மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.9.10

குட்டிச்சுக்கிரன் கூடிக் கெடுத்த கதை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
                இன்றைய வாரமலரை நமது வகுப்பறை மாணவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. குட்டிச் சுக்கிரன், அதாவது சின்ன வயதில் வரும் சுக்கிர திசை எப்படி ஜாதகனின் வாழ்வை அழைக்கழிக்கும் என்பதைத் தன் அனுபவத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
         குட்டிச்சுக்கிரன் கூடிக் கெடுத்த கதை!

    கிராமத்தில் தனக்கு என்று  ஒரு  உலகத்தில்  சுற்றம் சூழ  ஒரு  கவலையும்  இல்லாமல் திரிந்து கொண்டு இருந்தான்  நமது நாயகன்.  விதிவசத்தால் திசைநாதன்  சுக்கிரன், நாயகனின் பன்னிரெண்டாவது வயதில் வந்து அவனுடைய தோள் மீது ஏறிக்கொண்டான்.

    மற்றவர்கள்  எல்லாம்  நினைத்து   கொண்டனர்  அவனுக்கு  என்ன  ராஜா. அத்துடன் சுக்கிரனின் திசை வேறு வந்திருக்கிறது என்று!

    நாயகனுக்கோ ஒன்றும் தெரியாத வயது. குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும் என்பதை அவன் அறியாமல் இருந்தான்.

    நல்ல ஆரோக்கியமான உடல்நிலை. செழிப்பான வாழ்க்கை என்று சென்று கொண்டிருந்த நமது  நாயகனின் ஜாதகத்தில் வித்யாகாரகன் புதன் 4ல் கல்விஸ்தானத்திலேயே இருந்ததால், நன்றாகப் படித்தான். படித்தவை அனைத்தும் அவன் மனதில் நன்றாகப் பதிந்தது.

    அரசு மேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் துவங்கினான். ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்களின் செல்லக் குழந்தையும் ஆனான் அவன்

    "சொன்னதை அப்படியே சொல்லும் கிளிபிள்ளை போல" தாங்கள் சொல்லும் அனைத்தையும் அவன் செய்தமையால்  நல்வழிப் படுத்த நினைத்த ஆசிரியர்கள் நூலகம் சென்று படிக்கும் பழக்கத்தை அவனுக்குச்  சொல்லித்  தந்தார்கள்.

    ஒரு ஆண்டு சென்றது. அவனோ நூலகம் சென்றோம், தனது வயதிக்கு உரிய நூல்களை மட்டும் படித்தோம் என்று இல்லாமல் மிகையான ஆர்வக் கோளாரால் "சுய தன்னம்பிக்கையைத் தூண்டும்” உள்நாட்டு  மற்றும்  வெளிநாட்டு  பதிப்பு உரிமை பெற்ற முன்னேற்ற நூல்களை படிக்கத் துவங்கினான்.

படிக்கப் படிக்க கற்பனை உலகில் மிதக்கத் துவங்கினான். பள்ளியில் 8 வகுப்பு வரை முதல்  மாணவனாக வந்தவன் பின்னர் படிப்பிலும் மிதக்கத் துவங்கினான்.

    ஒருநாள்  ஓடுபோட்ட வகுப்பறையில், பெஞ்சின் மீது இருந்த தண்ணீரைத் துடைத்து கொண்டு இருந்தான் அவன். அது 10ஆம் வகுப்பு. அறிவியல் பாட வேளை.  ஆசிரியர்  வந்து பாடமும் நடத்திகொண்டு  இருந்தார். 

    எப்பொழுதும் எதனையும் முன்னுக்கு நின்று  நடத்தி வைக்கும் ஆசிரியர் என்பதனால், தலைமை ஆசிரியரிடம் இருந்து, ஒரு பொறுப்புள்ள வேலை அவருக்கு வந்தது. பள்ளி வளாகத்தில் முறிந்து கிடக்கும்  வேப்ப மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் .

    1994 ம் ஆண்டு, வருட ஆரம்பத்தில் புயல் மழையால் தென் தமிழகம் மிகவும் பாதிக்கபட்டு உயிர், பொருள், பயிர் சேதம் அடைந்திருந்த நேரம் அது. அதில் நமது நாயகனின் பள்ளியும் தப்பிக்கவில்லை.

    புயல், மலை ஒய்ந்த பின்னர், பள்ளிக்குச் சென்று பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது.

    முந்தைய வகுப்பு நாட்கள் வரைக்கும் எத்தனையோ நல்ல மனிதர்கள், மருத்துவர்கள், பொறியாளர்,  ஆசிரியர்கள்  என  பலதுறைத்  தலைவர்கள் உருவாக  மட்டும்  அல்லாது சிட்டு குருவிகள் முதல்  எத்தனையோ ஜீவன்கள்வரை வசிக்க இடம் கொடுத்த அந்தப் பெரிய மரம் பார்ப்பதற்கே பரிதாபமாக  காணப்பட்டது.

    எண்ணற்ற மாணவ மாணவியரின் வகுப்பறையாக விளங்கிய மரம் புயல் மழைக்குத் தாங்காது 15 அடி உயரத்தில் முறிந்து தொங்கிக் கொண்டிருந்தது.

        இன்னும் நாம் சிலகாலம் பழைய நிலைமைக்கே திரும்ம மாட்டோமா! இன்னும் எண்ணற்ற மாணவ மாணவியர்களுக்கு உதவ மாட்டோமா!  நாம் உயிர் பெற இருந்த இந்த புண்ணிய பூமிக்கு பெருமை சேர்க்க  மாட்டோமா! எண்ணற்ற வாயில்லா ஜீவன்கள் அமர்ந்து செல்ல உதவியது போல உதவ மாட்டோமா!  என்று  ஏங்குவது போல ஏங்கி, பரிதாபமாகக் கிடந்தது அந்த மரம். 12 அடி தூரத்தில் இருந்த பள்ளியின் சுவற்றில்  மறுமுனை.

    பாடம் நடத்திக் கொண்டிருந்த அறிவியல் ஆசிரியர், “டேய்! மரம் முறிந்து கிடக்கிற தல்லவா - அதை  வெட்டிக் காலி செய்யணும். எல்லோரும் போங்கடா” என்று சொன்னார். 

    "சமூக சேவையில் எள் என்றால் எண்ணையாக!"  இருக்கும் கிராமத்து மாணவர்கள் என்பதானால்  அடுத்த சில நிமிடத்தில் அனைத்து மாணவர்களும் அரிவாள், கோடாறி, தொரட்டி, உள்ளிட்ட ஆயுதங்களுடன், மரம் சாய்ந்து கிடந்த இடத்திற்கு வந்து விட்டனர்.

    மரம் இருந்த இடத்தின் சுற்றுப் பகுதியில் திசைக்கு ஒரு வகுப்பறை. வடக்குப் பகுதியில் மிகவும்  ஆழமான  தண்ணீர்  இல்லாத  பாழடந்த  கிணறு.

    ஆசிரியர் கூறயபடி  6 மாணவர்கள் மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டி கொண்டு இருக்கும்  பொழுது, அவர்களில் உடல் பருத்த மாணவன் ஒருவன் ஒரு பக்கமாக நின்று கொண்டு கிளையை வெட்டும்  பொழுது  மரம் அப்படியே கிழே விழ, நமது நாயகன் உட்பட அதில் நின்று கொண்டிருந்த ஆறு பேர்களும்
அந்தரத்தில் பல்டி அடித்துக் கீழே விழுந்தார்கள்.

    ஒருவனுக்கு வயிற்றில், மற்றவனுக்கு காலில், நாயகனுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது.  மற்றவர்களுக்கு சிறிய காயம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு  பள்ளி நிர்வாகத்தின்  செலவில்  அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 900 மாணவர்கள் படிக்கும் பள்ளி அது. .

    நாயகனுக்கு அடுத்த நாள் அடிபட்ட கையில் வலி அதிகமாக,
மருத்துவ சோதனை செய்து பார்க்கபட்டு  சொந்த செலவில் கட்டு போடப்படுகின்றது. முழு ஆண்டுத் தேர்வு  நெருங்கி  வரும் சமயம் என்பதனால் ஒரிரு நாட்களில் பள்ளிக்குச் செல்கின்றான்.
அரைக்கால் டவுசர். மேல் உடம்பை மறைக்கத் துண்டு. அடிபட்ட கை பாதுகாப்புடன் தொட்டிலில்.

    ஒரு மாதம் ஆகியும் குணம் அடையாததைக் கண்டு, நாயகனின் மேல் அன்பு கொண்ட ஆசிரியை,  ஆசிரியர்கள் நலம் விசாரிக்க, இவன் உள்ளதைச் சொல்ல, அவர்கள் உனது மருத்துவ செலவைப் பள்ளி  நிர்வாகத்தை செய்யச்சொல் - மாட்டேன் என்றால் நுகர்வோர் கோர்ட்டிற்கு செல்வேன் என்று சொல் என்று  போட்டுக் கொடுக்க, "கிளிபிள்ளை"யான நமது நாயகனும் அப்படியே தலைமை ஆசிரியரிடம், கண்ணீர் மல்க  அதைச் சொல்ல - தலைமைக்கோ தேள் கொட்டியது போல் விஷம் ஏற,  மற்ற ஆசிரியர்களின் தயவால் நாயகன்  வீடு திரும்புகிறான்.

    முழு ஆண்டுத் தேர்வும் முடிந்து மறுசேர்க்கை நடைபெறுகின்றது.

    நம் நாயகனுக்கு மட்டும் மேல்நிலை வகுப்பில் படிக்க அனுமதி மறுக்கபடுகின்றது. காரணம் கேட்டால்  "ரவுடி"  என்னும் குற்றச்சாட்டு.
வகுப்பு ஆசிரியர் முதல் பள்ளித் தலைமை ஆசிரியர் வரை
அனைவரின்  எதிர்ப்பு. பள்ளியைவிட்டு வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட நாயகன் இறுதியில் வெளியேறி அனைவரின்
எதிர்ப்பிற்கும் ஒரு முற்றுப் புள்ளியை வைக்கின்றான்.

    வேறுவழி ஒன்றும் இல்லாததனால் நாயகனின் தந்தை தன் மகனை வெளியூருக்கு அனுப்பிப் படிக்க  வைக்கின்றார். தொழிற்கல்வி கற்றுத்தரும் Polytechnic பள்ளியில் சேர்த்துவிடுகின்றார்.

    சென்றவன் படித்தானா? அதுதான் இல்லை!

    தாயின் அரவணைப்பில் செல்லமாக வளர்ந்த அவன், வெளியூர் சென்றவுடன், அவிழ்த்துவிட்ட கன்றுக்  குட்டியைப் போல, துள்ளித் திரிந்து கடைசியில் படிப்பைக் கோட்டை விட்டான்.

    மூன்று வருடப் படிப்பைத் தட்டுத்தடுமாறி முடித்தவன், 11 பாடங்களில் மதிப்பெண்களைக் குறைவாகப்  பெற்றுத் தோல்வியுடன் திரும்புகிறான்.

    அது 1997ஆம் ஆண்டு. தன் கனவுகளை வேலையில் சேர்ந்தாவது நிறைவோற்றுவோம் என்று வெகு  தூரம் பயணப்பட்டு, ஒரு
வேலையில் சேர்கிறான். அந்த வேலையும், வேலை செய்த
இடமும்தான் அவனுக்கு வாழ்க்கையின் அடுத்த பகுதியைக் காட்டியது. உண்மையான வாழ்க்கை எது என்பதையும் அவன் உணர்கிறான்.

    எங்கெல்லா ஓடினேமே, பலர் பேச்சையும் கேட்டோமே - ஆனால்
சொந்தத் தகப்பன் பேச்சைக்  கேட்கவில்லையே! கேட்டு ஒழுங்காகப் படிக்கவில்லையே. படிக்க முடியாமல் போனதை நினைத்து உருக
ஆரம்பித்தான். நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனிமேல்
நடப்பதைப் பார்ப்போம் இன்னுமும் ஒன்றும்  கெட்டுப் போகவில்லை
என்ற  முடிவுக்கு வந்தவன், தான் செய்த வேலைக்கு ஒரு கும்பிடு
போட்டு விட்டுத் திரும்புகிறான்.

    தவறிப்போன பாடங்களில் எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டும்
என்ற எண்ணம் மேலோங்கி  நிற்கிறது.

    ஆனால் குட்டிச் சுக்கிரன் இவனை விடவில்லை. நாயகன் திரும்பி
வந்த சிலநாட்களில் நாயகனின்  தந்தை இயற்கை எய்தி விடுகிறார்.
தன் கண்ணீரால் நாயகன் அவருக்கு அஞ்சலி செய்தான். அவனால்
தன்  தந்தைக்குச் செய்ய முடிந்தது அது மட்டுமே!

    நாயகனின் நிலைமை இஞ்சி தின்ற குரங்கிற்குத் தேளும் கொட்டியது
போல இருந்தது. ஆற்றுவார் தேற்றுவார் ஆறு போல இருந்தும், பக்கம்
போய்ப் பார்த்தல் எல்லாம் கானல் நீராகியது. நாயகனின் தந்தை
அவனுக்கு வைத்துவிட்டுப் போனது அவன் தேராமல் விட்ட
பட்டையப்  படிப்பு மட்டுமே.

    வீட்டில் வறுமை தாண்டவமாடியது. அதனுடன் போராடிக்கொண்டே, விட்டுப் போன பாடங்களில் ஒன்பது  பேப்பர்களில் தேர்ச்சி அடைந்தான். கல்வித்துறை தந்த 3  வருட அவகாசத்தில், மற்றும் அரசு
தந்த ஒருவருட  கருணைத் தேர்வில் மேலும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றான். ஒன்று மட்டும் மண்டையில் சரியாக ஏறாததினால்
எப்படியும்  தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற ஆதங்கத்தில்
பரீட்சையில் காப்பி அடிக்கக் கல்லூரிநிர்வாகமோ ஓங்கி உச்சந்
தலையில் அடித்துத் தேர்வை முழுதாக எழுதவிடவில்லை.

    ஏழு வருடங்கள் போராடியும் வெறும் கையோடு வீதியில்.
தன்னையே நம்பி உள்ள ஜீவனான தாயைக் காக்க உள்ள அறிவை
வைத்துக் கொண்டு, உயிரைக் காப்பாற்றி கொள்ள பயணம் .ஒருபக்கம் கனவுகள், மறுபக்கம் வறுமை, மற்றொரு பக்கமோ கல்வியின்மை.

    உயிரை காப்பாற்றி கொள்ள ஒரு வேலையில் அமர்ந்து கொண்டு
தனக்கு உள்ள வயது தகுதியைக் கொண்டு மீண்டும் படிப்பைத் தொடர முயற்சித்தான். (இடையில் அச்சமயம் இருந்த தகுதியை வைத்து

மேல்நிலைப் பள்ளித் தேர்வையும் எழுதினான், பொறியாளர் கனவு
பின்தொடர மத்திய அரசின் open school களிலும்  படித்தான்.

    கல்யாண வயதை அடைந்த நிலையில், கற்பனை தூபம் போட,
நமது நாயகன் விபரம் தெரிந்த நாள்  முதலாகத் தான் விரும்பிய
முறைப் பெண்ணின் வாக்கை நம்பி, அவளுடைய பெற்றோர்களிடம்
தன்  விருப்பத்தைச் சொல்ல விஷயம், விஷம் ஆனது.

    ”போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்”
என்று தன்னைப் படைத்தவனை  மட்டும் பங்காளியாக ஆக்கிக்கொண்டு அமைதி கொண்டான். குட்டிச் சுக்கிரன் விடாமல் அவனோடு இருந்து  அழைக்கழித்துக் கொண்டு இருந்தான்.

    தற்செயலாக, எதோ ஒன்றைப் படித்து, ஏதாவது ஒரு வேலைக்கு செல்லவேண்டும் என்று தோன்ற,  மாணவர்களுக்கு இலவசமாக  அறிவுரைகள் சொல்லும் ஒரு தாயைக் கண்டு தனது நிலைமையை
சொல்ல, தக்க  பதில் தந்து சரியான  வழி முறைகளை அவர் சுட்டிக்காட்ட. அதனையே வேதவாக்காகக்  கொண்டு செயல்படவும்  ஆரம்பித்தான்.

    நாயகனும் அவன் பங்கிற்கு கல்வி அமைச்சரிடம், பரீட்சை எழுத
வாய்ப்புக் கேட்டுக் கருணை மனு  ஒன்றை நேரில் கொண்டு போய்க் கொடுத்தான். மற்றும் நாட்டின் முதற் குடிமகனான ஜனாதிபதிக்கும்
கருணைமனு அனுப்பி வைத்தான்.

    மறுவருடம் அது வரைக்கும் தராத சிறப்பு தேர்வு எழுத வாய்ப்புத்
தரப்பட்டு, முன்பு தோல்வி அடைந்த ஒரு பாடத்தில் முதல் வகுப்பில் வெற்றியும் பெற்றான் அவன்

    1994 ம் ஆண்டு படிக்க சென்றவன் 9 வருட காலம் போராடி 2003ல்
வெற்றி அடைந்ததுடன் மேல் படிப்பிற்காக AMIE டிப்ளமோ கல்வியில்
சேர்ந்து படிக்கத் துவங்கினான். 

    அதற்கு அடுத்த ஆண்டு, நல்ல, கை நிறைய ஊதியத்துடன் கூடிய
வேலை கிடைகின்றது. தற்சமயம்  சேர்ந்த படிப்பு மண்டைக்கு ஏறவில்லை என்பதனை உணர்தவன் அதனிலும் சற்றுக் குறைவான படிப்பில் சேர்ந்து  வெற்றியும் அடைகிறான்.

    நன்றாகப் படிக்கும் திறமை இருந்தும்  வசதி இல்லாதவர்கள்,  
The Institution of Engineers India அமைப்பின் மூலம்
பொறியியல் படிப்பைப் படிக்கலாம். மேலும், IIT, IIM போன்ற அமைப்புக்களிலும் சேர்ந்து படிக்கலாம். அது எத்தனை பேர்களுக்குத் தெரியுமோ - இறைவனுக்கே வெளிச்சம்!

    UG ல் வெற்றி அடைந்த அந்த வருடமே ஒரு பன்னாட்டு
நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. உடனே  முதுநிலை
படிப்பில் சேர்ந்து கொண்டு வேறு வேலைக்கு முயற்சி செய்ய
அதிலும் வெற்றி.

    அயல்நாட்டில் வேலை செய்துகொண்டே முதுநிலைப் படிப்பை
2010ஆம் ஆண்டில் அவன் முடிகின்றான்.

    குட்டிச் சுக்கிரன் விடைபெற்றுக் கொண்டு போனதால் அது சாத்தியமாயிற்று. இருபது வருடப்  போராட்டம் ஒருவழியாக நிறைவு பெற்றது.

    அந்த நாயகன் வேறு யாருமல்ல! அது நான்தான்!

         ---- கண்ணன் சீதாராமன்

கண்ணன் சீதாராமன் அவர்களின் எழில்மிகு தோற்றம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

55 comments:

  1. என் ஆய்விலும் மிகச் சிறிய வயதில் சுக்கிர தசா வந்தவர்கள் பலரும் படிப்பில் கோட்டை விட்டுள்ளார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தும் குணம் ஏற்பட்டு அதற்கான மாற்று சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.ஆனால் தந்தையின் வ‌ருமானம் கூடும் நிலையும் உள்ளது.சீதாராமனின் ஆக்கம் அப்படியே உண்மை நிலையைப்(graphic presentation) படம் பிடித்துக்காட்டுகிறது.
    தோல்வியைக் கண்டு துவளாமல், அவமானங்களால்அவநம்பிக்கை அடையாமல் அவ‌ர் முன்னேற்றம் அடைந்த கதை எல்லா இளைஞர்களுக்கும் நல்ல முன் உதாரணம்.வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. கண்ணன் வந்த வழி கரடு முரடாக இருந்தாலும் கடைசியில் ஊர் போய் சேர்ந்தது தான் சிறப்பு.
    கூடிக் கெடுத்தான் என்பதை விட அனுபவத்தையும், தன்முனைப்பையும், விடாமுயர்ச்சியையும், கூட்டியும், பெருக்கியும் கொடுத்துள்ளான் சுக்கிரன். இதைவிட பெரிய, சோதனைக் காலம் வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும் என்ற நிலையை இதன் மூலம் தந்துள்ளான் இறைவன். இந்தப் பாடம் உங்கள் சந்ததியின் வேதம் ஆகும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!

    இங்கு இந்த உண்மை கதையை கூற காரணம் எல்லோரும் ஜோதிடம் உண்மை அல்ல என்று கூறுகின்றனர் என்பதனால்.

    11 வது வயதில் இருந்து
    கோவிலுக்குதனது சொந்த விருப்பம்
    கொண்டு சென்று மார்கண்டீஷ்வரன் மாதிரியாக நாமும் நமது விதிபயனை
    மாற்றிவிடுவோம் என்று நினைத்து,

    புத்தியை கற்பனை உலகில் இருந்து விலக எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் தன்னம்பிக்கையால் முயன்று முயன்று பார்த்து காலம், பொருள், உழைப்பு என இழந்தது தான் மிச்சம் ஆனது .

    நிற்க!

    தந்தை என்றால் எப்படி அமைய வேண்டுமோ அப்படி அழகாக அமைந்தும். நம்மால் ஏன் சாதிக்க முடியாது .என்று சொல் பேச்சை கேட்டும் கேட்காமல் நடந்து என்னவோ 2 வருடம் மட்டுமே

    அசைக்கமுடியாத தெய்வ
    நம்பிக்கையால் கோவில்
    சடங்கு,சங்கீதம்,சாஸ்திரம் என்று அலைந்து சுயவிருப்பத்தின் படி
    27 மொட்டை + பெற்றவர்களால் 4 +1 என 31 மொட்டை

    தனியே பாதயாத்திரை
    திருச்செந்தூர்-3தடவை ,
    திருப்பரம்குன்றம் வழியாக பழனி- 1 தடவை, சாமிகள் கூட திருப்பதி 2- தடவைசபரி மலைக்கு மாலை போட்டுகொண்டு 3 தடவை,
    போடாமல் 1 தடவை

    அங்கபிரசனம்
    குருவாயூர்ல் குறைத்தது 60க்கு,மேல்
    திருஅனந்த பத்மநாபசுவாமிகோவிலில் 3,திருப்பதில்6, பழனில் 3 , திருச்செந்தூர்ல் 3 , சபரிமலைல் 1

    கன்னியாகுமரி, காளகஸ்தி,
    கரிப்பாடு, கொல்லூர் முகாம்பிகை, காசி etc............வரைக்கும்.

    தர்க்கா, தேவாலயங்கள், சந்நியாசி மடங்கள் மற்றும் தொண்டு நலன்கள் என அங்கும் இங்கும் ஓடி ஆடியது தான் மிச்சம்.
    கருமபலனை அனுபவித்தது தான் பலாபலன் ஆனது.
    எழுத்து என்னவோ அதுதான்நடந்தது.

    கண்ணீர் சிந்தியது தான் பாக்கியம் ஆனது.
    விதி பயனை ஒரு பொழுதும் மாற்றமுடியாது
    என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
    ஒன்றே ஒன்றில் மட்டும் பெரும் பாக்கியம் கிடைத்தது.

    அனைத்து தெய்வங்கள் உள்ள ஸ்தலங்களுக்கு சென்று தெய்வங்களை
    மனதார பிராத்தனை செய்யும் பெரும் பாக்கியம் கிடைத்தது.

    14 வருடம் ஆகப்போகின்றது டீ காபி கூட குடித்து (சைவம் மட்டுமே எப்பொழுதும் )

    அறிய வகை ஜோதிடத்தை தவறாக புரிந்து கொண்டு தவறு என்பவர்கள் சொல்லுங்கள் "குடிக்கவில்லை"
    "கூத்தாட வில்லை" ஆனால் காலம் சென்ற மாயம் இன்று வரை தெரியவில்லை ஐயாகளே

    ReplyDelete
  4. ம.நித்தியானந்தம் கரையாம்பாளையம்
    குட்டி சுக்கிரன் கூடிக் கெடுக்கவில்லை கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிற்து அனுபவத்தை வாழ்க்கைப் பாடத்தை கடைசியில் நல்ல வேலையைக் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிற்து மொத்தத்தில் புடம் போட்டு எடுத்திருக்கிறது தப்பில்லை

    ReplyDelete
  5. ஊழ் வினை வந்து ஊட்டும்போது. நாம் கொண்டு வந்ததை உண்டு முடிக்க வேண்டும். அருமை ஐயா

    ReplyDelete
  6. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.. வலி மிகுந்த கதை வாத்தியாரே..!

    ஓட ஓட விரட்டும் விதியை.. மதியால் வென்ற கதைதான்..!

    அவருக்கு எனது வாழ்த்துக்கள்..! நமது சக வகுப்பறை மாணவர் என்பதாலும் மிகவும் பெருமையடைகிறேன்..!

    ReplyDelete
  7. //////////
    ஒன்று மட்டும் மண்டையில் சரியாக ஏறாததினால்
    எப்படியும் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற ஆதங்கத்தில்
    பரீட்சையில் காப்பி அடிக்கக் கல்லூரிநிர்வாகமோ ஓங்கி உச்சந்
    தலையில் அடித்துத் தேர்வை முழுதாக எழுதவிடவில்லை.///////

    எப்படியாவது என்பது முறையும் ஆகாது..அதற்குப் பதில் வராத படிப்பைத் தூக்கி எறிவதுகூட தகும்..படித்துப் பட்டம் வாங்காதவர்களின் சாதனைச் சரித்திரங்களுக்கு முன்
    படித்தும் சாதிக்காதவர்களின் வேதனைச் சரித்திரங்கள் எடுபடுவதில்லை..எனக்குத் தெரிந்தவரை தான் கற்ற கல்வி என்பது பொது அறிவை பலப்படுத்தும் அளவுக்கே எனும் மனோநிலைக்கு வந்து அந்தக் கல்வியே வாழ்வு முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக அமையுமானால் சான்றிதழ்களைத் தீயிலிட்டு விட்டு தன் சுய முயற்சியினால் வேறொரு வாழ்வை அமைப்பதே மேல் என்று நினைக்கிறேன்..
    'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய் வருத்தக் கூலி தரும்..'

    ReplyDelete
  8. ////kmr.krishnan said...
    என் ஆய்விலும் மிகச் சிறிய வயதில் சுக்கிர தசா வந்தவர்கள் பலரும் படிப்பில் கோட்டை விட்டுள்ளார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தும் குணம் ஏற்பட்டு அதற்கான மாற்று சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.ஆனால் தந்தையின் வ‌ருமானம் கூடும் நிலையும் உள்ளது.சீதாராமனின் ஆக்கம் அப்படியே உண்மை நிலையைப்(graphic presentation) படம் பிடித்துக்காட்டுகிறது.
    தோல்வியைக் கண்டு துவளாமல், அவமானங்களால்அவநம்பிக்கை அடையாமல் அவ‌ர் முன்னேற்றம் அடைந்த கதை எல்லா இளைஞர்களுக்கும் நல்ல முன் உதாரணம்.வாழ்க வளமுடன்!////

    என்னிடம் சில ஆதாரங்கள் உள்ளன. நேரம் வரும்போது பதிவிடுகிறேன்! நன்றி சார்!

    ReplyDelete
  9. Alasiam G said...
    கண்ணன் வந்த வழி கரடு முரடாக இருந்தாலும் கடைசியில் ஊர் போய் சேர்ந்தது தான் சிறப்பு.
    கூடிக் கெடுத்தான் என்பதை விட அனுபவத்தையும், தன்முனைப்பையும், விடாமுயர்ச்சியையும், கூட்டியும், பெருக்கியும் கொடுத்துள்ளான் சுக்கிரன். இதைவிட பெரிய, சோதனைக் காலம் வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும் என்ற நிலையை இதன் மூலம் தந்துள்ளான் இறைவன். இந்தப் பாடம் உங்கள் சந்ததியின் வேதம் ஆகும். வாழ்த்துக்கள்.///

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. kannan said...
    வணக்கம் ஐயா!
    இங்கு இந்த உண்மை கதையை கூற காரணம் எல்லோரும் ஜோதிடம் உண்மை அல்ல என்று கூறுகின்றனர் என்பதனால். 11 வது வயதில் இருந்து கோவிலுக்குதனது சொந்த விருப்பம் கொண்டு சென்று மார்கண்டீஷ்வரன் மாதிரியாக நாமும் நமது விதிபயனை மாற்றிவிடுவோம் என்று நினைத்து,
    புத்தியை கற்பனை உலகில் இருந்து விலக எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் தன்னம்பிக்கையால் முயன்று முயன்று பார்த்து காலம், பொருள், உழைப்பு என இழந்தது தான் மிச்சம் ஆனது .
    நிற்க!
    தந்தை என்றால் எப்படி அமைய வேண்டுமோ அப்படி அழகாக அமைந்தும். நம்மால் ஏன் சாதிக்க முடியாது .என்று சொல் பேச்சை கேட்டும் கேட்காமல் நடந்து என்னவோ 2 வருடம் மட்டுமே அசைக்கமுடியாத தெய்வ
    நம்பிக்கையால் கோவில் சடங்கு,சங்கீதம்,சாஸ்திரம் என்று அலைந்து சுயவிருப்பத்தின் படி
    27 மொட்டை + பெற்றவர்களால் 4 +1 என 31 மொட்டை
    தனியே பாதயாத்திரை திருச்செந்தூர்-3தடவை , திருப்பரம்குன்றம் வழியாக பழனி- 1 தடவை, சாமிகள் கூட திருப்பதி 2- தடவைசபரி மலைக்கு மாலை போட்டுகொண்டு 3 தடவை, போடாமல் 1 தடவை அங்கபிரதட்சனம்
    குருவாயூரில் குறைத்தது 60க்கு,மேல்
    திருஅனந்த பத்மநாபசுவாமிகோவிலில் 3,திருப்பதில்6, பழனில் 3 , திருச்செந்தூர்ல் 3 , சபரிமலைல் 1
    கன்னியாகுமரி, காளகஸ்தி, கரிப்பாடு, கொல்லூர் முகாம்பிகை, காசி etc............வரைக்கும்.
    தர்க்கா, தேவாலயங்கள், சந்நியாசி மடங்கள் மற்றும் தொண்டு நலன்கள் என அங்கும் இங்கும் ஓடி ஆடியது தான் மிச்சம். கருமபலனை அனுபவித்தது தான் பலாபலன் ஆனது.
    எழுத்து என்னவோ அதுதான்நடந்தது.
    கண்ணீர் சிந்தியது தான் பாக்கியம் ஆனது.
    விதி பயனை ஒரு பொழுதும் மாற்றமுடியாது
    என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
    ஒன்றே ஒன்றில் மட்டும் பெரும் பாக்கியம் கிடைத்தது.
    அனைத்து தெய்வங்கள் உள்ள ஸ்தலங்களுக்கு சென்று தெய்வங்களை
    மனதார பிராத்தனை செய்யும் பெரும் பாக்கியம் கிடைத்தது.
    14 வருடம் ஆகப்போகின்றது டீ காபி கூட குடித்து (சைவம் மட்டுமே எப்பொழுதும்)
    அறிய வகை ஜோதிடத்தை தவறாக புரிந்து கொண்டு தவறு என்பவர்கள் சொல்லுங்கள் "குடிக்கவில்லை"
    "கூத்தாட வில்லை" ஆனால் காலம் சென்ற மாயம் இன்று வரை தெரியவில்லை ஐயாகளே/////

    நீங்கள் சென்ற ஸ்தல யாத்திரைகளும் இறைவழிபாடும்தான் உங்களுக்கு தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுத்துள்ளன.

    ReplyDelete
  11. ////nithya said...
    ம.நித்தியானந்தம் கரையாம்பாளையம்
    குட்டி சுக்கிரன் கூடிக் கெடுக்கவில்லை கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிற்து அனுபவத்தை வாழ்க்கைப் பாடத்தை கடைசியில் நல்ல வேலையைக் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிற்து மொத்தத்தில் புடம் போட்டு எடுத்திருக்கிறது தப்பில்லை//////

    ஆமாம். புடம்போடாமல் எதுவும் மேன்மையடைவதில்லை!

    ReplyDelete
  12. ////natarajan said...
    ஊழ் வினை வந்து ஊட்டும்போது. நாம் கொண்டு வந்ததை உண்டு முடிக்க வேண்டும். அருமை ஐயா/////

    உங்களின் எண்ணப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.. வலி மிகுந்த கதை வாத்தியாரே..!
    ஓட ஓட விரட்டும் விதியை.. மதியால் வென்ற கதைதான்..!
    அவருக்கு எனது வாழ்த்துக்கள்..! நமது சக வகுப்பறை மாணவர் என்பதாலும் மிகவும் பெருமையடைகிறேன்..!/////

    நீங்கள் அசத்தலாக உங்கள் பாணியில் ஒன்றை எழுதியனுப்புங்கள் உண்மைத் தமிழரே!

    ReplyDelete
  14. ////minorwall said...
    //////////
    ஒன்று மட்டும் மண்டையில் சரியாக ஏறாததினால்
    எப்படியும் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற ஆதங்கத்தில்
    பரீட்சையில் காப்பி அடிக்கக் கல்லூரிநிர்வாகமோ ஓங்கி உச்சந்
    தலையில் அடித்துத் தேர்வை முழுதாக எழுதவிடவில்லை.///////
    எப்படியாவது என்பது முறையும் ஆகாது..அதற்குப் பதில் வராத படிப்பைத் தூக்கி எறிவதுகூட தகும்..படித்துப் பட்டம் வாங்காதவர்களின் சாதனைச் சரித்திரங்களுக்கு முன் படித்தும் சாதிக்காதவர்களின் வேதனைச் சரித்திரங்கள் எடுபடுவதில்லை..எனக்குத் தெரிந்தவரை தான் கற்ற கல்வி என்பது பொது அறிவை பலப்படுத்தும் அளவுக்கே எனும் மனோநிலைக்கு வந்து அந்தக் கல்வியே வாழ்வு முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக அமையுமானால் சான்றிதழ்களைத் தீயிலிட்டு விட்டு தன் சுய முயற்சியினால் வேறொரு வாழ்வை அமைப்பதே மேல் என்று நினைக்கிறேன்..
    'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய் வருத்தக் கூலி தரும்..'//////

    அதை எதற்குத் தீயில் இட வேண்டும்? பத்திரமாக வைத்துவிட்டு, அடுத்த முயற்சியில் இறங்கலாமே மைனர்!
    பின்னால் பயன்படாமல் போகும் என்பது என்ன நிச்சயம்?

    ReplyDelete
  15. //////
    SP.VR. SUBBAIYA said...
    அதை எதற்குத் தீயில் இட வேண்டும்? பத்திரமாக வைத்துவிட்டு, அடுத்த முயற்சியில் இறங்கலாமே மைனர்!
    பின்னால் பயன்படாமல் போகும் என்பது என்ன நிச்சயம்?\\\\\\\\\

    நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறேன்..பத்திரமாகப் பூட்டி வைப்பதும் நல்லதுதான்..முன்னாட்களில் ஏதோ ஒரு வேகத்தில் நான் பேசிய வசனங்களை இங்கே பின்னூட்டமாக்கிவிட்டேன்..வேலை தேடும் / அல்லது தொழில் முயற்சிக்காக என்று அலையும் எல்லோருக்குமே இந்தப் பேப்பர்கள் சில நேரங்களில் தேவைதான்..இந்த
    பேப்பர்களையும் எந்த வகையில் உபயோகிக்கிறோம் என்பதில்தான் அந்த சூட்சுமம் இருக்கிறது என்று நினைக்கிறேன்..ஆனால் எப்போது, எங்கே, எதற்காக என்று கணக்குகள் இருக்கின்றன..பெரும்பாலும் HR கன்சல்டன்ட் வேலையை செய்யும் மக்களின் தாரக மந்திரமே இதுதான்..
    அதிலும் ஓவர்சீஸ் consulting செய்யும் மக்களின் கில்லாடித்தனம் ரொம்பவே திகைக்க வைக்கும்..

    ReplyDelete
  16. இப்படி மேலும் பலர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். சில நமக்கு ஏதாவது ஒரு வகையில் படிப்பினையாக அமையலாம். சில நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று வாழ்க்கை வெறுத்து போவோர்களுக்கு அவர் நிலைமைக்கு நம் நிலைமையே பரவாயில்லை மன ஆறுதல் கொள்ள உதவலாம்.

    ReplyDelete
  17. எனக்கு ஏன் அப்படி ஒரு சுக்கிர தசை வரவில்லை என்று ஏங்குகிறேன். ஆமாம் நண்பரே.. என்ன பெரும் பாக்கியம் சுக்கிரன் வரவால் தாங்கள் இத்தனை தலங்களை கண்டுள்ளீர்களே..என்னே பாக்கியம் செய்தீரோ... ஐயா.. உள்ளூர் ஆலயத்தையே பிறந்தது முதல் கொண்டு இறக்கும் வரையில் தரிசனம் காணமல் மாண்டவர்கள் எத்தனை எத்தனையோ பேர்..

    உங்களின் அனுபவத்திலேயே தெரிகிறது சுக்கிரன் உங்களின் பக்கத்தில் எவ்வளவு உறுதுணையாக இருந்துள்ளான். சுக்கிரன் திசை என்றால் செல்வ வளம்தான் தருவன் என்று பொருளில்லை. அதைவிட பெரிய செல்வமாகிய தன்னம்பிக்கை என்ற செல்வத்தை உங்களிடமே தக்க வைக்க எவ்வளவு போராடி இருக்கிறான் சுக்கிரன்.

    ஒரு வேளை தன்னம்பிக்கை இழந்து மேலே படிக்கபோவதில்லை ஊரிலே கிடத்தை வேலைய செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிட்டிருந்தால் மேலை நாடு எங்கே உங்களின் இந்த நிலைதான் எங்கே.

    தெய்வ செயல்கள் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு. என் வாழ்க்கை உங்களைவிட கஷ்டமானதுதான். படித்துவிட்டால் மட்டும் போதாது. இன்றைக்கு எத்தனைபேர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். யோசிக்க.

    நன்றி,.

    ReplyDelete
  18. ஐயா வணக்கம்.

    கருத்துகள் கூறிய அனைவருக்கும் சிரசு தாழ்ந்த பணிவான வணக்கங்கள்

    சுயமுன்னேற்ற கதைகளை படிக்க படிக்க எத்தனையோ நபர்கள் அடிப்படை கல்வியே இல்லாமல் சாதிச்சு காட்டியதை போல், நம்மாலும் முடியும் என்று தான் எல்லாபக்கமும் சென்று போராடி போராடி எல்லாத்தையும் இழந்த பின்னர், தனக்கு உள்ள கல்வியை கொண்டு மேன்மை அடைய வேண்டி போராடிய இறுதிகட்டத்தில் தான் தவறு செய்ய போகி பிடிபட்டு வெளியேறியது.

    " நொங்கு தின்றவன் ஒருவன், நொந்து கெட்டவன் ஒருவன்" என்பது போல மற்றவரை பார்த்து தவறு செய்ய போகி ஸ்பாட் பனிஷ்மென்ட் கிடைத்தது அன்று.

    >>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
    எப்படியாவது என்பது முறையும் ஆகாது..அதற்குப் பதில் வராத படிப்பைத் தூக்கி எறிவதுகூட தகும்.........................


    'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய் வருத்தக் கூலி தரும்..'

    Sunday, September 12, 2010 12:49:00 PM

    ReplyDelete
  19. :)

    எனக்கும் சின்ன வயசில சுக்கிர திசை தான். ஆனா நினைவு தெரிந்து படிப்பில் எதிலும் நான் குறைவாக இருந்தது இல்லை. ஒவ்வொரு ஆண்டு முடிந்த பின்பும் அடுத்த வருடம் வரும் மாணவர்களுக்கு எடுத்தக்காட்டாக என் பெயர் சொல்லப்பட்டதுண்டு.

    அதனால் சிறு வயதில் சுக்கிர திசை வந்தால் கல்விக்கு பிரச்சனை வரும் என்று நினைக்க வேண்டாம். தன்னம்பிக்கை தான் முக்கியம்.

    ReplyDelete
  20. கண்ணன், உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. //////minorwall said...
    //////
    SP.VR. SUBBAIYA said...
    அதை எதற்குத் தீயில் இட வேண்டும்? பத்திரமாக வைத்துவிட்டு, அடுத்த முயற்சியில் இறங்கலாமே மைனர்!
    பின்னால் பயன்படாமல் போகும் என்பது என்ன நிச்சயம்?\\\\\\\\\
    நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறேன்..பத்திரமாகப் பூட்டி வைப்பதும் நல்லதுதான்..முன்னாட்களில் ஏதோ ஒரு வேகத்தில் நான் பேசிய வசனங்களை இங்கே பின்னூட்டமாக்கிவிட்டேன்..வேலை தேடும் / அல்லது தொழில் முயற்சிக்காக என்று அலையும் எல்லோருக்குமே இந்தப் பேப்பர்கள் சில நேரங்களில் தேவைதான்..இந்த
    பேப்பர்களையும் எந்த வகையில் உபயோகிக்கிறோம் என்பதில்தான் அந்த சூட்சுமம் இருக்கிறது என்று நினைக்கிறேன்..ஆனால் எப்போது, எங்கே, எதற்காக என்று கணக்குகள் இருக்கின்றன..பெரும்பாலும் HR கன்சல்டன்ட் வேலையை செய்யும் மக்களின் தாரக மந்திரமே இதுதான்..
    அதிலும் ஓவர்சீஸ் consulting செய்யும் மக்களின் கில்லாடித்தனம் ரொம்பவே திகைக்க வைக்கும்..///////

    உணர்ந்திருக்கிறீர்கள். அறிந்தும் வைத்திருக்கிறீர்கள்! நல்லது. நன்றி மைனர்!

    ReplyDelete
  22. ////ananth said...
    இப்படி மேலும் பலர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். சில நமக்கு ஏதாவது ஒரு வகையில் படிப்பினையாக அமையலாம். சில நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று வாழ்க்கை வெறுத்து போவோர்களுக்கு அவர் நிலைமைக்கு நம் நிலைமையே பரவாயில்லை மன ஆறுதல் கொள்ள உதவலாம்./////

    ஆமாம். அனுபவப்பகிர்வுதான் பிறரை ஆறுதல் கொள்ளச் செய்யும்! நன்றி!

    ReplyDelete
  23. /////SIVANARUL said...
    எனக்கு ஏன் அப்படி ஒரு சுக்கிர தசை வரவில்லை என்று ஏங்குகிறேன். ஆமாம் நண்பரே.. என்ன பெரும் பாக்கியம் சுக்கிரன் வரவால் தாங்கள் இத்தனை தலங்களை கண்டுள்ளீர்களே..என்னே பாக்கியம் செய்தீரோ... ஐயா.. உள்ளூர் ஆலயத்தையே பிறந்தது முதல் கொண்டு இறக்கும் வரையில் தரிசனம் காணமல் மாண்டவர்கள் எத்தனை எத்தனையோ பேர்..
    உங்களின் அனுபவத்திலேயே தெரிகிறது சுக்கிரன் உங்களின் பக்கத்தில் எவ்வளவு உறுதுணையாக இருந்துள்ளான். சுக்கிரன் திசை என்றால் செல்வ வளம்தான் தருவன் என்று பொருளில்லை. அதைவிட பெரிய செல்வமாகிய தன்னம்பிக்கை என்ற செல்வத்தை உங்களிடமே தக்க வைக்க எவ்வளவு போராடி இருக்கிறான் சுக்கிரன்.
    ஒரு வேளை தன்னம்பிக்கை இழந்து மேலே படிக்கபோவதில்லை ஊரிலே கிடத்தை வேலைய செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிட்டிருந்தால் மேலை நாடு எங்கே உங்களின் இந்த நிலைதான் எங்கே.
    தெய்வ செயல்கள் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு. என் வாழ்க்கை உங்களைவிட கஷ்டமானதுதான். படித்துவிட்டால் மட்டும் போதாது. இன்றைக்கு எத்தனைபேர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். யோசிக்க.
    நன்றி,./////

    சுற்றும்வரைதான் பூமி
    எரியும்வரைதான் நெருப்பு
    போராடும்வரைதான் மனிதன்
    - கவிஞர் வைரமுத்து

    ReplyDelete
  24. ////kannan said...
    ஐயா வணக்கம்.
    கருத்துகள் கூறிய அனைவருக்கும் சிரசு தாழ்ந்த பணிவான வணக்கங்கள்
    சுயமுன்னேற்ற கதைகளை படிக்க படிக்க எத்தனையோ நபர்கள் அடிப்படை கல்வியே இல்லாமல் சாதிச்சு காட்டியதை போல், நம்மாலும் முடியும் என்று தான் எல்லாபக்கமும் சென்று போராடி போராடி எல்லாத்தையும் இழந்த பின்னர், தனக்கு உள்ள கல்வியை கொண்டு மேன்மை அடைய வேண்டி போராடிய இறுதிகட்டத்தில் தான் தவறு செய்ய போகி பிடிபட்டு வெளியேறியது.
    " நொங்கு தின்றவன் ஒருவன், நொந்து கெட்டவன் ஒருவன்" என்பது போல மற்றவரை பார்த்து தவறு செய்ய போகி ஸ்பாட் பனிஷ்மென்ட் கிடைத்தது அன்று.
    >>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
    எப்படியாவது என்பது முறையும் ஆகாது..அதற்குப் பதில் வராத படிப்பைத் தூக்கி எறிவதுகூட கும்.........................
    'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய் வருத்தக் கூலி தரும்..'//////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  25. ////kannan said...
    ஐயா வணக்கம்.
    கருத்துகள் கூறிய அனைவருக்கும் சிரசு தாழ்ந்த பணிவான வணக்கங்கள்
    சுயமுன்னேற்ற கதைகளை படிக்க படிக்க எத்தனையோ நபர்கள் அடிப்படை கல்வியே இல்லாமல் சாதிச்சு காட்டியதை போல், நம்மாலும் முடியும் என்று தான் எல்லாபக்கமும் சென்று போராடி போராடி எல்லாத்தையும் இழந்த பின்னர், தனக்கு உள்ள கல்வியை கொண்டு மேன்மை அடைய வேண்டி போராடிய இறுதிகட்டத்தில் தான் தவறு செய்ய போகி பிடிபட்டு வெளியேறியது.
    " நொங்கு தின்றவன் ஒருவன், நொந்து கெட்டவன் ஒருவன்" என்பது போல மற்றவரை பார்த்து தவறு செய்ய போகி ஸ்பாட் பனிஷ்மென்ட் கிடைத்தது அன்று.
    >>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
    எப்படியாவது என்பது முறையும் ஆகாது..அதற்குப் பதில் வராத படிப்பைத் தூக்கி எறிவதுகூட கும்.........................
    'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய் வருத்தக் கூலி தரும்..'//////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  26. ////வெட்டிப்பயல் said... :)
    எனக்கும் சின்ன வயசில சுக்கிர திசை தான். ஆனா நினைவு தெரிந்து படிப்பில் எதிலும் நான் குறைவாக இருந்தது இல்லை. ஒவ்வொரு ஆண்டு முடிந்த பின்பும் அடுத்த வருடம் வரும் மாணவர்களுக்கு எடுத்தக்காட்டாக என் பெயர் சொல்லப்பட்டதுண்டு.
    அதனால் சிறு வயதில் சுக்கிர திசை வந்தால் கல்விக்கு பிரச்சனை வரும் என்று நினைக்க வேண்டாம். தன்னம்பிக்கை தான் முக்கியம்.////

    உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி பாலாஜி!

    ReplyDelete
  27. ////Uma said...
    கண்ணன், உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.////

    நன்றி சகோதரி. நீங்கள் எழுதுகிறேன் என்று சொன்னீர்களே? எப்போது எழுத உத்தேசம்?

    ReplyDelete
  28. சார், இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன், வியாழக்கிழமைக்குள் அனுப்பி விடுவேன் என்று நினைக்கிறேன் (ஏன் வியாழன் என்று உங்களுக்குத்தோன்றும், எப்போதுமே, 2 3 நாள் எடுத்துக்கொண்டுதான் முடிக்கும் வழக்கம் அதான்). அப்புறம் ஒரு விஷயம், நான் இந்த ப்ளாக் பெயரை மாற்றமுடியுமா (ஏற்கனவே முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை), இந்த பெயரில் அனுப்ப விரும்பவில்லை. அப்படி முடியாத பட்சத்தில், பெயரை மட்டும் மாற்றிக்கொள்ளலாமா? உங்கள் கருத்தை அறியத்தரவும். வேறு யாராவது சொல்வதானாலும் சரி.

    ReplyDelete
  29. சான்றிதழ்களைத் தீயிலிட்டு விட்டு தன் சுய முயற்சியினால் வேறொரு வாழ்வை அமைப்பதே மேல் என்று நினைக்கிறேன்..///

    இதக் கேட்டா உருப்பட்ட மாதிரிதான்

    ReplyDelete
  30. Uma said...
    சார், இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன், வியாழக்கிழமைக்குள் அனுப்பி விடுவேன் என்று நினைக்கிறேன் (ஏன் வியாழன் என்று உங்களுக்குத்தோன்றும், எப்போதுமே, 2 3 நாள் எடுத்துக்கொண்டுதான் முடிக்கும் வழக்கம் அதான்). அப்புறம் ஒரு விஷயம், நான் இந்த ப்ளாக் பெயரை மாற்றமுடியுமா (ஏற்கனவே முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை), இந்த பெயரில் அனுப்ப விரும்பவில்லை. அப்படி முடியாத பட்சத்தில், பெயரை மட்டும் மாற்றிக்கொள்ளலாமா? உங்கள் கருத்தை அறியத்தரவும். வேறு யாராவது சொல்வதானாலும் சரி.///////

    புனைப்பெயரில் எழுதுங்கள். இதை நீங்கள் சொல்லாமல் செய்திருக்கலாம். அல்லது பின்னூட்டப்பெட்டியில் போட்டிருக்காமல், தனி மின்னஞ்சலில் கேட்டிருக்கலாம்!:-))))

    ReplyDelete
  31. ////Uma said...
    சான்றிதழ்களைத் தீயிலிட்டு விட்டு தன் சுய முயற்சியினால் வேறொரு வாழ்வை அமைப்பதே மேல் என்று நினைக்கிறேன்..///
    இதக் கேட்டா உருப்பட்ட மாதிரிதான்////

    இல்லை அவருடைய இரண்டாவது பின்னூட்டத்தைப் பாருங்கள்!

    ReplyDelete
  32. இல்ல சார், வகுப்பறையில் நாந்தான் எழுதறேன்னு தெரிஞ்சா ஒன்றும் கவலையில்லை. அதனால்தான் பின்னூட்டத்திலேயே கேட்டேன்.

    ReplyDelete
  33. /////Uma said...
    இல்ல சார், வகுப்பறையில் நாந்தான் எழுதறேன்னு தெரிஞ்சா ஒன்றும் கவலையில்லை. அதனால்தான் பின்னூட்டத்திலேயே கேட்டேன். /////

    உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள்!

    ReplyDelete
  34. வாழ்க்கை அனுபவங்கள் எல்லாம் நாம் தேர்ந்தெடுப்பது தான். தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் படித்ததால் தான் வெற்றி கிட்டியது.ஆழ்மனதில் அது பதிந்து தேவையானபோது கைகொடுத்தது.

    ReplyDelete
  35. ஆசிரியர் ஐயா அவர்களே! நண்பர் கண்ணன் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட சோதனைகளும், அதனையெல்லாம் அவர் முறியடித்து வெற்றி பெற்று இன்று தலை நிமிர்ந்து நிற்பதும் பாராட்டப்பட வேண்டிய சாதனை. ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட உறுதியோடும், நம்பிக்கையோடும் வாழ்வை எதிர்கொண்டால் இன்று பலரும் நம்பிக்கொண்டிருக்கின்ற 'நாளும்' 'கோளும்' என்ன செய்ய முடியும்? இறைவன் ஒன்று, அவன் பிரம்மம். அவனுக்கு (அல்லது அதற்கு) ஒரு குறியீடுதான் நாம் வழிபடுகின்ற கடவுள்கள். அவை வெவ்வேறாக இருந்தாலும் அந்தப் பரம்பொருள் என்பது ஒன்றுதான். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை இப்படித்தான் என்று விதித்திருக்கும்போது, நண்பர் கண்ணனுக்கும் இடர்பாடுகளுக்கிடையே சொந்த உறுதியான முயற்சியால் உயர்வார் என்று இருக்குமானால், அது நடந்தே தீரும். கோயில்களுக்குச் செல்வதும், வழிபடுவதும், கலங்கிய நம் மனத்தைத் திருப்திப்படுத்திக் கொள்ளத்தானே தவிர, அவைகளால் மட்டுமே எதிர்ப்படும் துன்பங்கள் விலகிவிடும் என்பதல்ல. நம் முயற்சி, உறுதி இவைகளுக்கு இறை உணர்வும், பக்தியும், வழிபாடும் ஒரு உந்து சக்தியாகப்பயன்படுகிறது. கடவுளை வணங்குவது நம் முயற்சி எனும் விவசாயத்துக்கு உரம் இடுவது போன்றதுதான். முயற்சி இன்றி இறை பக்தி மட்டும் எதையும் சாதிக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. நண்பர் கண்ணனின் பதிவு தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் அமைந்திருப்பது குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  36. கண்ணனின் தெய்வவழிபாட்டு முயற்சிகள் அவ்வளவும் வீண் என்று பாடம் படித்துக்கொள்ளலாமா? விதை போட்ட இடத்தில் நீர் ஊற்றாமல் வேறெங்கோ நீரூற்றினால் என்ன நடக்கும் என்பது போல தெய்வங்கள் கேட்காத விஷயங்களை நாமாக முன்னின்று செய்தாலும் வீண்தான் என்றாகும்போது அதை விடுத்து செய்ய வேண்டியதை திரும்பத் திரும்ப செய்து எங்கே தவறு செய்கிறோம் என்பதை தோல்விகளின் மூலம் படிப்பது தவிர வகுத்த இலக்கை அடைய வேறு வழியே இல்லை..
    'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய்வருத்தக் கூலி தரும்.'

    ReplyDelete
  37. Hi Sir,

    I too had the Sukra dasa in my early life but it didn't do anything against my educations instead I have got the Gold medal in my college and I have won many Quiz program titles.

    I have 34 parals in 4th house that might be the reason for this I guess.

    Now I am doing my second master degree.

    But I must tell you this, I got so many girls friendships during those periods and that leads to me various problems without my knowledge.

    ReplyDelete
  38. ////// Uma said...

    //// சான்றிதழ்களைத் தீயிலிட்டு விட்டு தன் சுய முயற்சியினால் வேறொரு வாழ்வை அமைப்பதே மேல் என்று நினைக்கிறேன்..///


    இதக் கேட்டா உருப்பட்ட மாதிரிதான் ///////////////

    1995 லே திருச்சியில் பஸ்ஸில் பயணித்தபோது சூட்கேஸ் உள்ளே வைத்து இருந்த என் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களும் (10th ,+2 , Engg . Degree ) சூட்கேஸ் உடன் திருடப்பட்டு விட்டது..
    இரண்டு நாட்கள் பைக்கை எடுத்துக்கொண்டு எல்லா பிக் பாக்கெட் நெட்வொர்க் ஆட்களிடமும் தேடி கிடைக்காமல் போலீஸ் formaalities எல்லாம் முடித்து நேரிடையாக all indiya radio மூலம் அறிவிப்பும் செய்து நாளிதழ்களில் வெளியிட்டு (ரேடியோ செய்தி கேட்டு உறவினர் ஒருவர் வீட்டில் போட்டுக் கொடுக்க அதன் பின்தான் அர்ச்சனை நடந்தது)
    என்று முறைப்படி எல்லாம் செய்து மூன்று-ஆறு மாதங்களில் ஒவ்வொரு institutionகளிலிருந்தும் இரண்டாம் பிரதிகளைப் பெற்றேன்..(என்னதான் நாம் கவனமாக இருந்தாலும் அடிப்பவன் தொழிலில் நம்மை விடக் கவனமாக இருந்துவிட்டால் அம்பேல்தான்)
    நான் சுத்தமாக அலட்டிக் கொள்ளவேயில்லை..அதன் பின் எனக்கு சென்னையில் நான் வேலைக்கு சேர்ந்த சமயங்களில் இந்த சான்றிதழ்கள் உதவியில்லாமலே வாயைக் கொண்டே (மார்க்கெட்டிங்) காலத்தை ஓட்டினேன்..
    வெளிநாட்டுக்கு என்று வரும்போது நிச்சயம் இவை தேவைதான்..தீயிலிட்டு இருந்தால் கஷ்டம்தான்..சொல்ல முடியாது..நான் இப்போது பார்க்கும் வேலையை விட எனக்குப் பிடித்த துறைகளிலே இன்னும் வசதியாகி, பிரசித்தமாகி, பெரியாளாகியிருந்திருக்கலாம்..
    உருப்படுவது என்பதற்கு அளவுகோல் நாம் வைப்பதுதானே?

    ReplyDelete
  39. //////
    Uma said...

    இல்ல சார், வகுப்பறையில் நாந்தான் எழுதறேன்னு தெரிஞ்சா ஒன்றும் கவலையில்லை. அதனால்தான் பின்னூட்டத்திலேயே கேட்டேன்///////////


    முக்கியமா 'போட்டோ இல்லாமல் படைப்புகள் அனுப்பக்கூடாது' அப்பிடிங்கிற கிளாஸ்ரூம் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் தெரியுமில்லே?

    ReplyDelete
  40. மிகச் சிறப்பாக சொல்லப்பட்ட ஒரு தன்னம்பிக்கைக் கதை. வாத்தியார் சொன்னபடி 337 பரல்கள் சோதிடத்தில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கை நிகழ்வுகளிலும் உண்டு. இதோ இத்துடன் முடிந்தது எனும் போதுதான் புதுத் தொடக்கம் உதயமாகும். இது கண்கூடு. சில நேரங்களில் பிடித்தாட்டும் நேரம் தற்கொலை முனைக்கே தள்ளிவிடும். ஆனால் அதற்கப்புறம் ஒரு பிரமாதமான வாழ்க்கை ஒன்று பிடிபடும். இது தான் அற்புதம் என்பது.

    சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.
    வாத்தியார் சோதிடப் பாடங்களுடன் விட வாழ்க்கைப் பாடங்களையும் சிறப்பாக தருவது அவரது தனித்தன்மையைக் காட்டுகிறது.

    ஆசானுக்கும் நன்றி

    ReplyDelete
  41. முக்கியமா 'போட்டோ இல்லாமல் படைப்புகள் அனுப்பக்கூடாது' அப்பிடிங்கிற கிளாஸ்ரூம் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் தெரியுமில்லே?///

    அத நீங்க சொல்லக்கூடாது, வாத்தியார்தான் சொல்லணும்.

    ReplyDelete
  42. சீதாராமன் கண்ணன்தான் நம்ம பின்னூட்ட கண்ணன் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது..அவரை மனதளவில் பாதிக்கும் அளவில் இருக்குமென்றால் இந்தப் பின்னூட்டத்தினை நான் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்..
    'எப்படியோ எனபது முறையாகாது..'என்ற என் கருத்து சற்று தீவிரமாக யோசித்தால் சில சமயங்களில் அபத்தமாகிவிடும் அபாயம் இருக்கிறது..
    மகாபாரதத்தில் கண்ணனே ஒரு சமயம் அபிமன்யுவைக் கொன்றவனைப் பழிதீர்ப்பேன் என்ற அர்ஜுனனின் சபதத்தை நிறைவேற்றவென்று சூரியனை சற்றுநேரம் மறைத்து ஏமாற்றிய கதை
    போல எவ்வளவோ கதைகள் வரலாற்றிலும் நடப்பிலும் ஏராளம்..
    'செய்வன திருந்தச் செய்' எனும் முதுமொழிக்கேற்ப மாட்டிக்கொள்ளாமல் சில விஷயங்களை செய்து வெற்றியை அடைவது என்பது புத்தி சாதுர்யத்தில் சேர்த்தியாகிவிடுகிறது..
    'நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்லே..' என்ற பாலிசி படி உங்களுக்கு வேண்டிய நாலு பேருக்காக ஏதாவது ரிஸ்க் எடுத்து (ரஸ்க் சாப்பிட்டுருந்தால்)
    அதைக் குறை கூறிப் புண்ணியமில்லை..

    ReplyDelete
  43. /////krish said...
    வாழ்க்கை அனுபவங்கள் எல்லாம் நாம் தேர்ந்தெடுப்பது தான். தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் படித்ததால் தான் வெற்றி கிட்டியது.ஆழ்மனதில் அது பதிந்து தேவையானபோது கைகொடுத்தது./////

    நல்லது. நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  44. ////Thanjavooraan said...
    ஆசிரியர் ஐயா அவர்களே! நண்பர் கண்ணன் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட சோதனைகளும், அதனையெல்லாம் அவர் முறியடித்து வெற்றி பெற்று இன்று தலை நிமிர்ந்து நிற்பதும் பாராட்டப்பட வேண்டிய சாதனை. ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட உறுதியோடும், நம்பிக்கையோடும் வாழ்வை எதிர்கொண்டால் இன்று பலரும் நம்பிக்கொண்டிருக்கின்ற 'நாளும்' 'கோளும்' என்ன செய்ய முடியும்? இறைவன் ஒன்று, அவன் பிரம்மம். அவனுக்கு (அல்லது அதற்கு) ஒரு குறியீடுதான் நாம் வழிபடுகின்ற கடவுள்கள். அவை வெவ்வேறாக இருந்தாலும் அந்தப் பரம்பொருள் என்பது ஒன்றுதான். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை இப்படித்தான் என்று விதித்திருக்கும்போது, நண்பர் கண்ணனுக்கும் இடர்பாடுகளுக்கிடையே சொந்த உறுதியான முயற்சியால் உயர்வார் என்று இருக்குமானால், அது நடந்தே தீரும். கோயில்களுக்குச் செல்வதும், வழிபடுவதும், கலங்கிய நம் மனத்தைத் திருப்திப்படுத்திக் கொள்ளத்தானே தவிர, அவைகளால் மட்டுமே எதிர்ப்படும் துன்பங்கள் விலகிவிடும் என்பதல்ல. நம் முயற்சி, உறுதி இவைகளுக்கு இறை உணர்வும், பக்தியும், வழிபாடும் ஒரு உந்து சக்தியாகப்பயன்படுகிறது. கடவுளை வணங்குவது நம் முயற்சி எனும் விவசாயத்துக்கு உரம் இடுவது போன்றதுதான். முயற்சி இன்றி இறை பக்தி மட்டும் எதையும் சாதிக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. நண்பர் கண்ணனின் பதிவு தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் அமைந்திருப்பது குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்./////

    உங்களுடைய நீண்ட மற்றும் சிறந்த கருத்துக்களுடன் கூடிய பின்னூட்டத்திற்கு நன்றி சார்!

    ReplyDelete
  45. //////minorwall said...
    கண்ணனின் தெய்வவழிபாட்டு முயற்சிகள் அவ்வளவும் வீண் என்று பாடம் படித்துக்கொள்ளலாமா? விதை போட்ட இடத்தில் நீர் ஊற்றாமல் வேறெங்கோ நீரூற்றினால் என்ன நடக்கும் என்பது போல தெய்வங்கள் கேட்காத விஷயங்களை நாமாக முன்னின்று செய்தாலும் வீண்தான் என்றாகும்போது அதை விடுத்து செய்ய வேண்டியதை திரும்பத் திரும்ப செய்து எங்கே தவறு செய்கிறோம் என்பதை தோல்விகளின் மூலம் படிப்பது தவிர வகுத்த இலக்கை அடைய வேறு வழியே இல்லை..
    'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய்வருத்தக் கூலி தரும்.'////////

    ஆகா தரும். ஆனாலும் அங்கே தெய்வ அருளும் வேண்டும். ஐம்பது வயதிற்குப் பிறகு இதை நீங்கள் உணர்வீர்கள் மைனர்

    ReplyDelete
  46. //////Naresh said...
    Hi Sir,
    I too had the Sukra dasa in my early life but it didn't do anything against my educations instead I have got the Gold medal in my college and I have won many Quiz program titles.
    I have 34 parals in 4th house that might be the reason for this I guess.
    Now I am doing my second master degree.
    But I must tell you this, I got so many girls friendships during those periods and that leads to me various problems without my knowledge./////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  47. ///////minorwall said...
    ////// Uma said...
    //// சான்றிதழ்களைத் தீயிலிட்டு விட்டு தன் சுய முயற்சியினால் வேறொரு வாழ்வை அமைப்பதே மேல் என்று நினைக்கிறேன்..///
    இதக் கேட்டா உருப்பட்ட மாதிரிதான் ///////////////
    1995 லே திருச்சியில் பஸ்ஸில் பயணித்தபோது சூட்கேஸ் உள்ளே வைத்து இருந்த என் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களும் (10th ,+2 , Engg . Degree ) சூட்கேஸ் உடன் திருடப்பட்டு விட்டது..
    இரண்டு நாட்கள் பைக்கை எடுத்துக்கொண்டு எல்லா பிக் பாக்கெட் நெட்வொர்க் ஆட்களிடமும் தேடி கிடைக்காமல் போலீஸ் formaalities எல்லாம் முடித்து நேரிடையாக all indiya radio மூலம் அறிவிப்பும் செய்து நாளிதழ்களில் வெளியிட்டு (ரேடியோ செய்தி கேட்டு உறவினர் ஒருவர் வீட்டில் போட்டுக் கொடுக்க அதன் பின்தான் அர்ச்சனை நடந்தது)
    என்று முறைப்படி எல்லாம் செய்து மூன்று-ஆறு மாதங்களில் ஒவ்வொரு institutionகளிலிருந்தும் இரண்டாம் பிரதிகளைப் பெற்றேன்..(என்னதான் நாம் கவனமாக இருந்தாலும் அடிப்பவன் தொழிலில் நம்மை விடக் கவனமாக இருந்துவிட்டால் அம்பேல்தான்)
    நான் சுத்தமாக அலட்டிக் கொள்ளவேயில்லை..அதன் பின் எனக்கு சென்னையில் நான் வேலைக்கு சேர்ந்த சமயங்களில் இந்த சான்றிதழ்கள் உதவியில்லாமலே வாயைக் கொண்டே (மார்க்கெட்டிங்) காலத்தை ஓட்டினேன்..
    வெளிநாட்டுக்கு என்று வரும்போது நிச்சயம் இவை தேவைதான்..தீயிலிட்டு இருந்தால் கஷ்டம்தான்..சொல்ல முடியாது..நான் இப்போது பார்க்கும் வேலையை விட எனக்குப் பிடித்த துறைகளிலே இன்னும் வசதியாகி, பிரசித்தமாகி, பெரியாளாகியிருந்திருக்கலாம்..
    உருப்படுவது என்பதற்கு அளவுகோல் நாம் வைப்பதுதானே?//////

    உங்களுடைய அளவுகோல் உங்களுக்கு மட்டுமே! உங்களைச் சுற்றி உள்ள உலகம் வேறு பல அளவுகோள்களை வைத்திருக்கின்றன. அதோடு நாம் ஒத்துப்போகாமல் வாழ்க்கையில்லை!

    ReplyDelete
  48. /////minorwall said...
    //////
    Uma said...
    இல்ல சார், வகுப்பறையில் நாந்தான் எழுதறேன்னு தெரிஞ்சா ஒன்றும் கவலையில்லை. அதனால்தான் பின்னூட்டத்திலேயே கேட்டேன்///////////
    முக்கியமா 'போட்டோ இல்லாமல் படைப்புகள் அனுப்பக்கூடாது' அப்பிடிங்கிற கிளாஸ்ரூம் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் தெரியுமில்லே?/////

    போட்டாவைத் தருவதற்குப் பயப்படும் வயதை அவர் தாண்டி 10 வருடங்கள் ஆகிவிட்டன. அது தெரியுமா மைனர்?

    ReplyDelete
  49. /////Govindasamy said...
    மிகச் சிறப்பாக சொல்லப்பட்ட ஒரு தன்னம்பிக்கைக் கதை. வாத்தியார் சொன்னபடி 337 பரல்கள் சோதிடத்தில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கை நிகழ்வுகளிலும் உண்டு. இதோ இத்துடன் முடிந்தது எனும் போதுதான் புதுத் தொடக்கம் உதயமாகும். இது கண்கூடு. சில நேரங்களில் பிடித்தாட்டும் நேரம் தற்கொலை முனைக்கே தள்ளிவிடும். ஆனால் அதற்கப்புறம் ஒரு பிரமாதமான வாழ்க்கை ஒன்று பிடிபடும். இது தான் அற்புதம் என்பது.
    சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.
    வாத்தியார் சோதிடப் பாடங்களுடன் விட வாழ்க்கைப் பாடங்களையும் சிறப்பாக தருவது அவரது தனித்தன்மையைக் காட்டுகிறது.
    ஆசானுக்கும் நன்றி///////

    வகுப்பறையின் முதல் நோக்கமே/பாடமே அனைவருக்கும் தன்னம்பிக்கை தருவதுதான்!

    ReplyDelete
  50. /////Uma said...
    முக்கியமா 'போட்டோ இல்லாமல் படைப்புகள் அனுப்பக்கூடாது' அப்பிடிங்கிற கிளாஸ்ரூம் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் தெரியுமில்லே?///
    அத நீங்க சொல்லக்கூடாது, வாத்தியார்தான் சொல்லணும். /////

    தாய்க்குலத்தினருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அவர்கள் விரும்பினால் அனுப்பலாம். இல்லையென்றால் கட்டுரையை மட்டும் அனுப்பினால் போதும்!

    ReplyDelete
  51. ///////Uma said...
    முக்கியமா 'போட்டோ இல்லாமல் படைப்புகள் அனுப்பக்கூடாது' அப்பிடிங்கிற கிளாஸ்ரூம் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் தெரியுமில்லே?///

    அத நீங்க சொல்லக்கூடாது, வாத்தியார்தான் சொல்லணும்.//////////

    தஞ்சாவூர் காரங்க நீங்க இப்பிடி பயப்படலாமா?
    சரி விடுங்க..33 % ரிசெர்வஷன் லே தப்பிச்சிட்டீங்க..
    அதுக்காக உங்கள் கதையை எழுதாமல் வுட்டுறாதீங்க..
    உண்மையில் நம்ம கிளாஸ்ரூமிலேயே துணிச்சலாக தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்கும் ஒரு புதுமைப் பெண் நீங்கள்தான்...
    keep it up ..all the best ...

    ReplyDelete
  52. /////minorwall said...
    ///////Uma said...
    முக்கியமா 'போட்டோ இல்லாமல் படைப்புகள் அனுப்பக்கூடாது' அப்பிடிங்கிற கிளாஸ்ரூம் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் தெரியுமில்லே?///
    அத நீங்க சொல்லக்கூடாது, வாத்தியார்தான் சொல்லணும்.//////////
    தஞ்சாவூர் காரங்க நீங்க இப்பிடி பயப்படலாமா?
    சரி விடுங்க..33 % ரிசர்வேஷன்லே தப்பிச்சிட்டீங்க..
    அதுக்காக உங்கள் கதையை எழுதாமல் வுட்டுறாதீங்க..
    உண்மையில் நம்ம கிளாஸ்ரூமிலேயே துணிச்சலாக தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்கும் ஒரு புதுமைப் பெண் நீங்கள்தான்...
    keep it up ..all the best ...////

    அடடா, நெஞ்சை டச் பண்ணீட்டீங்க மைனர்!

    ReplyDelete
  53. ஆசானே வணக்கம்.

    பாரதத்தில் "குருஷேத்ர யுத்தம்" முடிந்த பின்னர் எம்பெருமான்
    " கள்ள கண்ணன்" ஒரு மரத்தின் கிளையில் கால்களை கீழ்நோக்கி தொங்கபோட்டு இருந்து கொண்டு புல்லாங்குழலை வாசித்து கொண்டுஇருந்தார். அவ்வாறு இருக்கும் பொழுது தூரத்தில் இருந்து ஒரு யாதவன் மரத்தை பார்க்க கண்ணனின் பாதத்தில் உள்ள விரல்கள் நாகம் மரத்தில் இருந்து கீழ்நோக்கி தொங்குவது போல காட்சி அளிக்க யாதவனோ அம்பு எய்ய, பெருவிரலில் அம்பு உள்ளே புகுந்து புண்ணாகி அதனால் பரமாத்வாவின் சரிரம் அழிகின்றது.

    நிற்க

    " கொடைவள்ளல் கர்ணன் " நாகாதிஸ்ரத்தை அர்ஜுனனை நோக்கி எய்யும் பொழுது,கபட நாடக
    சாரதி " திருடன் கண்ணன்" வலது கால் பெருவிரல் கொண்டு தேரை கீழே அழுத்தி அர்ஜுனனை காப்பாற்றியதால் வந்த வினை தான் இது. (போர் தர்ம விதியை மீறியதால்) .

    பரமாத்மாவே தவறு செயினும் அதற்கும் தக்க தண்டனை உண்டு என்று கேட்டது உண்டு சான்றோர்களே!

    ஊழ்வினை முன்னே வந்து நிற்கும் பொழுது, கற்ற கல்வியில் இருந்து புத்தி வரை தடம் புரண்டு விடுகின்றது பெரியோர்களே!

    ReplyDelete
  54. ////kannan said..
    ஆசானே வணக்கம்.
    பாரதத்தில் "குருஷேத்ர யுத்தம்" முடிந்த பின்னர் எம்பெருமான்
    " கள்ள கண்ணன்" ஒரு மரத்தின் கிளையில் கால்களை கீழ்நோக்கி தொங்கபோட்டு இருந்து கொண்டு புல்லாங்குழலை வாசித்து கொண்டுஇருந்தார். அவ்வாறு இருக்கும் பொழுது தூரத்தில் இருந்து ஒரு யாதவன் மரத்தை பார்க்க கண்ணனின் பாதத்தில் உள்ள விரல்கள் நாகம் மரத்தில் இருந்து கீழ்நோக்கி தொங்குவது போல காட்சி அளிக்க யாதவனோ அம்பு எய்ய, பெருவிரலில் அம்பு உள்ளே புகுந்து புண்ணாகி அதனால் பரமாத்வாவின் சரிரம் அழிகின்றது.
    நிற்க
    " கொடைவள்ளல் கர்ணன் " நாகாதிஸ்ரத்தை அர்ஜுனனை நோக்கி எய்யும் பொழுது,கபட நாடக
    சாரதி " திருடன் கண்ணன்" வலது கால் பெருவிரல் கொண்டு தேரை கீழே அழுத்தி அர்ஜுனனை காப்பாற்றியதால் வந்த வினை தான் இது. (போர் தர்ம விதியை மீறியதால்) .
    பரமாத்மாவே தவறு செயினும் அதற்கும் தக்க தண்டனை உண்டு என்று கேட்டது உண்டு சான்றோர்களே!
    ஊழ்வினை முன்னே வந்து நிற்கும் பொழுது, கற்ற கல்வியில் இருந்து புத்தி வரை தடம் புரண்டு விடுகின்றது பெரியோர்களே!//////

    அதுபோன்ற கதைகளைப் படித்துத் தெளிவுற்றால், புத்தி தடம் புரளக்கூடாது. தடம் புரண்டால் படித்து என்ன பயன்?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com