும்
    2.வீடு பராமரிப்பு,சமையல் ஆகிய நித்ய வேலைகள் இல்லாமல் இருக்கலாம்.ஆகவே உண்மையான ஓய்வு கிடைக்கும்.ஆன்மீகத்திற்கு அதிக நேரம் கிடைக்கும்.
    3. வீட்டில் உள்ளோரின் கஷ்ட நஷ்டங்கள் முதியோரையும் பாதித்து, அவர்களையும் kavaலைக்குள்ளாக்குகிறது.முதியோர் விலகி விட்டால் அந்த பாதிப்பு இல்லை
    4.பரபரப்ப்பு மிகுந்த சூழலில், முதியோரின் நிதானமான நடை,பேச்சு எல்லாம்
    இளையோர்ருக்குச்சலிப்பைக் கொடுக்கிறது.எனவே நமது நிதானத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் அமைப்பு முதியோர் காப்பகமே.
    5.நாம் படுத்துக் கொண்டால் பணிவிடை புரிய மருமகள் ஒன்றும் செவிலியர் வேலைக்குப் படித்தவள் இல்லை.எனவே எப்படியிருப்பினும் வெளியாரின் சேவையை மருத்துவமனையில் சேர்ந்துதான் பெற வேண்டும். வீட்டில் இருந்தால் பெண்,மருமகள் அசுத்தம் பார்க்காமல் செய்வார்கள் என்று நினைக்க வேண்டாம்.எனவே மருத்துவ வசதியுடன் கூடிய முதியோர் இல்லம் உத்தமமான இடம்.
    6.2வது குநந்தைத் தன்மை வந்து விட்ட முதியவர்கள்,மற‌தித் தன்மை வந்து விட்ட muதியவர்கள்,அழ்மீசியர்ஸ் நோய் வந்த முதியவர்களை வீட்டில் பரமரிப்பது மிகக் கடினம்.
    கோபால்ஜி எழுதியுள்ள செய்தியிலும் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டுவது உள்ளது.
    சூரிஜி(சுப்புரெத்தினம்) நலம் என்பது அறிய மகிழ்ச்சி. என் ஏதாவது ஓர் ஆக்கத்திற்காவது பின்னூட்டம் இடுங்கள் சூரிஜி!. ஏன் இந்த டூ?/////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார். ஒரு மாறுதலுக்காக கதை சொல்லும் யுக்தியில் அதைப் பின்பற்றினேன். சூரியனார் நமது வகுப்பறைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார். அவ்வப்போது முக்கியமான பதிவுகளில் அவர் இடும் பின்னூட்டங்களே அதற்குச் சான்று!

    ReplyDelete
  51. /////NSK said...
    Ayya,
    While reading the letters , Lot of pain is occuring to mind and feeling heavy.
    Again we have to console ourself by citing the duties of all ghragams.
    NSK/////

    அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். வேறுவழியில்லை. நன்றி நண்பரே

    ReplyDelete
  52. /////Govindasamy said...
    தற்போதைய நிலையில் பிறப்பறுத்தலை விட பெற்ற பாசத்தை அறுப்பதே பெருஞ்செயல். இதைச் செய்ய முடிந்தால் பிறப்பறுத்து பெரும் இன்பத்தை இங்கேயே பெறலாம்.. என்ன செய்ய..//////

    எல்லோருக்கும் அது சாத்தியப்படுவதில்லை. அதுதான் சிக்கல். நன்றி நண்பரே!

    ReplyDelete
  53. ////Uma said...
    கதை சுபெர்ப் சார்.
    பொதுவா எனக்கு ரொம்ப tragedy ஆன முடிவு பிடிக்காது. அதனால என் ஒட்டு இரண்டாவது கிளைமாக்சுக்கே. சினிமா கூட அப்படித்தான், அழுதுடுவோம் போலக் காட்சிகள் இருந்தா பார்க்கமாட்டேன் (விதிவிலக்கு: அஞ்சலி, மகாநதி)./////

    உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் இரண்டாவது க்ளைமாக்ஸ்! நன்றி சகோதரி!

    ReplyDelete
  54. ////Uma said...
    மோர் புளிக்காமல் அம்சமாக இருக்கிறது. // இப்படி ஒரு அல்ப சந்தோஷமா?/////

    அதுதான் மனித இயல்பு!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////மாதத்தில் பாதி நாள், லெட்சுமி குழம்பும்// இது என்ன காய் எதுவும் போடாம வைக்கும் வெறும் குழம்பா?/////
    கரெக்ட். வெறும் குழம்பு என்று சொல்லாமல் லெட்சுமி குழம்பு என்பார்கள். வெறும்/இல்லை என்ற சொல் வரக்கூடாது என்பதற்காக லெட்சுமி துணை வருகிறார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////// பொங்கலன்று மட்டும்தான் பொரித்த அப்பளத்தைக்// எதுகை மோனை சுபெர்ப்.
    உன் மனைவி கடுகைக் கூட எண்ணிப் போட்டுத்தான் தாளிக்கிறாள்// கடுகைக்கூட எண்ணித்தான் போடறாங்கன்னா எவ்ளோ பொறுமைசாலியா இருக்கணும்!!
    என் ஆம்பிள்ளையானும் என்னை ஓவியமா வச்சிருந்தாருடா!// நல்ல சொல்நயம்.//////

    பாராட்டிற்கு நன்றி
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////////கணக்கை முடித்து ஐந்தொகையைக் கொடுக்க வேண்டும்// இதுக்கு என்ன அர்த்தம்?///////

    கதையை முடித்து (வாழ்க்கைப் பயணத்தை முடித்து) செய்த நல்வினைகள்/தீவினைகளின் படி சொர்க்கத்தை அல்லது நரகத்தைக் காலன் கொடுக்கட்டும். அதுதான் ஐந்தொகை (Balance Sheet)
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    எச்சு வருகிறது// அப்படின்னா?/////

    அயர்வாக இருக்கிறது. டயர்டாக இருக்கிறது என்று பொருள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  55. ///நீங்கள் கூறிய பாயிண்டுகள் எல்லாம் ஓகே. ஆனால் முதியோர் இல்லத்தில் ஒத்துப்போக முடிந்தவர்களுக்கு வீட்டில் ஏன் முடிவதில்லை?///
    உமாஜி!நான் கூறியிருக்கும் கருத்துக்கள் பொதுவானவை. 'இது இப்படி இருக்கிறது' என்று மட்டுமே சொல்லியுள்ளேன்.ஒத்துப்போக முடிவது, முடியவில்லை என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். நான் சொல்ல வருவது நடைமுறைச் சிக்கல்.ஒத்துபோக முடிந்தவர்களுக்கும் கூட இவை பொருந்தும்.
    வயது முதிர்ந்தவர்களின் பிரார்த்தனையும், எதிர்பார்ப்பும் தான் படுத்துக் கொள்ளாமலும், 'சேனடரி' விஷயஙளில் பிறரைத் தொந்திரவுக்கு ஆளாக்காமலும் போக வேண்டும் என்பதுதான்.அன்பான பெண் இருந்தாலும், மருமகள் இருந்தாலும் அவர்களுக்குத் தொந்திரவு தருகிறோமே என்பதே முதியோர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்.ஆண் பெண் இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில், முதியோர் பராமரிப்பு வெறும் பேச்சளவுதான்.அருகிலேயே இருந்து முகம் கோணாமல் சேவை செய்வது என்பது எல்லாம் கதையில் எழுதலாம். அல்லது "எக்செப்ஷன்" பட்டியலில் சேர்க்கலாம்.என் ஓட்டு முதியோர் இல்லத்திற்கே!

    ReplyDelete
  56. //////Uma said...
    தாயாது மருமகள் இல்லாவிட்டாலும் மகளிடம் அண்டிக்கொள்ளலாம்.. //
    இது என் மாமியார் விஷயத்தில் எதிர்மறையாக நடந்தது. அவர்கள் ரொம்பவும் நம்பிய மகள் கடைசிக்காலத்தில் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சதா சர்வ காலமும் தூற்றிய மகனும், மருமகளும்தான் கவனித்தார்கள்.////

    அதெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகளை உதாரணங்களாகக் கொள்ளமுடியாது யுவர் ஹானர்!

    ReplyDelete
  57. ///////Uma said...
    கொண்டு வந்தால் மனைவி.. கொடுத்தால் சகோதிரி
    கொண்டு வராவிட்டாலும் கொடுக்காவிட்டாலும் தன பிள்ளைக்காக ஏதாவது முந்தானையில் முடிந்து வைத்திருப்பாள்//
    இதுல நீங்க ஒண்ணை விட்டுடீங்க. பரவாயில்லை, நான் எடுத்துக்கொடுக்கிறேன். 'கொலையும் செய்வாள் பத்தினி'. ஹி ஹி.////////

    வலுவான காரணமில்லாமல் எந்தப் பெண்ணூம் அதைச் செய்யமாட்டாள்.

    ReplyDelete
  58. /////Uma said...
    சென்னை, மும்பை டெல்லி போன்ற் பெரு நகரங்களில் மிகச் சிறிய அபார்ட்மெண்டுகளில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் முதியோரை வைத்துப் பராமரிப்பதில் உள்ள சிரமங்களை அதை அனுபவித்துப் பார்க்காதவர்களுக்குப் புரிய வைக்க முடியாது.//
    சிரமம் என்பது உண்மைதான். ஆனால் நகரமாக இருந்தாலும், கிராமமாக இருந்தாலும், செய்ய வேண்டும் என்று நினைத்தால் எதுவுமே சாத்தியம்தான்.
    படிக்கும் குழந்தைகளை வைத்துக் கொண்டு,மாலை 5 முதல் இரவு 11 வரை சீரியல் பார்ப்பேன் என்று அடம் பிடிக்கும் முதியோரை//
    இந்தக் கூத்தெல்லாம் எங்கள் வீட்டிலும் நடந்திருக்கிறது.
    நீங்கள் கூறிய பாயிண்டுகள் எல்லாம் ஓகே. ஆனால் முதியோர் இல்லத்தில் ஒத்துப்போக முடிந்தவர்களுக்கு வீட்டில் ஏன் முடிவதில்லை?//////

    இந்தியாவில் கண்ட இடத்தில் துப்புகிறோம். குப்பைகளைக் கொட்டுகிறோம். அதே நேரத்தில் சிங்கப்பூர் சென்று வாழ நேரிடும்போது அதைச் செய்வதில்லை. ஏன்? வெட்டிவிடுவார்கள். மன உளவியல்தான் அதைச் சரி செய்கிறது. நீங்கள் குறிப்பிடும் இடமும் அந்தக் கணக்கில் வரும்!

    ReplyDelete
  59. ////iyer said...
    அம்மா... அம்...மா....
    நெஞ்சம் நெகிழ... வைத்து
    சொல்ல நா .../////

    நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  60. /////vprasanakumar said...
    very good emotional story, god is great.
    thank you sir/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  61. /////arthanari said...
    கலியுகத்தில் மனங்களும் கல்லாகிவிட்டன. மனம் இருந்தும், மதியிருந்தும் இயலாமை./////

    உண்மைதான். நன்றி அர்த்தநாரி!

    ReplyDelete
  62. //////Ravichandran said...
    Story thaan short..Ana solla vantha visiyamo romba perusu...Enna solvatha endru theriyala..Abadi oru kathai.../////

    இதயபூர்வமான உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  63. /////Blogger ananth said...
    முதலில் சொல்லப் பட்ட முடிவுதான் எனக்குப் பிடித்திருந்தது. Because they don't deserve it.
    என்பதும் என்னுடைய கருத்து. நன்றி சார்////////

    எனக்கும் பிடித்தது முதல் க்ளைமாக்ஸ் காட்சி மட்டும்தான். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  64. நல்ல மனதைத் தொடும் கதை..மனதைத்தொடும் நல்ல கதை..

    "மாதம் ஒரு முறையாவது வந்து பார்த்துவிட்டுப் போ" என்ற தாயின் ஏக்கம் மறுக்கப்பட்டு
    மூன்று மாதங்களுக்குப் பிறகே அவளுக்கு மகனின் தரிசனம் கிடைக்கிறது..
    "பேத்திகளை அழைத்துக்கொண்டு வா" என்ற வேண்டுகோள் நிறைவேற்றப்படும் போது
    அந்த அம்மாவும் பேத்திகளும் பாசப்பிணைப்பில் குடும்பச் சூழலுக்கு எங்கும் மனநிலை
    கடிதத்தில் பிரதிபலிக்கிறது..
    அடுத்த கடிதம் ஆறேகால் மாதம் கழித்துதான் எழுதப்படுகிறது..ஒரு நீண்ட காலப் பிரிவுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளும் முகமாகத்தான் நான் இதனை பார்க்கிறேன்..
    அடுத்த ஐந்தாவது மாதத்தில் வரும் கடிதத்தில் பிரிவுத்துயர் தாங்காது ஒரேயடியாகப் பிரிந்துவிட எத்தனித்து மாத்திரை சாப்பிடாமல் இருப்பதனை சுட்டிக்காட்டும் அம்மையார் அடுத்த மூன்றேகால் மாதத்திலே சிவலோகபதவி அடைந்தே விடுகிறார்..
    கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்திலேயே அவர் கணக்கு முடிந்து விடுகிறது..
    முடிந்து விடுகிறது என்பதை விட முடிக்கப்படுகிறது என்பதுதான் பொருந்தும்..நடைமுறைச்சிக்கல்களை KMRK அவர்களும் பின்னூட்டத்தில் சொல்லியுள்ள போதிலும் உணர்ச்சிகள் இல்லாத ஜடம் போன்ற வாழ்க்கை
    தேவைதானா என்ற கேள்வி எழுகிறது..

    மனதைத்தொடும் நல்ல கதை..நல்ல மனதைத் தொடும் கதை..

    ReplyDelete
  65. கதையின் சிறப்பே க்ளைமேக்ஸ் தான் ஐயா. அதிலும் இரண்டாவது க்ளைமேக்ஸ் அருமையிலும் அருமை. முருகனிடம் வேண்டினால் அவன் நிறைவேற்றி வைப்பான்.
    கலக்கிட்டீங்க வாத்தியார் ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com