ஒளவையார் அருளிவிட்டுப் போனது!
வீரபாகு எப்படி முருகனின் முதல் - தலையான பக்தனோ, அதுபோல விநாயகப் பெருமானின் தலையான பக்தை ஒளவையார். விநாயகப் பெருமானைப் போற்றி அந்த மூதாட்டி எத்தனை பாடல்களைப் புனைந்திருந்தாலும், அவற்றில் முதன்மையானது விநாயகர் அகவல்.
அது மந்திரசித்தி பெற்றது. தினமும் அதைப் பாராயணம் செய்து
விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்பவர்களுக்கு, சகல காரியங்களும் சித்தியடையும். நிறைவேறும். துன்பங்கள் விலகும். மனதில் மகிழ்ச்சியுண்டாகும். அனைவரும் பாராயணம் செய்து பயன் பெறுங்கள்.
இன்று விநாயக சதுர்த்தி.
இன்றையப் பதிவு விநாயகப் பெருமானுக்கு சமர்ப்பணம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
நீங்கள் விநாயகரை வனங்கினால் போதும். தனியாக மாமலராளை (லெட்சுமி தேவியை) வணங்க வேண்டாம். விநாயகப் பெருமானே லெட்சுமியின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவாள். அதை வலியுறுத்துவதுதான்
‘மாமலாராள் நோக்குண்டாம்’ என்னும் சொற்பதங்கள்
2
ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!
------------இது திருமூலரின் திருமந்திரம் பாடல் !
விநாயகப் பெருமானை எப்போதும் நமது புத்தியில் வைத்து வணங்க வேண்டும். நல்ல புத்தியைக் கொடுப்பார். நம்மை வழிதவறிப் போக விடமாட்டார். நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே
உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்
3. விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாத சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்தழ தெறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடி கொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாவிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ் ஒளிமார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரு மூஷிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமது பொருளென
வாடர் வகைதான் மகிழ்ந் தெனக் கருளிக்
கோடாயுதத்தாற் கொடு வினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருனை யினிதெனக் கருளி
கருவிக ளொடுக்குங் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்க மருந்தே
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழ பாம்பின் நாவிலுணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக நூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்திமுத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கு மனமும் இல்லா மனோலயந்
தேக்கியே என்றன் சிந்தை தெரிவித்து
இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தின் னுள்ளே சதாசிவங் காட்டி
சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமு நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தி னரும் பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தென்னை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
அனைத்துப் பாடல்களுமே ஒளவையார் அருளிச் செய்தவையாகும்!
============================================
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
இளைஞரகளுக்கு அகவலை முழுமையாகக் கொடுத்தது நல்ல யோசனை. என்னதான் புத்தகங்கள் இருந்தாலும், இன்றைய தேதியில் வலையில் படிப்பதையே வாலிபர்கள் விரும்புகிறார்கள்.அதை நன்கு புரிந்து வைத்திருப்பவர் தாங்கள்தான் அய்யா!வாழ்க தங்கள் ஆன்மீகப்பணி!
ReplyDelete"மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறிவித்தே..."
இது குண்டலினி யோகம்!ஆழ்ந்து படிக்காத ஒருவர் ஒரு கூட்டத்தில் அறியாமல் பொருள் கூறினார்: "பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு குதியங்காலால் குதத்தில் அழுத்தம் கொடுத்து குண்டலியை எழுப்ப வேண்டும்"
இந்த இடத்தில் 'கால்' என்பது காற்று என்று பொருள்படும் 'காலால் எழுப்பும்' என்றால் பிராணாயாமத்தால் 'மூண்டெழு கனலை'எழுப்புக என்பதே சரி.
அனைவரையும் அந்த முழுமுதற் கடவுள் ஆனை முகத்தோன் காக்கட்டும்.
பார்வதி பரமேஸ்வரர் திருமணமே பிள்ளையாரை வழிபட்ட பின்னர்தான் நடந்ததாம்! அப்போ யாருக்கு யார் பிள்ளை?!
ஆஹா அருமை,
ReplyDelete"வினைதீர்க்கும் விநாயகனின் துதி"
நன்றிகள் ஐயா!
மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை மனதில் இருத்தி ஒவ்வொரு ஆதாரத்திலும் தியானிப்பது தான் குண்டலினி யோகம். என வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுவார்கள்
ReplyDeleteGood morning sir,
ReplyDeleteThanks for ur today ganesh's picture and song.
HAPPY GANESH CHATHURTHY TO U AND UR FAMILY MEMBERS.
Dear Brothers and Sisers,
HAPPY GANESH CHATHURTHY TO ALL OF U
SUNDARI.P
vinayaganai kumbitaal...oru thunbamum nammai andadu engrindranar...vinayagaruku mattum matri godsai vida yein power jasthiyaga solgirargal....y?
ReplyDeleteஅகவல் நல்ல தகவல்
ReplyDeleteஅதில்
//சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி//
இந்த வரிகள் அருமை
சிலர் யோகம் என்பர் சிலர் போகம் என்பர்
நாம் இறை தாகம் என்போம்.
ஆன்ம தத்துவம் 24
வித்தியா தத்துவம் 7
சிவ தத்துவம் 5
என 36 தத்துவங்களை விளக்கிச் சொல்லும் முழுமையான சித்தாந்த சாத்திரம் இந்த அகவல்
அகவதல் என்றால் சொல்லுதல் என பொருள்
(குயில் கூவும் காகம் கரையும் மயில் அகவும் என சிறுவயதில் படித்தது நினைவிருக்கலாம்)
சிவஞான தகவல்களை சொன்னதால் இது விநாயகர் அகவலானது
படிப்பவர் பயன் அடைவர்
மற்றவர்
படித்த பின் பயன் அடைவர்
Ganesh Chathurdhi
ReplyDelete(G)ive you
(A)lways
(N)ew
(E)energy
(S)pirit and
(H)appiness
in your life..
Ganapathy papa moria..
ஐயா வணக்கம்...!
ReplyDeleteஎனக்கு மிகவும்பிடித்த, என் தந்தையார் அடிக்கடி சொல்லும் விவேக சிந்தாமணியின் பாடலைத் தலைப்பில் கொடுத்து அசத்திவிட்டீர்கள், மிக்க நன்றி... தங்களுக்கும் நம் வகுப்பறையின் சக மாணவர்களுக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
சென்ற பதிவின் பின்னூட்டத்தில் திரு சுப்புரெத்தினம் அவர்கள் அளித்திருந்த
ReplyDeleteவலைப்பூ வின் பெயரை "வரகனேரி" என்று அவசரத்தில் படித்துவிட்டு,அங்கே சென்றேன்.அவர் திருச்சியைச் சேர்ந்தவர் ஆதலால் வரகனேரி அக்ரஹாரம் பற்றி சுவையாக ஏதாவது சொல்லி இருப்பார் எனறு எதிபார்த்தேன். அப்புறம் தான் தெரிந்தது அது 'வாழ்வு நெறி', வரகனேரி அல்ல என்று.சுவையான பல செய்திகளை இலக்கியத் தரத்தோடு 2006 முதல் கூறி வருகிறார்.அவ்ருக்கு மேலும் 13 வலைப்பூக்கள் உள்ளன.அதில் ஹெல்த் பற்றிய ஒரு வலைப்பூ மிகப் பயனுள்ளது.யூ ட்யூப் தொடர்புடன் பல பதிவுகள்
இட்டுள்ளார்.நல்ல இசை, ஆன்மீகம், இலக்கிய ஆர்வலர்களுக்கு அவர் பதிவுகள் நல்விருந்தாக அமையும்.மேலும் பல வலைப்பூக்களுக்கு தொடர்பு
உருவாக்கியுள்ளார்.
திரு சுப்புரெத்தினம் அவர்களே எழுதிய ஆத்திசூடி கீழே கொடுத்துள்ளேன்;
===================================
"ஆத்திசூடி 2008.
அறியாமை உணர். 2. அகந்தை விலக்கு.
ஆணவம் தவிர்.
இன்பமெலாம் இன்னலே. 2. இருளை அகற்றும் குருவடி சேர்.
ஈகையில்லையேல் ஈண்டு இசை இல்லை. 2. ஈகையிலா ஈட்டம் இசை தரா.
உட்பகை உறவு கொல்லும். 2. உள்ளத்தே சினம் அறு.
ஊரை எளியாதே. 2. ஊணை இகழாதே
எவ்வுயிரும் கொல்லாதே.
ஏமாறாதே. ஏமாற்றாதே. 2. ஏணிதனைத் தள்ளாதே.
ஐயம் தொலை.
ஒடிய நடை போடாதே. 2. ஒவ்வாப் பொருள் தவிர்.
ஓடுவதை விரட்டாதே. 2. ஓங்கியதை இகழாதே.
ஓளடதமாம் பசித்து உண்ணல்."
===================================
நம் வகுப்பறை மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்.
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் அகவல் நன்று. மகாகவி பாரதியின் விநாயகர் நான்மணிமாலையும் மிகச்சிறந்த ஆன்மீக, தத்துவ விளக்கம் கொண்ட பகுதி. அதனையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக:
ReplyDeleteஎனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலன மில்லாமல், மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம், நூறுவயது; இவையும் தரநீ கடவாயே.
வேறு:
பக்தி யுடையார் காரியத்திற் பதறார்! மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல் மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா! கணநாதா! மென்மைத் தொழிலிற் பணியெனையே.
வேறு:
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க' என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
"அங்கனே யாகுக!" என்பாய் ஐயனே!
(இறைவனை ததாஸ்து என்று சொல்லச்சொல்கிறான்)
சாகாவரம் பெற்ற பாடல்கள் இவை. அதிகப்பிரசங்கத்துக்கு மன்னிக்க வேண்டும். நன்றி ஆசிரியர் அவர்களே!
//////kmr.krishnan said...
ReplyDeleteஇளைஞர்களுக்கு அகவலை முழுமையாகக் கொடுத்தது நல்ல யோசனை. என்னதான் புத்தகங்கள் இருந்தாலும், இன்றைய தேதியில் வலையில் படிப்பதையே வாலிபர்கள் விரும்புகிறார்கள்.அதை நன்கு புரிந்து வைத்திருப்பவர் தாங்கள்தான் அய்யா! வாழ்க தங்கள் ஆன்மீகப்பணி!
"மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறிவித்தே..."
இது குண்டலினி யோகம்!ஆழ்ந்து படிக்காத ஒருவர் ஒரு கூட்டத்தில் அறியாமல் பொருள் கூறினார்: "பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு குதியங்காலால் குதத்தில் அழுத்தம் கொடுத்து குண்டலியை எழுப்ப வேண்டும்"
இந்த இடத்தில் 'கால்' என்பது காற்று என்று பொருள்படும் 'காலால் எழுப்பும்' என்றால் பிராணாயாமத்தால் 'மூண்டெழு கனலை'எழுப்புக என்பதே சரி.
அனைவரையும் அந்த முழுமுதற் கடவுள் ஆனை முகத்தோன் காக்கட்டும்.
பார்வதி பரமேஸ்வரர் திருமணமே பிள்ளையாரை வழிபட்ட பின்னர்தான் நடந்ததாம்! அப்போ யாருக்கு யார் பிள்ளை?!/////////
அன்னை உமையவள் அவதாரங்கள் பல எடுத்தவர். ஒவ்வொரு அவதாரத்திலும் ஈசனை மணந்து அவதாரத்தை நிறைவு செய்தவர். அவதாரத் திருமணங்கள் ஆனைமுகத்தானை முன்னிறுத்தி நடந்திருக்கின்றன! உங்கள் விளக்கங்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Alasiam G said...
ReplyDeleteஆஹா அருமை,
"வினைதீர்க்கும் விநாயகனின் துதி"
நன்றிகள் ஐயா!/////
நல்லது. நன்றி ஆலாசியம்!
//////natarajan said...
ReplyDeleteமூலாதாரத்தில் உள்ள குண்டலினியை மனதில் இருத்தி ஒவ்வொரு ஆதாரத்திலும் தியானிப்பது தான் குண்டலினி யோகம். என வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுவார்கள்//////
மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நடராஜன் சார்!
/////sundari said...
ReplyDeleteGood morning sir,
Thanks for ur today ganesh's picture and song.
HAPPY GANESH CHATHURTHY TO U AND UR FAMILY MEMBERS.
Dear Brothers and Sisers,
HAPPY GANESH CHATHURTHY TO ALL OF U
SUNDARI.P////
நல்லது. நன்றி சகோதரி!
////Jack Sparrow said...
ReplyDeletevinayaganai kumbitaal...oru thunbamum nammai andadu engrindranar...vinayagaruku mattum matri godsai vida yein power jasthiyaga solgirargal....y?//////
சித்தியளிப்பவர் அவர். சித்தி என்பது வெற்றியைக்குறிக்கும். அதனால் இருக்கலாம்!
////iyer said...
ReplyDeleteஅகவல் நல்ல தகவல்
அதில்
//சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி//
இந்த வரிகள் அருமை
சிலர் யோகம் என்பர் சிலர் போகம் என்பர்
நாம் இறை தாகம் என்போம்.
ஆன்ம தத்துவம் 24
வித்தியா தத்துவம் 7
சிவ தத்துவம் 5
என 36 தத்துவங்களை விளக்கிச் சொல்லும் முழுமையான சித்தாந்த சாத்திரம் இந்த அகவல்
அகவதல் என்றால் சொல்லுதல் என பொருள்
(குயில் கூவும் காகம் கரையும் மயில் அகவும் என சிறுவயதில் படித்தது நினைவிருக்கலாம்)
சிவஞான தகவல்களை சொன்னதால் இது விநாயகர் அகவலானது
படிப்பவர் பயன் அடைவர்
மற்றவர்
படித்த பின் பயன் அடைவர்/////
நல்லது. நன்றி நண்பரே!
/////iyer said...
ReplyDeleteGanesh Chathurdhi
(G)ive you
(A)lways
(N)ew
(E)energy
(S)pirit and
(H)appiness
in your life..
Ganapathy papa moria..////
தகவலுக்கு நன்றி நண்பரே!
/////M. Thiruvel Murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்...!
எனக்கு மிகவும்பிடித்த, என் தந்தையார் அடிக்கடி சொல்லும் விவேக சிந்தாமணியின் பாடலைத் தலைப்பில் கொடுத்து அசத்திவிட்டீர்கள், மிக்க நன்றி... தங்களுக்கும் நம் வகுப்பறையின் சக மாணவர்களுக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்/////
நல்லது. நன்றி திருவேல் முருகன்!
//////kmr.krishnan said...
ReplyDeleteசென்ற பதிவின் பின்னூட்டத்தில் திரு சுப்புரெத்தினம் அவர்கள் அளித்திருந்த
வலைப்பூ வின் பெயரை "வரகனேரி" என்று அவசரத்தில் படித்துவிட்டு,அங்கே சென்றேன்.அவர் திருச்சியைச் சேர்ந்தவர் ஆதலால் வரகனேரி அக்ரஹாரம் பற்றி சுவையாக ஏதாவது சொல்லி இருப்பார் எனறு எதிபார்த்தேன். அப்புறம் தான் தெரிந்தது அது 'வாழ்வு நெறி', வரகனேரி அல்ல என்று.சுவையான பல செய்திகளை இலக்கியத் தரத்தோடு 2006 முதல் கூறி வருகிறார்.அவ்ருக்கு மேலும் 13 வலைப்பூக்கள் உள்ளன.அதில் ஹெல்த் பற்றிய ஒரு வலைப்பூ மிகப் பயனுள்ளது.யூ ட்யூப் தொடர்புடன் பல பதிவுகள்
இட்டுள்ளார்.நல்ல இசை, ஆன்மீகம், இலக்கிய ஆர்வலர்களுக்கு அவர் பதிவுகள் நல்விருந்தாக அமையும்.மேலும் பல வலைப்பூக்களுக்கு தொடர்பு
உருவாக்கியுள்ளார்.
திரு சுப்புரெத்தினம் அவர்களே எழுதிய ஆத்திசூடி கீழே கொடுத்துள்ளேன்;
===================================
"ஆத்திசூடி 2008.
அறியாமை உணர்.
அகந்தை விலக்கு.
ஆணவம் தவிர்.
இன்பமெலாம் இன்னலே. இருளை அகற்றும் குருவடி சேர்.
ஈகையில்லையேல் ஈண்டு இசை இல்லை. ஈகையிலா ஈட்டம் இசை தரா.
உட்பகை உறவு கொல்லும். உள்ளத்தே சினம் அறு.
ஊரை எளியாதே. ஊணை இகழாதே
எவ்வுயிரும் கொல்லாதே.
ஏமாறாதே. ஏமாற்றாதே. ஏணிதனைத் தள்ளாதே.
ஐயம் தொலை.
ஒடிய நடை போடாதே. ஒவ்வாப் பொருள் தவிர்.
ஓடுவதை விரட்டாதே. ஓங்கியதை இகழாதே.
ஓளடதமாம் பசித்து உண்ணல்."
===================================
நம் வகுப்பறை மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்./////
அவருடைய வலைத்தளங்கள் பற்றிய விரிவான செய்திகளுக்கு நன்றி சார்!
நேரம் கிடைக்கும்போது அவருடைய வலைத்தளங்கள் பற்றிய முழுத்தகவல்களையும் நம் வகுப்பறையில் பதிவிடுகிறேன்!
Thanjavooraan said...
ReplyDeleteவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் அகவல் நன்று. மகாகவி பாரதியின் விநாயகர் நான்மணிமாலையும் மிகச்சிறந்த ஆன்மீக, தத்துவ விளக்கம் கொண்ட பகுதி. அதனையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக:
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலன மில்லாமல், மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம், நூறுவயது; இவையும் தரநீ கடவாயே.
வேறு:
பக்தி யுடையார் காரியத்திற் பதறார்! மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல் மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா! கணநாதா! மென்மைத் தொழிலிற் பணியெனையே.
வேறு:
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க' என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
"அங்கனே யாகுக!" என்பாய் ஐயனே!
(இறைவனை ததாஸ்து என்று சொல்லச்சொல்கிறான்)
சாகாவரம் பெற்ற பாடல்கள் இவை. அதிகப்பிரசங்கத்துக்கு மன்னிக்க வேண்டும். நன்றி ஆசிரியர் அவர்களே!/////
அறுபது வயதிற்கு மேல் அதிகப் பிரசங்கித்தனம் இருக்காது. அனுபவம் மட்டுமே இருக்கும். பாரதியைப் பற்றிய மேலதிகத்தகவல்களுக்கு நன்றி சார்!
yes sir!
ReplyDelete////இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
ReplyDeleteகடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி////
இது கழுமுனை அல்ல சுழுமுனை என்று இருக்க வேண்டும். பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே இந்த சுலோகம் சொல்கிறது.
ananth said...
ReplyDelete////இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி////
இது கழுமுனை அல்ல சுழுமுனை என்று இருக்க வேண்டும். பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே இந்த சுலோகம் சொல்கிறது./////
சுழுமுனை என்பதே சரி. பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
//ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
ReplyDeleteஇந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!//
இது திருமூலரின் திருமந்திரம் பாடல் !
/////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ReplyDelete//ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!//
இது திருமூலரின் திருமந்திரம் பாடல் ! /////
ஆமாம். என் நினைவிற்கும் அது வருகிறது. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி பாஸ்கர்!
ஆசிரியர் அவர்ககு வனக்கம் சந்திரகிரகனம் சுரிய கிரகனம் காலத்தில் பிறந்தவர் வாழ்க்ைக எவ்வாறு இருக்கும் Vedanarayanan, Bangalore
ReplyDelete