மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

5.9.10

கதையல்ல ....நிஜம்!

நமது வகுப்பறை மாணவரும், 
ஜப்பானில் பொருள் ஈட்டிக் கொண்டிருப்பவருமான 
நெப்போலியன் ஞானப் பிரகாசம் அவர்களின் எழில் மிகு தோற்றம்.

ஜப்பானில் இந்த ஜாம்பவான் வசிக்கும் இடம். 
டோக்கியோவின் வடக்குப் பகுதியில் உள்ள saitama prefecture

அவருக்கான டைட்டில் சாங்:

   “மைனர் மைனர்தான் இது ஜப்பான் மைனர்தான்
        இவர் ஸ்டைலுக்கேத்த ஊரு டோக்கியோ ஒன்னுதான்”

இன்றைய வாரமலரை அவருடைய ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள், அந்த நாட்டு மக்களிடம் 
எப்படி நடந்துகொண்டால், அவர்களின் அன்பைப் பெறலாம் 
என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார். 
படித்துப் பாருங்கள்.

------------------------------------------------------------------------------------
மைனர் வசிக்கும் சைதாமா ஊரின் ஒரு தோற்றம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 Over to his posting
+++++++++++++++++++++++++++++
கதையல்ல ....நிஜம்!

  "மணி ஐந்து ஆயிடுச்சு..இப்போ கிளம்பினால் இருட்டுறதுக்குள்ளே போயிட்டு வந்துரலாம்.."என்று நினைத்தபடியே தூக்கம் களைந்து  படுக்கையில் இருந்து எழுந்து சோம்பல் முறித்தபோது,   வானம் கொஞ்சம் இருட்டத் துவங்கியிருந்தது..ஒரு வேளை மேக மூட்டமாயிருக்குமோ?..பால்கனி ஸ்க்ரீனை விளக்கி எட்டிப் பார்த்தேன்..வெளியில் எங்குமே சூரியனின்
சுவடே தெரியவில்லை..

ஆனாலும் நல்ல சிலுசிலுவென காற்று கூலாக அடிக்கிறது..A /C யை அணைத்துவிட்டு அடுப்பிலே கொஞ்சம் பாலைக் காய வைத்துவிட்டு ஒரு காக்காய்க் குளியலைப் போட ஷவரைத் திருகினால்,  சில்லென்று தண்ணீர் நெஞ்சில் அடிக்க உடல் வெடவெடத்தது.. இது ஒரு தொல்லை.. ஒவ்வொரு தடவையும் இது மறந்தே போகுது..ஹாட் வாட்டர் டப், கூல் வாட்டர் டப் இரண்டையுமே  திறந்து உடம்புக்கு இதமான சூட்டில் வைத்துக் கொள்ளவில்லை என்றால் இப்படித்தான்..

ஷாம்பூ வழவழப்பு  இல்லாத அளவுக்கு ஆசைதீர ஷவர்  தண்ணீரைத்  தலையில் இறக்கி ஒரு வழியாகக் குளியலை முடித்துத் தலையைத் துவட்டிய வண்ணம் பாத்ரூமை விட்டு வெளியில் வந்தபோது,  அடுப்பில் வைத்த பால் பொங்கி வழியும் நிலையில் கடைசி நொடியில். .வெகு வேகமாக ஓடிப்போய் ஸ்டவ்வை அனைத்தேன். சே..இது ஒரு தொல்லை..இந்த எலெக்ட்ரிக் ஸ்டவ் எப்போமே தலைவலிதான். ஆர்டினரி காஸ் ஸ்டவ்வை விட ஸ்லோ என்பதாலே எவ்வளவு நேரம் ஆகுமென்பது  மனதிலே பதிவதில்லை.

இந்த அபார்ட்மென்ட் மானேஜ்மென்ட் ஆளுங்க காஸ் ஸ்டவ் என்றால்
புகையைக்  கிளப்பும் என்று  ஒரு கான்செப்ட்டைத் திங்க் பண்ணி நமக்கு
மண்டைக் குடைச்சலைக்  குடுத்துட்டானுங்க.. Bachelor  லைஃபிலே சொந்த சமையல் ஒரு இம்சைதான்..

அந்த STAR என்று ரெயின்போ கலர் லெட்டெரிங்  பண்ணின ப்ளாக் கலர் டி ஷர்ட்டைப் போட்டுக் கொண்டு,  மாட்சிங் பார்த்து,  கிரே கலர் கமோப்லேஜ்  பிரிண்டட் காஸுவல் ட்ரவுசர்லே புகுந்து,  வாட்சை கட்டிக் கொண்டு, மணியைப் பார்த்தபோது 5 .45 ஐ தாண்டி விட்டிருந்தது..இன்னும் காய வைத்த பால் அப்படியே..வேக,  வேகமாக நெஸ்கபே இன்ஸ்டன்ட் காப்பியைக் கலந்து குடித்து முடித்து, சாக்ஸ் கட்ஷூ சகிதம் வெளியில் வந்து ரூமைப் பூட்டியபின்பு தான் i Podஐ  எடுத்து வைக்காதது ஞாபகம் வந்தது..

மறுபடி கதவைத்  திறந்து ராக்கில்  தேடி , அங்கே இல்லாமல்  தலையணைக்குக் கீழே  இருந்து எடுத்து,   பாக்கெட்டில் சொருகியபோது
தான்   கண்ணில் பட்டது டேபிளில் இருந்த  ரொம்ப அவசியமான ஐட்டம்.. செல்போன்..ஆஹா.. i Podஐ  மறந்தது  நல்லதாகப் போச்சு..இல்லேன்னா
அங்கே  போய்  ஒரு வேலையும் ஆகாது..செல்போனை எடுத்துப்
பாக்கெட்டில் சொருகிய படியே ரூமைப்  பூட்டிக்கொண்டு,  வாட்சைப்
பார்க்க மணி ஆறைக் கடந்து விட்டிருந்தது..

எப்படிப்  பார்த்தாலும்,  என்ன வேகமாக் கிளம்பினாலும் பிளான் பண்ணின நேரத்துக்கு ஒரு பத்து நிமிஷமாவுது முன்னாடி கிளம்பிறனும்னு
எப்பவுமே நினைக்கிறதுதான்..ஆனா நடக்கிறதோ இப்படித்தான்..

6 மணி 9 நிமிஷத்துக்கு ஒரு பஸ்

என் வீட்டிற்குப்  பக்கத்தில் உள்ள  பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்கும்.
ரயில்வே ஸ்டேஷன் போறகின்ற பஸ் அது. அதை விட்டா அடுத்த
பஸ் ஏழு  மணிக்குத் தான். பிடிச்சிறலாமா? வேகவேகமா
நடையைக் கட்டினேன்..வாட்சைப் பார்க்கும்படி மனசு  சொல்கிறது..
வேண்டாம் .டென்சனாகும் என்று..அதே மனசு எச்சரிக்கிறது...

பஸ் ஸ்டாண்டை  நெருங்கும் போது, 100 மீட்டர் தூரத்திலே  அந்த பஸ் வருவது  தெரிகிறது.. இன்னிக்கு ஒரே அத்தலெடிக்தான்..நூறு மீட்டர்கள்
தானே - ஓட முடியாதா என்ன?  ஓடி வர்றதைப் பார்த்தாலுமே  நிறுத்த மாட்டான்..ஜப்பானீஸ்ன்னா சும்மாவா? அவன் டைம் அவனுக்கு..லேட்டா வந்தது  நானில்லே..என்ன பண்றது.. எங்க ஊர்லே பஸ் நிக்காமப் போச்சுன்னா அடுத்த நாள் டிரைவருக்கு இருக்கு இல்லே ஆப்பு..இப்படியே பழகிப் போயாச்சு..வேற வழி..ஓடு..வேகமா ஓடு..

அப்பாடா..மூச்சிரைக்க ஓடி   ஒரு வழியா ஸ்பாட்டுக்கு வந்தாச்சு..பஸ்சுலேயும் ஏறியாச்சு..இப்பத்தான் இந்த சந்தேகம்..இந்த பஸ் ரயில்வே ஸ்டேஷன் போறதுதானா? அவசரத்துலே ஜப்பானீஸ் கான்ஜி எழுத்துலே எழுதியிருந்ததைப் படிக்க மறந்துட்டோமே? (படிச்சிருந்தால் மட்டும் அப்பிடியே புரிஞ்சுடுமா என்ன?)

சரி...வெக்கத்தை எல்லாம் பார்த்தா முடியுமா? டிரைவர் கிட்டே போய் கேட்டால் அவர் ஒரு பதிலை சொன்னார்..ஒரு குத்துமதிப்பாப் புரிஞ்சுக்கிட்டு

(நான் கேட்டது அவருக்குப் புரிஞ்சுருக்கணும்..அவரு சொன்னது எனக்குப் புரிஞ்சுருக்கணும்..ரெண்டுமே தகராறுதான்..இருந்தாலும் கடவுள் மேல பாரத்தைப் போட்டு எப்படியும் போயிச் சேர்ந்துருவோம்ன்னு) ஒரு நம்பிக்கைலே ஒரு காலி சீட்லே உட்கார்ந்தேன்..

ஒரு பெரிய சாதனையைச் செய்ததுபோல ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி சுத்தி முத்திலும் நோட்டம் விட்டேன்..

அங்க எனக்கு சைடிலே ஒரு பொண்ணு 4 சின்னப் பசங்களை வெச்சுக்கிட்டு படாத பாடு  பட்டுக் கொண்டிருந்தது..செம சூட்டியான பசங்க. நாலு பேருக்குமே கிட்டத்தட்ட  ஒரே வயசு போலத்தான் தோணுது. எப்படி? ஒரே பிரசவத்துலே இருக்குமோ? ச்சே..ச்சே..என் புத்தி ஏன் இப்பிடி போகுது?

ஒரு  வேளை ட்வின்ஸா இருந்து ரெண்டு அட்டெம்ப்ட்லே நடந்திருக்குமோ? இந்த ஆராய்ச்சி இப்போ ரொம்ப முக்கியம்..ஆஹா.அந்த பொண்ணு, அந்தம்மா வேற நான் விட்ட லுக்குக்கு எதிர் லுக் விட லேசாத் தலையைக் குனிஞ்சி வெச்சேன்..(ரொம்பத்தான் மரியாதை..) ஜப்பான்காரங்களுக்கு முன்னாடி குனிஞ்சு  மரியாதை செஞ்சிட்டாப் போதும்; உச்சி குளிர்ந்திடும்..பின்னாடி எப்படி வேணும்னாலும் பேசிட்டுப் போகலாம்..இந்த ஒரே ஃபார்முலாவை  வெச்சித்தான் வெளிநாட்டு ஆளுங்க பாதிப்பேரு இங்க காலத்தை ஒட்டுறாங்க...

பஸ் ஓடுறதே தெரியலை..அதுக்குள்ளே ரெண்டு மூணு ஸ்டாப்பிங் வேற போயிடுச்சு..ரயில்வே ஸ்டேஷன்ன்னா கொஞ்சம் பழக்கப்பட்ட ஏரியா..அதுனாலே இறங்குறது ஒண்ணும் அவ்வளவு பிரச்சினையா இருக்காதுன்னு நினைக்கிறேன்..எதுக்கும் இங்கேருந்து எத்தினியாவுது ஸ்டாப்பிங்குன்னு யாரையாவுது கேட்டுத் தெரிஞ்சுக்குறது நல்லதில்லே?

போற வரைக்கும் கொஞ்சம் பொறுமையாத்தான் இருந்தா என்னா?..]

சரி..இருக்கவே இருக்கு iPod ..ஹெட் செட்டை எடுத்து மாட்டி என் கலேக்சன்லே தேடி

'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது.....' பாட்டைக் கேட்டு முடித்தபோது சற்று வெளிப்பக்கம் பார்த்து தெரிந்த பில்டிங்குகள் ஏதும் தென்படுகிறதான்னு வேற ஒரு குய்க் க்ளான்ஸ்..இந்தக் கவனச் சிதறலால்  அடித்த பாட்டுலே கொஞ்சம் ஓடிப் போயிருந்தது..'ஊரு சனம் தூங்கிடிச்சு..ஊதக்காத்தும் அடிச்சுருச்சு..' பாட்டு ஓடிக் கொண்டிருந்தது..நானும் ரொம்ப நாளா நினைக்கிறேன்..இந்தப் பாட்டும் இதுக்கு முதல்லே ஓடுன பாட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லியே..இது வேற சீரீஸ்..அது வேற சீரீஸ்..எல்லா ஆர்டரையும் மாத்தணும்..80 GB iPod லே

வேணுங்குறதை எத்துறதே பெரும் பாடு..flv போர்மட்லே டவுன்லோட் ஆனத mp4 க்கு மாத்துறதுக்குள்ளே தாவு தீர்ந்துடும்..ஏதோ iPod  வாங்கின புதுசுலே ஒரு ஸ்பிரிட்லே 24 GB க்கு மேல ஏத்தியாச்சு..இதையெல்லாம் புடிச்சதை சரியா ஒழுங்கா பிரிச்சு  பண்ணனும்ன்னுதான் நானும் நினைச்சுக்கிட்டே இருக்கேன்..எங்க? இதுக்கெல்லாம் நேரம் கிடைக்குது..

ஆஹா..வாட்சைப் பார்த்தால் மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது...சரி..டிரைவெர் கிட்டவே  கேட்டுட வேண்டியதுதான்..இன்னும் இரண்டே ஸ்டாப்பிங்குகள்தான்.. ஸ்டேஷன்லேருந்து என் வீட்டுக்குத் திரும்ப வர லாஸ்ட் பஸ் எத்தினி மணிக்குன்னு கேட்டேன்..9.30 க்குன்னாரு..

அதுக்குள்ளே  திரும்பிட முடியுமா? நாளைக்கும் நாளன்னிக்குமே லீவுதான்..இருந்தாலும்..சரி..பார்ப்போம்..

(எனக்கு லீவு..சரி..உங்களுக்கு? இப்பிடியே பஸ்சுலே போயி அங்க நடந்த கதையை சொல்லி முடிக்குறதுக்குள்ளே ஒரு வாரம் ஆயிடும் போலருக்கே.. சரி.. இன்னைக்கு இத்தோட முடிச்சுக்குவோமா?)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரமலரின்  இரண்டாவது பகுதி!

எல்லாம் அவன் செயல்!

என் தந்தையார் சுதந்திரப் போராட்ட வீரர்.  டாரீராமகிருஷ்ண‌  பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், அன்னை சாராதாமணி தேவியார், ம‌ஹாக‌வி பார‌தியார், ம‌ஹாத்மா காந்தி, ரமண மஹரிஷி, திருக்கோவிலூர் ஞானான‌ந்த சுவாமிகள், வ‌ட‌கும‌ரை அப்ப‌ண்ண‌ சுவாமிக‌ள் இன்னும் பல‌ யோகிய‌ரிட‌ம் ஈடுபாடு. இவ‌ர்களைப் ப‌ற்றிம‌ட்டுமே எப்போதும் பேசிக்கொண்டு இருப்பார்.

மேடையிலும் பேசும் திற‌ன் பெற்ற‌வ‌ர்.ம‌ஹாக‌வியின் பாட‌ல்க‌ளை ஒலி பெருக்கி இல்லாம‌ல் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் கேட்க்கும் வண்ண‌‌ம் ஓங்கிய‌ குர‌லில் உண‌ர்ச்சி கொப்ப‌ளிக்க‌ப் பாடும் திற‌மை பெற்ற‌வ‌ர்.அம‌ர‌ர் க‌ல்கி, மூதறிஞர் ராஜாஜி ஆகியவர்களின் கைகளால் உருவாக்கப்பட்டவர்.

சிறிய வயதில் எஙக‌ளுக்கு ம‌ஹாக‌வியின் புதிய‌ ஆத்திசூடியைப் போதித்தார்.பொருளுடன் மனப்பாடம் செய்தோம். அதில் "சோதிட‌ம் த‌னை இகழ்" என்று வரும். வீட்டில் ஜாதகம், கிரஹம், பஞ்சாங்கம் என்ற பேச்சே இருக்காது. (இந்த இடத்தில் நாங்கள் அந்தணர்கள் என்பதைக் கூறிக் கொள்கிறேன். ஏன்? ஏனெனில் அந்தணர்கள்தான் அதிகம் சோதிடம் பற்றிப் பேசக்கூடியவர்கள். நாள் நட்சத்திரம் பார்க்கக் கூடியவர்கள்.)எங்கள் வீடு மட்டும் அக்ர‌ஹார‌த்தில் வித்தியாச‌மாக‌ இருக்கும்.

சேல‌ம் அர‌சுக்க‌ல்லூரியில் (முன்ன‌ர் முனிசிப‌ல் க‌ல்லுரி) வேதிய‌லில் (கெமிஸ்டிரி) இள‌ங்க‌‌லை முத‌ல் வ‌குப்பில் தேறி மேட்டூரில் 'கெம்பிளாஸ்ட்' என்ற‌ க‌ம்பெ‌னியில் ஆய்வ‌க‌த்தில் வேதிய‌லாள‌ராக ‌(கெமிஸ்ட்)ப‌ணியில் சேர்ந்தேன். ரூ300/=மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம்.அப்போது இர‌வுப் ப‌ணியும்(ஷிஃப்ட்) உண்டு.தூக்க‌ப் பிரிய‌னான‌ என‌க்கு இர‌வு நேர‌ வேலை பிடிக்க‌வில்லை.

10 முத‌ல் 5 ம‌ணி வ‌ரை உள்ள‌ வெண்ணிற‌ ஆடை வேலையைத் தேட‌த் துவ‌ங்கினேன். வாய்ப்பாக‌ அப்போது ஆயுள் காப்பீட்டுக் க‌ழ‌க‌த்தில் எழுத்த‌ர் ப‌ணிக்கு ஆள் சேர்ப்புத் துவ‌ங்கிய‌து.கோவைப் ப‌குதிக்கு விண்ண‌ப்பித்தேன். ஆங்கில‌த்த்ல் அதிக‌ ம‌திப்பெண் இருந்த‌தால் தேர்வு இல்லாம‌ல் நேர‌டியாக‌ நேர்முக‌த் தேர்வுக்கு அழைத்தார்க‌ள்.அப்போது க‌ள்ளிக்கோட்டையும் கோவைப்ப‌குதியைச் சார்ந்து இருந்த‌து. கேர‌ளாவில் இருந்து ஆண்க‌ளும் பெண்க‌ளூம் நூற்றுக்க‌ண‌க்கில் நேர்முக‌த்தேர்வுக்கு வ‌ந்தார்க‌ள்.அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் முதுக‌லைப் ப‌ட்ட‌தாரிக‌ள். நானோ இள‌‌ங்க‌‌லை ம‌ட்டுமே வைத்துள்ளேன்.என‌க்கே கொஞ்ச‌ம் அவ‌ ந‌ம்பிக்கையாக‌ இருந்த‌து.

நேர்முக‌த்தில் என்னென்ன‌ கேட்க்க‌ப்ப‌டும் என்று வெளியில் பெரிய‌ ப‌ட்டிம‌ன்ற‌மே ந‌ட‌ந்து கொண்டு இருந்த‌து.
எல் ஐ சி ப‌ற்றிய‌ அனைத்து செய்திக‌ளும் அல‌ச‌ப்ப‌ட்ட‌ன‌.

என் முறை வ‌ந்த‌து.என்னைப்ப‌ற்றிய‌ அடையாள‌ங்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளுக்குப் பின்ன‌ர் ஓர் அதிகாரி கேட்டார்: "உங்க‌‌ள் த‌ந்தை என்ன‌ வேலை செய்கிறார்?"

நான்: "அவ‌ர் ஒரு சுத‌ந்திர‌ப் போராட்ட வீர‌ர். காந்தீய‌ நிர்மாண‌த் திட்ட‌ ஊழிய‌ர்"

அதிகாரி: "உங்க‌ள் த‌ந்தை‌யார் அவ‌ருடைய‌ எந்த‌ வ‌ய‌தில் போராட்ட‌த்தில்  சேர்ந்தார் என்று அறிவீர்க‌ளா?"

நான்: "சுமார் 16 வ‌ய‌து இருக்க‌லாம்‌"

அதிகாரி: "அக்கால‌த்தில் அவ்வ‌ள‌வு சிறிய‌ வ‌ய‌திலேயே நாட்டுப் ப‌ற்றோடு இளை‌ஞ‌ர்க‌ள் இருந்துள்ளார்க‌ள். இக்கால‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஏன் நாட்டுப்ப‌ற்று குறைவாக‌ உள்ள‌து?"

நான்: "அவ‌ர்க‌ளுக்குக் கிடைத்த‌து போல் உத்த‌ம‌ர் காந்தி எங்க‌ளுக்குத் தலைவ‌ராக‌க் கிடைக்க‌வில்லையே!"
பெரிதாக‌ச் சிரித்துவிட்டு போக‌ச் சொல்லி விட்டார்க‌ள்.

ச‌ரி ஊத்திக்கொண்டுவிட்ட‌து என்று எண்ணிக்கொண்டு வெளியில்வ‌ந்தேன்.

வெளியில் ம‌லையாளிக‌ள் சூழ்ந்து கொண்டு "என்ன‌ கேட்டார்க‌ள்?" என்று துளைத்தார்க‌ள். .எல்.ஐ சி ப‌ற்றி எதுவும் கேட்க‌வில்லை என்ற‌வுட‌ன் "போய்க்கோ,போய்க்கோ.. அதெ.." என்கிறார்க‌ள்.

அவ‌ர்க‌ளின் கேலிப்பேச்சால் ம‌ன‌ம் நொந்து  திரும்பினேன்.

ஒரு மாத‌த்தில் முடிவுக‌ள் வெளியாயின‌. 400 பேரைப் ப‌ட்டிய‌லிட்டு இருந்தார்க‌ள்.

அதில் நான் 7வ‌து இட‌ம்! 

கட்டாயம் முதல் சுற்றிலேயே பயிற்சிக்கு அழைக்கப்படுவேன் என்பதை உறுதி செய்து கொண்டு 'கெம்பிளாஸ்டு' வேலையை கொஞ்சம் அவச‌ரப்பட்டு ராஜினாமா செய்துவிட்டேன்.

எதிர்பார்த்தது போலவே ஆணை வந்துவிட்டது.கோவையில் ஜகதீஷ் சந்திரன் என்ற மருத்துவரிடம் உடல் நிலை சரியாக உள்ளது என்பதற்கு சான்று பெற்று சமர்ப்பிக்கப் பணிக்கப்பட்டேன்.

கோவை ராம் நகர் விவேகானந்தா சாலையில் என் சித்தி வீட்டில் இருந்தேன். அடி குழாயில் சித்திக்கு 10 வாளித் தண்ணீர் அடித்துக் கொடுத்துவிட்டு, வேர்வை அடங்கு முன் மருத்துவ சோதனைக்குச் சென்றேன். சோதித்த மருத்துவர்," சரி அறிக்கையை எல் ஐ சி க்கு அனுப்பி விடுகிறேன். போய் வா" என்றார்.ஒருவாரம் ஆயிற்று. 2 வாரம் கடந்தது. தகவல் ஒன்றும் இல்லை. எல் ஐ சி அலுவலகத்தில் விசாரித்தால் முதல் சுற்றுப் பயிற்சி நடந்து கொண்டு இருந்தது. நான் அழைக்கப்படவில்லை. ஏன்? ஏன்? ஏன்?

மெதுவாக விசாரித்தால் மருத்துவர் ஜகதீஷ் சந்திரன் என்னை மருத்துவ‌ சோதனையில் தகுதியற்றவன் என்று சான்று அளித்து விட்டாராம்.அப்படி என்ன உடற்குறை? என் இதயம் 'முணு முணு' என்கிறதாம்.எனக்கு சட் என்று எல்லாம் புரிந்தது. அடிகுழாய் செய்த உபாயம்.ஓய்வு கொடுக்காமல் சோதனைக்கு என் உடலை உட்படுத்தியது என் தவறு என்று புரிந்தது.

நானே என் இதயத்தைப் பற்றிய உண்மை நிலையை அறிய விரும்பினேன்.

ம‌ருத்துவர் ரிதுபர்ணன் என்ற மூத்த இதய நோய் சிறப்பு மருத்துவரை அணுகினேன்.அவர் நன்கு சோதித்து இதயம் பழுதில்லாமல் ஆரோக்யமாக இருக்கிறது என்று சான்று அளித்தார். அதனை எல் ஐ சியில் அளித்தேன்.

சென்னை வரை அனுப்பி,அனுமதி பெற்று 2 வது சுற்றில் பயிற்சிக்குக் கூப்பிடுகிறோம் என்றார்கள். இரண்டாவது சுற்று எப்போது என்று கேட்டால்,

'தெரியாது தெரியாது தெரியாது'என்றார்கள். நொந்து நூலாயிட்டேன். அரசனை நம்பி புருஷனைக் கை விட்ட மாதிரி,இருந்த வேலையை விட்டு விட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை.

அப்போது என் பெற்றோர்கள் சென்னையில் என் மூத்த அண்ணன் வீட்டுக்குச் சென்று வசிக்கத் தொடங்கினார்கள்.கோவையில் இருந்து நானும் சென்னை சென்று மைலாப்பூரில் அவர்களோடு  சேர்ந்து கொண்டேன்.

எல் ஐ சியின் மெளனம் என்னை மன அழுத்தத்தில் தள்ளிவிட்டது. சோர்ந்த என்னை உற்சாகத்திற்குக் கொண்டு வர அனைவரும் முயன்றார்கள்.அதன் ஒரு பகுதியாக என் தாயார் "வாடா!பக்கத்தில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் ஒரு வள்ளூவர் சோதிடம் சொல்கிறார். அவரைக் கேட்போம்" என்றார்கள். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னர் அரை மனதுடன் அம்மாவுடன் சும்மா போனேன்.

இந்த இடத்தில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். திருவள்ளுவர் மைலாப்பூர்காரர்.அவருக்கு பல நூற்றாண்டு பழமையான வழிபாட்டில் உள்ள கோவில் உள்ளது. திருவள்ளுவர் வழிபடு தெய்வமாக அபிஷேக ஆராதனை பெற்றுக்கொண்டு அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

வள்ளுவர் என்ற குலம்தான்  தமிழ்நாட்டில் சோதிடம் சொல்ல அருகதை உள்ளவர்கள்.இன்றளவும் இக்குலம் தாழ்த்தப்பட்டவர்களே! ஊர்க் கோடியில் காலனியில்தான் இப்பவும் வசிக்கிறார்கள்.பல்லாண்டுகளாக கணிதம், வானியல்,எழுத்து அறிந்தவர்கள்.ஏதோ அந்தணர்கள் மற்ற இனத்தாருக்குக் கல்வியை மறுத்தார்கள் என்பது எப்படிப்பட்ட திரிபுவாதம் என்பது வள்ளுவர்களைப் பார்த்தாலே அறிந்து கொள்ளலாம்.

"வள்ளுவர் வாக்குப் பலிக்கும்டா!" என்று சொல்லி அம்மா என்னைத் திருவள்ளுவர் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்கள்.அங்கே ஒரு இருட்டு மூலையில் சட்டை அணியாமல் ஒரு கருத்த உருவம் அமர்ந்து இருந்தது. அம்மா அவரிடம் என் ஜாதகத்தைக் கொடுத்தார்கள்.ஒரு அரை நிமிடம் ஜாதகத்தைப்பார்த்தார். உடனே சொன்னார்.: "இந்த வருடம் திருமணம்"

அம்மா:"இப்ப கல்யாணத்திற்கு என்ன அவசரம்?"

வள்ளுவர்: "அப்ப வேலை! இன்ஷுரன்ஸு, வங்கி,வட்டிக்கடை, சீட்டுக்கம்பெனி ஆகிய இடங்களில் கணக்கர் வேலை. அதுதான்
கடைசிவரை சாஸ்வதம் ரொம்ப முன்னேற்றம் கிடையாது. ஆனால்
தன் கடைமையெல்லாம் முடித்து நன்றாக இருப்பார் சுபம்" என்றார்.

அம்மா: "அது சரிதான். வந்த வேலை கை நழுவிவிட்டதே!"

வள்ளுவர்:"ஆர்டர் போட்டாச்சு.தை மாதம் 3ந் தேதி தெற்கே போய்
வேலையில் சேர்ந்து விடுவார்"

அம்மா ரூ2/= தட்சணை கொடுத்தார்கள்.நாங்கள் அவரிடம் சென்றது
மார்கழி மாதக் கடைசியில்.  தை 3 என்பது 16 ஜனவரி ஆகும். 1972ல்
16 ஜனவரி விடுமுறை நாளாகப்போனதால், 17 ஜனவரி,
தை மாதம் 4ந்தேதி கோவையில் எல் ஐ சி யில் சேர்ந்துவிட்டேன்.

வெளிப்பார்வைக்கு படிக்காத பட்டிக்காட்டான் போலத் தோன்றும்
ஒருவரிடம் எவ்வளவு திறமை!

"சோதிடம் தனை இகழ்"என்ற மஹாகவியின் கூற்று சரிதானா என்று என்னை நானே கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.

முதலில் சோதிடத்தை இகழ்வதில்லை என்று முடிவு செய்தேன். சிறிது சிறிதாகப் படிக்கத் தொடங்கினேன்.

இதுதான் நான் சோதிடத்தை நம்பத்தொடங்கியதின் கதை.

ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK), தஞ்சாவூர்.
(நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவர்)


திரு. கே.முத்துராமகிருஷ்ணன் அவர்களின் எழில்மிகு தோற்றம்

-------------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

46 comments:

kmr.krishnan said...

//அங்க எனக்கு சைடிலே ஒரு பொண்ணு 4 சின்னப் பசங்களை வெச்சுக்கிட்டு படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது..செம சூட்டியான பசங்க. நாலு பேருக்குமே கிட்டத்தட்ட ஒரே வயசு போலத்தான் தோணுது. எப்படி? ஒரே பிரசவத்துலே இருக்குமோ? ச்சே..ச்சே..என் புத்தி ஏன் இப்பிடி போகுது?

ஒரு வேளை ட்வின்ஸா இருந்து ரெண்டு அட்டெம்ப்ட்லே நடந்திருக்குமோ? இந்த ஆராய்ச்சி

இப்போ ரொம்ப முக்கியம்..//
Had a hearty laugh!very nice minorwal!Keep it up!Eagerly waiting for the next piece!Congratulations.

Alasiam G said...

மைனர்வாள், சூப்பர் போங்க, சும்மக்கலக்குறீங்க!
"அந்தம்மா வேற நான் விட்ட லுக்குக்கு எதிர் லுக் விட லேசாத் தலையைக் குனிஞ்சி வெச்சேன்..(ரொம்பத்தான் மரியாதை)..
சூப்பர்! அது தான் உண்மை.... உள்ளூரில் தான் மிட்டான் மிராசு எல்லாம், வெளியில போய் விட்டால்..... அருமையான எதார்த்த மிகுந்த நினைவுகள். நன்றி மைனர்வால்.
நன்றி ஆசிரியரே!

கிருஷ்ணன் சார்,
அருமையாக இருக்கிறது, அதிலும் நேர்முகத் தேர்வில் பதில் சொன்ன சாதுர்யம் தான் மிகவும் அருமை. அதுவே உண்மை. இந்திய இளசுகள் நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை என்றால் கவனமாக இருக்க வேண்டும். இன்றும் பலநேரங்களில் பார்ப்பதுண்டு...... கல்யாண மாப்பிள்ளைகள், கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருக்கப் போகிறவர்கள் இவர்கள் எல்லாம் முதல் நாள் இரவு செய்யும் வேலைகளை...... இது இளசுகளுக்கு ஒரு பாடம் ஆகும்.....
" நான்: "அவ‌ர்க‌ளுக்குக் கிடைத்த‌து போல் உத்த‌ம‌ர் காந்தி எங்க‌ளுக்குத் தலைவ‌ராக‌க் கிடைக்க‌வில்லையே!"
பெரிதாக‌ச் சிரித்துவிட்டு போக‌ச் சொல்லி விட்டார்க‌ள்"

"சோதிடம் தனை இகழ்"என்ற மஹாகவியின் கூற்று சரிதானா?
இது எங்கே நமது இளைஞர்களின் மத்தியில் தன முனைப்பின் கூரைப் பழுதாக்கிவிடுமோ என்ற கவலையாக இருக்கும் என நம்புகிறேன். காரணம் அவர் பெரிதும் போற்றிய கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும் ஜோதிடத்தினை மறுக்கவில்லை என்பத எனது தாழ்வானக் கருத்து. அதனாலே! சோதிடம் பொய் என்று சொல்லவில்லை. மாறாக நமது வானவியல் சாஸ்திரத்தை பெருமையாக கருதி இருக்கிறான்.
க்ரிஷ்ணன்சாருக்கு நன்றி. நன் வகுப்பறை வாத்தியாருக்கும் நன்றி.

krishnar said...

வணக்கம் மைனர்வாள் தம்பி,

உங்களுக்கே உரிய விகடத்தனத்துடனான உங்கள் கட்டுரை இரசிக்கத் தக்கதாயுள்ளது; கலக்கிவிட்டீர்கள். கலக்கல் என்ற சொல்லுக்கும் உங்களுக்கும் தொடர்புண்டு. அதுதானே "கலக்கல்க‌ண‌க்கு"

என் அன்பான வாழ்த்துக்கள்.

krish said...

மைனர் கிருஷ்ணன் பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

மதுரை சரவணன் said...

அனைத்தும் அருமை. ஐ.பாட் அறிபுதம். வாழ்த்துக்கள்

Thanjavooraan said...

கதையல்ல நிஜம் பகுதியும் எல்லாம் அவன் செயலும் படிக்கச் சுவையாக இருந்தன. முன்னவரின் ஜப்பானிய அனுபவம் புதுமை. பேரழிவிலிருந்து மீண்டு இன்று உலகுக்கு முன்மாதிரியாக விளங்கும் ஜப்பான் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய இடம். ஜப்பானிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த இருவர் பற்றி கூற விரும்புகிறேன். முதலாமவர் மேடம் தகாதா. இவர் டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர். நமது ஊர் பாகவத மேளா பற்றி மேலாய்வு செய்வதற்காக வந்து பலகாலம் தங்கி இங்கு பலரிடம் உரையாடி, மெலட்டூரில் பாகவத மேளாவை பலமுறை கண்டு நூலொன்றை எழுதியுள்ளார். இவர் ஜப்பான் திரும்பி விட்டார். மற்றொருவர் ஜூன் ஓபி எனும் இளம் பெண். இவர் சென்னையில் நாட்டியம் கற்றுக்கொண்டு பின் நமது கர்நாடக இசை பயில திருவையாறு இசைக் கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டு படித்து பட்டம் பெற்றார். இவர் இசைக்கல்லூரியில் சேருவதற்கான ஏற்பாடுகளையும், பின்னர் இவர் ஜப்பான் திரும்புமுன்னதாக ஒரு இசைக் கச்சேரி ஏற்பாடு செய்து தஞ்சை மக்கள் ரசிக்கும்படி செய்யக்கூடிய வாய்ப்பையும் எனக்குக் கொடுத்தார்கள். இவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே உண்டு. அதுபற்றி பிறகு சொல்கிறேன்.
அடுத்ததாக கி.முத்துராமகிருஷ்ணனின் எல்.ஐ.சி.வேலைவாய்ப்பு அனுபவம். இதுபோன்று பலருக்கு நடந்திருக்கிறது. என்றாலும் கூட பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு நடந்தவற்றை அசை போடுவதில் ஒரு சுகம் உண்டு. புறநானூற்றில் "தொடித்தலை விழுத்தண்டூன்றினார்" எனும் பெயருடைய ஒருவர் எழுதிய பாடல். 'இனி நினைந்திரக்க மாகின்று' எனத் தொடங்கும் பாடல். இளம் வயதை நினைத்து பெருமூச்சு விடும் அந்த கிழவரின் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வருவது இயல்பு. இன்னும் பல நிகழ்ச்சிகளை வெளியிட்டு பெருமூச்சு விடுங்கள் திரு கிருஷ்ணன்.

Ramachandranwrites said...

அன்புள்ள வாத்தியார்,

திரு முத்துராம கிருஷ்ணன் எனது தாய் மாமா. அவரது தந்தை சேலம் கதர்கடை கிருஷ்ணன் எனது சிறிய தாத்தா.

அன்புடன்
ராமசந்திரன்

Geekay said...

வணக்கம் வாத்தியார் அய்யா ,

இரண்டு ஆக்கங்களும் அருமை ,
அடுத்தவர்களின் வாழ்க்கை கதையை படிக்கும் போது.
நம் மனதில் ஒரு நம்பிக்கை வருவது இயல்பே .

அன்புடன் உங்கள் மாணவன்
ஜீகே
பெங்களூரு

kannan said...

வணக்கம் வாத்தி ஐயா!


நடைமுறை நிகழ்வை அப்படியே சாயம் குறையாமல் சொன்ன சகோதரர் மண்ணின் * மைனர் * மைந்தருக்கும்

மற்றும்

உண்மையை உண்மை என்று உண்மையாக உணர்ந்ததை உண்மையாக உரைத்ததை ஐயாவிற்கும்
நற்றியுடன் கூடிய வாழ்த்துகள்

ananth said...

மைனர் அவர்களின் கதை நன்றாக போய்கொண்டிருந்த கதையை பாதியில் நிறுத்தி தொடரும் போட்டது போல் இருக்கிறது. கதை அடுத்தது என்ன என்று நினைக்கும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஜோதிடம் சாஸ்திரம் என்பதயும் தாண்டி ஒரு கலை என்று சொல்லலாம். தெய்வீகக் கலை. அது கைவர வேண்டுமானல் தெய்வ அருள் வேண்டும். கலைகளை தெய்வமாய் காண வேண்டும் என்ற பாடல் வரியில் நானும் உடன் படுகிறேன்.

thirunarayanan said...

வணக்கம் அய்யா.
மைனர்வாள் வல்லவனுக்கு வல்லவன்
அசோகன் போலவே இருக்காருல்லே.
ஜோதிடம் இப்போதுதான் எல்லோருக்கும்
உரியது.ஒரு 40 வருடங்களுக்கு முன்பு
உண்மையிலேயே வள்ளூவர்களுக்கு
உரியது.
நன்றி அய்யா.

iyer said...

minor ஏன் இப்படி சமைப்பதற்கு அலுத்துக்கிறார் தெரியவில்லை . .

எந்த வேலையையும் ஆர்வத்தோடு செய்தால் இனிமையாக இருக்கும்.

உங்களுக்காக ஒரு தகவல்
சுமார் பத்து வருடத்திற்கு மேலாக நானே சமைத்துக் கொள்கிறேன் எவ்வித அலுப்பும் எரிச்சலும் இல்லாமல் . .


செய்வதை விரும்பி செய்தால் வெறுப்பு என்பது எப்போதும் இல்லை . .

இதனை வாத்தியார் அவர் பாணியில் சொல்லுவார் . .

sundari said...

Good evening sir,

Happy teacher(s) day to u sir. You will have to be/have good luck,good health and long life sir.
sundari.p

minorwall said...

KMRK சார்..நல்ல நம்பிக்கையை ஊட்டும் கதை? சம்பவம் என்பதுதான் சரி......பல சமயங்களில் எதிர்பார்த்த விஷயம் ரிசல்ட் தெரிவதற்கு முன் தவிக்கும் அவஸ்தையை தெளிவாகச் சொல்லியிருந்தீர்கள்..
ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்க முடியாது என்று ஒரு பழமொழி உண்டு..இவ்வேளைகளில்தான் சோதிடம் என்ற சப்ஜெக்டே மனிதனின் வாழ்வில் இடைச்செருகலாகிப் போகிறது..'நடக்குமென்பார் நடக்காது..நடக்காதென்பார் நடந்து விடும்..' என்ற பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும்..பல சமயங்களில் பொய்க்கும் சோதிடம் சில சமயங்களில் உண்மையாகிப் போவதுதான் ஆச்சரியம்..நாம் எவ்வளவுதான் நன்றாகப் performance செய்திருந்தாலும் மற்றவர்கள் எப்படி செய்திருப்பார்களோ?என்ற கேள்வியும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய இடத்திலே எல்லா மனிதர்களுமே வாழ்க்கையில் இந்த அவஸ்தைக்கு உட்பட்டுவிடுகிறார்கள்..பல்வேறு சமயங்களில்...
முற்றும் துறந்த ஞானிகளைத் தவிர(அப்படி சிலர் இருக்கிறார்களா என்ன?)
என்ன interview ரிசல்ட் என்று கேட்கும் போது கூனிக்குறுகத்தான் வேண்டியிருக்கிறது.. ரிசல்ட் தெரிந்த பின் 'எனக்கு அப்போவே தெரியும் , நான் எக்ஸ்செல்லென்ட்டா பண்ணியிருந்தேன் ' என்று தம்பட்டம் இடும் மனிதர்களுக்கு ரிசல்ட் வரும் வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் எங்கே போகுமோ இந்த 'நான்'?
மற்றபடி நான் சொல்ல நினைத்ததை ஆலாசியம் அவர்கள் சொல்லிவிட்டிருக்கிறார்..முக்கியமாக காந்தி..விஷயம்.. நன்றி..இளைய சமுதாயத்துக்கு நம்பிக்கையை தொடர்ந்து விதைத்துக்கொண்டிருப்பதற்கு..

minorwall said...

/////kmr.krishnan said...
Had a hearty laugh!very nice minorwal!Keep it up!Eagerly waiting for the next piece!Congratulations.\\\\\

நன்றி..முதலில் சென்சார் போர்டுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்..எங்காவது கத்திரி போட்டு விடுவாரோ என்று நினைத்தேன்..அப்படிப்போட்டால் நிச்சயம் சுவாரஸ்யம் குறைந்துவிடும்..சும்மா ஒரு ஃபிளாஷ்...தோணிச்சு..எழுதினேன்..
இதை விட மோசமாய்ப் புத்தி போகும் விஷயங்களை எல்லாம் துணிந்து எழுதத்தான் முடியுமா? ஆசிரியருக்கு நன்றி..

minorwall said...

நன்றி ஆலாசியம் சார்..

minorwall said...

விகடத்தனத்தை எனக்கே உரித்தானதாக்கியதற்கு நன்றி.. krishnar சார்..

kmr.krishnan said...

Ramachandranwrites said...
அன்புள்ள வாத்தியார்,

திரு முத்துராம கிருஷ்ணன் எனது தாய் மாமா. அவரது தந்தை சேலம் கதர்கடை கிருஷ்ணன் எனது சிறிய தாத்தா.

அன்புடன்
ராமசந்திரன்//

எனக்கு‌ 2 பெரிய‌ப்பாக்கள். இருவருடைய மகள்களின் எண்ணிக்கை 5. அந்த‌
அக்காமார்களின் மகன்க‌ளில் ஒருவராக திரு ராமச்சந்திரன் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் நெல்லை திருமதி ஜயலக்ஷ்மி அக்காவின் மகன் ட‌றீ ராம் தான் இது.புதிர் விடுவித்தது சரியா டறீராம்?

minorwall said...

மண்ணின் மைந்தனாக அங்கீகரித்த Kannanனுக்கு நன்றி..

minorwall said...

Krish படித்து பாராட்டியதற்கு நன்றி..

Alasiam G said...

"செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்.
சோதிடந் தனையிகழ்."

கூர்ந்து கவனித்தால் பாரதியின் கொட்டும் தன்முனைப்பின் சாரம் விளங்கும். இந்த இடத்தில் அவருக்கு சொல்ல அவசியபட்டிருக்கிறது...... இதை "சோதிடன் தனை இகழ்" இப்படியாகவும் கொள்ள வழியிருக்கிறது.

கீழே இப்படி கூறுகிறான்.. "வானநூற் பயிற்சிகொள்" என்று.. சோதிடத்தை வானநூல் சாஸ்திரத்தில் இருந்து பிரிக்கலாகாது.....

" (உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு"

மேலும் தஞ்சாவூரான் (திரு ராஜகோபால்) இதை இன்னும் சிறப்பாக விளக்கினால் நன்றாக இருக்கும்.

நன்றிகள் அனைவருக்கும்....

Thanjavooraan said...

அருமை நண்பர் ஆலாசியம் அவர்களே! மகாகவி பாரதி 'சோதிடம்தனை இகழ்' என்று சொன்ன இந்த இரு சொற்களுக்கு மட்டும் நாம் பொருள் கொள்ளக்கூடாது. நீங்களே குறிப்பிட்டபடி வானசாத்திரத்தைக் கற்று உணரச் சொல்கிறான். அவனது இந்தப் புதிய ஆத்திசூடி (ஆத்திச்சூடி என்பது தவறு "ச்" கிடையாது)எவ்வளவு சிறப்பானது என்பதற்கு இதற்கு பெரும்புலவர்கள் இதற்கு உரை எழுதியிருக்கிறார்கள் என்றால் அதன் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம். சோதிடத்தில் பலவகை உண்டு. பலரை நம்ப வைத்து மரத்தடியில் அமர்ந்து பொதுவில் வாயைப் பிடுங்கி சொல்லும் சோதிடம், அறிவியல் பூர்வமாக அக்கலையின் ஆழத்தை அளந்து வெளியிடும் சரியான முடிவுகள் இப்படி பல வகைப்படும். நமது வாத்தியார் எழுதியதை இப்போதுதான் தொடக்கத்திலிருந்து படித்து வருகிறேன். அறிவியல் பூர்வமான ஆய்வு அவருடையது. தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் இதற்கு ஒரு துறை செயல்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் ஒரு மன்னனின் அவையில் நடந்ததாக கதையாக எழுதி எனது வலைத்தளங்களில் ஒன்றான http://www.bharathipayilagam.blogspot.coம். இல் வெளியிட்டிருக்கிறேன். இதில் சோதிடம் பொய் என்பது முடிவல்ல. சரியான முறையில் கணக்கிட்டு அதற்குரிய விதிகளின்படி பார்த்தால் நிச்சயம் அது சரியாக இருக்கும் என்பது அக்கதையின் முடிவு. எதார்த்தமும் அதுவே.

Uma said...

இரண்டுமே நன்றாக இருந்தன.

கிருஷ்ணன் சார், ஒரே போட்டோவையே எல்லாத்துக்கும் போடாம, அப்பப்ப மாத்துங்க.

மைனர் இதென்ன தொடர்கதையா? அப்புறம், ஜப்பான்ல ரோபோட் எல்லாம் இப்படித்தான் இருக்குமா? சும்மா பொது அறிவை வளர்த்துக்கத்தான்.

krish said...

மைனர் சொல்ல மறந்துட்டேன். யெக்ஸ்பன்டபல் பார்ட் 2 க்கு ஸ்டலோன் உங்களை கூப்பிட போறார்.

Alasiam G said...

அருமையான ஒரு விளக்கம் தந்த உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன், நன்றிகள், தமிழ்ப் பெருந்தகை திருவாளர் ராஜகோபால் அவர்களே.
பெரியோர்களையும், சான்றோர்களையும் எல்லாம் நட்பு பாராட்ட வாய்ப்பு தந்த வாத்தியார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

minorwall said...

Thirunarayanan சார்..நன்றி..
அசோகன் யார் என்று எனக்குத்தெரியாது.. சமீபத்தில் நிறைய மிமிக்ரி ஷோக்களிலே அவர் வாய்ஸ் நிறையபேரு ட்ரை பண்றதாலேப் பரிச்சயம்..
உங்களுக்கு எந்த வகையில் அவருடன் என்னை ஒப்பிட முடிந்ததுன்னு எனக்குத் தெரியலை..இருந்தாலும் உங்களின் அன்புக்கு நன்றி..

minorwall said...

iyer ,

என் சமையலை நீங்கள் சாப்பிட நேர்ந்தால் இப்படி சொல்லமாட்டர்கள் என்று நினைக்கிறேன்..பிடித்த உணவு வகைகள் எவ்வளவோ இருக்கின்றன..
அதை நான் செய்தால் எனக்கே பிடிக்காது..சோ புடிக்காததை ஏன் செய்யணும்..10வருட expert - புடிச்சு செய்யுற உங்க அட்ரஸ் கொடுங்க..
ஊருக்கு வரும்போது ஒரு வெட்டு வெட்டிடுவோம்..

minorwall said...

////////
Uma said...
மைனர் இதென்ன தொடர்கதையா? அப்புறம், ஜப்பான்ல ரோபோட் எல்லாம் இப்படித்தான் இருக்குமா? சும்மா பொது அறிவை வளர்த்துக்கத்தான்.\\\\\\\\

பாத்து..ரொம்ப வளர்ந்துடப் போவுது..உங்க பொது அறிவு..ஏற்கனவே இவ்வளவு தூரம் வளர்ந்து நேஷனல் காபிடல் ல்லே இருக்குறீங்க..இன்னும் மேலே போகணும்னா எவரெஸ்ட்தான்..
இத முழுசாப் படிச்ச பின்னாடியும் உங்களுக்கு கதைன்னு சொல்ல வருதா?தொடர்கதையான்னு கேட்டுருக்கீங்க..? 'யாராவுது இதெல்லாம் ஒரு கதையா?'ன்னு கேட்டுடுவாங்களோன்னுதான் உஷாரா 'கதையல்ல..' ன்னு டைட்டிலே போட்ருக்கோம்..நீங்க என்னடான்னா தொடர்கதையான்னு?
ஆமா, அது என்ன ஜப்பான் ரோபோட்..அதப் பத்தி ஒரு வரிகூட நான் எழுதவே இல்ல..நீங்க உண்மையிலேயே படிச்சீங்களா?

minorwall said...

//////////
krish said...
மைனர் சொல்ல மறந்துட்டேன். யெக்ஸ்பன்டபல் பார்ட் 2 க்கு ஸ்டலோன் உங்களை கூப்பிட போறார்.\\\\\\\\\\

slightஆ சைடுலே expand ஆயிருக்கேன்னு கரெக்டா கண்டுபுடிச்சுட்டீங்களே..jz 78kg தான்..நன்றி..
சரி..நீங்க ஏதாவது ஒண்ணு எழுதி அனுப்புறது?

minorwall said...

எல்லாம் சரி..சுப்பையா வாத்தியார் இந்த ஆர்டிகிள் பத்தி recommend ஸ்கிரிப்ட் வித் டைட்டில் சாங் என்று இல்லாத பில்ட்-அப் கொடுத்துட்டு கம்முன்னு இருந்தா எப்படி?
உங்க கருத்துன்னு ரெண்டு வார்த்தை சொல்லுங்க....எழுதவே எழுதாதே..ங்குறீங்களா? சொன்னாப்பலே இது கூட ரெண்டு வார்த்தைதான்..

SP.VR. SUBBAIYA said...

//////minorwall said...
எல்லாம் சரி..சுப்பையா வாத்தியார் இந்த ஆர்டிகிள் பத்தி recommend ஸ்கிரிப்ட் வித் டைட்டில் சாங் என்று இல்லாத பில்ட்-அப் கொடுத்துட்டு கம்முன்னு இருந்தா எப்படி?
உங்க கருத்துன்னு ரெண்டு வார்த்தை சொல்லுங்க....எழுதவே எழுதாதே..ங்குறீங்களா? சொன்னாப்பலே இது கூட ரெண்டு வார்த்தைதான்..////

சரி..நீங்கள் கேட்டுக்கொண்டபடி, இரண்டு வார்த்தைகள் எழுதியிருக்கிறேன்:
“தொடர்ந்து எழுதுங்கள்!”

SP.VR. SUBBAIYA said...

ஒரு போஸ்டரின் மீது இன்னொரு போஸ்டரை ஒட்டக்கூடாது என்றுதான் இன்று நான் பதிவு எதையும் வகுப்பில் ஏற்றவில்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் இருக்கும் நமது வகுப்பறைக் கண்மணிகளில் பலர் இன்று வந்துதான் படிப்பார்கள். உங்களுடைய பதிவைப் படிக்கட்டும் என்றுதான், அதை அப்படியே இன்றும் ஓடவிட்டிருக்கிறேன். தெரிகிறதா மைனர்?

SP.VR. SUBBAIYA said...

(எலெக்ட்ரிக் ஸ்டவ் எப்போமே தலைவலிதான். ஆர்டினரி காஸ் ஸ்டவ்வை விட ஸ்லோ என்பதாலே எவ்வளவு நேரம் ஆகுமென்பது மனதிலே பதிவதில்லை)

சார் ,
உஙகள் மாணவர், எந்த நூற்றாண்டில் இருக்கிறார்?

நான்கு பர்னெர் காஸ் ஸ்டவ் இருக்கும் போதே அதை உபயோகிக்காமல் induction stove க்கு மாறி பல காலம் ஆயாச்சு. induction stove வின் விலை only 2000 rs,அதில் டயம் மெமொரியும் இருப்பதால்
2 நிமிடம் டயம் செட் பண்ணிவிட்டு வேற வெலை பார்ப்பதால் மிக எளிதில் வேலை முடிந்து விடும்,பாலும் பொங்காது automatic off ஆகிவிடும்.

வகுப்பறைக்கு வரும் மாணவி ஒருவரின் விமர்சனம்!

Uma said...

minor, you didn't write anything about robot, but my comment was about your photo.

minorwall said...

நமக்கு இந்த kitchen item விவகாரமெல்லாம் சுத்தமாத் தெரியாது..ஞானசூன்யம்..
அந்த அபார்த்மேன்ட்லே அப்படி..அதான் தெளிவா அடுத்த வரியிலேயே சொல்லிருக்கேனே..
நவநாயகிக்காக ஒருதரம் காபி பேஸ்ட். (copy paste)
இந்த அபார்ட்மென்ட் மானேஜ்மென்ட் ஆளுங்க காஸ் ஸ்டவ் என்றால்
புகையைக் கிளப்பும் என்று ஒரு கான்செப்ட்டைத் திங்க் பண்ணி நமக்கு
மண்டைக் குடைச்சலைக் குடுத்துட்டானுங்க..
It ia a kind of stsndard fitting with sink and all . no buying selling..by tenants..even reacently it became a news @ japan a person tried a gas stove placed over
the electric stove,met with an accident coz attended cooking wrongly by swtching on the bottom electric stove and so the gas cassete exploded..
anyhow, thanks for commenting..on this article..

minorwall said...

////////
ananth said...
மைனர் அவர்களின் கதை நன்றாக போய்கொண்டிருந்த கதையை பாதியில் நிறுத்தி தொடரும் போட்டது போல் இருக்கிறது. கதை அடுத்தது என்ன என்று நினைக்கும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது./////////

அன்பு ஆனந்த்,
நன்றி..எங்கே போறான்னு தெரியலை..எதுக்குப் போறான்னும் தெரியலை..இப்பிடியே கதை வுட்டு ரெண்டு மணி கணக்குக்கு ஒரு மேட்டரை எடுத்து உட்டுட்டானேய்யா இந்த ஆளுன்னு யாராவுது கொஞ்சம் கடுப்பா கமென்ட் அடிப்பீங்களோன்னு நெனச்சேன்..முதல்ல நம்ம வாத்தியார் இந்த மேட்டரைப் படிச்சதும் இப்பிடித்தான் எதாவுது சொல்வாருன்னு நெனச்சேன்..
நேரா இதுவரைக்கும் ஒண்ணுமே சொல்லலை..இதை அனுப்பி அவர் கருத்தைத்தான் நான் கேட்டிருந்தேன்..பதிவில் போடுங்கள் என்று கேட்கவேயில்லை..ஏனென்றால் உங்கள் வாசகர்களை தண்டிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது..(பதிவாளர்களுக்கு)
ஆசிரியர் போட்டார்..எல்லோருமே ஒன்றும் முகம் சுளிக்கவில்லை..
மாறாக கதை அடுத்தது என்ன என்று நினைக்கும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொல்லியிருப்பது மிகுந்த உற்சாகமளிக்கிறது..Eagerly waiting for the next piece!Congratulations.என்று உங்களைப்போலவே சொல்லியிருக்கும் KMRK அவர்களின் பார்வையும் எனக்கு நல்ல தூண்டுதலை ஏற்படுத்துகிறது..பதிலுக்கு நானும் உங்களையெல்லாம் மீண்டும் படுத்த முயற்சிக்கிறேன்..

krish said...

அசோகன் 70 நடிகர். செயின்ட் ஜோசப் மாணவர். திருச்சியை சேர்ந்த ஆரோக்கியதாஸ். கதாநாயகன், வில்லன்,குணச்சித்தர காமடி என்று பன்முகம் காட்டியவர். உயர்ந்த மனிதன் படம் அவரது குணசித்திர நடிப்புக்கு உதாரணம். சிவாஜி மேஜர் நடுவே தனியாக நின்றவர். நான் படத்தில் அவர் காமடி வில்லன். சிங்காரம் என்று அவர் சொல்வது அப்போது மிக பிரசித்தம்.யூ டூபபில் பாருங்கள்.

minorwall said...

///////////
Uma said...
minor, you didn't write anything about robot, but my comment was about your photo.\\\\\\

நினைச்சேன்..இருந்தாலும் என்ன எதுன்னு நிறுத்தி நிதானமா நீங்களே தெளிவாச் சொன்னீங்கன்னா ஏதாவது ரோபோடிக் ப்ரோக்ராம்லே அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிடலாம்.. whether it is back end or front application end(I mean mind or bodycontrols) This robot is specially designed to suit to the perfect needs of a specified customer..customisation is always possible..ok?

astroadhi said...

ஹலோ மைனர் அண்ணா ....

பதிவு சூப்பர் அதுக்கும் மேல தொடரும் போட்டீங்களே பின்னி பெடல் எடுக்குரீங்க ......இதுக்கெள்ளாம் மேல டைட்டில் சாங் நம்ம வாதியார் டுன் போட்டுஇருக்கார் ,,,,,காலை ல இருந்து இந்டர்னெட் பிரச்சனை இப்ப தான் பாக்க முடிந்தது.....மொத்ததில் சூப்பர்,,,,,

நன்றி வணக்கம்.....

sundari said...

Hi Dear Brother minorwall,
What happened to u why r u making so much jokes be silent it is class room u must study very well horoscope lessons. i want full story did u get train where did u go at the train u did not say anything. remaining story U write and finish.
Dear Krish Brother i want one story from u u told me i am CA is it not u tell about ur office life.
sundari.p

vprasanakumar said...

sir, "சோதிடம் தனை இகழ்"என்ற மஹாகவியின் கூற்று சரிதானா?

what mr KMRK சார்.. said was very real and great truth and any person can't ignore astrology.

rajanblogs said...

HELLO SIR,
Induction Stove is an electicstove,
not a gas stove.
u can esily handle in any kitchen which has a plugpoint.
this is very conveniant,and easy way of cooking,that will consume only haff the time of cooking in gas stove.
MRS.NAGARAJAN

minorwall said...

//////////////
நன்றி astroadhi ..உங்கள் வழக்கமான உற்சாகமான துடிப்புடன் நீங்கள் ஏதாவது ஒரு சம்பவத்தை எழுதுவதுதானே? ////////////

minorwall said...

Thanjaavooraar அவர்களுக்கு நன்றி அளித்து நான் எழுதியிருந்தது சில ஜப்பானில் நடந்த சம்பவங்களை உள்ளடக்கிய மிகநீண்டதாக போனதால் கூகிள் தன் வேலையை காட்டிவிட்டது என்று நினைக்கிறேன்..

minorwall said...

Uma ,
நீங்களும் டெல்லியில் நடந்த சம்பவம் பற்றி ஏதாவது சுவையாக எழுதுங்களேன்? நீங்கள்தான் ரூம் போட்டு யோசிப்பவராயிற்றே?
(என் படம் பற்றி ரோபோட் என்று குறிப்பிட்ட உங்கள் படம் எப்படி இருக்கிறது என்றும் தெரிந்து கொள்ளும் ஆவலினாளும்தான்)

Uma said...

எழுதிட்டா போச்சு.