மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.9.10

ஊக்கு விற்பவன் எப்போது தேக்கு விற்பான்?

ஊக்கு விற்பவன் எப்போது தேக்கு விற்பான்?

ஊக்குவித்தால்
ஊக்கு விற்பவனும்
தேக்கு விற்பான்!
-கவிஞர் வாலி

_______________________________________
வகுப்பறை மாணவர்களின் வலைப் பூக்கள் - பகுதி 1

புதிய பகுதி!

நமது வகுப்பறைக்கு இருபது வயது மலர்களும் வருகின்றன.
அறுபதைக் கடந்த கனிகளும் வருகின்றன. அத்துடன் அவர்களும் வலைபதிவுகளில் எழுதி வருகிறார்கள். ஊக்குவிற்கும் பொருட்டு
இங்கே அவர்களை அறிமுகப்படுத்த உள்ளேன்.

துவக்கமாக, பொள்ளாச்சி திரு.கே. நடராஜன் அவர்களை 
அறிமுகம்  செய்வதில் மகிழ்வு கொள்கிறேன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்பர் கே.நடராஜன் அவர்கள் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் 1967ல் டிப்ளமோ படித்து 4 ஆண்டுகள் ஏபிடி நிறுவனத்தில் பணி புரிந்து பின்பு பொறியியல் பட்டப் படிப்புடன் தமிழ் நாடு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்று மீண்டும் ஏ.பி.டி மருதியில் பயிற்சி மேலாளராக 4 ஆண்டுகள் பணி புரிந்து தற்போது ஓய்வை அணுபவித்து வருகிறார்.

படித்த அறிவோடு பட்ட அறிவையும் இனைத்து இனைய தளத்தில் எழுதிவருகிறார். அதன் முகவரி
http://knsm-natarajan.blogspot.com/
++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களின் பார்வைக்கு அவருடைய ஆக்கங்களில் இரண்டைக் கீழே கொடுத்துள்ளேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++

1.அகக்கருவிகள்

மனிதன் இரட்டைகளில் ஒன்றை காலத்திற்கு தக்கவாறு பற்றிக்கொண்டு வாழ்பவன். இரட்டைகளில் உதரணத்திற்காக சில, நல்லது-கெட்டது; உள்ளே-வெளியே; முடியும்-முடியாது இது போன்றவைகள். நாம் ஒரு வேலையை செய்ய சிலகருவிகள் பயண்படுகிறது. இக்கருவிகளையும், உட் கருவிகள், புறக்கருவிகள் என வகைப்படுத்தலாம். உட்கருவிகளை அந்தக்கரணங்கள் என்றும், புறக்கருவிகளை ஐம்புலங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஐம்பொறிகளை பயண்படுத்தி ஒருவர் என்ன வேலையை செய்கிறார் என சொல்லமுடியும். ஆனால் உட்கருவிகளாகிய அந்தக்கரணங்களைப் பயண்படுத்தி என்னசெய்கிறார் என சொல்ல இயலாது. ஆனால் இந்த உட்கருவிகள்தான் மனிதனின் முன்னேற்றத்திற்கு முக்கியமான கருவிகள்.

சுருக்கமாக அதை இங்கு பார்ப்போம்.விவாதம் எனவரும் போது இந்தபதிவு எல்லோர்க்கும் நன்கு பயன்படலாம். மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்பன அந்தக்கரணங்கள் எனப்படும் அகக்கருவிகளாகும். மனம் பற்றிக்கொள்ளும் தன்மையது. சித்தம் சிந்திக்கத்தான் செய்யும். புத்தி முடிவை மாத்திறமே எடுக்கும். இந்த ஒழுங்குமுறை நம் புற வாழ்வில் ஏன் அமைவதில்லை? மனம் நல்லதை பற்றிக் கொள்ளும் சூழ்நிலை அமைந்தால் அதைப்பயன்படுத்தி சிந்தித்து இது எனக்கு உகந்தது என முடிவெடுத்து அவ்வாறே வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். கற்றது மாத்திறம் அல்லாது அதை செயல் படுத்தும் போது ஒரு வேளை நம் மனம் பற்றிக்கொண்டது சரி அல்ல என தெறிய வந்தால் மீண்டும் சிந்தித்து மற்றவர்களையும் கலந்து ஆலோசித்து உண்மையைப் பற்றிக்கொண்டு வாழ்வை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.கீழே கொடுத்துள்ள திருமந்திறப் பாடலையும் பாருங்கள்.

உற்றறி வைந்தும் உண்ர்ந்தறி வாறேழுங்
கற்றறி வெட்டும் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றறி யாது அழிகின்ற வாறே.

அறிவை வளர்க்கும் வழிகளை திருமூலர் அற்புதமாக இங்கு விளக்கியுள்ளார்.

1. ஐம்புலங்களால் அறியப்படுவது - ஐந்து
2. ஐந்தையும் வேறாக அறியப்படுவது - ஆறு
3. நலனையும் தீதையும் ஆராய்வது - ஏழு
4. கல்வியால் பெறுவது - எட்டு
5. அனுபவம் பெறுவது - ஒன்பது
6. இவைகளுக்கு எல்லாம் பதி ஞானம் - பத்து

ஐந்த பலவகையானதை (பதி ஞானம்) அற்றறியாது அழிகின்ற காரணம் தான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பது. மாணவர்களே பதி ஞானம் தானாக வருவது ஆகவே நான்கு வகையான அறிவை கல்வி நிலையங்களிலும் ஐந்தாது அறிவை தொழிலை மேற்க்கொள்ளும் போதும் பெற்று பின்பு நல்ல காரியங்களில்யீடுபாடு கொண்டு காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள். இந்த பத்தையும் பெற்றாலே பதினாறையும் பெற்று பெறுவாழ்வு பெற்ற மற்றவர்கள் வாழ்த்துவார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

ஐந்தும் முன்றும் எட்டல்ல

சித்தர் சொன்னது

ஐந்தும் மூன்றும் எட்டாதாம் அனாதியான மந்திரம்
நெஞ்ச்சிலே நினைத்துக் கொண்டு நீருருச் செப்பிரேல்
பஞ்சமா பாதகங்கள் நூறுகோடி செய்மயினும்
பஞ்சுபோல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே

வாமனன் மகாபலியிடம் கேட்ட வரம் மூன்றடி நிலம். மூன்றாவது எட்டிலே ஆதியும் அந்தமும் கானாத நிலை. ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என்னும் மந்திரமும் அனாதியான மந்திரம். காலங்களையும் எண்களையும் கடந்த இறைவனுக்கு தலைப்பு பொருந்தும் தானே. நமசிவாய என்னும் மந்திரத்தை நீருருச் செப்பினால் நான்மறைகள் சொல்வது என்ன தெறியுமா? பஞ்சமா பாதகங்கள் நூறுகோடி செய்மயினும்பஞ்சுபோல் பறக்கும்

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 

---திருவாசகம்

திருவாசகமும் இதைதானே சொல்லுகிறது. யானே பொய் என்நெஞ்சும் பொய் என்றால் ஐந்தும் மூன்றும் எட்டு என்று சொல்வது மாத்திறம் எப்படி உண்மையாக இருக்க முடியும். சித்தம் போன போக்கு சிவன் போக்கு என்பது சரியாகத்தானே உள்ளது.

நீருற செப்புதல் - அழுதால்

மேலும் படிக்க: அவருடைய வலைப்பூவைக் குறித்து  வைத்துக் (Book Mark) கொள்ளுங்கள்
அதன் முகவரி: Link
-----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24 comments:

kmr.krishnan said...

திரு கே.ந‌டராஜன் குங்குமப் பொட்டுக்காரார். நானும்தான்.அந்த ஒற்றுமை முதலில் க‌வ‌ர்ந்தது.ஆரவாரம் இல்லாத எளிய நடையில் திருமூலரைச் சொல்வது மிகவும் பிடித்துள்ளது அவசியம் அவ்ர் வலைப்பூவிற்கு பின் தொடர்பவராக ஆகிவிடுகிறேன். உங்கள் பரந்த மனத்திற்கு ஈடில்லை, அய்யா

Alasiam G said...

ஆஹா! அற்புதம்!! அருமை!!!,

பெரியோய்! நல்ல பல கருத்துக்களை கூறியுள்ளீர்கள் எனது வணக்கங்கள்.
"நெஞ்ச்சிலே நினைத்துக் கொண்டு நீருருச் செப்பிரேல்"
"ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே"

கரைந்து, இறங்கி, மனம் உருகி, ரோமக் கால்கள் சிலிர்க்க.
சித்தம் நேர்பட, சிந்தையில் அவனை அன்றி வேறெதுவும்
சிந்திக்காது, ஆவியை அதன் வாயிலில் (ஆஞ்ஞா) நிறுத்தி
கண்கள் சிவக்க உச்சந்தலையில் (sahasrara) ஒளி பெருக
உடல் எங்கும் வெப்பம் பரவி உரோமக் கால்கலில் நீர் குமிழ
நிலத்தில் பறப்பது போன்றதொரு நிலையில்; கண்களில் நீருற
"நமசிவாய வாழ்க!, நாதன் தாள் வாழ்க!! என்று
செப்பினால் உன்னைப் பெறலாமே!

"உண்மைதான் நானும் அழுதுகொண்டே தான் இறைவனை
வணங்குவேன் இந்த தன்மை எனக்கும் இயற்கையாகவே அமைந்துள்ளது."

நன்றிகள் குருவே!

SP.VR. SUBBAIYA said...

///////kmr.krishnan said...
திரு கே.ந‌டராஜன் குங்குமப் பொட்டுக்காரார். நானும்தான்.அந்த ஒற்றுமை முதலில் க‌வ‌ர்ந்தது.ஆரவாரம் இல்லாத எளிய நடையில் திருமூலரைச் சொல்வது மிகவும் பிடித்துள்ளது அவசியம் அவ்ர் வலைப்பூவிற்கு பின் தொடர்பவராக ஆகிவிடுகிறேன். உங்கள் பரந்த மனத்திற்கு ஈடில்லை, அய்யா/////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
ஆஹா! அற்புதம்!! அருமை!!!,
பெரியோய்! நல்ல பல கருத்துக்களை கூறியுள்ளீர்கள் எனது வணக்கங்கள்.
"நெஞ்ச்சிலே நினைத்துக் கொண்டு நீருருச் செப்பிரேல்"
"ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே"
கரைந்து, இறங்கி, மனம் உருகி, ரோமக் கால்கள் சிலிர்க்க.
சித்தம் நேர்பட, சிந்தையில் அவனை அன்றி வேறெதுவும்
சிந்திக்காது, ஆவியை அதன் வாயிலில் (ஆஞ்ஞா) நிறுத்தி
கண்கள் சிவக்க உச்சந்தலையில் (sahasrara) ஒளி பெருக
உடல் எங்கும் வெப்பம் பரவி உரோமக் கால்கலில் நீர் குமிழ
நிலத்தில் பறப்பது போன்றதொரு நிலையில்; கண்களில் நீருற
"நமசிவாய வாழ்க!, நாதன் தாள் வாழ்க!! என்று
செப்பினால் உன்னைப் பெறலாமே!
"உண்மைதான் நானும் அழுதுகொண்டே தான் இறைவனை
வணங்குவேன் இந்த தன்மை எனக்கும் இயற்கையாகவே அமைந்துள்ளது."
நன்றிகள் குருவே!///////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

RVS said...

நம்ம திரையுலக வாத்தியார் மாதிரி நீங்கள் வலையுலக வாத்தியார். ஊக்குவிப்பதற்கு வாலியை துணைக்கு அழைத்தீர்கள் பாருங்கள்... இதுதான் உங்கள் பாடத்தின் சிறப்பம்சம். நன்றாக உள்ளது. நடராஜன் சாருடைய வலையை எட்டிப் பார்த்தேன். ஒவ்வொன்றும் அருமை. அறிமுகத்திற்கு நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

SP.VR. SUBBAIYA said...

/////RVS said...

அன்புடன் ஆர்.வி.எஸ். ////////

சில விஷயங்களை சுருக்காகவும் நறுக்காகவும் சொல்வதென்றால், கவிஞர் வாலி அவர்களையும், கவியரசர் கண்ணதாசன் அவர்களையும் அழைக்காமல் முடியாது நண்பரே!

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
வகுப்பறை மாணவர்களுள், வலைபதிவுகளில்எழுதி வருபவர்களை ஊக்குவிற்கும் பொருட்டு, தாங்கள்
அவர்களை அறிமுகப்படுத்தும் வகையில்,

முதன் முதலாக இன்றையப் பதிவில் திரு.கே. நடராஜன் அவர்களை அறிமுகம் செய்துள்ளது மிகவும் நன்றாக உள்ளது.வரவேற்கத் தகுந்ததாகும்.

தாங்கள் கொடுத்துள்ள அவருடைய ஆக்கங்கள் சிறப்பாக இருந்தது.
அதனைப் படித்ததும் அந்த
வலைப்பூவிற்கு பின் தொடர்பவராக ஆகிவிட்டேன்.
திரு.கே. நடராஜன் அவர்கள் மேலும் மேலும் இதுபோன்ற சிறப்பான கருத்துக்களை தனது வலைப்பதிவில்
தொடர்ந்து அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வாய்ப்பினை ஏற்ப்படுத்தி கொடுத்தமைக்கு வகுப்பறைஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி.
தங்களன்புள்ள மாணவன்,
வ.தட்சணாமூர்த்தி
2010-09-02

SP.VR. SUBBAIYA said...

//////////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
வகுப்பறை மாணவர்களுள், வலைபதிவுகளில்எழுதி வருபவர்களை ஊக்குவிற்கும் பொருட்டு, தாங்கள்
அவர்களை அறிமுகப்படுத்தும் வகையில்,
முதன் முதலாக இன்றையப் பதிவில் திரு.கே. நடராஜன் அவர்களை அறிமுகம் செய்துள்ளது மிகவும் நன்றாக உள்ளது.வரவேற்கத் தகுந்ததாகும்.
தாங்கள் கொடுத்துள்ள அவருடைய ஆக்கங்கள் சிறப்பாக இருந்தது.
அதனைப் படித்ததும் அந்த வலைப்பூவிற்கு பின் தொடர்பவராக ஆகிவிட்டேன்.
திரு.கே. நடராஜன் அவர்கள் மேலும் மேலும் இதுபோன்ற சிறப்பான கருத்துக்களை தனது வலைப்பதிவில்
தொடர்ந்து அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வாய்ப்பினை ஏற்ப்படுத்தி கொடுத்தமைக்கு வகுப்பறைஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி.
தங்களன்புள்ள மாணவன்,
வ.தட்சணாமூர்த்தி/////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

" யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் "

என்பதனை இன்று வகுப்பறையில் காணுகின்றேன் ஆசான்களே!

Iyappan said...

//////Blogger SP.VR. SUBBAIYA said...

/////RVS said...
நம்ம திரையுலக வாத்தியார் மாதிரி நீங்கள் வலையுலக வாத்தியார். ஊக்குவிப்பதற்கு வாலியை துணைக்கு அழைத்தீர்கள் பாருங்கள்... இதுதான் உங்கள் பாடத்தின் சிறப்பம்சம். நன்றாக உள்ளது. நடராஜன் சாருடைய வலையை எட்டிப் பார்த்தேன். ஒவ்வொன்றும் அருமை. அறிமுகத்திற்கு நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ். ////////

சில விஷயங்களை சுருக்காகவும் நறுக்காகவும் சொல்வதென்றால், கவிஞர் வாலி அவர்களையும், கவியரசர் கண்ணதாசன் அவர்களையும் அழைக்காமல் முடியாது நண்பரே! ///////

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...
முயல் ஆமையிடம் தோற்ற கதையை "முயலாமை" ஒரு வரியில் சொன்னவர் வாலி..

SP.VR. SUBBAIYA said...

//////kannan said...
வாத்தியார் ஐயா வணக்கம்.
" யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் "
என்பதனை இன்று வகுப்பறையில் காணுகின்றேன் ஆசான்களே!////

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது!
- நடிகர் பாக்கியராஜ்

SP.VR. SUBBAIYA said...

/////Iyappan said...
//////Blogger SP.VR. SUBBAIYA said...
/////RVS said...
நம்ம திரையுலக வாத்தியார் மாதிரி நீங்கள் வலையுலக வாத்தியார். ஊக்குவிப்பதற்கு வாலியை துணைக்கு அழைத்தீர்கள் பாருங்கள்... இதுதான் உங்கள் பாடத்தின் சிறப்பம்சம். நன்றாக உள்ளது. நடராஜன் சாருடைய வலையை எட்டிப் பார்த்தேன். ஒவ்வொன்றும் அருமை. அறிமுகத்திற்கு நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ். ////////
சில விஷயங்களை சுருக்காகவும் நறுக்காகவும் சொல்வதென்றால், கவிஞர் வாலி அவர்களையும், கவியரசர் கண்ணதாசன் அவர்களையும் அழைக்காமல் முடியாது நண்பரே! ///////
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...
முயல் ஆமையிடம் தோற்ற கதையை "முயலாமை" ஒரு வரியில் சொன்னவர் வாலி..////////

நல்லது. நன்றி நண்பரே!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Good Afternoon.

Parthen Padithen -- Malaithen endru ninaithen-->

Thank you sir..

Loving Student
Arulkumar Rajaraman

iyer said...

மாற்றங்கள் எல்லாம் மாறலாம் . .
மாறுவதையும் மாற்றலாம் . .

நமது வகுப்பில் நெஞ்சைத் தொட்ட வரிகளைப் போல் . .

அன்றைய திதி நட்சத்திரத்தையும் தந்தால் எளிமையாக இருக்குமே . .

பிரதோஷம் கிருத்திகை முதலியனவற்றை வண்ணத்தில் காட்டி . .

இப்போ வலைப்பக்ககாரர்களை காட்டி . .
வலைப்பூ இல்லாதவர்களையும் எழுத வைக்க ஊக்கு விக்கும் நீங்கள்

வழிப்போக்கனுக்கு வழிகாட்டும்
விழிப்பூட்டும் வழிகாட்டியாக . .

எண்ணங்களுக்கு செழிப்பூட்டி. .
படிப்பவர்களுக்கு களிப்பூட்டி . .

மாணவர்களை உங்கள் அன்பில் பூட்டி வைத்து விட்டீர்கள் . .

வாழ்க . .
உங்களுடன்
நாங்களும்

Govindasamy said...

அற்புதமான பதிவு.மிகவும் பயனுள்ள அறிமுகம்.நன்றி அய்யா. இத்தகைய வட்டம் இந்த உலகில் புரிதலை கட்டாயம் உண்டாக்கும்.

மிக்க நன்றி

minorwall said...

பெரியவுங்க பேசிட்டுருக்கும்போது தெரியாம உள்ளே வந்துட்டேன்..சாரி..ஏதேதோ விஷயங்கள் எழுதி இருக்கு..
நமக்கு எட்டலே..(இப்பத்தான் கொஞ்சம்கொஞ்சமா ஜோசிய கிளாஸ் வரைக்கும் வந்துருக்கேன்..திருமூலர் எல்லாம் ரொம்ப தூரம்..இன்னும் ஒரு half century போகணும்..)

சரி..நான் இப்பிடியே ஜூட் வுட்டுக்குறேன்...

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Good Afternoon.
Parthen Padithen -- Malaithen endru ninaithen-->
Thank you sir..
Loving Student
Arulkumar Rajaraman////

உணர்ந்தேன் உவந்தேன்!
உங்களோடு பகிர்ந்தேன்!

SP.VR. SUBBAIYA said...

/////iyer said...
மாற்றங்கள் எல்லாம் மாறலாம் . .
மாறுவதையும் மாற்றலாம் . .
நமது வகுப்பில் நெஞ்சைத் தொட்ட வரிகளைப் போல் . .
அன்றைய திதி நட்சத்திரத்தையும் தந்தால் எளிமையாக இருக்குமே . .
பிரதோஷம் கிருத்திகை முதலியனவற்றை வண்ணத்தில் காட்டி .
இப்போ வலைப்பக்ககாரர்களை காட்டி . .
வலைப்பூ இல்லாதவர்களையும் எழுத வைக்க ஊக்கு விக்கும் நீங்கள்
வழிப்போக்கனுக்கு வழிகாட்டும்
விழிப்பூட்டும் வழிகாட்டியாக . .
எண்ணங்களுக்கு செழிப்பூட்டி. .
படிப்பவர்களுக்கு களிப்பூட்டி . .
மாணவர்களை உங்கள் அன்பில் பூட்டி வைத்து விட்டீர்கள் . .
வாழ்க . .
உங்களுடன்
நாங்களும்//////

இணைய வகுப்பு எல்லா நாட்டு மக்களும் வருகிறார்கள். அன்றைய திதி நட்சத்திரத்தைத் தருவது அனைவருக்கும் பயனளிக்காது.!

SP.VR. SUBBAIYA said...

/////Govindasamy said...
அற்புதமான பதிவு.மிகவும் பயனுள்ள அறிமுகம்.நன்றி அய்யா. இத்தகைய வட்டம் இந்த உலகில் புரிதலை கட்டாயம் உண்டாக்கும்.
மிக்க நன்றி/////

நல்லது. நன்றி சகோதரரே!

SP.VR. SUBBAIYA said...

/////minorwall said...
பெரியவுங்க பேசிட்டுருக்கும்போது தெரியாம உள்ளே வந்துட்டேன்..சாரி..ஏதேதோ விஷயங்கள் எழுதி இருக்கு.. நமக்கு எட்டலே..(இப்பத்தான் கொஞ்சம்கொஞ்சமா ஜோசிய கிளாஸ் வரைக்கும் வந்துருக்கேன்..திருமூலர் எல்லாம் ரொம்ப தூரம்..இன்னும் ஒரு half century போகணும்..)
சரி..நான் இப்பிடியே ஜூட் வுட்டுக்குறேன்../////.

இல்லை மைனர், கவியரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்: “அனுபவம் என்பது சீப்பு; தலை வழுக்கையான பிறகே அது உங்களுக்குக் கிடைக்கும்!” உங்களுக்குத் தலை வழுக்கையான பிறகு எல்லாம் பிடிபடும். அதாவது உரிய வயது வந்த பிறகு எல்லாம் பிடிபடும்

ananth said...

பதிவு அவருக்கிருக்கும் ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது. நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்திற்கு அவர் சொன்ன விளக்கம் அருமை.

SP.VR. SUBBAIYA said...

///ananth said...
பதிவு அவருக்கிருக்கும் ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது. நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்திற்கு அவர் சொன்ன விளக்கம் அருமை. ////

உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

natarajan said...

"அனுபவம் என்பது சீப்பு. தலை வழுக்கையான பிறகே. அது உங்களுக்கு கிடைக்கும் " என மைனருக்கு தாங்கள் சொன்னது சரிதான் ஐயா
இருப்பினும் என் போரனுக்காக ஒரு செடி தானாகவே வளரும் என எழுதியதைப் படித்து பார்களாமே?

SP.VR. SUBBAIYA said...

///////natarajan said...
"அனுபவம் என்பது சீப்பு. தலை வழுக்கையான பிறகே. அது உங்களுக்கு கிடைக்கும் " என மைனருக்கு தாங்கள் சொன்னது சரிதான் ஐயா
இருப்பினும் என் பேரனுக்காக ஒரு செடி தானாகவே வளரும் என எழுதியதைப் படித்து பார்களாமே?///////

தானாக வளர்வது கருவேலஞ்செடி மட்டுமே. மற்ற செடிகளை எல்லாம் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். கால் நடைகள் தின்று விடாமல், சுற்றிலும் வேலி போட்டு வளர்க்க வேண்டும். சரிதானா நண்பரே?