மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.3.11

விதியை வெல்வது எப்படி?

----------------------------------------------------------------------------
விதியை வெல்வது எப்படி?
இன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணவர் ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என் செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே,

- திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்,

நவகிரகங்களைப் பற்றி:

நவகிரகங்கள் நமது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதும். நமது வினைப் பயனுக்கு ஏற்ப அவை நன்மை தீமைகளை நமக்குத் தருகின்றன என்பதும் யாவரும் அறிந்ததே,

நிற்க...

என்றாலும் நவகிரகங்கள் என்பவர்கள் யார் ?

இறைவனுடைய ஏவலர்கள் ,,,  இறைவன் வகுத்துள்ள சட்டத்தின்படி நமது வினைப்பயனாகிய பிரார்த்துவம் என்னும் கன்மப் பயனை இறைவனது ஆணைவழி ஊட்டுவதே நவகிரக நாயகர்களின் பணி,  என்றாலும் தனது
அதிகார எல்லைக்குட்பட்ட சில அனுசரனைகளை இந்த நவகிரகங்களும் செய்துகொள்ளவும் முடியும்,

இது ஒரு நிறுவனத்தின் அதிகாரி தனக்கு கீழ் வேலை பார்க்கும் ஒரு ஊழியரது பணிக்குத் தக்க ஊதிய உயர்வு அல்லது ஊதிய குறைப்பு அல்லது தண்டனை வழங்குவதற்கு ஒப்பாகும்,  ஆனால் அந்த அதிகாரி அவரை நிரந்தரமாக வேலையை விட்டு நீக்க முடியாது,  அதற்கு அந்நிறுவனத்தின் முதலாளியின் அனுமதி வேண்டும்,

அதுபோலவே நவகிரகங்களும் தனது எல்லைக்குட்பட்டே செயல்பட முடியும்,

சரி அப்படியானால் நமக்கு விதிக்கப்பட்டுள்ள தீவினைகளை நாம் அனுபவித்தே தான் ஆக வேண்டுமா ?

(இங்கே நல்வினைகளைப் பற்றி யாரும் கேட்கப் போவதில்லை)

இதிலிருந்து விடுபட வாய்ப்பே இல்லையா ?

இந்த இடத்தில் தான் பல சோதிடர்களும் வேறுபடுகிறார்கள் ...

ஒரு சாரர் பரிகாரத்தினால் விதியை மாற்றலாம் என்றும், ஒரு சாரர் என்ன செய்தாலும் விதியை அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் இருவிதமாக வேறுபடுகிறார்கள்,

விதித்ததை விதித்தபடியே தான் அனுபவித்தாக வேண்டும் என்றால் - கடவுள் என்ற ஒருவர் தேவையே இல்லையே ?

நவகிரகங்களே ஆன்மாக்களை ஆட்சி செய்யலாமே? என்றாலும்.இங்கு விதியை வெல்ல முடியாது என்று ஒரு சாரர் சொல்லுவதற்கு என்ன காரணமாக இருக்கும்?

யோசித்தோம் என்றால், இறைவனே என்பது விடையாக இருக்கும்,

(விதியை ஊட்டுவது இறைவன் அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது நவகிரகங்கள் எனலாம் )

இக்கருத்தையே வள்ளுவப் பெருமானும்,

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்


என்றும்

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

என்றும் சொன்னார்.

அதாவது யாவருக்கும் மேலான பரம்பொருளே நமது வினைப்பயனை ( ஊழை ) நமக்கு ஊட்டுவதால் அதை வெல்ல முடியாது என்பது பொருள்,

இன்னும் இதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டுமானால். நாம் செய்யும் நல்வினை தீவினை ஆகிய வினைகள் ( ஊழ் ) இரண்டுமே ஜடப் பொருள்கள். எனவே அதை ஆன்மாக்களுக்கு ( உயிர்களுக்கு ) எடுத்து ஊட்ட இறைவன் தேவை,

நன்மை தீமை என்னும் - வினைக் கொள்கையை ஒத்துக் கொள்ளாத புறச் சமயங்களும் நம் நாட்டில் உண்டு (இப்போது மதமாற்ற முயற்சிக்காக அதை ஒத்துக் கொண்டு வருவது வேறு தனி விசயம் )

ஆக மொத்தத்தில் இறுதியான தீர்வு என்னவென்றால்.

நாம் செய்யும் வினைகளை நமக்கு ஊட்டுபவன் இறைவனே என்பதே

சரி ஊட்டுபவன் இறைவன் என்னும்போது - அவன் நமக்கு நன்மையை மட்டும்
ஊட்டக்கூடாதா?  ஏன் தீமையையும் ஊட்ட வேண்டும்?

அதற்கு காரணம் - நம் மீது உள்ள கருணைதான்

ஆம் இன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால் நமக்கு இந்த வாழ்வின் மீது ஒரு விருப்பம் ஏற்பட்டு மீண்டும் மீண்டும் பிறக்கவே ஆசைப் படுவோம்,

ஆனால் ஒவ்வொரு உயிரும் முத்தி என்ற ஒன்றை அடையவேண்டியது அவசியமில்லையா?

எனவேதான் இறைவன் நன்மை தீமை இரண்டையும் உயிர்களுக்குத் தந்து அதனாலாகிய அனுபவத்தையும் தந்து இந்த உலகின் நிலையாமையை உணர்த்தி பிறவியின் கொடுமையையும் உணர்த்தி நமக்கு தெளிவை தருகிறான்,

சரி தலைப்புக்கு வருவோம் ...

விதியை வெல்ல முடியுமா ?

ஊட்டுவது இறைவன் என்னும்போது எப்படி விதியை வெல்ல முடியும்?

ஒரு எடுத்துக்காட்டு:

ஒரு மரண தண்டனை கைதி தனது தவறை உணர்ந்து ஜெயிலரிடம் கருணை மனு கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

ஜெயிலர் என்ன பண்ண முடியும்?

ஐயா இது என்னால் முடியாது ,, விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதே எனது வேலை. வேண்டுமானால் உங்களுக்கு வலிக்காமல் இருக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்,

(இங்கு ஜெயிலரை - நவகிரகமாக உவமியுங்கள் - அவற்றால் இயன்ற தீர்வை அவை நல்க முடியும் என நம்புங்கள்)

இப்போது ஜெயிலரால் கைவிடப்பட்ட அல்லது அறிவுறுத்தப்பட்ட அதே கைதி இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்

அப்படி அந்த கைதி அனுப்பிய கருணை மனுவை பரிசீலித்த ஜனாதிபதி விரும்பினால் அந்த கைதியை மன்னிக்கலாம் அல்லவா?

இங்கு ஜெயிலராக - நவகிரகங்களையும் ஜனாதிபதியாக - இறைவரையும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அப்படியானால் சாதரணமான ஒரு நாட்டின் ஜனாதிபதியாலேயே அதிகபட்ச தண்டனை எனப்பட்ட மரண தண்டனையையே மாற்ற முடியும் என்றால்...

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகராய் அண்ட சராசரங்களுக்கும் தலைவராய் ( ஜனாதிபதியாய் ) இருக்கும் இறைவன் நினைத்தால் விதியை மாற்ற முடியாதா?

முடியும் என்பதை நாம் உணரலாமே!

வாழ்வில் செய்த தவறை உணர்ந்து திருந்த விரும்பும் ஒவ்வொருவரையும் இறைவன் மன்னித்து அருள் செய்கிறான் என்பது நமது அருள் சுட்டும் உண்மையாகும்,

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே,


என்பது சைவ சமயாச்சாரியரான திருஞானசம்பந்தரின் திருவாக்கு,

மனித வாழ்வில் தவறுகள் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் தவறை உணர்ந்து திருந்துவது என்பது தவிர்க்க முடியாதது அல்லவே ?

இக்கருத்தை வள்ளுவப் பெருந்தகை.

எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று

என்று குறிப்பிட்டு தவறு செய்வது இயல்பு - திருந்தாமல் இருப்பது இயல்பல்லவே என கேட்பதால் உணரலாம்,

அப்படியானால் நாம் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தினால் இறைவன் நம்மை மன்னிப்பார்.

ஆம் உண்மையாக வருந்த வேண்டும் ,,, இனிமேல் இந்த தவறை செய்யமாட்டேன். என்ற உறுதியோடு இறைவனை சரணடைய வேண்டும்.

இவ்வுண்மையை நமது காரைக்கால் அம்மையார் - பதினொன்றாம் திருமுறையில்,

அறியாமலேனும் அறிந்தேனும் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறி நின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம்,


என்று குறிப்பிடுவதால் உணரலாம்,

நெறி நின்று - இனி தவறு செய்ய மாட்டேன் என்ற உறுதியோடு

ஆக நாம் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே நமது வாழ்வு அமைகிறது ... சோதிட ரீதியாக கட்டங்கள் அமைகிறது, ராசி + இலக்கினம் மற்றும் இன்னபிற கிரகங்களின் இல்லங்கள் அமைகிறது,

ஆக,

தீமையாக அமைந்த ஒரு ஜாதகத்தை வைத்துக் கொண்டு நமக்கு இதிலிருந்து விடுபட வாய்ப்பே இல்லையா என வருந்த வேண்டிய அவசியமில்லை ,,,

இறைவன் நினைத்தால் எதையும் செய்வான்.

விதியை வெல்ல முடியும் என்பதற்குச் சான்றாக - மேலும் சில கருத்துகளை இங்கு சமர்ப்பிக்கிறேன்,,

காலனையும் வென்றோம் கடு நரகம் கை கழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீ அம்பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து


என்றும்,

இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்


என்றும் காரைக்கால் அம்மையார் கூறுவதை காணலாம் ,,,

எவ்வளவு அற்புதமான வரிகள் பாருங்கள் ,,,

இறைவனே எந்தாய் - என்பார்க்கு வரும் வெந்துயரை அவன் மாற்றுவான் என்பது எவ்வளவு நம்பிக்கையான வரிகள் - அருள் மொழிகள்,

எனவே இதுகாறும் பார்த்தவற்றால் இறைவனது கருணை இருந்தால் ( நவகோள்களை ) விதியை வெல்ல முடியும் என்பதை அறியலாம்.

ஆனால் எல்லோருமே அப்படி வென்று விட முடியுமா?

யாருக்கு நவகோள்கள் தீங்கு செய்யாது? அல்லது யாரால் விதியை வெல்ல முடியும் ?

யார் ஒருவர் எந்த சமயத்திலும் - அதாவது தனது வாழ்நாளில் சந்திக்கும் நன்மை தீமை யாவிலும் இறைவனையே சார்ந்திருக்கிறார்களோ? யார் ஒருவர் பிறருக்கு தீங்கிழைக்கக் கூடாது என திருந்தி நல்லோராக வாழ்கிறார்களோ - அவர்களாலேயே விதியை வெல்ல முடியும்

இக்கருத்தை நமது திருஞானசம்பந்தப் பெருமான்.

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே


இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே என்பதாலும்.

பெற்றபோழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம் கழல் ஏத்துவார்கள்
மற்றோர் பற்றிலர் என இரங்கி
மதியுடையோர் செய்கை செய்யீர்


என சுந்தரமுர்த்தி நாயனார் குறிப்பிடுவதாலும் உணரலாம்

ஆக சோதிட உலகில் - மிக மோசமான ஜாதக அமைப்பை உடையவர்களும் கூட இறைவனேயே நம்பி நின்றால் நவகோள்கள் பாதிக்காது என்பதை எம்பிரான் திருஞானசம்பந்தர்,

வேயுறுதோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே,


என்று அருளியிருப்பதால் -  நல்ல நல்ல அடியாராக மாறுவோம் விதியை வெல்வோம் -

அதுபோல இந்த பதிகத்தை முழுமையாகப் பாராயணம் செய்து ( படித்து ) நவகோள்களை இகழாது அவர்களுக்குரியமரியாதையை செலுத்தி - கோள்களால் நேரும் துயரையும் வெல்வோம்,

இந்த பதிகத்தை நமது வாத்தியார் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறார்,

அதற்கான சுட்டி இங்கே

 திருவருளால் விதியை வெல்வோம், நன்றி

அன்புடன்
இடைப்பாடி சிவம்
siva c.m janakiraman
வகுப்பறை மாணவர்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

61 comments:

  1. அன்புடன் வணக்கம்
    ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம் சிவஞான் போதத்தில் வரும் மிக கடினமான விஷயங்கள் மிக மிக எளிதாக எல்லோரும் தெளிவாக உணரும்படி கொடுத்துள்ளீர்கள் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் ...ஸ்ரீ மீனாக்ஷி சமேத சுந்தரேஸ்வரர் தங்களுக்கு எல்லா நலன்களும் வழங்க பிரார்த்திக்கிறேன்....

    ReplyDelete
  2. வாத்தி ( யார்) ஐயா வணக்கம்.

    சக தோழர் இடைப்பாடி சிவம் அவர்களே தங்களுடைய கட்டுரையை பார்க்கும் பொழுது தாங்கள் நன்கு முதிர்ச்சி அடைந்த ஒரு மேதையாக தான் தெரிகின்றீர்கள்.

    இங்கு மேதை என்று குறிப்பிடுவது தங்களை புகழ்வதற்கு ஆக அல்ல தோழரே! உண்மையை தான் கூறினேன்.

    நிறைய இடத்தில் இருந்து பல புண்ணிய மகான்கள் தந்த அமுத மொழியை இன்றைய கட்டுரையின் வாயிலாக தந்தது மட்டும் அல்லாது அறுபத்தி மூன்று நாயன்மார்களில் இருந்து எண்ணற்ற புண்ணியவான்களை மனதார நினைத்து பிராத்தனை செய்யும் பெரும் பாக்கியத்தையும் தந்து உள்ளீர்கள் என்பது தான் உண்மையிளையும் பெரிய உண்மை சிவ தொண்டு அடியாரே.

    தங்களுடைய சிவ தொண்டு ஆனது கட்டுரையின் வாயிலாக எண்ணற்ற ஆத்மாக்களுக்கு வீடு பெரு என்னும் மோட்சத்தை பெற்று தருவதாக அமைய எல்லாம் வல்ல
    " திரு அர்த்த நாரிஸ்வறரை ", வேண்டுகின்றேன் ஐயா.

    ReplyDelete
  3. முதற்கண் அடியவனது கட்டுரையை மேன்மை பொருந்திய வகுப்பறையில் பிரசுரித்த வாத்தியார் அவர்களுக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் ,, கடந்த 15 ஆண்டுகளாக சொற்பொழிவாளராக இருந்த என்னை இக்கட்டுரையை வெளியிட்டதின் வாயிலாக ஒரு எழுத்தாளராகவும் வாத்தியார் அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்,

    இதுபோன்ற நல்ல கட்டுரைகளை எதிர்காலத்திலும் எழுத வாத்தியார் அவர்களுடைய ஆசிர்வாதத்தையும் வகுப்பறை அன்பர்களுடைய ஆசிர்வாதங்களையும் எதிர்நோக்கி நிற்கிறேன், எல்லாம் எனையாளும் ஈசன் செயல்.. மிக மிக நன்றி மதிப்பிற்குரிய வாத்தியார் ஐயா அவர்களே ..

    ReplyDelete
  4. திருவாளர் கணபதி நடராஜன் ஐயா அவர்களுக்கு வணக்கம் ...

    தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதத்திற்கு என்ன புண்ணியம் செய்தோமோ ? மிக்க நன்றி ஐயா,,

    அடியவனது ஆன்மார்த்த வழிபடு நாயகராகிய மீனாட்சி சொக்கநாதரின் பெயரால் வாழ்த்தியது மேலும் மகிழ்ச்சி தருகிறது, நன்றி ஐயா.....

    ReplyDelete
  5. வகுப்பறைத் தோழர் கண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ,,

    தங்களைப் போன்ற வகுப்பறையின் முதுநிலை ( சீனியர் )மாணவர்களுடைய பாராட்டுகளை பெரும் பொக்கிசமாக கருதுகிறேன், நன்றி தோழரே..

    ReplyDelete
  6. unmai unmai unmai
    saththiyam saththiyam saththiyam !
    eannam eazhuththu porul unarvu eallaam eraivane shivane !

    mikka nandri !

    ReplyDelete
  7. எடப்பாடி சிவம் தோற்றத்தில் இளையவராகத் தெரிந்தாலும், ஞானத்தால் பழுத்து விளங்குவது தெரிகிறது. சான்றோர்களின் பாடல்களை எடுத்துக் காட்டாகக் கொடுத்து விதி, மதி இவற்றுக்கிடையே உள்ள வலிமை பற்றியும் அழகாக எடுத்தாண்டிருக்கிறார். ஞானப்பாலுண்ட குழந்தை ஞானசம்பந்தர் மதுரை செல்ல விரும்பியபோது, நாவுக்கரசர் இப்போது கோள்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லையே எனச் சொல்ல, நமசிவாய ஐந்தெழுத்தை ஓதுவார்க்கு நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் என சொல்லும் விதமாக "வேயுறு தோளி பங்கன்" பாடலைப் பாடி மதுரை செல்ல, அங்கு அவர் எதிர்கொண்ட அத்துணை எதிர்ப்புக்களையும் தோற்கடித்து வாகை சூடிய வரலாறு நமக்கெல்லாம் ஒரு நல்ல படிப்பினை. இறை பக்தியும், தூய உள்ளமும், சதா பிறர் நலன் வேண்டும் நல்ல உள்ளமும் படைத்திருந்தால், நம்மை நாடி வரும் தீமைகள் ஓடிவிடும் என்பது சிவத்தின் முடிவு. ஆம்! நம் குழந்தைகளுக்கு மூவர் தேவாரமும், மாணிக்கவாசகரின் திருவாசகமும் ஓதுவித்து, இறையுணர்வு கொள்ளச் செய்தால், அவர்கள் வாழ்க்கை நன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஐயா! சிவம் அவர்களே, எழுதுங்கள், ஆன்மீகக் கருத்துக்கள்தான் இன்றைய அவசியத் தேவை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அருமையான பதிவு. மிக்க நன்றி.

    கடவுள் ஏன் மனிதனை படைத்தார் என்கிற கேள்வி என்னுள் எழுகிறது. மனிதனை படைக்காதிருந்தால் இந்த பிரச்சினைகளெல்லாம் இல்லை அல்லவா.

    நன்றி,
    அமுதன் சேகர்.

    ReplyDelete
  9. தோழர் இடப்பாடியாரின் இந்த கட்டுரை செய்திகள் பல
    திருவாவடுதுறை ஆதினத்தின் வெளியீடாக வந்துள்ள "விதியை வெல்வது எப்படி" என்ற புத்தகத்தில்
    மெய்ஞான வள்ளல் சிவதிரு வைத்தியநாத ஈசான தேசிகர் அவர்களின் கருத்துக்கள் சொல்லாட்சிகள் சொல்லடைகள் மேற்கொள்கள் அப்படியே இடம் பெற்றுள்ளன..

    இன்றைய வகுப்பறையை அலங்கரிக்கும் அந்த தொகுப்பின் ஆக்கம் அங்கிருந்து தான் என்றால் பாராட்டுக்குரியவர் அங்கே..

    ஓரே கருத்துக்களை இருவர் சொல்லலாம் ஆனால் ஓரே மாதிரி சொல்ல இயலாது என்பது மனவியலாரும் ஒத்துக் கொள்ளும் விஷயம்..

    மெய்ஞானமும் விஞ்ஞானமும் ஒரு புள்ளியில் தொடங்க ஒரே இடத்தில் முடிகிறது என்பது தான் முடிந்த முடிவாக இருக்கிறது..

    ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் இது தான் உண்மை..
    ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறாக எப்படி வகுப்பறையில் சொல்வது..

    ReplyDelete
  10. வாத்தியாருக்கு அன்பு வேண்டுகோள்..

    மனதை கவர்ந்த பாடலின் வரிசையில் வலம் வரும்
    "அமுதை பொழியும் நிலவே" என்ற பாடலின் ஆசிரியர்
    கு மா பாலசுப்பிரமணிம் அவர்கள்..

    வாத்தியாரின் தொகுப்புகளை சரிபார்த்து திருத்தினால் மகிழ்ச்சி..

    குமாபா அவர்களின் புதல்வர் உங்கள் நண்பர் விசுவுக்கு நெருங்கிய நண்பர்.

    நீங்கள் விரும்பினால் அந்தப் பாடலின் ஆசிரியர் அவர்தான் என்பதற்கான சான்றினையும் பெற்றுத் தருகிறேன்..

    உரியவருக்கு பெருமை சேர்ப்பது உங்களுக்கும் பிடிக்கும் தானே..

    ReplyDelete
  11. தவறுகளுக்காக வருந்தி திருந்துவது
    என்பது கிருத்துவ மதத்திலும் உண்டு
    பாவ மன்னிப்பு வழங்குதல் என பொருள்
    (ஞான ஸ்னானம் செய்வித்து மதம் மாற்றம் செய்வது வேறு கதை அதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

    இது போல வருந்தி திருந்துவது இஸ்லாமிய மார்க்கத்திலும் மார்கழி மாதம் அவர்கள் கண் உறங்காது இரவு விழித்திருந்து மௌலத் ஓதுவதும்

    ரம்ஜான் நோன்புகளில் 27வது பெரிய நோன்பு கடைப்பிடிப்பது உண்டு.

    இது போல் ஜைனர்களிடமும் "மிர்சாமி துக்ரம்" என அன்று ஒரு நாள் (நாம் விநாயக சதுர்த்திசி கொண்டாடுகிறோமே அன்றைய மறுநாள்) பார்ப்வரிடமெல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்து என
    எல்லா மதத்திலும் உண்டு..

    இந்த மன்னிப்பு கேட்பதில் ஒரு ஆழமான கருத்து உள்ளது அதனை எடப்பாடியார் இந்த கட்டுரையில் சேர்க்க வில்லை.. நேரம் கருதியா அல்லது கட்டுரையின் அளவு கருதியா தெரியவில்லை..

    வாய்ப்பு கிடைக்கும் போது வகுப்பறையில் எடுத்துச் சொல்லுவார் உங்கள் நண்பர் விசு அய்யர்.

    அதற்கு முன் விவரம் வேண்டின் காத்திருங்கள் அவசரம் என்றால் ஓரிரு வரி பதிலுக்கு எழுதுங்கள்..

    ReplyDelete
  12. இடைப்பாடி சிவம் & வாத்தியார் ஐயா

    இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    LAST FOUR YEARS

    நான் தினமும் கோளறு திருபதிகம் பாராயனம் செய்கிறேன்.

    மிகவும் நன்றாக உள்ளது.

    ஒரு குறையும் இல்லை.

    எல்லாம் அவன் செயல்.

    மிக மிக நன்றி.

    ReplyDelete
  13. நண்பர் சிவம் நல்லதொரு கட்டுரையை தொகுத்து அளித்துள்ளார் அவருக்கு பாராட்டுக்கள்.....

    ///// யார் ஒருவர் எந்த சமயத்திலும் - அதாவது தனது வாழ்நாளில் சந்திக்கும் நன்மை தீமை யாவிலும் இறைவனையே சார்ந்திருக்கிறார்களோ? யார் ஒருவர் பிறருக்கு தீங்கிழைக்கக் கூடாது என திருந்தி நல்லோராக வாழ்கிறார்களோ - அவர்களாலேயே விதியை வெல்ல முடியும்////

    இது தான் முத்தைப்பாய் நிற்கிறது..... கர்மவினையால்... தீமையை அனுபவிக்கும் போதிலும் சத்தியத்தின் பாதையிலே நடந்தால்...... அந்தக் கர்மவினைகளை கடந்து செல்லும் சக்தியை அவர் இறைவனின் அருளால் பெறுவார்! முடிவில், நன்மையையே....... அதாவது நற்கதியையே பெறுவார் என்பதாக... அருமை. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  14. அன்புடன் வணக்கம் சிவஸ்ரீ சிவம் அவர்களே..
    அடியேனின் ஆத்மார்த்த.சிவ பூஜா மூர்த்தி ஸ்ரீ மீனாக்ஷி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் . ஆகவேதான் அன்றாடம் வழிபடும் மூர்த்தி இடம்தானே வேண்டுகோள் வைக்க முடியும் !!!வைத்து விட்டேன்!!!! இனி எங்கள் நாயகன் பார்த்து கொள்வார்..!!!.அன்புகள் பல
    அன்பர் !!!! .

    ReplyDelete
  15. அன்புநலம் சார்ந்த

    பெருமாள் சுந்தரம்,
    அமுதன் சேகர்,
    பிரசன்ன குமார்

    ஆகிய வகுப்பறை தோழர்களுக்கு நன்றிகள்.. தங்களுடைய வாழ்த்துக்கள்
    என்னை மேலும் இதுபோன்ற தொடர்களை எழுத ஊக்குவிக்கும்
    நன்றி பெருமக்களே..

    ReplyDelete
  16. //சிவம் அவர்களே, எழுதுங்கள், ஆன்மீகக் கருத்துக்கள்தான் இன்றைய அவசியத் தேவை. வாழ்த்துக்கள்!//

    பெருமதிப்பிற்குரிய
    தஞ்சாவூரர் ஐயாவிற்கு வணக்கங்கள்.

    தங்களுடைய வாழ்த்துக்கள்
    என்னை மேலும் இதுபோன்ற தொடர்களை எழுத ஊக்குவிக்கும்
    நன்றி ஐயா...

    ReplyDelete
  17. இது தான் முத்தைப்பாய் நிற்கிறது..... கர்மவினையால்... தீமையை அனுபவிக்கும் போதிலும் சத்தியத்தின் பாதையிலே நடந்தால்...... அந்தக் கர்மவினைகளை கடந்து செல்லும் சக்தியை அவர் இறைவனின் அருளால் பெறுவார்! முடிவில், நன்மையையே....... அதாவது நற்கதியையே பெறுவார்

    நன்றி ஆலாசியம் அவர்களே வாத்தியாரின் செல்லப்பிள்ளையாகிய தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி,

    இந்நேரத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும் வகுப்பறையில் எழுதலாம் என அடியவனுக்கு ஆலோசனை சொன்ன சகோதிரி உமா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  18. நன்றி விசு ஐயர் அவர்களே...
    எல்லோருமே வாழ்த்திவிட்டால் ஒரு
    மனிதனுக்கு ஆணவம் தலைக்கு ஏறிவிடும் ...

    முதற்கோணல் முற்றும் கோணல் என
    அடியவனை அனுகாதீர்கள் ..

    மெய்ஞான வள்ளல் சிவத்திரு வைத்தியநாத ஈசான தேசிகர் ஐயா அவர்களின் கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கிறது
    என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    அதையும் இக்கட்டுரையும் மீண்டும் ஒருமுறை படியுங்கள் அங்கிருந்து
    சிலவற்றை எடுத்தாண்டிருக்கிறேனே தவிர முழுமையும் அல்ல ,,

    திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி மையங்களில் அடியவனும் ஒரு பேராசிரியராக பணியாற்றுவதால் அடிக்கடி இக் கருத்துகளை பல மையங்களிலும் சொற்பொழிவுகளிலும் பகிர்ந்து கொள்வதால் அவற்றிலிருந்து கொஞ்சம் வந்திருக்கலாம்,

    அதுமட்டுமல்ல - முக்கியமாக

    நாம் யாருமே சுயமாக எதையும் தயாரித்து எழுதிவிடுவதில்லை ,,
    முன்னோர்கள் சொல்லிச் சென்றதை
    நாம் புரிந்துகொண்ட அளவில் அதை
    பிறருக்கு எடுத்துச் சொல்கிறோம் ..
    அவ்வளவே ...

    எப்படியிருப்பினும் தங்களுடைய பின் ஊட்டத்திற்கு நன்றி ஐயர் அவர்களே ..

    ReplyDelete
  19. மனதை கவர்ந்த பாடல் வரிசையில் பாடல் ஆசிரியரின் பெயரை சரியமைத்தமைக்கு நன்றிகள் ..
    நன்றிகள்..

    ReplyDelete
  20. இடைப்பாடியாரின் ஆக்கம் அருமை.எல்லோரும் பொறுமையுடன் ஒரு முறைக்கு இரு முறை படித்து மனதில் பதித்து வைக்க வேண்டுகிறேன்.

    திருவாடுதுறை ஆதினத்தார் "விதியை வெல்வது எப்படி?" என்று புத்தகம் வெளியிட்டுள்ளார்கள்.வெளியீடு எண்:503.அப்புத்தகத்தில் ஜாதகத்தில் உள்ள 12 கட்டங்களுக்கும்(பாவங்கள்) ஆன பரிகாரப் பாடல்கள்(பதிகங்கள்)
    கொடுத்துள்ளனர்.மொத்தம் 28 பதிகங்கள்.அனைவரும் எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டிய புத்தகம் அது.

    ReplyDelete
  21. நம்முடைய ஆறுதலுக்காக வேண்டுமானால் இதை சொல்லிக் கொள்ளலாம். நவகிரகங்களின் கடமையில் ஆண்டவனும் குறுக்கே நிற்க முடியாது. இறைவனின் அவதாரமாக இருந்தாலும் தப்பிக்க முடியாது. காக்கும் கடவுள், மும்மூர்த்திகளில் ஒருவர், திருமாலின் அவதாரமான ராமர், வனவாசம் சென்றதும், சீதையைப் பிரிந்ததும் இதனால்தான். அவர் கஷ்டத்தை இறைவனிடம் என்ன முறையிடுது. அவரே இறைவனின் அவதாரம். ஏன் மனைவியை பிரிய வேண்டும். வனவாசம் செல்ல வேண்டும். நாம் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளுக்கு ஏற்ப நவகிரகங்கள் செயல் படுவார்கள். இவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. அனுபவித்துதான் ஆக வேண்டும்.

    ஐயர் அவர்கள் அதிகம் படிப்பவர் போலிருக்கிறது. கட்டுரையின் மூலம் எங்கிருந்து வந்தது என்று கண்டு பிடித்து சொல்லிவிட்டார்.

    ReplyDelete
  22. விசு ஐயர் சும்மா புழுதி கிளப்புவார். கலங்க வேண்டாம் இடப்பாடியாரே. நம் வாத்தியார் உடல் நலக்குறைவால் வருந்தியபோது,ஐயர் "அந்தப் பழக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்" என்று பூடகமாகச் சொன்னார்.படிப்பவர் மனதில் வாத்தியாருக்கு ஏதோ தவறான பழக்கம் உள்ளதோ என்று சந்தேகம் ஏற்படும்படி எழுதினார்.வாத்தியார் பெருந்தன்மையாக விட்டு விட்டார்.விவேகானந்தரைப் பற்றியும் ,பாரதியைப் பற்றியும் தீவரமான விமர்சனம் வைத்துவிட்டு, அதனைப்பற்றி மேல் விளக்கம் கேட்டும் தரவில்லை.இப்போது தோலூக்காகத்தான் கொல்கிறார்கள் என்று புதிதாகக் கரடி விட்டுள்ளார். மீன், நண்டு, ஈசல், எலி, இவையெல்லாம் மனிதன் தின்கின்றானே, அவையெல்லாம் தோலுக்காகவா கொல்லப்படுகின்றன?


    சும்மா வித‌ண்டாவாத‌ம் செய்ப‌வ‌ர்க‌ளைப்ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல், ம‌ன‌ம் த‌ள‌ராம‌ல் மேலும் ந‌ல்ல‌ ஆக்க‌ங‌ளைத்தாருங்க‌ள் இடைப்பாடியாரே!நீங்கள்
    சித்தாந்த வகுப்பு ஆசான் என்று கேட்டு மகிழ்ச்சி!வளர்க தங்கள் சிவத்தொண்டு.

    ReplyDelete
  23. //விசு ஐயர் சும்மா புழுதி கிளப்புவார். கலங்க வேண்டாம் இடப்பாடியாரே.//

    மன்னிக்க.. மன்னிக்க..
    புழுதியை கிளப்ப உங்கள் தோழர் விசு ஐயரிடம் குப்பைகள் இல்லை.. எனினும் நன்றிகள்..


    //நம் வாத்தியார் உடல் நலக்குறைவால் வருந்தியபோது,ஐயர் "அந்தப் பழக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்" என்று பூடகமாகச் சொன்னார்.படிப்பவர் மனதில் வாத்தியாருக்கு ஏதோ தவறான பழக்கம் உள்ளதோ என்று சந்தேகம் ஏற்படும்படி எழுதினார்.வாத்தியார் பெருந்தன்மையாக விட்டு விட்டார்.///

    மன்னிக்க..
    விசு அய்யர் சொன்ன அந்த பழக்கம் எனச் சொன்னது வகுப்பறைக்காக படிப்பதும் எழுதுவதும் உழைப்பதும்..
    சந்தேகம் ஏற்படும்படி எழுதவில்லை.. வேறு எண்ணம் உள்ளவர்கள் சந்தேகபட்டால் என்ன செய்வது..
    நல்லது சிந்திப்பவர்களே இல்லையோ என சிந்திக்கும்படி இப்படி ஒரு சிந்தனையா ..

    வாத்தியார் விட்டது பெருந்தன்மையா..
    விசுவை புரிந்து கொண்ட நல் தன்மையா..
    உண்மை அமைதி பெறட்டும்



    ///விவேகானந்தரைப் பற்றியும் ,பாரதியைப் பற்றியும் தீவரமான விமர்சனம் வைத்துவிட்டு, அதனைப்பற்றி மேல் விளக்கம் கேட்டும் தரவில்லை.///

    யாரை பற்றியும் விமர்சிக்க வில்லை விசுவின் பாரதியார் பற்றிய வித்தியாச மான பார்வை. அது தமிழ் வளர்க்கும் பக்தி என்ற ஆய்வு கட்டுரை தொகுப்பின் இணைப்பாக சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளது...

    எழுதுவதற்கு கொஞ்சம் நேர பற்றாக் குறை அவ்வளவு தான். அதனால் வேறுவிதமாக சிந்தித்தால் காலம் தான் பதில் சொல்லனும்

    ///இப்போது தோலூக்காகத்தான் கொல்கிறார்கள் என்று புதிதாகக் கரடி விட்டுள்ளார். மீன், நண்டு, ஈசல், எலி, இவையெல்லாம் மனிதன் தின்கின்றானே, அவையெல்லாம் தோலுக்காகவா கொல்லப்படுகின்றன?///

    திண்று சுவைத்தவன் எதை திண்ணலாம் என எண்ணித் தான் வௌவால் வரை தின்று தீர்க்கின்றான்.
    கரடியை விட்டால் அதனையும் திண்று சுவைப்பார்கள் இவர்கள்..

    முதன் முதலில் மனிதன் தின்ற மாமிச உணவு எது என தேடிப் பாருங்கள்.. உண்மை செய்திகள் புரியும்.. தோல் பொருட்களை பயன் படுத்தாத வர்களுக்கு கோபம் வராது.. மற்றவர்களின் கோபம் தவிர்க்க இயலாது..

    ///சும்மா வித‌ண்டாவாத‌ம் செய்ப‌வ‌ர்க‌ளைப்ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல், ம‌ன‌ம் த‌ள‌ராம‌ல் மேலும் ந‌ல்ல‌ ஆக்க‌ங‌ளைத்தாருங்க‌ள்///

    இப்படி பதில் சொல்வதினால் சொல்லப்படுபவைகள் வாதமா விதண்டாவாதமா என விளக்கம் சொல்ல வில்லை..
    சொல்லாமல் விட்டுவிட்டால்..
    அது அதுவாக போய்விடும்..

    "திருடன் என கூப்பிட்டால் ஏன் இவர்கள் திரும்பி பார்க்கிறார்கள்" என கமலஹாசன் ஒரு பேட்டியில் சொன்னதைத்தான் நினைத்துப் பார்க்கிறேன்..

    எழுதுங்கள்..
    புதிய சிந்தனையினை படையுங்கள்..
    மாற்றுக் கருத்துத்தான் எழுதுபவர்களை ஏற்றி விடும்..

    அது பாலச்சந்தராக இருந்தாலும் சரி
    பாரதிராஜாவாக இருந்தாலும் சரி..

    தொடரும் நட்புடன்.. இந்த பாடலை பாடியபடி...
    "உள்ளம் என்பது ஆமை
    அதில் உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி .. நெஞ்சில் உறங்கி கிடப்பது மீதி"

    "நண்பனும் பகை போல் தெரியும்
    அது நாள் பட நாள் பட புரியும்"

    ReplyDelete
  24. ///எல்லோருமே வாழ்த்திவிட்டால் ஒரு
    மனிதனுக்கு ஆணவம் தலைக்கு ஏறிவிடும் ...///

    ஆணவத்திற்கு குணம் எட்டு
    இறைவனுக்கும் குணம் எட்டு

    எந்த எட்டு குணத்தை உடையதை பற்ற வேண்டும் என உயிர்கள் அறிந்து கொண்டால் உயர்வு தானே வரும்..

    ///முதற்கோணல் முற்றும் கோணல் என அடியவனை அனுகாதீர்கள் ...///

    ஒரு சித்தாந்தத ஆசிரியர் உயர்வு நிலையில் எண்ண வேண்டாமா..
    கோணல் என சொன்னது யார்..
    நீங்கள் சொல்லும்படி உங்களை அப்படி அணுகுவதாக சொன்னது யார்..
    மனதா.. புத்தியா..
    தெளிவு பெறுங்கள் நண்பரே..
    அமைதி கொள்ளுங்கள்..


    ///அதையும் இக்கட்டுரையும் மீண்டும் ஒருமுறை படியுங்கள் அங்கிருந்து
    சிலவற்றை எடுத்தாண்டிருக்கிறேனே தவிர முழுமையும் அல்ல ///

    முழுமையும் என சொல்ல வில்லையே

    ///நாம் யாருமே சுயமாக எதையும் தயாரித்து எழுதிவிடுவதில்லை
    முன்னோர்கள் சொல்லிச் சென்றதை
    நாம் புரிந்துகொண்ட அளவில் அதை
    பிறருக்கு எடுத்துச் சொல்கிறோம் ..
    அவ்வளவே ...//

    "விச்சது இன்றியே விளைவு செய்குவாய்"
    என திருவாசக வரிகளே நினைவிற்கு வருகிறது..
    கொடி அசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா
    என மாறி மாறி வரும் கவிஞரின் பாடல் வரிகள் சிந்தனையை வருடி செல்கிறது..

    நீங்கள் வேறு விதமாக சிந்திக்க எதுவும் இல்லை..
    தொடர்ந்து எழுதுங்கள்..
    தேனின் சுவையை சொல்வதுடன்
    எந்த சாதி தேன் என்பதனையும் சொல்லி இருக்கலாம் என்பது தான் சொல்ல வந்தது..

    "குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா என் பைங்கிளி
    ஏதோ நினைவு தான் உன்னை சுத்தி பறக்குது.."
    இந்த பாடல் வரிகளை உங்களுக்கு பரிசாக தருகிறேன் ஏற்றுக் கொள்வீர்கள் தானே..

    ReplyDelete
  25. "வேறு எண்ணம் உள்ளவர்கள் சந்தேகபட்டால் என்ன செய்வது..
    நல்லது சிந்திப்பவர்களே இல்லையோ என சிந்திக்கும்படி இப்படி ஒரு சிந்தனையா .."

    இடைப்பாடியார் ஆக்கத்தில் திருவாடுதுறை ஆதீனப் புத்தகம் பற்றி நாம் இருவருமே குறிப்பிட்டு உள்ளோம்.உங்கள் பின்னுட்டத்தைப் படிக்காமலேயே
    நான் பின்னூட்டம் இட்டேன்.நம் இருவரின் பின்னூட்டங்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும் யார் நல்லது சிந்திக்கிறார்கள்;யார் அல்லது சிந்திக்கிறார்கள் என்று.பல மாதங்க‌ளாகத் தங்களைக் கூர்ந்து கவனித்தே வருகிறோம். சம்பந்தமே இல்லாத, புரிந்து கொள்ள முடியாத, மற்றவர்களை"ஆட்டுமந்தைகள்"என்று வர்ணிக்கக்கூடிய,முற்றுப்பெறாத வாக்கியஙளை எழுதக்கூடிய,தவறியும் பிறரைப் பாராட்டி விடாத தங்க‌ளுடைய மனோநிலையை நாங்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறோம்.

    பெரியவர் தஞ்சாவூரான் அடுக்கிய கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
    பாரதியைத் தமிழ்க் கவிஞன் இல்லை என்று சொல்லிய நீங்கள் உங்கள் பின்னூடங்களைப் பிழை திருத்தி அனுப்புங்கள். தின்பதா? திண்பதா? எதுசரி?

    மாமிச உணவை, ஆயுதங்கள் கண்டு பிடிப்பதற்கு முன்னர், காட்டுத்தீயில் தானாக மடிந்த, இயற்கையில் சுடப்பட்ட மிருகங்க‌ளின் கொழுப்பை மனிதன் சாப்பிட்டிருக்க வேண்டும்.காட்டுத்தீயில் காய் கனிகள் அழிந்த்து விட்ட நிலையில் வேறு தாவர உணவுகளின் உற்பத்தி பற்றி அறியாத காலத்தில், உணவு உற்பத்தி, விவசாயம் இவையெல்லாம் வளராத‌
    சமயத்தில், பசிக் கொடுமையால் ஆதிமனிதன் மிருகக் கொழுப்பை முதல் முதலாக உண்டு இருக்கலாம்.ஆரம்பம் முதலே தோலுக்காகத்தான் கொன்றார்கள் என்பது என்னால் ஏற்க முடியாது. ஏதாவது ஆங்கிலப் புத்த்கங்களை நீங்கள் மேற்கோள் காட்டினாலும்,என் அபிப்ராயம் இதுதான்.ஏனெனில் அப்படிப்பட்ட புத்தகங்க‌ளை எழுதுபவர்களும்சரி, நீங்களும் சரி, நானும் சரி அந்தக் காலத்தில் வாழ்ந்து நேரடி அனுபவம் பெறவில்லை.
    அனைவருமே யூகத்தின் அடிப்படையிலேயே பேச வேண்டியிருப்பதால்,என் யூகம், முதலில் உண‌வுக்காகத்தான் மிருகங்க‌ள் கொல்லப்பட்டன.பின்னர்தான் அதனுடைய'பை ப்ராடக்ட்' ஆன தோலின் பயனை மனிதன் அறிந்தான்.

    கமலஹாசன் அப்பட்டமாகத் தன்னை நாத்திகன் என்று சொல்லிக் கொண்டவர்.
    ரஜினி=கமல் தொழில் போட்டியில் ரஜினி ஆத்திக வேடம் கட்டுவதால்,கமலுக்கு நாத்திக வேடம் தேவைப்படக்கூடும்.அவரை நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளது
    பொருத்தமே இல்லை.'திருடன்' என்று கூப்பிடால் மட்டும் அல்ல, வேறு எதைச் சொல்லிக் கூப்பிட்டாலும் ஏதோ குரல் கூப்பிடுகிற்தே என்று திரும்பிப் பார்ப்பது இயற்கை. முத்லில் ஒலிதான் கேட்க்கும்.ஒலி கேட்டவுடனேயே திரும்பிப் பார்த்து விடுவோம்.பின்னர்தான் ஒலியின் பொருள் புரியும்.
    அதுசரி. சாலையில் நின்று கொண்டு போய்வந்து கொண்டிருப்போரைப் பார்த்து
    " திருடா திருடா" என்று கூப்பிட்டு, திரும்பிப் பார்ப்போர் அனைவரும் திருடன் தான் என்று முடிவு செய்வது சரியா?அப்படி கூப்பிடுபவரின் மனோநிலையை நாம் சந்தேகிக்கக் கூடாதா?

    "வித்யா வினய சம்பன்னே..." என்பது கீதை.உங்க‌ளிடம் வித்தை இருக்கக்கூடும். வினயம் இன்னும் வரவில்லையோ என்று எண்ணுகிறேன்.
    என் எண்ணம் தவறு என்பது நீங்கள் நடந்து கொள்ளும் முறையிலும், தெளிவாக எழுதக்கூட்டிய நடையும் தான் சுட்ட வேண்டும்.
    தாங்க‌ள் நண்பர்தான் என்றால் அதைச் சரியாகச் சொல்லுங்கள்.சினிமா பாட்டெல்லாம் வேண்டாம்.

    "அந்தப் பழக்கம்" என்று வாத்தியாரைப் பற்றி நீங்கள் எழுதியதை என் வக்கர புத்தியால் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டது போல சித்தரித்துவிட்டீர்கள்.
    நீங்கள் குழப்படியாக ஏன் எழுத வேண்டும்? நேரடியாக"அய்யா அதிகம் எழுத வேண்டாம்" என்று சொல்ல வேண்டியது தானே?

    ReplyDelete
  26. திருவாளர் கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் ,,, தங்களது வாழ்த்துக்கள் எம்மை மெருகூட்டும்,,,

    மதிப்பிற்குரிய விசு ஐயர் அவர்ளது விமரிசனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என தாங்கள் கூறியது உண்மையே ,,,

    போற்றுவார் போற்றலும்
    துற்றுவார் துற்றலும் எந்தை ஈசனுக்கே
    பின் ஊட்டங்களில் அவர் தங்களையும் காயப்படுத்தியமைக்காக வருந்துகிறேன்

    ReplyDelete
  27. நண்பர் ஆனந்த் அவர்களுக்கு நன்றிகள் ,,, தங்களது வாழ்த்துக்கள் எம்மை மெருகூட்டும்,,,

    தங்களது கருத்துக்கள் தவறு ஆண்டவனை விட கிரகங்கள் வலிமை குன்றியவை அக்கருத்தை சந்தர்ப்பம் வரும்போது விவரிக்கிறோம்

    நன்றி

    ReplyDelete
  28. அன்பிற்குரிய விசு ஐயர் அவர்களுக்கு
    தங்கள் விமரிசனங்களை வரவேற்கிறோம்

    உளியால் செதுக்கப்படும் கற்கள் தான்
    உருவத்தை அடைகின்றன ,,,

    ஆனால் நீங்களோ வகுப்பறைக்கு
    கடப்பாரையோடு அல்லவா வருகிறீர்கள் ,, உங்கள் செயல்
    எந்த உருவத்தையும் உருவாக்காது ,, சின்னாபின்னமாக்கிவிடும்,,

    முதற்கண் வகுப்பறைக்கு வரும்
    அனைவரையும் நண்பர்களாகவும்
    சகோதர சகோதரிகளாகவும் பாவிக்கப்
    பழகுங்கள் ,,,

    அதைவிட்டுவிட்டு ஏன் எல்லோர் மனதையும் வருந்தச் செய்கிறீரகள் ?

    தவறுகளை சுட்டிக்காட்டுவது தவறல்ல
    அதை நாசூக்காகச் செய்ய வேண்டும்,,

    நாம் மட்டுமே அறிவாளி ஏனைய
    அனைவரும் முட்டாள் என்பது போல்
    உங்களது பின் ஊட்டங்கள் தென்படுகின்றன ...

    முதலில் அவையடக்கம்
    ( வகுப்பறை அடக்கம் ) என்ற
    ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள் ...

    யார் எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதையே பலர் வேலையாக வைத்திருப்பார்கள் என்பதால்தான்
    கிட்டத்தட்ட 14 ஆம் நுற்றாண்டிலேயே
    திருவிளையாடல் புராணத்தை எழுதிய
    பரஞ்சோதி முனிவர்,

    சிவபெருமான் எழுதிய கவிக்கே
    குற்றம் சொன்ன சபை - என் கவிக்கு
    குற்றம் சொல்லாதா ?

    சொல்லும் ,, எனவே நல்லவர்கள்
    ( கவனிக்க நல்லவர்கள் )
    என் கவியில் உள்ளதை - அன்னப் பறவையானது எப்படி நீரை நீக்கி
    பாலை மட்டும் அருந்துமோ ?

    அதுபோல

    எனது கவியில் உள்ள நல்லவற்றை மட்டும் எடுத்தாள்வர்

    எனக் குறிப்பிடுவார் ,,,

    அடியவனும் இங்கு அதையே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்,

    இது அடியவனது கன்னிப் படைப்பு என்பதை அறிந்திருந்தும் இவ்வளவு விமரிசனங்கள் தேவையா ?

    உங்களை நீங்கள் நக்கீரராகப் பாவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது
    உங்களது பின் ஊட்டங்களை பார்க்கும் போது தெரிகிறது,

    ஆம் நீங்கள் நக்கீரர் தான் ,,,

    இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

    இனியாவது தங்களது விமரிசனப் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள் ...

    இல்லை என்றாலும் கவலையில்லை,,

    ஏன் என்றால் நக்கீரர் போன்றோருக்காக உலகின் மிகப்பெரிய ஞான நுல் எனப் போற்றப்படும்
    சிவஞான போதத்தை அருளிய மெய்கண்டார் தனது அவையடக்கத்தில்,

    தம்மை உணர்ந்தவர்கள்
    இறைவனை உணர்வார்கள்...

    இறைவனை உணர்ந்தவர்கள்
    அவன்து அடியவனாகிய எம்மையும்
    உணர்வ்ர் ,,,

    அப்படி தம்மையும் உணராது
    இறைவனையும் உணராது
    எம்மைப் பற்றிப் புறம் பேசுபவர்களைப் பற்றி எமக்கு கவலையில்லை

    எனக் குறிப்பிட்டிருப்பார் ,,,

    அடியவனும் அதையே இங்கு வலியுறுத்துகிறேன்,

    மீண்டும் சொல்கிறேன்
    வகுப்பறைக்கு உளியோடு வாருங்கள்
    வரவேற்கிறோம் ,,
    கடப்பாரையோடு அல்ல ....

    இன்னும் சொல்லப் போனால்
    கல்வி என்பது உள்ளத்தை அடங்கச்
    செய்ய வேண்டுமே தவிர
    தலைக்கணத்தில் ஆடச் செய்யக் கூடாது ...

    நீங்கள் நிறைய கற்றதாக கருதிக் கொண்டு யாவரையும் புண்படுத்தி வருகிறீர்கள் ,,

    யார் ஒருவர்

    கற்றது கை மண் அளவு
    கல்லாதது உலக அளவு

    என்பதில் தெளிவாக இருக்கிறார்களோ
    அவர்களே கற்றவர்கள் ...

    இறுதியாக ஒன்று ,,,

    கற்க இடர்ப்பட்டு மிக கற்றை எல்லாம்
    கற்றவர் பால் தர்க்கமிட்டு நாய்
    போல ' சள் ' எனவோ ?

    நற் கருணை வெள்ளம் அடங்கும் விரிசடையார்க்கு ஆளாகி உள்ளம் அடங்க அல்லவோ ?

    என்பது சிவபோக சாரம் ,,

    கற்றதனால் ஆயபயன் என்கொல் ?
    வாலறிவன் நற்றாள் தொழ என்பது
    வள்ளுவம் ...

    ஆகவே

    சிற்றறிவுடைய நாம்
    பேரறிவாளனாகிய ஈசனிடத்திலே
    உள்ளத்தை அடக்குவோமாக ,,,

    ReplyDelete
  29. அன்பிற்குரிய விசு ஐயர் அவர்களே,

    ஓரே கருத்துக்களை இருவர் சொல்லலாம் ஆனால் ஓரே மாதிரி சொல்ல இயலாது என்பது மனவியலாரும் ஒத்துக் கொள்ளும் விஷயம்..

    இதில் மனவியல் என்பது உலகியல்
    அறிவு ...

    இங்கு எழுதப்பட்ட கட்டுரையின் சாரம்
    அருள்துறையை சார்ந்தது ..

    பக்தி இலக்கியங்களிலும், கட்டுரைகளிலும் சொல்லப்பட்டவையே
    சொல்லப்படுவது உண்டு ,,,

    காரணம் அனைத்தும் இறைவனை சிந்தித்து பிதற்றுபவையே ...


    அருள் துறையிலும் சரி,
    உலகியலிலும் சரி

    ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்கள் பலருக்கும் உண்டு என்பதை ஒரு கட்டுரையாகவே ஆதாரத்தோடு விளக்குகிறேன் ... இதற்கும் நீங்கள் முந்திக் கொண்டு ஒரு பின் ஊட்டம் இட்டாலும் மகிழ்ச்சியே ...


    ஆணவத்திற்கு குணம் எட்டு
    இறைவனுக்கும் குணம் எட்டு

    ஆகா ... இது ஒன்று போதாதா ?
    நீங்கள் தேவையற்றதையெல்லாம் நிறையப் படித்து வைத்திருக்கிறீர்கள் என்பதற்கு சான்று ,,,

    ஆணவத்தின் கூறுகள் ஏழே தவிர
    எட்டு அல்ல ...

    அந்த ஏழு

    மோகம்
    மதம்
    அராகம்
    கவலை
    தாபம்
    வாட்டம்
    விசித்திரம்

    என்பனவாகும் ..


    மேலும்
    விச்சது இன்றியே விளைவு செய்குவாய்"
    என திருவாசக வரிகளே நினைவிற்கு வருகிறது..

    என்கிறீர்களே ?

    இறைவனும் கூட விச்சு இன்றி எதையும் உருவாக்க முடியாது என்னும் பொருளில் அந்த திருவாசகப் பாடலை மணிவாசகப் பெருமான் கையாண்டிருக்கிறார் ..

    வாய்ப்பிருக்கும்போது எமது பேராசிரியர் - எமக்கு உணர்த்திய அந்த விவரத்தை தங்களுக்கும் சபைக்கும் சொல்கிறேன் அல்லது
    இதற்கும் நீங்கள் முந்திக் கொண்டு ஒரு பின் ஊட்டம் இட்டாலும் மகிழ்ச்சியே ...

    ஐயா,

    தங்களது மேலான அறிவை ஆக்கப் பணிக்கு பயன்படுத்துங்கள் ...
    இளைஞர்களை ஊக்குவித்து உதவுங்கள் ...

    இந்த உலகம் நிலையற்றது ...
    இப்போது தானே உலகம் ஒரு சுனாமியை சந்தித்திருக்கிறது ...

    நிலையற்ற வாழ்வில் நிலையானதை
    செய்ய முற்படுவோம் ...

    அன்பே சிவம்

    ReplyDelete
  30. அன்புடன் வணக்கம் திரு அய்யர் &,.திரு சிவம் ,
    பெரும்பாலான இடங்களில் """நிறை இருந்தால் நண்பரிடம் கூறுங்கள் குறை இருந்தால் எங்களிடம் கூறுங்கள் """".. என்று எழுதபட்டிருக்கும்.இந்த இடத்திற்கு மிக பொருத்தமான வரிகள் என் அடியேன் கருதுகிறேன்"'".இல் பொருள் தோன்றாது உள் பொருள் அழியாது """.எல்லாமே இருப்பதைத்தான் எடுத்து கையாளா வேண்டும் !!!! திரு அய்யர் அய்யா அவர்கள்... திரு சிவம் எழுதியதில் அவர் மனுதுக்கு பட்ட குறைகளை ....தனிப்பட திரு சிவத்தின் மின்னஜலுக்கு அனுப்பினால்?? தவறு இருக்கும் பட்சத்தில்!!!! அவரே அதற்க்கு மறுப்பு வெளி இட்டு விடுவார் !!!அல்லது தங்களுக்கு விபரம் சொல்லலாம்!!!சைவத்தை பற்றி மஹா பாதகம் எழுதியது போல் !!! . இப்பிடி ஒரு திறந்த தளத்தில் இரு பேரும் விவாதம் செய்வது சரியா ??பெரியோர்கள் நீங்கள் !!!நீங்களே சொல்லுங்கள்...??? .சரி!!! இதில் ஏதேனும் தவறு இருப்பின் பொறுத்து கொள்க !!!பிரசுரிக்கும் வாத்தியார் அவர்களுக்கு நன்றி... !!!.

    ReplyDelete
  31. அன்பிற்குரியவர்களே..
    ஏன் வகுப்பறையை விவாத மேடையாக்கிறார்கள் என்பது புரியவில்லை..

    விசுவின் கையில்
    உளியும் இல்லை
    கடப்பாரையும் இல்லை..

    இல்லாத காயத்திற்கு
    எப்படி மருந்திடுவது


    ///ஆணவத்தின் கூறுகள் ஏழே தவிர
    எட்டு அல்ல ...///

    ஆணவத்திற்கு குணம் எட்டு என சித்தாந்தத சாத்திரம் அருள்நந்தி சிவாச்சாரியார் அருளிச் செய்த
    இருபா இருபது வில் கீழ்கண்டவாறு கூறுகிறது.
    "விகற்பம் கற்பம் குரோதம் மோகம் கொலை யஞர் மத நகை விராய் எண் குணனும் ஆணவம் என விளம்பினை"
    அவையாவன
    விகற்பம்
    கற்பம்
    குரோதம்
    மோகம்
    கொலை
    அஞர்
    மதம்
    நகை
    என..


    இல்லாததை இருப்பதாக எண்ணிக் கொண்டு பேசினால் என்ன சொல்ல..

    கறுப்பு பூனை ஒன்றை இருட்டு அறையில் அது இல்லாது போது தேடினால்..
    எப்படி கண்டுபிடித்து கொடுப்பது..


    நாவுக்கரசு சுவாமிகள் சொன்னது போல்..
    "அவ்வளவில் அவன் மகிழ்க என
    எண்ணிய படியே.."

    "காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் கண்டானாம் தான் கண்டவாறு"


    என்ற திருக்குறளுடன் அமைதி கொள்கிறேன்..

    ReplyDelete
  32. பதில் சொல்ல வேண்டாமென்று நினைத்தேன். அது ஒரு விஷயத்தை மேலும் வளர்த்துக் கொண்டுதான் போகும். நான் நவகிரகங்கள் இறைவனை விட மிகவும் சக்தி படைத்தவை என்று சொல்ல வில்லை. அவற்றின் கடமையை இறைவனும் தடுக்க முடியாது. இறை வழிபாடு என்பது நமக்கு ஏற்படும் துன்பங்களை தாங்கும் சக்தியை கொடுக்கும் வாத்தியார் எப்போதும் சொல்வதை போல. அதிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக அல்ல.

    ReplyDelete
  33. கணபதி ஐயா தங்களின் கருத்துக்கு தலைசாய்க்கிறேன் .. நிச்சயமாக அடியவன் பக்கத்தில் தவறிருப்பின் திருத்திக் கொள்கிறேன் , இனி
    இந்த கட்டுரை சார்ந்து மதிப்பிற்குரிய விசு ஐயா அவர்களுக்கு எந்த மறுமொழியும் கூறமாட்டேன், நன்றி
    அனைத்தையும் பொறுமையாக கூர்ந்து
    கவனித்து வரும் மேன்மை பொருந்திய
    வகுப்பறை வாத்தியாரும் பொறுத்தருள்க..

    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம் ..

    அன்பே சிவம் ..

    ReplyDelete
  34. //அவற்றின் கடமையை இறைவனும் தடுக்க முடியாது. //!!!

    உங்கள் பின் ஊட்டத்துக்கு நன்றி ஆனந்த் அவர்களே ..

    ReplyDelete
  35. //////ananth said...
    பதில் சொல்ல வேண்டாமென்று நினைத்தேன். அது ஒரு விஷயத்தை மேலும் வளர்த்துக் கொண்டுதான் போகும். நான் நவகிரகங்கள் இறைவனை விட மிகவும் சக்தி படைத்தவை என்று சொல்ல வில்லை. அவற்றின் கடமையை இறைவனும் தடுக்க முடியாது. இறை வழிபாடு என்பது நமக்கு ஏற்படும் துன்பங்களை தாங்கும் சக்தியை கொடுக்கும் வாத்தியார் எப்போதும் சொல்வதை போல. அதிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக அல்ல./////

    நம் கர்மவினைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. வரும் ஏற்றத்தாழ்வுகளை, இன்பதுன்பங்களை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இறைவன் அதில் தலையிட மாட்டார். இறைவழிபாடு நமக்கு தாக்குப் பிடிக்கும் சக்தியைக்கொடுக்கும். அவ்வளவுதான். ஜனரஞ்சக மொழியில் சொன்னால்: He will give only standing power to us. எல்லாம் விதிப்படிதான் நடக்கும். விதித்தபடிதான் நடக்கும்.

    ReplyDelete
  36. மிகவும் தெளிவாக சொல்ல வந்ததை, எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  37. வகுப்பறையில் எழுதலாம் என அடியவனுக்கு ஆலோசனை சொன்ன சகோதிரி உமா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...//

    இதற்கெல்லாம் எதற்கு நன்றி?

    ReplyDelete
  38. அவரே இறைவனின் அவதாரம். ஏன் மனைவியை பிரிய வேண்டும். வனவாசம் செல்ல வேண்டும். //

    வேற எதுக்கு, ராவணனை காலி பண்ணத்தான்.

    ReplyDelete
  39. ஆரம்பம் முதலே தோலுக்காகத்தான் கொன்றார்கள் என்பது என்னால் ஏற்க முடியாது. நீங்களும் சரி, நானும் சரி அந்தக் காலத்தில் வாழ்ந்து நேரடி அனுபவம் பெறவில்லை.//

    ரொம்ப சரியாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  40. திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட நூலை எத்தனை பேர் படித்திருக்கக் கூடும்? பின்னூட்டங்களிலிருந்து இருவர் படித்திருப்பது புரிகிறது. அதை மேலும் பலர் அறியும்படி எழுதியதில் எடப்பாடியாரின் தவறு என்ன இருக்கிறது. இதை காப்பி அடிப்பதாகக் கொள்ள முடியாது. ராமாயணம் மகாபாரதம் அனைவரும் அறிந்தவொன்று. ஆயினும் எத்தனை முறை யார் அவற்றைச் சொன்னாலும் உட்கார்ந்து கேட்கிறோமே. நல்லவைகளை எத்தனை முறை கேட்டாலும் தவறு இல்லை. தீமைகளை மட்டும் உடனுக்குடன் மறந்திடல் வேண்டும். பாண்டியன் சபையில் தருமி நக்கீரனைப் பார்த்துச் சொல்லுவார், "குறை கண்டுபிடித்துப் பெயர் வாங்குது சில பேர், அதில் நீர் எந்த வகை என்பது உமக்கே தெரியும்" என்று. பிறர் சொல்லும் நல்லவைகளை, அவை வேறு நல்ல நூல்களிலிருந்து எடுத்துக் கையாளப்பட்டிருந்தாலும் அவற்றைப் பாராட்டுவது நமது கடமை. காரணம் அவற்றைப் பலர் படித்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். அந்த வாய்ப்பை இப்போது ஒருவர் தருகிறார் என்றால் பலர் பயன் அடைகிறார்கள் அல்லவா? தினமும் திருக்குறளை எடுத்துக் காட்டிப் பலர் பேசுவதைக் கேட்கிறோம். அதில் என்ன தவறு. குறள் காட்டும் நெறி, நன்னெறி என்றால் அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் தவறு இல்லை. விவாதம் ஆரோக்கியமாகத்தான் இருக்க வேண்டும். குறை காணவோ, குற்றம் சாட்டவோ தேவையில்லை. உலகில் பலரால் போற்றப்படும் மகான்களைப் பற்றி குறை காணவோ, குற்றம் சாட்டவோ நாம் ஒன்றும் அவர்களை மிஞ்சிய மேதைகள் அல்ல. அப்படி நாம் அவர்களைக் காட்டிலும் பெரிய மேதை என்பது உண்மையானால், அதனை செயலில்தான் காட்ட வேண்டுமே தவிர, குற்றம் சாட்டி, குறை கூறுவதால் அல்ல. எடப்பாடி சிவம் ஒரு நல்ல துவக்கத்தைத் தந்திருக்கிறார். சைவ சித்தாந்தம் அவர் துறை என்றால்,அது குறித்து மேலும் விரிவாக எழுத அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது நமது தலையாய கடமை. தரையில் முளைக்கத் துவங்கும் சிறு செடிக்கு நீர் ஊற்றுவோம்.அதனைக் கிள்ளி எறிய முயல வேண்டாம். ஆசிரியரும் சரி, கே.எம்.ஆர். அவர்களும் சரி மற்றவர்களும் சரி, இந்தக் கருத்துக்கு மறுப்புச் சொல்ல மாட்டார்கள் என்பது என் கருத்து. பங்குபெறும் சிலரது பெயரில் எதற்குச் சாதி அடையாளம். வேண்டாமே.

    ReplyDelete
  41. இரண்டு நாள் பணி விடுப்பிற்கு பின் வந்திருக்கிறீர்கள் போல ..

    தங்களது வாழ்த்துக்களுக்கு
    நன்றி உமா அவர்களே

    ReplyDelete
  42. ///ஆணவத்தின் கூறுகள் ஏழே தவிர
    எட்டு அல்ல ...///

    எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ஏன் இப்படி
    சாத்திரத்திற்கு மாறாக சொல்லி சிவ அபராதம் பெற விரும்புகின்றீர் நண்பரே..

    ஆணவ மலத்திற்கு குணங்கள் எட்டு என அருள் நந்தி சிவாச்சாரியார் அருளிய இருபா இருபஃது என்ற புத்தகத்தை புரட்டிப் பாருங்கள்..
    நான்காவது பாடல் இதற்கு தெளிவான விளக்கம் தரும்..

    சாத்திர பாதகத்தை எப்படி பொறுத்துக்கொள்வது..?

    ReplyDelete
  43. //பிறர் சொல்லும் நல்லவைகளை, அவை வேறு நல்ல நூல்களிலிருந்து எடுத்துக் கையாளப்பட்டிருந்தாலும் அவற்றைப் பாராட்டுவது நமது கடமை. ///

    உண்மை, அந்த நூல்களுக்கு நன்றி சொல்லாமல் இருப்பதை தான் சுட்டப்பட்டதே தவிர காப்பி அடித்ததாக சொல்லப்படவே இல்லை

    ReplyDelete
  44. பெருமதிப்பிற்குரிய
    தஞ்சாவூரர் ஐயாவிற்கு வணக்கங்கள்.

    அடியவனது முதல் தொகுப்பிலேயே ஏற்பட்ட விமரிசனத்தால் இனி இந்த எழுத்து வேலையே வேண்டாம் என சோர்ந்து போயிருந்தேன் ..

    தங்களது பின் ஊட்டத்தையும் தாங்கள் அளித்திருக்கும் ஊக்கத்தின் அடிப்படையிலும் நிச்சயம் இனியும் குருவருளாலும் திருவருளாலும் எழுதுவோம்,

    நன்றி ஐயா ...

    ReplyDelete
  45. ////"தேடுகிறேன்
    இன்னமும் கிலைடைக்கவில்லை..

    அவர்களுக்கு
    நான் மெத்த படித்த அறிவாலியாம்..
    இவர்களுக்கு
    படித்தவை போதாத பத்தாம் பசலியாம்..

    தேடுங்கள் கண்டைவீர்கள்
    என்றார் ஏசுபிரான்..

    அந்த அம்மாக்கு கிடைத்த 150 டாலர்
    அந்த பையனுக்கு மகிழ்சியை தந்தது..

    அடியேனுக்கு...

    Tuesday, March 08, 2011 9:22:00 Aம்///


    எட‌ப்பாடியாரின் ஆக்க‌த்திற்கு முன்ன‌ரே விசு ஐய‌ர் இட்ட‌ பின்னூட்ட‌ம் இது.

    என‌க்குப்புரிய‌வில்லை. யாருக்காவ‌து புரிந்தால் விள‌க்க‌ம் சொல்லுங்க‌ள்.
    விள‌க்க‌ம் ச‌ரியாகக் கொடுப்ப‌வ‌ர்க‌ளுக்குப் ப‌ரிசு உண்டு.

    இப்ப‌டிதான் ஏதா‌வ‌து புதிராக‌, புரியாம‌ல் சொல்லுவார்.யார் அவ‌ரை "அறிவாலி"என்கிறார்க‌ள்?(அறிவாலியா, அறிவிலியா?)
    யார் அவ‌ரைப் ப‌த்தாம் ப‌ச‌லி என்கிறார்க‌ள்?

    என‌க்குப் புத்திசாலித்த‌ன‌ம் இல்லை அவ‌ர் கூற‌ வ‌ருவ‌தைக் கிர‌ஹித்துக்கொள்ள‌. யாராவ‌து உத‌விக்கு வாருங்க‌ளேன்.


    5 வாக்கிய‌த்தில் 4 எழுத்துப்பிழை! இவ‌ர் சொல்லுகிறார் பார‌தி ஒரு த‌மிழ்க் க‌விஞ‌னே இல்லை என்று.எல்லா வாக்கிய‌ங்க‌ளும் முற்றுப் பெறாம‌ல்
    தொங்க‌லில் நிற்கின்ற‌ன‌. இவ‌ர் என்ன‌ சொன்னாலும் எல்லோரும் பொறுமை காக்க‌ வேண்டும் ஏனேனில் முக‌ம் தெரியாத‌ யாரோ அவ‌ரை "அறிவாலி" என்று சொல்லி விட்டார்க‌ளாம்!

    ReplyDelete
  46. ///// எடப்பாடி சிவம் ஒரு நல்ல துவக்கத்தைத் தந்திருக்கிறார். சைவ சித்தாந்தம் அவர் துறை என்றால்,அது குறித்து மேலும் விரிவாக எழுத அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது நமது தலையாய கடமை. தரையில் முளைக்கத் துவங்கும் சிறு செடிக்கு நீர் ஊற்றுவோம்.அதனைக் கிள்ளி எறிய முயல வேண்டாம். ஆசிரியரும் சரி, கே.எம்.ஆர். அவர்களும் சரி மற்றவர்களும் சரி, இந்தக் கருத்துக்கு மறுப்புச் சொல்ல மாட்டார்கள் என்பது என் கருத்து. பங்குபெறும் சிலரது பெயரில் எதற்குச் சாதி அடையாளம். வேண்டாமே.////

    அப்படியே வழிமொழிகிறேன்.....

    ReplyDelete
  47. "அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
    அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
    பொறிகளின்மீது தனியர சாணை,
    பொழுதெலாம் நினதுபே ரருளின்
    நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
    நிலைத்திடல் என்றிவை யருளாய்
    குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
    குலவிடு தனிப்பரம் பொருளே!"
    ----- மகாகவி சி.சுப்ரமணிய பாரதி...

    ReplyDelete
  48. "மனதி லுறுதி வேண்டும்,
    வாக்கினி லேயினிமை வேண்டும்;
    நினைவு நல்லது வேண்டும்,
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
    கனவு மெய்ப்பட வேண்டும்,
    கைவசமாவது விரைவில் வேண்டும்;
    தனமும் இன்பமும் வேண்டும்,
    தரணியிலே பெருமை வேண்டும்.
    கண் திறந்திட வேண்டும்,
    காரியத்தி லுறுதி வேண்டும்;
    பெண் விடுதலை வேண்டும்,
    பெரிய கடவுள் காக்க வேண்டும்,
    மண் பயனுற வேண்டும்,
    வானகமிங்கு தென்பட வேண்டும்;
    உண்மை நின்றிட வேண்டும்.
    ஓம் ஓம் ஓம் ஓம்."
    ----- மகாகவி சி.சுப்ரமணிய பாரதி...

    ReplyDelete
  49. "என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
    எத்தனை மேன்மைகளோ!
    தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
    சத்திய மாகுமென்றே
    முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
    முற்றுமுணர்ந்த பின்னும்
    தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
    தாழ்வுற்று நிற்போமோ?"
    ----- மகாகவி சி.சுப்ரமணிய பாரதி...

    ReplyDelete
  50. " உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
    உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!
    தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
    சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே!"

    "வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
    வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
    தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
    சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே!"

    "போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
    போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
    நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
    நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே!"

    "தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
    சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
    அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
    அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!"

    ----- மகாகவி சி.சுப்ரமணிய பாரதி...

    ReplyDelete
  51. ஆகா இறைவன் கருணையே வடிவானவர் ...

    என் நெஞ்சத் துயர் - இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத அவனுக்கும் புரிந்திருக்கிறது ,,
    ஆம் ,,, அடியவனுக்கும் இந்த வகுப்பறைக்கும் சமீபமாய் ( 3 மாதங்களாய் தான் தொடர்பு )

    இன்னும் வகுப்பறையை முழுமையாகப் புரிந்துகொண்டேனா என்பது கூட தெரியாத நிலையில் புதியவனாகிய என்னை ஒரு அன்பர் இப்படி விளாசுகிறாரே - இறைவா வகுப்பறையின் மூத்த மாணவர்கள் யாருமே நீதி சொல்லமாட்டார்களா என ஏங்கினேன் ,,

    வாத்தியாரும் மௌனம் சாதிக்கிறாரே என வருந்தினேன் ,,,

    சரி வாத்தியார் எல்லோருக்கும் பொதுவானவர் - நடுநிலை வேண்டும்
    என தேறினேன் ...

    வகுப்பறை சகோதரி உமாவோடு தனி மின்னஞ்சலில் கலங்கினேன் ...

    இனி இந்த எழுத்தே வேண்டாம் என
    பிணங்கினேன்


    ஆனால் எல்லோர் சிந்தையிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும்
    இறைவன்

    திருவாளர்கள் ஆலாசியம் மற்றும்
    கே.எம்.ஆர் - ஆகியோரின் வாக்கிலே வெளிப்பட்டிருக்கிறான்...

    ஒரே கருத்துக்களை பலரும் சொல்ல முடியும் என்ற மெய்ஞ்ஞானத்தின் திறவுகோலாக இந்த பின் ஊட்டம் காட்சிதருகிறது ,,,

    ஆகா அதுவும் அன்பர் ஆலாசியம் அவர்களின் மகாகவியின் கூற்றுகளை படித்தபோது கண்களில் நீர் மல்கியது,,

    "தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
    சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
    அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
    அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!"

    ஆலாசியம் அவர்களின் அறிவு நுட்பம் வியக்க வைக்கிறது ...

    நமது வார்த்தைகள் கூட வேண்டாம் என அவர் மகாகவியின் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தது என்னே அருமை ?

    தலைசாய்க்கிறேன் ஆலாசியம் அவர்களே ...

    உண்மை உணர்த்திய kmr. கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  52. ///"தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
    சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே!"///

    மஹா‌க‌வியின் இந்த‌ப் பாட‌லின் ச‌ர‌ண‌ங்க‌ளை ம‌ட்டும் கொடுத்துள்ளீர்க‌ள் ஹாலாஸ்ய‌ம்ஜி!ப‌ல்லவியும் அற்புதமானதல்லவா?

    "பகைவனுக்கருள்வாய்-நன்னெஞ்சே
    பகைவனுக்கருள்வாய்!

    புகை நடுவினில் தீயிருப்பதை
    பூமியில் கண்டோமே-நன்னெஞ்சே
    பூமியில் கண்டோமே!
    ப‌கை ந‌டுவினில் அன்புருவான‌ ந‌ம் ப‌ர‌ம‌ன்
    வாழ்கின்றான்-ந‌ன்னெஞ்சே
    ப‌ர‌ம‌ன் வாழ்கின்றான்"


    "அன்புருவான‌ ந‌ம் ப‌ர‌மன்!" என்ன‌ அற்புத‌மான‌ சொல்லாட்சி!!!


    "அன்பும் சிவ‌மும் இரெண்டென்ப‌ர் அறிவிலார்
    அன்பும் சிவ‌மும் ஒன்றென்ப‌து அறிகிலார்
    அன்பும் சிவ‌மும் ஒன்றென்ப‌து அறிந்த‌பின்
    அன்பே சிவ‌மாய் அம‌ர்ந்திருந்தாரே!"....திருமூல‌ர்


    சிறுக‌ச் சிறுக‌ பார‌தியின் பாட‌ல்க‌ளை வ‌குப்ப‌றையில் கொடுத்து வ‌ரும் ந‌ண்ப‌ர் ஹாலாஸ்ய‌ம்ஜியின் த‌மிழ்த்தொண்டு மேலும் மேலும் சிற‌க்க‌ அன்புருவான‌ ந‌ம் ப‌ர‌ம‌னை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  53. /// சிறுக‌ச் சிறுக‌ பார‌தியின் பாட‌ல்க‌ளை வ‌குப்ப‌றையில் கொடுத்து வ‌ரும் ந‌ண்ப‌ர் ஹாலாஸ்ய‌ம் ஜி - யின் த‌மிழ்த்தொண்டு மேலும் மேலும் சிற‌க்க‌ அன்புருவான‌ ந‌ம் ப‌ர‌ம‌னை வேண்டுகிறேன்.///

    கனிந்த அன்பிற்கு நன்றிகள் சார்.....

    ReplyDelete
  54. பொய் சொல்லக் கூடாது பாப்பா என்றும்
    புறஞ்சொல்லக் கூடாது பாப்பா..

    தெய்வம் நமக்குத் துணை பாப்பா ஒரு
    தீங்கு வர மாட்டாது பாப்பா..

    பாதகஞ் செய்பவரை கண்டால் நாம்
    பயங்கொள்ளல் ஆகாது பாப்பா..

    மோதி மிதித்து விடு பாப்பா அவர்
    முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
    -மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

    ReplyDelete
  55. "துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
    சோர்ந்துவிட லாகாது பாப்பா!
    அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
    அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!"

    "நிகரென்று கொட்டு முரசே! - இந்த
    நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
    தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச்
    சாதி வகுப்பினை யெல்லாம்."

    "அன்பென்று கொட்டு முரசே! - அதில்
    ஆக்கமுண் டாமென்று கொட்டு;
    துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ்
    சூதுப் பிரிவுகள் போனால்."

    "அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்
    அத்தனைப் பேரும் நிகராம்.
    இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
    யாவரும் ஒன்றென்று கொண்டால்"

    --- மஹாகவி சி.சுப்ரமணிய பாரதி...

    ReplyDelete
  56. அறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட
    மட்டிலே மானிடர் மாண்பெற லாகார்
    அறமது தலைப்ப நெஞ்சகம் காட்டி
    வாட்குத் தேற்று மாய்பவர் பெரியோர்;
    அவரே மெய்மையோர்; முத்தரும் அவரே;"

    --- மஹாகவி சி.சுப்ரமணிய பாரதி...

    ReplyDelete
  57. அன்பு நண்பர் ஆலாசியம் அவர்களே! கே.எம்.ஆர்.அவர்களே! மூங்கிலை வளைத்து விடலாம். கற்றூணை வளைக்க முடியுமா? மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் எண்ணம் இருக்குமானால் விடாப்பிடியாகத் தான் கொண்டதே கோலம், கண்டதே காட்சி என்று இருப்பார்களா? மகாகவி பாரதியின் பாடல்களை எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களுக்குச் சாதகமாக எடுத்துக் கையாளமுடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் "ஆழ்ந்திருக்கும் கவி உளம்" கண்டவர்கள் அந்த சொற்றொடர்களை எங்கு எப்படி அந்த மகாகவி உபயோகித்திருக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டுமல்லவா? நீங்கள் ஏராளமான பாரதி பாடல்களை எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்; நல்ல எண்ணத்தோடு. அவை அதே நோக்கத்தோடு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனும் போது, தயைகூர்ந்து நீங்களும் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். அவரவருக்கு சரி என்று தோன்றுவதை அவரவர்கள் மனச்சாட்சிக்குத் தக்கபடி செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுங்கள். நான் எப்போதாவது, யாருக்காவது தவறிப்போய் மனம் வேதனைப்படும்படி செய்துவிட்டாலோ, அல்லது அதனை யாராவது சுட்டிக் காட்டிவிட்டாலோ, உடனடியாக அதற்காக வருந்தவே செய்வேனே தவிர, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்க மாட்டேன். நண்பர்களே! உங்கள் நேரத்தை ஆக்க பூர்வமாக வழக்கம்போல் செய்து வாருங்கள். உலகில் யாரையும் யாரும் மாற்றவோ, திறுத்தவோ முடியாது. சரிதானே!

    ReplyDelete
  58. "கோட்ஸேயின் வாக்குமூலம்" என்ற ஆக்கத்திலும் தன் பின்னூட்டத்தில்
    'கசாப்புக் கடை ஆடுகள்' என்கிறார்.
    ஆடுக‌ள் மீது என்ன‌தான் க‌ரிச‌ன‌மோ?!

    மூன்று வித்தியாசமான கருத்துக்களைச் சொல்லி உள்ளார்.

    1. பாரதி தமிழ்க் கவிஞனே இல்லை.
    2. விவேகான‌ந்த‌ர் ஆன்மீக‌ப் புர‌ட்சி செய்ய‌வில்லை.
    பெரியாரைப்போல ச‌முதாயப் புர‌ட்சிதான் செய்தார்.
    3. காந்திஜியை அஹிம்சாவாதி என்று சொல்ல‌க்கூடாது.(இதற்கு ஓஷோதான்
    அவ‌ருக்கு மூல‌ம்)


    ஐய‌ர் அவ‌ர்க‌ளே! இந்த‌ மூன்று க‌ருத்துக்க‌ளையும் ஏன் சொன்னீர்க‌ள் என்று ஆக்க‌மாக‌ எழுதுங்க‌ள். வேண்டுமானால் நானும், ஹாலாஸ்ய‌மும், எட‌ப்பாடி சிவ‌மும் பின்னூட்ட‌ம் இடாம‌ல் இருந்து விடுகிறோம்.உங்க‌ள் க‌ருத்துக்க‌ளுக்கான‌
    கார‌ண‌ம் அறிய‌ ஆவ‌லாக‌ உள்ளேன்.

    வ‌குப்ப‌றையில் எழுத‌ விருப்ப‌ம் இல்லையெனில் நீங்க‌ள் எப்போதும் விரும்புவ‌து போல் மின் அஞ்ச‌ல் அனுப்புங்க‌ள்.எதுவும் பேசாம‌ல் ம‌ட்டும் இருக்காதீர்க‌ள்.

    ReplyDelete
  59. தஞ்சைப் பெருவுடையார் கருத்தையும் + கிருஷ்ணன் ஐயா கருத்தையும் ஏற்றுப் போற்றுகிறேன் ..
    அன்பே சிவம்
    அருளே தவம்

    ReplyDelete
  60. ////அவரவருக்கு சரி என்று தோன்றுவதை அவரவர்கள் மனச்சாட்சிக்குத் தக்கபடி செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுங்கள்./////

    "வேண்டுமென விளக்கில்விழும் சிறுபூச்சி
    தனை யாவர் விளக்க வல்லார்?
    தூண்டுமரு ளால்யாமோர் விளக்கையவித்
    தால்அதுதான் சுற்றிச் சுற்றி
    மீண்டும் ஒரு விளக்கிற்போல் மாண்டுவிழும்
    அக்தொப்ப விருப்போ தேகித்
    தீண்டரிய புன்மையில் யாம்வீழ்ந்தால்
    அன்னாய் நீ செய்வ தென்னே?"

    தங்களின் மதியுரையை அப்படியே ஏற்கிறேன்... அப்படியே ஆகட்டும் ஐயா! நன்றி.

    ReplyDelete
  61. Excellent. My doubt has clarified. Often i will ask myself if I have to suffer based on my Karma/fate, what is the role of the God. Becasue i experienced so may struggles


    Thanks a lot.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com