மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.9.10

எது உங்களுக்கும் நல்லது? எனக்கும் நல்லது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எது உங்களுக்கும் நல்லது? எனக்கும் நல்லது?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.20
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.67
ஸ்ரீஸ்கந்தவரோதயன்
SRISKANTHAVAROTHAYAN
   
Dear Sir,
meenam 8 am kaddathil rakuvum viyalanum irunthal palan nanmija / theemija?
மீன லக்கினம். எட்டாம் இடத்தில் ராகுவும், குருவும் இருந்தால் பலன் நன்மையா? அல்லது தீமையா? இதுதானே உங்கள் கேள்வி!

சூர்யாவின் தம்பி கார்த்திக்கையும், தமன்னாவையும் வைத்துப் படம் எடுத்தால் படம் ஓடுமா? அல்லது ஓடாதா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர், பாடலாசிரியர் இசையமைப்பாளர், குத்துப்பாட்டு, அயிட்டம் சாங்,  போன்ற மற்ற விஷயங்கள் எல்லாம் முக்கியமில்லையா? அவற்றை வைத்துத்தானே படம் ஓடுமா? அல்லது ஓடாதா? என்று சொல்லமுடியும்

லக்கினாதிபதி எட்டில்போய் அமர்ந்தாலும், லக்கினத்தில் எத்தனை பரல்கள், லக்கினத்தில் வேறு யார் உள்ளார்கள், லக்கினத்தின் மேல் விழும் பார்வைகள். மீன லக்கினத்திற்குப் பாக்கியநாதன் செவ்வாய் (9th lord) எங்கே இருக்கிறார் என்பதுபோன்ற மற்ற விஷயங்கள் எல்லாம் வேண்டாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.68
கார்த்திக் கண்ணன்
   
Hello Sir, 
What is meant by moolathirikonam...? and its house numbers also what is meant by kendiram and what are its house numbers
Karthik kannan

இடைவேளைக்குப் பிறகு திரையரங்கிற்குள் நுழைந்து, ஓடிக்
கொண்டிருக்கும் படத்தின் முன்கதையைக் கேட்டுப் பக்கத்து
இருக்கையில் அமர்ந்திருப்ப வனைத் துயரப்படுத்தினால்
என்ன நியாயம்? மூலத்திரிகோணம், கேந்திர வீடுகள் என்பதெல்லாம் அடிப்படைப் பாடங்கள். நீங்கள் முதலில் இருந்து படம் பார்ப்பது நல்லது. அதாவது துவக்கத்தில் இருந்து எல்லாப் பாடங்களையும் படிப்பது
நல்லது. (உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.69
M.நித்தியானந்தம்
வயது 49
கரையாம்பாளையம், பல்லடம்

குருவுக்கு வணக்கம்,
1 குரு ஆறு பரல்களுடன் லக்கினத்தில் இருந்தாலும் அது பகை வீடாக (மிதுனம்) இருக்க ஆறு பரல்களுக்கு உரிய பலன்களைத் தருமா?
2 புதன் ஆறு பரல்களுடன்ஆட்சி வீட்டில் (மிதுனத்தில்) இருக்க அஸ்தமனம் ஆகி இருந்தால்  ஆறு பரல்களுக்கு உரிய பலன்களைத் தருமா?
நன்றி குருவே!

இரண்டு கேள்விகளும் பரல்களைப் பற்றி இருப்பதால் இரண்டிற்கும் ஒரே பதில்தான். பகை வீட்டில் இருக்கும் கிரகத்திற்கும், அஸ்தமனமாகி
இருக்கும் கிரகத்திற்கும் ஆறு பரல்கள் எப்படி வந்தன என்று
யோசித்தீர்களா? உங்களுக்காக அவைகள் பெட்டி கொடுத்து
அதிகமான பரல்களை வாங்கியிருக்க வழியில்லை. பெட்டி கொடுத்து
மார்க் வாங்குவது என்பது என்னவென்று தெரியுமல்லவா? அவைகள் ஜாதகத்தில் இருக்கும் அமைப்பை வைத்து அந்தப் பரல்கள் வந்திருக்க வேண்டும். பரல்கள் அதிகமாக இருப்பதால் அவைகள் ஜாதகத்தில்
சிறப்பாக உள்ளன என்று பொருள். சிறப்பாக இருப்பதால், அவைகள் தங்களுடைய தசாபுத்தியில் நன்மைகளைச் செய்யும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.70
சரவணகுமார்,
கோயம்புத்தூர்
   
Dear vathiyar sir,
Thanks for your Service. 
1. Plase tell us Guru will do good things for all lagnas? ex. for thula, he is athipathi
for 3 & 6, if he gets utcham in 10th house, Katagam, means, what will be the effect?

அண்ணே, வாங்க, வாங்க! அண்ணே என்பது ஒரு மரியாதைக்காகத்தான். நீங்க நம்ம ஊருக்காரர், அதற்காகத்தான் இந்த உபரி மரியாதை. குரு எங்கே இருந்தாலும் உங்களை மாதிரி நல்லவர்தான்!  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னு சொல்லுவாங்க இல்லையா? அதை மனசுல
வச்சுக்குங்க சாமி!

அதோட அவரு உங்க ஜாதகத்தில் கேந்திரத்தில உச்சமாக உக்காந்திருக்காரு. அவருடைய தசா புத்திகள்ல உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்து, பார்க்கும் வேலையில் உயர்வடையச் செய்வாரு!

நீங்க கேட்ட கேள்விய ஜூம் பண்ணிப் பார்த்தா, அவரு 10ஆம் வீட்டில உக்காந்துகிட்ட இரண்டாம் வீட்டைப் பார்க்கிறாரு (5ஆம் பார்வையா) அதனால இரண்டாம் வீட்டுக்குரிய பலனை சிறப்பாகத்தருவாரு! ஆறாம் வீட்டுக்கு, அந்த வீட்டில இருந்து கணக்குப்போட்டா, அவரு அந்த வீட்டுக்கு (அந்த வீட்டுக்கு அதிபதிவேற) கேந்திரத்தில் உக்காந்திருக்காரு. அதனால் அந்த வீட்டுக்கும் பல நன்மைகளைச் செய்வாரு. எல்லாமே நல்லா இருக்கு!!! ஜமாயுங்க!

மூனாம் வீடு ரெம்ப முக்கியமா என்ன? கவியரசரே பாடி வச்சிட்டுப்போயிருக்காரு “அண்ணன் என்னடா, தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே!”

கண்ணாலத்துக்குப் பொண்ணு பாத்துக்கிட்டிருந்தீங்களே, ஏதாவது அம்மணி வந்து மாட்டீயிருச்சா .... ஸாரி...கிடைச்சிருச்சா?

2. ones character and behaviour will be good if one has guru in lagnam. right? I saw
a horoscope (which is with me), it has moon & guru in Kataga lagnam, which has 
gejakesari yogam as well, but personal character is not good. why and what should 
I check in her/his horoscope?

இதான வேண்டாம்ங்கிறது. படிச்ச பாடத்தை மறந்துட்டீங்களே! குருவும் சந்திரனும் ஒன்னா டூயட் பாடிக்கிட்டிருந்தா அதாவது சேர்ந்திருந்தா அதற்கு குருச்சந்திரயோகம்னு பேரு. குருச்சந்திர யோகத்திற்கான பலன் பழைய பாடத்தில் உள்ளது. வண்டியை அங்க திருப்பி பாடத்தை எட்டிப் பார்த்து, படிச்சிட்டு வாங்க!

ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்குப்பிறகு கேரக்டர் 100% ஃபர்பெக்ட்டா இருந்த
/இருக்கிற மனுசனே கிடையாது. அப்பிடி இப்பிடி இருக்கத்தான்
செய்வாங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகவேண்டியதுதான்!

3. For thula lagnam, 11th house occupied by Sani(Simmam) and it has 44parals and 6 is suya vargam.how the sani dhisai will be for the native?

கேள்வியிலேயே பதில் இருக்கிறது சாமியோவ்! பதினொன்னாம் வீட்டில பரல்கள் அதிகம் இருக்கிறதுனால வாழ்க்கையே லாபம் மிகுந்ததா இருக்கும்.வர்ற அம்மணி 100 பவுன் நகையோட வரலாம். எதுக்கும்
இப்பவே வங்கிப் பெட்டகம் (Bank Locker) ஒன்னைப் பிடிச்சு வச்சுக்குங்க. இன்னிக்கு பவுன் என்ன விலை விக்கிதுன்னு தெரியும்ல?!!!!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

25 comments:

  1. //இடைவேளைக்குப் பிறகு திரையரங்கிற்குள் நுழைந்து, ஓடிக்
    கொண்டிருக்கும் படத்தின் முன்கதையைக் கேட்டுப் பக்கத்து
    இருக்கையில் அமர்ந்திருப்ப வனைத் துயரப்படுத்தினால்
    என்ன நியாயம்?//

    சரியான ஆதங்க‌ம்தான் அய்யா! "அடியப் புடிரா பாரத பட்டா..."என்று ஒரு சொலவடை உண்டு.மீண்டும் மீண்டும் புதிதாக வருபவர்களுக்கு அடிப்படை பாடங்க‌ளை நடத்திக்கொண்டே இருப்பது சலிப்பானதுதான். நீங்கள் சோதிடத்தை மிக எளிமை ஆக்கியது கூட ஒரு காரணம்.மேலும் உங்களின் அசாத்தியப் பொறுமை மற்றோர் காரணம்.வகுப்பறையின் சீனியர் மாணவன் என்ற உரிமையில் சக தோழர்களை பழைய பாடங்களை 'ரிவிஷன்' செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. உள்ளேன் அய்யா

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  3. Vanakkam Aasiriyarukku,
    ///ஆறாம் வீட்டுக்கு, அந்த வீட்டில இருந்து கணக்குப்போட்டா, அவரு அந்த வீட்டுக்கு (அந்த வீட்டுக்கு அதிபதிவேற) திரிகோணத்தில உக்காந்திருக்காரு///

    Difficult to understand the above. Pl tell the names of the Signs of theese houses.
    In future also it is good to name the signs as far as possible.
    ///புதிதாக வருபவர்களுக்கு அடிப்படை பாடங்க‌ளை நடத்திக்கொண்டே இருப்பது சலிப்பானதுதான். நீங்கள் சோதிடத்தை மிக எளிமை ஆக்கியது கூட ஒரு காரணம்.மேலும் உங்களின் அசாத்தியப் பொறுமை மற்றோர் காரணம்/// kmr krishnan Said

    Thanks for your patience.

    ReplyDelete
  4. for துலாம் லக்னத்திற்கு ஆறாவது வீடு மீனம் . அதன் அதிபதி குரு. அவர் உச்சமாக கடகத்தில் உள்ளார்...
    ஆறாவது வீட்டின் (மீனம்) அதிபதி , அவர் இருக்கும் வீட்டில் இருந்து (கடகத்தில் ) இருந்து ஒன்பதாம் பார்வையாக ( ஒரு திரி கோண வீடு )
    ஆறாம் வீட்டை பார்க்கிறார்..
    சரி தானே அய்யா...

    ReplyDelete
  5. Dear Sir,

    Minorwall annanin virupathikenange abroad (Gulf) life pathi oru kavithai eluthalam endru ninaikkerean, vara malaril pathividuveergala ?

    Rds

    Pandian

    ReplyDelete
  6. Dear Sir

    Kelviyum Badhilum Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  7. அய்யா, 19.9.10 அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா? பார்த்தீர்களா? விதியைப் பற்றிய வாதம் அது. மூத்த கவிஞர், தேசாந்திரி விக்ரமாதித்யா தனது தந்தை நாத்திகரென்றும் ஆனால் தான் சோதிடத்தை மிக நம்புவதாகவும் சொன்னார். விதியை நம்பாதவர்களுக்கு குரு சண்டாள யோகம் இருப்பதாகவும் சொன்னார். அவரது பேச்சு, ஒருவன் இயற்கையைப் புரிந்துகொள்ள அனுபவமும், வயதும் மிக முக்கியமென்று தெளிவாகக் காட்டியது.
    நீங்கள் செய்வது பயன் கருதாத பெரும் சேவை.
    உங்கள் சேவை பெருகவும், பலரும் பயன் பெறவும் கடவுள் கிருபை உங்களுக்கு உண்டாவதாக.

    நன்றியுடனும், வணக்கத்துடனும்
    அன்பன்.

    ReplyDelete
  8. ஐயா!!!

    குரு சந்திர யோகம் பற்றிய பாடம் இல்லை. ஏற்கனவே ஒரு முறை கேட்டிருந்தேன். பின்னர் வரும் என்று சொன்னீர்கள். ஆனால் மறந்து விட்டீர்கள். அதன் பலனை பின்னூட்டத்திலேயே கூறி விடுங்களேன்...

    ReplyDelete
  9. //இடைவேளைக்குப் பிறகு திரையரங்கிற்குள் நுழைந்து, ஓடிக்
    கொண்டிருக்கும் படத்தின் முன்கதையைக் கேட்டுப் பக்கத்து
    இருக்கையில் அமர்ந்திருப்ப வனைத் துயரப்படுத்தினால்
    என்ன நியாயம்?//
    தொடையை சுரண்டுவது போன்ற காட்சி என் கண்ணில் தெரிகிறது..

    கார்த்திக் கண்ணனைக் கிண்டலடித்து இல்லை..உங்கள் எழுத்து நடையை ரசித்து சொன்னேன்..
    மற்றபடி கேள்விபதில் பகுதி வழக்கம்போலே சுவாரஸ்யத்துடன் போகிறது..நன்றி..

    ReplyDelete
  10. வணக்கம் அய்யா...
    கேள்வி பதில் பகுதி துவங்கி நாட்கள் பல ஆகி விட்டன,,,,,வகுப்பை ஆரம்பிக்கலாம் அய்யா...தங்களிடம் பாடம் கேட்டு பல நாள் ஆகிவிட்டது,,,தங்களிடம் பாடம் கேட்க்கும் ஆர்வத்தில் கூறிவிட்டேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்,,,,,
    நன்றி வணக்கம்....

    ReplyDelete
  11. /////Alasiam G said...
    Present Sir./////

    உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. /////kmr.krishnan said...
    //இடைவேளைக்குப் பிறகு திரையரங்கிற்குள் நுழைந்து, ஓடிக்
    கொண்டிருக்கும் படத்தின் முன்கதையைக் கேட்டுப் பக்கத்து
    இருக்கையில் அமர்ந்திருப்ப வனைத் துயரப்படுத்தினால்
    என்ன நியாயம்?//
    சரியான ஆதங்க‌ம்தான் அய்யா! "அடியப் புடிரா பாரத பட்டா..."என்று ஒரு சொலவடை உண்டு.மீண்டும்
    மீண்டும் புதிதாக வருபவர்களுக்கு அடிப்படை பாடங்க‌ளை நடத்திக்கொண்டே இருப்பது சலிப்பானதுதான்.
    நீங்கள் சோதிடத்தை மிக எளிமை ஆக்கியது கூட ஒரு காரணம்.மேலும் உங்களின் அசாத்தியப் பொறுமை
    மற்றோர் காரணம்.வகுப்பறையின் சீனியர் மாணவன் என்ற உரிமையில் சக தோழர்களை பழைய பாடங்களை
    'ரிவிஷன்' செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.///////

    உங்களுடைய புரிதலுக்கும் பரிந்துரைக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. //////venkatesan.P said...
    உள்ளேன் அய்யா
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி வெங்கடேசன்!

    ReplyDelete
  14. ////kannan said...
    yes sir!/////

    உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  15. /////krishnar said...
    Vanakkam Aasiriyarukku,
    ///ஆறாம் வீட்டுக்கு, அந்த வீட்டில இருந்து கணக்குப்போட்டா, அவரு அந்த வீட்டுக்கு (அந்த வீட்டுக்கு அதிபதிவேற) திரிகோணத்தில உக்காந்திருக்காரு///
    Difficult to understand the above. Pl tell the names of the Signs of theese houses.
    In future also it is good to name the signs as far as possible.
    ///புதிதாக வருபவர்களுக்கு அடிப்படை பாடங்க‌ளை நடத்திக்கொண்டே இருப்பது சலிப்பானதுதான். நீங்கள்
    சோதிடத்தை மிக எளிமை ஆக்கியது கூட ஒரு காரணம்.மேலும் உங்களின் அசாத்தியப் பொறுமை மற்றோர்
    காரணம்/// kmr krishnan SaidThanks for your patience./////

    துலாத்திலிருந்து மீனம் ஆறாம்வீடு. அதன் அதிபர் குரு உச்சம் பெற்ருக் கடகத்தில் இருக்கிறார். கடகம்
    துலாத்திற்குப் பத்தாம் வீடு, அதாவது கேந்திரவீடு. குரு கேந்திரத்தில் இருப்பது நன்மையல்லவா? கேந்திரவீடு என்று மாற்றி வாசித்துக்கொள்ளுங்கள்.பதிவில் திருத்திவிட்டேன். அதைத்தான் சொல்லியிருக்கிறேன். இப்போது புரிகிறதா நண்பரே?

    ReplyDelete
  16. Iyappan said...
    for துலாம் லக்னத்திற்கு ஆறாவது வீடு மீனம் . அதன் அதிபதி குரு. அவர் உச்சமாக கடகத்தில் உள்ளார்...
    ஆறாவது வீட்டின் (மீனம்) அதிபதி , அவர் இருக்கும் வீட்டில் இருந்து (கடகத்தில் ) இருந்து ஒன்பதாம் பார்வையாக ( ஒரு திரி கோண வீடு ) ஆறாம் வீட்டை பார்க்கிறார்..
    சரி தானே அய்யா...///

    சரிதான். ஆனால் அது கேந்திரவீடு. மாற்றி வாசித்துக் கொள்ளூங்கள்! பதிவில் திருத்திவிட்டேன்

    ReplyDelete
  17. /////bhuvanar said...
    Dear Sir,
    Minorwall annanin virupathikenange abroad (Gulf) life pathi oru kavithai eluthalam endru ninaikkerean, vara
    malaril pathividuveergala ?
    Rds
    Pandian/////

    ஆகா எழுதுங்கள்!

    ReplyDelete
  18. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kelviyum Badhilum Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  19. ////Govindasamy said...
    அய்யா, 19.9.10 அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா? பார்த்தீர்களா? விதியைப் பற்றிய வாதம்

    அது. மூத்த கவிஞர், தேசாந்திரி விக்ரமாதித்யா தனது தந்தை நாத்திகரென்றும் ஆனால் தான் சோதிடத்தை மிக

    நம்புவதாகவும் சொன்னார். விதியை நம்பாதவர்களுக்கு குரு சண்டாள யோகம் இருப்பதாகவும் சொன்னார்.

    அவரது பேச்சு, ஒருவன் இயற்கையைப் புரிந்துகொள்ள அனுபவமும், வயதும் மிக முக்கியமென்று தெளிவாகக்

    காட்டியது. நீங்கள் செய்வது பயன் கருதாத பெரும் சேவை.
    உங்கள் சேவை பெருகவும், பலரும் பயன் பெறவும் கடவுள் கிருபை உங்களுக்கு உண்டாவதாக.
    நன்றியுடனும், வணக்கத்துடனும்
    அன்பன்./////

    ஆமாம். நானும் பார்த்தேன். விக்கிரமாதித்யா ஒரே போடாகப் போட்டு நன்றாகச் சொன்னார்!

    ReplyDelete
  20. Arul said...
    ஐயா!!!
    குரு சந்திர யோகம் பற்றிய பாடம் இல்லை. ஏற்கனவே ஒரு முறை கேட்டிருந்தேன். பின்னர் வரும் என்று சொன்னீர்கள். ஆனால் மறந்து விட்டீர்கள். அதன் பலனை பின்னூட்டத்திலேயே கூறி விடுங்களேன்.../////

    Guru-Chandra yoga gives the person high education, ..

    ReplyDelete
  21. /////minorwall said...
    //இடைவேளைக்குப் பிறகு திரையரங்கிற்குள் நுழைந்து, ஓடிக்
    கொண்டிருக்கும் படத்தின் முன்கதையைக் கேட்டுப் பக்கத்து
    இருக்கையில் அமர்ந்திருப்ப வனைத் துயரப்படுத்தினால்
    என்ன நியாயம்?//
    தொடையை சுரண்டுவது போன்ற காட்சி என் கண்ணில் தெரிகிறது..
    கார்த்திக் கண்ணனைக் கிண்டலடித்து இல்லை..உங்கள் எழுத்து நடையை ரசித்து சொன்னேன்..
    மற்றபடி கேள்விபதில் பகுதி வழக்கம்போலே சுவாரஸ்யத்துடன் போகிறது..நன்றி..////

    உங்களின் ரசனை உணர்விற்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  22. /////astroadhi said...
    வணக்கம் அய்யா...
    கேள்வி பதில் பகுதி துவங்கி நாட்கள் பல ஆகி விட்டன,,,,,வகுப்பை ஆரம்பிக்கலாம் அய்யா...தங்களிடம்
    பாடம் கேட்டு பல நாள் ஆகிவிட்டது,,,தங்களிடம் பாடம் கேட்க்கும் ஆர்வத்தில் கூறிவிட்டேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்,,,,,
    நன்றி வணக்கம்....////////

    கேள்வி பதில் பகுதியும் பாடம்தானே சுவாமி? போரடிக்கிறதா? இதற்கு முன் உள்ள நம் மைனரின்
    பின்னூட்டத்தைப் பாருங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com