மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.9.10

வாத்தியாரின் வேண்டுகோள்!

====================================================
வாத்தியாரின் வேண்டுகோள்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஜோதிட நூல்கள் முழு வீச்சில் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

படிப்பதற்கு வசதியாகப் பாடங்கள் பிரிக்கப்பெற்று, அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்பெற்று, பொருள் அடக்கம், குறிசொற்களை வைத்துத்
தேடும் வசதியுடன் நூல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
முதலில் இரண்டு பகுதிகள் வெளிவரும். மூன்று மாத இடைவெளிக்குப்
பிறகு மேலும் இரண்டு தொகுதிகள் வெளிவரும்.

“தலைப்பை நன்றாகப் போடு
தானே வருவார்கள்
எழுதுவதை நன்றாக எழுது
எல்லோரும் படிப்பார்கள்”
என்று அடிக்கடி சொல்வேன்!

நமது ஜோதிட நூல்களுக்கு நல்ல தலைப்பு வேண்டும்

தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன். நான் நினைத்துள்ள தலைப்புக்களையும், அதற்கான விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன். அதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்து அனுப்பலாம்.

அத்துடன் உங்களுக்குத் தோன்றும் தலைப்பை அதற்கான காரணத்துடன் நீங்கள் எழுதலாம். அது நன்றாக  இருந்தால் அந்தத் தலைப்பில் நூல்கள் வெளியாகும். முன்னுரையில் உங்கள் பெயரும் வரும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புத்தான் ஜோதிடப் புத்தகங்களுக்கு
உரிய தலைப்பாகும். பகுதி ஒன்று, பகுதி  இரண்டு, பகுதி மூன்று,
பகுதி நான்கு என்ற சொல் மட்டும் புத்தகங்களை வகைப் படுத்திக்
காட்டும்.

உற்சாகத்துடன் உங்கள் பதிலை உடனே எழுதியனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

உங்கள் பரிந்துரையைப் பின்னூட்டத்தில் எழுத வேண்டாம். தனி மின்னஞ்சலில் மட்டுமே எழுதுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் நினைத்துள்ள தலைப்புக்களும், அதற்கான விளக்கங்களும்

1. பாதையும் பயணமும்

(விதி விதித்துள்ள பாதையும், நமது வாழ்க்கைப் பயணமும் என்று பொருள் கொள்ளலாம்)

2. கிரகங்களின் கிரிக்கெட் ஆட்டம்

(கிரகங்கள் அனைத்துமே பெளலர்கள். சனி, ராகு & கேது ஆகிய கிரகங்கள் ஃபாஸ்ட் பெளலர்கள். சமயத்தில்  பெளன்சராகப் பந்துகள் வரும். சந்திரன், சுக்கிரன், ஆகிய மூன்று கிரகங்களும் ஸ்பின் பெளலர்கள். சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் மீடியம் ஃபாஸ்ட் பெளலர்கள். குரு பகவான் விக்கெட் கீப்பர்.

காலதேவனும், அவனுடைய உதவியாளர் சித்திரகுப்தனும்
அம்ப்பயர்கள். Third Umpire கிடையாது. ஆட்டத்தை நடத்துபவர்
இறைவன்.(Match organizer)

மட்டையுடன் ஆடுவது நாம்தான். பவுண்டரி, சிக்ஸர் என்று
விளாசுவதும் நாம்தான். சில சமயம் வேகப் பந்தின் வீச்சிற்குப்
பயந்து ஒவ்வொரு ரன்னாக எடுக்க வேண்டியதும் நாம்தான்.
ஒவர்கள் கணக்கு எல்லாம் கிடையாது. ஆட்டம் முடியும் வரை
பந்துவீச்சு இருக்கும்)

3. விதிவழிக் கல்வி

(அஞ்சல் வழிக் கல்வியைப்போல இதுவும் ஒரு கல்வி என்று பொருள் கொள்க!)

4. வகுப்பறை ஜோதிடம்

(வகுப்பறையில் நடத்தப்பெற்ற ஜோதிடப் பாடங்கள்)

5. சமச்சீர் வாழ்க்கை

(எல்லோருக்குமே 337 பரல்கள்தானே. அதனால் சமச்சீர் வாழ்க்கை என்று பொருள் கொள்ளுங்கள்)

6. எளிய நடையில் இனிய ஜோதிடம்

(எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படியாக எழுதப்பெற்ற இனிய ஜோதிடப் பாடங்கள் என்று பொருள் கொள்க)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

42 comments:

  1. எளிய நடையில் இனிய ஜோதிடம்

    ReplyDelete
  2. Good morning Sir! I have sent 5 titles by mail Sir. Hope you may choose one among them.

    ReplyDelete
  3. ஐயா,

    எனது தலைப்புகள்

    1) ”வாழ்க்கைப் பயண வழிகாட்டி” (ஜோதிடம் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டியாக (கை விளக்கை போன்று) இருப்பதால்)

    2) “எளிய ஜோதிட வழிகாட்டி” (எளிய நடையில் எல்லோருக்கும் (நான் உட்பட) ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஜோதிடத்தைக் கற்றுத் தருவதால்)

    3) “எதிர்கால கைவிளக்கு” (இருட்டுக்கு கைவிளக்கு போன்று எதிர்காலத்துக்கு கைவிளக்காக
    இருப்பதால்)

    4) “இனிய எளிய ஜோதிடம்” (இனிமையாகவும் அத்துடன் எளிய நடையிலும் ஜோதிடத்தைக் கற்றுத் தருவதால்)

    ReplyDelete
  4. அய்யா,

    ஜோதிடம் - ஒரு கலங்கரை விளக்கு
    ஜோதிடமும் வாழ்க்கைப் பயணமும்

    இவை என்னுடைய தலைப்புகள்

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  5. 2, 4, 5

    இந்த தலைப்புகளுக்கு என் ஓட்டு:)

    ReplyDelete
  6. "கிரகங்களின் கிரிக்கெட் ஆட்டம்"
    இந்த தலைப்பு இக்களத்திற்கு ஏற்ற தலைப்பாகவும் இருக்கிறது , அது மட்டுமில்லாமல் அணைத்து தரப்பு மக்களையும் ஒரு முறை வாங்கி படிக்க தூண்டும் வகையில் உள்ளது.

    ReplyDelete
  7. வணக்கம் வாத்தியாரே
    கிரிக்கெட் தலைப்பை தவிர்த்திட வேண்டுகிறேன்
    ஆரியபட்டர் காலத்திலும் ஜோதிடம் இருந்தது இன்றும் இருக்கிறது என்றும் இருக்கும் ஆனால்கிரிக்கெட் அப்படி அல்ல தங்களுடைய மாணவர்கள் மலேசியா சிங்கப்பூர் அரபு நாடுகள் என்று உலகின் பல இடங்களில் உள்ளனர் அங்கெல்லாம் கிரிக்கெட் இல்லை பாதையும் பயணமும் என்ற தலைப்பிற்கு தான் என்னிடைய வாக்கு

    ReplyDelete
  8. "வாங்கி வந்த வரம்"
    "விதி உன் வசம்"

    ReplyDelete
  9. நல்ல தொருத் தகவல் - உங்களை
    நாடி வரும் பெயர்கள்.

    Dear Sir,

    Please check your mail Inbox for my email, that I have sent you just now.

    Thanks.

    ReplyDelete
  10. Titles sent to you email id Sir.

    எத்தனை ஜோதிட புத்தகங்கள் விட்டில் இருப்பினும்,this is going to be very special collection to me - Reason...

    It is very great experience for all of us atleast me sure, participating in a blog day to day basis , interacting with all and Author/Writer - one to one or group basis since so many months/years with nice learning experience everyday. Finally reading a compilation as book written by the same author, Jothish subjects discussions/ Interesting Question answers- above all his style of writing.
    atleast என்னுடைய ஜோதிட பிணாமத்தின் ஒரு நினைவுகூரலாக இந்த புத்தகத்தை கருதுவேன்
    sorry if i sound very exaggerating.

    ReplyDelete
  11. Dear sir,
    Serial no.6 seems to be good.
    Thank you

    ReplyDelete
  12. 4. வகுப்பறை ஜோதிடம்

    (வகுப்பறையில் நடத்தப்பெற்ற ஜோதிடப் பாடங்கள்)

    This is a good title.

    - Ram

    ReplyDelete
  13. நானும் என் மூளைக்கு ரொம்ப வேலை குடுத்து, ஒரு 5 தலைப்பு எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  14. 1. "paathaiyum payanamum"
    nanragaththaan ullathu ! aanal ethu oru jothida puththagam enbathai entha thalaippu ellorukkum unarththaathu endru ninaikkiren .
    sonnaalthaan theriyavarum vagupparai allatha matravarkku.

    enave ! ungal vilakkangal serthe thalippai edavum
    eppadiyaaga "VITHIYIN PAATHAIYUM - VAAZHKKAIYIN PAYANAMUM" endru .
    nandri!
    s.perumal

    ReplyDelete
  15. I have sent few TITLES for the book.

    We appreciate your magnimous approach in chosing the responsiblity of title to the book to your class room students.

    We welcome you to add the cost of the book, so that we can book our copy even at the PREPRINTED cost.

    I also suggest to publish the list of all the title after the title choosen for the book.

    With u always..

    ReplyDelete
  16. நான் பதிவு செய்ய விரும்பும் தலைப்புகள்:
    1. கோள்கள் போடும் கோலங்கள்
    2.கோள்களும் நாள்களும்
    3. கிரகங்களின் கீர்த்தனைகள்
    4. அடிப்படை ஜோதிடம்
    5.ஜாதகமும் ஜோதிடமும்
    6. உங்கள் ஜாதகம் கூறும் யோகங்கள்
    7. கோள்கள் என்ன செய்யும்?
    8. ஜோதிடத்தின் சூத்திரங்கள்
    9. வாங்கி வந்த வரம்

    அன்புடன்
    AMG

    ReplyDelete
  17. 1. எளிய நடையில் இனிய ஜோதிடம்

    2. Astrological Guide to Self-Awareness

    3. Jothidamum Jathagamum - Oru Arimugam

    4. Ungal Neram Yeppadi???

    5. Jothida Ragasiyangal - Ungalukku Mattum

    ReplyDelete
  18. நமை நாடி வந்த கோள் என் செயும்

    ReplyDelete
  19. சார்

    யோசிச்சு அனுப்புறேன்,

    பாண்டியன்

    ReplyDelete
  20. Sir
    I have sent some headings through mail

    ReplyDelete
  21. உங்கள் அனைவரின் அன்பிற்கும் பிரியத்திற்கும், வாத்தியாரின் மேல் வைத்திருக்கும் மரியாதைக்கும் நன்றி!

    தலைப்பை மழையாக எழுதி வாத்தியாரை சொட்டச் சொட்ட நனைய வைத்துவிட்டீர்கள். நன்றாகத் தலையைத் துவட்டிக்கொண்டு பின்னால் வருகிறேன்.

    பின்னூட்டம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் கோடானு கோடி நன்றி. தனித்தனியாக அனைவருக்கும் பதில் எழுத நேரமில்லை. ஒரு தனிப்பதிவாகவே (நீங்கள் பரிந்துரைத்த தலைப்புக்களுடன்) எழுதிவிடுகிறேன். என்ன சரிதானே கண்மணிகளே?

    என்றென்றும் உங்கள் மீது அன்புள்ள,
    வாத்தியார்

    ReplyDelete
  22. வகுப்பறை ஜோதிடம் - என்பது ஆடம்பரம் இல்லாமலும் - மேலும் ஏற்கனவே வலைப்பூவில் உள்ளது என்பதையும் அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம் உள்ளது.
    என்னுடைய தலைப்புகள்
    1. நாள் என் செயும்!, கோள் என் செயும்!
    2. உங்கள் வாழ்க்கை, எங்கள் (கிரகங்கள்) கையில்!
    3. ககனம் + கிரகம் = மனித வாழ்க்கை!
    4. கிரக சூத்திரா
    5. மனிதனின் மறு பக்கம் கிரகம்
    6. விதி - மதி - மனிதன்
    7. பாவ புண்ணிய கணிதம் - சோதிடம்!
    8. வான வீதியும்! மனித வாழ்க்கையும்!
    9. 30 டிகிரியில் வீடு

    ReplyDelete
  23. தலைப்புகளை மினஞ்சல் முலம் அனுப்பி உள்ளேன் அய்யா

    ReplyDelete
  24. 1. jothidamum Vazhkaium

    2. arindhadhum ariyadhadhum - jothidam

    ReplyDelete
  25. குருவிற்கு எனது வணக்கங்கள் .

    எனது தலைப்புக்கள்

    1 கோள்களின் கோலாட்டம் .

    2 . எதிர்காலம் .

    3 . நீங்களும் ஜோதிடர் .(எளிய விளக்கங்களுடன்) .

    நன்றி
    குபேந்திரன்

    ReplyDelete
  26. எளிய நடையில் இனிய ஜோதிடம்

    I feel this should be a appropriate title, sir.

    ReplyDelete
  27. My Choices

    1.எளிய நடையில் இனிய ஜோதிடம்

    2.வகுப்பறை ஜோதிடம்

    ReplyDelete
  28. எனக்கு பிடித்தது . கிரக சூத்திரா (யோகம் சார் பரிந்துரைத்தது )

    ReplyDelete
  29. Please keep the ஜோதிடம் word in the title.

    ReplyDelete
  30. 1. பாதையும் பயணமும்

    ReplyDelete
  31. ஐயா,
    இந்த அடியேனிடமிருந்து சில,

    1) புலிப்பாணியிலிருந்து அம்பானி வரை !
    2) கோள்களும் அதன் குறிகோள்களும் !
    3) ப்ரபஞ்ஜக் கணிதம் !
    4) சோதிடக் கணித சூத்திரங்கள் !
    5) வாங்கி வந்த வரம் !
    (சோதிடத்தில் ஒரு அலசல்)
    6) விதியின் பஸ் ரூட் 337 !
    7) விதியின் அளவுகோள் 337 !
    8) பொம்மையா ? பொம்மலாட்டியா ?
    முடிவெடுக்கும் 337
    9) ப்ரபஞ்ஜ மேடையில், ந‌வ‌கிர‌க‌ நாட‌க‌ம் !
    10)நம்மை ஆட்டுவிக்க நவகிரகங்கள் படும் பாடு !

    ReplyDelete
  32. navagrahagalum navarasangalum...

    9 plantes determines 9 emotions in our life...so I chosed this title.

    Sir I typed in tamil and when I returned to this page I couldnt paste it. I tried couple of times...lost patience.. so typing in english. Will try next time in tamil. - kalai

    ReplyDelete
  33. ஐயா,
    இந்த அடியேனிடமிருந்து மேலும் சில,

    1) அடிப்ப‌டை ஜோதிட‌மும், சூத்திர‌ங்க‌ளும் !
    2) ஜோதிட‌மும் வாழ்க்கை ப‌ய‌ணமும் !
    3) ஜோதிட‌க் க‌ளஞ்சிய‌ம் !

    ReplyDelete
  34. ஐயா,
    இந்த அடியேனிடமிருந்து மேலும் சில,

    1) ஜோதிட‌ சாஸ்த்திர‌ம் !
    (கையேடு.....எளிய நடையில்!)
    2) யோகங்களும், தோஷங்களும்!

    ReplyDelete
  35. ஐயா,
    இந்த அடியேனிடமிருந்து மேலும் சில,

    1) கோள் அறிந்து செயல்படு !
    2) ஜோதிடக் கலை !
    (ஒரு விழிப்புணர்வு கையேடு)
    3) ஜோதிட சாஸ்த்திரத்தின் நுணுக்கங்கள் !
    4) ஜோதிடம்...கலையா ? கற்பனையா ?

    ReplyDelete
  36. ஐயா,
    இந்த அடியேனிடமிருந்து மேலும் சில,

    1) நீங்களும் ஆகலாம் NOSTRADOMUS !
    2) நீங்களும் கணிக்கலாம்‍‍ !
    (எளிய முறையில் ஜோதிட பயிற்சி)
    3) லக்னமும் 337 பரல்களும் !

    ReplyDelete
  37. ஐயா,

    மேலும் ஒரு தலைப்பு,

    " லக்னபிந்துகோச்ச்சார பத்ததி "

    இது எப்டி இருக்கு.....!

    இந்த பரட்டைக்கு ஒரு பதில் எழுதினால் என்ன ???? தினமும் தங்களுடைய மின்னஞ்சலுக்காக காத்திருக்கிறேன் !!!

    ReplyDelete
  38. உங்கள் அனைவரின் அன்பிற்கும் பிரியத்திற்கும், வாத்தியாரின் மேல் வைத்திருக்கும் மரியாதைக்கும் நன்றி!

    தலைப்பை மழையாக எழுதி வாத்தியாரை சொட்டச் சொட்ட நனைய வைத்துவிட்டீர்கள். நன்றாகத் தலையைத் துவட்டிக்கொண்டு பின்னால் வருகிறேன்.

    பின்னூட்டம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் கோடானு கோடி நன்றி. தனித்தனியாக அனைவருக்கும் பதில் எழுத நேரமில்லை. ஒரு தனிப்பதிவாகவே (நீங்கள் பரிந்துரைத்த தலைப்புக்களுடன்) எழுதிவிடுகிறேன். என்ன சரிதானே கண்மணிகளே?

    என்றென்றும் உங்கள் மீது அன்புள்ள,
    வாத்தியார்

    ReplyDelete
  39. Good morning sir!!
    Title no:4 seems correct sir, we all like this

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com