மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.9.10

வகுப்பறையில் விளையாட்டிற்கு இடமில்லை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறையில்  விளையாட்டிற்கு  இடமில்லை!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.22
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.75
ஜோதிடர்.S.அரிச்சந்திரன்
நாகர்கோவில்
   
அன்பு ஐயா அவர்களுக்கு,
உங்கள் வகுப்பறை பதிவுகளை படித்தேன் மிகவும் நன்று,,,,,உங்கள் உதாரண விளக்கம் அருமை. உங்களிடம் ஓரு  கேள்வி மட்டும்.லக்கணம் என்பதன் விளக்கம் மட்டும் என்ன வென்று சொல்லுங்கள் ஐயா. குணமோ, பலனோ, தேவையில்லை.லக்கணம் என்பதன் பொருள் மட்டும் போதும். நன்றி ஐயா

லக்கினம் என்பதன் பொருள்தானே? சொன்னால் போயிற்று. கீழே கொடுத்துள்ளேன்.

அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்களே உங்களை ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளர் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். லக்கினத்தின் பொருள் உங்களுக்குத் தெரியாதா? எதற்கு இந்த விளையாட்டு? விளையாடுவதற்கு
நீங்கள் மைதானத்திற்குப் போவது நல்லது. இங்கே வகுப்பறைக்கு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.

அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை.

I am a businessman, writing in blogs out of mere interest to share my knowledge and thoughts with the next generation  சம்ஜே க்யா? அர்த்தமாயிந்தாண்டி? மனசிலாயோ?

லக்(கி)னம் என்பது பெயர்ச் சொல். சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events at any given time of the day with reference to the time of  sun rise

சொல்லகராதியில் இருந்து அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கறந்த பால் சுவாமி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.76
வேதநாராயனன்,
பெங்களூர்
   
குருவுக்கு எனது பணிவான வணக்கங்கள்
கிரகண காலத்தில் குழந்தை பிறக்கக்கூடாதா? அப்படிப் பிறந்த குழந்தையின் வாழ்க்கை குறையுடைய சந்திரன்  மற்றும் சூரியன் போல குறையாகவே இருக்குமா தயவு செய்து தெளிவாக விளக்கவும். சாதரணமாக கிரகண
காலத்தில் குழந்தை பிறக்க இருந்தால் அறுவை சிகிச்சை செய்து முன்னதாகவே பிரசவம் செய்கின்றனர்  மேலும் அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு எதாவது சக்தி இருக்குமா? தயவு செய்து தெளிவாக விளக்கவும்
வேத நாராயணன்
பெங்களூர்   
       
பிறக்கக்கூடாது என்று யார் சொல்ல முடியும்? எப்படிச் சொல்ல முடியும்?

பிறந்தால் ஏழு விதமான தோஷங்கள் ஏற்படும் என்று புராதன ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவைகள்  முறையே Ghora, Dhwanshi, Mahodari, Manda, Mandakini, Mishra and Rakshashi என்று சொல்லப்படும்.  பார்ப்பதற்கு இந்தச் சொற்கள் ஏதோ ஆயுர்வேத மருந்துகள்போல உள்ளன.

சூரிய கிரகணத்தால் ஏற்படுவது: The eclipse happens Sun is in conjunction with one of the lunar nodes (Rahu or  Ketu) on a new moon or full moon day. சூரியன் உடலுக்குக் காரகன் என்பதாலும், அத்துடன் தந்தைக்குக்  காரகன் என்பதாலும், ஜாதகன் வறுமையான சூழலில் பிறக்க நேரிடலாம். அத்துடன் உடற் குறைபாடுகளும்
ஏற்படலாம் ( என்னகுறைபாடு என்று அடுத்த கேள்வியை அனுப்பி என்னைப் பிறாண்ட வேண்டாம்) ஜாதகத்தில்  மற்ற கிரகங்களைவைத்து அது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அதை எல்லாம் துவைத்துப் பார்க்க வேண்டும்.
துவைப்பதற்கெல்லாம் என்னிடம் வாஷிங்மிஷின் (நேரம்) இல்லை. சந்திர கிரகணத்தில் பிறந்தாலும் இதே  நிலைப்பாடுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.77   
கண்ணன் சீதாராமன்
பிரந்த ஊர்: வாசுதேவநல்லூர்
வசிக்கும் ஊர்: Doha Qatar.

1.தாய், தந்தை, குரு இவர்களுக்கு பின்னர் தான் இறைவன், இது தான் உலகம் முழுவது உள்ள மற்றவர்களால்  இந்து என பெயர் இடப்பட்ட இந்துகளின் அடிப்படை முதல் மற்றும்   அனைத்து மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை  எல்லோரும் அறிந்து இருந்தும் நடைமுறை படுத்தாமல் அல்லது முடியாமல் போகக் காரணம்  என்ன?

 “மதா, பிதா, குரு தெய்வம்” எனும் மந்திரத்தைத்தானே சொல்கிறீர்கள்? அன்னையையும், தந்தையையும், குருவையும் மதித்து நட, தெய்வம் தானாக வரும் என்பார்கள். அதனால்தான் தெய்வத்திற்கு 4வது இடம்  கொடுக்கப் பட்டது. ஆனால் இன்று பலருக்கும் காசுதான் தெய்வமாகிவிட்டது. பணத் தேடலில் மற்றதை ஓரங்கட்டி விட்டார்கள். டாஸ்மாக் சரக்குதான் தீர்த்தமாகிவிட்டது. தெருவோரக்கடை புரோட்டாதான் பிரசாதமாகி விட்டது. பாட்டியாலா சுடிதார் போட்டுக்கொண்டு செல்லும் பெண்தான் அம்பாளாகத் தெரிகிறாள். என்ன செய்வது? காலக்  கோளாறு!
“காசேதான் கடவுளடா - அந்தக்
கடவுளுக்கும் அது தெரியுமடா
கைக்குக்கை மாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே”


என்று ஒரு கவிஞர் 40 ஆண்டுகளுக்கு முன்பே - அதாவது நீங்கள் பிறக்கும் முன்பாகவே எழுதிவைத்துவிட்டுப்  போயிருக்கிறார். அந்தப் பாடலைத் தினமும் 108 முறைகள் பாராயணம் செய்யுங்கள். உங்கள் மனதில் இந்த
மாதிரிக் கேள்விகள் எழாது!

2. பழனியில் போகர் @ புலிபாணி சித்தர், மதுரையில் சித்தர், சங்கரன்கோவிலில் பாம்பாட்டி சித்தர், திருப்பதியில்  கொங்கணர் சிதம்பரம், இராமேஸ்வரம் ,  வாரணாசி (காசி), மும்பை  சித்திவிநாயகர் மந்திர், மகாலட்சுமி ,   என்பன  போன்ற  ஆலயங்கள் அங்குள்ள " தவ யோகிகளின்"  தவ வலிமையால் தான் சிறந்து விளங்குகின்றது  என்று கேட்டது உண்டு உண்மையா?  {பூனாவில் அருகில் உள்ள ஷிர்டி  சாய்பாபா! . மந்திராலயம்
எடுத்துகாட்டு }

நீங்களும், நானும் இதை ஒப்புக்கொண்டு, மனம் மகிழலாம். மூன்றாம் மனிதன் ஒப்புக்கொள்ள மாட்டான். மும்பை, தில்லி, கொல்கத்தா, சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற ஊர்களின் மேன்மைக்கு எந்த சித்தர் காரணம்
என்று கேட்பான். என்ன பதில் சொல்வது?

3. எத்தனையோ தவ புருஷர்கள், யோகிகள் என இன்றுவரை  கொண்ட நமது நாட்டில்,  அன்னியர்களின் படை  எடுப்பை முன்னரே அறிதந்த புருஷர்கள் { காலத்தால் உண்டாக்க முடியாத அழிந்து போன ஆலயம்,  கலாச்சாரம்,  கலைகள் ) எதனால் படையடுப்பைத் தடுக்க முடியவில்லை. ஒருவேளை தடுத்து இருந்தும் வெற்றி  பெறாமல் போகக் காரணம் என்ன?

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - ஆனால் தர்மமே வெல்லும் என்பது பகவத்கீதையின் சாரம். அதை அறிந்ததினால் அவர்கள் வாளாதிருந் திருக்கலாம். தவபுருஷர்கள் காலத்தில்  ஏ.கே.47 எல்லாம் இல்லை.
அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்!:-))))

4. சிறு தெய்வ வழிபாடு,  புத்தம், ஜைனம்,என தொடங்கி எண்ணிக்கையில்லாத மதங்கள்  உள்ள   உலகில்   அத்தகைய மதங்களை தோற்று வித்தவர்களின் உண்மையான குறிக்கோள் " மனிதனை பிறப்பு என்னும் கடலில்
இருந்து கரை சேர்ப்பது தானே".  "மோட்சம்" என்னும் வீட்டிற்கு வழி காட்டுகின்றேன் என்று கூறிகொண்டவர்கள்.  தனக்கு என்று கொள்கை , கட்டுப்பாடு, முதல தலைவன் என நாளைக்கு நடக்க போறதை கூட சரியாக
சொல்லும் அளவிற்குத்  தவவலிமை பெற்றவர்களால் அவர்கள் தோற்றுவித்தஅமைப்பிற்குள்ளே ஆயிரம் ஆயிரம் பிறவிகள் தோன்றி சீரழிவதை அறியாமல் போனது எப்படி 1  அன்பை போதித்தவர்களே! அநியாயமாக  அதர்மத்திற்கும் துணை போனது எப்படியோ? 2. அனைத்தும்  அறிந்தவர்கள் கூட, இறை  தூதர்கள் கூட தனது  கொள்கை தான் விளங்க வேண்டும் என இறைவனை வேண்டி உள்ளனர், இதுவும்  சுயநலம் தானே, உண்மையை  ஒத்து கொள்ள முடியாத சுயநலம்தானே?

அவர்கள் அறியாமல் போனதாக யார் சொன்னது? அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொன்னால்,  நீங்கள் சுட்டிக்காட்டும் அவர்களுடைய தவவலிமை பொய்யாக அல்லவா போய்விடும்?

கலியுகம். இப்படித்தான் நடக்கும். பகவான் மீண்டும் அவதாரம் எடுத்து எல்லாவற்றையும் சீராக்குவார் என்ற  நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவர்களுக்கு மட்டுமல்ல, ஆண்டவனை வணங்கும் அத்தனை நல்ல
உள்ளங்களுக்கும் இன்று இருக்கிறது. அன்றும் உண்டு. இன்றும் உண்டு. தவவலிமை பெற்ற மகான்களுக்கும்  இருந்திருக்கிறது. இன்று பொது விநியோகக் கடையில் (அதான் ரேசன் கடை) க்யூவில் நிற்பவனுக்கும் இருக்கிறது.

சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள். ஜடையில் தொங்கும் நான்கு முள மல்லிகைப்பூவில் கிறங்கிப்போய்  எல்லாவற்றையும் (இந்தக் கருமத்தை எல்லாம்) மறந்து விடுவீர்கள்!:-))))

“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா”


என்று கேட்டு அடுத்தவரை நச்சுப்பண்ண ஆரம்பித்துவிடுவீர்கள். ஆன்மிக்கத்தைக் கொண்டு போய் ஆற்றில்  போட்டுவிடுவீர்கள்!

இதழ் சிந்தும் சுவை என்றல் என்னவென்று தெரியுமல்லவா?:-))))

5. எம்குல தெய்வம் " திருசெந்தில் ஆண்டவரின்"  சேனைப் படைத் தலைவரான " வீரபாகு" வின்   பரம்பரைதான் எமது பரம்பரை என்பதனால் வீரபாகுவையே  மூலமாக (தெய்வமாக) வணங்கி வந்தால் மிக்க  சேமம் அடையலாம்  என்று கேட்டது உண்டு. இதனை விளக்க முடியுமா?

என்ன குழப்புகிறீர்கள்? "வீரபாகு"வின் பரம்பரைதான் உமது பரம்பரை என்றால் வாரிசு சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறீர்களா? வீரபாகுவின் பரம்பரை என்றால், உங்கள் பகுதி தாசில்தார் அதை ஒப்புக்கொள்வாரா?

இன்னும் கற்பனைக் குதிரையையே ஓட்டிக் கொண்டிருக்காமல், அரசு போக்குவரத்துப் பேருந்தில் பயணிக்கும் காலத்திற்கு வந்து சேருங்கள்.

“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ?
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு.” 


என்று கவியரசர் கண்ணதாசன் அசத்தலாக எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார். ஆகவே பழைய  பெருமைகளை எல்லாம் கடாசி விட்டு, யதார்த்தமாக இருங்கள். வாரம் ஒரு மலையாளப் படத்தைப் பாருங்கள்.
பிரியாமணியின் படத்தை சட்டை பையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்துப்பாருங்கள் இந்தப் பரம்பரை  நினைப்பு எல்லாம் வராது!

சேமம் என்று எதைச் சொல்கிறீர்கள்? சேமத்திற்கு எல்லாம் சரியான விளக்கம் கிடையாது. அளவுகோல்  கிடையாது.

கோவில் மடப்பள்ளியின் புளியோதரை சாதத்தை கட்டளைதாரர்கள் அள்ளிக் கொடுக்க வயிறுமுட்டச்  சாப்பிட்டுவிட்டு, ஊருணிக்கரையில் ஆனந்தமாகப் படுத்துக்கிடப்பவன், தான் சேமமாக இருப்பதாகச் சொல்வான்.

பென்ஸ் காரில் இரண்டு இளம் அம்மணிகளுடன் பயணிப்பவன் தான்தான் சேமமாக இருப்பதாகக் கூறுவான்.

எதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்?
+++++++++++++++++++++++++++++++++++++
தொடரும்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

43 comments:

சூரிபாபா said...

it was good pointer by vathiyar , comparing malayala film and யதர்தம்.

kmr.krishnan said...

சோதிடக் கேள்விபதில் இப்போது ஆன்மிகக் கேள்விபதிலாக மாறிவிட்டதே!
தஞ்சை பெரியகோவில் 1000ஆவது ஆண்டுவிழாவில் வாத்தியாரைப் பார்த்ததாக ஒரு புரளி கிளம்பியுள்ளதே.கலைஞர் பின்னால் அமர்ந்து இருந்த ஒருவர் வாத்தியார் சாயலில் இருந்த‌தாகப் பேசிக்கொள்கிறார்களே, சரியா?

kmr.krishnan said...

தஞ்சைப் பெரியவர் உயர்திரு வெ. கோபாலன் தொகுத்து எழுதிய ஒரு கட்டுரை, தஞ்சைப்பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவடைதை ஒட்டி,
www.tamilhindu.com
என்ற வலைதளத்தில் வெளி வந்துள்ளது.அதில் கண்டுள்ள புகைப்படங்கள் பெரும்பாலும் அவ்ர் கைவண்ணமே.வகுப்பறை மாணாக்கர்கள் அனைவரும்
ப‌டித்துப் ப‌ய‌ன் பெற்று பாராட்ட‌ வேண்டுகிறேன்.


மேலும் http://velang.blogspot.com என்ற‌ வ‌லைப்பூவில் த‌ஞ்சைப் பெரிய‌கோவிலில் 2007ல் எடுக்க‌ப்ப‌ட்ட‌ படங்க‌‌ள் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ன.
அவையும் அரிய‌ ப‌ட‌ங்க‌ள்.Also made into video and posted in you tube.

venkatesan.P said...

அய்யா,
இன்றைய கேள்வி பதில் பதிவு மிகவும் அருமையாக இருந்தது.

மிக்க அன்புடன்
வெங்கடேசன்

kannan said...

உள்ளேன் ஐயா!
என்ன குழப்புகிறீர்கள்? "வீரபாகு"வின் பரம்பரைதான் ........

பரம்பரை மீன்ஸ்..?
( கோத்திரம் என்பார்களே )
வழி வழியாக ( தோன்றலாக ) வந்த நபர்கள் என்கின்ற பொருளில் இங்கு எம்முடைய கேள்வி ஐயா!

" ஸ்கந்த புராணத்தில்"! இதற்க்கான பெரிய விளக்கம் உள்ளது என்பர். ஆனால் எம்மிடம் ஸ்கந்தபுராணம் புஸ்தகம் இல்லாதனால் சந்தேகத்தை தீர்த்து கொள்ள வழி இல்லாமல் போகி விட்டது . முக்கியமாக தங்களிடம் கேள்வி கேட்க காரணம், முருகனையே முதலும் முடிவும் ஆக வணக்கும் " முருக பக்தர்!" என்பதனால் தான் ஐயா.

ஸ்கந்த புராணமே வெறும் புஸ்தகம் அல்லது வேறு அர்த்தத்தில் பொருள் கொள்ளுகின்றவர்களை பற்றி கவலை இல்லை .
யாம் நம்புகின்றோம் ஸ்கந்த புராணம் என்பது எம் பெருமான்
" திரு செந்தில் ஆண்டவரின்" உண்மையை பறைசாற்றும்
" புனித நூல்"! என்று . தாங்களும் நம்புகின்றீர்கள் அல்லவா?

அது ஒன்றே போதும்.
******

kannan said...

வாரம் ஒரு மலையாளப் படத்தைப்..?
பிரியாமணியின் படத்தை சட்டை பையில் வைத்துக்கொண்டு.....?
******
வாங்கிவந்த வரத்தால் இப்பமே கண்ணை கட்டுது இதில் மேற்கண்டதை வேறையா ?

அந்த வயதை எல்லாம் தாண்டி வந்தாச்சு ஐயா!

பசுவின் கன்றுக்குட்டியை
பால் கறக்கும் பொழுது கயிறு கற்றை அவிழ்த்து விடும்பொழுது,
அந்த கன்று குட்டி துல்லி குதித்து வருமே அப்படிதான் இந்த பாலாய் போன மனதும் இறைவனின் சன்னதியை நாடியே
எங்கு சென்றாலும் வருகின்றது.


எல்லாம் பழனி ஆண்டவரின் சித்தம்!
கேள்விகளை கேட்க வைப்பதும் அவனே!
பதில் தருவது அவனே!
எல்லாம் "வேலன்!" மயம்!

Thanjavooraan said...

ஐயா, தெரிந்த விஷயங்களையே கேட்டு என்னைப் பிறாண்டாதீர்கள் என்று நீங்கள் சொல்லியிருக்கிற பதில் ரசிக்கும்படியாக இருந்தது. அவர் லக்கணம் என்று கேட்டதை எப்படி அவர் கேட்பது லக்கினம் என்று புரிந்து கொண்டீர்கள்? கேள்விகளுக்கு அதிலும் உங்களுக்கு அதிகமாக அறிமுகமாயிருக்கிற டோஹா கண்ணன் போன்றவர்களுக்கு பதிலளிக்கும்போது அதில் மிளிரும் அந்நியோன்னியமும் அன்பும் வெளிப்படுகிறது. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே ஒரு கலை. அதில் நகைச்சுவையும், நையாண்டியும், நெருக்கமும் வெளிப்படும்போது உரையாடலே ஒரு கலை என்பது தெரிகிறது; அதுவும் உங்கள் பதில்களைப் படிக்கும்போது அது முழுமையாக வெளிப்படுகிறது. ஆசிரியருக்கு நன்றி.

R.Puratchimani said...

////மின்னஞ்சல் எண்.77
கண்ணன் சீதாராமன்
பிரந்த ஊர்: வாசுதேவநல்லூர்
வசிக்கும் ஊர்: Doha Qatar.////

உங்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது.

நீங்கள் யார் உங்களின் தோற்றுவாய் என்ன என்பது தெரியும் பொழுது உங்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்.
நீங்கள் கூறுவது போல் பலர் சுய நலமாகவே செயல்பட்டு உள்ளனர், ஆனால் அவர்கள் கத்துக் குட்டியாக இருக்கும் பொழுதுதான் இந்த தவறுகள் நிகழ்கிறது. அவர்கள் புனிதனான பிறகு அவர்கள் தவறு அவர்களுக்கு தெரிய வரும்.
அப்பொழுது இது எல்லாமே இயற்கையின் செயல் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு படையெடுப்பு பற்றியும் தெரியும் உங்களின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றியும் தெரியும். ஆனால் அவர்கள் இயற்கையின் வழியில் அனைத்தையும் விட்டு விடுவார்கள். அவர்கள் இயற்கையின் குறுக்கே நிற்க மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் தான் இயற்கையே. நீங்களும் நானும் கூடத்தான். (குறிப்பு: இது என்னுடைய இன்றைய கருத்து...உண்மையை உணர நீங்கள் இதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்).

இவன்
இயற்கையின் அங்கம்
இறைத்துளி
இரா. புரட்சிமணி

astroadhi said...

அய்யா வணக்கம்.....
கேள்வி பதில் பகுதி நன்று....அனைத்திற்க்கும் ஏற்ற கண்ணதாசன் வரிகள் அற்புதம் .....அதிலும் மலையாள படம் மற்றும் ப்ரியாமணி போட்டவை பாக்கட்டில் வைக்க சொன்ன நயம் சிறப்பு.......
நன்றி வணக்கம்,,,,,,

Govindasamy said...

அருமையான விளக்கங்கள்.

எத்துனைதரம் புரட்டிப் போட்டாலும் வாத்தியார் ground reality யை மறப்பதில்லை.

//பரம்பரை மீன்ஸ்..?
( கோத்திரம் என்பார்களே )
வழி வழியாக ( தோன்றலாக ) வந்த நபர்கள் என்கின்ற பொருளில் இங்கு எம்முடைய கேள்வி ஐயா//


இதைப் பார்த்தால் அனைவரும் ஆதிமனிதனின் கோத்திரம் தானே அய்யா..

தவறு இருப்பின் மன்னிக்கவும்

சூரிபாபா said...

தஞ்சை பெரியகோவில் பற்றி இங்கே KMR Sir பேச்சு வந்தால் just wanted to share some info-
வாய்ப்பு கிடைதால் , வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு நாவல் ”உடையார்”
http://balakumaranpesukirar.blogspot.com/2009/06/blog-post_6084.html
உடையார் - ஒரு முன்னுரை
” இதை வெறும் சரித்திர நாவலாக மட்டும் கருதவில்லை. ஒரு இனத்தின் பண்பாட்டு வெளியீடாக, ஒரு நதிக்கரை நாகரிகத்தின் நிறைவான கதையாக, வரலாற்றைக் காட்டிலும் பிரம்மாண்டமான் சனாதன தர்மத்தின் ஒரு அலைவீச்சாக, தமிழ் பேசும் எம் குடிமக்கள் எத்தனை அற்புதமான விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்ற விதமாகவும் எழுதியிருக்கிறேன் “

SP.VR. SUBBAIYA said...

////// சூரிபாபா said...it was good pointer by vathiyar , comparing malayala film and யதார்த்தம்.////////

அவர்களுக்குரிய யதார்த்தம் இன்னும் நமக்கு இல்லை!

SP.VR. SUBBAIYA said...

kmr.krishnan said..சோதிடக் கேள்விபதில் இப்போது ஆன்மிகக் கேள்விபதிலாக மாறிவிட்டதே!தஞ்சை பெரியகோவில் 1000ஆவது ஆண்டுவிழாவில் வாத்தியாரைப் பார்த்ததாக ஒரு புரளி கிளம்பியுள்ளதே.கலைஞர் பின்னால் அமர்ந்து இருந்த ஒருவர் வாத்தியார் சாயலில் இருந்ததாகப் பேசிக்கொள்கிறார்களே, சரியா?////////

பேசிக்கொண்டது உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்!:-)))))

SP.VR. SUBBAIYA said...

kmr.krishnan said...தஞ்சைப் பெரியவர் உயர்திரு வெ. கோபாலன் தொகுத்து எழுதிய ஒரு கட்டுரை, தஞ்சைப்பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவடைதை ஒட்டி, www.tamilhindu.com என்ற வலைதளத்தில் வெளி வந்துள்ளது.அதில் கண்டுள்ள புகைப்படங்கள் பெரும்பாலும் அவ்ர் கைவண்ணமே.வகுப்பறை மாணாக்கர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற்று பாராட்ட வேண்டுகிறேன் மே லும் http://velang.blogspot.com என்ற வலைப்பூவில் தஞ்சைப் பெரியகோவிலில் 2007ல் எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அவையும் அரிய படங்கள்.Also made into video and posted in you tube.///////

சொல்லிவிட்டீர்கள் அல்லவா? அனைவரும் சென்று படிப்பார்கள். மேலதிகத்தகவலுக்கு நன்றி சார்!

SP.VR. SUBBAIYA said...

//////venkatesan.P said...அய்யா, இன்றைய கேள்வி பதில் பதிவு மிகவும் அருமையாக இருந்தது.மிக்க அன்புடன் வெங்கடேசன்/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////// kannan said...உள்ளேன் ஐயா! என்ன குழப்புகிறீர்கள்? "வீரபாகு"வின் பரம்பரைதான் ......பரம்பரை மீன்ஸ்..? ( கோத்திரம் என்பார்களே ) வழி வழியாக ( தோன்றலாக ) வந்த நபர்கள் என்கின்ற பொருளில் இங்கு எம்முடைய கேள்வி ஐயா! " ஸ்கந்த புராணத்தில்"! இதற்க்கான பெரிய விளக்கம் உள்ளது என்பர். ஆனால் எம்மிடம் ஸ்கந்தபுராணம் புஸ்தகம் இல்லாதனால் சந்தேகத்தை தீர்த்து கொள்ள வழி இல்லாமல் போகி விட்டது . முக்கியமாக தங்களிடம் கேள்வி கேட்க காரணம், முருகனையே முதலும் முடிவும் ஆக வணக்கும் " முருக பக்தர்!" என்பதனால் தான் ஐயா.ஸ்கந்த புராணமே வெறும் புஸ்தகம் அல்லது வேறு அர்த்தத்தில் பொருள் கொள்ளுகின்றவர்களை பற்றி கவலை இல்லை .யாம் நம்புகின்றோம் ஸ்கந்த புராணம் என்பது எம் பெருமான்" திரு செந்தில் ஆண்டவரின்" உண்மையை பறைசாற்றும் " புனித நூல்"! என்று . தாங்களும் நம்புகின்றீர்கள் அல்லவா? அது ஒன்றே போதும்//////

நம்புகிறேன் சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

//////// kannan said...வாரம் ஒரு மலையாளப் படத்தைப்..? பிரியாமணியின் படத்தை சட்டை பையில் வைத்துக்கொண்டு.....?****** வாங்கிவந்த வரத்தால் இப்பமே கண்ணை கட்டுது இதில் மேற்கண்டதை வேறையா ? அந்த வயதை எல்லாம் தாண்டி வந்தாச்சு ஐயா! பசுவின் கன்றுக்குட்டியை பால் கறக்கும் பொழுது கயிறு கற்றை அவிழ்த்து விடும்பொழுது, அந்த கன்று குட்டி துள்ளிக் குதித்துப் போவது போல மனது இறைவனின் சன்னதியை நாடியே எங்கு சென்றாலும் வருகின்றது.எல்லாம் பழனி ஆண்டவரின் சித்தம்! கேள்விகளை கேட்க வைப்பதும் அவனே! பதில் தருவது அவனே!எல்லாம் "வேலன்!" மயம்!////////

கந்தனுக்கு அரோகரா! கண்ணனுக்கும் அரோகரா!

SP.VR. SUBBAIYA said...

Thanjavooraan said...ஐயா, தெரிந்த விஷயங்களையே கேட்டு என்னைப் பிறாண்டாதீர்கள் என்று நீங்கள் சொல்லியிருக்கிற பதில் ரசிக்கும்படியாக இருந்தது. அவர் லக்கணம் என்று கேட்டதை எப்படி அவர் கேட்பது லக்கினம் என்று புரிந்து கொண்டீர்கள்? கேள்விகளுக்கு அதிலும் உங்களுக்கு அதிகமாக அறிமுகமாயிருக்கிற டோஹா கண்ணன் போன்றவர்களுக்கு பதிலளிக்கும்போது அதில் மிளிரும் அந்நியோன்னியமும் அன்பும் வெளிப்படுகிறது. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே ஒரு கலை. அதில் நகைச்சுவையும், நையாண்டியும், நெருக்கமும் வெளிப்படும்போது உரையாடலே ஒரு கலை என்பது தெரிகிறது; அதுவும் உங்கள் பதில்களைப் படிக்கும்போது அது முழுமையாக வெளிப்படுகிறது. ஆசிரியருக்கு நன்றி.//////

பழகிவிட்டது! உங்களின் பாராட்டிற்கு நன்றி சார்!

SP.VR. SUBBAIYA said...

///////////// R.Puratchimani said..////மின்னஞ்சல் எண்.77 கண்ணன் சீதாராமன்பிரந்த ஊர்: வாசுதேவநல்லூர் வசிக்கும் ஊர்: Doha Qatar.////
உங்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. நீங்கள் யார் உங்களின் தோற்றுவாய் என்ன என்பது தெரியும் பொழுது உங்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். நீங்கள் கூறுவது போல் பலர் சுய நலமாகவே செயல்பட்டு உள்ளனர், ஆனால் அவர்கள் கத்துக் குட்டியாக இருக்கும் பொழுதுதான் இந்த தவறுகள் நிகழ்கிறது. அவர்கள் புனிதனான பிறகு அவர்கள் தவறு அவர்களுக்கு தெரிய வரும்.
அப்பொழுது இது எல்லாமே இயற்கையின் செயல் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு படையெடுப்பு பற்றியும் தெரியும் உங்களின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றியும் தெரியும். ஆனால் அவர்கள் இயற்கையின் வழியில் அனைத்தையும் விட்டு விடுவார்கள். அவர்கள் இயற்கையின் குறுக்கே நிற்க மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் தான் இயற்கையே. நீங்களும் நானும் கூடத்தான். (குறிப்பு: இது என்னுடைய இன்றைய கருத்து...உண்மையை உணர நீங்கள் இதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்)இவன் இயற்கையின் அங்கம்இறைத்துளி
இரா. புரட்சிமணி/////////

இருக்கிற ஆய்வுகள் எல்லாம் பத்தாதா, புரட்சி?

SP.VR. SUBBAIYA said...

astroadhi said...அய்யா வணக்கம்.....கேள்வி பதில் பகுதி நன்று....அனைத்திற்க்கும் ஏற்ற கண்ணதாசன் வரிகள் அற்புதம் .....அதிலும் மலையாள படம் மற்றும் ப்ரியாமணி போட்டவை பாக்கட்டில் வைக்க சொன்ன நயம் சிறப்பு.......நன்றி வணக்கம்,,,,,,/////

நல்லது.நன்றி ஆதிராஜ்

SP.VR. SUBBAIYA said...

///////// Govindasamy said...அருமையான விளக்கங்கள்.எத்துனைதரம் புரட்டிப் போட்டாலும் வாத்தியார் ground reality யை மறப்பதில்லை.//பரம்பரை மீன்ஸ்..? ( கோத்திரம் என்பார்களே )
வழி வழியாக ( தோன்றலாக ) வந்த நபர்கள் என்கின்ற பொருளில் இங்கு எம்முடைய கேள்வி ஐயா//இதைப் பார்த்தால் அனைவரும் ஆதிமனிதனின் கோத்திரம் தானே அய்யா..தவறு இருப்பின் மன்னிக்கவும்////////

அதானே!

Arulkumar Rajaraman said...

DEar Sir

Kelviyum Badhilum Arumai Sir.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

R.Puratchimani said...

///SP.VR. SUBBAIYA said...

இருக்கிற ஆய்வுகள் எல்லாம் பத்தாதா, புரட்சி?////

ஐயா நான் பின் வரும் குறளை மனதில் கொண்டுதான் ஆய்வு என்று கூறினேன். ஒன்னும் தவறில்லையே?.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

மைனர்வால் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு இந்தியா பற்றிய என்னுடைய பின்னூட்டத்திற்கு கருத்து கூறியிருந்தார், அவருக்கு இந்த பின்னூட்டத்தின் மூலமாக நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

bhuvanar said...

சார்,

இன்றைய பதிவுக்கு நன்றிகள்...

லாஸ்ட் பெஞ்ச் மாணவன்
பாண்டியன்

aryboy said...

வணக்கம் அய்யா,
இன்றைய கேள்வி பதில் கடியோ கடிதான்.
ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு.நன்றி.
அரிபாய், வாழ்க வளமுடன்.

kmr.krishnan said...

//இதைப் பார்த்தால் அனைவரும் ஆதிமனிதனின் கோத்திரம் தானே அய்யா..//
ஆதிமனிதன்(Adam) ஒருவன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதும், அவ்னில் இருந்துதான் மற்ற எல்லா மனிதர்களும் உற்பத்தியானார்கள் என்பதும் 'அப்ரஹாமிக் ரெலிஜன்ஸ்' என்னும் யூதம்,கிறித்துவம், இஸ்லாம் ஆகியவைகளின் கருத்தாகும்.ந‌மது பாரதம் அக்கருத்தினை ஏற்கவில்லை.


அந்தண‌ர்கள் தாங்கள் 7 ரிஷிகளுடைய 'லீனியேஜ்' வழித்தோன்றல்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். அந்த எழுவர் யர்ர் யார்?அகஸ்தியர்,ஆங்கிரஸர்,அத்ரி,பிருகு,காஸ்யபர்,வஸிஷ்டர்,விஸ்வாமித்ரர்.
இந்த‌ எழுவ‌ரின் பிள்ளைக‌ள், பெய‌ர‌ர்க‌ள் பேரிலும் கோத்திரங்கள் தோன்றியுள்ளன. உதாரண‌மாக நான் பாரத்வாஜ கோத்திரத்தினைச் சேர்ந்தவன்.
பாரத்வாஜ ரிஷி ஆங்கிரஸரின் பிள்ளை.இருப்பினும் நான் என்னை பாரத்வாஜரின் கோத்திரமாகவே கருதிகொள்கிறேன்.ஆவணி அவிட்டம் அன்று அந்தணர்களுக்கு 'லீனியேஜ்'கொடுத்த அனைத்து ரிஷிகளுக்கும் பெயர் சொல்லி நீர்க்கடன் அளிக்கிறோம்.
திரும‌ண‌த்தின் போது ஸ‌கோத்ர‌த்தில் அதாவ‌து ஒரே கோத்ர‌த்துக்குள் பெண் கொடுப்ப‌தில்லை.அப்ப‌டி செய்தால் அண்ண‌ன் தங்கை திருமண‌‌ம் செய்வது போல‌. என‌வே வேறு கோத்திர‌க்கார‌னுக்குத்தான் பெண்ணைத் திருமண‌‌ம் செய்து கொடுப்போம்.Modern medical science அத்தை பைய‌ன்‍ மாமா ‌பெண் நெருங்கிய‌ உற‌வுத் திரும‌ண‌ம் வேண்டாம் என்று கூறுவ‌தை ஒப்பிட்டுப் பார்க்க‌வும். ச‌ம‌ நிலை‌யில் நின்று சிந்திப்பவர்கள் நமது முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தை அறியலாம்.

அந்தணர்களைப் போலவே மற்ற இனத்தவரும் இந்த கோத்திரம் பற்றிய அறிவு மிகுந்தவர்களாகவே உள்ள‌னர். List of Gothras in India"என்று Google ஆண்ட‌வரைக் கேளுங்கள்.த‌க‌வ‌ல் கொட்டும்.


SP.VR. SUBBAIYA said...

////சூரிபாபா said...
தஞ்சை பெரியகோவில் பற்றி இங்கே KMR Sir பேச்சு வந்தால் just wanted to share some info-
வாய்ப்பு கிடைதால் , வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு நாவல் ”உடையார்”
http://balakumaranpesukirar.blogspot.com/2009/06/blog-post_6084.html
உடையார் - ஒரு முன்னுரை ” இதை வெறும் சரித்திர நாவலாக மட்டும் கருதவில்லை. ஒரு இனத்தின் பண்பாட்டு
வெளியீடாக, ஒரு நதிக்கரை நாகரிகத்தின் நிறைவான கதையாக, வரலாற்றைக் காட்டிலும் பிரம்மாண்டமான் சனாதன
தர்மத்தின் ஒரு அலைவீச்சாக, தமிழ் பேசும் எம் குடிமக்கள் எத்தனை அற்புதமான விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான
வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்ற விதமாகவும் எழுதியிருக்கிறேன் “///////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...
This comment has been removed by the author.
SP.VR. SUBBAIYA said...

/////////////Arulkumar Rajaraman said...
DEar Sir
Kelviyum Badhilum Arumai Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நன்றி ராஜாராமன்!

s.adimoulame said...

கேள்வி பதில் அருமை. பாடல்களால் விளக்கம் அளீத்தது மிகவும் அருமை. நன்றி.

kubendiran said...

சார்.,
என் பெயர் குபேந்திரன்
நான் தொடர்ந்து சில சந்தேக கேள்விகள் தங்களுக்கு மெயில் மூலம் அனுப்பி இருந்தேன். பதில் இல்லாததால் . இதன் மூலம் கேட்குறேன் . தயவு கூர்ந்து பத்தி தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

எனது கேள்விகள் .,

குருவிற்கு வணக்கங்கள்.,

1 ., ராகு எங்கு இருந்தாலும் அதன் திசை சிரம திசையாக இருக்குமா? அல்லது 11 ஆம் திசையாக வரும்பொழுது நன்றாக இருக்குமா?. அல்லது ராகுவின் சாரத்தை பொறுத்து பலன் இருக்குமா? சுய சாரம் வாங்கி இருந்தால் எப்படி?சற்று விளக்குங்கள் .

2 . எல்லா தசை நாதனும் அதன் இருக்கும் இடத்தை வைத்து பலன் இருக்குமா? அல்லது சாரத்தை வைத்து பலன் இருக்குமா?
உதாரணமாக 5 ஆம் இடத்து திசை நடக்கும்பொழுது சாரம், 8 ஆம் இடத்து சாரம் வாங்கி இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும்?
3 . சூரியன் 10 ஆம் இடத்தில் இருந்தால் திக்பலம் என்று படித்து இருக்கிறேன் . தங்களுடைய பாடத்தில் சூரியன் 10 தில் இருந்தால் நல்ல இடமில்லை என்று வருகிறது . எனக்கு புரியவில்லை.

4 . மேலும் ஒரு கிரகம் இருக்கும் இடம் மட்டும் பார்க்க வேண்டுமா ? அல்லது தன்னுடைய இஸ்தானதுக்கு எந்த இடத்தில இருக்கிறது என்று பார்க்க வேண்டுமா? உதாரணமாக, சூரியன் மகரத்தில் இருந்தால் மேஷ லக்னத்திற்கு 10 ஆம் இடம் ஆக வருகிறது , ஆனால். தன்னுடைய இஸ்தானதுக்கு 6 ஆம் இடம் ஆக வருகிறது . சூரிய திசை வந்தால் பலன் எவ்வாறு இருக்கும் ?

நன்றி
தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்

குபேந்திரன் .

iyer said...

கேள்விகள் 80யை நெருங்குகிறது . .
எங்கே நான்.. என மனம் ஏங்குகிறது..

இருந்தாலும் எல்லாமே சுவையாகத் தான் இருக்கிறது . .

எதர்த்தம் எப்போதும் போல் இனிக்கிறது
எங்கே அந்த வாஷிங் மிஷின் என எல்லோரையும் தேட வைத்ததும் புரிகிறது

hai_cha70 said...

அன்பு ஐயா என் கேள்வியே மையமாக கொண்டு பதிவு எழுதியமைக்கு நன்றி.
//லக்(கி)னம் என்பது பெயர்ச் சொல். சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events at any given time of the day with reference to the time of sun rise//அதிகாரபூர்வமான உன்மை.

ஐயா நான் ஜோதிட ஆராடய்ச்சி செய்வது உண்மைதான்.இருந்தாலும் தாங்களிடம் இந்த கேள்வியே நல்லபதில் கிடைக்கும் என்ற நோக்கில்தான் கேட்டதை தவிற விளையாட்டிற்ககா கேட்டவை அல்ல.
ஆகவே உங்கள் மனதிற்க்கு தவறாக தென்பட்டால் என்னை மன்னித்துவிடவும்.

R.DEVARAJAN said...

>>> லக்கணம் என்பதன் பொருள் மட்டும் போதும்.<<<

நாகர்கோவில் ஐயா பொருள் அறிந்துகொள்ள விரும்புவதில் தவறில்லை.

லக்கணம் தவறு; லக்னம் சரி

வடமொழி இலக்கணத்தின்படி ‘லக்’ என்னும் வேரிலிருந்து தோன்றிய சொல்.

‘லக்’ - உறுதியான சேர்க்கை ; அதில் அமைவது லக்னம்தேவ்

SP.VR. SUBBAIYA said...

//////R.Puratchimani said...
///SP.VR. SUBBAIYA said...
இருக்கிற ஆய்வுகள் எல்லாம் பத்தாதா, புரட்சி?////
ஐயா நான் பின் வரும் குறளை மனதில் கொண்டுதான் ஆய்வு என்று கூறினேன். ஒன்னும் தவறில்லையே?.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
மைனர்வால் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு இந்தியா பற்றிய என்னுடைய பின்னூட்டத்திற்கு கருத்து கூறியிருந்தார், அவருக்கு இந்த பின்னூட்டத்தின் மூலமாக நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.///////

மெய்ப்பொருள் காண்பது வேறு. ஆராய்ந்து குடைவது வேறு!

SP.VR. SUBBAIYA said...

/////bhuvanar said...
சார்,
இன்றைய பதிவுக்கு நன்றிகள்...
லாஸ்ட் பெஞ்ச் மாணவன்
பாண்டியன்////

நல்லது. நன்றி பாண்டியன்

SP.VR. SUBBAIYA said...

/////aryboy said...
வணக்கம் அய்யா,
இன்றைய கேள்வி பதில் கடியோ கடிதான்.
ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு.நன்றி.
அரிபாய், வாழ்க வளமுடன்.///////

கடி என்கிறீர்கள். அடுத்து நல்லா இருக்கு என்கிறீர்கள். முரண்படுகிறதே!:-)))

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
//இதைப் பார்த்தால் அனைவரும் ஆதிமனிதனின் கோத்திரம் தானே அய்யா..//
ஆதிமனிதன்(Adam) ஒருவன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதும், அவ்னில் இருந்துதான் மற்ற எல்லா மனிதர்களும் உற்பத்தியானார்கள் என்பதும் 'அப்ரஹாமிக் ரெலிஜன்ஸ்' என்னும் யூதம்,கிறித்துவம், இஸ்லாம் ஆகியவைகளின் கருத்தாகும்.ந‌மது பாரதம் அக்கருத்தினை ஏற்கவில்லை.
அந்தண‌ர்கள் தாங்கள் 7 ரிஷிகளுடைய 'லீனியேஜ்' வழித்தோன்றல்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். அந்த எழுவர் யர்ர் யார்?அகஸ்தியர்,ஆங்கிரஸர்,அத்ரி,பிருகு,காஸ்யபர்,வஸிஷ்டர்,விஸ்வாமித்ரர்.
இந்த‌ எழுவ‌ரின் பிள்ளைக‌ள், பெய‌ர‌ர்க‌ள் பேரிலும் கோத்திரங்கள் தோன்றியுள்ளன. உதாரண‌மாக நான் பாரத்வாஜ கோத்திரத்தினைச் சேர்ந்தவன்.
பாரத்வாஜ ரிஷி ஆங்கிரஸரின் பிள்ளை.இருப்பினும் நான் என்னை பாரத்வாஜரின் கோத்திரமாகவே கருதிகொள்கிறேன்.ஆவணி அவிட்டம் அன்று அந்தணர்களுக்கு 'லீனியேஜ்'கொடுத்த அனைத்து ரிஷிகளுக்கும் பெயர் சொல்லி நீர்க்கடன் அளிக்கிறோம்.
திரும‌ண‌த்தின் போது ஸ‌கோத்ர‌த்தில் அதாவ‌து ஒரே கோத்ர‌த்துக்குள் பெண் கொடுப்ப‌தில்லை.அப்ப‌டி செய்தால் அண்ண‌ன் தங்கை திருமண‌‌ம் செய்வது போல‌. என‌வே வேறு கோத்திர‌க்கார‌னுக்குத்தான் பெண்ணைத் திருமண‌‌ம் செய்து கொடுப்போம்.Modern medical science அத்தை பைய‌ன்‍ மாமா ‌பெண் நெருங்கிய‌ உற‌வுத் திரும‌ண‌ம் வேண்டாம் என்று கூறுவ‌தை ஒப்பிட்டுப் பார்க்க‌வும். ச‌ம‌ நிலை‌யில் நின்று சிந்திப்பவர்கள் நமது முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தை அறியலாம்.
அந்தணர்களைப் போலவே மற்ற இனத்தவரும் இந்த கோத்திரம் பற்றிய அறிவு மிகுந்தவர்களாகவே உள்ள‌னர். List of Gothras in India"என்று Google ஆண்ட‌வரைக் கேளுங்கள்.த‌க‌வ‌ல் கொட்டும்./////

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சார்!

SP.VR. SUBBAIYA said...

/////s.adimoulame said...
கேள்வி பதில் அருமை. பாடல்களால் விளக்கம் அளித்தது மிகவும் அருமை. நன்றி.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////iyer said...
கேள்விகள் 80யை நெருங்குகிறது . .
எங்கே நான்.. என மனம் ஏங்குகிறது..
இருந்தாலும் எல்லாமே சுவையாகத்தான் இருக்கிறது . .
எதர்த்தம் எப்போதும் போல் இனிக்கிறது
எங்கே அந்த வாஷிங் மிஷின் என எல்லோரையும் தேட வைத்ததும் புரிகிறது////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////hai_cha70 said...
அன்பு ஐயா என் கேள்வியே மையமாக கொண்டு பதிவு எழுதியமைக்கு நன்றி.
//லக்(கி)னம் என்பது பெயர்ச் சொல். சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events at any given time of the day with reference to the time of sun rise//அதிகாரபூர்வமான உன்மை.
ஐயா நான் ஜோதிட ஆராடய்ச்சி செய்வது உண்மைதான்.இருந்தாலும் தாங்களிடம் இந்த கேள்வியே நல்லபதில் கிடைக்கும் என்ற நோக்கில்தான் கேட்டதை தவிற விளையாட்டிற்ககா கேட்டவை அல்ல.
ஆகவே உங்கள் மனதிற்க்கு தவறாக தென்பட்டால் என்னை மன்னித்துவிடவும்.//////

It is all right!

SP.VR. SUBBAIYA said...

////R.DEVARAJAN said...
>>> லக்கணம் என்பதன் பொருள் மட்டும் போதும்.<<<
நாகர்கோவில் ஐயா பொருள் அறிந்துகொள்ள விரும்புவதில் தவறில்லை.
லக்கணம் தவறு; லக்னம் சரி
வடமொழி இலக்கணத்தின்படி ‘லக்’ என்னும் வேரிலிருந்து தோன்றிய சொல்.
‘லக்’ - உறுதியான சேர்க்கை ; அதில் அமைவது லக்னம்
தேவ்/////

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி!

மகேஷ் ராஜ் said...

sorry 4 late comment .

kanna ur questions are all what ever i think it,s all same . i think ur and my thought are also same. and ur life story is also like me but only one thing u finished ur sukerathesai but i have 3 year to cross it. i also face all those things in my life .