மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.2.11

பிசாசு பிடித்துக்கொண்ட கதை!

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 பிசாசு பிடித்துக்கொண்ட கதை!

இன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணிவி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்
அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++=====
  
அம்மாவிற்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் (வேறு சில காரணங்களாலும்) என்னை பாட்டி வீட்டில் விட்டிருந்தார்கள்.  அம்மாவைப் பிரிந்து குழந்தை ரொம்ப ஏங்கிப் போய் விடுமோ என்ற  நினைப்பில் (மேலும் வீட்டின் முதல் குழந்தை என்ற காரணத்தாலும்) ரொம்பவே செல்லம்.

தாத்தா 93 வயது வரை வாழ்ந்தவர்.  கடைசி வரை ஒரு தலைவலி என்று கூட படுத்தது இல்லை.  ரொம்ப கட்டுக்கோப்புடன் இருப்பார்.  தஞ்சையில் உள்ள ஒரு கோவிலில் குருக்களாக இருந்தார்.  அவரின் தினசரி வாழ்க்கையில் எல்லாமே அந்தந்த நேரத்திற்கு பிறழாமல் நடக்கும்.

விடியற் காலையில் கிணற்று சகடை உருளும் சத்தமும், வாளியோடு தண்ணீரை எடுத்துத் தலையில் ஊற்றிக்கொள்ளும் சத்தமும் கேட்டால் மணி நாலரை என்று அர்த்தம்.  அதன்பின் சிரசாசனம். பின்னர் காப்பி குடித்துவிட்டு கோயிலுக்குப் போனால் காலை உணவு சாப்பிடும் நேரத்திற்குத்தான் வருவார்.  பாதி நாள் பாட்டிக்குத் தெரியாமல் பக்கத்தில் இருக்கும் செட்டியார் உணவகத்தில் இட்லி, தோசை சாப்பிட என்னையும் அழைத்துக்கொண்டு போவார்.

எதற்குமே பெரிதாக அலட்டிக்கொள்ளவோ / கவலைப்படவோ மாட்டார்.

பாட்டி அதற்கு நேரெதிர்.  எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டே ஆகவேண்டும்.  இல்லாவிடில் அந்த நாள் இனிய நாளாக இருக்காது.  மொத்தம் 6 குழந்தைகள்.  3  பெண்கள்.  அவர்களுக்கு கோயிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் எப்படி கல்யாணம் செய்து கொடுக்கப்போகிறோம் என்று தினம் விசாரப்பட்டு உருகுவார்.

தாத்தாவோ 'எல்லாத்தையும் காமாட்சி பாத்துப்பா'ன்னு சொல்லிட்டு போயிண்டே இருப்பார்.  இந்த சரணாகதித் தத்துவம் இன்றுவரை எனக்குக் கைவராத ஒன்று.  எதோ அரைகுறையாகத்தான் கடைபிடிக்கிறேன்.  ஆனால் மற்ற விஷயங்களில் அவர்தான் எனக்கு குரு.

முதன்முதலில் என் விரல் பிடித்து அ, ஆ சொல்லிக்கொடுத்தது அவர்தான்.  பள்ளியில் சேருமுன்பே அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொண்டாகிவிட்டது. 

ஜோதிடம் நன்கு தெரிந்தவர்.  ஒரு மொத்த சைஸ் புத்தகம் அவரிடம் இருக்கும்.  அதை அடிக்கடி படித்துக்கொண்டிருப்பார்.  ஜோதிடம் பார்க்க யாராவது வந்துகொண்டேயிருப்பார்கள்.

பதினோரு வயதில் அம்மா வீட்டிற்குப் போய்விட்டேன்.  ஆனாலும் ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு ஊருக்குப் போய்விடுவோம்.

எனக்கு பனிரெண்டு வயது வரை ஜோதிடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது.  ஒருமுறை எதிர்த்த வீட்டில் இருந்த ஒரு அம்மா தன் பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து எப்போது கல்யாணம் ஆகும் என்று சொல்லுமாறு கேட்டார்கள்.  அந்தப் பெண்ணிற்கு சொந்தத்தில் பார்த்த எல்லா வரன்களும் தட்டிப்போய்விட்ட நிலையில் மிகுந்த குழப்பத்தில் இருந்தார்கள்.  அவர்களுக்கு அடுத்தடுத்து ஐந்து பெண்கள் வேறு.  தாத்தா பார்த்துவிட்டு ஒரு தேதியைச் சொல்லி அதற்குள் நிச்சயம் ஆகிவிடும், அதுவும் சொந்தத்திலேயே என்று சொன்னதை அவர்கள் அவ்வளவாக நம்பவில்லை என்பதை அவர்கள் முகமே காட்டியது.  சொந்தத்தில் பார்த்த எல்லாரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்று இழுத்தார்கள்.  அதற்கு அவர் அப்படி வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனவர்களிலேயே ஒருவர் திரும்ப வந்து கேட்பார் என்று ஆணித்தரமாகக் கூறினார்.

பக்கத்தில் உட்கார்ந்து பராக்கு பார்த்துக்கொண்டிருந்த நானும் அவர் சொன்ன தேதியை மனதில் குறித்துக்கொண்டேன்.  அவர் சொன்னபடியே நடந்ததில் அந்த அம்மாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.  எனக்கும் அப்போதிலிருந்துதான் ஜோதிடத்தின் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.

இது மாதிரி அவர் சொல்லி நடந்த விஷயங்கள் நிறைய.  பணத்தின் மேல் எப்போதுமே அவருக்கு ஈர்ப்பு இருந்ததில்லை.  பரிகாரம் என்று யாருக்கும் எதுவும் சொல்லி நான் கேட்டதே இல்லை.  விதிப்படிதான் எல்லாம் நடக்கும், அதை நம்மால் மாற்ற முடியாது என்பதில் அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்தார்.  தன் மகன்கள், மகள்கள் என்று யாராவது ஏதாவது கஷ்டம் என்று ஆரம்பித்தால் கூட 'கோயில்ல போய் பதினோரு பிரதட்சணம் பண்ணிட்டு வா, அவ பார்த்துப்பா' என்பதுதான் அவர் சொன்ன அதிகபட்ச பரிகாரம்.

வீட்டு உறுப்பினர்கள் அனைவரின் ஜாதகமும் அவருக்கு அத்துப்படி.  எல்லாருடைய வாழ்க்கையைப்பற்றியும் கணித்துச் சொல்லியிருக்கிறார்.  என் வாழ்க்கையிலும் அவர் கணித்த விஷயங்கள் இதுவரை நடந்தே இருக்கின்றன.  ஆனாலும் அவரிடம் உட்கார்ந்து உருப்படியாக எதையும் கேட்டுக்கொள்ளவில்லையே என்ற வருத்தம் இன்றுவரை இருக்கிறது.  தன் மற்றும் பாட்டியின் முடிவைப்பற்றி அவர் கணித்ததும் சரியாகவே இருந்தது.

அந்த நிகழ்ச்சிக்குப்பின் தாத்தாவே நொந்து போகும் அளவிற்குக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.  என்ன மாதிரிக்கேள்விகள்னா, 'அடுத்த திங்கள் எங்க அறிவியல் ஆசிரியை வாரத்தேர்வு வெச்சிருக்கா, அது நடக்குமா, நடக்காதா', 'கணக்கிலே நூறு மதிப்பெண் எடுப்பேனா, மாட்டேனா',  'விடுமுறையில் செய்ய வேண்டிய வீட்டுப்பாடம் எதுவுமே செய்யலியே, அதுக்கு எனக்கு திட்டு விழுமா, விழாதா, ஏதாவது அதிசயம் நடந்து (அதாவது ஆசிரியைக்கு உடல்நிலை சரியில்லாம போய் அவங்க வகுப்புக்கு வராம இருந்து) நான் அடி வாங்காம தப்பிச்சிடுவேனா', 'கேள்வித்தாள் ஈஸியா இருக்குமா, கஷ்டமா இருக்குமா'ன்னு எப்ப பார்த்தாலும் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தேன்.  இதுல காமெடி என்னன்னா இந்தக் கேள்விகளை நான் கேட்டால் அதை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு ஏதோ கணக்கு பண்ணி பதில் சொல்வார்.  இதே என் தம்பி, தங்கை யாராவது கேட்டால் செம திட்டு விழும், இப்படி வெட்டியா கேள்வி கேட்டு வீணடிக்கற நேரத்துல போய் உட்கார்ந்து படின்னு. 

(இப்பவும்  என் சித்தியை கேள்வி கேட்டு நச்சரித்துக் கொண்டு தானிருக் கிறேன்.  அவர்களும் ரொம்ப பொறுமையாக பதில் சொல்வார்கள்.  கேள்வி எந்த விஷயத்தைப் பற்றியதாகவும் இருக்கும்.  ஏனென்றால் என் அம்மா வைவிட நான் மிகவும் நெருக்கமாக உணர்வது அவர்களைத்தான்).

ஒரு இரண்டு வருடம் இப்படிக் கேள்விகளாகவே கேட்டுக்கொண்டிருந்த நான் 'எனக்கு ஜோதிடம் கற்றுத்தா' என்று தாத்தாவைப் பிடுங்க ஆரம்பித்தேன்.  முதலில் ஓரை பார்க்க கத்துக்கோன்னு பஞ்சாங்கம் இல்லாமலே பார்க்கக் கற்றுத் தந்தார்கள்.  அது ஒன்றுதான் நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது.  அதன்பின் ஆர்வம் இருந்தாலும், இருவரும் இருக்குமிடம் வேறு, அப்படியே ஊருக்குப்போனாலும் விளையாடவும், ஊர் சுற்றவுமே நேரம் சரியாக இருந்தது போன்ற காரணங்களால் அப்படியே நின்றுவிட்டது.  ஆனாலும் கிடைத்த புத்தகங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.  இருந்தும் கதைப்புத்தகங்களை ஆழ்ந்து ஒன்றிப்போய் படித்த அளவு இவற்றை ஆழ்ந்து படிக்காததால் மூளையில் ஏறவில்லை.  அஷ்டவர்க்கம் மட்டும் ஒரு புத்தகத்தை ரொம்ப ஆழ்ந்து படித்து கற்றுக்கொண்டேன்.  அதன்பின் திருமணம், பொறுப்பு எல்லாம் சேர்ந்து படிப்பதும் தடைபட்டது.

அலுவலகத்தில் ஒரு நாள் கூகிளில் ஜோதிடம் என்று ஏதோ அடித்து தேடிக்கொண்டிருந்தபோது வாத்தியாரின் வலைப்பூவைக் கண்டுபிடித்தேன்.  அன்றைக்கு இத்தனை நாளாக விட்டிருந்த ஜோதிடப்பிசாசு மீண்டும் பிடித்துக்கொள்ள இப்போது நிறைய ஜாதகங்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் அளவிற்குக்கொண்டு விட்டிருக்கிறது.

நன்றி,
எஸ்.உமா,
தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வரம் கேக்கிறதிலே கவனமா இருக்கோணும்டா ராசா!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சலில் வந்தது. உபரியாக அதை இன்றைய வாரமலரில் கொடுத்து இருக்கிறேன். உரிக்காமல் அப்படியே கொடுத்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
Careful What You Wish For

A man walks into a restaurant with a full-grown ostrich behind him, and as he sits down, the waitress comes over and asks for their order.

The man says, “I’ll have a hamburger, fries and a coke,” and turns to the ostrich. “What’s yours?” “I’ll have the same,” says the ostrich.

A short time later the waitress returns with the order. “That will be $6.40 please,” and the man reaches into his pocket and pulls out exact change for payment.

The next day, the man and the ostrich come again and the man says, “I’ll have a hamburger, fries and a coke,” and the ostrich says, “I’ll have the same.” Once again the man reaches into his pocket and pays with exact change.

This becomes a routine until late one evening, the two enter again. “The usual?” asks the waitress. “No, this is Friday night, so I will have a steak, baked potato and salad,” says the man. “Same for me,” says the ostrich.

A short time later the waitress comes with the order and says, “That will be $12.62.” Once again the man pulls exact change out of his pocket and places it on the table.

The waitress can’t hold back her curiosity any longer.

“Excuse me, sir. How do you manage to always come up with the exact change out of your pocket every time?”

“Well,” says the man, “several years ago I was cleaning the attic and I found an old lamp. When I rubbed it a Genie appeared and offered me two wishes. My first wish was that if I ever had to pay for anything, just put my hand in my pocket, and the right amount of money would always be there.”

“That’s brilliant!” says the waitress. “Most people would wish for a million dollars or something, but you’ll always be as rich as you want for as long as you live!”

“That’s right! Whether it’s a gallon of milk or a Rolls Royce, the exact money is always there,” says the man.

The waitress asks, “One other thing, sir, what’s with the ostrich?”

The man sighs, pauses, and answers, “My second wish was for a tall chick with long legs who agrees with everything I say!”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

23 comments:

  1. என் ஆக்கத்தை வெளியிட்டதற்கு நன்றி சார். ஜோக் சூப்பர்.

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயா வணக்கம்,

    ஆகா சொல்லவே இல்லையே பாச மலர் சகோதரியே!

    தம்பியின் பள்ளி கூட நாட்களில் கணிதம் மற்றும் அறிவியல் என்பது " திருநெல்வேலி ", க்கே பெயர் போன " அல்வாவை", சாப்பிடுவது மாதிரியாக

    ஆனாலும் பாருங்கோ இந்த
    " வெள்ள காரனுக", தாய் மொழியான " ஆங்கிலத்தை " கண்டாலே மூன்றாவது வகுப்பில் இருந்து இன்று வரைக்கும் அலர்ஜி தான்.

    அதனிலும் " திரு, சுடலை முத்து தேவர் ", என்று கூறப்படும்
    " மூணு பி ", வாத்தியாரை கண்டாலே பயம் தான் என்னில் இருந்து சக தோழருக்கும் .

    ஆனால் இன்று கண்கலங்குவது உண்டு, இளம் வயதில் ஒரு கிராமத்தில் கிடைத்த ஒரு

    " வெள்ளைகாரனிடம்",

    நம்முடைய ஆங்கில அறிவீர்க்கு நன்றாக அடித்தளம் அமைத்து கொள்ளாமல் போகி விட்டுட்டோமே என்று.

    ஆனாலும் ஆங்கில அறிவை
    " வெள்ள காரன் ", அளவீர்க்கு
    அடையாமல் விடப்போவது இல்லை என்பது " சதை ",
    " புத்தி "," ரத்தம்", என அனைதிலையும் ஊறி போன ஒன்று.

    சரி எப்படி ஐந்திணை தூரம் முதுகலை பட்டம் வாங்கினே என்று தானே அக்கா கேட்கின்றீர்கள் எல்லாம் மனப்பாடம் செயும் குறுக்கு புத்தியால் தான் இனத்தை தூரம் வந்தது

    கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை புரிந்து படித்து போல ஆங்கிலத்தையும் படித்து இருந்தால் தம்பி கூட இந்தியாவின் பொருளாதாரத்தில் 5 % வரி செலுத்தும் அளவீர்க்கு உயர்ந்த
    " திரு பாய் அம்பானி " போல உயர்த்து இருப்பேன்,

    " அன்னை பரா சக்தி ", யை தவிர கல்விக்கு அதிபதியான
    " சரஸ்வதியும்", செல்வதீர்க்கு அதிபதியான " லக்ஷ்மியும்" யும் பாதியிலே எம்மை விட்டு போனதினால் இன்று ஒரு சராசரி மனித வாழ்க்கையை அமைத்து கொள்ளவே இத்தனை காலம் ஆகிவிட்டது அக்கா.

    இது வரை வாந்த வாழ்கையில் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்த

    " இளம் பள்ளி கூட நாட்களை ",

    " ஞாபகதீர்க்கு ",

    கொண்டு வந்த அக்காவிற்கு நன்றி .

    ReplyDelete
  3. ஐயா!

    மிகவும் அசலத்தான ஆக்கதீர்க்கு நன்றி

    ReplyDelete
  4. Can someone give me the link or date of Aiyya's post on Horai(s). Happened to lose the hard copy I used for the past 1 & half years.

    Reg,
    Sara

    ReplyDelete
  5. டெல்லி திருமதி உமா எழுதியிருப்பது என்னவோ மிகச் சாதாரணமான உறவுப் பின்னலின் பாசப் பிணைப்பு பற்றியதுதான் என்றாலும், அதனைச் சொன்ன முறை மிகச் சுவையாக ஒரு கதையைப் படிப்பது போலத்தான் இருந்தது. சில இடங்களில் அந்தச் சொற்கோவை மிக அருமை. மிக நல்ல எழுத்தாளர்தான், சந்தேகமேயில்லை. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி. பொதுவாகவே எந்த ஒரு பேத்திக்கும் தாத்தாவிடம்தான் அதிக உரிமை, சலுகை எல்லாம். என் பேத்தியிடமும் இந்த நிலைமையை நான் கண்டு வருகிறேன். அம்மா அப்பாவிடம் ஏற்படும் மனத்தாங்கல்கள்கூட தாத்தாவிடம் சொல்லி ஆற்றிக் கொள்வது குழந்தைகளின் இயல்பு. அதிலும் தாத்தா சற்று அதிகம் அக்கறையும், பாசமும் கொண்டவராக இருந்தால் கேட்கவே வேண்டாம். என் பேத்தி பொறியியல் முடித்து இன்ஃபோசிஸில் பணிக்குச் சென்ற பிறகும் தினமும் இரு முறை என்னை தொலைபேசியில் அழைத்து அன்றாட நிகழ்வுகளைச் சொல்வது என்பது வழக்கமாகிவிட்டது. மனித வாழ்வில் இதுபோன்ற உறவு மற்றும் பாசப் பிணைப்புகள் ஜீவன் உள்ளதாக அமைகிறது. திருமதி உமாவுக்கும் அதுபோன்ற ஒரு பாசமுள்ள தாத்தா அமைந்தது அவரது பாக்கியமே!

    ReplyDelete
  6. sir i wish to get a jenie wish like this.

    ReplyDelete
  7. FROM BROWSING CENTRE
    -------------------------
    காமாட்சிஅம்மன் கோவில் ஸ்தானிகரான தாத்தாவின் பெய்ரைச் சொல்லி இருக்கலாம்தானே உமாஜி!ஆக்கம் நன்றாக உள்ளது. இயல்பான நடை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அன்புள்ளம் கொண்ட வாத்தியரே,
    அடுத்தவர்களின் பதிவையும்
    தங்களின் வலை பதிவில் ஏற்றி சிறப்பு
    செய்கிறீர்கள்
    உமாவின் பதிவு நன்றாக இருந்தது
    நான் சின்னகுழந்தை ஆக இருந்த பொழுது எனது மாமா தனது ஆயுள் நிறைவை ஜோதிடத்தின் முலம் கணித்து இருந்தார் அவர் கணித்தபடியெ இயற்கை எய்தினார்

    ReplyDelete
  9. அன்புடன் வணகம் திருமதி உமா.
    உங்களுக்கும் -தாதாவுக்குமிருந்த அந்த பாசமான உறவு !!"அட நமக்கு இப்பிடி இல்லையே என ""ஏங்க"" வைத்தது !!நன்றி !!!எனக்கு ரெண்டு தாத்தாவும் இல்லை. ஆனால் ரெண்டு பாட்டியும் இருந்தார்கள் அப்பா கோபமா!! பாட்டி மடில தஞ்சம்..... அவர்கள் அம்மா முன்னர் கோபம் காணமல் போகும் !!!!!!!"""தாத்தா பார்த்து விட்டு ஒரு தேதி சொல்லி அதற்குள் திருமணம் ஆகிவிடும் அதுவும் சொந்தத்தில்""அவர் சொன்னபடி நடந்ததில் அந்தம்ம்மாவுக்கு சந்தோசம் """"இந்த சந்தோசம் எனக்கு தெரிந்த நண்பரின் தம்பி முகத்தில் பார்க்க ஆசை... வாத்தியார். மேலும் வகுப்பறை சக மாணவர்கள்.. அனுமதிக்க வேண்டும்..!!விஷயம் இதுதான்!!எனது உறவு மேலும் நண்பரின் தம்பிக்கு திருமணம் ஆனா சில மாதங்களில் அவர் wife தீ வைத்து இறந்து போனாள் பெரிய சண்டை ஒன்றும் இல்லை.. !!.. 45 ..வயது ஆகிறது யாரிடம் போய் ஜாதகம் கேட்டாலும் இவருக்கு"' எத்தனை மனைவி வந்தாலும் அறுக்க மனைவி இருக்காது என்கிறார்கள் ""நீங்கள் அனுமதித்தால் அவரின் ஜாதக அமைப்பு தருகிறேன்.. ஒரு தீர்வு சொல்லுங்களேன்.. அவருக்கு ஒரு பெண் துணை வேண்டும்.. !!அடியேன் ஒரு யோசனை வைத்திருக்கிறேன் " பின்னர் கூறுகிறேன்...

    ReplyDelete
  10. ///////////////விடியற் காலையில் கிணற்று சகடை உருளும் சத்தமும், வாளியோடு தண்ணீரை எடுத்துத் தலையில் ஊற்றிக்கொள்ளும் சத்தமும் கேட்டால்
    மணி நாலரை என்று அர்த்தம். /////////////////////

    ////////////////
    பாட்டி அதற்கு நேரெதிர். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிடில் அந்த நாள் இனிய நாளாக இருக்காது.////////////////////
    இதுதான் writing flow ... ச்சும்மா...பெண் சிங்கம்னா சிங்கம்தான் போங்க..

    ReplyDelete
  11. உமா.. உங்களின் மலரும் நினைவுகள் ஆக்கம், அருமை.. அதிலும் இன்னும் கொஞ்சம் நிறைய தெரிந்து கொண்டிருக்கலாம் என்று மேவிடும் எண்ணம்.. உங்களின் தாத்தா இல்லையே என்ற வருத்தப் பிரதிபளிப்பென்று நம்புகிறேன்... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  12. ////The man sighs, pauses, and answers, “My second wish was for a tall chick with long legs who agrees with everything I say!”////

    இது அருமை.... வழக்கமாக லக்னத்திற்கு எதிர்வீடு எதிர் மாறாக அமையும் என்பதை.....

    இப்படி மாற்றிக் கொண்டு வாழ வரம் வாங்கிய புண்ணியவான் பாடு சும்மா ஜமா தான்.. ஜோக் சூப்பர் சார்..

    ReplyDelete
  13. கண்ணன், உங்கள் கருத்துப் பகிர்விற்கும், பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  14. சில இடங்களில் அந்தச் சொற்கோவை மிக அருமை. மிக நல்ல எழுத்தாளர்தான், சந்தேகமேயில்லை. //

    உங்கள் மனமுவந்த பாராட்டுகளுக்கு நன்றிகள் சார்.

    திருமதி உமாவுக்கும் அதுபோன்ற ஒரு பாசமுள்ள தாத்தா அமைந்தது அவரது பாக்கியமே!//

    ஆமாம், அவர் பற்றி இன்னும் நிறைய எழுத நினைத்து பின் ரொம்ப அறுக்கிறோமோ என்று நினைத்து விட்டுவிட்டேன்.

    ReplyDelete
  15. ஆக்கம் நன்றாக உள்ளது. இயல்பான நடை. பாராட்டுக்கள்.//

    உங்கள் பாராட்டுக்கு நன்றி கிருஷ்ணன் சார்.

    தாத்தா பெயர் திரு. கண்ணுசாஸ்திரிகள் .

    ReplyDelete
  16. உமாவின் பதிவு நன்றாக இருந்தது//

    நன்றி தொரைராஜ்.

    ReplyDelete
  17. நன்றி கணபதி சார்.

    ReplyDelete
  18. இதுதான் writing flow ... ச்சும்மா...பெண் சிங்கம்னா சிங்கம்தான் போங்க..//

    ரொம்ப நன்றி. என்னென்னவோ சொல்றீங்க, என்னவோ போங்க.

    ReplyDelete
  19. /////அலுவலகத்தில் ஒரு நாள் கூகிளில் ஜோதிடம் என்று ஏதோ அடித்து தேடிக்கொண்டிருந்தபோது வாத்தியாரின் வலைப்பூவைக் கண்டுபிடித்தேன். அன்றைக்கு இத்தனை நாளாக விட்டிருந்த ஜோதிடப்பிசாசு மீண்டும் பிடித்துக்கொள்ள.....////
    உங்கள் நினைவுகளின் ஊடே ஜோதிடம் வளர்ந்த கதை ஆக்கம் அருமை...
    எனக்கும் இப்படித்தான் இந்த வகுப்பறை அறிமுகம் கிடைத்தது.. மேலும் இது தான் எனது முதல் வலைப் பதவு உலாவுதலும் ஆகும்...

    ReplyDelete
  20. உமா.. உங்களின் மலரும் நினைவுகள் ஆக்கம், அருமை..//

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  21. திருமதி உமா மேலும் வாத்தியார் மற்றும் வகுப்பறை சக மாணவர்களுக்கு அன்புடன் வணக்கம்.""""வாத்தியார். மேலும் வகுப்பறை சக மாணவர்கள்.. அனுமதிக்க வேண்டும்."""
    எனது வேண்டுகோளுக்கு ஒருவரும் பதில் சொல்ல வில்லை ?"நீங்கள் அனுமதித்தால் அவரின் ஜாதக அமைப்பு தருகிறேன்.. ஒரு தீர்வு சொல்லுங்களேன்."""
    சரி!! அல்லது வேண்டாம்!! என்றாவது சொல்லுங்களேன்..!!!
    .

    ReplyDelete
  22. from browsing centre
    -----------------------
    தாத்தாவின் பெயர்கண்ணு சாஸ்திரிகள்! அதற்குத்தான் கேட்டேன். ப‌ங்காரு காமாட்சிக்கு குருக்கள் கிடையாது. வைதீகப் பிரதிஷ்டை.ஆகமப்பிரதிஷ்டை இருந்தாலே குருக்கள் பூஜை.குருக்கள் த்னி வகுப்பார். தாத்தா சாஸ்திரிகள். அவரை எனக்கு நன்கு தெரியும்.
    காமாட்சியம்மன் கோவில் மதில் சுவரில் காப்பிக்கடை வைத்திருந்தது ஒரு அந்தணரே.

    ReplyDelete
  23. இத்தனை நாளாக விட்டிருந்த ஜோதிடப்பிசாசு மீண்டும் பிடித்துக்கொள்ள.....////
    enakkum ஜோதிடப்பிசாசு பிடித்து kkonduvittathu.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com