மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.3.11

Astrological Lessons 50 பந்துகளில் 100 ஓட்டங்கள் எப்போது அடிப்பீர்கள்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrological Lessons 50 பந்துகளில் 100 ஓட்டங்கள் எப்போது அடிப்பீர்கள்?

அதாவது when you will score 100 runs in 50 balls?

வரையறுக்கப்பெற்ற பந்துவீச்சுக்கள் உள்ள போட்டிகளில் (Limited over cricket matches) ஒரு வீரர் நூறு ஓட்டங்கள் எடுப்பதே பெரிய சாதனை. அதுவும் 50 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுப்பது என்பது அசுர சாதனை.

கால நேரம் ஒத்துவரும்போது, வாழ்க்கையில் நாமும் அப்படிச் சாதிக்க முடியும்! மகாதிசை அதிபதி (Major Dasa Lord) மற்றும் உபப்பிரிவு அதிபதி (Sub-period Lord) ஆகிய இரண்டிற்கும் அதிபதியாக உள்ள கிரகங்கள் நன்மையளிக்கும் கிரகங்கள் எனும்போது, நீங்கள் என்று இல்லை குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட அது சாத்தியப்படும்.

இன்று புதன் திசையில் வியாழ புத்தியையும், வியாழ திசையில் புதன் புத்தியையும் பார்ப்போம்

இரண்டின் கால அளவு:
புதன் திசையில் வியாழ புத்தி = 17 X 16 = 272 = 27 மாதங்கள், 6 நாட்கள்
வியாழ திசையில் புதன் புத்தி = 16 X 17 = 272 = 27 மாதங்கள், 6 நாட்கள்

(சூத்திரப்படி பெருக்கி வந்த முதல் இரண்டு எண்களும் மாதங்களைக் குறிக்கும், கடையில் உள்ள எண்ணை மூன்றால் பெருக்க வருவது நாட்களாகும்)

புதன் திசையில் வியாழ புத்தி எப்படியிருக்கும்?. நெற்றியடியாக பாடலை எழுதிய மகான் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டார். என்ன சொல்லியிருக்கிறார்? புகழுள்ள மாதங்கள் என்று மொத்த தசாபுத்தியையும் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். பாடலைப் பாருங்கள்.

போமென்ற புதன் திசையின் வியாழபுத்தி
    புகழுள்ள மாதமது யிருபத்தேழு
நாமென்ற நாளதுவும் ஆறதாகும்
    நன்றாகவதின் பலனை நவிலக்கேளு
தாமென்ற சத்துரு நோய் பயமும் போகும்
    சகல சம்பத்துண்டாகும் தரணியில்வாழ்வான்
ஓமென்றயோகமது கைக்குள் சிக்கும்
   யோகமாம் புத்திரனும் இதிலுண்டாமே!


சரி, பதிலுக்கு வியாழ திசையில், புதன் புத்தி எப்படியிருக்கும்? அதற்கும் ஒரு வார்த்தையில் பாடலை எழுதிய மகான் சொல்லிவிட்டார். என்ன சொல்லியிருக்கிறார்? உண்மையுள்ள மாதங்கள் என்று மொத்த தசாபுத்தியையும் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். பாடலைப் பாருங்கள்.

உண்டாகும் வியாழ திசை புதனார் புத்தி
    உண்மையுள்ள மாதமது ஈரொன்பதாகும்
தென்றாகும் நாளதுவும் ஆறதாகும்
    தெவிட்டாத அதன் பலனைத் தென்புடனே கேளு
உண்டாகும் மலைபோலே பெருஞ்செல்வம்
    குறைவில்லா மாதர் மைந்தர் கட்டுடனே வாழ்வான்
சென்றாகும் திருவுடனே பட்டங்கிட்டும்
    திருவான லெட்சுமியும் சேர்வார் பாரே!


’உண்டாகும் மலைபோலே பெருஞ்செல்வம்’ என்று சொல்லியிருக்கிறாரே? எந்த மலை போல? குன்றக்குடி மலையைப் போலவா? அல்லது சுவாமி மலையைப் போலவா? அல்லது பழநி மலையைப் போலவா? அல்லது ஊட்டி மலையைப் போலவா? அல்லது மேற்குத் தொடர்ச்சி மலையைப் போலவா? அல்லது இமயமலையைப் போலவா?

எந்த மலையைப்போல இருந்தால் என்ன? மலையா முக்கியம்? செல்வம் வந்தால் போதாதா? வரும் செல்வத்தின் அளவு உங்கள் ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து மாறுபடும். வரும். ஆனால் அளவு மாறுபடும்.

யார் மிகப்பெரிய செல்வந்தன்? என்று கேட்டால் உங்களில் பலர் கீழ்க்கண்டவாறு பட்டியல் இடுவீர்கள்.

1. Carlos Slim Helu, Telecom, Mexico.
2 Bill Gates, Microsoft, U.S.
3 Warren Buffett, U.S
4 Mukesh Ambani, Petrochemicals, oil and gas. India.
5 Lakshmi Mittal, Steel, India.
6 Lawrence Ellison, Oracle, U.S.

எல்லோரும் அவர்களைப் போல ஆகிவிட்டால், யார் விவசாயம் செய்வது? யார் டாஸ்மாக்கில் வேலை செய்து, நமக்கு சரக்கு எடுத்துக் கொடுப்பது? யார் ரேசன் கடையில் இருந்து கிலோ ஒரு ரூபாய் அரிசியை விநியோகம் செய்வது? கட்டணக் கழிப்பறை வாசலில் உட்கார்ந்து கொண்டு உள்ளே உபாதையைக் கழிக்கச் செல்பவனிடம் அதிரடியாக ஒவ்வொரு முறையும் மூன்று ரூபாயை யார் பிடுங்குவது? கோவையில் இருந்து சென்னைக்கு ஏழு மணி நேரத்தில் செல்லும் துரந்தோ இரயிலை யார் ஓட்டிச் செல்வது? இந்தியாவில் இயங்கும் 22 லட்சம் லாரிகளை யார் ஓட்டுவது? கடும் குளிரில். இந்திய எல்லையில் பாது காப்புப் பணியை யார் செய்வது? இது போன்று லட்சக்கணக்கான கேள்விகளை எழுப்பலாம்.

இறைவன் கருணை மிக்கவர் எல்லாவற்றிற்கும் அவர் ஆட்களைக் கொடுத்திருக்கிறார். உலக இயக்கத்தை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்

பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு பணி உண்டு. அதைச் செய்யவைப்பதற்கு கர்மகாரகன் என்ற பெயரில் சனீஷ்வரனும் உண்டு.

ஆகவே உங்கள் கர்ம வினைப்படிதான் செல்வமும் வரும்!

யாருக்குக் கடனும் நோயும் இல்லையோ அவன்தான் உண்மையான செல்வந்தன்!!!

ஆகவே நமது கடனையும், நோய் இருந்தால் நோயையும் தீர்க்கக்கூடிய அளவிற்கு செல்வம் வந்தால் போதும்! அதை மனதில் கொள்க!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26 comments:

  1. பொற்காலம் என்பார்களே அது மாதிரியான கால கட்டம் இது.

    ReplyDelete
  2. யாருக்குக் கடனும் நோயும் இல்லையோ அவன்தான் உண்மையான செல்வந்தன்!!!

    உண்மைதான் ஐயா ,,,

    ReplyDelete
  3. ஆஹா! அற்புதம்.....
    இன்றைய பதிவில் தங்களின் தனித் தமிழ் மிளிர்கிறது....
    இன்னும் எத்தனை வார்த்தைகள் பிறமொழிகள் அனைத்திலும் புதிது புதிதாக வந்தாலும் வந்தாலும் அத்தனைக்கும் தனியானதொரு தமிழ் வார்த்தையை தர தமிழிடம் சரக்கு இருக்குது முறு(முருகு)க்கிருக்கிறது; அத்தனை சொல்லாட்சி கொண்ட நம் தமிழ் அமிழ்தினும் இனிது.....

    பாடம் வழக்கம் போல் அருமை என்றாலும் இன்றைய நடையில் பிரத்யோகமாக ஒரு பட்டை ஜொலிக்கிறது அது தானாக கூட அமைந்திருக்கலாம்!

    ReplyDelete
  4. /////எல்லோரும் அவர்களைப் போல ஆகிவிட்டால், யார் விவசாயம் செய்வது? யார் டாஸ்மாக்கில் வேலை செய்து, நமக்கு சரக்கு எடுத்துக் கொடுப்பது? யார் ரேசன் கடையில் இருந்து கிலோ ஒரு ரூபாய் அரிசியை விநியோகம் செய்வது? கட்டணக் கழிப்பறை வாசலில் உட்கார்ந்து கொண்டு உள்ளே உபாதையைக் கழிக்கச் செல்பவனிடம் அதிரடியாக ஒவ்வொரு முறையும் மூன்று ரூபாயை யார் பிடுங்குவது? கோவையில் இருந்து சென்னைக்கு ஏழு மணி நேரத்தில் செல்லும் துரந்தோ இரயிலை யார் ஓட்டிச் செல்வது? இந்தியாவில் இயங்கும் 22 லட்சம் லாரிகளை யார் ஓட்டுவது? கடும் குளிரில். இந்திய எல்லையில் பாது காப்புப் பணியை யார் செய்வது? இது போன்று லட்சக்கணக்கான கேள்விகளை எழுப்பலாம்.////

    கேள்வியின் நாயகரே! இதனுள் எத்தனை உணர்வுகள்.... வருத்தம்; பாராட்டு; ஆதங்கம்; எதார்த்தம் என்று... அற்புதம். நன்றி ஆசிரியரே!

    ReplyDelete
  5. அய்யா,

    சோதிடப் பாடங்களை இயல்பாய் புதுப்பார்வையுடன் எந்த சுயலாபமும் சுயநோக்கும் இல்லாமல் எல்லோருக்கும் ஞானம் கிட்டும் வகையில் உம்மைத்தவிர வேறு யாரால் கொடுக்க முடியும். சோதிடம் வெறும் உடல், உமது உரையே அதன் உயிர்.

    படிக்கப் படிக்க மகிழ்வு பெருகுகிறது.


    எல்லையற்ற கடவுளின் அருள் தங்களுக்கு கிட்டுவதாக.

    ReplyDelete
  6. ஜப்பான் தோழர் மைனர்
    நலம் தானா..

    அவர் பற்றிய செய்திகள் இருந்தால்
    வகுப்பறை தோழர்கள்
    பகிர்ந்து கொள்ளுங்களேன்

    ReplyDelete
  7. உண்மைநிலை அறியாத உதவாக்கரை களின் அக்கறை(கரை)யான குறுந்தகவல்கள் இங்கே பரவுகின்றன... அங்கும் உண்டாகின்? கவலை வேண்டாம். இந்தியா இன்னும் தொலைவே இங்கிருந்து...
    04:46 AM Mar 15, 2011
    SINGAPORE - It had to happen. Amid fears of a radioactive fallout from Japan, some people here have been receiving bogus and misleading SMSes.

    One hoax message making the rounds claimed that "radiation may hit the Philippines" and "Asian countries should take necessary precautions".

    Another bogus message warned people not to be caught in the rain as rain drops may contain radioactive particles that could burn or even cause cancer. That message also urged people to remain indoors and to swab iodine on their necks to prevent radiation contamination.

    Sales manager Leong Hoon Kee, 59, who received one such message, said he was so concerned that he forwarded it to friends and family, without verifying its accuracy.

    Experts warned that such messages could cause unnecessary fear and panic.

    Nuclear expert Dr Benjamin Sovacool said: "You would have to have a much more serious core meltdown. That would actually destroy the containment vessel, expose radioactive elements to the air. Now that's only happened once in all history of nuclear accidents."

    Dr Sovacool, an Assistant Professor at the Lee Kuan Yew School of Public Policy, said in a study of 66 nuclear accidents in the last 50 years, only one reactor experienced a complete meltdown, and that was Chernobyl in the Ukraine.

    In the case of Japan, it is more than likely that, if there is a Chernobyl-type of explosion, it would be contained relatively quickly. However, South Korea and some parts of China could be at risk.

    Singapore's National Environment Agency had said on Sunday that the Republic was unlikely to be affected, as the crisis is about 5,000km away. Joanne Chan

    ReplyDelete
  8. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    கடனும் நோயும் இல்லாதவனே செல்வந்தன் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைதான் அய்யா, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நமது
    முன்னோர் சொல்லி வைத்த பழமொழி அல்லவா. ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சுபகிரகம் இருந்தால் கடனும் நோயும் இல்லாத வாழ்வு அமையுமா?தயவு செய்து விளக்க வேண்டும் அய்யா. நன்றி, வணக்கம்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  9. //////ananth said...
    பொற்காலம் என்பார்களே அது மாதிரியான கால கட்டம் இது.////

    புத்திநாதனும், தனகாரகனும் மட்டை எடுத்து, அடித்து ஆடும் காலம் பொற்காலம்தான் ஆனந்த்! விறுவிறுப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவே இருக்காது!

    ReplyDelete
  10. //////எடப்பாடி சிவம் said...
    யாருக்குக் கடனும் நோயும் இல்லையோ அவன்தான் உண்மையான செல்வந்தன்!!!
    உண்மைதான் ஐயா ,,,/////

    நல்லது நன்றி இடைப்பாடியாரே!

    ReplyDelete
  11. /////Alasiam G said...
    ஆஹா! அற்புதம்.....
    இன்றைய பதிவில் தங்களின் தனித் தமிழ் மிளிர்கிறது....
    இன்னும் எத்தனை வார்த்தைகள் பிறமொழிகள் அனைத்திலும் புதிது புதிதாக வந்தாலும் வந்தாலும் அத்தனைக்கும் தனியானதொரு தமிழ் வார்த்தையை தர தமிழிடம் சரக்கு இருக்குது முறு(முருகு)க்கிருக்கிறது; அத்தனை சொல்லாட்சி கொண்ட நம் தமிழ் அமிழ்தினும் இனிது.....
    பாடம் வழக்கம் போல் அருமை என்றாலும் இன்றைய நடையில் பிரத்யோகமாக ஒரு பட்டை ஜொலிக்கிறது அது தானாக கூட அமைந்திருக்கலாம்!/////

    உங்களை (அதாவது உங்களைப் போன்ற மாணவக் கண்மணிகளை) நினைத்துக்கொண்டு எழுதும்போது, பட்டைகள் தானாக விழுந்து விடும்.நன்றி ஆலாசியம்

    ReplyDelete
  12. //////Alasiam G said...
    /////எல்லோரும் அவர்களைப் போல ஆகிவிட்டால், யார் விவசாயம் செய்வது? யார் டாஸ்மாக்கில் வேலை செய்து, நமக்கு சரக்கு எடுத்துக் கொடுப்பது? யார் ரேசன் கடையில் இருந்து கிலோ ஒரு ரூபாய் அரிசியை விநியோகம் செய்வது? கட்டணக் கழிப்பறை வாசலில் உட்கார்ந்து கொண்டு உள்ளே உபாதையைக் கழிக்கச் செல்பவனிடம் அதிரடியாக ஒவ்வொரு முறையும் மூன்று ரூபாயை யார் பிடுங்குவது? கோவையில் இருந்து சென்னைக்கு ஏழு மணி நேரத்தில் செல்லும் துரந்தோ இரயிலை யார் ஓட்டிச் செல்வது? இந்தியாவில் இயங்கும் 22 லட்சம் லாரிகளை யார் ஓட்டுவது? கடும் குளிரில். இந்திய எல்லையில் பாது காப்புப் பணியை யார் செய்வது? இது போன்று லட்சக்கணக்கான கேள்விகளை எழுப்பலாம்.////
    கேள்வியின் நாயகரே! இதனுள் எத்தனை உணர்வுகள்.... வருத்தம்; பாராட்டு; ஆதங்கம்; எதார்த்தம் என்று... அற்புதம். நன்றி ஆசிரியரே!//////

    ஆமாம். நாட்டை நினைக்கும்போது, கலவையான உணர்வுகள் ஏற்படுவது உண்மைதான். நன்றி ஆலாசியம்.

    ReplyDelete
  13. ////Govindasamy said...
    அய்யா,
    சோதிடப் பாடங்களை இயல்பாய் புதுப்பார்வையுடன் எந்த சுயலாபமும் சுயநோக்கும் இல்லாமல் எல்லோருக்கும் ஞானம் கிட்டும் வகையில் உம்மைத்தவிர வேறு யாரால் கொடுக்க முடியும். சோதிடம் வெறும் உடல், உமது உரையே அதன் உயிர்.
    படிக்கப் படிக்க மகிழ்வு பெருகுகிறது.
    எல்லையற்ற கடவுளின் அருள் தங்களுக்கு கிட்டுவதாக.//////

    உங்களின் எல்லையற்ற அன்பிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////iyer said...
    ஜப்பான் தோழர் மைனர்
    நலம் தானா..
    அவர் பற்றிய செய்திகள் இருந்தால்
    வகுப்பறை தோழர்கள்
    பகிர்ந்து கொள்ளுங்களேன்////

    மைனர் நன்றாக இருக்கிறார். ஏஜென்ஸி செய்திகள் அதை விவரமாகத் தெரிவித்துள்ளன. கவலை வேண்டாம்.

    ReplyDelete
  15. /////Alasiam G said...
    உண்மைநிலை அறியாத உதவாக்கரை களின் அக்கறை(கரை)யான குறுந்தகவல்கள் இங்கே பரவுகின்றன... அங்கும் உண்டாகின்? கவலை வேண்டாம். இந்தியா இன்னும் தொலைவே இங்கிருந்து...
    04:46 AM Mar 15, 2011
    SINGAPORE - It had to happen. Amid fears of a radioactive fallout from Japan, some people here have been receiving bogus and misleading SMSes.
    One hoax message making the rounds claimed that "radiation may hit the Philippines" and "Asian countries should take necessary precautions".
    Another bogus message warned people not to be caught in the rain as rain drops may contain radioactive particles that could burn or even cause cancer. That message also urged people to remain indoors and to swab iodine on their necks to prevent radiation contamination.
    Sales manager Leong Hoon Kee, 59, who received one such message, said he was so concerned that he forwarded it to friends and family, without verifying its accuracy
    Experts warned that such messages could cause unnecessary fear and panic.
    Nuclear expert Dr Benjamin Sovacool said: "You would have to have a much more serious core meltdown. That would actually destroy the containment vessel, expose radioactive elements to the air. Now that's only happened once in all history of nuclear accidents."
    Dr Sovacool, an Assistant Professor at the Lee Kuan Yew School of Public Policy, said in a study of 66 nuclear accidents in the last 50 years, only one reactor experienced a complete meltdown, and that was Chernobyl in the Ukraine.
    In the case of Japan, it is more than likely that, if there is a Chernobyl-type of explosion, it would be contained relatively quickly. However, South Korea and some parts of China could be at risk.
    Singapore's National Environment Agency had said on Sunday that the Republic was unlikely to be affected, as the crisis is about 5,000km away. Joanne Chan/////

    தகவலுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. /////ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    கடனும் நோயும் இல்லாதவனே செல்வந்தன் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைதான் அய்யா, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நமது
    முன்னோர் சொல்லி வைத்த பழமொழி அல்லவா. ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சுபகிரகம் இருந்தால் கடனும் நோயும் இல்லாத வாழ்வு அமையுமா?தயவு செய்து விளக்க வேண்டும் அய்யா. நன்றி, வணக்கம்.
    அன்புடன், அரசு.//////

    ஆறாம் வீட்டில் 30ற்கு மேற்பட்ட பரல்களும் அல்லது ஆறாம் அதிபதி தன்னுடைய சுயவர்கத்தில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடனும் இருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் வாழ்வு அமையும். பழைய பாடங்களில் நிறைய விளக்கங்கள் எழுதியுள்ளேன் சுவாமி!

    ReplyDelete
  17. நிச்சயமாக நலமாக இருப்பார் மைனர்வாள்.....
    கடவுள் (அவர் நம்புகிறாரோ இல்லையோ / நான் நம்புகிறேன்) அவரை வேறு எங்காவது அனுப்பி பாதுகாத்திருப்பார்...
    அதனால் தான் அவரும் வகுப்பறையில் பின்னூட்டம் போடாமல் இருக்கிறார்..... எனினும் நிச்சயம் ஓரிரு தினங்களில் வருவார் வகுப்பறை வருவார் என நம்புவோம்!

    ReplyDelete
  18. வணக்கம் சார் ,
    எனக்கு 2006 - 2008 வரை குரு திசை புதன் புத்தி , அருமையான காலம் தான் அது , அதற்க்கு முன்பும் சரி , இன்று வரையும் சரி மிகவும் மகிழ்ச்சியான காலம் அது என்றே சொல்லலாம் .
    பாடத்திற்கு நன்றி சார் .

    ReplyDelete
  19. எளிமையாக உள்ளது பாடம்!

    ReplyDelete
  20. வணக்காம் அய்யா,
    ஆகா மிகவும் அருமையான விள‌க்கம்,இப்படி பட்ட‌
    விசயங்களை புறிந்து கொள்ளாமல் வாழ்வில் முலு நிரைவு(ஞானம்)
    அடைய முடியாது. வாழ்க வளடன். நன்ரியுடன் அரிபாய்.

    ReplyDelete
  21. //iyer said...

    ஜப்பான் தோழர் மைனர்
    நலம் தானா..

    அவர் பற்றிய செய்திகள் இருந்தால்
    வகுப்பறை தோழர்கள்
    பகிர்ந்து கொள்ளுங்களேன்//

    11 ஆம் தேதி 5.51 மாலை எனக்கு மைனர்வாளிட்மிருந்து மின்னஞ்சல் வந்தது
    அவ்ரும் அவ்ர் மனைவியும் நலம் என்று சொன்னார்
    மற்றும் 12ந்தேதி காலையில் மின்னஞ்சல் வந்தது ஆனால் அணு உலைவெடிப்புதான் என்ன என்று தெரியவில்லை பாவம் ஜப்பானியர் மிகவும் நல்ல்வர்கள் நல்ல நாடு நல்ல்வங்களைத்தான் க்டவுள் சோதிகிறார். பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் அப்படின்னு கடவுள் ரொம்ப் சோதிக்கிறார்

    ReplyDelete
  22. ////இறைவன் கருணை மிக்கவர் எல்லாவற்றிற்கும் அவர் ஆட்களைக் கொடுத்திருக்கிறார். உலக இயக்கத்தை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்////
    மிகவும் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள்

    ReplyDelete
  23. ஜப்பான் அனர்த்தம் அறிந்ததும் த‌ம்பி மைனர் பற்றிய எண்ணம் முதலில் எழுந்தது. அய்யர் பின்னூட்டமிட்டு விசாரிக்க பரமசிவனார் அருளிய பதிலமுதம் மனதை வருடியது.நன்றி.

    ReplyDelete
  24. ஜப்பான் மைனர் குறித்த ஆதங்கத்தைச் சிலர் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒருவர் அவர் நலமாக இருக்கிறார் என்கிற நல்ல செய்தியையும் சொல்லியிருக்கிறார். எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமானால், மைனர் அவர்கள் அந்த நேரத்தில் இந்தியா வந்துவிட்டார் எனவும், அவர் இருந்த இடம் பாதிக்கப்பட்டிருக்கிறது, அவரது உடைமைகள் என்னவாயிற்றோ என்று அவருக்குக் கவலை உண்டு என்றும், அவரும் அவர் மனைவியாரும் நலம் என்ற செய்தி நிச்சயம் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  25. neenga nalamaa?
    how r u?
    naan nalla irukuren..

    me: unga piraarththanaip padiye sunaamikku rendu naalukku munaadi veru velaiyaa chennaikku vandhutten..
    native pakkamaa poyittathaale ungalukku/ classroom kku thakaval kodukka mudiyale..
    ore busy..innum en nanbarkalaith thodarbu kolla mudiyavillai..
    athanaal ungalaip polave naanum kooda tv/net seithikalaiththaan thodarbaakak kondullen..

    ok?

    me: enga pakuthi tsunami yaal paathippu illai..

    me: anaal earth quake mattum paathippu irukkiirathu..ithile ippo puthu sikkal..
    indha nuclear plant radiationthaan..
    athule enga area kooda maattuthu..
    thelivaa thakaval therinjappuramaa naane solren..naan inge irukkurathaale ippothaikku safe..
    ithuthaan metter..naan saappittaachu..

    me: thank god..
    andhak kathaiyai methuvaa ezhuthuren..
    En mel akkarai kondu visaariththa anbu ullangalukku en nenjaarndha nandri..

    MINORWALL

    ReplyDelete
  26. 'சம்பவம் நடக்குறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி கரெக்ட்டா அந்த இடத்துலேருந்து எஸ்கேப் ஆயிட்டீங்களே?'
    ன்னு நம்ம மாம்ஸ் கிண்டலடிச்சார்..ரெண்டு மூணு நாளா நலம் விசாரிச்சு வந்த அழைப்புகளுக்கு பதில் சொல்லும் போதுதான் கொஞ்சம் கொஞ்சமா நான் பாதுகாக்கப் பட்டிருக்கிறேன் என்பதையே உணர முடிந்தது..எங்கள் பகுதி sendai க்கும் tokyo க்கும் நடுவில் உள்ளது..புகுஷிமாவுக்கும் டோக்யோவுக்கும் நடுவில் உள்ளது..
    எனவே பிந்திய ரேடிஎஷன் தாக்கம் வழக்கத்துக்கு அதிகமாக 40 மடங்கு அதிகரித்து 1 .222 நானோசிஎவேர்த்ஸ் அளவில் இருந்ததாக ஊடகங்கள் மூலமாக அறிகிறேன்..
    செல்போன் இணைப்புகளில் பலவற்றைத் தொடர்பு கொள்ள முடியவில்லை..லேன்ட் லைன் இணைப்பு கிடைத்தது..
    பவர்காரணமாக எங்கள் கம்பெனி ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் இயங்கவில்லை என்று அறிந்தேன்..வெளிநாட்டினர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சொந்த நாட்டுக்கு பயணிப்பதாக செய்திகள் படிக்கும்போது ஜப்பானியரின் நிலை மனதுக்கு மிகவும் வேதனையைத் தருகிறது..சான்ரிக்கு என்ற பூகம்பம் /சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் தன் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த தன் மகனின் வீட்டை சுற்றி வந்து ஓலமிடும் வயதான பெற்றோர் போன்று பல காட்சிகள் மனதை உறைய வைக்கின்றன..
    தஞ்சாவூரார் சொல்லியிருப்பதுபோலே எனது உடைமைகள் இன்னும் அங்கேயே..லேப்டாப் உட்பட..நானும் இந்த மாத இறுதியில் திரும்பிச் செல்லும் எண்ணம்தான்..இந்த முறை சில காரணங்களுக்காக ஒன் வே யில் பயணித்திருந்தேன்..சுனாமிக்கு முன்தினம் சப்பானுக்குத் திரும்புவதற்கான டிக்கெட் முழுக்கட்டணமும் செலுத்தி வாங்கி வைத்திருக்கிறேன்..அதிகமில்லாவிடினும் அங்கே சிலமாதங்களுக்கு தேவையான பணம் என் அக்கவுன்ட்டிலே விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.... சுற்றத்தார் பார்வையில் தோன்றும் விஷயங்களைக் கருத்தில் கொண்டால் திரும்பப் போகவேண்டுமா என்ற அளவிலே கேள்விக்குறி தோன்றியிருக்கிறது..
    இன்றைக்கு இந்த அளவிலே விஷயங்கள் பரிமாறிக் கொண்டதிலே மகிழ்ச்சி..
    பார்க்கலாம்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com