மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.9.10

மலர்மாலைக்கும் மலர்வளையத்திற்கும் என்ன வித்தியாசம்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மலர்மாலைக்கும் மலர்வளையத்திற்கும் என்ன  வித்தியாசம்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.21
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.71
லோகபாண்டியன்
பஹ்ரெய்ன், சவூதி அரேபியா
   
Dear Sir,

1. Most my friends are in the age to get marry (26 and above) they are asking about their partners or marriage life (for example in one of my friend horoscope in seventh place Sani and Chandran) which i find very difficult to reveal. How to come out from this issue Sir, I am under bid stress

நீங்களே ’எல்’ போர்டு. நீங்கள் எதற்காக இன்னொருவருக்கு டிரைவிங் சொல்லித்தருகிறீர்கள்? ஜோதிடம் பெரிய கடல். ஆழம் தெரியாமலும், அலையின் வேகம் தெரியாமலும், நீசசல் தெரியாமலும் கடலுக்குள் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா? யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்

2. For Viruchiga Lagna in 12th Place Sani and Sevvai, I know it is Vibareetha rajayogam however in 12th Place Sani and Sevvai is Sayana Dosham. My question is Yogam supersedes Dosham or Dosham supersedes Yogam. Please advise if both Yogam and Dosham exists, what kind of effect and favor. (Whilst keeping in mind Lagnathipathi in 12th Place)

மோட்டார் பந்தயமா நடக்கிறது? யோகம் & தோஷம் இரண்டும் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டுபோய் கோப்பையைத் தட்டிக்கொண்டு வருவதற்கு? இரண்டிற்கான பலன்களும் இருக்கும். சம்பளம் தினாரில் கை நிறையக் கிடைக்கும். அதே நேரத்தில் சூடு பறக்கின்ற பாலைவனத்தில் வேலை பார்க்க வேண்டியதாகவும் இருக்கும். மனைவி அழகாகவும் இருப்பாள். தினமும் ஒரு மணி நேரம் கால்களைப் பிடித்துவிடவும் சொல்வாள்.

யோகத்தினால் கையில் காசு புரளும். சயன தோஷத்தினால் மனைவி கையில் புரள மாட்டாள். அவளை விட்டுப் பிரிந்து தூர தேசங்களில் வேலை பார்க்க நேரிடும். இப்படிப் பலன்கள் கலவையாக இருக்கும். இட்லி மாவையும், அடை மாவையும் சேர்த்ததுபோல இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.72
நித்தியானந்தம்
வயது. 49
கரையாம்பாளையம்
பல்லடம்

குருவிற்கு வணக்கம்.

1.குரு சந்திரன் செவ்வாய் மூன்று கிரகங்களும் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் குருச்சந்திர யோகம்  சந்திரமங்கள யோகம் குருமங்கள யோகம் ஆகியவை வருமா?

உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு இருக்கும் அமைப்பை வைத்தே வாரம் 3 கேள்விகள் கேட்டு உங்கள் ஜாதகத்தை அலசிக்கொண்டிருக்கிறீர்கள். நடத்துங்கள் நாடகத்தை!

மூன்று கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்தால், அது கிரக யுத்தக் கணக்கில் வரும். இரண்டு கிரகங்களுக்கு இடையே இடைவெளி 5 பாகைகள் இருக்க வேண்டும். இருக்கிறதா பாருங்கள்.

யோகங்கள் எல்லாம் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் முழுப்பலன் கிடைக்காது. பலன்கள் விரையமாகிவிடும். இருபதுவயதுப் பெண் கிடைத்தாலும், அறுபது வயதில் திருமணம் செய்துகொள்வதற்குச் சமம் அது. மாலை ஆறு மணிக்கு, தலையில் 4 முளம் மல்லிகைப்பூவை வைத்துக்கொண்டு, கணவனுடன் வெளியே போவதற்கு அவள் தயாராகிவிடுவாள். சம்பந்தப்பட்ட ஆசாமி, மூட்டு வலி என்று படுத்துக்கிடப்பான். தாமபத்யம் எப்படி இனிக்கும்?

2. இந்த மூன்றும் பன்னிரெண்டில் மிதுனத்தில் கடகலக்கினமாக இருந்து லக்கினத்தில் சுக்கிரன் மாந்தி இரண்டாமிடம் சிம்மத்தில் சூரியன் சனி புதன் மூன்றில் ராகு பத்தில் கேது இருக்க இந்த அமைப்பு மாலையோகம் என்று சொல்லி இருக்கிறீகள் இந்த கிரகங்களின் நிலைப்பாடு குறித்து விளக்கிச்  சொல்ல முடியுமா?

அடுத்தடுத்த கட்டத்தில் கிரகங்கள் வரிசையாக இருப்பதுதான்
மாலை யோகம். நீங்கள் சொல்வது போல கொத்துக் கொத்தாக
இருந்தால், அது மலர்வளையமாகிவிடும். மலர் வளையம் எதற்குப்
பயன்படும் தெரியுமா? பல்லடத்துக்காரருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.73
Bottle mani
பாட்டில் மணி
   
ஐயா, வணக்கம்,
சூரியன், ராசியிலும் நவாம்சத்திலும்  கும்பத்தில் இருந்தால் (ராசியில் பத்தாம் வீட்டிலும்,நவாம்சத்தில் ஒன்பதாம் வீட்டிலும்) வர்கோத்தம பலன்கள் நன்மை  தரக்கூடியதா?அல்லது தீமை செய்யக்கூடியதா?
நன்றி

கும்பம் சூரியனுக்குப் பகை வீடு. அங்கே சூரியன் வர்கோத்தமம், பெற்றால், முழுப்பலன் கிடைக்காது! ஐயா என்று நீங்கள் அன்பொழுக அழைத்தாலும், உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.74
இரா.புரட்சிமணி    

ஐயா எனக்கு கேள்வி கேட்க மேலும் ஒரு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

1. ஒருவனின் நல்ல ஒழுக்க நிலைக்கு குருவைப்போல், சனிக்கும் சம்பந்தம் உள்ளதா? ஒரு வீட்டிற்கு  மூன்று துறைகள், மொத்தம் முப்பத்து ஆறு துறைகள். பரல்களைப்பார்த்து ஒரு வீட்டின் வலிமையை சுலபமாக அறிவது போல். ஒவ்வொரு துறையின் வலிமையை எப்படி அறிவது? ஒரு வீட்டில் குறைவான பரல்கள் இருப்பதால் அந்த மூன்று துறைகளுமே கெட்டுவிடும் என்று சொல்ல முடியாது அல்லவா?

ஒவ்வொருதுறைக்கும் காரகர்கள் இருக்கிறார்களே சுவாமி. அவர்கள் எதற்கு இருக்கிறார்கள் என்று பழைய பாடங்களைப் படித்துப்பாருங்கள்.

2. நண்பர்களைப்போல்தான் வாழ்க்கைத் துணையும் அமையுமா?

நண்பர்களை எதற்கு வாழ்க்கைத் துணையோடு ஒப்பிடுகிறீர்கள். நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடிக்கலாம். தம் அடிக்கலாம். வாழ்க்கைத்துணையோடு சேர்ந்து அதைச் செய்ய முடியுமா? நண்பர்களோடு கருத்து வேறுபாடு என்றால் கழற்றி விட்டு விடலாம். வாழ்க்கைத் துணையைக் கழற்றிவிட முடியுமா?

3. வள்ளலார், பாபாஜி அல்லது ஓளி உடம்பு பெற்ற மற்றவர்களின் சாதகம் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?

ஒளி உடம்பா? குழப்புகிறீர்களே சாமி! குழப்புவதில் மட்டும் நன்றாகப் புரட்சி செய்கிறீர்கள்.

4. நீங்கள் ஏன் ஜோதிடம் எனும் ஒளியியலில் ஆராய்ச்சி செய்யக் கூடாது?இலட்ச கணக்கான மாணவர்கள் தங்களுக்கு துணை இருப்பார்கள்.
என்றும் அன்புடன்
இரா. புரட்சிமணி 

ஆகா புரட்சி, லட்சக்கணக்கானவர்கள் கொடிப்பிடிப்பீர்கள். தலைவர் சொந்தத் தொழிலை விட்டுவிட்டு ஆராய்ச்சியில் இறங்கினால், புவாவிற்கு என்ன செய்வார்? அரசியல் கட்சிகளைப் போல உண்டியல் குலுக்க முடியுமா? அல்லது செல்வந்தர்களைத் தட்டிக்கொடுத்து வசூல் பண்ண முடியுமா? அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. ஆயிரம், லட்சம் என்று
சொல்லிச் சூடு ஏற்றாதீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

50 comments:

  1. அய்யா,

    இன்றைய கேள்வி பதில் பகுதி மிக சுவாரஸ்யமாக இருந்தது. உதாரணங்கள் மிகவும் அருமை.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்
    கோயம்புத்தூர்

    ReplyDelete
  2. //உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))//

    இலவசமாக ஒரு வலைப்பூ நடத்தக்கூட எவ்வளவு கவனம் தேவையாயுள்ளது.
    முகவரி கொடுத்துவிடாதீர்கள்.இரவு 12 மணிக்கு பாட்டில் வீச்சு நடக்கலாம்.

    ReplyDelete
  3. // நீங்களே ’எல்’ போர்டு. நீங்கள் எதற்காக இன்னொருவருக்கு டிரைவிங் சொல்லித்தருகிறீர்கள்? ஜோதிடம் பெரிய கடல். ஆழம் தெரியாமலும், அலையின் வேகம் தெரியாமலும், நீசசல் தெரியாமலும் கடலுக்குள் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா? யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள் //

    ஸூபர் அட்வைஸ்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  4. வாத்தி ஐயா வணக்கம்.

    சக மனிதனை வணக்குவது தவறு என்கின்றனர் இது சரியா ?

    ஒவ்வொரு சரிறதிலையும் ஆத்மா அல்லவா குடிஇருகின்றது அவ்வாறு இருக்க மேற்கண்ட கூற்று எப்படி ஐயா?

    ReplyDelete
  5. yes sir!

    வகுப்பறையில் ஐயா நடத்தி உள்ள ஒரு பாடத்தில் தனி மனித ஒழுக்கம் பற்றி அருமையாக சொல்லி உள்ளீர்கள் அதன்படி நடக்க ஜாதக அமைப்பு உள்ளவர்கள் கெட்டு போக நினைத்தாலும் முடியாது தானே

    ஒருவரியில் சொல்லுவது என்றால் ஒருக்கீனமாக வாழவும் அவ புண்ணியம் செய்து இருக்கணும் அப்படிதானே?

    ReplyDelete
  6. ஐயா தங்களுடய பதில்களுக்கு நன்றி.

    //ஒவ்வொருதுறைக்கும் காரகர்கள் இருக்கிறார்களே சுவாமி. அவர்கள் எதற்கு இருக்கிறார்கள் என்று பழைய பாடங்களைப் படித்துப்பாருங்கள்.///

    ஐயா, இனியும் காக்க முடியாது. தயவு செய்து ஜாதகத்தை பிரித்து மேயும் கலையை கற்று தாருங்கள்.
    ஐயா ஆயுள் காரகன் சனி, அவர் மகாத்மாவின் ஜாதகத்தில் 0 பரல்கள்,. அவர் இருக்கும் இரண்டாம் வீட்டில் 24 பரல்கள். ஆயுலைக்குறிக்கும் எட்டாம் வீட்டில் 26 பரல்கள் , அதன் அதிபதியோ 3 பரல்களுடன் லக்னத்தில் (இது மட்டுமே என் சிற்றறிவிற்கு ஓரளவுக்கு சிறப்பாக தெரிகிறது). இப்படி ஆயுள் சம்பந்த பட்ட எல்லாமே சராசரிக்கு குறைவாக இருக்க அவரின் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்?.

    ReplyDelete
  7. பரல்களைத்தாண்டி குருவின் பார்வை லக்னத்தில் விழுவதுதான் அவரின் நீண்ட ஆயுளுக்கு காரணமா?,

    ReplyDelete
  8. ஐயா என்று நீங்கள் அன்பொழுக அழைத்தாலும், உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))


    இந்த கிண்டல்தான் வகுப்பறையை சுவாரசியமாக்குகிறது.

    AMG

    ReplyDelete
  9. அய்யா, அருமை.
    எனக்கு கிரக வக்கிரத்தில் ஒரு சந்தேகம். அதை e mail ல் தங்களிடம் கேட்கலாமா?

    நன்றியுடன்

    ReplyDelete
  10. ////venkatesan.P said...
    அய்யா,
    இன்றைய கேள்வி பதில் பகுதி மிக சுவாரஸ்யமாக இருந்தது. உதாரணங்கள் மிகவும் அருமை.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்
    கோயம்புத்தூர்//////

    சுவாரசியமாக இல்லையென்றால் நானே படிக்கமாட்டேன். மற்றவர்கள் படிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அதனால்தான் அப்படி எழுத வேண்டிய கட்டாயம். இப்போது அது பழகிவிட்டது!:-))))

    ReplyDelete
  11. ///kmr.krishnan said...
    //உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))//
    இலவசமாக ஒரு வலைப்பூ நடத்தக்கூட எவ்வளவு கவனம் தேவையாயுள்ளது.
    முகவரி கொடுத்துவிடாதீர்கள்.இரவு 12 மணிக்கு பாட்டில் வீச்சு நடக்கலாம்.//////

    பகலிலேயே நடந்தாலும் சொல்வதற்கில்லை:-))))
    பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார் என்னும் நம்பிக்கைதான் தொடர்ந்து எழுதவைக்கிறது!

    ReplyDelete
  12. /////sury said...
    // நீங்களே ’எல்’ போர்டு. நீங்கள் எதற்காக இன்னொருவருக்கு டிரைவிங் சொல்லித்தருகிறீர்கள்? ஜோதிடம் பெரிய கடல். ஆழம் தெரியாமலும், அலையின் வேகம் தெரியாமலும், நீசசல் தெரியாமலும் கடலுக்குள் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா? யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள் //
    ஸூப்பர் அட்வைஸ்.
    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com//////

    உங்களின் பாரட்டுக்கள் டானிக் மாதிரி. நன்றி சார்!

    ReplyDelete
  13. ////kannan said...
    வாத்தி ஐயா வணக்கம்.
    சக மனிதனை வணக்குவது தவறு என்கின்றனர் இது சரியா?
    ஒவ்வொரு சரீறத்திலும் ஆத்மா அல்லவா குடியிருக்கின்றது அவ்வாறு இருக்க மேற்கண்ட கூற்று எப்படி ஐயா?//////

    வயதில் பெரியவர்களை வணங்கலாம். அதைத் தவறு என்று சொல்பவர்கள் அறியாமையில் சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளூங்கள்!

    ReplyDelete
  14. /////kannan said...
    yes sir!
    வகுப்பறையில் ஐயா நடத்தி உள்ள ஒரு பாடத்தில் தனி மனித ஒழுக்கம் பற்றி அருமையாக சொல்லி உள்ளீர்கள் அதன்படி நடக்க ஜாதக அமைப்பு உள்ளவர்கள் கெட்டு போக நினைத்தாலும் முடியாது தானே?
    ஒருவரியில் சொல்லுவது என்றால் ஒருக்கீனமாக வாழவும் அவன் புண்ணியம் செய்து இருக்கணும் அப்படிதானே?/////

    ஆமாம்.ஆமாம். ஆமாம்!

    ReplyDelete
  15. Ayya Vanakam,

    kelvi en 78 (1) solliyathupola Chandiren,Sevvai,Guru 2 l irunthal kiraka yutham illaml (above 5 paakai) yagam eppoluthu? eppati irukum?

    regards
    Your student
    SPK

    ReplyDelete
  16. //////R.Puratchimani said...
    ஐயா தங்களுடய பதில்களுக்கு நன்றி.
    //ஒவ்வொருதுறைக்கும் காரகர்கள் இருக்கிறார்களே சுவாமி. அவர்கள் எதற்கு இருக்கிறார்கள் என்று பழைய பாடங்களைப் படித்துப்பாருங்கள்.///
    ஐயா, இனியும் காக்க முடியாது. தயவு செய்து ஜாதகத்தை பிரித்து மேயும் கலையை கற்று தாருங்கள்.
    ஐயா ஆயுள் காரகன் சனி, அவர் மகாத்மாவின் ஜாதகத்தில் 0 பரல்கள்,. அவர் இருக்கும் இரண்டாம் வீட்டில் 24 பரல்கள். ஆயுலைக்குறிக்கும் எட்டாம் வீட்டில் 26 பரல்கள் , அதன் அதிபதியோ 3 பரல்களுடன் லக்னத்தில் (இது மட்டுமே என் சிற்றறிவிற்கு ஓரளவுக்கு சிறப்பாக தெரிகிறது). இப்படி ஆயுள் சம்பந்த பட்ட எல்லாமே சராசரிக்கு குறைவாக இருக்க அவரின் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்?./////

    பிறகு செய்ய உள்ளேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  17. /////R.Puratchimani said...
    பரல்களைத்தாண்டி குருவின் பார்வை லக்னத்தில் விழுவதுதான் அவரின் நீண்ட ஆயுளுக்கு காரணமா?,/////

    அதைவிட முக்கியமான காரணம் ஆயுள்காரகனின் அமைப்பு!

    ReplyDelete
  18. ////AMG said...
    ஐயா என்று நீங்கள் அன்பொழுக அழைத்தாலும், உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))
    இந்த கிண்டல்தான் வகுப்பறையை சுவாரசியமாக்குகிறது.
    AMG/////

    அதைக் கிண்டல், நக்கல், கோயம்புத்தூர்க் குசும்பு என்று எல்லாம் சொல்லாமல் - நகைச்சுவை என்று சொல்லுங்கள் சுவாமி. அப்படியே எடுத்துக்கொள்ளவும் செய்யுங்கள்.

    ReplyDelete
  19. /////Govindasamy said...
    அய்யா, அருமை.
    எனக்கு கிரக வக்கிரத்தில் ஒரு சந்தேகம். அதை e mail ல் தங்களிடம் கேட்கலாமா?
    நன்றியுடன்/////

    இப்போது சந்தேகம் கேட்பவர்கள் எல்லாம் அப்படித்தானே கேட்கிறார்கள். பொதுக்கேள்வியாகக் கேளுங்கள். சொந்த ஜாதகம் வேண்டாம். Subject Boxல் -- Doubt என்று மறக்காமல் குறிப்பிடுங்கள்!

    ReplyDelete
  20. //////KKK said...
    Ayya Vanakam,
    kelvi en 78 (1) solliyathupola Chandiren,Sevvai,Guru 2 l irunthal kiraka yutham illaml (above 5 paakai) yagam eppoluthu? eppati irukum?
    regards
    Your student
    SPK/////

    உதிரியான கிரக நிலையைவைத்து பலன் சொல்ல முடியாது. லக்கினம் தெரிய வேண்டாமா? லக்கினத்தை வைத்து அவர்கள் எந்தந்த வீட்டிற்கு அதிபதிகள் என்று தெரிய வேண்டாமா?

    ReplyDelete
  21. நீங்களே ’எல்’ போர்டு. நீங்கள் எதற்காக இன்னொருவருக்கு டிரைவிங் சொல்லித்தருகிறீர்கள்? ஜோதிடம் பெரிய கடல். ஆழம் தெரியாமலும், அலையின் வேகம் தெரியாமலும், நீசசல் தெரியாமலும் கடலுக்குள் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா? யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள் //

    சூப்பர் அட்வைஸ் சார் எனக்கு., நான் நிறைய ஜோதிட புத்தகங்கள் கற்றுகொன்று வருகிரியன் சார்...

    நன்றி வாத்தியார் ஐயா

    பாண்டியன்

    ReplyDelete
  22. பிறகு செய்ய உள்ளேன். பொறுத்திருங்கள்!//

    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  23. Dear Sir

    Kelviyum Badhilum Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  24. தினமும் ஒரு மணி நேரம் கால்களைப் பிடித்துவிடவும் சொல்வாள்.///

    அப்போ சமைக்கிறதுக்கு!!!!

    தமிழில் தட்டச்சு செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிரேன்

    ReplyDelete
  25. More than anything ,its your writing style that makes me read your blog everyday sir ..
    Regards
    sowmya

    ReplyDelete
  26. அனைத்தும் சொந்த கேள்விகளாக வருகின்றன.பாடங்களுக்கு செல்லலாமே ஐயா...

    ReplyDelete
  27. வணக்கம் அய்யா,,,,
    இன்றைய கேள்வி பதில் பகுதி வெகு சுவாரிசியமாக இருந்தது அனைத்து பதில்களிலும் உங்கள் பன்ச் மிளிர்கின்றது ,,,அதிலும் எல் போர்ட்,பெயரில் உள்ள பாட்டில் இப்படி சொல்லிகொண்டே போகலாம்....
    படித்தேன் ரசித்தேன்.....
    நன்றி வணக்கம்.....

    ReplyDelete
  28. ////bhuvanar said...
    நீங்களே ’எல்’ போர்டு. நீங்கள் எதற்காக இன்னொருவருக்கு டிரைவிங் சொல்லித்தருகிறீர்கள்? ஜோதிடம் பெரிய கடல். ஆழம் தெரியாமலும், அலையின் வேகம் தெரியாமலும், நீசசல் தெரியாமலும் கடலுக்குள் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா? யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள் //
    சூப்பர் அட்வைஸ் சார் எனக்கு., நான் நிறைய ஜோதிட புத்தகங்கள் கற்றுகொண்டு வருகிறேன் சார்..
    நன்றி வாத்தியார் ஐயா
    பாண்டியன்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. ///Uma said...
    பிறகு செய்ய உள்ளேன். பொறுத்திருங்கள்!//
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்./////

    உங்கள் ஆவல் நிறைவேறும் சகோதரி!

    ReplyDelete
  30. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kelviyum Badhilum Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  31. /////bhuvanar said...
    தினமும் ஒரு மணி நேரம் கால்களைப் பிடித்துவிடவும் சொல்வாள்.///
    அப்போ சமைக்கிறதுக்கு!!!!/////

    காலுக்கு massage செய்து விடுகிற புண்ணியவான், சமையலையும் செய்து பறிமாறமாட்டாரா என்ன?

    ////தமிழில் தட்டச்சு செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்/////

    வந்து விட்டது தமிழ்! வாழ்க உங்கள் முயற்சி!

    ReplyDelete
  32. ////Sowmya said...
    More than anything ,its your writing style that makes me read your blog everyday sir ..
    Regards
    sowmya/////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள் சகோதரி!

    ReplyDelete
  33. /////astroadhi said...
    வணக்கம் அய்யா,,,,
    இன்றைய கேள்வி பதில் பகுதி வெகு சுவாரிசியமாக இருந்தது அனைத்து பதில்களிலும் உங்கள் பன்ச் மிளிர்கின்றது ,,,அதிலும் எல் போர்ட்,பெயரில் உள்ள பாட்டில் இப்படி சொல்லிகொண்டே போகலாம்....
    படித்தேன் ரசித்தேன்.....
    நன்றி வணக்கம்...../////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  34. /////Arul said...
    அனைத்தும் சொந்த கேள்விகளாக வருகின்றன.பாடங்களுக்கு செல்லலாமே ஐயா...///////

    இதுவும் பாடம்தானே சுவாமி? போரடிக்கிறதா? நீங்கள் இரண்டு கேள்விகளை எழுதியனுப்புங்கள். போரடிக்காது!
    100 கேள்விகள் டார்கெட்! அத்துடன் ஸீசன் 2 முடிவடைந்துவிடும்!

    ReplyDelete
  35. உள்ளேன் அய்யா . .
    கேள்வி பதில்களை படித்துக் கொண்டு உள்ளேன் அய்யா . .

    ReplyDelete
  36. /////R.Puratchimani said...
    பரல்களைத்தாண்டி குருவின் பார்வை லக்னத்தில் விழுவதுதான் அவரின் நீண்ட ஆயுளுக்கு காரணமா?,/////

    ////அதைவிட முக்கியமான காரணம் ஆயுள்காரகனின் அமைப்பு!/////



    அது என்ன ஐயா அமைப்பு,அவன் எட்டாம் வீட்டை பார்ப்பதா? பலம் இல்லாத ஒருவன் பார்த்து என்ன பயன்?

    ReplyDelete
  37. More than anything ,its your writing style that makes me read your blog everyday sir ..
    Regards
    sowmya////

    Above comment "REPEAT" sir for me aswell

    Rds

    Pandian

    ReplyDelete
  38. சார்
    வணக்கம், ரிஷப லக்னம் ,குரு மூன்றாம் இடத்தில்(கடகம்) உச்சம் . ( சுயவர்க்கம் - 5 ,பரல்கள் - 31 ,குரு வக்கிரம் ).
    குரு 8 , 11 , ம் இடங்களுக்கு உரியவன்.இப்போது ராகு திசை.அடுத்து வரக்கூடிய குரு திசெயின் பலன்கள் எப்படி இருக்கும்.
    குரு நன்மை செய்வாரா அல்லது தீமை செய்வாரா? ரிஷப லக்னதிக்கு குரு கேட்ட கிரகம் இல்லையா ?
    கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் சார்.

    உங்கள் மாணவன்
    எஸ்.ஏ.பாபு
    எ.பி.டி, லிமிடெட் .
    கோயம்புத்தூர்.

    ReplyDelete
  39. ஐயா வணக்கம்...!

    கேள்வி பதில்கள் அருமை... ஆனால் ஒரு சின்ன சந்தேகம்.. (இங்கு கேட்பதற்காக மன்னிக்கவும்) ஒரு ஜாதகத்தின் ராசிக்கட்டத்தில் ஒரு தோஷமோ (அ) யோகமோ இல்லாமல் இருந்து நவாம்சத்தில் அந்த தோஷமோ (அ) யோகமோ இருந்தால் (உதாரணமாக நவாம்சத்தில் ஒரு ஜாதகனுக்கு கால சர்ப்ப தோஷம் cum யோகம் இருந்தால்) அந்த ஜாதகனுக்கு அந்த தோஷம் (அ) யோகம் இருப்பதாகக் கொள்ளலாமா? Because Navamsa is the magnified version of Rasi Chart..

    மிக்க நன்றிகளுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  40. //////iyer said...
    உள்ளேன் அய்யா . .
    கேள்வி பதில்களை படித்துக் கொண்டு உள்ளேன் அய்யா . .//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. /////R.Puratchimani said...
    /////R.Puratchimani said...
    பரல்களைத்தாண்டி குருவின் பார்வை லக்னத்தில் விழுவதுதான் அவரின் நீண்ட ஆயுளுக்கு காரணமா?,/////
    ////அதைவிட முக்கியமான காரணம் ஆயுள்காரகனின் அமைப்பு!/////
    அது என்ன ஐயா அமைப்பு,அவன் எட்டாம் வீட்டை பார்ப்பதா? பலம் இல்லாத ஒருவன் பார்த்து என்ன பயன்?/////

    அமைப்பு என்பததை விளக்குவதற்கு உதாரணங்களுடன் 2 பக்கங்களுக்குக் கட்டுரை எழுத வேண்டும். உங்களுக்குப் பின்னூட்டம் வழியாகப் பாடம் நடத்த முடியுமா புரட்சி? பழைய பாடங்களைப் படியுங்கள்

    ReplyDelete
  42. //////bhuvanar said...
    More than anything ,its your writing style that makes me read your blog everyday sir ..
    Regards
    sowmya////
    Above comment "REPEAT" sir for me aswell
    Rds
    Pandian/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  43. ////Babu said...
    சார்
    வணக்கம், ரிஷப லக்னம், குரு மூன்றாம் இடத்தில்(கடகம்) உச்சம்,( சுயவர்க்கம் - 5 ,பரல்கள் - 31 ,குரு வக்கிரம் ). குரு 8 , 11 , ம் இடங்களுக்கு உரியவன்.இப்போது ராகு திசை.அடுத்து வரக்கூடிய குரு திசையின் பலன்கள் எப்படி இருக்கும். குரு நன்மை செய்வாரா அல்லது தீமை செய்வாரா? ரிஷப லக்னதிக்கு குரு கேட்ட கிரகம் இல்லையா? கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள் சார்.
    உங்கள் மாணவன்
    எஸ்.ஏ.பாபு/////

    ஏன் உங்கள் அலுவலக முகவரியைப் பின்னூட்டத்தில் போடுகின்றீர்கள். அதை என்னால் எடிட் செய்ய முடியாது என்பது தெரியுமா? உங்கள் பின்னூட்டத்தில் உள்ள நேரத்தை பாருங்கள்.
    எஸ்.ஏ.பாபு
    எ.பி.டி, லிமிடெட் .
    கோயம்புத்தூர்.
    Tuesday, September 21, 2010 2:31:00 PM
    என்ன தவறு நடந்திருக்கிறது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  44. M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    கேள்வி பதில்கள் அருமை... ஆனால் ஒரு சின்ன சந்தேகம்.. (இங்கு கேட்பதற்காக மன்னிக்கவும்) ஒரு ஜாதகத்தின் ராசிக்கட்டத்தில் ஒரு தோஷமோ (அ) யோகமோ இல்லாமல் இருந்து நவாம்சத்தில் அந்த தோஷமோ (அ) யோகமோ இருந்தால் (உதாரணமாக நவாம்சத்தில் ஒரு ஜாதகனுக்கு கால சர்ப்ப தோஷம் cum யோகம் இருந்தால்) அந்த ஜாதகனுக்கு அந்த தோஷம் (அ) யோகம் இருப்பதாகக் கொள்ளலாமா? Because Navamsa is the magnified version of Rasi Chart..
    மிக்க நன்றிகளுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்//////

    கொள்ளலாம்.

    ReplyDelete
  45. ////ஆயிரம், லட்சம் என்று
    சொல்லிச் சூடு ஏற்றாதீர்கள்.////

    ஹா ஹா ஹா. இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கிட்டாங்கப்பா என்று வாத்தியார் வடிவேலு பேசும் வசனத்தைப் பேச வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

    ReplyDelete
  46. ////ananth said...
    ////ஆயிரம், லட்சம் என்று
    சொல்லிச் சூடு ஏற்றாதீர்கள்.////
    ஹா ஹா ஹா. இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கிட்டாங்கப்பா என்று வாத்தியார் வடிவேலு பேசும் வசனத்தைப் பேச வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.//////

    அந்த நிலைமை வராது. நீங்கள் நம்பலாம்! பழநிஅப்பன் எனக்குப் பக்கபலமாக உள்ளார்!:-)))))

    ReplyDelete
  47. ஐயா என்று நீங்கள் அன்பொழுக அழைத்தாலும், உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))

    சோடா பாட்டில் மணி ன்னு பேரு வெச்சுருந்தாத்தான் நீங்க பயப்படனும்..


    நான் அடிக்க நினைச்ச கமெண்ட்டை நம்ம தளபதி ஏற்கனவே அடிச்சு வுட்டுட்டாரு..
    நல்ல wavelength மாட்சிங்..ரெண்டு மூணு தரம் இதே மாதிரி ஆயிடுச்சு..

    anyhow ,
    bottle mani க்கு ஒரு hats off ....

    இந்த century கே இவருதான் nickname superstar ...

    bottle mani க்கு ஒரு request : naming பத்தி சின்னதா ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா?

    ReplyDelete
  48. /////minorwall said...
    ஐயா என்று நீங்கள் அன்பொழுக அழைத்தாலும், உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))
    சோடா பாட்டில் மணி ன்னு பேரு வெச்சுருந்தாத்தான் நீங்க பயப்படனும்..
    நான் அடிக்க நினைச்ச கமெண்ட்டை நம்ம தளபதி ஏற்கனவே அடிச்சு வுட்டுட்டாரு..
    நல்ல wavelength மாட்சிங்..ரெண்டு மூணு தரம் இதே மாதிரி ஆயிடுச்சு..
    anyhow ,bottle mani க்கு ஒரு hats off ....இந்த century கே இவருதான் nickname superstar ...
    bottle mani க்கு ஒரு request : naming பத்தி சின்னதா ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா? /////

    யாரங்கே? உடனே சென்று பாட்டில் மணியைச் சந்தித்துப் பெயருக்கான விளக்கத்தைக் கேட்டு வாங்கிவரவும்.
    மைனருடைய விருப்பத்தை நிறைவேற்றுவது நமது கடமையாகும்!

    ReplyDelete
  49. ஐயா எண்கணிதம் பற்றிய உங்களின் முழுமையான கருத்து என்ன.தயவுகூர்ந்து முருகன் அருளால் பதிலை எதிர்பார்கும் அன்பன்.

    ReplyDelete
  50. //////hai_cha70 said...
    ஐயா எண்கணிதம் பற்றிய உங்களின் முழுமையான கருத்து என்ன.தயவுகூர்ந்து முருகன் அருளால் பதிலை எதிர்பார்கும் அன்பன்.////

    இதற்கெல்லாம் முருகனைக் கூப்பிடலாமா? ஜோதிடம் முழுச்சாப்படு என்றால், என் கணிதம் அப்பளம் போன்றது.
    அப்பளம் முழுச்சாப்பாடு ஆகாது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com