மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.9.10

சீதைக்கு ராமன் சித்தப்பன்!

...................................................................................................................
சீதைக்கு ராமன் சித்தப்பன்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.23
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.78
மோகன்ராஜ்!
     
Dear  Mr SP.VR. SUBBAIYA,
       I am Mohan. I am a follower of your blog ( not continuously).I have a some doubts.
Doubt No:1
There are 12 rasis as per hindu mythology. As per that on average Indian population 0f 120 crore people in our country. Just average is around 10 crore people having a one of the rasis.My doubt is that. Will 10 crore of the people will have the same type of life or not.
Doubt No:2 
Assume if two people of same sex is born at the same place (or hospital) on the same day Will they have a similar rasi, natchatram, and jathakam - is this right? if right will  these two people will have all of their happenings in their life in common. I don't think it will happen like that Then what is the use of jathakam. Pls let me know .
Mohan.

அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அந்தக் காலத்தில், கிராமங்களில் இரவு நேரத்தில், கூத்து அல்லது கதாகாலட்சேபம் துவங்கி, விடிய விடிய நடக்கும். அதாவது இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி, அதிகாலை ஐந்து மணிவரை நடக்கும்.

அப்படி, ஒரு கிராமத்தில் ராமாயண காலட்சேபம் விடிய விடிய நடந்தது. அப்பா அம்மாவின் கட்டாயத்திற்காக, அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற ஒரு இளைஞன், கோவில் மண்டபத்தில் நடந்த காலட்சேபத்தை உட்கார்ந்து கேட்காமல், கோவிலின் எதிரில் இருந்த ஊருணிக்கரையில் படுத்து ஆனந்தமாகத் தூங்கிவிட்டான். காலையில் கூட்டம் கலைந்து ஊர்மக்களெல்லாம், பலத்த பேச்சுச் சத்தத்துடன் தத்தம் வீடுகளுக்குத் திரும்பியபோது, சத்தத்தில் எழுந்த அவனும், வீட்டிற்குத் திரும்பி விட்டான்.

வீட்டிற்கு வந்தவுடன், அவன் முகத்தில் இருந்த தெளிர்ச்சியைப் பார்த்த, அவனுடைய தந்தை, என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டு, மெல்லப் பேச்சுக் கொடுத்தார்.

“ஏன்டா, சொற்பொழிவைக் கேட்டாயா?”

பதில் வந்தது.  “ஆகா, கேட்டேன்”

“சீதைக்கு, ராமர் என்ன உறவு?” அவர் மீண்டும் கேட்க, இவன் சொன்னான் “அது தெரியாதா என்ன? சீதைக்கு ராமர் சித்தப்பா” என்றான்.

அதுபோலத்தான் இருக்கிறது உங்கள் கேள்விகள் இரண்டும். சுமார் 400 பாடங்கள் நடத்தியுள்ளேன். நீங்கள் அவற்றையெல்லாம் படித்திருந்தால், இப்படிக் கேட்பீர்களா? முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படியுங்கள்.
--------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.79
வேத நாராயணன்
பெங்களூர்
   
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
பாலரிஷ்டம் பற்றி விரிவாக தெரிவிக்கவும்
நன்றிகளுடன்

13.7.2010 அன்று பாலரிஷ்ட தோஷத்தைப் பற்றி விவரமாக எழுதியுள்ளேன். Link URL   http://classroom2007.blogspot.com/2010/07/blog-post_13.html  பாடங்களை ஒழுங்காகப் படிக்காமல், பழைய பாடங்களிளேயே - நடத்திய பாடங்களிலேயே  சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்வது?

பழைய பாடத்தில் உள்ளது என்று சொன்னால், உடனே அதன் சுட்டியைத் தாருங்கள் என்ற கேள்வி வரும். சுட்டியைக் கொடுத்தாலும், லிங்க் யு.ஆர்.எல் வேலை செய்யவில்லை. நீங்கள் எனக்கு அதை, அப்படியே தர முடியுமா என்று கேட்டு அடுத்த மின்னஞ்சல் வரும். புதிதாக வருபவர்களில் பலர் பழைய பாடங்களை என்ன காரணத்தினாலோ படித்து அறிந்துகொள்வதில்லை.

அதனால், அதுபோன்ற உங்களுடைய அடுத்தடுத்த கேள்வியைத் தவிர்ப்பதற்காக, அந்தப் பாடத்தையே மீண்டும் ஒருமுறை (கீழே) கொடுத்துள்ளேன். இப்போதாவது படித்துத் தெளிவு பெறுங்கள்!
--------------------------------------------
முதலில் குழந்தைப் பருவத்தில் தவறிப்போகும் ஜாதகர்களைப் பற்றிப் பார்ப்போம்:

அதற்கு பாலரிஷ்ட தோஷம் என்று பெயர்:

பிறந்த நாளில் இருந்து எட்டு வயதிற்குள் இறந்துவிடும் அமைப்பு அது! பாலரிஷ்ட தோஷம்!

ஜாதகத்தில் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் (malefic planets) பார்வை விழுந்தால், அது இந்த தோஷத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்டுள்ள மூன்று  வீடுகளில் உள்ள சந்திரனின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், பாலரிஷ்ட தோஷம்
நிவர்த்தியாகிவிடும். உங்கள் மொழியில் சொன்னால் காணாமல் போய்விடும்.

ரிஷப லக்கினக் குழந்தைக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது பாலரிஷ்டம் போன்று தோற்றமளிக்கும். ஆனால் சந்திரன் இருக்கும் அந்த வீடு, சுபக்கிரகமான சுக்கிரன் வீடு, லக்கினாதிபதியும் அவரே! அதனால்
குழந்தை தப்பித்துவிடும். பாலரிஷ்டம் ஒன்றும் செய்யாது.

சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கு, ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது பாபக் கிரகமான சனியின் வீடு. அந்த வீட்டின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை எதுவும் இல்லை என்றால், பாலரிஷ்ட தோஷம் தன் வேலையைக் காட்டிவிடும்.
---------------------------------------------------------------------------
குழந்தைகள், நீரில் தவறி விழுந்து அதாவது ஆறு, குளம் அல்லது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தவறி விழுந்து, இறந்து விடுவதுதான் இந்த வயதுச் சாவுகளில் அதிகமான சாவுகளாக இருக்கும். அல்லது கடுமையான
நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடும் குழந்தைகளும் இருக்கும்.

எது எப்படியானும், அது விதிக்கப்பட்டது. பெற்றோர்களால் ஒன்றும் செய்ய முடியாது - பரிதவிப்பதைத் தவிர.

அதற்கான நிலைப்பாடுகள் (அனைத்தும் பொது விதிகள்):

கண்டம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது அதற்குப் பொருள்:

1. சந்திரன் 8ஆம் வீடு, அல்லது 12ஆம் வீடு, அல்லது 6ஆம் வீடுகளில் இருந்து ராகுவின் பார்வையைப்  பெற்றிருந்தால், சின்ன வயதில் கண்டம்.

2. லக்கினத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்க, கேந்திரங்களில் அல்லது எட்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்.

3. 6ஆம் வீட்டில் அல்லது 8ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், மற்றும் சனி கூட்டாக இருக்க, சுபக்கிரகங்களின்  பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்.

4. சூரியன், செவ்வாய், மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 5ஆம் வீட்டில் கூட்டாக இருந்தால்,குழந்தைக்குக் கண்டம்

5. லக்கினத்தில் சந்திரன் இருக்க, அதன் இருபுறமும், தீய கிரகங்கள் இருக்க (பாபகர்த்தாரி யோக அமைப்பு) சுபகிரகங்களின் பார்வை எதுவும் லக்கினத்தின் மேல் இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்

6. ஜாதகத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, ஜாதகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில்  சுபக்கிரகங்களான குரு  அல்லது  சுக்கிரன் பாபகர்த்தாரி  யோகத்தில்  மாட்டிக் கொண்டிருந்தால்  குழந்தைக்குக் கண்டம்

7. லக்கினத்தில் சந்திரனும், சனியும் இருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்

8. லக்கினம் மற்றும் லக்கினத்தில் இருந்து 6, 7 , 8 ஆகிய நான்கு வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்.

9. ஜாதகத்தில் சந்திரனும், சனியும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க, 12ல் சூரியனும், 4ல் செவ்வாயும் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்

10. ஏழாம் வீட்டில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்து, சுபக்கிரகங்களின் பார்வையை அவர்கள் பெறவில்லை  என்றால், குழந்தைக்குக் கண்டம்
--------------------------------------------------------------------
முக்கியமானவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஜோதிட நூல்களில்  சொல்லப்பட்டுள்ளன. அத்தனையையும் எடுத்து எழுதினால் ஓவர் டோசாகிவிடும். ஒரு தூக்க மாத்திரைக்குப் பதிலாக  ஐம்பது  தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும். ஆகவே பாலரிஷ்ட  தோஷத்திற்கான அமைப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நானும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப் போவதில்லை. இதைப் படிக்கும் நீங்களும் ஜோதிடர் வேலைக்குச்  செல்லப்போவதில்லை. ஆகவே இது போதும்.

இல்லை நாங்கள் முழு விதிகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் என்பவர்கள், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புராண ஜோதிட நூல்களை வாங்கிப் படிக்கலாம்.
------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.80
நந்தினி நடராஜன்
கோயம்புத்தூர்
   
வணக்கம் ஐயா,
ஆண் ஜாதகம் தான் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சில ஜோதிடர்கள்  கூறுகிறார்கள் இது உண்மையா அய்யா?

உதாரணத்திற்கு ஒரு ஆணின் ஜாதகத்தில் இரண்டு குழந்தையும்  பெண் என்று உள்ளது .ஆனால்  அவனுடய மனைவின் ஜாதகத்தில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று உள்ளது. ஒரு ஜோதிடர் கூறிஉள்ளார்  இரண்டும் பெண் தான் பிறக்கும் என்று ஏன் என்றால் ஆண் ஜாதகம் தான் வலிமையானது என்று சொன்னார். இதில் எனக்கு உடன்பாடு  இல்லை அய்யா. தாங்கள் ஜாதகத்திற்கு பெண் ஆண் என்று பேதமில்லை என்று கூறி உள்ளீர்கள் .
குழந்தை பிறப்பு என்பது கூட்டு முயற்சி என்று கூறி உள்ளீர்கள் . பிறகு எப்படி ஆண் ஜாதகம் தான்  வலிமையானது என்று சொல்ல முடியும் ?

அப்படி வைத்து கொண்டாலும் எதை வைத்து ஆண் ஜாதகம் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சொல்ல முடியும் ? உதாரணத்திற்கு 10 ஆண்களுடைய ஜாதகத்தில் பெண் குழந்தை என்று உள்ளது என்றால் அவர்களுக்கு ஆண் குழந்தை  பிறக்காது என்று சொல்ல  முடியுமா? அப்போது பெண்ணின் ஜாதகமே தேவை இல்லை  என்று ஆகிவிடும் இல்லையா ?நான்  ஜோதிடதைக் கேலி செய்வதாக நினைக்க வேண்டம் அய்யா ...    எனக்கு இந்த 5  வீட்டை பற்றி  நிறைய சந்தேகம் உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள் ...எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும் ..
நந்தினி நடராஜன்
கோயம்புத்தூர்

சில ஜோதிடர்கள் கூறுவதற்கு நான் எப்படி விளக்கம் சொல்ல முடியும்? சொன்னவர்களையே நீங்கள் கேட்பதுதான் முறை!. ஐந்தாம் வீட்டைப் பற்றியும், குழந்தைப் பேறுக்கான அமைப்பைப் பற்றியும் நான் நிறைய எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் படிக்க வேண்டுகிறேன்  
--------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.81
விசு ஐயர்

வணக்கம் அய்யா . .
3 கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்தால் . .அது கிரக யுத்தம். அதுவும் 12ம் இடத்தில் என்றால்  பலன் கிட்டாது என பதில் கண்டேன்  அப்படியானால் சூரியன் சுக்கிரன் புதன் என எல்லோரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து இருந்தால்  அது அப்படித்தான் இருக்குமா?

 “அது அப்படித்தான் இருக்குமா?” என்று நீங்கள் கேட்க, வடிவேல் பாணியில் “அது அப்படித்தான் இருக்குமா?” என்று நானும் திருப்பிக் கேட்க வேண்டியதுதான்.

லக்கினம் என்ன என்பது முக்கியமில்லையா? என்ன லக்கினம் என்பதை நீங்கள் ஏன் சொல்லவில்லை? கேள்வியை
கேள்வியாகக் கேட்க வேண்டாமா?

அது அப்படித்தான் இருக்குமா? என்றால் என்னத்தைச் சொல்வது? பலன் கிட்டாது என்று நீங்களே குறிப்பை எழுதியுள்ளதால், அது அப்படித்தான் இருக்கும் என்று நானும் பதில் சொல்லி விடலாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24 comments:

  1. நகைசுவையான பதில் நன்றாக இருந்தது.மிக அருமை. நன்றி.

    ReplyDelete
  2. இராமாயணக் கதையை வைத்து இன்னொரு தமாஷ் கதையும் உண்டே!


    "சிவதனுசை உடைத்தது யார்?" என்று மாவட்டக் கல்வி அதிகாரி தன்னுடைய ஆய்வின் போது ஒரு பள்ளி வகுப்பில் கேட்டார்.
    எல்லாப் பையன்க‌ளும் பயந்துபோய் "நானில்லை சார், நானில்லை சார்"
    என்கிறார்கள்."என்ன பையன்க‌ளுக்கு இது கூடத் தெரியவில்லை?"என்று வகுப்பாசிரியரைக் கேட்டார் அதிகாரி.தப்பிக்க நினைத்து வகுப்பாசிரியர் சொன்னார், "சார்!இந்த‌ வ‌குப்பிலேயே மிக‌வும் ரவுடித்த‌ன‌ம் ப‌ண்ணுப‌வ‌ன் அந்த‌க்கோடியில் பூனை போல‌ உட்கார்ந்திருக்கும் த‌ட்சிணாமூர்த்திதான். அவன் தான் சார் தனுசை உடைத்திருப்பான்.எழுந்திருடா படவா!"என்றார். அதிகாரி கோவமாக வெளியேறித் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று நடந்ததைச் சொன்னார்.தலைமை ஆசிரியர் சொன்னார்:" அந்த ஆசிரியர் நல்ல அறிவாளிதான்.சிவதனுசை உடைத்தது இராவணன்தான் என்பது அவருக்கு எப்படித் தெரியாமல் போயிற்று என்பது ஆச்சரியமாக உள்ளது!"
    என்றாராம்."என்ன நீரும் தவறாகச் சொல்கிறீர்!சிவதனுசை உடைத்தது ஹனுமார் என்பது உமக்கும் தெரியவில்லையே! என்ன பள்ளி நடத்துகிறீர்கள்?!"என்று ஏகத்துக்கும் சத்தம் போட்டாராம் கல்வி அதிகாரி!

    ReplyDelete
  3. ஆசானே, ராகு,கேது வின் பார்வைகள் is it 3,7,10 ?

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா . .
    3 கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்தால் . .அது கிரக யுத்தம். அதுவும் 12ம் இடத்தில் என்றால் பலன் கிட்டாது என பதில் கண்டேன் அப்படியானால் ///சூரியன் சுக்கிரன் புதன் என எல்லோரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து இருந்தால் அது அப்படித்தான் இருக்குமா?

    லக்கினம் என்ன என்பது முக்கியமில்லையா? என்ன லக்கினம் என்பதை நீங்கள் ஏன் சொல்லவில்லை? கேள்வியை
    கேள்வியாகக் கேட்க வேண்டாமா? ///

    இப்படி உள்ளது கையில் உள்ள இரண்டு வெவ்வேறு ஜாதகங்கள் . .

    ஒன்று மீன லக்கினம்
    மற்றொன்று கன்னி லக்கினம்

    அதனால் தான் குறிப்பிடவில்லை ...
    மன்னிக்க வேண்டும் ஆசானே ..

    கேள்வி கேட்கவும் திறமை வேண்டும் என புரிந்து கொண்டேன், நன்றி

    ReplyDelete
  5. ////s.adimoulame said...
    நகைசுவையான பதில் நன்றாக இருந்தது.மிக அருமை. நன்றி.////

    நகைச்சுவை இல்லை என்றால், படிப்பதற்குச் சுவாரசியமாக இருக்காது!

    ReplyDelete
  6. ////kmr.krishnan said...
    இராமாயணக் கதையை வைத்து இன்னொரு தமாஷ் கதையும் உண்டே!
    "சிவதனுசை உடைத்தது யார்?" என்று மாவட்டக் கல்வி அதிகாரி தன்னுடைய ஆய்வின் போது ஒரு பள்ளி வகுப்பில் கேட்டார்.
    எல்லாப் பையன்க‌ளும் பயந்துபோய் "நானில்லை சார், நானில்லை சார்"
    என்கிறார்கள்."என்ன பையன்க‌ளுக்கு இது கூடத் தெரியவில்லை?"என்று வகுப்பாசிரியரைக் கேட்டார் அதிகாரி.தப்பிக்க நினைத்து வகுப்பாசிரியர் சொன்னார், "சார்!இந்த‌ வ‌குப்பிலேயே மிக‌வும் ரவுடித்த‌ன‌ம் ப‌ண்ணுப‌வ‌ன் அந்த‌க்கோடியில் பூனை போல‌ உட்கார்ந்திருக்கும் த‌ட்சிணாமூர்த்திதான். அவன் தான் சார் தனுசை உடைத்திருப்பான்.எழுந்திருடா படவா!"என்றார். அதிகாரி கோவமாக வெளியேறித் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று நடந்ததைச் சொன்னார்.தலைமை ஆசிரியர் சொன்னார்:" அந்த ஆசிரியர் நல்ல அறிவாளிதான்.சிவதனுசை உடைத்தது இராவணன்தான் என்பது அவருக்கு எப்படித் தெரியாமல் போயிற்று என்பது ஆச்சரியமாக உள்ளது!"
    என்றாராம்."என்ன நீரும் தவறாகச் சொல்கிறீர்!சிவதனுசை உடைத்தது ஹனுமார் என்பது உமக்கும் தெரியவில்லையே! என்ன பள்ளி நடத்துகிறீர்கள்?!"என்று ஏகத்துக்கும் சத்தம் போட்டாராம் கல்வி அதிகாரி!/////

    ஆமாம். இந்தக் கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நன்றி சார்!

    ReplyDelete
  7. /////சூரிபாபா said...
    ஆசானே, ராகு,கேது வின் பார்வைகள் is it 3,7,10 ?////

    கேள்வியை மின்னஞ்சலில் கேளுங்கள். Doubt என்று தலைப்பிடுங்கள்!

    ReplyDelete
  8. /////iyer said...
    வணக்கம் அய்யா . .
    3 கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்தால் . .அது கிரக யுத்தம். அதுவும் 12ம் இடத்தில் என்றால் பலன் கிட்டாது என பதில் கண்டேன் அப்படியானால் ///சூரியன் சுக்கிரன் புதன் என எல்லோரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து இருந்தால் அது அப்படித்தான் இருக்குமா?
    லக்கினம் என்ன என்பது முக்கியமில்லையா? என்ன லக்கினம் என்பதை நீங்கள் ஏன் சொல்லவில்லை? கேள்வியை
    கேள்வியாகக் கேட்க வேண்டாமா? ///
    இப்படி உள்ளது கையில் உள்ள இரண்டு வெவ்வேறு ஜாதகங்கள் . .
    ஒன்று மீன லக்கினம்
    மற்றொன்று கன்னி லக்கினம்
    அதனால் தான் குறிப்பிடவில்லை ...
    மன்னிக்க வேண்டும் ஆசானே ..
    கேள்வி கேட்கவும் திறமை வேண்டும் என புரிந்து கொண்டேன், நன்றி/////

    பதில் சொல்பவருக்கு இருக்கும் சிரமங்களையும் புரிந்து கொண்டால் நல்லது:-)))))

    ReplyDelete
  9. கேள்வி‍ பதில் பகுதியில் கேள்விகள் அவ்வளவு சுவாரசியமாக இல்லை. முன்னர் கேட்ட கேள்விகளே திரும்பத் திரும்ப கேட்கப்படுவது போல் தோன்றுகிறது. உங்கள் பதில்கள் நன்றாகத்தான் இருக்கின்றன.

    ReplyDelete
  10. சார்

    பாடம் நன்றாக இருந்தது

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  11. சீதைக்கு இராமன் சித்தப்பன் என்கிற கதையும் சரி, தஞ்சை கிருஷ்ணன் சொன்ன பள்ளிக்கூட கதையும் நல்ல நகைச்சுவை. கொஞ்சம் சீரியசான கதையொன்றும் உண்டு. சோவியத் ரஷ்யாவில் அதிபர் குருஷேவ் தலைமையில் ஆட்சி அமைந்தது. கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் குருஷேவ், ஸ்டாலின் காலத்தில் இருந்த எதேச்சாதிகாரமும் அவருடைய அதிகாரத்துக்கு அனைவரும் பயந்துகொண்டு இருந்ததையும் பற்றி விரிவாகப் பேசினார். அப்போது ஒருவர் நீங்கள் ஏன் எதிர்த்துப் பேசியிருக்கக்கூடாது என்று கேட்டார். உடனே குருஷேவ் கோபத்துடன் மேஜையைத் தட்டி யார் இப்போது கேள்வி கேட்டது என்று கூச்சலிட்டார். ஒருவரும் பேசவில்லை. உடனே குருஷேவ் சொன்னர், இப்படித்தான் நானும் பேசாமல் இருந்தேன் என்றார்.

    ReplyDelete
  12. //கேள்வி‍ பதில் பகுதியில் கேள்விகள் அவ்வளவு சுவாரசியமாக இல்லை. முன்னர் கேட்ட கேள்விகளே திரும்பத் திரும்ப கேட்கப்படுவது போல்//

    கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் பதில்கள் வெவ்வேறு விதமாக இருப்பதால் ரசிக்கும்படியே இருக்கிறது..

    அய்யா அவர்கள் குறிப்பிட்ட target வர இன்னும் சில கேள்விகளே இருக்கின்றன..

    ரசனை ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி என்பது அன்பு சகோதரி உமா அவர்களுக்கும் தெரியும் இருப்பினும் இது அவர்கள் விருப்பம்..

    எல்லாவற்றையும் ரசிப்பது எங்கள் விருப்பம்..

    நமக்காக படைப்பதே ஆசிரியருக்கு விருப்பம்

    சரி தானே அய்யா . .

    ReplyDelete
  13. ரசனை ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி என்பது அன்பு சகோதரி உமா அவர்களுக்கும் தெரியும்//

    கண்டிப்பாக, நான் என் கருத்தை மட்டுமே சொன்னேன்.

    ReplyDelete
  14. Dear Sir

    Kelviyum Badhilum Arumai.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. /////Uma said...
    கேள்வி‍ பதில் பகுதியில் கேள்விகள் அவ்வளவு சுவாரசியமாக இல்லை. முன்னர் கேட்ட கேள்விகளே திரும்பத் திரும்ப கேட்கப்படுவது போல் தோன்றுகிறது. உங்கள் பதில்கள் நன்றாகத்தான் இருக்கின்றன./////

    உங்களின் விமர்சனத்திற்கு நன்றி சகோதரி. இன்னும் சில பதிவுகள்தான். 100 மின்னஞ்சல்கள் இந்த ஸீசனுக்கு!
    அத்துடன் நிறைவாகிவிடும்!

    ReplyDelete
  16. ////bhuvanar said...
    சார்
    பாடம் நன்றாக இருந்தது
    நன்றி
    பாண்டியன்/////

    நல்லது. நன்றி பாண்டியன்!

    ReplyDelete
  17. /////Thanjavooraan said...
    சீதைக்கு இராமன் சித்தப்பன் என்கிற கதையும் சரி, தஞ்சை கிருஷ்ணன் சொன்ன பள்ளிக்கூட கதையும் நல்ல நகைச்சுவை. கொஞ்சம் சீரியசான கதையொன்றும் உண்டு. சோவியத் ரஷ்யாவில் அதிபர் குருஷேவ் தலைமையில் ஆட்சி அமைந்தது. கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் குருஷேவ், ஸ்டாலின் காலத்தில் இருந்த எதேச்சாதிகாரமும் அவருடைய அதிகாரத்துக்கு அனைவரும் பயந்துகொண்டு இருந்ததையும் பற்றி விரிவாகப் பேசினார். அப்போது ஒருவர் நீங்கள் ஏன் எதிர்த்துப் பேசியிருக்கக்கூடாது என்று கேட்டார். உடனே குருஷேவ் கோபத்துடன் மேஜையைத் தட்டி யார் இப்போது கேள்வி கேட்டது என்று கூச்சலிட்டார். ஒருவரும் பேசவில்லை. உடனே குருஷேவ் சொன்னர், இப்படித்தான் நானும் பேசாமல் இருந்தேன் என்றார்./////

    சோவியத் ரஷ்யாவில் நடந்த நிகழ்வொன்றை அறியத் தந்தமைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  18. /////iyer said...
    //கேள்வி‍ பதில் பகுதியில் கேள்விகள் அவ்வளவு சுவாரசியமாக இல்லை. முன்னர் கேட்ட கேள்விகளே திரும்பத் திரும்ப கேட்கப்படுவது போல்//
    கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் பதில்கள் வெவ்வேறு விதமாக இருப்பதால் ரசிக்கும்படியே இருக்கிறது..
    அய்யா அவர்கள் குறிப்பிட்ட target வர இன்னும் சில கேள்விகளே இருக்கின்றன..
    ரசனை ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி என்பது அன்பு சகோதரி உமா அவர்களுக்கும் தெரியும் இருப்பினும் இது அவர்கள் விருப்பம்..
    எல்லாவற்றையும் ரசிப்பது எங்கள் விருப்பம்..
    நமக்காக படைப்பதே ஆசிரியருக்கு விருப்பம்
    சரி தானே அய்யா . ./////

    சரிதான் சுவாமி. இல்லையென்றால் விடுவீர்களா? வகுப்பறையில் அனைவருக்கும் (வாத்தியார் உட்பட) தங்கள் கருத்தைச் சொல்லும் உரிமை உண்டு!

    ReplyDelete
  19. ///Uma said...
    ரசனை ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி என்பது அன்பு சகோதரி உமா அவர்களுக்கும் தெரியும்//
    கண்டிப்பாக, நான் என் கருத்தை மட்டுமே சொன்னேன்.////

    நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லலாம். வகுப்பறையில் அனைவருக்கும் (வாத்தியார் உட்பட) தங்கள் கருத்தைச் சொல்லும் உரிமை உண்டு!

    ReplyDelete
  20. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kelviyum Badhilum Arumai.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  21. உள்ளேன் ஐயா !

    "வாத்தியாரின் வகுப்பறை!" யில் கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்)

    வாத்தியாரிடம் தான் மாணவமணிகள் தங்களுக்கு உண்டாகும் சந்தேகத்தை கேட்க முடியும். மேலும், இது ஒன்றும் நேரிடையான வகுப்போ, மாலை, வார, மாத, வருட அல்லது வருடத்திற்கு இருமுறை உள்ள வகுப்போ கூட இல்லை .

    இது முழுக்க முழுக்க ஆன்லைன் எனப்படும் வாத்தியாருக்கும் மாணவருக்கும் இடையில் ஆன வகுப்பறை என்பது அனைவருக்கும் தெரிந்தும் மறந்து விடுகின்றனர் சில சமயம்.

    இங்கு இன்றைய தேதியில் மாணவர்கள் மட்டும் 1834 வாத்தியாருடன் சேர்த்து 1853 இதில் ஆசைக்கு கூட ஒருவரையும் நேரிலையோ ஏன் போனிலோ கூட இது வரை தொடர்பு கொண்டது கிடையாது வாத்தியாரும் அடங்குவார் இந்த வகையில்.

    மிகவும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால்

    இது ஒரு தர்ம பள்ளிக்கூடம்,

    எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வாத்தியார் அவர்கள் நடத்தும் பல்கலை கழகம் என்றால் மிகை அல்ல.

    உலகம் முழுவதும் உள்ள மாணவமணிகள் தங்களுடைய
    " தாய் மொழியாம் செந்தமிழில்!" படிக்கும் பள்ளிக்கூடம் என்பதனை மறக்க கூடாது .

    இந்தியாவில் உள்ளவர்கள் நூலகம் அல்லது மற்றவகையில் செய்தியினை அறிந்துகொள்ள முடியும் ஆனால் எம்மை போன்றவர்களின் நிலைமை
    ( அயல்நாட்டில் உள்ளவர்கள் ) எப்படி ஐயா தெரிந்து கொள்ளமுடியும்.

    ஆன்லைனில் இருந்து பாடம் படிக்கும் அனைவரும் எதோ ஒருவகையில் நடுத்தர மற்றும் மேல்தர வசதி வாயிப்பு உள்ள மாணவர்கள் தான்.

    பொழுது போக்க இன்றைய நிலைக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆன்லைனில் கொட்டி கிடைக்கின்றது.
    ஆனால், அனைத்தையும் தெரிந்து கொண்டும் எதுவும் வேண்டாம் எனதான் ஆன்மிகம் ,நமது பண்பாடு என இங்கு வந்து பாடம் படிக்கின்றோம்,

    தினமும் முடிந்த வரைக்கும் வருகை தருகின்றோம் அல்லது வருகின்றோம்.பொழுது போக
    இல்லை பெரியோர்களே!

    மதுவை குடிக்காமல் இருப்பது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் மது கடையில் இருந்து கொண்டு குடிக்காமல் இருப்பது தான் மிகவும் சிறப்பு.

    ஆன்மிகம் சம்பந்தம் ஆன கேள்விகள் கேட்க காரணமும் சரியான காரணம் உண்டு.

    ஜோதிடமும் ஆன்மிகமும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு உடையது இதனில் எதனில் ஒன்றையாவது வேறு படுத்தி காண்பியுங்கள் பார்ப்போம் பெரியோர்களே?

    இன்னும் எத்தனையோ கூறலாம்..... இதோட நன்றி! வணக்கம்.

    ReplyDelete
  22. கேள்வி பதில் பகுதி நன்றாக உள்ளது. பாலரிஷ்டம் பற்றி விளக்கங்கள் நன்றாக உள்ளது. இப்படி குழந்தை பிறப்பதற்கு தாய் தந்தையின் பாவ புண்ணியம் காரணமாக இருக்குமா??

    ReplyDelete
  23. kannan said...
    உள்ளேன் ஐயா !
    "வாத்தியாரின் வகுப்பறை!" யில் கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்)
    வாத்தியாரிடம் தான் மாணவமணிகள் தங்களுக்கு உண்டாகும் சந்தேகத்தை கேட்க முடியும். மேலும், இது ஒன்றும் நேரிடையான வகுப்போ, மாலை, வார, மாத, வருட அல்லது வருடத்திற்கு இருமுறை உள்ள வகுப்போ கூட இல்லை .
    இது முழுக்க முழுக்க ஆன்லைன் எனப்படும் வாத்தியாருக்கும் மாணவருக்கும் இடையில் ஆன வகுப்பறை என்பது அனைவருக்கும் தெரிந்தும் மறந்து விடுகின்றனர் சில சமயம்.
    இங்கு இன்றைய தேதியில் மாணவர்கள் மட்டும் 1834 வாத்தியாருடன் சேர்த்து 1853 இதில் ஆசைக்கு கூட ஒருவரையும் நேரிலையோ ஏன் போனிலோ கூட இது வரை தொடர்பு கொண்டது கிடையாது வாத்தியாரும் அடங்குவார் இந்த வகையில்.
    மிகவும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால்
    இது ஒரு தர்ம பள்ளிக்கூடம்,
    எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வாத்தியார் அவர்கள் நடத்தும் பல்கலை கழகம் என்றால் மிகை அல்ல.
    உலகம் முழுவதும் உள்ள மாணவமணிகள் தங்களுடைய
    " தாய் மொழியாம் செந்தமிழில்!" படிக்கும் பள்ளிக்கூடம் என்பதனை மறக்க கூடாது .
    இந்தியாவில் உள்ளவர்கள் நூலகம் அல்லது மற்றவகையில் செய்தியினை அறிந்துகொள்ள முடியும் ஆனால் எம்மை போன்றவர்களின் நிலைமை
    ( அயல்நாட்டில் உள்ளவர்கள் ) எப்படி ஐயா தெரிந்து கொள்ளமுடியும்.
    ஆன்லைனில் இருந்து பாடம் படிக்கும் அனைவரும் எதோ ஒருவகையில் நடுத்தர மற்றும் மேல்தர வசதி வாயிப்பு உள்ள மாணவர்கள் தான்.
    பொழுது போக்க இன்றைய நிலைக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆன்லைனில் கொட்டி கிடைக்கின்றது.
    ஆனால், அனைத்தையும் தெரிந்து கொண்டும் எதுவும் வேண்டாம் எனதான் ஆன்மிகம் ,நமது பண்பாடு என இங்கு வந்து பாடம் படிக்கின்றோம்,
    தினமும் முடிந்த வரைக்கும் வருகை தருகின்றோம் அல்லது வருகின்றோம்.பொழுது போக
    இல்லை பெரியோர்களே!
    மதுவை குடிக்காமல் இருப்பது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் மது கடையில் இருந்து கொண்டு குடிக்காமல் இருப்பது தான் மிகவும் சிறப்பு.
    ஆன்மிகம் சம்பந்தம் ஆன கேள்விகள் கேட்க காரணமும் சரியான காரணம் உண்டு.
    ஜோதிடமும் ஆன்மிகமும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு உடையது இதனில் எதனில் ஒன்றையாவது வேறு படுத்தி காண்பியுங்கள் பார்ப்போம் பெரியோர்களே?
    இன்னும் எத்தனையோ கூறலாம்..... இதோட நன்றி! வணக்கம்.///////

    உங்களின் மன விளக்கத்திற்கு நன்றி கண்ணன். நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே!

    ReplyDelete
  24. //////Naveen said...
    கேள்வி பதில் பகுதி நன்றாக உள்ளது. பாலரிஷ்டம் பற்றி விளக்கங்கள் நன்றாக உள்ளது. இப்படி குழந்தை பிறப்பதற்கு தாய் தந்தையின் பாவ புண்ணியம் காரணமாக இருக்குமா??//////

    இருக்கும். அத்துடன் அந்தக் குழந்தையின் பூர்வ பாவ, புண்ணியமும் அதில் அடங்கும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com